Advertisement

           அத்தியாயம் 26
“குட் மோர்னிங் டா” தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர 
“என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற” என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர  பல்லவனின் இறப்புச்செய்தி ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. 
“என்னடா இது” என்று திருமாறன் கேக்க 
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தீரன்ஸ் “சுகாதார அமைச்சரின் மகன், போன் வந்துச்சு விசாரிச்சு கிட்டு இருக்காங்க” விஷ்வதீரன் சொல்ல 
“என்ன வீடு ரொம்ப அமைதியா இருக்கு? குட்டச்சி இன்னும் தூங்குறதால அமைதியா இருக்கும்” என்று புருவம் நீவிய தீரமுகுந்தன் “அண்ணியும் பசங்களும் எங்க?” விஷ்வதீரனை ஏறிட 
தொலைக்காட்ச்சியில் லயித்திருந்தவன் தீரமுகுந்தன் கேட்ட கேள்வியில் “ஆமா வீடே அமைதியா இருக்கு, காபி சாப்பிடணும்னு ஆராவ தேடினேன் காணோம்” 
“அதான் வீட்டுக்குள்ள வாக்கிங் போனியா” என்று நக்கலாக சிரித்தவன் “எங்க போனாங்க” என்று தாத்தாவையும், அப்பாவையும் ஏறிட அவர்களும் “தெரியாது” என்று பார்வையாலேயே சொல்ல 
“இந்த ஸ்கூபி எங்க போனானே தெரியல?” என்றவாறே உள்ளே நுழைந்தார் சலீம் பாய். 
“ஸ்கூபியையும் காணோமா?” தீரமுகுந்தன் யோசனைக்குள்ளாக 
“வேற யாரை காணோம்” சலீம் பாய் அவனிடம் கேக்க 
“ஆரா, பசங்க” என்றவாறே விஷ்வதீரன் எழுந்துக் கொள்ள 
“கிழக்கு பக்கமா உள்ள மாமரத்துல ஊஞ்சல் கட்ட சொல்லி வதனிமா சொல்லுச்சு. பசங்க ரெண்டு பேரும் அங்க ஊஞ்சல் ஆடுறாங்க. ஆயிஷா சாப்பாடு ஊட்டுறா. ஸ்கூபிய காணோம்னு தான் தேடுறேன்” சலீம்பாய் சொல்ல   
“அப்போ ஆராவும் பிங்கியும் எங்க?” விஷ்வதீரனின் குரலில் கொஞ்சம் பதட்டம் இருந்தது. 
“அவ இன்னும் தூங்குறா” என்ற தீரமுகுந்தன் “அண்ணி எங்க போனாங்க?” என்று அண்ணனையே ஏறிட ஆயிஷா இருக்கும் இடத்துக்கு ஓடி இருந்தான் விஷ்வதீரன்.
“ஆரா எங்க போறான்னு உங்க கிட்ட சொல்லிட்டு போனாளா?” விஷ்வதீரனின் குரல் திடீரென ஒலிக்கவும் திடுக்கிட்டு திரும்பியவர் 
“இல்ல தம்பி சொல்லலையே! பசங்க மட்டும் தான் கீழ வந்தாங்க ரூஹி வரலையே! நேத்து முழுநாளும் புலம்பிக் கொண்டே தான் இருந்தா தம்பி” அவரும் பதட்டமாக
“அஜய், விஜய் மம்மி எங்க” 
“தெரியல டாடி” இருவரும் ஒன்றாக சொல்ல வீட்டை நோக்கி ஓடினான். 
 “தீரா வண்டில ஏறு” என்று தீரமுகுந்தன் குரல் கொடுக்க வீட்டுக்குள் போக அடி எடுத்து வைத்தவன் தாவி வந்து வண்டியில் ஏறி இருந்தான். 
பல்லவனையும் அவனது நண்பர்களையும் விசாரித்ததில் கிடைத்த திடுக்கிடும் தகவல்களில் விஷ்வதீரனை உலுக்கியது அவன் ஆரோஹியின் வாழ்வில் சம்பந்தப்பட்டு இருப்பதே! 
அவர்களை சிறையில் அடைத்தாலும், சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து வெளியே வர முட்படுவார்களே தவிர செய்த குற்றத்துக்காக ஒரு காலமும் வருந்த போவதும் இல்லை. பல்லவன் பண்ணி இருக்கும் அக்கிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டத்தால் தண்டிக்க இன்னும் எத்தனை காலமாகுமோ? ஆரோஹியின் வாழ்வில் நுழைந்ததுக்கே! அவனை நூறு தடவ தூக்கில் போடும் வெறியில் இருந்தான் விஷ்வதீரன். அவர்களை இப்படியே விட்டு விடவும் மனம் வரமால் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் 
அன்புச்செல்வன் அழைத்து மெஸ்மரிஸம் பற்றி ஒரு புதிய தகவலை சொல்லி இருந்தார். அது “மெஸ்மரிஸம் புதியவகை போதை மருந்து இல்ல ஏற்கனவே உள்ளதை எடுத்து அதில் இன்னும் சில மாற்றங்கள் செய்து அதனுடன்  உடல் அவயவங்களை கரைக்கக்கூடிய நச்சுத்தன்மையான சில ரசாயன பொருட்கள் கலக்க பட்டிருக்கு, யாரோ வேண்டுமென்றே  செய்திருக்கணும், ரொம்ப ஆபத்தானதும் கூட” 
ஏற்கனவே காலேஜ் மாணவனை பரிசோதித்ததில் கிடைத்த தகவல்கள் தான். உடல் உறுப்புக்கள் பழுதடைந்து காணப்பட்டது போதை பொருளின் பக்கவிளைவு என்று நினைத்து கொண்டிருக்க, யாரோ வேண்டுமென்றே செய்திருப்பது “இன்னுமொரு தலைவலி கேஸ் இவன வேற கண்டு பிடிக்கணும்” என்று நினைத்தவன், “பிங்கியின் ப்ளாட் சாம்பல்ல ஏதும் தெரியலையா?” 
“இல்ல. இரத்தத்துல கலந்த பின் கண்டு பிடிக்கிறது கஷ்டம்” 
“சரி பாத்துக்கலாம்” 
சட்டம் தன் கடமையை செய்யும் என்று கைகட்டி நிற்க விஷ்வதீரனின் மனம் ஒப்பவில்லை. ஆரோஹியின் வாழ்வில் நுழைந்து ஆகாஷ், நிஷா இருவரினதும் வாழ்க்கையை அழித்த காரணத்துக்காகவே தன் கையால் தண்டனை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து  முதலமைச்சரை அழைத்து தெளிவாக எல்லா விஷயத்தையும் சொன்னவன் “சட்டப்படி தண்டனை கொடுக்க வா? இல்ல என் ஸ்டைல்ல விட்டு விடுறீங்களா?” 
“ஒட்டுகேக்கலாம், ஓட்டுபோடலாம் ரேடியோல இவனுங்கள பத்திதான் சொன்னாங்களா?” என்று யோசித்தவர் “நாட்டுக்கு எது நல்லதோ அத பண்ணுப்பா” என்று அலைபேசியை அனைத்திருந்தார். 
ஒரு மர்மமான புன்னகையை சிந்தியவன் அன்புச்செல்வனை அழைத்து ஐந்து பேரினதும் இரத்த பரிசோதனை  செய்து அவர்களின் உடல் நிலையை எவ்வாறிருக்கு என்று கேக்க 
“இவனுங்க கைதேர்ந்தவங்க சார் மூனு மாசத்துல செத்திருக்கணும், ஏதோ நல்ல சத்தான ஆகாரத்தால அது இன்னும் ரெண்டு மாசம் தள்ளி போய் இருக்கு” அன்புச்செல்வன் சொல்ல 
“இன்னும் ரெண்டு மாசம் இருந்து, கோட்டு, கேஸுன்னு அழையிரததுக்கு பதிலா, உடல்நிலையை காரணம் காட்டி ஹாஸ்பிடல்ல படுத்துக்கொண்டு, நம்மல்ல யார முதல்ல பழிவாங்கலாம்? னு யோசிச்சு, அங்கவச்சே இன்னொரு அப்பாவி பொண்ணையும் கெடுத்து, எங்கள நோகடிக்கணும்னு எங்க குடும்பத்துல உள்ளவங்க யாராவதை ஏதாவது செஞ்சு, அதுக்கு பின்னாடி இவனுங்கள எங்க கையாலேயே கொல்லுறது சிறப்பா? இது எதுவுமே இல்லாம இன்னைக்கே இவனுங்க சாகுறது தவறா? விஷ்வதீரன் பக்கா மாஸ் ஹீரோ போல் பேச 
அதை கேட்டவாறே உள்ளே வந்த தீரமுகுந்தன் “ஐஞ்சு நிமிஷம் உசுரோட இருந்து இந்தியாக்கு ஒலிம்பிக் மெடலா வாங்கி கொடுக்க போறானுங்க? இவனுங்கள எப்படி போட்டு தள்ளணும்னு என் கிட்ட விட்டுடு நான் பாத்துக்கிறேன்” 
“உன் பிளான் என்ன” ஒரு கதிரையில் சாவுகாசமாக அமர்ந்து காலுக்கு மேல் காலையும் போட்டு இரு கைகளையும் தலைக்கு கொண்டு வந்து சிரித்த முகமாகவே விஷ்வதீரன் கதை கேக்க ஆரம்பிக்க தீரமுகுந்தனும் அமர்ந்து கொண்டான். 
இவர்களின் பேச்சை கேட்டு திகைத்திருந்த ஐந்து பேரும் உயிருக்காக கெஞ்ச அங்கே நுழைந்தனர் தீரமுகுந்தனின் டீம். 
காவலாளி இவர்களின் பக்கம் இருக்க, ஐவரும் பல்லவனின் செரோக்கீயில் {ஜீப்} ஏற்றப்பட்டனர். வண்டியில் மெஸ்மரிசமும் ஒரு பையில். அவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக மெஸ்மரிசம் கொடுக்கப்பட்டது. சுயநினைவில்லாமல் அவர்கள் இருக்க வண்டியை விஷ்வதீரனே செலுத்தினான். 
தீரமுகுந்தனின் ஆட்கள் அன்புச்செல்வனோடு சேர்ந்து இரவோடு இரவாக அந்த விலாவை இருந்தது போல அமைத்து விட்டு திரும்பியிருந்தனர். 
வண்டியை மிகவேகமாக செலுத்திய விஷ்வதீரன் வண்டியை குன்றிலிருந்து விழவைக்க வண்டியிலிருந்து குதித்த போது புதரிலிருந்த உடைந்த கண்ணாடி  கையை பதம் பாத்திருக்க அவனை அழைத்துக் கொண்டு ரித்திகாவும், மிதுனும் சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு திரும்பினர். 
பல்லவனோடு மற்றவர்கள் அனைவரும் வண்டியோடு விழுந்து, வண்டி சுக்கு நூறாக நொறுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலைமையில் இருக்க அந்த இரவில் அவர்களை காப்பாற்ற அங்கே யாரும் இல்லை. யார் உயிர் முதல்ல போய் இருக்குமோ? யார் குற்றுயிராய் துடித்துக் கொண்டிருக்கிறார்களோ? பொதுமக்கள் யாராவது பார்த்து விட்டு நூறுக்கு தகவல் சொல்லும் வரை விஷ்வதீரன் காத்திருந்தான். 
சீசீடிவி காட்சிகள் அனைத்திலும் பல்லவனின் வண்டி மிக வேகமாக சென்றமை பதிவாகி இருக்க, போதை மருந்து உட்கொண்டு மிக வேகமாக வண்டி ஒட்டியதே காரணம் என்று அவர்களின் இறப்புக்கான காரணம் சொல்லப்பட்டு கேஸ் முடிவடையும் என்றாலும் தீரமுகுந்தனின் திட்டப்படி விலாவையும், பரமேஸ்வரன் வீட்டையும் சோதனையிட்டு போதைமருந்தோடு வீடியோவும் கைப்பற்றப்பட்டு பரமேஸ்வரை கைது செய்ய திட்டம் தீட்டப் பட்டது. 
எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு அண்ணனும் தம்பியும் வீடுவர அதிகாலை நான்கு மணியையும் தாண்டி இருந்தது. அறைக்குள் வந்த தீரமுகுந்தன் தூங்கிக் கொண்டிருந்த பிங்கியின் நெற்றியில் முத்தமிட சிணுங்கியவாறே அவனை அணைத்துக் கொண்டு அவளின் தூக்கத்தை தொடர, ஆழ்ந்த தூக்கத்திலும் தன்னை உணரும் மனையாளை நினைத்து கர்வம் கொண்டவன், அவளின் இதழ்களில் மென்மையாக முத்தமிட, புன்னகைத்தவள்  அவனுள் புதைந்து தூங்கலானாள். 
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
அறைக்குள் வந்த விஷ்வதீரனுக்கு காண கிடைத்தது மெல்லிய விளக்கொளியில் கால்களை மடக்கி  முழங்காலில் முகம் புதைத்து அமர்த்திருந்த ஆரோஹியே! 
இன்று நடந்தவைகளை, நாளை நடக்கபோறவைகளும், அன்று டில்லியில் நடந்தவைகளும் விஷ்வதீரனின் மனதில் வந்து வந்து போக, பலத்த சிந்தனையில் அறையினுள் வந்தவனின் ஆரோஹியின் ஓய்ந்த தோற்றம் சரிவர விழவில்லை. 
 “ஆரா இன்னும் தூங்கலையா?” சாதாரணமாக தான் கேட்டான்.  
“வீ…ஷ்” என்றவாறு தாவி வந்து அவனின் மார்பில் முகம் புதைத்தாள் ஆரோஹி. 
“என்ன ஆச்சு ஆரா?” அவளின் சத்தத்தால் ஒருகணம் பயந்துதான் போனான் விஷ்வதீரன். 
“விஷ், விஷ் என்னால தான் எல்லா பிரச்சினையும், என்னாலதான் அம்மா செத்து போய்ட்டாங்க, அப்பா விட்டுட்டு போய்ட்டாங்க, நிஷா, ஆகாஷ் னு ஒவ்வொருத்தரா என்ன விட்டுட்டு போய்ட்டாங்க. என்னால உனக்கும் ஏதாவது ஆகிருச்சுனா” அவ்வளவு நேரமும் மனக்குழப்பத்தில் இருந்தவள் அவனை கண்டதும் பதறியவளாக ஒப்பிக்க
ஆரோஹியின் புலம்பலை கேட்டு ஒரு நொடி திகைத்தான் விஷ்வதீரன். எங்கே பல்லவன் சொன்னதை தம்பி உளறி இருப்பானோ? அதை கேட்டு விட்டு புலம்புகிறாளோ என்றஞ்சியவன், அவளின் பயத்தை கண்டு அவனுக்கு சிரிப்பாக இருந்தது. அது அவள் காதலை கண்டு கொண்ட சந்தோஷத்தில். அன்றைய அலைச்சலில் ஆரோஹியின் புலம்பலுக்கான அவளின் மனநிலையை சரிவர விஷ்வதீரனால் கணிக்க முடியவில்லை.
குழந்தைகளின் தூக்கம் களைந்து விட்டதா என்று அவர்களின் பக்கம் பார்த்தவாறே “நா என்ன சின்ன குழந்தையா?” என்றவன் அவளின் கண்ணீரை துடைக்க அப்பொழுதுதான் அவனின் கைகட்டை கண்டாள் ஆரோஹி.
“என்னாச்சு விஷ்? எப்படி அடி பட்டிருச்சு?” அவள் சாதாரணமாக கேப்பது போல் அவனை பார்த்தாலும் அவளின் குரலில் அவ்வளவு பதட்டம் இருந்தது. 
“ஒரு சின்ன ஆக்சிடன்ட்” 
“ஆக்சிடண்ட்டா? என்னாச்சு?” என்றவாறே அவனை முழுவதுமாக தொட்டு பார்க்க 
“கேட்டா லவ் பண்ணவே இல்லனு சொல்லுவா” உள்ளுக்குள் நகைத்தவன் “கைல மட்டும் தான் சின்ன அடி ஒரு அக்கியூஷ்ட்ட புடிக்க போய் இப்படியாகிருச்சு”  அவன் சாதாரணமாக சொல்ல அவளின் மொத்த கோபமும் அவன் புறம் திரும்பியது. 
“ஏன் உன் டிபார்ட்மெண்ட்டுல வேற யாருமே இல்லையா? நீயே தான் போகணுமா? உக்காந்து வேல பாக்க வேண்டியது தானே! பெரிய போஸ்ட்டுல இருக்குறவங்க எல்லாரும் வேல ஏவுறத தானே செய்வாங்க, நீ மட்டும் தான் ஓடியாடி வேல செய்யணுமா? உன் தம்பி என்ன பண்ணி கிட்டு இருந்தான்? உன் கூடவே தானே இருப்பான்” என்று பொரிய 
“அவளின் காதலை வாய் வார்த்தையாக சொல்லாமல், கண்ணீராகவும்,  கோபமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவள் மீது காதல் பெறுக அவளை இறுக அணைத்துக் கொண்டவன் 
“தாங்க்ஸ் டி பொண்டாட்டி, என் மேல இவ்வளவு லவ் இருந்தா என் மேல இவ்வளவு அக்கறை எடுத்து அட்வைஸ் பண்ணி கோபத்த காட்டுவ” அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் குளியலறையினுள் புகுந்து கொண்டான். 
அவன் சொன்னதில் திகைத்தவள் கண்ணில் நீர்கசிய கட்டிலில் வந்து படுத்துக்க கொள்ள அன்று நடந்த அனைத்தும் கண்ணுக்குள் வந்து கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
“இருந்த டையட்டுல ஆரா தூங்கிட்டானு நினைச்சி நானும் தூங்கிட்டேன்டா? எங்க போய் இருப்பா? என்ன விட்டு ஒரேயடியா போய் இருப்பாளா? போக மாட்டாள்ள, என்ன விட்டு போய்டுவாளா?” தீரமுகுந்தனின் காதில் இரத்தம் வரும் வரை விஷ்வதீரன் புலம்ப 
“கொஞ்சம் அமைதியா வாடா அண்ணி எங்க இருக்காங்கனு எனக்கு தெரியும்” 
“எங்கடா இருக்கா” 
அவனை முறைத்தவன் “நீ பதட்டப்படாம இருக்கிறனா சொல்லுறேன்”
“சொல்லு சொல்லு” என்று சுவிங்கமொன்றை வாயில் திணித்தவன் அவனை ஏறிட 
“ஸ்கூபியோட கழுத்து பட்டில ட்ரெக்கிங் டிவைஸ் ஒன்னு வச்சிருக்கேன். அநேகமா அண்ணி வீட்டை விட்டு போகும் போது ஸ்கூப் பாலோவ் பண்ணி போய் இருப்பான்னு நினைக்கிறேன். இப்ப அது காவேரி நதியின் பாலத்துக்கு மேல போய் கிட்டு இருக்கிறதா காட்டுது”
“என்ன சொல்லுற?” விஷ்வதீரன் சற்று திகைத்தாலும் கண்டிப்பா ஸ்கூப் ஆராவ பாலோவ் பண்ணி போய் இருப்பானா? அவளுக்கு ஸ்கூப்ப கண்டாலே பயம்  அவளுக்கு இருக்குற போபியாவால பாலத்துக்கு மேல” என்று யோசனையாக சொல்ல 
“போய் பாக்கலாம்”  வண்டியின் வேகத்தை கூட்டினான் தீரமுகுந்தன்.
அவன் சொன்னது போல் ஆரோஹி ஏதோ ஒரு சிந்தனையில் உழன்றவளாக அந்த நீண்ட பாலத்தில் போய்க் கொண்டிருக்க ஸ்கூபி குறிப்பிட்ட தூரத்தில் இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. 
“டேய் தீரா வண்டிய நிறுத்து அங்க ஆரா” என்று விஷ்வதீரன் கத்த வண்டியை நிறுத்தினான் தீரமுகுந்தன். 
விஷ்வதீரன் ஆராவின் அருகில் ஓடி இருக்க, ஸ்கூபி தீரமுகுந்தனின் அருகில் ஓடி வந்தது. 
“ஆரா” என்று கத்தியவாறே அவன் ஓட அது அவளின் காதில் விழவில்லை. அவள் அருகில் சென்றவன் அவளின் தோளை தொட
திகைத்து விழித்தவள் “என்ன விஷ்” என்று அவனை திருப்பிக் கேக்க 
“என்ன பண்ணிகிட்டு இருக்க?” அவனது கேள்வியில் சுற்றும் முற்றும் பார்க்க வாகனங்களின் இரைச்சலோடு, நதியின் குளிர்காற்றும் தீண்டிச்செல்ல 
“நான் நான்” பதில் சொல்ல முடியாமல் திணற அப்போதுதான் அவள் பாலத்தின் மேல் இருப்பதை கண்டு எட்டி ஆற்றை பார்க்க கால்கள் நடுங்கியவாறே, தலை சுற்ற
அவள் நிலையறிந்து “ஆரா ரிலாக்ஸ். இங்க பாரு, என் கண்ண பாரு” என்று அவளை தன் பக்கம் திருப்ப சற்று ஆசுவாசமடைந்தாள்.       
“வா வீட்டுக்கு போலாம்” என்று அவளின் கை பிடித்து வண்டியின் அருகில் செல்ல முற்பட 
தான் இவ்வளவு தூரம் தனியாக, ஏதோ ஒரு சிந்தனையில் நடந்து வந்தேனா? என்று அதிர்ச்சியானவள், அவன் கைகட்டை கண்டு அவனின் கையை உதறி விட்டு “என்ன விட்டுட்டு விஷ். நா ஒரு ராசி இல்லாதவ. என்னால உனக்கு ஏதாவது ஆபத்து வந்து கிட்டே இருக்கும். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா? என்னால அத தாங்க முடியாது” விஷ்வதீரனை கண்டதும் தன்னால் அவனுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அவளின் மனதில் உள்ளதை பட்டென்று சொல்லி விட
“என்ன லவ் பண்ணுறியா?”
ஆரோஹி சத்தியமாக அப்படி ஒரு கேள்வியை எதிர்பாத்திருக்கவில்லை. நடந்தவற்றையும் நேற்று நடந்ததையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு ஏதேதோ எண்ணத்தில் இருந்தவள், விஷ்வதீரனுக்கு அடிபட்டதை கண்டு கலங்கி துடிக்க அவன் பேசியதில் அவன் மேல் அவளுக்கான காதலை புரிந்து கொண்டாலும் அவனை நெருங்க அஞ்சினாள். விஷ்வதீரனிடமிருந்து விலகி செல்வதே அவனுக்கு நல்லது என்றெண்ணி, குழந்தைகளை விஷ்வதீரன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு புறப்பட தீர்மானித்தவள். எங்கே செல்வது? என்று யோசிக்க இந்த உலகத்தில் தனிமை படுத்த பட்டதாகவே எண்ணினாள். புதிதாய் முளைத்த காதல் விஷ்வதீரனை விட்டு செல்லாதே என்று மிரட்ட, என்ன செய்வதென்று குழம்பிய மனநிலையில் கீழே இறங்கி வந்தவள், தூக்கத்தில் நடப்பவள் போல் நடக்க துவங்கியவள்  செல்லும் இலக்கு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி நடந்துகொண்டே யோசிக்க
அவள் வாயிலை தாண்டும் போது ஸ்கூபி அவளை பின் தொடர ஆரம்பித்தது. அவளை நெருங்காமல் பின் தொடர்ந்து கொண்டே இருந்ததால்  தீரமுகுந்தனால் ஆரோஹியை மிக இலகுவாக கண்டு பிடிக்க முடிந்தது. 
“பதில் சொல்லு ஆரா?”
 “இப்போவாச்சும் சொல்லேண்டி ப்ளீஸ்” என்றது அவன் பார்வை
இல்ல நண்பன் மட்டும் தான் என்றால்? ஜஸ்ட் நண்பன் தானே எனக்கு என்னவானாலும் உனக்கென்ன அக்கறை? என்றும் ஆமாம் என்று அவள் காதலை ஒத்துக் கொண்டால் அதை விட வேறென்ன அவனுக்கு வேண்டும். 
ஆமாம்னு சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அவளை மடக்கவெனவே விஷ்வதீரன் கேள்வியாக காதலிக்கிறாயா? என்று கேட்டிருக்க ஆரோஹியின் பதில் கண்ணீராகவே வெளி வந்தது. அது அவனுக்கான காதல். வாய் வார்த்தையாக சொல்லவேண்டிய தேவை இருவருக்கும் இருக்கவில்லை.
“வா வீட்டுக்கு போலாம்” விஷ்வதீரன் அவளின் கையை பிடிக்க ஒரு அடி பின்னால் நகர்ந்தாள் ஆரோஹி. 
வண்டியில் ஆரோஹி இருக்கும் இடம் தேடி வரும் பொழுது ஆயிஷா அழைத்து ஆரோஹியின் புலம்பலை பற்றி சொல்லி இருக்க 
“ஆரா நான் போலீஸ்காரன், நேர்மையா இருந்தா ஆபத்தோடதான் குடித்தனம் நடத்தணும். என்ன மட்டுமில்ல நான் நேசிக்கிறவங்களையும் காக்கணும்னா, அதுக்கேத்தா மாதிரி தான் நான் நடந்துப்பேன். நமக்கு எது விதிச்சிருக்கோ அது தான் நடக்கும். யாருக்கும் தீங்கு நினைக்காத உன்னால எனக்கு எப்படி ஆபத்து வரும்? சொல்லு?. நீ ரொம்ப குழம்பி போய் இருக்க, உங்கம்மா நோய் வந்து செத்தாங்க, உங்கப்பா உன்ன விட்டுடணும்னு நினைக்கலையே! நீ தானே ஒதுங்கி இருக்க, நா உன்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணதுமே முதல்ல பேசினது உங்க அப்பா கிட்டதான். இன்று வரைக்கும் டெய்லி உன்ன பத்தியும் குழந்தைகளை பத்தியும் விசாரிச்சு கிட்டு தான் இருக்காரு”
நிஷா, ஆகாஷை பற்றி பேச விரும்பாதவனாக “விதி முடிஞ்சா போய் சேர வேண்டியது தான்” என்று மாத்திரம் சொன்னவன். “இப்போவாச்சும் வீட்டுக்கு போலாமா? குழந்தைங்க வேற பயந்து போய் இருப்பாங்க” எதை சொன்னால் அவள் உடனே வர சம்மதிப்பாலோ அதை சொல்ல வண்டியை நோக்கி நடக்க துவங்கினாள். 
விஷ்வதீரனின் அருகில் தன்னிலை மறப்பவள் ஒன்றை உறுதியாக உணர்ந்தாள். அது அவனை விட்டு பிரிந்து வாழ்வது இந்த ஜென்மத்தில் சாத்தியமில்லை என்பதே.
ஸ்கூபியை கண்டு நடையை நிறுத்த பின்னால் வந்த விஷ்வதீரனின் மேல் மோதி நின்றவளின் தோள் தொட்டு நிறுத்தி இருந்தான் விஷ்வதீரன். ஆரோஹியின் முகத்திலும் மெல்லிய வெக்க புன்னகை. அதை தீரமுகுந்தன் புகைப்படம் எடுக்க, அவள் மெதுவாக அவன் புறம் திரும்பி ஏறிட அவனும் அவளைத்தான் பாத்திருந்தான். 
உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை
மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
“ஸ்கூப் நாம ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போலாமா?” தீரமுகுந்தன் சொல்ல 
“முதல்ல அத பண்ணுடா நடந்து வந்து கால் வேற வலிக்குது, அந்தம்மா நா ஏறினா வண்டில ஏற மாட்டாங்க போல இருக்கு” என்ற பார்வையை வீச வண்டியில் சாவியை வைத்தவன் ஸ்கூபியோடு ஆட்டோவில் ஏறலானான்.

Advertisement