Advertisement

               அத்தியாயம் 25

பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது? 

தந்தையின் தோள் சாய்ந்து அழுதது சில கணங்கள் தான். தந்தையின் அறிவுரை, ஆறுதல் வார்த்தைகள் மனதை திடப்படுத்த முதலில் அவன் செய்தது அந்த ஏரியாவின் சீசீடிவி காட்ச்சிகளை பார்வையிட்டது. தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு கண்ணப்பன் உள்ளே வருவது தெளிவாக இருக்க அவர் எந்த வழியிலும் வெளியே செல்லவில்லை. இரண்டே இரண்டு யூகங்கள். ஒன்று இவர்கள் பிங்கியை இங்கே அடைத்து வைத்திருக்கணும், இல்லாவிடில் பிங்கி கண்ணப்பனோடு எங்கயோ சென்றிருக்கணும், அதிசயத்திலும் அதிசயம் கண்ணப்பன் உள்ளே வருவதை பார்த்த சிலர் உள்ள போதும், வெளியே சென்றதை பார்த்தவர்கள் யாரும் இலர். 

அடுத்து அவன் செய்தது கண்ணப்பன் வந்ததன் பின் அந்த ஏரியாவிலிருந்து வெளியேறிய வாகனங்களை பரிசோதிப்பது. எல்லா வாகனங்களினதும் இலக்கத்தகடுளை சீசீடிவி மூலம் எடுத்து எங்கே இருக்கின்றன என்று விசாரிக்க ஒரு ஆட்டோவை மாத்திரம் எங்க உள்ளது என்று தெரியவில்லை. அவனின் மொத்த சந்தேகமும் அந்த ஆட்டோவின் மீது செல்ல, சீசீடிவி காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்க வண்டியின் உள்புறம்  சீசீடிவிக்கு சரியான முறையில் தென்படவில்லையானாலும், யாரோ ஒருவருடைய கை கம்பியை பிடித்திருப்பது வளைவில் திரும்பும் போது கொஞ்சம் தெரிய அந்த ஆட்டோவை தேடி வலை வீசினான். 

 அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி மீண்டும் அந்த ஏரியாவுக்கு சென்று விசாரிக்க, அவனை பற்றி தப்பாக யாரும் சொல்லவில்லை. என்ன செய்வது ஏது செய்வது என்று யோசனையாக நடந்து வந்து கொண்டிருந்தவனின் பார்வை வந்து கொண்டிருக்கும் ஆட்டோவின் மீது விழ, அதே ஆட்டோ அவன் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும் அதே ஆட்டோ, அந்த ஏரியாவுக்குள் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதே கணம் அவனுடைய அலைபேசியும் அடிக்க அதை இயக்கியவாறே அந்த ஆட்டோவை நோக்கி ஓடலானான். ஆட்டோவின் முன் வந்து நின்றவன் ஒரு கையால் ஆட்டோவின் கண்ணாடியின் மீது பலமாக அடித்தவாறு அதை நிறுத்த அலைபேசியிலின் வழியாக பிங்கி முனகியவாறே “ஹலோ” என்றாள்.  

அவளின் குரல் கேட்டதும் தீரனின் இதயம் நின்று துடித்தது. ஆட்டோ ஓட்டுநர் தீரனை சரமாரியாக வசை பாட ஆரம்பிக்க எங்கிருந்தோ வந்த நான்கு பேர் துப்பாக்கி  முனையில் அவனை நிறுத்தி இருந்தனர்.    

“ஹலோ எங்கடி இருக்க, சொல்லுடி சொல்லுடி. ஹலோ ஹலோ பேசுடி. எங்கடி இருக்க” அவனின் குரல் இயலாமையில் ஒலிக்க அவளது அலைபேசி கை மாற்றப்பட்டு வேறொரு குரல் ஒலித்தது.   

மிதுன் விஷ்வதீரனின் காதில் சொன்னது மாலாவின் வீடியோவை பற்றி. நெற்றி சுருக்கி யோசித்தவன் அதில் சம்பந்த பட்டிருப்பது பல்லவனின் தந்தையும், சுகாதார அமைச்சருமான பரமேஷ்வர். 

“அப்பனும் புள்ளையும் சேர்ந்துதான் எல்லாம் பண்ணி இருக்கானுங்க சார்” மிதுன் பல்லவனை முறைத்தவாறே கூற 

“மாலாவ புதைக்க வேறொரு விலாக்கு எடுத்துட்டு போனியே! இங்க நிறைய இடம் இருக்கே” விஷ்வதீரன் ரகுவை ஏறிட அவன் என்ன பதில் சொல்வதென்று முழிக்க பல்லவன் சொல்லலானான். 

“எனக்கு பொண்ணுங்க மீது ஆசை வந்ததே எங்க அப்பாவால. சின்ன வயசுல அவர் அடிக்கடி வேலைக்காரி கோகிலா அறைக்கு போறத பாத்திருக்கேன். ஒருநாள் எல்லாத்தையும் பாத்துட்டேன். அப்போ என்னனு தெரியல. வளர வளர எல்லாம் புரிஞ்சிருச்சு. நிஷா விசயத்துல அவர பிளாக்மெயில் பண்ணாத குறையாக தான் பணியவைச்சேன். பாரின்ல இருந்து வந்த பிறகு ஹோட்டல் ஆரம்பிச்சு பொண்ணுங்கள மடக்கினேன். அவருக்கு புடிச்ச பொண்ணுங்கள அவர் கிட்ட விட்டேன். அவர ப்ளாக்மெயில் பண்ண அவருக்கு தெரியாம எல்லாமே வீடியோ எடுத்தேன். அதுல மாலாவும் ஒருத்தி. ஆனா அவள இவனுங்க அனுபவிச்சு கொன்னுட்டான்னுங்க. அப்பாக்கு பேய் நா.. ரொம்ப பயம். அதான் இங்க எந்த பாடியையும் புதைக்கள. அது மட்டுமல்ல நாளைக்கு ஏதாவது பிரச்சினையானாலும் தப்பிக்கலாம்” என்றான் பல்லவன் 

“அவர எதுக்கு ப்ளாக்மெயில் பண்ணுற” 

“எல்லாம் பதவிக்காக தான். அவர் பதவி எனக்கு வேணும்”

“வெள்ள, வேட்டி சட்டையில் நெற்றியில் விபூதியோடு  இருக்கும் பரமேஸ்வரன் உடம்பு பூராவும் விஷம். சட்ட பூராவும் கரை சார்” ஸ்டீபன் குரலில் வெறுப்பும் கண்ணில் கோவமும் தெறிக்க சொல்ல  

“அவர பிடிக்க புதுசா வல விரிக்கணும்னு தேவல இந்த வீடியோ ஆதாரங்களே! போதும்” என்று மிதுன் சொல்ல 

“சார் இவனுங்கள என்ன பண்ணுறது” என்று ரித்திகா கேக்க ஒரு புன்னகையை மட்டும் சிந்தியவன் சுவிங்கத்தி மென்றவாறே மௌனமானான்.

ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தீரனை அலையவிட்டு பிங்கி ஒருவாறு தான் இருக்கும் இடத்தை அலைபேசிவழியாக சொல்லி இருக்க அவள் இருக்கும் இடத்துக்கு விரைந்தான் தீரமுகுந்தன். 

ஆட்டோவை நிறுத்தி விசாரிக்க முட்படுகையில் பிங்கி அழைத்திருக்க ஆட்டோ ஓட்டுனரை சுற்றி வளைத்தனர் தீரனின் ஆட்கள். பிங்கி பேச முடியாமல் தவிக்க கண்ணப்பன் பேசி அவள் எங்கே இருக்கிறாள் என்று சொல்லி இருந்தார். ஆட்டோ ஓட்டுனரை விட்டு விட்டு தீரமுகுந்தன் பிங்கி அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான். 

தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டிருந்த கண்ணப்பனுக்கு கழிவறைக்கு போக வேண்டும் போல் இருக்க வீடு பக்கம் தானே என்று வண்டியை பெட்டிக்கடையில் அருகில் நிறுத்தியவர் வீட்டுக்கு வந்து தனது தேவையை பூர்த்தி செய்த்தவர், ஆற அமர ஒரு டீ போட்டு குடித்து விட்டே வண்டியின் அருகில் வந்தார். மீண்டும் வண்டியை தள்ள கைவைக்கும் போது பெட்டியின் ஒரு பகுதியில் சிறிய ஓட்டை இருப்பதை கண்டவர் அது என்னவென்று யோசித்தவாறே உள்ளே விரலை நுழைக்க ஏதோ ஒரு பொருள் மீது படும் போது இருக்கும் உணர்வு தோன்றாமல் மிருதுவான ஒன்றின் மீது பட்டது போல் இருக்க சந்தேகம் கொண்டவர் இடுப்பில் இருந்த கத்தியால் அட்டைப்  பெட்டியில் கீறல் போட்டு அதை திறக்க அவருக்கு காணக் கிடைத்தது சுயநினைவில்லாத பிங்கியே! 

அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தி பிங்கியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த அம்முதியவர் மருத்துவமனையில் அவர்கள் எந்த மாதிரியான கேள்விகளை கேப்பார் என்று அறிந்து தனது மகள் என்றே மருத்துவமனையில் அனுமதித்தார். ஆட்டோ ஓட்டுனரும் என்ன விதமான அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று ஊகித்து அவருக்கு உதவியாக இருக்க, பிங்கியின் கைப்பையோ! அலைபேசியோ அவளிடத்தில் இல்லாத பட்சத்தில் அவளை பற்றி யாரிடம் தகவல் சொல்வதென்று யோசிக்க. ஆட்டோ ஓட்டுநர் போலீஸில் சொல்லலாம் என்ற போதும், பெண்பிள்ளையின் வாழ்க்கை பிரச்சினை முதலில் அவள் கண் முழிக்கட்டும் என்று காத்திருந்து அவள் கண் விழித்ததும் முதலில் செய்தது தீரனை அழைத்து பேசியதே!  

மருத்துவமனைக்கு திருமாறனோடு வந்து சேர்ந்தவன், பிங்கி இருந்த அறைக்குள் வேகமாக ஓடிவந்தான். வாடின கொடியாய் விழுந்து படுத்திருந்தகவளை காண அவன் நெஞ்சமே வெம்பியது, ஒரு நிமிடமும் ஒரு இடத்தில் இல்லாது, சதா பேசியவாறே வம்பிழுத்து திரிபவள் அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பது அவன் நெஞ்சை இறுக்க, பிங்கியை கட்டிக் கொண்டு “ஏய் கண்ண திறந்து பாருடி” அவளை அள்ளி அணைத்து உலுக்கியவாறே கதற 

“அவங்களுக்கு ஹெவி டோஸ் மயக்க மருந்து கொடுத்திருக்காங்க, டோன்ட் ஒர்ரி மருந்த்தோட வீரியத்தால் தூங்குறாங்க இப்போ எழுந்துடுவாங்க” என்று நர்ஸ் புன்னகைத்தவாறே அகல 

திருமாறன் அவனை சமாதானப் படுத்தி விட்டு கண்ணப்பனை வழியனுப்ப வெளியே சென்றார். 

பிங்கி நிர்மலமான முகத்தோடு அமைதியாக தூங்கி கொண்டிருந்தாள். அவள் கடத்தப் பட்டு கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்களுக்கு பின்பே கண்ணப்பன் மருத்துவமனையில் சேர்த்திருந்தார். கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க வாடிய மலராக கிடந்தவளை காணக்காண தீரனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அவனையும் மீறி வெளியாகியது.  

“உன்ன காணாம செத்தே போய்ட்டேண்டி, உன்ன காணோம்னு தீரா சொன்னதும் உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? நீ என் லைஃப்ல வந்த பிறகுதாண்டி வாழ்க்கையே அர்த்தம் ஆச்சு. நீ இல்லாத என் வாழ்க்கைய நினைச்சி பாக்கவும் பயமா இருக்கு. ப்ளீஸ் டி கண்ண தொரடி,  என் கூட சண்ட போடு டி. உன்ன உப்பு மூட்ட தூக்கி கிட்டு வீடு வரைக்கும் போறேன். என் கூட பேசு டி. பேச மாட்டியா?” அவள் முகமெங்கும் முத்தமிட்டவன் “எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் டி. உன்ன மட்டும் தான் புடிக்கும். எனக்கு நீ வேணும் டி. ப்ளீஸ் டி கண்ண தொறந்து பாரு. அவள் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட கையை உருவி இருந்தாள் பிங்கி. 

அவளை காணாத இந்த மணித்துளிகள் அவன் மனதை நன்கு உணர்ந்து கொண்டான். உணர்ந்து கொண்ட காதலை கண்ணீரும், கவலையாக தீரன் ஒப்பித்துக் கொண்டிருக்க அதை இடை நிறுத்தி இருந்தாள் பிங்கி.   

“அப்பா.. முடியல என்னமா ஸீன் போடுற? எவ்வளவு நேரம் தான் நானும் கண்ண மூடி தூங்குற  மாதிரி  நடிக்கிறது? இப்போ ஐ லவ் யு  சொல்வ, இதோ இப்போ சொல்லுவ…னு பாத்தா என்னென்னெல்லாமோ பேசுற ஐ லவ் யு மட்டும் சொல்ல மாட்டேங்குற. நீ சுத்த வேஸ்ட்டு டா புருஷா” பிங்கி எழுந்தமர்ந்தவாறே தீரனை குறை பட 

ஒரு நொடி திகைத்தவன் “ஏய் என்ன தூங்குற மாதிரி நடிச்சியா?” 

“அட ஆமாண்டா, இப்போவாச்சும் உனக்கு என் மேல லவ் வருமான்னு பாத்தேன் வரமாட்டேங்குதே!” என்று தலையை தட்டி யோசிக்க 

“அப்போ இவ்வளவு நேரமும் நான் புலம்பியது உன் மேல உள்ள லவ்வால இல்லையா?” அவளின் சிறுபிள்ளை தனமான செயலை நினைத்து கோபம் வந்தாலும், அவள் யோசிக்கும் விதம் கண்டு முறைக்க மட்டுமே முடிந்தது.  

“நீதான் ஐ லவ் யு னு சொல்லவே இல்லையே!” குழந்தையாக முகம் சுருங்கியவளை இறுக அணைத்துக் கொண்டவன்  

“இவள கண்டு பிடிக்க என்ன பாடு பட்டேன். இவ நர்ஸையும் கூட்டு சேர்த்து கிட்டு என்ன வேல பார்த்திருக்கா, சரியான ராட்சசி” என்று உள்ளுக்குள் திட்டினாலும், தனது வாழ்க்கையையே அவள் தான் என்று உணர்ந்து கொண்ட தருணம். அது இவ்வாறு ஆறு மணித்தியாலங்களாக, பதட்டமும், நெஞ்சை பிழியும் வலியும்,  வேதனையும், யோசிக்கவும் திறனை இழந்து, அவள் பூ முகம் கண்டால் நோய் தீரும் என்று உணர்ந்தது தான் கொடுமை. வலிக்க வலிக்க காதலை உணர செய்து விட்டாள் பிங்கி. மனத்தால் உணர்ந்தே “ஐ லவ் யு டி மை பொண்டாட்டி” என்று இறுக அணைத்துக் கொள்ள

“இன்னொரு தடவ சொல்லு” என்று அவனை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டாள் பிங்கி.  

எந்த மாதிரி ஆபத்திலிருந்து தப்பினோம் என்று அறியாதவள், தன்னை யார் கடத்தினார்கள்? எதற்க்காக கடத்தினார்கள் என்ற கவலை சிறிதும் இல்லாது அதை கூட தனக்கு சாதகமாக்கி தீரனின் காதலை சோதிக்கலானாள்.   

பௌர்ணமி  நிலவை மிக  அருகினில்  

பார்த்தேன் பரவச  கடலில் நான் படகை ஆனேன் 

தேவதை  கண்ணில்  இரு தூண்டிலை  பார்த்தேன் 

மாட்டிய  மீனை நான்  ஆனேன் ஆனேன்.

பல்லவன்  உளிகள் கூடி செதுக்கிய  சிலை தானா 

பிரம்மன்  சிலையை பார்த்து ஜீவனை  கொடுத்தானா 

தீண்டாமல்  திருட சொன்னானா  என்னை இன்று 

இதயத்தை  காணவில்லை அது  தொலைந்து நான் தேடவில்லை

“ஆமா உனக்குத்தான் கராத்தே தெரியுமே! அவனுங்க உன் கிட்ட வந்ததும் அடி பின்னி எடுக்க வேணாம்?” 

திருதிருவென முழித்தவள் இளித்தவாறே “ரெண்டு நாள் தான் கராத்தே கிளாஸுக்கே போனேன்” என்று அவன் முகம் பார்க்க 

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் “ஏன் ரெண்டு நாள்ல மேடம் எல்லாம் கத்துக்கிட்டீங்களோ!” 

“இல்ல. அந்த மாஸ்டர் கராத்தே சொல்லி கொடுக்க சொன்னா பத்து ரவுண்ட் ஓட சொல்லுறான். என்னால முடியாது” என்று முறிக்கிக் கொள்ள 

அவளின் தலையில் செல்லமாக கொட்டியவன் அவளின் நெற்றியில் முத்தமிட 

 

அவனின் கண்களில் முத்தமிட்டவள் “ஐ லவ் யு டா புருஷா, நீ சொன்ன படி என்ன உப்பு மூட்ட தூக்கிக் கிட்டே வீட்டுக்கு போகணும்” என்று கறாராக சொல்ல 

“நா எப்போ சொன்னேன்” என்று தீரன் அவளிடம் வம்பு வளர்க்க பிங்கி அவனோடு சண்டைக்கு தயாரானாள்.   

இவர்களின் காதல் சண்டையை ஸ்கூபி கதவருகே இருந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.  

திருமாறன் பிங்கி கிடைத்து விட்டதாக வீட்டுக்கு தகவல் சொல்லி இருக்க, மருத்துவமனைக்கு வருகிறோம்  என்றவர்களை வேண்டாம் என்று பிங்கியை அழைத்துக் கொண்டு திருமாறனோடு வீடுவந்தான் தீரமுகுந்தன். 

பிங்கியை கண்டு குழந்தைகள் துள்ளிக் குதிக்க அவர்களை அணைத்து முத்தமிட்டவள் “அக்கா எங்க” என்று ஆயிஷாவை ஏறிட 

“அவ ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருந்தா ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்து தூங்க வச்சிருக்கோம்” 

அவர் சொல்லி முடிக்க முன் மாடிப்படிகளை தாவி ஏறியவள் விஷ்வதீரனின் அறையில்  நுழைந்து ஆரோஹியின் அருகில் அமர்ந்துக்கொண்டு அவளின் தலையை தடவ மெதுவாக கண்விழித்தாள் ஆரோஹி.   

அவள் அழுததுக்கான அடையாளமாக  கண்ணீர் காய்ந்து கன்னம் வெளிறி, கண்கள் சிவந்து இருக்க பிங்கியை கண்டு எழுந்தமர்ந்தவள் அவளை அணைத்துக் கொண்டு  மீண்டும் கதறியழுத்தவாறே புலம்பலானாள். 

“அக்கா எனக்கு ஒண்ணுமில்லக்கா, நா நல்லாத்தான் இருக்கேன். முதல்ல அழுறத நிறுத்து” பிங்கி அக்காவாய் ஆரோஹியை சமாதானப்படுத்த  அகில் உள்ளே நுழைந்தான். 

பிங்கி மருத்துவமனையில் இருக்கிறாள் என்று திருமாறன் சொன்ன உடன்  தீரமணி தங்கதுரையை அழைத்து வீட்டுக்கு வரும் படி சொல்ல புஷ்பாவையும் அகிலையும் அழைத்துக் கொண்டு வந்தவரிடம் விஷயத்தை சொல்ல அகில் மாடியேறி இருந்தான். 

“ஆமா யார கடத்தினாங்க?”   அகில் யோசனையாக கேக்க 

“என்னதான் கடத்தினாங்க” பிங்கி முறைக்க 

“நீ நல்லா தானே இருக்க அக்கா எதுக்கு அழுறாங்க? நீ திரும்பி வந்ததா நினைச்சி பீல் பண்ணுறாங்களா” அகில் நாக்கை துருத்தி பழிப்பு காட்ட அவனை அடிக்க துரத்தினாள் பிங்கி அவர்களின் விளையாட்டால் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆரோஹி அவர்களுடன் கீழே சென்றாள்.   

“யாரு கண்ணு பட்டதோ தெரியலையே! நல்லா இருந்த குடும்பத்துல இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் வருதே!” என்று புஷ்பா நெஞ்சில் அடித்தவாறு கதற ஆரோஹி திகைத்து படிகளில் நின்று விட்டாள். 

பிங்கி புஷ்பாவை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூற தங்கதுரையும் அவளின் தலையை தடவிக் கொண்டிருக்க 

“என்னம்மா நீ உன் மருமகன் இருக்கும் போது எனக்கு என்னவாக போகுது, சும்மா சூப்பர்மேன் மாதிரி வந்து என்ன காப்பாத்த மாட்டாரா” என்று தீரமுகுந்தன் புறம் திரும்பி கண்ணடிக்க 

“ஆமாடி ரெக்க இல்லாம பரப்பேனு சொல்லு, உன்ன காணாம நான் பட்ட பாடு” என்று அவளை கண்ணால் முறைக்க சுயநினைவுக்கு வந்த ஆரோஹி சமயலறைக்குள் புகுந்தாள்.

தீரமுகுந்தன் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருக்க குழந்தைகளுடன் சேர்ந்து அகில் மற்றும் பிங்கியின் ஆட்டம் வீட்டை நிறைக்க ஸ்கூபியும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டது. புஷ்பா, ஆயிஷா ஆரோஹி இரவு சமையலுக்கான வேலைகளில் ஈடு பட ஆண்கள் அரட்டையில் இருந்தனர். 

ஆயிஷாவும், புஷ்பாவும் கதை பேசியவாறே வேலையை தொடர ஆரோஹி அசாத்திய அமைதியில் வேலையை தொடர்ந்தாள். அவளின் எண்ணமெல்லாம் தன்னால் தான் இவ்வாறெல்லாம் நடக்குதோ? “நான் ராசி இல்லாதவளா? அம்மா அப்பாவ தொடர்ந்து நிஷா, ஆகாஷ் என்று அனைவரும் என்னை விட்டு சென்று விட்டார்கள். இப்போ இந்த குடும்பம், என் ராசியால யாராவத்துக்கு ஏதாவது ஆச்சுன்னா? இல்ல இல்ல என்னால யாருக்கும் ஒன்னும் ஆகா கூடாது. என்னால விஷ்க்கு ஏதாவது ஆகிருச்சுனா?” என்று ஏதேதோ நினைத்தவள்  “இல்ல இல்ல” என்று சத்தமாக சொல்ல 

“என்ன ஆச்சு ரூஹி?” புஷ்பா பயந்தவாறே கேக்க 

“வதனி காணாம போனதுல இருந்து பதட்டமாகவே இருக்கா?” ஆயிஷா கவலையாக சொல்ல 

“அதான் வந்துட்டாலே மா, யோசிக்காத” புஷ்பா கையை தட்டிக் கொடுக்க

“நீ போய் ரெஸ்ட் எடுமா, எல்லா வேலையையும் நாங்க பாத்துகிறோம்” என்று அவளை அனுப்பி வைக்க தனியாக அறையில் புலம்பியவாறே இருந்தாள் ஆரோஹி.  

எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட விஷ்வதீரனும், தீரமுகுந்தனும் எப்போ வருவார்கள் என்று அகில் கேக்க 

“போலீஸ்காரன் பொழப்பு எப்போ வருவாங்க எப்போ போவாங்க அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்” திருமாறன் சொல்ல 

“தாத்தா வீட்ட போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஷிப்ட் பண்ணிடலாமா” பிங்கி கண்களை அகல விரித்தாள். 

“பாவம்மா நிம்மதியா வேல பாக்க விடுங்க வீட்டுக்கு வந்தா டோச்சர் பண்ணுறீங்கன்னு லேட்டாகி வரவங்க அங்கேயே தங்கிட போறாங்க” தங்கதுரை சிரிக்காம சொல்ல 

“பாத்தியாம்மா  உன் புருஷன் சொல்லுறத, உன் டோச்சர் தாங்காமாதான் வீட்டுக்கு லேட்டாகி வாறாராம். விட்டா மாப்பிளைக்கு இவரே கிளாஸ் எடுப்பார் போல” பிங்கி பழிப்பு காட்டியவாறே சிரிக்க புஷ்பா தங்கதுரையை முறைக்க, தங்கதுரை பிங்கியை முறைத்தார். 

ஆரோஹி அமைதியாக குழந்தைகளுக்கு உணவூட்ட, அகிலோடு சண்டை பிடித்தவாறே அவர்களும் சாப்பிட பேச்சும், சிரிப்பும் என்று அவ்விடமே பெரும் சத்தமாக இருந்தது.

தீரமுகுந்தனும் விஷ்வதீரனும் வீடுவந்து சேர நடு இரவை தாண்டி இருக்க, கையில் கட்டோடு வந்த விஷ்வதீரனை கண்டு பதறி துடித்த ஆரோஹி என்ன எது என்று விசாரிக்க, அவன் ஒன்றுமில்லை சாதாரண காயம் என்று சொல்ல தான் எடுத்த முடிவில் உறுதியானாள் ஆரோஹி.

நாளை விடியல் எவ்வாறு இருக்கும் என்று அறிந்திவர்களாக காலையிலையே எழுந்து கொள்ள 

எல்லா தொலைக் காட்ச்சிகளிலும் ஒளிபரப்பபட்டுக் கொண்டிருந்த பிரேக்கிங் நியூஸ் “சுகாதார அமைச்சரின் மகனும், ப்ளூமூன் ஹோட்டல் உரிமையாளருமான திரு பல்லவன் அவர்கள் நேற்று இரவு விபத்தில் காலமானார். அவரோடு அவருடைய நண்பர்களும், ஹோட்டல் ஊழியர்கள் இருவரும் இருக்க, இது விபத்தா? திட்டமிட்ட சதியா? போலீஸ் தரப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் தகவல்களை எதிர் பாருங்கள்” என்ற வண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. 

காலையிலேயே மனையாளின் முகம் காணாமல் அவள் கையால் காபியை அருந்தாமல் வெளியே செல்ல தோன்றாத விஷ்வதீரன் ஆரோஹியை வீடு முழுவதும் தேட அவள் அந்த வீட்டில் இருந்து காணாமல் போய் இருந்தாள்.

Advertisement