Advertisement

அத்தியாயம் 28
“எந்திரி டி”
“நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்”
“கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள”
 “போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?”
பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள  ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தி பாடசாலை ரீதியாக போய் தற்காப்பு கலையை சொல்லிக் கொடுத்தவன் தீரமுகுந்தன். 
கல்லூரிகளுக்கு செல்ல அவன் விரும்பவில்லை. அதற்க்கு ஒரே காரணம் கன்னியரின் மொய்க்கும் பார்வைதான். பிங்கி தனக்கு கராத்தே தெரியும் என்று அஜய் கடத்த பட்ட அன்று சொல்லி இருக்க, அவள் சொன்னதை நம்பியவன். அவள் கடத்தப்பட்ட பின் அதுவும் அவளின் குறும்பு என புரிய அவளுக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினான். 
காலை நேர ஓட்டத்தையும் அவளுக்காக தியாகம் செய்தவன் அவளை எழுப்பிக் கொண்டிருக்க, இரண்டு மணித்தியாலங்கள் கடந்தும் எந்திரிக்காமல் அவனை அணைத்துக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள். 
“அவர் எவ்வளவு பிசி என்றாலும் எனக்காக வருவாரு. இல்லையா உன்ன அனுப்புவாரு” சாதாரணமாக கூறியவள் திரும்பி படுத்துக்க கொள்ள, அவளை அள்ளி அணைத்து அலேக்காக தூக்கி கைகளில் ஏந்தி இருந்தான் தீரமுகுந்தன்.  பொறுமையை இழந்தவன் அவளிடம் பேசிப்பார்க்க, தக்க பதிலை சொல்லி விட்டு தூங்குபவளை வேறு என்ன செய்ய  
அவளும் அவனின் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டவள் நெஞ்சில் புதைந்துக் கொண்டு கண்மூடி தூங்கலானாள். 
தீரன் பிங்கியை தூக்கியவாறே கீழே வர ஆயிஷா என்னமோ ஏதோ என்று பதற கண்களாலேயே சத்தம் செய்ய வேண்டாம் என்று சொன்னவன் அவளை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல அஜய்யும் விஜய்யும் ஸ்கூபியோடு விளையாடிக் கொண்டிருக்க அவர்களை தாண்டி சென்று  பின்னாடி கட்டி இருந்த சிமெண்ட்டிலான தண்ணீர் தொட்டி நீர் நிறைந்த்து வழிந்து கொண்டிருக்க பிங்கியை அதில் தூக்கி போட்டான். 
திடீரென விழவும்  “ஐயோ அம்மா” என்று கத்தியவாறே தொட்டியின் அடியில் மூழ்கி வெளியே வந்தவள் தண்ணீரும் குடிபட்டு வாயாலும், மூக்காலும் வர திணறியவாறே தொப்பலாக நனைந்திருக்க, ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் கோபமும் போட்டி போட முகத்தை அழுத்தித் துடைத்தவள்  தீரமுகுந்தனை முறைக்கலானாள். 
“அழகா இருக்க அப்படியே இரு ஒரு செல்பி எடுத்துக்கலாம்” வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் கிண்டலாக சொல்ல
நனைந்த கூந்தலை ஒதுக்கி செல்பி என்றதும் புன்னகைத்தவாறே தொட்டியின் விளிம்பில் வந்து அமர்ந்து கொண்டவளின் எண்ணமெல்லாம் அவனை இழுத்து தொட்டியில் விழ வைப்பதே!   
அவளின் எண்ணம் அறியாமல் காலை நேர காட்ச்சியும் ரம்யமாக இருக்கவே! தீரனும் அலைபேசியோடு அவள் அருகில் வந்தமர்ந்து செல்பி எடுக்க தயாராக  மூன்று புகைப்படங்கள் தொடர்ந்து எடுக்குமாறும், ஐந்து நொடிக்கான நேரத்தை அமைத்து திரையை பார்க்க அதிலே அவளின் முகம் கோபத்தால் ரோஜா  வண்ணம் போல் சிவந்திருக்க பனியில் நனைந்த ரோஜா போல் இருந்தவளை கண்டு புருவம் நீவியவன் அவளின் கொழுமொழுக் கன்னத்தில் முத்தமிட ஆவல் தோன்ற அவள் புறம் திரும்ப, அவளும் அதே நேரம் அவன் புறம் திரும்பி இருக்க அவனது முத்தமோ அவளின் இதழ்களில் அழுத்திப் படிய அதை அலைபேசி அழகாக புகைப்படம் எடுத்தது. 
காலையிலேயே குளிர்ந்து போய் இருந்தவளின் மென்மையான சருமமும், அருகில் அவளின் வதனமும் தீரனை வேறு உலகத்துக்கே கொண்டு செல்ல அவள் இதழ்களை மெதுவாக சிறைப்படுத்தினான். முதலில் அதிர்ச்சியடைந்து கண்களை அகல விரித்தவள் தன்னவனின் முதல் இதழ் தீண்டலால் அவனை பழிவாங்கும் எண்ணம் காற்றோடு போக அவனுக்கு இசைந்து கொடுக்கலானாள். 
அவளின் விரிந்த கண்களும், நனைந்த இமைகளும் ஓவியமாக அவனை ஈர்க்க, அவளுள் தொலைந்தவன் சிறை பிடித்த இதழ்களை விடாது, மொத்தமாய் அவளை எடுத்துக்கொள்ளும் ஆவல் தோன்ற, அவளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, இருக்கும் இடம் மறந்து, அவளின் ரோஜா இதழ்களில் கல்குடித்த வண்டாய்  தேன் பருக்கலானான்.
ஒற்றை  முத்தத்தில் 
என்  ஒற்றை  முத்தத்தில்
உன்  உச்சந்தலையில் 
பித்தம்  ஏறி ஆடினாய் 
அடைமழை  மேகம் போல்
ஓர்  இடைவெளி  இல்லாமல் 
நான்  அள்ளி தந்ததால்
இன்னும்  என்ன ஆகுவாய்?
முத்தம்  முத்தம் முத்தமா 
மூன்றாம்  உலக யுத்தமா?
ஆசை  கலையின்  உச்சமா?
விஷ்வதீரனோடு சண்டையிட்டு கிழே அஜய்யையும் விஜய்யையும் தேடிவந்த ஆரோஹி அவர்கள் ஸ்கூபியோடு விளையாடுவதை கண்டு  புன்னகைத்தவள் அவர்களை அழைக்கவென அவர்களின் புறம் செல்ல அவர்களின் பார்வையோ வேறு திசையில் இருக்க ஆரோஹியும் அப்பக்கம் திரும்பினாள்.  
அங்கே பிங்கியை தீரன் அணைத்து கொண்டிருப்பதை தான் அவளுக்கு காணக் கிடைத்தது. ஒரு கணம் திகைத்து நின்றவள், என்ன நடக்கிறது என்று புரிந்தவளாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அகன்றாள். 
“மம்மி சித்தப்பாவும் சித்தியும் என்ன பண்ணி கிட்டு இருந்தாங்க?” விஜய் யோசனையாக கேக்க 
“சித்தி கண்ணுல தூசி விழுந்திருக்கும். சீக்கிரம் வண்டில ஏறுங்க லேட்  ஆச்சு” என்று அதட்ட குழந்தைகளும் ஸ்கூபியிடமிருந்து விடை பெற்று வண்டியில் ஏறி இருந்தனர். 
விஷ்வதீரன் ஏற்பாடு செய்திருந்த ஓட்டுநர் வந்து வண்டியை எடுக்க வண்டி பாடசாலை நோக்கி கிளம்பியது. 
“விஷ் அப்படி என்ன தப்பா கேட்டுட்டான்? ஹனிமூன் போலாம்னு தானே கேட்டான். அதுல என்ன தப்பிருக்கு? யாராவது குடும்பத்தோட ஹனிமூன் போவாங்களா? நீ நெருங்கவோ, தொடவோ கூடாதுனு சொன்னபோ ஒதுங்கி தானே இருந்தான். உனக்கு தான் அவன் அணைப்பும், அருகாமையும் ஆறுதலும் தேவைப்பட்டிருச்சு. அதுக்கு பின்னும் தனியாக இருக்கும் போது அத்து மீற முயர்ச்சி செய்தானா? இல்லையே! அவன் கிளம்பி போகும் போது மட்டும் கன்னத்துல முத்தமிட்டுட்டு போவான். நீயும் அவனை விரும்புறேன்னு தெரிஞ்சி தானே நெருங்கி வாரான்” மனம் அவனுக்காக வாதிட 
“நான் அவன் பொண்டாட்டி தானே! கிஸ் பண்ணா தூக்குல போட்டுடுவாங்களா? நா தொடவேணான்னு சொன்னா அவன் சாமியார் மாதிரி இருந்துடுவானா? அதென்ன கல்யாணம் பண்ண மட்டும் மாட்டேன், முடியாதுனு சொன்ன போதும் பண்ணிக் கிட்டான். இதுக்கு மட்டும் அனுமதி கேட்டு நிக்கிறானா? அவ்வளவு நல்லவனா?   பத்துவருஷமா லவ் பண்ணுறேன்னு மட்டும் சொல்லுறான் அவன் பக்கத்துலயே தானே நிக்கிறேன் ஒரே ஒரு முத்தத்துக்குமா பஞ்சம். அதான் நானும் லவ் பன்னேறேன்னு தெரியுதுல்ல. லவ் பண்ணுறேன்னு சொல்லியே ஆகணுமா?” மனம் முரண்டியது. 
“சே என்ன யோசிக்கிறேன்னு ஒன்னும் புரியல எல்லாம் இந்த பிங்க்கால வந்தது. இப்படியா வெட்ட வெளியில அதுவும் குழைந்தைகள் கேக்குற அளவுக்கு நடந்து கொள்வாங்க?” பாடசாலை வளாகத்தினுள் வண்டி நுழைய பிங்கியை  வசைபாடியவாறே இறங்கி நடந்தாள் ஆரோஹி.   
உன்னை பார்த்ததும் அன்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
ஸ்கூபி தீரமுகுந்தனின் காலடியில் வந்து குறைக்க பிங்கியை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவன் ஸ்கூபியை ஏறிட வாலை ஆட்டியவாறே மெதுவாக நடைபோட்டு சென்றது. 
“இவனுக்கு இருக்குற பொறாமைய பாரு. டேய் ஸ்கூப் இவ என் பொண்டாட்டி டா”   என்றவாறே பிங்கியின் கழுத்தில் கை போட்டு அருகில் இழுத்து அணைத்துக் கொள்ள, அவன் இழுத்து நிறுத்தவும் மாய வலை அறுந்தது போல ஒரு நொடியில் இயல்பு நிலைக்கு வந்தாள் பிங்கி.    
அவனை திரும்பி பார்த்த ஸ்கூப் அடுத்து என்ன நடக்க போகுதுனு அறிந்தவனாக பலமாக குறைக்க ஆரம்பித்தது. 
“பொறாம பொறாம” தீரன் கைகொட்டி சிரிக்க பிங்கி அவனை இழுத்து தண்ணீர் தொட்டியினுள் வீழ்த்தியிருந்தாள். 
அவன் விழுந்த வேகத்துக்கு தொட்டியின் அடியில் முட்டி விட்டு மேலே வந்தவன் தண்ணீரை கொப்பளித்து அவள் மேல் விசிறியடிக்க பிங்கி அவன் மேல் பாய்ந்திருந்தாள்.
இவர்களின் காதல் லீலை தண்ணீரில் அரங்கேற அந்த பக்கம் யாரும் வராமல் காவல் காத்தது ஸ்கூபி. 
எவ்வளவு நேரம் நீரை ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடினார்களோ! பிங்கிக்கு பசி எடுக்கவே! 
“டேய் போலீஸ் காலங்காத்தால என்ன தண்ணீல மூழ்கவைச்சி ஊரவச்சிட்டியே! ரொம்ப பசிக்குது, போய் சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வா” 
“பல்லு கூட விளக்காம தண்ணீல ஆடிக்கிட்டு இருக்க, இதுல சாப்பாடும் இங்கயே கொண்டு வரணுமா?” அவளை செல்லமாக முறைக்க 
“கொடும படுத்தாதேடா, டீ கூட சாப்பிடல, குளிருது, மயக்கம் போட்டு விழுந்துடுவேன்டா” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல 
“சூரிய பகவான் வேற உச்சத்துக்கு வர போறாரு, உனக்கு குளிருதா? நாளைல இருந்து காலைலயே எந்திரிக்கிற. கராத்தேயும் கத்துகிற. ஆமா தொடர்ந்து படிக்க ஐடியால இருக்கிறதா உங்கப்பா சொன்னாரு. என்ன படிக்க போற? எந்த துறைல சாதிக்க போற?”
பசி வந்தா பத்தும் பறக்கும். அவன் கேட்ட கேள்வியில் பிங்கிக்கு பசியே பறந்தது. பிங்கிக்கு படிப்பு சுத்தமாக ஏற வில்லை. படிக்காவிட்டால் வீட்டு வேலை பழகு என்று புஷ்பா கத்த, படிக்கிறேன் பேர்வழி என்று காலேஜில் ஆர்ட்ஸ் குரூப்பில் சேர்ந்தவள் வருடா வருடம் அரியரோடு ஜஸ்ட்டு பாசானவள். ஏதோ புஷ்பாவை ஏமாற்ற ஒரு வருடம் கழித்து வேலைக்கு போறேன், படிக்கிறேன் என்று சொல்லி இருக்க, தீரன் மீண்டும் படிப்பை பற்றி பேசவும் வயிறில் புளியை கரைக்க, இதில் சாதனையை பற்றி வேற கேக்குறானே! என்று மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டவள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு 
“அதான் எனக்கும் தெரியல ஒரே கான்பியூஸா இருக்கு அப்பொறம் பேசலாம்” என்று தண்ணீர் தொட்டியிலிருந்து இறங்க 
அவளின் முகபாவனையிலேயே அவளின் தகிடுதத்தம் தெரிய உள்ளுக்குள் சிரித்தாலும் “என்ன படிச்சிருக்க” கேட்டவாறே அவனும் வெளியே வர 
குளிர்வதை போல் நடித்தவள் உள்ளே செல்ல பார்க்க அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் அருகில் இருந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த துவாலையை எடுத்து அவளின் தலையை துவட்ட அவனின் இச்செயலால் காதல் கசிய விழி விரித்து அவனை பார்த்தாள் பிங்கி. 
“குட்டியூண்டு கண்ண இப்படி விரிக்கிறா?” அவளை உள்ளுக்குள் ரசித்தாலும்,   “சொல்லு என்ன படிச்சிருக்க” கொஞ்சம் அதட்டலாக வந்தது இம்முறை அவன் கேள்வி 
இதற்க்கெல்லாம் பயப்பட்டால் அது பிங்கி இல்லையே! “ஆமா யாரு துண்ட கொண்டு வந்து இங்க வச்சாங்க?” கன்னத்தை ஒரு விரலால் தட்டியவாறே யோசிக்க 
அவளின் ஒவ்வொரு செயலும் தீரனை அவளின் பால் சுண்டி இழுக்க “ராட்சசி பதில் சொல்லாம எஸ்கேப் ஆகா ஏதோ பிளான் பண்ணுறா தீரா பீ ஸ்ட்ரோங்” தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் “ஆயிஷாம்மா கொண்டு வந்து வச்சிட்டு போனாங்க. எந்த காலேஜ்ல படிச்ச?”
“ஐயோ இந்த இம்ச போலீஸ் விடவே மாட்டான் போல இருக்கே! பிங்க் சீக்கிரம் யோசி” பெரியதொரு புன்னகையை முகத்துக்கு கொண்டு வந்தவள் “ஆர்ட்ஸ் காலேஜ் தான்” என்று பெரியதொரு தும்மல் போட, மூக்கை உள்ளங்கை கொண்டு உருட்டியவாறே யோசிக்க 
“ஆர் யு ஓகே” புருவம் தூக்கி கொஞ்சம் கவலை எட்டிப் பார்க்க தீரன் வினவ அவனின் முகமாற்றத்தை பார்த்தவள் மூளை போட்ட கட்டளையால் பிங்கியின் தும்மல் தொடராக வந்தது. 
“வா உள்ள போய் டிரஸ் மாத்தலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு செல்ல 
“அப்பா இன்னைக்கி தப்பிச்சாச்சு” உள்ளுக்குள் சிரித்தவள் நிம்மதியாக படியேறலானாள்.
நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்
செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா 
பாடல் கேட்போமா
ஆடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாதா
இன்பம் எல்லாமே
கையில் வந்தேவிழுமா
நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா??
விஷ்வதீரன் வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருக்க அவனது அலைபேசி அடித்தது. ஒளிர்ந்த என்னை கண்டவன் அழைப்பை ஏற்கலாமா? வேண்டாமா? என்ற யோசனைக்குள்ளானான்.       
அழைத்தது பிரபல மனநல மருத்துவர் அர்ச்சனா முத்துராஜ். ஒருகாலத்தில் விஷ்வதீரனின் பின்னால் காதல் என்று அலைந்தவளும் கூட. இந்த பழம் புளிக்கும்னு ஒதுங்கினாலோ, அல்லது விட்டு பிடிக்கலாம் என்று விட்டுட்டு சென்றாலோ திடீரென காணாமல் போய் இருந்தவள் பிரபல மனநல மருத்துவராய் அவதாரம் எடுத்து விஷ்வதீரனின் முன்னால் வந்து நிற்க அவன் எந்தநாளும் போல் சாதாரணமாக பழகலானான். 
தொழில் முறையில் அவளை அடிக்கடி சந்திக்க நேர்ந்து கொண்டே தான் இருந்தது. பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடு படுத்தப் பட்ட பெண்களும், கற்பழிக்கப் பட்ட பெண்களும், கணவனாலும், மாமியாராலும் சித்திரவதை செய்யப்பட்ட பெண்கள் என்று பல பெண்களை மையமாய் வைத்து உத்தியோகபூர்வமான சந்திப்புகள் இருந்து கொண்டே இருக்க, சில நேரம் காபி ஷாப் போலாமா?, டின்னர் அவுட் போலாமா? என்ற கேள்விகளோடு அத்து மீறி நெருங்க முயற்சசிப்பதும் அவள் தரப்பிலிருந்து நடை பெற அவற்றை தடுத்துக் கொண்டிருந்தான் விஷ்வதீரன். 
இன்று அவளின் எண்ணை அலைபேசி ஒளிர்க்க “புதுத்தலைவலியாக என்ன சொல்ல போறாளோ!” என்ற எண்ணம் தோன்ற எடுக்கலாமா? வேண்டாமா? என்று மனதோடு பட்டிமன்றம் நடாத்த அலைபேசி அடித்து ஓய்ந்தது. 
அவன் நிம்மதி பெருமூச்சு விட மீண்டும் அவளின் மருத்துவமனை எண்ணிலிருந்து கால் வரவே! உத்தியபூர்வமான அழைப்பாக இருக்கும் என்று தோன்ற அலைபேசியை இயக்கி காதுக்கு கொண்டு வர 
“என்ன விஷ்வா? என் நம்பரை பாத்ததும் கால எடுக்க தோணாதோ?” கொஞ்சம் கடுப்பாக ஒலித்தது அவள் குரல். 
“சொல்லுங்க மேடம் எனி ஒபிசியல் மேட்டர்?” அவள் போல் உரிமையாக பேசாது, மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்க 
“ஓஹ் சார் ரொம்ப பெரிய போலீஸ் இல்ல எந்த நேரமும் பிசியா தான் இருப்பீங்க. ஆனா பாருங்க உங்க மனைவி இப்போ என் கிட்ட தான் இருக்காங்க” 
“இவ என்ன ஆரோஹிய கடத்தி வச்சிருக்காளோ?” ஒருகணம் திகைத்தான் விஷ்வதீரன். “ஏய் என்ன உளறுற” 
“மரியாதை சார் மரியாதை. நான் ஆஸ்பிடல்ல தான் இருக்கேன், சீக்கிரம் வாங்க பாக்கலாம்” என்று அலைபேசியை அனைத்திருக்க 
“ட்ரைவர்” என்று கத்தியவாறே வண்டியில் ஏறி இருந்தான் விஷ்வதீரன். 
மரத்தின் அடியில் அமர்ந்து சலீம்பாயோடு டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர் அவனின் குரலில் அதை வைத்து விட்டு வண்டியின் பக்கம் ஓடிவந்து ஏறி இயக்கியவாறே கண்ணாடியினூடாக அவன் எங்கே போகவேண்டும் என்று சொல்வானோ என்ற பார்வை பார்க்க 
“டாக்டர் அர்ச்சனாவோட ஹாஸ்பிடல்” என்றவன் ஆரோஹியிக்கு அழைத்தான். அவளுடைய அலைபேசி அனைத்து வைத்திருப்பதாக சொல்ல பதட்டத்தோடு பயமும் கலவையாக நெஞ்சில் ஏறி அமர்ந்துக்  கொள்ள என்ன செய்வதென்று யோசிக்கலானான். 
அவனது அலைபேசி குறுந்செய்தி வந்ததாக சொல்ல அதை திறந்தவனுக்கு ஆரோஹி அந்த மருத்துவமனையில் மருத்துவருக்காக காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படம் இருக்க அதை ஜூம் செய்து பார்க்க அது அர்ச்சனாவின் அறையின் முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவாக தெரிந்தது. 
“அப்போ ஆரா தான் அவள சந்திக்க போய் இருக்கிறாளா? ஏன்? எதுக்கு?” என்ற கேள்விகள் மண்டையை குடைய கண்மூடி இருக்கையில் தலை சாய்த்துக்கொண்டான்.

Advertisement