Advertisement

                 அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது.
“விஷ், விஷ் பிங்கிய காணோம்” ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக  விஷ்வதீரனை தீண்ட 
“என்ன சொல்லுற முதல்ல டென்ஷனாகாத, நின்னு கிட்டு இருக்கியா? உக்காரு. தண்ணி குடி” என்று அவளை ஆசுவாச படுத்தலானான். 
அவன் சொன்னவைகளை மளமளவென செய்தவளின் பதட்டம் இன்னும் குறையவில்லை. 
“ஆழ்ந்து மூச்ச இழுத்து விடு” 
“விஷ் விளையாட நேரமில்லை பிங்கிய அரைமணித்தியாலமா காணோம்” 
“இப்போ நீ எங்க இருக்க” ஆரோஹி தான் இருக்கும் காபி ஷாப்பின் பெயர் சொன்னதும் வண்டியில் ஏறியவாறே
“இப்போ சொல்லு என்ன நடந்தது” 
“இன்னைக்கி சண்டேன்னு ஐஸ் கிரீம் பாலர் கூட்டிட்டு போக சொல்லி அஜய்யும், விஜய்யும் ஒரே அடம், சரினு பிங்கியும் நானும் பசங்கள கூட்டிகிட்டு வந்தோம். ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு, பார்க்கல கொஞ்ச நேரம் இருந்துட்டு, ஷாப்பிங் பண்ணோம். அப்பொறம் காபி ஷாப் வந்தோம், ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு போனவ பத்து நிமிஷமாகியும் வரல, உடம்புக்கு முடியாம ஏதாவதோன்னு போய் பாத்தேன் அவ இல்ல. காபி ஷாப் உள்ள, வெளிய எல்லா இடமும் பாத்தேன் அவ மொபைல் வேற டேபிள்ள வச்சிட்டு போய்ட்டா. அவ எங்கயும் இல்ல விஷ். எங்க போய் இருப்பா? அவளுக்கு ஏதாவது ஆபத்து….” 
ஆரோஹி விசும்புவது தெளிவாக கேக்க “ஆரா ரிலேக்ஸ். பசங்க எங்க?” 
“இங்கதான் காபி ஷாப்ல இருக்காங்க” அவளுடன் பேச்சு கொடுத்தவாறே, மற்ற அலைபேசியால் தீரமுகுந்தனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.
இங்கே தீரமுகுந்தன் ரகு, பாலாவை கைது பண்ண தாயாராகும் போது அவனின் அலைபேசி குறுந்செய்தி வந்ததாக அதிர 
“தீரா பிங்கி இஸ் மிஸ்ஸிங்” என்ற விஷ்வதீரனின் குறுந்செய்தியை கண்டு நொடியில் திகைத்தவன் அடுத்து அவனை அழைத்தான். என்ன நடந்தது என்று விலாவரியாக கேட்டுக் கொண்டவன்
“தீரா காபிஷாப் சீசீடிவி செக் பண்ணு” என்றவன் என்ன செய்வதென்று தலையை பிடித்துக் கொள்ள 
“என்ன சார் நடந்தது” என்று மிதுன் வர அவனிடம் விஷயத்தை சொன்னவன் பிங்கியை யாராவது கடத்தினார்களா? என்று யோசிக்க சற்று முன் ரகுவின் அலைபேசிக்கு வந்த அழைப்பை பதிவு செய்ததை மீண்டும் கேக்கலானான்.
“ரகு எங்க இருக்க?” 
“நம்ம ஹோட்டல்ல தான். சொல்லுங்க ஐயா”  அவனின் குரல் பவ்வியமாக ஒலிக்க
“மீன பிடிச்சாச்சு. தொட்டிக்குள்ள போடணும் உன் ஆள அனுப்புறியா?” 
“ஐயா நீங்க எதுக்கு இந்த வேலைய பாக்குறீங்க? என் கிட்ட சொன்னா, நானே செய்ஞ்சிருப்பேனே, எங்க இருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க வரேன்”  
“ஏதோ ஒரு இடத்தை சொன்ன பின்” அந்த இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இத்தனை நாட்களாக எந்த தடயமும் கிடைக்காமல் இருக்கவே அடுத்து என்ன செய்வதென்று குழம்பியவனுக்கு இந்த அலைபேசி உரையாடலில் ஏதோ விஷயமிருக்கு என்று தோன்ற இரண்டு நபரை உடனே அங்கே அனுப்பி இருக்க அங்கே ரகுவோ, பாலாவோ இருக்கவில்லை. மாறாக அந்த ஏரியா குப்பைகளை சேமிக்கும், இடம் என்று சொல்ல “அடுத்து என்ன?” மீண்டும் தொடங்கிய இடத்தில். 
ஒரு வாரமாக கண்காணித்ததில் பெரிதாக எந்த தகவலும் இல்லை. ரகுவையும், பாலாவையும் கைது பண்ணி விசாரிக்க முடிவு செய்த போது தான் பிங்கியை காணவில்லை என்றதும் அவளை இவனுங்க கடத்தி இருப்பானோ என்ற எண்ணம் தோன்ற உடனே ப்ளூமூன் ஹோட்டலுக்கு பைக்கை செலுத்தினான். 
விஷ்வதீரன் காபி ஷாப்பை அடைய ஆரோஹி அழுதவாறே அலைபேசியை காதில் வைத்துக் கொண்டிருந்தாள். விஷ்வதீரனை கண்டதும் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு கதறலானாள். அவள் அலைபேசியில் சொன்னவைகளையே மீண்டும் மீண்டும் சொல்ல, அவ்வளவு நேரம் அலட்ச்சியமாக இருந்த காபி ஷாப் உரிமையாளர், விஷ்வதீரனின் காக்கி உடையை கண்டு வெலவெலத்து போக அவன் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் பவ்வியமாக பதில் சொல்ல ஆரம்பித்தார். சீசீடிவியை செக் பண்ணியவன் பிங்கி காணாமல் போக முன்னாடி வந்த அனைத்து வண்டிகளின் எண்ணை  குறித்துக் கொண்டு அது யார் வண்டி என்று விசாரிக்க உத்தரவிட்டான். 
அழுது கொண்டிருந்த குழந்தைகளை சமாதானப் படுத்தி காபி ஷாப்பில் இருந்த குழந்தைகள் விளையாடும் இடத்துக்கு ஒரு கான்ஸ்டபுளோடு அனுப்பி வைத்தவன் ஆரோஹியை அணைத்தவாறே தான் எல்லா வேலைகளையும் பார்த்தான்.  அவள் அழுவதை நிறுத்தவுமில்லை, புலம்புவதை விடவுமில்லை. அவளை சமாதானப் படுத்தாமல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறியவன் 
“ஆரா ஒரு வேல பிங்கி என் தம்பிய பிடிக்காம அவ லவர் கூட ஓடி போய் இருப்பாளோ!” 
அவன் அணைப்பில், அவன் மார்பில் தலை வைத்து விசும்பிக் கொண்டிருந்தவள் விசுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்து 
“என்ன உளறுற? உன் போலீஸ் புத்திய இங்க காட்டாத, என் தங்கச்சி யாரையும் லவ் பண்ணமாட்டா “
அவளை அணைத்திருந்த கையை விடாமலேயே “என் தம்பி மேல அவ வீசுற லவ் லுக்க பாத்துமா இப்படி சொல்லுற?” 
சிறிது நேரம் யோசித்தவள் “ஆனாலும் உன் தம்பி அத புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல” ஆரோஹி நொடித்துக் கொள்ள 
“எப்படி நீ என் லவ் வ புரிஞ்சிக்காத மாதிரியா?” அவள் முகம் போன போக்கை பாத்து “நீ அவ கிட்ட ட்ரைனிங் போ” என்று சிரிக்க 
“நீ உன் தம்பிக்கு ட்ரைனிங் குடு” முகத்தை நொடித்தாள் ஆரோஹி.
ஹோட்டல் ப்ளூமூன் இருபது மாடிக் கட்டிடம் அதில் பிங்கியை எங்கே என்று தேடுவது? அதற்குள் அவளை அந்த காமுகர்கள் ஏதாவது செய்து விட்டால்? தீரமுகுந்தனின் மூளை மறுத்து யோசிக்கும் திறனை இழந்து வண்டியை நிறுத்தினான். 
விஷ்வதீரன் அனுப்பிய டீம் அங்கு வரவே அவர்களிடம் பேசிய தீரமுகுந்தன் ரகுவையும், பாலாவையும் கண்காணிக்கும் பொறுப்பை அவர்களிடம் விட்டு விட்டு சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு விரைந்தான்.   
அடுத்த அரைமணி நேரம் கடந்திருக்க அங்கே வந்து சென்ற வண்டிகளில் மினிஸ்டர் பரமேஸ்வரின் மகன் பல்லவனின் வண்டியும் இருக்க ரகு தொடர்ப்பு கொண்டவன் அவனே என்பதும் தெளிவாக, தீரன்ஸ் அவனை பிடிக்கும் வேட்டையில் இறங்கினர்.
பல்லவனின் போன் விருந்தினர் இல்லத்தில் இருப்பதாகவும், ரகு மற்றும் பாலாவின் போன் ப்ளூமூன் ஹோட்டலில் இருப்பதாகவும் அறிந்து கொண்டவன் தம்பியை அழைத்து “கோபத்தில் ஏதும் செய்யாதே நிதானமாக இரு” என்று எச்சரிக்க, எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு, நிதானமாக செய்யும் தீரமுந்தன் பிங்கியை ப்ளூமூன் ஹோட்டலில் போய் எப்படி தேடுவதென்று குழம்பி இருக்கும் போது தான் விஷ்வதீரன் அழைத்து பேசியது. 
அடுத்த வீட்டாரின் பிரச்சினை எனும் போது வரும் நிதானம், சொந்த வீட்டில் நடக்கும் விஷயங்களில் இல்லாமல் பதட்டம் மேலோங்குவது காதல், அன்பு, பாசம் என்ற உணர்வுகளினாலையே! அக்கணம் பிங்கி தனது வாழ்க்கையில் எந்த அளவு முக்கியமானவள் என்பதை உணர்ந்துக் கொண்டான் தீரமுகுந்தன் 
“தீரா என்ன பண்ண போற? எனக்கு அவ வேணும் டா? என் கூட சண்டை போட, என்ன வெறுப்பேத்த எனக்கு அவ வேணும்” குரல் கம்ம கெஞ்சும் தம்பியின் குரலை கேட்ட விஷ்வதீரனுக்கோ என்ன செய்வது என்று ஒரு நொடி தான் சிந்தித்தான். 
“டூ வாட் யு வாண்ட்” அது மட்டும் தான் விஷ்வதீரன் சொன்னான் தீரமுகுந்தன் என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் வழியில் விட்டு விட்டான்.  
மினிஸ்டர் பரமேஸ்வரின் விருந்தினர் இல்லம்.  
நகரத்தின் ஒதுக்கு புறத்தில் சகல வசதிகளோடு அமைந்திருக்க, பகலிலும் மாலை போல் அடர்ந்த மரங்களும் நிறைந்திருந்தன. ஒரே ஒரு காவலாளி மட்டும் இருக்க இரண்டு நாய்கள் தோட்டத்தை சுத்திக் கொண்டு இருந்தன. 
“இன்னும் தாமதிக்க முடியாது பிங்கி உள்ள இருக்கா” என்றவன் மதில் சுவரை தாவி நாய்களின் மோப்பா சக்திக்குள் சிக்காமல் அவ்வீட்டின் உள்ளே நுழைந்தான். 
“எங்கடா அவ? எவ்வளவு நேரமா காத்து கிட்டு நிக்கிறது? அடிச்ச போதை கூட இறங்க பாக்குது?” பல்லவன் அலைபேசியில் கத்திக் கொண்டு இருக்க அவனுடைய நண்பர்கள் இருவர் போதையில் புலம்பிக் கொண்டிருந்தனர். 
அந்த காலின் மூலம் பிங்கியை கடத்தினாலும் அவள் இன்னும் இவர்களின் கையில் கிடைக்க வில்லை என்று தெரிய ஆசுவாசமடைந்த தீரமுகுந்தன் அந்த இல்லத்தை அலச ஏகப்பட்ட ஆதாரங்கள். ஒரு அறையில் மெஸ்மரிஸம் ஒரு பையில் இருக்க, கண்டிப்பாக பல்லவனுக்கு இதில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்று எண்ணியவன் மேலும் தேட, இன்னொரு அறையில் பெரிய டிவி பொருத்தப்பட்டு நிறைய வீடியோக்கள் இருக்க, அவனது போலீஸ் மூளை அதை குறித்துக் கொண்டது , இன்னொரு இடத்தில் அட்டை பெட்டிகள் அடிக்கி வைக்கப்பட்டிருக்க விஷ்வதீரனை அழைத்தான். 
“ப்ரோ பிங்கி இங்க இல்ல, மெஸ்மரிஸம் இருக்கு, இவனுங்கள தரவா விசாரிக்க வேண்டி இருக்கும் நீ வா” என்றவன் மூவரையும் அடி பின்னி எடுத்து கட்டிப் போட்டான். 
பிங்கி கடத்தப் பட்டு இரண்டு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அவள் இவர்களிடமும் இல்லாத நிலையில் அவள் எங்கே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று தீரனின் மனம் ஏங்கித்தவிக்கலானது.
ஆரோஹியையும், குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தவன் ரித்திகாவையும், இன்ஸ்பெக்டர் ஸ்டீபனையும் அழைத்துக் கொண்டு மினிஸ்டரின் விருந்தினர் இல்லத்துக்கு வந்து சேர்ந்தான். காவலாளி உள்ளே விட மறுக்கவும், அவரை ஒரு அடியில் மயக்கமடைய செய்ய ஸ்டீபன் அவனையும் சுமந்து கொண்டு உள்ளே செல்ல தாவி வந்த காவல் நாய்களை மயக்கமடைய செய்து வீட்டினுள் புக அரைமயக்கத்தில் இருந்தனர் பல்லவனும், நண்பர்களும். 
அன்புச்செல்வனும், மிதுனும் வந்து சேர அன்பு அவர்களுக்கு மாற்று மருந்தை செலுத்தி “ஜஸ்ட் ஆப் அண்ட் அவர், கண்முழிப்பாங்க” என்றவர் கையுறையை அணிய
“அந்த ரகுவையும், பாலாவையும்  ஏன் இன்னமும் அரெஸ்ட் பண்ணாம இருக்க?” தீரமுகுந்தன் குரல் உயர்த்த 
“தீரா ரிலாக்ஸ்” என்று அவனின் தோளில் தட்டியவன் “அவனுங்க ஹோட்டல விட்டு நகரவே இல்ல. க்ளோசா வாட்ச் பண்ணி கிட்டு தான் இருக்கேன். வெளிய எப்போ வருவானுங்களோ தூக்கிடுவாங்க” 
அவர்கள் மூவரும் கண்விழிக்கும் வரை முழு வீட்டையும் அலசி இருந்தனர் அனைவரும்.  தடயவியல் சோதனை அனைத்தையும் முடித்துக் கொண்ட அன்புச்செல்வன் போதை மருந்தும் {மெஸ்மரிஸம்} கிடைக்க “அப்பா ஒரு மாதிரியா இந்த தலைவலி கேஸ் முடிய போகுது” என்றவர் விஷ்வதீரனை அணுகி “அவனுங்க வாய் திறக்கலனா இந்த இன்ஜெக்சனை போடுங்க தானா வாய் பூட்டு கழண்டுடும்” என்று கண்சிமிட்டி விட்டு நிம்மதியாவே கிளம்பினார் 
மிதுன் அங்கே உள்ள காமெராக்களையும், வீடியோ ஆதாரங்களையும் அங்கையே பரிசோதிக்கலானான். 
வீட்டுக்கு வெளியே பிணங்களோ, சந்தேகப்படியான எதுவும் இல்லை. காவலாளி கண்விழிக்கவே அவனை ஒரு அறை விட்ட விஷ்வதீரன் 
“சொல்லு, இங்க என்னெல்லாம் நடந்தது, ஒன்னு விடாம சொல்லு” என்று மிரட்ட 
“சார் நான் புள்ள குட்டிகாரன் சார், சின்னையா வந்து நண்பர்களோட சரக்கடிப்பாரு, போதை பொருள் எல்லாம் எடுப்பார் போல அத தவிர எனக்கு ஒன்னும் தெரியாது சார். என்ன வீட்டுக்குள்ளேயே விட மாட்டாங்க, சுத்தம் செய்ய ஹோட்டல்ல இருந்து ரெண்டு பேர் வருவானுங்க” 
“ஒரே ஆட்களா? வேறவேற ஆட்களா?” 
“ஒரே ஆட்கள் தான் சார்” 
ரகு, மற்றும் பாலாவின் புகைப்படங்களை காட்டி உறுதி செய்து கொண்டவன்.  “பொண்ணுங்க வருவாங்களா?
“வருவாங்க.  சின்னையா இங்க வரும் எல்லா  நாளும் இல்ல, சில நேரம் வருவாங்க” 
அவன் சொல்வது உண்மையென்று தோன்றவே அவனை ஒரு கதிரையில் கட்டிப் போட்டு அவனது அலைபேசியையும் பரிசோதிக்கலானான். 
இன்னும் ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் மூவரும் கண்விழித்தனர். அந்நேரத்தில் பாலாவிடமிருந்து அழைப்பு வர மிதுன் பல்லவனின் குரலில் பேசினான்
“ஐயா நாங்க அங்க வரவா?” அவன்  தலையை சொறிந்தவாறு கேப்பது அவனின் குரலிலேயே தெரிந்தது. பல்லவன் எவ்வாறு பதில் சொல்வானோ அவ்வாறே சொல்லி விட்டு மிதுன் அலைபேசியை அனைக்க
கண்விழித்த பல்லவனின் காதில் தனது குரல் ஒலிக்க ஒரு நொடி திகைத்தவன் சுற்றி முற்றி பார்க்க அவன் இருப்பது அவனது விலா என்று புரிந்தாலும் மங்கலான ஒளி விளக்குகளே எரிந்து கொண்டிருக்க அங்கே இருந்தவர்களின் முகம் சரியாக தெரியவில்லை. நிழலுருவமாய் அவர்கள் தெரிய “யார் டா  நீங்க? நான் யார் தெரியுமா? பல்லவன்டா பல்லவன்” என்று கத்த அருகில் இருந்த இரும்பு கம்பியால் அவனின் தலையில் அடித்தான் ஸ்டீபன். அங்கே இருந்த ஆதாரங்களை பார்த்து வெறியில் இருந்தவன் கம்பியை ஓங்கினாலும், வேகத்தை குறைத்து வலது பக்க நெற்றியிலே அடித்தான். இரத்தம் வழிய வழியில் துடித்தவன், உடனே இறங்கிய குரலில்
“என்ன வேணும் உங்களுக்கு? யார் சார் நீங்க? பணம் வேணுமா? எவ்வளவு வேணாலும் தரோம்” என்று கெஞ்ச அவனது நண்பர்களும் ஸ்டீபன் அடித்த அடியில் திகைத்து அவர்களின் உயிருக்காக கெஞ்சலானார்கள்.
யாருமே காக்கிக் சட்டையில் இல்லை. வண்டியை கூட தூர நிறுத்தி விட்டே வந்திருந்தனர். போதையால் விஷ்வதீரனை சரி வர அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் திணறியவன் பணம் தருவதாக ஆசை காட்ட “
“பண்ண அநியாயங்களுக்கு காசு கொடுத்தா சரியா?அவனின் கன்னத்தில் அறைந்திருந்தாள் ரித்திகா. 
நடப்பவற்றை அமைதியாக தீரமுகுந்தன் பாத்திருக்க விஷ்வதீரனோ 
” நான் கேக்குற கேள்விகளுக்கு பதில் மட்டும் சொல்லு, காபி  ஷாப்ல வச்சி ஒரு பொண்ண தூக்கினியே அவ எங்க?”
“நான் தூக்க போன பொண்ணே இல்ல அவ. ஆள் மாறி தூக்கிட்டேன், அவ எங்க இருக்கானு தெரியல” என்றவன் சொல்லலானான்.
பல்லவனும் நண்பர்கள் இருவரும் பெண் பித்து பிடித்து அலையும் மிருகங்கள். ஒரு பெண்ணை அடைய என்ன செய்ய வேண்டுமோ எல்லா வற்றையும் செய்து அடைந்தே தீருபவன். அவன் காசுக்காக சில பெண்கள், தேவைக்காக சிலர், விருப்பத்தோடு, சிலர் விருப்பமில்லாமல் சிலர் என எவ்வழியிலாவது அடைவான். 
விருப்பப் பட்டு வருபவர்களை விட அழுது, அடம் பிடிக்கும் பெண்களின் மேல் மோகம் கூட பெண்களை எவ்வாறு பலவந்த படுத்துவதென யோசிக்க அவனுடைய பெயரில் இருக்கும் ப்ளூமூன் ஹோட்டலை பயன் படித்திக் கொண்டான். காலேஜ் ப்ரொக்ராம்ஸ் நடாத்த ஐம்பது வீதம் தள்ளுபடியில் ஒரு தரை தளத்தை ஒதுக்கியவன், உடை மாற்றும் அறை, கழிவறை என எல்லா இடங்களிலும் கேமராக்களை பொருத்தி அவர்களை பார்த்து ரசித்ததுமில்லாது, அவர்களில் அவனுக்கு வேண்டிய பெண்ணிடம் நேரில் சென்று அந்த காணொளியை காட்டி மிரட்டி அவனது இச்சைக்கு பணியவைத்தான். 
அவன் மாத்திரமன்றி அவனது நண்பர்களும் அப்பெண்களை சீரழிக்க அதன் பின் ரகுவும், பாலாவும். 
“ரகுவும், பாலாவும் எப்படி உன் கூட கூட்டு சேர்ந்தாங்க” இடையில்  குறுக்கிட்டு விஷ்வதீரன் கேள்வியை தொடுக்க 
“அமுதா அவ ஒரு சினி ஆர்ட்டிஸ்ட் யாருமில்லாத போது அவ தான் கம்பனி கொடுத்துக் கொண்டு இருந்தா, ஒருநாள் வந்து கர்ப்பமா இருக்கேன் கல்யாணம் பண்ணிக்கனு நச்சரிச்சா செக்ஸ்ல உள்ள எல்லா கொடுமையையும் அவளுக்கு காண்பிச்சேன் செத்துட்டா, என்ன பண்ணனும்னு தெரியாம இருந்தப்போ தான் ரூம் க்ளீன் பண்ண வந்த பாலாவும் ரகுவும் “பொணத்த நாங்க பாத்துக்கிறோம் நீங்க தொடுற எல்லா பொண்ணுங்களையும் நாங்களும் னு” பேரம் பேசினான் நானும் ஒத்துக்க கிட்டேன். 
 நித்யானு ஒரு பொண்ணு வீடியோவ காட்டி மிரட்டினதும் அநியாயமா செத்து போய்ட்டா, அவ மட்டும் தான் மிஸ் ஆச்சு” என்ன நிலமைல இருக்கின்றோம் என்று கூட எண்ணாமல் பேசியவனை எட்டி உதைத்தான் விஷ்வதீரன்.
 அன்புச்செழியன் கொடுத்து விட்டு சென்ற மருந்தின் வீரியம் கேக்காத கேள்விகளுக்கு கூட அவனை பதில் சொல்ல வைத்துக் கொண்டிருந்தது.
“மெஸ்மரிஸம் உன் ஹோட்டல்ல மட்டும் தான் கிடைக்குது எங்க இருந்து வருது? சப்ளயர் யாரு? 
“யாருன்னு தெரியல போன் பண்ணி இடத்தை சொல்லுவான் பாலாவும், ரகுவும் போய் காச கொடுத்து எடுத்துட்டு வருவானுங்க, இடம் மாறி கிட்டே இருக்கும்.  
கயல்விழினு ஒரு பொண்ணு மெஸ்மரிஸத்தால இறந்துட்டா? அவ உடம்புல காயம் இருந்துச்சு ஆனா நீங்க ரேப் பண்ணல” விஷ்வதீரன் சொல்லி முடிக்க முன்
அவ ஏற்கனவே போதை மருந்துக்கு பழக்க பட்டவ தான், அன்னைக்கி அவள அடைய நினைக்கும் போது செத்துட்டா”  
இதுவரைக்கும் எத்துன பொண்ணுங்கள நாசம் பண்ணி இருக்கீங்க? எத்துன பொண்ணுங்க செத்து போய் இருக்காங்க? அவங்க எல்லாரையும் பொதச்சது ரகுவும், பாலாவுமா? விஷ்வதீரன் கேள்விகளை அடுக்க 
“கணக்கெல்லாம் இல்ல, புடிச்சிருந்தா எப்படியாச்சும் இங்க கொண்டு வந்துடுவோம். எத்தன பொண்ணுங்க செத்தாங்கனு நியாபகம் இல்ல. அதெல்லாம் ரகுவும் பாலாவும் பாத்துப்பானுங்க” பல்லவன் அடி பட்ட வேதனையில் வாக்குமூலம் கொடுத்தான்.  
நீ பொண்ண மாத்தி தூக்கிட்டதா சொன்னேல்ல, எந்த பொண்ண தூக்கப் பாத்த, இப்போ நீ தூக்கின பொண்ண எங்க வச்சிருக்க” தீரமுகுந்தன் அவனை உலுக்கிக் கேக்க 
ஆ..ரோஹி…. நான் தூக்க நினைச்ச பொண்ணு ஆரோஹி. என்ன அழகு தெரியுமா சார்? கொள்ளையழகு, என்ன டிரஸ் போட்டாலும் பேரழகியா இருப்பா, அப்படியே என் கண்ணுக்குள்ள.. அவள நினைச்சாவே ரெத்தம் சூடாகுது. மை டார்லிங், பிரின்சஸ், ஏஞ்சல், ஸ்வீட் ஹார்ட்” சொல்லிக் கொண்டே போக விஷ்வதீரனின் கண்கள் இரத்த சிவப்பாய் மாறியது.

Advertisement