Advertisement

                                         அத்தியாயம் 24
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன்  உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது. 
“டேய் அவள இப்போவே தூக்கணும்” என்று தனது நண்பர்களிடம்  சொல்ல
“இங்க வச்சி எப்படி டா?” ஒருவன் கேக்க 
“குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக கேக்க
“இருக்கலாம், அத பத்தி எனக்கு கவல இல்ல”  எவ்வாறு அவளை தனிமை படுத்துத்துவது என்று யோசிக்கலானான்.  
அந்த காபி ஷாப்பை நோட்டம் விட்டவன் அங்கே கழிவறை சற்று தூரத்திலும், இருட்டாகவும் இருக்க என்ன பண்ணனும் என்று முடிவெடுத்து 
“நீ போய் அவ மேல ஏதாச்சும் கொட்டு வாஷ் ரூம் பக்கம் வந்தா நாங்க பாத்துகிறோம்” என்று நகர, அவன் சொன்னது போல் ஆரோஹியின் மேல் குளிர்பணத்தை ஊற்ற அவள் அருகில் செல்ல விஜய் அவனின் மேல் மோதியதில் குளிர்பான பாட்டில் கீழே சிந்தியது, 
ஆரோஹி மன்னிப்பு கேக்க, “இட்ஸ் ஓகே மாம்” என்றவன் என்ன செய்வதென்று அவன் முழித்தவாறே அகல ஆரோஹி வாஷ் ரூம் பக்கம் செல்வதை கண்டவன் இளித்தவாறே பல்லவனிடம் தகவல் சொல்ல ஓடினான். 
“அக்கா நீ இருக்கா, எனக்கு அர்ஜண்டா வருது” குழந்தைபோல் சிணுங்கியவாறே பிங்கி ஆரோஹியின் பதிலையும் எதிர்பார்க்காமல் ரெஸ்ட்ரூம் பக்கம் ஓடி விட்டாள். 
பிங்கி வருவதை ஆரோஹி என்று நினைத்து மயக்க மருந்தை தெளித்து கைவசம் இருந்த நீலநிற பாலிதீன் தாளால் அவளை சுற்றி வண்டியையும் அவ்விடம் கொண்டு வந்து அவளை ஏற்றி இருந்தனர். 
தன்னவளின் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவன் பல்லவன் சொன்னதில் இரத்தம் சூடாக “சொல்லு அவள எங்க வச்சிருக்க, உங்க பிளான் படி அவ இங்க இருக்கணுமே! இப்போ அவ எங்க?” தீரமுகுந்தன் சரமாரியாக அடிக்க 
உயிர் போகும் வலியில் இருந்தனர் பல்லவனும், நண்பர்களும். இவர்கள் யார் என்றும் தெரியவில்லை. பணத்துக்கும் மசியாதவர்களாக இருக்க உயிர் பயத்திலேயே உண்மைகளை ஒப்பித்துக் கொண்டிருந்தான் பல்லவன். அவனது நண்பர்களும் அவன் மறந்தவைகளை இடை புகுந்து சொல்ல அதை ரித்திகா ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தாள்.   
“பொண்ணுங்கள நான் நேரடியா கடத்த மாட்டேன், மிரட்டி தான் வர வைப்பேன், ஹோட்டலுக்கு வாரதா, வீடியோ எடுக்க முடியாத பொண்ணுங்கள எப்படி வர வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கும் போது தான், ரகுவும், பாலாவும் கடத்திட்டு வராதா சொன்னாங்க. வண்டில வச்சி கடத்தினா மாட்டிக்குவோம்னு பிரிஜ்ஜூ, வாஷிங் மெசினு இந்த மாதிரி பெரிய சாமானோட அட்டை பெட்டியில் வச்சி தூக்கிட்டு வருவானுங்க. அதயும் அவனுங்க செய்யாம தள்ளு வண்டி ஓட்டுற ஒருத்தர புடிச்சி ஏத்தி விட்டுட்டு, அட்ரஸ கொடுத்தா சரியா கொண்டு வந்துடுவானுங்க. அட்டா பெட்டியில் நுழைக்கும் போது தான் அது ஆரோஹி இல்லனு தெரிஞ்சது. கெடச்சலவல விட தோணல, பசங்க ரொம்ப ஆசப்பட்டதால இப்போ கடத்தினவளையும் அப்படித்தான் ஏத்தி விட்டேன், இன்னும்  வந்து சேரல”
“அதான் மாலவ எப்படி கடத்தினாங்கனு கண்டே புடிக்க முடியலையா” கேட்டவாறே ஆத்திரம் தீரும் வரை மூவரையும் அடித்த தீரமுகுந்தன் பிங்கியை தேடி வெளியேறினான்.
“சார் எல்லா வீடியோவுமே பொண்ணுங்கள ரேப் பண்ணத எடுத்து வச்சிருக்கானுங்க” மிதுன் சொல்ல 
அவனுக்கு எந்த பதிலையும் சொல்ல விரும்பாத விஷ்வதீரன்  ஒரு தலையசைப்பில் பதில் அளித்துவிட்டு பல்லவன் அருகில் ஒரு கதிரையை போட்டு அமர்ந்து இரண்டு சுவிங்கத்தை வாயில் திணித்தவன் அதை அரைத்தவாறே கோபத்தை கட்டுப்படுத்தலானான்.     
  
“சொல்லு ஆரோஹிய பத்தி சொல்லு” விஷ்வதீரன் பல்லவனின் கன்னத்தில் அடிக்க 
“அடிக்காதீங்க சார் சொல்லுறேன், சொல்லுறேன்” என்று கெஞ்சியவாறே சொல்லலானான். 
“ஆரோஹி என்ன அழகு தெரியுமா சார்” கண்கள் மின்ன காமம் கசிய பல்லவன் சொல்ல பல்லை கடித்தான் விஷ்வதீரன்.
“ஆரோஹியும் நானும் ஒரே காலேஜ். பைனல் இயர் படிக்கத்தான் நான் அங்க சேர்ந்தேன். எத்தனையோ பொண்ணுங்க என்ன சுத்தி வந்தாலும் ஆரோஹி தனிரகம்.  அவளை பாத்த உடனே எனக்கு அவ தான்னு முடிவு பண்ணிட்டேன். அவ கிட்ட பல தடவ ப்ரொபோஸ் பண்ணினேன் ஏத்துக்கவே இல்ல. அவ எனக்கு வேணும்னு தோணும் போதெல்லாம் ஏதாவது ஒரு பொண்ணு கூட அவள நினைச்சி கிட்டே” விஷ்வதீரனின் அடிகள் சரமாரியாக விழ 
ஸ்டீபன் அவனை இறுக்கி அணைத்து பின்னாடி இழுத்தவாறே “கண்ட்ரோல் யுவர்  ஸெல்ப் சார்” என்று ஹை பீச்சில் கத்த 
சுயநினைவுக்கு வந்தவன் ரித்திகா கொடுத்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மளமளவென அருந்தி “சொல்லு” ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ள 
எங்கே பேசினால் அடிப்பானோ என்று அவன் பயப் பார்வை பார்க்க 
“சொல்லுடா” விஷ்வதீரன் கர்ஜிக்க 
விஷ்வதீரனின் அடிகள் ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுந்திருக்க “அடிக்காதீங்க சார் செத்துடுவேன்” என்று கெஞ்சியவாறே சொல்லலானான்.  
“கலேஜூக்கு ஆகாஷோடத்தான் வருவா, போவா வெளில அவளை சந்திக்க முடியல ஆகாஷ் கூடவே இருப்பான். ஆகாஷால அவள நெருங்கவே முடியல. காலேஜில தனியா அவள மீட் பண்ணவும் முடியாது. அவ உண்டு அவ வேல உண்டுன்னு இருப்பா. அவ என்ன ஏத்துக்காத கோவம் வேற என் நெஞ்சுல எரிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. அவள அடையாம என் நாடி நரம்பு அடங்காதுனு அவளுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். சந்தர்ப்பமும் அமஞ்சது. காலேஜ் பார்ட்டி ஒரு ஹோட்டல்ல நடக்க போறத அறிவிச்சப்போ பிளான் பண்ணினேன் அன்னைக்கி அவள அடைய பிளான் பண்ணினேன்” 
விஷ்வதீரனுக்கு கொஞ்சம் புரிய அவன் சொல்வதை உன்னிப்பாக கவனிக்கலானான்.
“அங்க ஆகாஷ், நிஷா வருவாங்கனு நினைக்கல, அங்க அவளுக்கு போதை மருந்து கலந்த ட்ரின்க்ஸ்ஸ கொடுக்க சொன்னேன் அவளும் ஒரு சிப் குடிச்சா அப்போ நிஷா பறிச்சி அந்த கிளாஸ்ல உள்ள எல்லாத்தையும் குடிச்சிட்டா. மீண்டும் ஒரு கிளாஸ் அவளுக்கு அனுப்பினேன் அதுலயும்  அவ ஒரு சிப் தான் குடிச்சா ஒருத்தன் வந்து அவ கிளாச பறிச்சி அவன் குடிச்சான்”
சிறிது நேரம் விஷ்வதீரனை பார்த்திருந்தவன் “அவன் பார்க்க உங்கள மாதிரி இருப்பான் சார். ரெண்டு பேரும் சண்டை போட்டு கிட்டாங்க, அவன் ஆரோஹி கூடவே இருந்தான், அவன் எப்ப போவான் ஆரோஹிய எப்படி நெருங்குறதுனு யோசிக்கும் போது போன் வந்ததுன்னு வெளிய போய் உள்ள வர்றதுக்குள்ள ஆரோஹியையும், அவனையும் காணோம். 
ஆகாஷ் நிஷாவ கூட்டிக் கிட்டு போறத பாத்தேன், அவங்கள பாலோவ் பண்ணி போனேன். திறந்திருந்த ஒரு ரூம கண்டதும், ஆரோஹி கிடைக்காத கோபமும், ஆகாஷ பலி வாங்கவும் நல்ல சந்தர்ப்பம்னு தோணிச்சு. அங்க இருந்த தீயணைக்கும் எக்ஸ்டிங்குயிஷரால அவன் தலைலயே அடிச்சேன், அவன் மயங்கிட்டான், ரெண்டு பேரையும் இழுத்து அந்த ரூம்ல போட்டு, நிஷாவ அங்கேயே நாசம் பண்ணேன். மனசு திருப்தி அடையள என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அவள கழுத்த நெருச்சி கொல்ல கூட பாத்தேன். ஆகாஷ் ஒரேயடியா சாக கூடாது, கொஞ்சம் கொஞ்சமா சித்தரவதை பட்டு சாகனும் னு முடிவு பண்ணி நிஷாவ போட்டோ எடுத்தேன். ஆகாஷ பலி வாங்கின திருப்தி வந்திருச்சு, அதுக்கு பிறகு அப்பாவோட செல்வாக்க பயன் படுத்தி சீசீடிவி புட்டேஜ் எல்லாம் இல்லாம ஆக்கிட்டேன். அதன் பிறகு பாரின் போய்ட்டேன்” அங்க இருந்து ஒவ்வொரு மாசமா ஆகாஷ் போனுக்கு நிஷாவோட போட்டோவ அனுப்பி, அவள எப்படி நாசம் பண்ணேன்னு மெஸேஜ் அனுப்பி கிட்டே இருந்தேன். திடிரென்று அவன் போன் வேல செய்யல விசாரிச்சதுல ஆக்சிடண்ட்டுல செத்துட்டான்னு சொன்னாங்க” குரூரமாக திக்கித்திணறி இரத்தம் வழிய சொல்லி முடித்தான். 
விஷ்வதீரன் டில்லியில் என்ன நடந்தது என்று நம்பத்தகுந்த டிடெக்டிவ் ஒருவரை அனுப்பி இருக்க, அவர் சொன்னது ஆகாஷ் ஆரோஹியுடன் வேண்டாத உறவில் இருந்ததை அறிந்து நிஷா தற்கொலை பண்ணிக் கொண்டதாகவும், ஆகாஷ் எக்சிடண்டில் இறந்து விட்டதாகவும். அதை நம்ப மறுத்த விஷ்வதீரன் மேலும் தோண்டித்துருவும் படி சொல்லி இருக்க, அவர் கண்டு பிடித்த உண்மைகளில் மறைக்கப் பட்ட பகுதி இவ்வாறு வெளி வரும் என்று எதிர் பார்க்கவில்லை.  ஆரோஹிக்கும் தெரியாத உண்மை இது. ஆரோஹி இதையறிந்தால் என்ன மாதிரி உணர்வாளோ! தன்னால் தான் இப்படி நடந்தது என்று மறுக்குவாளோ! இதை ஆரோஹியிடம் எவ்வாறு சொல்வது?  இல்லை, இல்லை. ஒருகாலமும் ஆரோஹி இதை அறியக் கூடாது, மனதோடும், மூளையோடும் சண்டையிடலானான். தான் ஒரு பொறுப்புள்ள போலீஸ், டியூட்டில இருக்கும் போது குடித்ததன் காரணமாக, பெரிய அசம்பாவிதமே நடந்து விட்டதாக கலக்கத்தில் இருந்தவன், அவனை விட ஆரோஹி குறைவாக குடித்திருந்தது இந்த நொடியில் அவன் கவனத்தில் இல்லை. 
விஷ்வதீரனின் சிந்தனையோ! இவ்வாறு இருக்க நெற்றி புடை பட்டு, இரத்தம் வழிய மீண்டும் வாய் திறந்தான் பல்லவன்.  
“பாரின்ல நிறைய பொண்ணுங்க சகவாசம் கிடைச்சது, விதவிதமா அனுபவிச்சேன், எல்லாம் என் ஆரோஹிக்காக, திரும்ப இந்திய வந்த உடனே டில்லி போயிட்டு ஆரோஹிய தேடினேன். அவ அங்க இல்ல. இன்னைக்கி அவள காபி ஷாப்ல பார்த்ததும் அடங்கி இருந்த என் ஆசையெல்லாம் கிளர்ந்து மேலெந்துச்சு, அவ கழுத்துல தாலிய பார்த்ததும் ரெத்தம் கொதிச்சு போச்சு. அதான் அவள் தூக்க பிளான் பண்ணேன். ஆனா அவ மிஸ் ஆகிட்டா”  ஆரோஹி கிடைக்காத விரக்தி அவன் குரலில் வலியோடு ஒலித்தது.
ஆரோஹி மூலம் விஷயமறிந்த திருமாறனும், தீரமணியும் தங்கதுரைக்கு எவ்வாறு தகவல் சொல்வதென யோசிக்க 
“வேணா, வேணா சித்திக்கு தெரிஞ்சா உசுர விட்டுடுவா” என்று ஆரோஹி கதற ஆயிஷா அவளை ஆறுதல் படுத்த, குழந்தைகளும் அவளை அணைத்துக் கொண்டு அழுதவண்ணம் இருந்தனர். 
“அழாத ரூஹி குழந்தைகளும் பயப்படுறாங்க பார்” 
“நீ ஒரு ராசி இல்லாதவ அதான் உன் அம்மா செத்து போய்ட்டா, உன் அப்பாவும் உன்ன விட்டுட்டு போய்ட்டாரு, இப்போ எங்க வாழ்க்கையிலும் குறுக்க வரியா?” நிஷாவின் குரல் மண்டைக்குள் ஓங்கி ஒலிக்க,
“ஏன் அத்த நா ராசியில்லாதவளா?முதல்ல அம்மா அப்பொறம் அப்பா, நிஷா, ஆகாஷ் இப்படி நா பாசம் வைக்கிற எல்லாரும் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க  இப்போ பிங்கி அவளுக்கு ஏதாவது ஆகிடுமா? என்ன விட்டுட்டு போய்டுவாளா? ஆரோஹி கண்ட படி உளறிக் கொண்டிருந்தாள். 
“திரு நீ ஸ்கூபியோட போய் முகுந்த் கூட சேர்ந்து வதனிய தேடு, ஆயிஷா நீ ஆரோஹி கூடவே இரு மா. நானும் சலீமும் குழந்தைகளை பாத்துக் கொள்ளுறோம். தாத்தா தீரமணி சொல்ல திருமாறன் ஸ்கூபியோடு தீரமுகுந்தன் சொன்ன இடத்துக்கு விரைந்தார்.
பிங்கியை தேடி அந்த அட்டைப்பெட்டி, பத்திரிக்கைகளை சேமிக்கும் இடத்துக்கு வந்த தீரமுகுந்தன் அங்கே உள்ளவர்களை விசாரிக்க ஒரு வயது முதிந்தவர் ஒருவர் பிரிஜ்ஜை கொண்டு சென்றதாக கூற, பல்லவன் இருக்கும் விருந்தினர் இல்லத்துக்கு செல்லும் எல்லா வழிகளிலும் தள்ளு வண்டியை தேடலானான்.
சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது கண்
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய் என் உயிரே வாராய்
காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் வீழ்ந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
திருமாறனும் ஸ்கூபியோடு வந்து சேர, ஸ்கூபி அந்த இடத்தை மோப்பம் பிடித்து ஒரு திசையில் ஓடியது. தீரமுகுந்தன் அதன் பின்னாடி ஓட திருமாறனால் ஓட முடியவில்லை.   
“அப்பா நீங்க வண்டில பாலோவ்  பண்ணுங்க” என்றவன் ஸ்கூபிக்கு நிகராக ஓட திருமாறன் வண்டியில் அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். 
ஒரு குறுக்கு வழியில் புகுந்த ஸ்கூபி ஒரு மரத்தடியில் உள்ள பெட்டிக்கடையின் அருகே சென்று குறைக்க தீரனும் வந்து சேர்ந்தான். 
வண்டியை நிறுத்தி விட்டு திருமாறனும் வரவே அங்கே தள்ளு வண்டியும் அட்டை பெட்டியும் இருப்பதை கண்டு தீரன் அந்த கடை ஊழியரை விசாரிக்க அவனோ தனக்கு எதுவும் தெரியாதெனன்று அலட்ச்சியமாக சொல்ல அவனின் அலட்ச்சியம் தீரனின் கோப எல்லையை கடக்க வைக்க, தீரன் அவனின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்திருக்க அந்த ஏரியா மக்கள் கூட்டமாக கூடி விட்டனர்.
பிரச்சினை பெரிதாகி வாய் சண்டையில் போய் கொண்டிருக்க தீரனை அடிக்கவென சிலர் பாய அவர்களின் தாக்குதலை அவன் தடுத்த விதத்திலேயே “இவன் லேசுப்பட்டவனல்ல” என்று பேசிக்கொண்டவர்கள் “போலிஸுக்கு போலாம்” என்று சொல்ல   
“நாங்களே போலீஸ் தான் பா, விசாரிக்க வந்தா கோப்ரட் பண்ணனும் அத விட்டுட்டு கண்ட படி பேசினா அடிக்கத்தான் செய்வோம்” திருமாறன் சூழ்நிலையை சீராக்கும் விதத்தில் சொன்னவர், 
“தீரா பொறுமையா கையாளு” என்று அறிவுரை கூற சில கணங்கள் கண்களை மூடியிருந்து திறந்தவன் 
“இந்த தள்ளு வண்டி யாருக்கு சொந்தம்” 
அங்கே இருந்த ஒருவன்  முன் வந்து “கண்ணப்பனோட வண்டி சார் இது” 
“இப்போ அவர் எங்க?” 
“தெரியல சார், நான் வரும் போது இது இங்க தான் இருந்திச்சு” பெட்டிக்கு கடைக்காரன் அவன் போலீஸ் என்று அறிந்த பின் வாயை திறந்தான். 
“யாராவது அவரை பாத்தீங்களா?” தீரனின் கேள்விக்கு ஒவ்வொருவராக ஒவ்வொன்றையும் சொல்லலானார்கள். 
அவர் தனியாக இருக்கும் முதியவர் என்றும், சொந்தபந்தங்கள் யாருமில்லை என்றும், சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்பதற்காக தள்ளு வண்டியை பயன் படுத்துவதாகவும், சம்பாதிக்கும் காசில் அந்த ஏரியா மக்களுக்கு ஏதாவது உதவியும் செய்வார் என்றும், காலையில் சென்றால் மாலையில் வருவார், உடம்புக்கு முடியாமல் போனால் மாத்திரம் ஏரியாவில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் அந்த ஏரியா மக்கள் சொல்ல, தலையை பிடித்து மரத்தில் சாய்ந்து கொண்டான். 
“தீரா இப்போ என்னடா பண்ணுறது,  வதனியோட வீட்டுக்கு இன்னும் தகவல் சொல்லல?” திருமாறன் அவனின் தோளில் கைவைக்க 
“அவ என்ன செத்தா போய்ட்டா? தகவல் சொல்ல”  அவரின் கையை தட்டி விட்டவன் கோபத்தில் பொரிய
“என்னடா” அவனின் கோபம் புரியாமல் அவர் திகைக்க 
“அப்பா முடியலபா, வண்டி அவர் ஏரியாலயே! இருக்கு ஆனா அவள காணோம், என்னால தெளிவா யோசிக்க முடியல, எங்க போய்ட்டா அவ?” கண்கள் கலங்க அவர் தோளில் சாய்ந்து கொண்டவன் சிறு குழந்தையாக கண்ணீர் வடிக்க அவனின் தோளில் தட்டியவாறே அவனை தேற்றலானார் திருமாறன்.
ரகுவும், பாலாவும் காவலாளி கேட்டில் இல்லாததை குறித்து எந்த கவலையும் இல்லாது உள்ளே நுழைய ஸ்டீபன் அடி பின்னியிடுத்து கதிரையில் அமர்த்த அங்கே இருந்த பல்லவனையும் நண்பர்களையும் கண்டவர்கள் விஷயம் கை மீறி போய் விட்டதை உணர்ந்து இரத்தம் வழிந்தவாறே எல்லாவற்றையும் ஒப்பிக்கலானார்கள். 
“ப்ளூமூன் ஹோட்டல் பாரிலிருக்கும் லேண்ட் லைன் நம்பர்ல இருந்து நித்தியாக்கும், டீச்சர் ஜோதிக்கும் கால் போய் இருக்கு உங்க ரெண்டு பேர்ல யார் கால் பண்ணது” விஷ்வதீரன் அமைதியாக அமர்ந்தவாறே சுவிங்கத்தி மெல்லலானான். 
“நித்யாக்கு நான் பண்ணேன்” என்று ரகுவும் “ஜோதிக்கு நான் பண்ணேன்” என்று பாலாவும் சொல்ல  
“மேலே சொல்லு” என்று சைகை செய்தான் விஷ்வதீரன். அவன் இவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனின் மூளை ஆயிரம் விதமாக யோசித்துக் கொண்டிருந்தது. 
“பல்லவன் ஐயாவோட ஹோட்டல்ல வேல கிடச்சத்திலிருந்து அவரை பாக்குறோம்.  அவர் கூட நிறைய பொண்ணுங்க வருவாங்க, போவாங்க ஒருநாள் அவருக்கு தெரியாம அவர் ரூமுல நடக்குறது பாக்கணும்னு செல்போன மறச்சி வச்சி வீடியோ எடுத்தோம், அத நாமளும் பண்ணனும்னு ஆச வந்துருச்சு, நெட்ல நிறைய பாத்தோம், ஆனா வெளி நாட்டுல மாதிரி பொண்ணுங்க உடனே சம்மதிக்க மாட்டாங்க, என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது தான் சினிமா நடிகை செத்து போச்சு, ஐயா கூட டீல் பேச ஓகே னு சொல்லிட்டாரு” பாலா சொல்ல 
“அவ பொணத்த எப்படி எடுத்துட்டு போனீங்க” ஸ்டீபன் கேக்க 
“நாங்க க்ளீனர்ஸ் க்ளீன் பண்ண பெரிய பாக்கட் ஒன்னு இருக்கு அதுல தான், மாப்ளர், தும்புத்தடி, பாத்ரூம் க்ளீன் பண்ணுறது எல்லாம் இருக்கும் அந்த பக்கட்டுல போட்டு தள்ளி கொண்டு போய் பகட்டோடயே வண்டில ஏத்தி எடுத்துக்கொண்டு போய் பொதச்சிட்டோம்” ரகு சொல்ல 
“போதைல பொதச்சி சரியா பொதைக்கள இல்ல” விஷ்வதீரன் நக்கலடிக்க 
அதனை புரிந்து கொள்ளாதவர்கள் “எல்லாம் இவனாலதான் இன்னும் ஆழமா தோண்டலாம்னு சொன்னா கேக்கல” ரகு பாலாவை திட்ட 
“அப்பொறம் என்ன நடந்தது?” 
நித்யாவை மிரட்டினோம் அவளும் செத்துட்டா” ரகு சொல்ல 
“ஜோதி.. ஜோதிய பத்தி சொல்லு?” 
“ஐயா கூட அந்த ரெஸ்டூரண்ட்டுல ஒரு பொண்ண மிரட்ட போய் இருந்தப்ப தான் ஜோதிய பாத்தோம் ஐயாக்கு அவ வேணும்னு சொன்னாரா, அவ என்ன லவ் பண்ணுறேன்னு சொன்னா அத வச்சி அவள மடக்கி ஹோட்டலுக்கு வர வச்சி கூல் ட்ரின்க்ஸ்ல போதை மறந்த கலந்து கொடுத்துட்டேன் அப்பொறம் எல்லாரும் அவளை நல்லா..” எந்த குற்ற உணர்வுமே இல்லாம சொல்ல விஷ்வதீரன் மரத்து போன முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். 
“சார்….. எதுக்கு சார்  இவனுங்க கிட்ட இன்னும் விசாரிச்சு கிட்டு இருக்கீங்க கொல்லுங்க சார். அந்த துப்பாக்கியை என் கைல கொடுங்க சார் நான் சுட்டுத்தள்ளுறேன்” ஆவேசமாக கத்தினான் அந்த விலாவின் காவலாளி.   
“நானும் ரெண்டு பொம்பள புள்ளய பெத்து வச்சிருக்கேன் சார். எப்படி சார் அவங்கள தனியா அனுப்ப முடியும். இவனுங்க மாதிரி கேவலமா மிருகங்கள் இருக்கே சார். நான் கொல்லுறேன் சார்” ஆவேசமாக பேச 
“கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டா உன் பசங்கள யாரு பாப்பாங்க? இவனுங்க மாதிரி நிறைய பேர் இருக்காங்களே! அவனுங்கள என்ன செய்வதாம்” விஷ்வதீரன் அமைதியாக கேக்க 
“அப்போ இவனுங்கள ஒண்ணுமே பண்ண முடியாதா?” வெறுமையாக ஒலித்தது அவன் குரல்   
மிதுன் வந்து விஷ்வதீரனின் காதில் ஏதோ சொல்ல யோசனைக்குள்ளானான் விஷ்வதீரன்.
“எங்கடி இருக்க?”  தீரமுகுந்தன் பிங்கியை மனதால் அழைக்க அது அவளுக்கு கேட்டதோ மெதுவாக கண்களை திறந்தாள் பிங்கி.

Advertisement