Advertisement

             அத்தியாயம் 27
காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே!
காற்றில் ஆடும் அவள் கூந்தலை காதோராமாக ஒதுக்கி விட்டவனின் விரல்களோ கன்னத்தில் கோலம் போட ஆரம்பித்திருக்க ஆரோஹியின் மேனி சிலிர்த்தது. 
தன்னவனின் விரல் தீண்டல் காதல் தீயை மூட்ட வெட்கமும் அங்கே எட்டிப் பார்க்க, முகமோ ரோஜா வண்ணத்தை தத்தெடுக்கலானது.   
ஆரோஹியின் முகமாற்றத்தால் விஷ்வதீரனின் காதல் நெஞ்சம் ஊர்றேடுக்க  “ஆரா” தாபமாக விஷ்வதீரன் அழைக்க கண்களை அகல விரித்து பார்த்தாலே ஒழிய பதில் சொல்ல நா எழவில்லை. 
அவள் கண்களில் கரைந்து, தொலைந்து கொண்டிருந்தவன் சுற்று புர சூழலையும் மறந்து அவள் இதழ் நோக்கி குனிய
ஏதோ வண்டியின் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் “விஷ் வீட்டுக்கு போலாம், அஜய்யும், விஜய்யும் என்ன அட்டகாசம் பண்ணுறாங்களோ தெரியல” இயல்பு நிலைக்கு வந்தவள் புன்னகைத்தவாறே வண்டியில் ஏறி இருந்தாள். 
அவளின் வெட்கப்புன்னகையை ரசித்தவாறே வண்டியை இயக்கினான் விஷ்வதீரன்.
ஆரோஹி நேற்று நடந்த சம்பவத்தால் கலங்கி இருக்க, அவளுக்கு தேவையானது விஷ்வதீரனின் அணைப்பும், ஆருதலான வார்த்தைகளுமே! நேற்று முழுக்க  வேலையில் இருந்தவன் மனைவியின் மனநிலையை, கணிக்க தவறியதை நினைத்து, வருந்தியவனாக அவளை பார்க்க, சற்று நேரத்துக்கு முன் இருந்த ஆரோஹி அல்ல அவள். விஷ்வதீரனின் அருகாமையில் பாதுகாப்பை பெற்று தெளிவான ஆரோஹி. 
விஷ்வதீரன் சொன்னது போல் ஆரோஹி தான் தந்தையை ஒதுக்கி வைத்திருக்கிறாளே! ஒழிய அவர் வாரத்துக்கு ஒரு தடவையாவது அவளுக்கு அழைத்து விடுவார். அவரின் அழைப்பை ஏற்காது ஆயிஷாவிடம் அலைபேசியை கொடுத்து விட்டு செல்பவள் ஆயிஷா குழந்தைகளையும் பேசவைப்பது அறிந்தே இருந்தாள். யாருமே இல்லாத நிலையில் தாத்தா என்று ஒருவராவது அழைக்கிறார் என்ற சந்தோச பூரிப்பில் குழந்தைகள் அதை அவளிடம் பகிரும் போது அவளால் அதை தடுக்க தோன்றவில்லை. கல்யாணம் நடந்த பின் அவர் அழைக்கவுமில்லை. அழைத்து பேச கூடிய மனநிலையில் ஆரோஹியும் இல்லை. ஆனால் அவர் விஷ்வதீரனுடன் தொடர்பில் தான் இருந்திருக்கிறார். என்ன மாதிரி பேசி எல்லாரையும் கரெக்ட் பண்ணி வச்சிருக்கான் பெருமை பொங்க அவனை பார்த்தவள் தந்தையுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்ற
“விஷ் நா அப்பா கிட்ட பேசணும்”
“இப்போவேவா?”
“ஆ.. டைம் வித்தியாசமில்லை. அப்பொறம் பேசலாம். ஏன் விஷ் நா அப்பாகிட்ட பேசினா அவர் என் கிட்ட பேசுவாரா?, நா நல்ல மகளே இல்லல” கவலையாக அவள் சொல்ல 
அவளின் வாயில் விரலை வைத்து தடுத்தவன் “நடந்து முடிந்தத பத்தி இனி பேசி என்ன பயன் ஆரா அவர் மேலயும் தப்பிருக்கு, இனி நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்” என்றவன்   
“ஆரா நா ஒன்னு கேப்பேன் தப்ப நினைக்காத” 
“என்ன கேக்க போறானோ!” என்று அவனை முறைத்தவாறே பார்த்தவள்
“லவ் பண்ணுறியான்னு லூசுத்தனமா கேக்காத” 
“அதில்ல அதுக்கு பதில் தான் தெரியுமே. இது வேற” 
“என்ன கேக்கணும்” 
“இல்ல அன்னைக்கி டில்லி ஹோட்டல் ரூம்ல என்னதான் நடந்தது” 
திருதிரு என்று முழித்தவள் “என்ன கேட்ட? உனக்கு நியாபகம் இல்லையா?” 
“சுத்தமா நியாபகம் இல்ல. நீ குடிக்க இருந்த சரக்க நான் குடிச்சிட்டேன். சோ உனக்கு கண்டிப்பா நியாபகம் இருக்கும்” 
“பண்ணுறதையும் பண்ணிட்டு. இப்படி பச்சை புள்ள மாதிரி கேட்டா உன்ன நான் மன்னிச்சிடுவேனா?’ ஆரோஹி கோபமாக முகத்தை வைத்துக் கொள்ள 
“ப்ளீஸ் டி என்னால நிம்மதியா இருக்க முடியல. சொல்லுடி” 
“அத பத்தி மட்டும் பேசாத”
“சொல்ல மாட்டியா? 
“மாட்டேன்” முறிக்கிக் கொண்டாள் ஆரோஹி.
வண்டி விஷ்வதீரனின் கைகளில் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே………………
தீரமுகுந்தன் ஸ்கூபியோடு வருவதை கண்டு திருமாறன் “விஷ்வா எங்க?” 
“அண்ணி கூட இருக்கான் வந்துடுவான்” 
“ஆரோஹி எங்க போய் இருந்தா?” இது தாத்தா தீரமணி. அவர் குரலே “என்ன பிரச்சினை?” என்ற  கேள்வியாக ஒலித்தது
“அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க, சும்மா அவனும் பயந்து எல்லாரையும் டென்ஷன் படுத்துகிட்டு” தீரமுகுந்தன் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல 
“இந்த வீட்டுக்கு சீசீடிவிய பொறுத்து” என்றவர் உள்ளே சென்றார். 
பாதுகாப்புக்காக சீசீடிவி பொருத்தனும் என்று தீரன் வந்து நின்ற போது “ரெண்டு போலீஸ்காரங்க இருக்குற வீடு, மூனு வயசான ஆம்பிளைங்க மட்டும் தான் இருக்கிறதே! அதெல்லாம் தேவ இல்ல” என்று கறாராக சொன்னவர் இன்று சொல்லி விட்டு செல்வதை புன்னகையாக பார்த்திருந்தான் தீரமுகுந்தன்.
வீட்டாரை பொறுத்தவரையில் ஆரோஹி, விஷ்வதீரனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் உண்மை என்னவென்று சரிவர அறியாவிட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் குளிர்யுத்தம் தீரமுகுந்தன் அறியாததில்லை. அண்ணன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்து வீட்டாரை சமாதானப்படுத்தி விட்டு அன்றைய மிகப்பெரிய வேட்டைக்கு தயாரானான்.  
வீட்டை அடைந்த ஆரோஹி முதலில் கண்டது காலை நீட்டி கொண்டு படுத்துக்க கொண்டிருந்த ஸ்கூபியை விஷ்வதீரனின் கையை இறுக்கி பிடித்தவள் ஸ்கூபியை நோக்கி நடந்தாள்.
“ஸ்கூப் உன் பின்னாடியே வந்திருக்கிறான் ஆரா” விஷ்வதீரன் சொன்ன உடன் 
“என்ன”  என்று என்று அவன் புறம் திரும்ப, ஸ்கூபி அவளை தொடர்ந்து வந்த கதையையும், அவளை இலகுவாக கண்டு பிடிக்க முடிந்ததையும் சொல்ல விழி விரித்து பார்த்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை. 
ஆரோஹிக்கு சின்ன வயசுல இருந்தே நாய் என்றால் பயம். அதுவும் ஸ்கூபி போன்ற ஜெர்மண்ட் ஷெர்பார்ட் வகை வேட்டை பற்களோடு, நன்கு பயிற்சி பெற்றவைகள் ஆபத்தானதே என்று மனதில் பதிந்திருக்க, அன்று பிங்கியின் உயரத்துக்கு எழுந்து நின்றதை கண்டுதான் ஊரையே கூட்டி இருந்தாள்.   
“என்ன இந்தம்மா நம்ம பக்கம் வருது” எழுந்து அமர்ந்து கொண்டு அவளை நேராக பார்க்க அவள் கண்ணில் இருந்த தெளிவை கண்டு அவ்விடத்திலேயே நின்றது. 
விஷ்வதீரனின் கையை பிடித்தவாறே ஸ்கூபியின் புறம் மண்டியிட்டு அமர்ந்தவள் “தாங்க்ஸ் ஸ்கூபி” என்று சொல்ல ஸ்கூபி முன்னங்காலை அவள் புறம் நீட்டியது. 
“கைகுலுக்கு” விஷ்வதீரன் சொல்ல ஆரோஹியும் கை கொடுத்தாள். 
இக்காட்ச்சியை பார்த்தவாறே வெளியே வந்த தீரமுகுந்தன் 
“உன்ன போலீஸ் வலைவீசி தேடுது” சிரிக்காமல் சொல்ல 
“போன வீட்டுலயே! விட்டுட்டேன். நீ போ நான் வரேன்” என்றவன் ஆரோஹியை ஏறிட 
“நீ போ விஷ், நாம அப்பொறம் பேசலாம்” என்ற ஆரோஹி உள்ளே சென்றாள்.
“என்னமா கோவிலுக்கு போனனு முகுந்த் சொன்னான்” வெறுங்கையோடு வரும் மருமகளை கேள்வியாய் திருமாறன் ஏறிட என்ன சொல்வதென்று ஆரோஹி முழிக்க 
“அர்ச்சன தட்டு என் கைல பா” என்றவாறே வந்த விஷ்வதீரன் தட்டை ஆரோஹியின் கையில் கொடுத்து விட்டு கண்சிமிட்டியவாறே மாடியேறலானான். 
“எப்படி இருந்த என் பையன இப்படி மாத்திட்டியே! மா” நடிகர் சிவாஜி போல் நெஞ்சில் அடித்துக் கொண்டு நடித்தவர் சிரித்தவாறே அகன்றார்.
இருவரும் இரட்டையர்கள் என்பதாலையோ! இருவரின் சிந்தனை ஒரே மாதிரி இருக்கும். அடுத்தவன் என்ன நினைப்பான் என்பதையும் அறிந்திருந்தனர். தம்பி என்ன சொல்லி இருப்பான் என்று ஊகித்தவன் வண்டியை நிறுத்தி அர்ச்சனை தட்டை வாங்கி இருந்தான். 
“கோவிலுக்கு போகாம எதுக்கு வாங்கின?” ஆரோஹியின் கேள்விக்கு புன்னகையை பதிலாய் கொடுத்தவன் வேறு பேச ஆரோஹி அதை மறந்தே போய் இருந்தாள். 
“இப்படி எல்லா விஷயத்திலும் பாத்து பாத்து செய்பவனை விட்டு செல்ல உனக்கு எப்படி டி மனசு வந்தது” மனசாட்ச்சி கடிய 
“நா எங்கயும் போகல, முக்கியமான முடிவெடுக்க யோசிக்க வேண்டி இருந்தது, அதான் வாக்கிங் போனேன்” என்று அதை அடக்கியவள் சமயலறையினுள் புகுந்த்தாள்.  
பிங்கி காணாமல் போன நேரம்  உண்மையில் என்னால் தான் எல்லாம் ஆச்சு என்று புலம்ப ஆரம்பித்தவள் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ள பிங்கி எந்த ஆபத்தில்லாமல் வீடு வந்தாலும் அவளின் பயம் முற்றாக விலகி இருக்கவில்லை. விஷ்வதீரன் ஆக்சிடன் என்றதும் பழைய படி புலம்பியவாறே தூங்கலானாள் ஆரோஹி. 
காலையில் எழுந்தவள் விஷ்வதீரனையே பாத்திருந்தாள். அவள் எவ்வளவு ஒதுங்கி போக நினைத்தாலும் தன்னையே சுற்றி சுற்றி வந்து கல்யாணமும் பண்ணிக்க கொண்டான்.  யாரிடமும் அவளை விட்டுக்கொடுக்காத அவனின் சிறிய சிறிய செயல்களின் மூலம் கூட காதலை உணர்த்துவான் ஒழிய அவளிடம் காதலை கூட எதிர் பார்க்காமல் அவளுக்காக எல்லாவற்றையும் செய்பவனை விட்டு செல்வதா? அது ஒருநாளும் முடியாது. இன்றுவரை குழந்தைகளை பற்றி ஒரு கேள்வியும் கேக்காது முழுமனதாக ஏற்றும் கொண்டு அவர்களுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் மாறி இருந்தான். விஷ்வதீரனை அவள் மனம் கணவனாக ஏற்றுக் கொண்டு காதலிக்க ஆரம்பித்து இருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் ஆரோஹி. ஆனாலும் அதை அவனிடம் சொல்ல எதுவோ ஒன்று அவளை தடுத்துக் கொண்டே இருக்கிறதாகவே அவளுக்கு தோன்றியது.  ஏதோ யோசனையாக கிழே வந்தவள் தோட்டத்தில் கொஞ்சம் நடக்கலாம் என்று தோன்ற நடந்தவாறே யோசித்துக் கொண்டு கேட்டை தாண்டி அவ்வளவு தூரம் சென்று விட்டாள்.
விஷ்வதீரன் காலை உணவை முடித்துக் கொண்டு ஆர அமரவே  காரியாலயத்துக்கு கிளம்பிச்சென்றான். அவன் செய்யவேண்டிய அனைத்தும் சரியாக செய்து முடித்திருக்க, அமைச்சர் பரமேஸ்வரை கைது பண்ணியதாக தகவலும் வரவே மீதி வேலையை அதற்குரியவர்கள் பார்த்துக் கொள்ளவார்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையிலேயே காரியாலத்தை அடைந்தான். 
தீரமுகுந்தனின் திட்டப்படி போதை மருந்தும், வீடியோக்களும் விலாவிலிருந்து கைப்பற்றும் போது ஊடகங்கள் அனைத்தும் அங்கே இருக்க, நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவே அமைச்சரால் ஒன்றும் பண்ண முடியவில்லை. 
ஒரே மகன் இறந்த துக்கம் தொண்டையை அடைக்க, இத்தனை வருடங்களாக அமர்ந்திருந்த அமைச்சர் நாட்காலி ஆட்டம் காண நிலை குலைந்து தான் போனார் அவர்.  
இது எதிர்க்கட்ச்சியின் திட்டமிட்ட சதி என்று அவரின் தொண்டர்கள் கோசம் போட, எதிர்க்கட்ச்சியோ தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளில் அவரை நார்நாராக கிழித்து கொண்டிருந்தது.  
அவர் எந்த வழியிலும் தப்பிக்க வழி இல்லாது தீரன்ஸ் பக்காவா திட்டம் தீட்டி செயல் பட்டிருந்தனர். வீடியோக்களை கைப்பற்றும் போது வேண்டுமென்றே மாலாவின் வீடியோவை ஊடகங்களுக்கு முன்னாள் தவறுதலாக ஒளிபரப்பி மக்களை தூண்டி விட்டிட்டிருக்க, பெண்களுக்கெதிரான, வன்முறைக்கான சங்கங்களும், பொதுமக்களும் போராட்டம் செய்ய ஆரம்பித்திருந்தனர். 
வீடியோக்களை கைப்பற்றிய இரண்டு மணித்தியாலங்களில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்டியலின் படி இறந்து போன மற்றும் காணாமல் போன பெண்களின் பெயர்களையும் ஊடகங்களுக்கு கொடுக்க, அவர்களின் பெற்றோர்களும் பொலிஸ்நிலையத்துக்கு வந்து கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் பண்ண, ஊடகங்களுக்கு தீனி போட்ட செய்தியாக அவர்களை பேட்டி காணுவத்திலும், மக்களின் கருத்து கேட்பதிலும் சென்று கொண்டிருந்தது. நகரமே கலவர பூமி போல் இருக்க பாடசாலைகளும் இரண்டு நாள் விடுமுறை என அரசு அறிவித்தது. அடுத்து வந்த நாட்களும் அரசு விடுமுறை தினங்களாக இருக்க, பிரச்சினை ஓய்ந்து பாடசாலைகள் திறக்க ஒரு வாரம் எடுத்தது.
பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்தும், போதை மருந்தை எதிர்த்தும், கல்லூரி மாணவர்களும் களமிறங்க நகரத்தில் கவரமும் ஆரம்பமாக, நகர மக்களின் பாதுகாப்பையொட்டி  அதிரடி படையும் களமிறங்கி நிலைமையை சீர் செய்ய நான்கு நாட்கள் சென்றிருந்தது.
“அமைச்சர் பரமேஷ்வர் மோசமான உடல் நிலை காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்” என்ற முக்கிய செய்தி எல்லா ஊடகங்களிலும் ஒளிப்பரப்பப் பட அதையும் ஒரு தலைப்பாக பாவித்த சில ஊடகங்கள் மக்களின் கருத்து கேட்டு தங்களது டி,ஆர், பி யை உயர்த்த வேலை பார்த்தனர்.
பண்ண வேண்டிய குற்றங்களை பண்ணி விட்டு, மருத்துவமனையில் போய் படுத்து கொள்வதும் அதன் பின், எப்படியாவது கேஸிலிருந்து வெளியே வருவதும் தான் இவர்களுக்கு கைவந்த கலையாச்சே! மக்களின் குரல் ஒரே குரலாக எல்லா இடங்களிலும் ஒலிக்க, போலீஸ் தரப்பில் அவரை நிரந்தரமாக சிறையில் அடைக்கும் வேளைகளில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர்.   
சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காகவும்,  மீம்ஸ்களில் வளம் வந்து கொண்டிருந்தார் சுகாதார அமைச்சர் பரமேஷ்வர்.
கடந்த பத்து நாட்களாக வீடு வரவே விடியலை தொட்டிருக்க விஷ்வதீரனுக்கு ஆரோஹியோடு மனம் விட்டு பேச சந்தர்ப்பம் சரிவர அமையவே இல்லை. தூங்கும் அவளின் தலையை கோதி முத்தமிட்டு துயில் கொள்வதும், அவன் எந்திரிக்கும் போது குழந்தைகளோடு அவள் பாடசாலை செல்ல தயாராக நிற்பதும் என்று கடந்த தினங்கள் மௌன பாஷையாகவே கழிய,
ஆரோஹியிடமும் ஏதோ ஒரு பெரிய மாற்றம் அது அவள் முகத்தில் இருந்த சந்தோஷ புன்னகை. எந்த நேரமும் விஷ்வதீரனின் மேல் பாயத்தயாராகும் ஆரோஹி அவனுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும் முகத்தில் ஒரு இறுக்கம் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் கனிவும்  காதல் பார்வையை வீசியவாறே கரிசனையாக பேசுவதும், பாடசாலைக்கு விடைபெற்று செல்லும் போது அஜய், விஜய்யை தள்ளிக் கொண்டு தான் முதலில் அவனின் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்று போட்டி போடுவதுமாக பத்து வருடங்களுக்கு முன் இருந்த ஆரோஹி திரும்பி இருந்தாள்.
அன்று காலையிலும் அவ்வாறே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரோஹி. கண்ணாடியின் முன் குனிந்து திலகமிட்டு கொண்டிருந்தவள் பின்னாடி அணைத்திருந்தான் விஷ்வதீரன். 
குளித்து விட்டு மஞ்சள் சேலையில் பள்ளி செல்ல தயாராகி இருந்தவளின் தோற்றம் அவனை ஏதோ செய்ய சத்தம் செய்யாது அவள் அருகில் சென்று வாசம் பிடிக்க இதுக்கு மேலும் தாங்காது என்று அணைத்திருந்தான். 
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “ஆரா ஹனிமூன் எங்க போலாம்?” 
“முதல்ல நான் ஸ்கூல் போயிட்டு வரேன் விஷ்” புன்னகைத்தவாறே அவள் சொல்ல 
“இன்னக்கி லீவ் போடுறியா?”
“அஜய்யும், விஜய்யும் லீவு போடுவாங்க, எக்ஸாம் வேற வருது. லீவு விட்டதும் எல்லாரும் சேர்ந்து போலாம்” 
“அறிவிருக்காடி ஹனிமூனுக்கு குடும்பத்தோடவா போவாங்க? ஏற்கனவே ரெண்டு வாலுங்களும் நடுவுல படுத்து நம்மள பிரிச்சி வச்சிருக்கிறது பத்தாதா?” புன்சிரிப்பினூடாகவே சொல்ல ஆரோஹியின் முகம் சுருங்கியது. 
“இதுக்கு தான் சொன்னேன் கல்யாணம் ஆனா நீ மாறிடுவானு. இப்போ பாத்தியா? உனக்கு என் பசங்க தொல்லையா போய்ட்டாங்க” அவன் அணைப்பிலிருந்து வெளிவந்தவள் காட்டமாக சொல்ல அவளை அதிர்ச்சியாக பார்த்தான் விஷ்வதீரன். 
“ஹே ஆரா நா அந்த அர்த்தத்துல சொல்லல” 
“நீ எந்த அர்த்தத்துல சொன்னாலும் உன் நோக்கம் இதுதானே!” என்றவள் பையோடு வெளியேற அவளை இழுத்து  நிறுத்தியிருந்தான் விஷ்வதீரன். 
“எங்க போற பேசி தீர்த்துடு போ. நா இன்னும் பேசி முடிக்கல” 
“என்ன பேச வேண்டி இருக்கு? ஆறு வருஷத்துக்கு முன்னாடி போதைல கொண்டாடின ஹனிமூன் பத்தலயா? இப்போ உனக்கு எதுக்கு ஹனிமூன். என் பசங்கள என் கிட்ட இருந்து பிரிக்க பாக்கிறியா” 
“என்னடி விட்டா ஓவரா பேசிக்கிட்டே போற, அன்னக்கி என்ன நடந்ததுன்னு சுத்தமா நியாபகத்துல இல்ல. நீ சொல்லவும் மாட்டேங்குற. லூசு மாதிரி பேசாத. என்ன உன் பசங்கனு சொல்லுற நம்ம பசங்கடி” 
கோவமாக ஆரம்பித்தவன் ஆரோஹியின் திகைத்த பார்வையை கண்டு சுதிகுறைய சமாதானமாக பேச ஆரம்பித்தான். 
“என்னையே திட்டுவியா நீ” ஆரோஹியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விழ நொந்து விட்டான் விஷ்வதீரன். 
“இப்போ தான் கொஞ்சம் நாட்களாக சரியாக பேசவே செய்றா, கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி வேற வர இப்போ போய் லூசுத்தனமா பேசிட்டோமே!”
“சாரி டி. ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன். அழாத, இங்கவா” என்று அவளை அணைத்துக் கொள்ள 
“ஏன் விஷ் என்ன உரிமையா திட்ட கூடமாட்டியா?” என்று விசும்ப ஆரம்பித்தாள் ஆரோஹி. 
“இவ என்ன திட்டின சந்தோஷத்துலயா அழுறா?” என்று விஷ்வதீரன் குழம்ப 
“எனக்கு நேரமாச்சு விஷ்” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே வெளியேறினாள். 
“இப்போ நாம எதுக்கு சண்டை போட்டும்” ஒன்றும் புரியாமல் விஷ்வதீரன் கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
ஆரோஹியின் மனதிலும் அதே எண்ணமே! அவன் கேட்டதில் என்ன தப்பிருக்கு? நான் என் இப்படி நடத்துகிறேன்? அவன் கோப பட்டா கூட தாங்க மாட்டேங்குதே! இதே வேறு ஒருவனாக இருந்தால் கன்னத்தில் சூடாக அரை கொடுத்து விட்டுத்தான் பேசியே இருப்பான். திட்ட ஆரம்பிச்சவன் என் முகத்தை பார்த்ததும் அப்படியே அடங்கி அமைதியாத்தானே பேசினான். ஆரு நீ ரொம்ப ஓவரா தாண்டி போய் கிட்டு இருக்க.
 இங்கே பிங்கிக்கு கராத்தே சொல்லிக் கொடுக்க தீரமுகுந்தன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

Advertisement