Advertisement

       அத்தியாயம் 22
ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது. 
அங்கே விஷ்வதீரனும்,  ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள். 
ரித்திகாவுடன் ஒன்றினாலும், பிங்கியின் பேச்சினாலையே ரேகா அவர்களோடு அமர்ந்திருக்கிறாள் என்பது அங்கே உள்ள அனைவருக்கும் நன்றாகவே புரிந்தது. 
ரித்திகாவை கண்டு பிங்கியின் கண்கள் விரிந்தாலும் “வரட்டும் அவன்” என்று கருவிக்கு கொண்டவள் தீரமுகுந்தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே வருவதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.  
ரித்திகாவை விஷ்வதீரன் அறிமுகப்படுத்தும் போதே அவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள் பிங்கி. 
“போலீஸ்ல இருக்கிறதாலயே குட்டி உடம்ப சிக்குன்னு வச்சிருக்கு, பொண்ணா அடக்க ஒடுக்கமா டிரஸ்  பண்ண வேணா? என்ன இது பான்ட், சார்ட் போட்டு இருக்கா” 
“அடியே அவ போலீஸ் டி” மனசாட்ச்சி கதற
பல தடவை ஹாய் சொன்ன ரித்திகா “மேடம்” என்று அழைக்க உள்ளுக்குள் குளிர்ந்து போன பிங்கி “ஹாய்” என்றாள்.     
“விஷ்வதீரன் சார் கிட்ட ட்ரைனிங் எடுத்தேன், தீரமுகுந்தன் சார் கூட வேல பாத்திருக்கேன், எங்க சார் கல்யாணமே பண்ண மாட்டாரோனு நினச்சேன், பொண்ணுங்கனாவே ஒரு அடி பின்னாடி தான், யாராவது கொஞ்சம் சிரிச்சு பேசினா போதும், சிஸ்டர், சிஸ்டர் னு கூப்ட்டே கொன்னுடுவாரு” என்று ரித்திகா சொல்லி சிரிக்க அதன் பின் அவளுடன் சினேகமாக பழக அங்கே பிங்கியின் ஆட்டம் ஆரம்பமானது.
உள்ளே நுழைந்தவனை கண்டு “புருஷா” என்றவாறே ஓடி வந்தவள் அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட எரிச்சலடைந்தான் தீரமுகுந்தன். அவனுக்கு அச்செயல் அநாகரீகமாகவே தோன்றியது.
“இங்க என்ன பண்ணுற? முதல்ல வீட்டுக்கு போ” அவளை அதட்டியவாறே அங்கே உள்ளவர்களை நோட்டமிட 
“உங்கள நாங்க கவனிக்கல பா, நாங்க இங்க இல்ல, ஏன் இந்த உலகத்திலேயே இல்ல” என்றவாறு அவர்கள் வேலையில் மூழ்கி இருக்க அவர்களின் முதுகு குலுங்குவது தீரனுக்கு தெளிவாகவே தெரிந்தது.
“வாங்க மாமா சாப்பிடலாம்” 
“மாமாவா? என்ன புதுசா கூப்டுறா?” அவளை முறைக்க அவள் பார்வையோ விஷ்வதீரனின் மேல் இருந்தது. 
“புருஷன் நா இங்க இருக்கேன். அவன மாமான்னு கூப்ட்டு செல்லம் கொஞ்சுறா” கடுப்பாகவே முணுமுணுத்தவன் தன் மனதை அறியாமல் இருப்பது ஏனோ?    
“நீயும் வா சாப்பிட” பிங்கி தீரமுகுந்தனிடம் சொல்லியவாறே  விஷ்வதீரனின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல தீரமுகுந்தனின் கண்களில் அனல் கக்கியது. 
தீரமுகுந்தனின் அறையில் உள்ள குட்டி சாப்பாட்டு மேசையில் இருவரும் வந்து அமரவும் பிங்கி விஷ்வதீரனுக்கு பார்த்து பார்த்து பரிமாறியவள், “நீ சாப்பிடல” தீரமுகுந்தனிடம் வெகுளியாக கேக்க, இவர்களின் நாடகத்தை பார்த்த விஷ்வதீரன் அமைதியாக சாப்பிடலானான். 
“அண்ணி வரல” அண்ணனுக்கு சாப்பாடு போட அண்ணி வராம இவ எதுக்கு வந்தா? எனக்கு சாப்பாடு போடாம அவன கவனிக்க தான் இவ கழுத்துல நான் தாலி கட்டினேனா?  என்பதை ஒரே வார்த்தையில் கேக்க  
“நா எது கேட்டாலும் நீ வேறேதாவது சொல்லு” என்றவள் அவனை முறைத்தவாறே அவனுக்கு தட்டை வைக்க 
“சலீம் பாய் வரல? எதுக்கு நீ வந்த?” பார்வையை அகற்றாது “பதில் சொல்லுடி” என்றவாறே நிற்க 
“அவரு வரேன்னு தான் சொன்னாரு, நான் தான் என் ஆளுக்கு நானே சாப்பாடு கொண்டு போறேன்னு சொல்லி எடுத்துட்டு வந்தேன்” என்றவள் அவனை கண்டுக்காது விஷ்வதீரனை கவனிக்க, 
“எனக்கு யார் சாப்பாடு போடுவா?” 
“டெயிலி நானா போட்டேன் நீயே போட்டு சாப்பிடு” 
“ஆள பாக்க வந்தணு சொன்ன? அப்போ நீதான் சாப்பாடு போடணும்” என்று முறைக்க 
“என் ஆள தான் பாக்க வந்தேன், நா இல்லனு சொல்லலையே! ஆனா அது நீ இல்ல, இதோ இவரு” என்று விஷ்வதீரனை கை காட்ட விஷ்வதீரனுக்கு புரையேறியது. 
 
“பாத்து மாமா தண்ணி குடிங்க” என்றவள் தண்ணீரை புகட்டி முதுகையும் நீவிவிட தீரமுகுந்தனின் காதில் புகை புசு புசுவென வெளியேறியது. 
“அம்மா தாயே! என் பொண்டாட்டி முன்னாடி இப்படியெல்லாம் பேசி, என் குடும்பத்துல கும்மி அடிச்சிடாத” என்றவன் தம்பியை பார்க்க அவனின் முகமோ இரத்த நிறத்தில் இருக்க 
“என்னடா கோபம் வருதா? என் பொண்டாட்டி கைய புடிச்சிகிட்டு இனி பேசுவியா நீ?” 
“அவங்க எனக்கு அண்ணி. அம்மா மாதிரி” பாவமாய் முத்தை வைத்துக் கொண்டு சொல்ல 
“இது வேறயா?” இப்பொழுது பிங்கியின் காதில் புகை வெளியேறியது.    
“இருந்தாலும் எரியுதுடா” விஷ்வதீரன் கண்கள் சிவக்க சொல்ல
“அட இந்த ரெட்டைக்குள்ள பொஸசிவ்னஸ் இருக்கோ?” உதட்டை சுளித்த பிங்கி “மாமா நா உங்க பொண்ணு மாதிரினு தயவு செஞ்சி சொல்லிடாதீங்க”  இமைகளை வண்ணாத்தி போல படபடவென தட்டி காதல் பார்வை பார்த்தவாறே  கொஞ்சும் மொழியில் “நீங்க என் க்ரஷ்” என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.
“க்ரஷ்ஷா” அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக திகைக்க  
“ஆமாம் மாமா  எப்போ ஊர்ல இருக்கும் போது உங்கள மொத மொத பாத்தேனோ அப்போவே நீங்க தான் என் ஹீரோ நா அப்படியே மயங்கி தல சுத்தி.. டோடல் பிளாட்டு மாமா. இன்னைக்கும் நீங்கதான் என் க்ரஷ் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே அந்த மீசை தான் மாமா. போலீஸ்னாவே மீசை வச்சாத்தான் கெத்து இல்ல” என்றவள் பேசியவாறே தீரமுகுந்தனுக்கு பரிமாற எதுவும் சொல்லாது அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவனின் முகமும், சாப்பிடும் விதமே அவனின் கோபத்தில் அளவை காட்டியது.
அவள் சொன்ன விதத்திலேயே! அவளின் குறும்புத்தனம் தெரிய “நிஜமாவா சொல்லுற? டூ லேட் மா எனக்கு கல்யாணம் ஆச்சே! இப்போ என்ன பண்ணுறது” கண்ணடித்தவன் வெளியேற
“இன்னைக்கு உனக்கு எடுத்த லவ் பாடம் எப்படி இருந்தது?” என்று பிங்கி தீரமுகுந்தனை பார்த்தவாறே மனதுக்குள் கேட்டுக் கொண்டவள் தானும் அமர்ந்து சாப்பிடலானாள்.
பிங்கியை ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு வந்த தீரமுகுந்தன் அவன் கொண்டு வந்த ஆதாரத்தை விஷ்வதீரனின் கையில் கொடுக்க அது ஜோதியின் அலைபேசி. அதிலுள்ள மெமரி கார்டை கணணியோடு பொருத்தியவன் அதிலுள்ள  வீடியோவை இயக்க அதில் ஜோதி தெளிவாக தெரிந்தாள். 
அவள் அழுதவாறே ரகுவை பற்றியும், காணொளியை பதிவு செய்த அன்று நடந்ததையும் சொல்லியவள் கை நரம்பை அறுத்துக் கொள்வதும் தெளிவாக இருக்க,
“நா எதற்கெடுத்தாலும் பயப்படுறவ தான், எனக்கு நடந்த மாதிரி இன்னும் நிறைய பொண்ணுகளுக்கு நடக்க கூடும் அவங்கள காப்பாத்துங்க, இந்த விஷயம் என் வீட்டுக்கு தெரிய வேணாம்” அத்தோடு அந்த காணொளி முடிவடைந்திருந்தது. அதை அனைவருமே பார்த்தனர். 
“ஏன் சார் இத வச்சி அவனுங்கள அரெஸ்ட் பண்ண முடியுமா?” அழுதவாறே ரேகா
விஷ்வதீரனின் தலை முடியும் னு சொன்னாலும் மற்றவர்களுக்கு அதில் உள்ள குறைகளே கண்ணில் தெரிந்தது. 
“ரேகா நீ தலைமறைவானது போலயே இரு திடீரென நீ வந்தா அவனுங்க உன்ன ஏதாவது பண்ண பாப்பானுங்க, உனக்கு பாதுகாப்பான இடம் ஏதாவது இருக்கா?” 
“ஊருக்கு போகவா சார்?” 
சிறிது நேரம் யோசித்த விஷ்வதீரன் “ரித்திகா இவங்கள நா சொல்லுற இடத்துல விட்டுடுங்க, அங்க பாதுகாப்பா இருப்பாங்க” என்றவன் ஒரு விலாசத்தை எழுதிக் கொடுக்க ரித்திகா ரேகாவை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.  
தீரன்ஸ்ஸோடு மிதுன் மற்றும் அன்புச்செல்வன் இருக்க, வெண்பலகையை இழுத்து போட்ட விஷ்வதீரன் அதில் மிதுன் கொடுத்த ரகு மற்றும் அவனின் நண்பன் பாலாவின் புகைப்படங்களை நடுவில் ஒட்ட சுற்றியும் இறந்து போன பெண்களின் புகைப்படங்கள்.
“ஓகே கைஸ், இப்போ நமக்கு கிடைச்சிருக்கிற குற்றவாளிகளோட ப்ளஸ் அண்ட் மைனஸ் பாத்துடலாமா? 
“எதுக்கு சார் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு கொன்னுடுங்க” மிதுன் காட்டமாக சொல்ல 
“அவனுங்கள கொன்னுட்டா? பிரச்சினை முடியுமா? இதுல இன்னும் எத்தன பேர் இன்வோலாகி இருக்காங்க? பெரிய தலைகள் இருக்கா? மத்தவனுங்க தப்பிச்சசிட்டா?” 
விஷ்வதீரனின் கேள்வி நியாயமாக படவே மிதுன் அமைதியாக  விஷ்வதீரனின் கேள்விகளை செவிசாய்த்தான். 
இவனுங்க ரெண்டு பேருமே அந்த ஹோட்டல் கிளீனிங் பாய்ஸ். மேனேஜர்ன்னு பொய் சொல்லி இருக்கானுங்க.
“குவெஸ்ஸன் நம்பர் ஒன் இவனுங்க ரெண்டு பேரும் மட்டுமா? இன்னும் எத்தன பேர் கூட்டு? மெஸ்மரிசம் இவனுங்க யூஸ் பண்ணுற அளவுக்கு காசு? ப்ரீயா கிடைக்குதுனா? யார் கொடுக்குறா? பொண்ணுங்கள எப்படி செலக்ட் பண்ணுறானுங்க?  எப்படி தூக்குறானுங்க? முக்கியமா யாராவது பெரிய தலைக்காக வேல பாக்குறானுங்களா? பெரிய கேள்வியே  யார் இவனுங்களுக்கு மெஸ்மரிசம் சப்லை பண்ணுறது என்பதே!
இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கணும்னா அவனுங்கள க்ளோசா வாட்ச் பண்ணனும், நம்ம சந்தேக லிஸ்ட்ல ரெண்டு பெரிய தலைங்க இருக்கு, அவங்களையும் வாட்ச் பண்ணணும். அவனுங்க எல்லாரோட செல்போன் கால்ச ரெகார்ட் ஆகணும். ஒன் வீக் போதுமா நமக்கு? 
“சார் இதுக்கு அவனுங்கள தூக்கிட்டு வந்தே விசாரிக்கலாமே?” மீண்டும் மிதுன் தான் கேட்டான்.   
“அவனுங்கள அரெஸ்ட் பண்ணாலும், அவனுங்க திடீரென காணாமல் போனாலும் மத்தவங்க உஷாராவாங்க, அது மட்டுமல்ல பெரிய தல சுகாதார அமைச்சர். அவருக்கு மக்கள் கூட்டம் அதிகம். நாம கை வைக்க முன் பக்காவா தயார் ஆகணும். இல்லனா மக்களே கோசம் போட்டு அவனுங்கள வெளிய விட்டுடுவாங்க, வீண் பிரச்சினைகள் கிளம்பும்” தீரமுகுந்தன் சொல்லி விட்டு வெளியேற அவனது அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்ததாக சொல்ல அதை திறந்து பார்த்தவன் அண்ணனை திரும்பிப் பார்த்தான்.
அது அன்று காலை அவன் பிங்கியின் கன்னத்தில் முத்தமிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம், மின்னல் வெட்டியது கேமரா பிளாஷ். கொஞ்சம் தூரத்திலிருந்து எடுத்திருந்தாலும் தீரமுகுந்தன் பைக்கில் இருந்தவாறே பிங்கியை இழுத்து அணைத்திருந்தும், அவளின் வலது பக்கம் முற்றாக அவன் மேல் சாய்ந்தும், அவனின் வலது கை அவளின் முகத்தை பிடித்து உதடுகள் அவளின் கன்னத்தில் கவி பாடி கொண்டிருக்க அவனின் இடது கையோ அவளின் இடையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. காலை நேர சூரியனோடு அவள் அணிந்திருந்த சேலையும் போட்டிப் போட ரோஜா மலர் போல் சிவந்திருந்தவளை காணக் காண மீண்டும் அவளை முத்தமிடும் ஆவல் தோன்ற உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் தீரமுகுந்தன். பிங்கியை காதலிக்கிறாயா? என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை, ஆனால் அவளை பிடிச்சிருக்கு, அவளை மட்டும் தான் பிடிச்சிருக்கு. அந்த புகைப்படத்தை அலைபேசியின் ஸ்கிரீன்சேவராக வைத்தவன்
“என்னமா இம்ச பண்ணுற? டேலி முத்தமா டி கேக்குற இரு டி உன்ன வச்சிக்கிறேன்” என்று முணுமுணுத்தவன் “தாங்க்ஸ் ப்ரோ” என்று விஷ்வதீரனுக்கு ஒரு குறுந்தகவலை தட்டி விட்டே அகன்றான்.      
இன்றோடு கல்யாணம் நடந்து ஐந்து நாட்களாகி இருக்க, ஆரோஹி சந்தோஷமான மனநிலையில் இருந்தாள். அது அஜய் விஜய், குடும்ப உறவுகளோடு ஒன்றியிருந்ததே, தாத்தா தீரமணியும், திருமாறனும் இருவரையும் சுமந்துக் கொண்டு யானை சவாரி செல்ல அவர்களின் முகத்தில் இருந்த சந்தோசம் அவளையும் தொற்றிக் கொண்டது. உறவுகள் இருந்தும் தான் தனியாக வளர்ந்தது எண்ணி அவள் ஒரு நாளும் வருந்தியதில்லை. அதற்க்கு காரணம் ஆகாஷ். ஆகாஷின் நியாபகம் வரவே, அனைத்தும் மளமளவென நியாபகத்தில் வந்து ஆரோஹியின் முகம் சுருங்கியது. 
“என்ன ஆரா தலை வலிக்குதா?” உள்ளே நுழையும் போதே அவளின் முகமாற்றங்களை கவனித்தவாறே வந்த விஷ்வதீரன் கேக்க, 
இந்த நேரத்தில் அவனை எதிர் பார்க்காதவள், முகத்தை மாற்றிக் கொண்டு “காபி யா டீயா?” ஒரு மனைவியா அவள் தன கடமையை செய்ய விஷ்வதீரனை கண்டு குழந்தைகள் ஆர்ப்பரிக்க ஆரோஹி சமையல் அறைக்குள் நுழைந்தாள். 
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கடமையை செய்யும் மனைவியை கண்டு ஒரு பெருமூச்சு விட்டவன்  குழந்தைகளை கொஞ்சி “குளிச்சிட்டு வரேன்” என்று விட்டு மாடியேறி சென்றிருக்க, இந்த நேரத்தில் அவன் என்ன பருகுவான் என்று சலீம்பாயிடம் கேட்டுக்கொண்டு காபியை கையில் ஏந்தி வர அவன் அங்கே இல்லை. 
மாடியேறியவள் அவன் குளியல் அறையில் இருக்க, காபி கப்பை மூடி வைத்துவிட்டு அலுமாரியை திறந்து அவன் அணிவதற்கு ஆடைகளை எடுத்து வைத்தவள், அவன் கழற்றி போட்ட துணிகளையும் அள்ளிக் கொண்டு கீழே இறங்கினாள். 
குளித்து விட்டு வந்த விஷ்வதீரன் ஆரோஹி செய்தவற்றை கண்டு புன்னகைத்துக் அவள் வைத்து விட்டு சென்ற ஆடையை அணிந்தான். இந்த ஐந்து நாட்களாக அவன் ஆரோஹியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு மனைவியாய் தனது கடமைகளை செய்து கொண்டு அவனுடன் சகஜமாக பேசினாலும் ஒரு ஒதுக்கம் இருந்தது.
 கீழே சமையல் அறைக்குள் நுழைந்தவன் ஆரோஹியை கண்டு வேண்டுமென்றே 
“சலீம் பாய் யார் காபி போட்டது?” என்று அதட்டலாக கேக்க 
அவரும் சிரித்துக் கொண்டு “ஆரோஹி தான் தம்பி” என்றவர் பின் வாசல் வழியாக வெளியேறினார்.
அவளை முறைத்து பார்த்தவன் “உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிக் கிட்டு வந்தது எனக்கு சேவகம் செய்ய இல்ல, என் வேலைய நான் பாத்துக்கிறேன், அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பார்த்தா போதும்” கடுமையான குரலில் சொல்லியவன் திரும்பி நடக்க 
அவனின் கையை பிடித்து நிறுத்தியவள் “ஏன் விஷ் நா உனக்கு ஒண்ணுமே பண்ண கூடாதா?” ஏக்கமாக ஒலித்தது ஆரோஹியின் குரல். 
ஆரோஹியின் மனதோ விஷ்வதீரனின் விஷயத்தில் மதில் மேல் இருந்தது. எவ்வளவு தூரம் அவனை விட்டு ஒதுங்கி இருக்கணும் என்று நினைக்கிறாளோ! அதை விட வேகமாக அவன் புறம் அவள் மனம் சாய்ந்து கொண்டிருக்கிறது. அவளையறியாமலே அவள் ஒரு மனைவியாய் அவளது கடமைகளை செய்ய துவங்கி இருந்தாள்.  
“எதுக்கு? உதவியும் பண்ணிட்டு சொல்லி காட்டவா? இல்ல இல்ல குத்திக் காட்டவா?” அவள் பிடித்துக் கொண்டிருந்த கையை எடுத்து விட 
“விஷ்” தொண்டை குழி இறுக அவன் பெயரை முனகியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவனை ஏறிட விஷ்வதீரனின் இதயத்திலிருந்து இரத்தம் கசிந்தது. அவளின் கண்ணீரை துடைக்க கை மேலே எழும் போது கண்களை துடைத்துக் கொண்டவள் “சாரி” என்று நகர போக, அவள் வெளியேறாதவாறு கதவை அடைத்துக் கொண்டு நிற்க ஆரோஹி அவனை கேள்வியாக ஏறிட்டாள். 
அவளின் கண்களை துடைத்து விட்டவன் “காபி நல்ல இருக்கு இன்னொரு கப் கிடைக்குமா?” என்று புன்னகைக்க அவனை அணைத்துக் கொண்டாள் ஆரோஹி. 
அவள் அறிந்த விஷ்வதீரன் கடுமையாக பேச தெரியாதவன். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமோ! அதுவே நமக்கும் திருப்பி கிடைக்கிறது. அவன் மனது எவ்வளவு காய பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டவள், அவன் காபி கேட்டதிலேயே அவனின் உண்மையான குணத்தை கண்டு விட்டாள். 
அவளுக்கு புரிய வைக்கவென விஷ்வதீரன் பேசினாலும் அவளை அழ வைக்க அவனால் முடியவில்லை. அவள் அவனை அணைத்துக் கொள்வாள் என்று எதிர் பார்க்காதவன் 
“ஏய் இப்போ நீ என்ன பிரிண்ட் ஆராவா கட்டி புடிச்சியா? வைப் ஆராவா கட்டி புடிச்சியா?” 
“ரொம்ப முக்கியம்” என்றவள் அவனை தள்ளி விட்டு ஓடிவிட சமையலறையை விட்டு புன்னகை முகமாகவே வெளியேறினான்.
அன்றும் இன்றும் விஷ்வதீரனின் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஒரு நல்ல நண்பன். ஒரு நாளும் மாற மாட்டான் என்று ஆரோஹியின்  மனது உறுதியாக ஏற்றுக் கொண்டது. 
காதலன் கணவனாவதும், கணவன் நல்ல நண்பனாவதும் படி முறையா? நண்பன் காதலனாக, கணவனாக, மாறினால்? அல்லது நண்பன் கணவனாக, காதலனாக மாறினால்? தவறா? அன்றே நண்பனாக ஏற்றுக்கொண்டாலும் சூழ்நிலையால் ஒதுக்கினாலும், இன்று மனதில் உளியால் செதுக்கி விட்டாள். அவளின் மனம் எந்த சூழ்நிலையிலும் அவன் பால் தடம் புரளலாம்.  
தீரமுகுந்தன் வீட்டுக்குள் வர ஓடி வந்து பிங்கி அவன் முதுகில் ஏறி “உப்பு மூட்ட தூக்கிக் கிட்டே மாடியேறு” என்று மிரட்ட 
“புளி மூட்ட” இறங்குடி என்று அவளை இறக்கி விட அஜய்யும், விஜய்யும் வந்து அவன் மேல் தொங்கியிருந்தனர். 
தீரமுகுந்தன் தன்னை காதலிக்கவில்லை என்ற கடுப்பில் இருந்த பிங்கி, “நீயே வந்து ஐ லவ் யு சொல்லுறவரைக்கும் உன்ன விடமாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டவள், முயற்சி செய்கிறேன் என்று அவனை சீண்டிக்கொண்டு இருந்தாள். இன்றுவரை அவளுடைய கரடி பொம்மையும் வந்து சேரவில்லை. அவனை கட்டிக்கொண்டு தூங்கவும் மறக்கவில்லை.
“டேய் என் புருஷன்டா” பிங்கி அவர்களோடு சண்டைக்கு நிற்க 
“எங்களுக்கு சித்தப்பாவா ஆனா பிறகுதான் உனக்கு புருஷன்” அஜய் சொல்ல 
“எங்க ரெண்டு பேத்துக்குமே சித்தப்பா, உனக்கு மட்டும் தான் புருஷன். யார் ஓட்டு அதிகம்” 
“டேய் யாருடா உங்களுக்கு இப்படியெல்லாம் பேச கத்து கொடுத்தா?” பிங்கி வாயை பிளக்க 
“உனக்கு நிகரா சண்டை பிடிக்க இவனுங்க இருக்காங்க, ஆள விடு” என்றவன் படிகளில் ஏற அவன் பின்னாடியே சண்டையிட்டுக் கொண்டு இவர்களும் வர 
“கீழ போய் சண்டை போடுங்கடா எனக்கு வேல இருக்கு” தீரமுகுந்தன் தலையில் அடித்துக் கொள்ள 
“இங்க பாரு ரெட்டை வாளுங்களா, உங்கள மாதிரியே ரெட்டை புள்ளய பெத்து உங்க கூட சண்டை போட விடல என் பேரு பிங்கி இல்ல” 
“சபதம் போடுறத பாரு” அவளின் மூக்கை சுண்டி விட்டவன் “முதல்ல போய் புருஷனுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா”
“நீ என்ன என் கிட்ட வேல வாங்குற? நீயே போய் போட்டு குடி, சொல்லு எப்ப ரெட்டை குழந்தை பெத்துக்கலாம், இவனுங்கள ஒரு வழி பண்ணனும்” 
குழந்தைகளோடு சண்டையிடும் குழந்தை குமரியை பார்த்தவன் அவளின் தலையில் கொட்டி விட்டு ” யார் கூட சண்டை போடுறதுனு ஒரு விவஸ்த வேணா? அவனுங்கள பாரு முழிக்கிறத? அண்ணி கிட்ட விளக்கம் கேட்டா உன்ன விளக்கு மாத்தாலேயே சாத்துவாங்க” என்று குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள 
“ஓவரா பேசிட்டோமோ” என்று நெற்றியை தட்டிக் கொள்ள அஜய்யும், விஜய்யும் யோசனையில் ஆழ்ந்திருக்க
“என்னடா யோசிக்கிறீங்க?” பிங்கி இளித்தவாறே கேக்க 
 
“மம்மியோட வயிறு பிளாட்டா இருக்கு” அஜய்   
“எப்போ பலூன் மாதிரி பிக் ஆகும். எப்போ பாப்பா வரும்னு கேட்டுட்டு வரேன்” விஜய் 
“இல்ல மம்மி கிட்ட சொல்லி இன்னும் ரெண்டு பாபா கொண்டு வர சொல்லணும்” என்றவர்கள் கீழே ஓட
“பிங்கி உனக்கு இன்னைக்கி அடி கன்போர்ம். டேய் நில்லுங்கடா…” பிங்கியின் குரல் வீடு முழுக்க எதிரொலித்தது.

Advertisement