Advertisement

                                                   அத்தியாயம் 20
மெதுவாக கண்விழித்த தீரமுகுந்தனுக்கு காண கிடைத்தது  தன்மேல் காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கும் பிங்கியின் முகமே. குழந்தை முகத்தோடு சிரித்தவாறே தூங்கும் அவளை பார்த்திருந்தவன் மெதுவாக அவன் புறம் திரும்ப பிங்கி சிணுங்கியவாறே அவனுள் ஒட்டிக் கொண்டாள். 
“பாக்கத்தான் பேபி பேஸ் பியூட்டி மாதிரி இருக்கா பண்ணுறதெல்லாம் டிடெக்டிவ் வேல”
பிங்கி அறியாதது கல்யாணமன்று முதல் நாள் வீட்டுக்கு வராதவன் ஒட்டுக்கேட்கலாம் ஓட்டுப்போடலாம் ரேடியோ சிக்னலை கண்டு பிடிக்க சீக்கிரட் மிஷன் கட்டிடத்தில் இருந்து வேலை பார்க்க அவனுக்கு கிடைத்த ஒரே விஷயம் அது திருச்சியில் இயங்குகிறது என்பதே. ஒலிபரப்பும் நேரத்தில் மாத்திரம் தான் கண்டு பிடிக்கவும் முடியும். ஒலிபரப்பும் நேரம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்க, எவ்வாறு கண்டு பிடிப்பது என்று யோசனையிலேயே வேலையில் ஆழ்ந்திருந்தான்.
கல்யாணமானதால் அந்த வேலையை முடிக்க முடியாமல் திணறியவன் அதை கண்டு பிடிக்காமல் தூக்கம் வராது என்பதால் உள்ளறையில் சமிஞ்சை டிடெக்டரை வைத்து நோண்டிக்கொண்டிருந்தான். பிங்கி வந்து தொந்தரவு செய்ய அவளுக்கு புரிய வைத்ததாக நினைத்து தனக்கு செல்ப் ஆப்பு வைத்துக் கொண்டு வேலையை தொடர சமிஞ்சை மிக சமீபத்தில் வலிமையாக காட்ட அவனுடைய போலீஸ் மூளையில் மின்னல் வெட்டியது.
“கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் பழைய டிரான்ஸ்மிட்டர், வயசானவர். ஒரு வேல தாத்தாவா இருக்கோமோ?” என்று எண்ணம் தோன்றினாலும் “சே, சே அவர் கண்டிப்பா இந்த மாத்தி காரியம் பண்ண மாட்டார்” என்று சொல்லிக் கொண்டவன் டிடெக்டரோடு கீழே செல்ல பிங்கி அவனை பின் தொடர்ந்தாள்.
அந்த பெரிய வீட்டின் அமைப்பு பெரிய வாசலோடு நடுவில் மாடிப்படிகள். வலது புறத்தில் வரவேற்பரையும் திருமாறன் மற்றும், தீரமணியின் அறைகள் இருந்தன. இடது புறத்தில் சமையலறை, சாப்பாட்டறை உட்பட சலீம்பாயின் அறையும் இருக்க ஆயிஷாவுக்கும் அந்த பக்கமே அறை ஒதுக்கப் பட்டிருந்தது. மாடிப்படியும் வலது இடது என திரும்பி வலது புறத்தில் விஷ்வதீரனின் அறையும், இடது புறத்தில் தீரமுகுந்தனின் அறையும் இருந்தன.
சமிக்ஞை சலீம்பாயின் அறையிலிருந்து வருவதாக தோன்ற கதவை திறக்க அங்கே அவர் இல்லை. “எங்க போனாரு ஒரு வேலை குளியலறையில் இருப்பாரோ” என்று யோசிக்க யாரோ பேசும் சத்தம் கேட்டு சலீம்பாயின் அறைக்கதவை பூட்டியவன் வீட்டின் பின் பக்கம் சென்றான்.
ஒருவேளை சலீம் பாய்  உள்ளே இருந்தால் வெளியே யார் என்று பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற கதவை வெளியால் பூட்டியது சலீம்பாயின் மேல் சந்தேகம் வந்துதான். படிகளின் வளைவால் பிங்கி தீரன் வெளியே செல்வதை காணவில்லை. அவள் வந்து பார்க்கவும் கதவு வெளியே பூட்டி இருக்க யாரோ வரும் அரவம் கேட்டு பதுங்கினாள்.  
 
பின்கட்டுக் கதவும் பூட்டி இருக்க யார் பேசி  இருப்பார்கள் என்ற யோசனையிலேயே பின்பக்கம் சென்று பார்த்தவன் யாருமில்லாமல் உள்ளே வர யாரோ பதுங்குவதை கண்டு உசாரானவன் கையிலிருந்த சமிஞ்சை டிடெக்டரை இடுப்பில் சொருகியவன் மெதுவாக அடியெடுத்து வர மல்லிகை பூவின் வாசத்தோடு தன்னவளின் சுகந்தமும் நாசியை துளைத்தது.
அவ்வளவு நேரமும் போலீஸாக நின்றவன் அவளருகில் தன்னிலை மறந்து குறும்பு தலைத் தூக்க அவளின் கையை பிடித்து இழுத்திருந்தான். அவன் அவளை கேள்வி கேக்க, அவள் இவனை திருப்பிக் கேக்க அவனின் போலீஸ் மூளையில் அலாரம் அடித்தது. 
“ஓஹ் குட்டச்சி நம்மள பாலோவ் பண்ணி வந்திருக்கா” சலீம்பாய் பொய் சொன்னதாக பிங்கி சொல்லவும் அவளிடம் ஒருவாறு பேசி திசை திருப்பி அழைத்து வந்தான். அதன் பிறகு சண்டையினூடாகவே அவளிடமிருந்து விஷயத்தை கறந்தவன் தூங்கலானான்.
“கட்டில்ல எவ்வளவோ இடமிருக்கு குட்டச்சி படுக்குறத பாரு” என்றவன் அவள் கையை மெதுவாக தள்ளி விட்டு காலை தள்ள, அவள் கையை போட, தள்ள, காலை போட்டாள். மீண்டும் தள்ள மீண்டும் போட மாறி மாறி இதே நடக்க கடுப்பானவன் ஆள் காட்டி விரலை அவள் நெற்றியில் வைத்து தள்ள தலையணையிலிருந்து தலை கட்டிலில் விழு கண்ணை திறந்து அவனை பார்த்தவள்  
“எதுக்கு இப்போ தள்ளி விட்ட” என்று அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்துக்க கொண்டாள். 
“என்னடி பண்ணுற? எந்திரிடி குட்டச்சி, நான் ஜோக்கிங் போகணும்” என்று அவளை தள்ளி விட 
அவனை நகரவிடாது “கனவிலே போலாம் டா இப்போ தூங்கு” என்றவள் தூக்கத்தை தொடர 
“இதுக்குதான் நான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன். கேக்கலையே! ஐயோ….. என் சுதந்திரம் பறிபோச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டான் 
“என்னமோ உன்ன நான் ரேப் பண்ண மாதிரி பொலம்புர. நைட் உன்னால சரியா தூங்க கூட முடியல, தூங்க விட்டியா?  கீங் கிங்கு சத்தம் வேற, போதாததுக்கு நடு ஜாமத்துல்ல வேவு பாக்க  போற” என்று அவனை இன்னும் இறுக கட்டிக்க கொண்டவள் “உன்னால தான் நா தூங்கல, நீ இப்போ என்ன தூங்க வை {வீட்டுல சூரியன் உச்சத்துக்கு வரும் வர தூங்கின பழக்கம் ஒரே நாள்ல போகுமா? இது தெரியாம அவனை குத்தம் சொல்லுதுனு இவனும் கேட்டு கிட்டு நிக்குறான் பாரு}  என் கரடி பொம்ம இல்லாம என்னால தூங்க முடியாது. உன்ன பொம்மையா நினைச்சிதான் கட்டி புடிச்சி தூங்கினேன். நீ தான் புருஷனா பதவி ஏற்க முடியாதுனு சொல்லிட்டியே. அகில் கிட்ட சொல்லி என் கரடி பொம்மையை இன்னைக்கு கொண்டு வர சொல்லுறேன். அதற்கு பிறகு உன்ன எதுக்கு நான் கட்டி பிடிக்க போறேன். இப்போ பேசாம தூங்கு” என்றவள் மேலும் அவனை தன்னுள் இறுக்கிக் கொள்ள 
“தள்ளி படு டி இவ்வளவு இடமிருக்கே! அந்த தலகனைய கட்டி பிடிச்சிக்க” 
“நீ தான் என் கரடி பொம்ம மாதிரியே இருக்க, பேசாம படு”  அவன் கையை எடுத்து தனது இடுப்பை சுற்றி போட்டவள் அவன் நெஞ்சில் இன்னும் புதைந்து கொண்டாள். 
“ஐயோ படுத்துறாளே!” தீரனால் புலம்ப மட்டுமே முடிந்தது.
“என்ன விட்டு போக விட்டுடுவேனா?” கருவிக்கு கொண்டாள் பிங்கி.
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று க்யூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வானம் அவள் கண்களில்
ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ… ம்…
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றாளே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ… ம்…
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வாங்கும் சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ?
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் பாடல் அவள் ராகத்தில்
இங்கே விஷ்வதீரன் ஆரோஹியை அணைத்துக் கொண்டு தூங்க குழந்தைகள் இருவரும் அவர்களை அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க மெதுவாக கண்ணை திறந்தாள் ஆரோஹி. 
அவன் நெஞ்சில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்தவள் அவன் முகத்தை பார்க்க பிடிவாதமான குழந்தை போல் மெல்லிய புன்னகை முகத்தில் தவழ கண்மூடி இருந்தான். விஷ்வதீரனின் சீரான மூச்சுக்கு காற்றே சொன்னது அவன் இன்னும் தூங்குகிறான் என்று.  
மனஉளைச்சலால் இரவில் சரியான தூக்கத்தை ஆரோஹி தொலைத்திருக்க, போலீஸ் வேலையால் விஷ்வதீரனின் தூக்கம் விழிப்பான தூக்கமாக இருக்க, இன்று இருவருமே நன்றாக உறங்கி இருந்தனர்.
அவனை விட்டு மெதுவாக எழுந்தமர்ந்தவள் “நான் அந்த பக்கம் தானே படுத்தேன். இந்த பக்கம் எப்படி வந்தேன். ஐயோ இவன் வேற கண்ணு முழிச்சு பாத்தா கேவலமா நினைக்க போறான்” என்றவள் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். 
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரகமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே
பத்து வருடகாலங்களாக மனதில் இருந்த ரணம் துணி கொண்டு துடித்தது போல் தீரனின் மனதை விட்டு அகன்றிருக்க, ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தவன் ஆரோஹியின் அருகாமை இல்லாமல் போக கையால் கட்டிலை தடவியவாறே அவளை தேட அவள் அங்கு இல்லை. அவளின் இதம் வேண்டி முகம் சுருங்கியவன் மெதுவாக கண்விழிக்க குளியலறையில் சத்தம் கேக்கவே 
“அதுக்குள்ளே எந்திரிச்சிட்டாளா?” அவளின் அணைப்பின் கதகதப்பில்லாமல் உடல் குளிரெடுக்க  குழந்தைகளை அணைத்துக் கொண்டவனுக்கோ நேற்று இரவு நடந்ததும் கண்ணுக்குள் வந்தது. 
இருவரும் இருமுனையில் தூங்க விஷ்வதீரனுக்கு தூக்கம் தூர ஓடியது. ஆரோஹியின் வாழ்க்கையில்  நடந்த சம்பவங்களால் அவள் காதலையும், கல்யாண வாழ்க்கையையும் வெறுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அப்படியே விட்டு விட அவனின் காதல் மனம் விடவில்லை. 
அஜய்யும், விஜய்யும் தன்னுடைய குழந்தைகள் என்று நினைத்தவன். ஆரோஹியிடம் உண்மையை சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்று அவளை சந்தித்து பேச அவள் வீட்டுக்கு சென்ற அன்று அவள் மயக்கம் போட்டு விழுந்த பின், ஆரோஹியின் தந்தை ஹிமேஷின் அலைபேசி எண்ணை அவளின் அலைபேசியிலிருந்து பெற்றுக் கொண்டவன். ஆயிஷாபேகம் சொன்னதையும் நினைத்து பார்த்தான். 
“”ஆரோஹி என் மனைவி. ரெண்டும் என் குழந்தைகள்” என்று விஷ்வதீரன் சொல்ல  
“ஒரு குழந்தையை அவ தத்தெடுத்தா? இதுல உங்க குழந்தை எது?” ஆயிஷா அவனை ஏறிட 
அவரின் கேள்வியால் திகைத்தவன் நொடிநேரமும் யோசிக்காது “அந்த குழந்தைக்கு அவ தான் அம்மான்னா! நான் தான் அப்பா” என்று சொல்ல
அவனின் பதிலில் அவனை மெச்சுதலான பார்வை பாத்தவர்  “அவ சுமக்காத குழந்தைகளுக்கு நீங்க எப்படி தம்பி அப்பாவாக முடியும்” அவனை ஆழ்ந்து பார்த்தார் ஆயிஷா 
“நீங்க என்ன சொல்லவரீங்க?  கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தாலும் நிதானமாகவே அவனது கேள்வி வெளிவந்தது.
“என் பையன் இறந்த துக்கம் தாங்க முடியாம கால் போன போக்குல நடந்துகிட்டு இருந்தேன், எத்தன நாள் சாப்பிடாம இருந்தேனு நியாபகமில்ல, மயங்கி விழுந்துட்டேன். யார் என்ன ஆஸ்பத்திரியில் சேத்தாங்கனும் தெரியல. அங்க வச்சு தான் ரூஹிய முதன் முதலா பாத்தேன். ரூஹி ரொம்ப பதட்டமா இருந்தா. பைக்ல இருந்து விழுந்துட்டா போல குழந்தை பேச்சு மூச்சில்லாம இருந்திச்சு. ஆஸ்பிடல்ல ஒரு நாள் தங்க சொல்லிட்டாங்க. என்னமோ அவள விட்டுடு போக மனம் வராம அவளோட அறைக்கு வெளியே இருந்தேன்.  அன்னைக்கி அவ எதுவுமே சாப்பிடல அழுது கிட்டே, புலம்பி கிட்டே இருந்தா. 
கொஞ்சம் நேரத்துல ஆஸ்பிடல்ல ஒரு கலாட்டா யாரோ ஒருத்தி குழந்தையை பெத்து போட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஆஸ்பத்திரிய விட்டு போய்ட்டா. நர்ஸ் சொல்லவும் ரூஹி என்ன நினைச்சாலோ “அந்த குழந்தைய நான் தத்தெடுக்கலாமா” என்று கேட்டா. அவ ஒரு குழந்தையோட இருந்ததால அவங்க மறுக்கல, சந்தோஷமாகவே கொடுத்தாங்க, 
 ஆஸ்பத்திரியில இருந்து அவ வீட்டுக்கு போகும் போது அவ கூட போனு என் மனசு சொல்லுச்சு, நானும் போனேன். பின் தொடர்ந்து போய் வேல கேட்டேன். வேணாம்னு சொன்னா. ரெண்டு குழந்தையை வச்சி கிட்டு எப்படிம்மா வேலைக்கு போவ? என்று கேட்டதும் யோசிக்க ஆரம்பிச்சா. அவள தள்ளிக் கொண்டு உள்ள போய் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிச்சேன். அன்னைல இருந்து இன்னை வரைக்கும், அவ வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு நானும் கேக்கல அவளும் சொல்லல.
 
தான் இருந்த நிலமையிலும் அனாதையான குழந்தையை தத்தெடுக்க என்ன மாதிரி மனசு வேணும் என்று அவளை பற்றி பெருமையாக நினைத்தவன்  “ஒரு குழந்தையை தானே தத்தெடுத்தா சரி. அவ குழந்தையை சுமக்கிறத நானே என் கண்ணால பாத்தேன்” விஷ்வதீரன் அன்று மாலில் பாத்ததை சொல்ல
“நானும் ரெண்டு குழந்தையை பெத்தவத்தான் தம்பி. அவ குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவே இல்லனதும் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். குழந்த பொறந்தா ஒரு பொண்ணோட உடம்புல சில மாற்றங்கள் நிகழும். அவ கிட்ட எந்த மாற்றமும் இல்ல” ஆயிஷா உறுதியாக சொல்ல விஷ்வதீரன் குழம்பி நின்றான்.
“ஒருநாள் ஸ்கூல் போய் குழந்தைகளை கூட்டிட்டு வரும் போது அழுது கிட்டே இருந்தா. அப்போ தான் அஜய்யும், விஜய்யும் வந்து டாடி பேரென்னனு கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சாங்க அழுது கிட்டே விஷ் னு சொன்னா. ஒவ்வொரு வருஷமும் அன்னைக்கி அவ ரூம்லயே இருந்து அழுவா. அன்னைக்கி ஏதோ அவ வாழ்க்கைல நடந்திருக்கு. அவள தொந்தரவு பண்ணாம குழந்தைகள கூட்டிகிட்டு போனா என்ன கேள்வி  கேக்க ஆரம்பிச்சாங்க, நீங்களும் என் பையனோட உருவத்த ஒத்து இருக்கீங்க. அவனும் அடிக்கடி சுவிங்கம் சாப்பிடுவான். நான் என் பையன பத்தி சொல்லி சமாளிச்சிட்டேன்.  அடிக்கடி கனவு கண்டு உளருறா, திடுக்கிட்டு எழும்புறா. வா டாக்டர் கிட்ட போலாம் னு கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறா” ஆயிஷா அவருக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தார். 
“ஆரோஹி என் மனைவி. ரெண்டுமே என் குழந்தைகள் தான்”    
அவனின் முகத்தில் இருந்த தெளிவை கண்டவருக்கு ஆரோஹி அவனோடு சந்தோசமாக இருப்பாள் என்றே தொன்றியது
போதையில் தான் ஆரோஹிக்கு  பெரும் தவறை இழைத்து விட்டதாக குற்ற உணர்ச்சி தாக்கினாலும், குழந்தைகளை நினைத்து சந்தோஷமடைந்தவன். அவள் மயங்கி விழவும் அன்று நடந்தது அவளை பொறுத்த மட்டில் பாலியல் பலாத்காரம் என எண்ணி இருந்தவன், அன்று அறையில் ஒண்ணுமே நடக்கலையா? என்ற கேள்வியும் தோன்ற, அன்று நடந்தது அவனுக்கு சுத்தமாக நியாபகத்தில் வரவே இல்லை. ஆயிஷா சொன்னவைகளால்  நிம்மதி அடைந்தாலும், அப்படி என்னதான் அவள் வாழ்க்கையில் நடந்தது? என்று  குழம்பியவன் அவள் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தாலும் அவள் தான் என் மனைவி என்ற முடிவோடு அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.
ஒரு நாள் ஹிமேஷுக்கு அழைத்து தான் யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டவன், ஆரோஹிக்கும் தனக்கும் கல்யாணம் நடக்க இருப்பதை சொல்ல
“ரொம்ப சந்தோசம் மாப்புள, என்னால் தான் அவ கல்யாணமே பண்ணாம இருக்கா” என்று வருந்தியவர் “குழந்தைங்க” என்று இழுக்க அவருக்கும் அது யார் குழந்தைகள் என்று தெரியாது என்றே விஷ்வதீரனுக்கு தோன்றியது. 
“என் மனைவியின் குழந்தைகளுக்கு நான் தான் தகப்பனாக இருக்க முடியும்” என்று ஆணித்தரமாக சொல்லி போனை அனைத்தவன் ஆரோஹியிடம் கேக்கலாமா வேணாமா என்று மனதோடு பட்டிமன்றம் நடத்த
ஆரோஹியிடம் நேரடியாக கேட்டாலும் சொல்லுவாளா என்ற சந்தேகம் தான். என்ன தான் நண்பன்னு சொன்னாலும் ஒரு ஆணை நம்ப அவள் தயாராக இல்லாத போது தோண்டித்துருவுவதால் அவள் தன்னை இன்னும் வெருப்பாளே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தோன்ற  
 டில்லியில் அப்படி என்ன நடந்திருக்கும்? இதுல ஆகாஷ் குழந்தை எது? அவன் என்ன ஆனான்? என்ற கேள்விகளுக்கு பதிலை தேடி டில்லிக்கு நம்பிக்கையான துப்பறிபவர் ஒருவரை அனுப்பி இருந்தான். அவர் கண்டு பிடித்த  தகவல்கள் பாதியே ஆனாலும், ஒரு சில விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்க அவைகளே அவனை அதிர்ச்சி அடைய செய்ய 
“அவளுக்கு எல்லாமா நான் இருப்பேன்” என்றவன் குழந்தைகளும் வேணும், ஆரோஹியும் வேணும் என்ற உறுதியான முடிவோடு கல்யாணத்தை நிறுத்த ஆரோஹி செய்தவற்றை முறியடித்து அவளை கரம்  பிடித்தான். 
 
ஆரோஹி என் மனைவி என்று முழுமனதாக எவ்வாறு ஏற்றுக்கொண்டானோ குழந்தைகளும் எண்ணதே என்று ஏற்றவன் யாரிடமும் அதை பற்றி பகிரவில்லை. ஏன் எல்லாவற்றையும் பகிரும் தம்பியிடம் கூட சொல்லவில்லை. முதலமைச்சரிடமும் தான் போதையில் தப்பு பண்ணியதாகவே சொன்னானே ஒழிய உண்மையை சொல்ல வில்லை. அரோஹி என் மனைவி, அஜய், விஜய் என் குழந்தைகள் என்று மனதில் பதித்தவன் அதற்க்கு தகுந்த மாதிரி பேசிய வேண்டிய விதத்தில் அனைவரிடமும் பேசியவன் ஆரோஹியை மணந்தான்.  
அப்பா பொய்த்து போக, அண்ணனான ஆகாஷும் பொய்த்து போக, ஆண்களையே ஒதுக்கியவள் நண்பன் என்று நினைத்த நானும் அவளை காயப்படுத்தினால் அவள் ஆண்களின் மேல் வைத்திருக்கும் கூற்றை மாற்றாமல்  இன்னும் ஒடுங்கி போவாளோ என்று அஞ்சியவன் அவள் போக்கிலேயே போய் அவள் மனதை தொடும் முயற்சியில் இறங்கினான். 
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் ஆரோஹி தூக்கத்தில் உளறுவதை கண்டு அவள் கனவு காண்கிறாள் என்று புரிய உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் “ஆகாஷ் ஆகாஷ்” என்று முனகுவதை கேட்டவன் ஆயிஷா ஆரோஹி அடிக்கடி கனவு கண்டு திடுக்கிட்டு எழுவதாக சொன்னது நியாபகத்தில் வரவே அடுத்த நொடி அவளருகில் நின்றவன் அவள் புறம் சாய்ந்து அணைத்துக் கொண்டு 
“ஒண்ணுமில்ல ஆரா தூங்கு.  நான் உன் பக்கத்துல இருக்கேன், உன் கூடவே இருக்கேன்.” என்று தட்டிக் கொடுக்க 
ஏதேதோ உளறியவள் அவனை இறுக அணைத்து “விஷ் என்ன விட்டு போகாத” என்று முணுமுணுத்தவள் நிம்மதியாக தூங்கலானாள். அஜய் எழுந்து விஷ்வதீரனை தேட அவனை அவன் பக்கம் தூங்க வைக்க விடியும் போது இடம் மாறியதை கண்டு தான் ஆரோஹி முழித்தாள். 
அகலமலே அனுகமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது
ஆரோஹியின் மேல் நீர் விழ விழ இரவில் கண்ட கனவு கண்ணில் தெரிய  விஷ்வதீரனின் குரல் காதில் ஒலிக்க சிந்தித்து பார்த்தவளுக்கு விஷ்வதீரனின் அருகாமையில் உணரும் பாதுகாப்பை நினைத்து நிம்மதியடைந்தாள்.  
அன்று டில்லி ஹோட்டல் அறையில் “உன்னோடு இருந்தது நான் தான்” என்று  விஷ்வதீரன் சொன்ன போது இத்தனை வருடங்களாக அவளுக்குள் இருந்த கேள்விக்கான விடை  ஒரு நொடியில் கிடைத்த மனநிம்மதியை அடைந்தாள் ஆரோஹி. . போதையால் யாரோ ஒருவன் தன்னை முத்தமிட முயல்வதை தடுக்க முடியாமல் திணறியவள் அவன் சட்டையை இழுக்க அவனது தோள்பட்டையில் இருந்த மச்சமே தெளிவில்லாமல் தென்பட்டது. காலையில் கண்விழித்து பார்த்தவள் அங்கு யாருமில்லை என்றவுடன் குழப்பத்திலேயே வீடு சென்றாள்.       
    
அவள் மனதில் நண்பனாக பதிந்து போன விஷ்வதீரன் காதலனாக மெல்லிய தடம் பதித்ததை மங்கையவள் உணரும் நாளும் வருமோ?

Advertisement