Advertisement

                                                  அத்தியாயம் 18
தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ என்று அஞ்சியவர் தங்கதுரையை சந்தித்து ஆரோஹியை பற்றி விசாரிக்க அமெரிக்காவில் இருப்பதாக அவருக்கு தெரிந்த தகவலை கூற, “அவளுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம்” என்ற எண்ணம் தோன்ற விஷ்வதீரனை வழிக்கு எப்படி கொண்டுவருவது என்று புரியாமல் இருந்தவரிடம் தங்கதுரை
“என் பொண்ணுக்கும் நம்ம சொந்தபந்தத்துலேயே மாப்புள பாக்கணும், யாராவது இருந்தா சொல்லுங்க” என்று சொல்ல 
தீரமுகுந்தன் கல்யாணத்தில் எந்த ஈடு பாடும் இல்லாமல் இருக்கிறான் பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்திருந்த படியால் அவளால் அவனை புரிந்துக் கொண்டு, அவனுடன் மனமொத்து,  வாழ முடியும் என்று நம்பியவர். “ஒருத்தன் இருக்கான், ஆனா போலீஸ் வேலைல இருக்கான்” 
“என்ன வேலைனா என்ன நேர்மையா இருந்து வதனிய சந்தோஷமா வச்சுக்கிட்டா போதும்” தங்கதுரை பிங்கியை நினைத்து சொல்ல 
அன்றே தீரமுகுந்தன், பிங்கி கல்யாண விஷயம் பேசப்பட பிங்கியை சந்தித்த திருமாறனுக்கும் குறும்புத்தனமான இருந்தாலும், தைரியமான பொண்ணு முகுந்துக்கு பொருத்தமா இருப்பா என்று தன் சம்மதத்தை சொன்னார். 
போலீஸ் என்றதும் புஷ்பா மறுக்க,  தீரமணியின் குடும்பம் என்றதும் “செல்வாக்கான குடும்பம் தான் இருந்தாலும், ஆரோஹி பண்ண காரியத்தால் வதனிய நல்லா பாத்துப்பாங்களா?” என்று சந்தேகமாக கேக்க 
மாமியார் தொல்லை, நாத்தன்னர் தொல்லை, வேறெந்த பிக்களும் புடுங்கலுமில்ல என்று தங்கதுரை அவளுக்கு சாதகமாக பேசி மனதை கரைத்து ஒத்துக்க வைத்திருந்தார். 
“ஒருவருடம் கழித்து தான் வேலைக்கே போவேன், கல்யாணம் அதன் பிறகுதான், வேலைக்கு போய் கொண்டே படிப்பையும் தொடருவேன்” என்று சொல்லிக்  கொண்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு காதல் வரும் என்று கனவில் நினைத்திருக்க மாட்டாள்
ஏற்கனவே பிங்கியிடம் சத்தியம் வாங்கியதால் மாப்பிளையின் புகைப்படத்தை கொடுத்தவர்கள் அவள் மாப்பிளையை பற்றி கேட்டால் சொல்லலாம் என்று விட்டுவிட, பிங்கியோ காய்ச்சலில் விழுந்து தீரமுகுந்தனின் நினைவால் கரைந்து எந்த கேள்வியும் கேக்க தோன்றாமல் இருக்க,  அவள் எந்த கேள்வியுமே கேக்காததை தங்களின் வளர்ப்பு சோடை போகவில்லை என்ற பெருமிதத்தில் இருந்தனர் அவளின் பெற்றோர்கள். 
என்னமோ தான் கல்யாணம் பண்ண சம்மதித்தால் தான் அண்ணனின் கல்யாணம் நடக்கும் என்று பெருசுகள் மிரட்டி விட்டு சென்றதால் “அட அரலூசுங்களா!” என்று தீரமுகுந்தன் திட்டினாலும் தனக்கு வருபவள் அண்ணிக்கும் துணைநிற்பாள் என்ற எண்ணம் தோன்ற அவர்களின் மனநிலையையும் கருதி, அண்ணனிடம் கலந்தாலோசித்து கல்யாணத்துக்கு சம்மதித்தவன் மணப்பெண்ணை காணவேண்டும் என்றோ! பேசவேண்டும் என்ற எந்த ஆசையுமில்லாமல் இருக்க அவனுக்கு வழங்கப்பட்ட பிங்கியின் புகைப்படமும் கவரில் இட்டு மேசை டிராயரில் கிடக்க, இங்கே பிங்கி என்னமோ அவன் அவளை விரும்பியே மணந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மை அறியும் போது தீரனை என்ன செய்வாளோ?
கல்யாணம் சொந்தபந்தங்கள் வாழ்த்துக்களோடு சிறப்பாக நடந்துமுடிய சடங்குகளும் புஷ்பாவால் குறையில்லாது நடந்து முடிந்திருக்க மணமக்களை வீட்டுக்கு அழைத்து செல்ல ஆழம் சுற்றி உள்ளே நுழைந்தவர்களை விளக்கேற்றும் படி புஷ்பா பணித்தாள். 
அதன்  பின் மணமக்களை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க தீரமுகுந்தன், விஷ்வதீரனோடு கேஸ் டிஸ்கஷனில் இருக்க பிங்கி பல்லை கடித்தாள்.  
தீரமணியின் அப்பா ஆங்கிலேயர் காலத்தில் கட்டின வீடு. தோட்டத்தோடு அமைந்த பெரிய வீடு என்றாலும் கீழே நான்கு அறைகளும் மேலே இரண்டு அறைகளும் இருக்க ஒவ்வொரு அறையும் பெரிதாகவே தாராளமான இடத்தை அடைத்திருந்தது. அந்த கால தேக்கு மற்றும் மகோகனி பலகையிலான செதுக்கிய வேலைப்பாடுகள் வீட்டை அலங்கரிக்க, எல்லா பொருட்களும் பலகையினாலேயே இருந்ததன. ஆரோஹியோ அந்த வீட்டை கண்ணால் அளந்தவாறே இருக்க 
“போமா உன் அறைக்கு போய் ரெஸ்ட் எடு” திருமாறன் கனிவாக சொல்ல 
குழந்தைகளை ஒரு பார்வை பார்க்க “அவங்கள நான் பாத்துக்கிறேன்” என்று சொல்ல மனச்சோர்வோடு உடல் சோர்வும் படுத்த கொஞ்சம் கண்ணயர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, எழுந்துக் கொண்டவள் நகர போக 
பிங்கியும் எழுந்து கொண்டு “ரூஹிகா நானும் வரேன்” என்று சொல்ல அவளின் சத்தம் கேட்டு ஸ்கூபி தாவி வந்து அவள் மேல் ஏறி இருக்க, பேசியவாறே தீரமுகுந்தனும், விஷ்வதீரணும் எழுந்துக்க கொள்ள, ஆரோஹி கத்தியவாறே விஷ்வதீரனின் மேல் தாவி அவனின் கழுத்தை கட்டிக்க கொண்டு அவனை இறுக்கிப் பிடித்திருக்க, அவளை தங்கவோ, ஆறுதலாக ஒரு வார்த்தையோ சொல்லாது, அவனோ சிறிதும் அசையாது கற்சிலை போல் நின்றான். 
எரியும் தீயின் எண்ணெய் நீ ஊற்று 
நான் வந்து நீராடும் நீர் ஊற்று
ஓ ஊரெல்லாம் கண்மூடி 
தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே
நான் மட்டும் தூங்காமல் 
ஏங்கி உன் போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன் 
ஏன் அதில் தோற்றேன் 
ஏன் முதன் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது தாமரை வேகுது
தள்ளிப் போகாதே என்னையும் 
தள்ளிப் போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள் தானே
தள்ளிப் போகாதே
ஆரோஹி கத்தும் கத்தலை கண்டு ஸ்கூபி பாவமாக பார்க்க 
“ஸ்கூப் வெளியே போ அண்ணி பயப்படுறாங்க இல்ல” என்று தீரமுகுந்தன் ஸ்கூபியை வெளியே துரத்த. 
“டேய் என்னாலதாண்டா இங்க ஒரு ரொமான்ஸ் ஸீன் ஓடிக்கிட்டு இருக்கு. உனக்கு அந்த கொடுப்பன கூட இல்ல” என்றவாறு ஒரு பார்வையை வீசி விட்டு பிங்கியிடம் முறையிட்டவாறே வெளியே ஓடியது. 
ஸ்கூபி வெளியே ஓடி இருந்தாலும் அதன் உருவத்தை கண்டு பயந்த ஆரோஹி இன்னும் விஷ்வதீரனை விட்டு விடாமல் அவனின் முதுகோடு ஒட்டி, அவள் நெஞ்சோடு அவனை சேர்த்து அணைத்திருக்க, அவளின் மேனியின் மென்மை உணர்ச்சிகளை தூண்ட, மல்லிகை பூவின் வாசமும் கிளர்ச்சியை கிளப்பி அவனை இம்சிக்க, அவளை முதல் முதலில் பார்த்த நாளில் அவள் அவனை கட்டியணைத்ததும் நியாபகத்தில் வரவே, அவளை அணைக்க துடிக்க, அவள் பேசியவைகள் நியாபகத்தில் வரவே கைகளை மடித்து இறுக்கிக் கொண்டவன் 
“ஆரா ஸ்கூபி வெளிய போய்ட்டான். ரிலேக்ஸ்” என்று சொல்ல அவள் போட்ட சத்தத்தில் அனைவரும் வாசலுக்கு வந்திருக்க  அவனை அணைத்திருந்த கைகளை விட்டவள், அவனின் முதுகுக்குப் பின்னாலிருந்து  மெதுவாக எட்டிப் பார்க்க ஒவ்வொருவரும் சிரித்தவாறே அகல ஆரோஹிக்கு வெக்கம் வந்து தலை குனிந்தவாறே மாடிப்படிகளை நோக்கி செல்லும் போது விஷ்வதீரனிடம் மன்னிக்க வேண்டி ஒரு பார்வையை வீச அவளை கண்டுக்காது அமர்ந்து கொள்ள தீரமுகுந்தனும் அமர்ந்துக் கொண்டான்.
“சே என்ன இது இவன் முரட்டு போலீஸா இருக்கான்.  சின்ன சின்ன சில்மிஷங்கள் பண்ண வேணாம், ஒரு காதல் பார்வை கூடவா வீச மாட்டானா? வச்சிக்கிறேண்டா உன்ன” என்று கருவிக்கு கொண்டு ஆரோஹியை பின் தொடர்ந்தாள் பிங்கி. 
இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
“போன காரியம் என்ன ஆச்சு?” விஷ்வதீரன் மெதுவாக கேக்க 
“டீச்சர் ஜோதியோட பிரென்ட் ரேகா இருக்கிற இடம் தெரிஞ்சி போச்சு. ஒரு ஹாஸ்பிடல்ல டிரீட்மென்ட் எடுத்து கிட்டு இருந்திருக்கிறாங்க, மிதுன் போன் பண்ணதும் அவ எங்க போறான்னு சீசீடிவிய கவனிக்க சொன்னேன் அதன் படி அவ முக்காடு போட்டு பதுங்கி பதுங்கி போய் ட்ரெயின் ஏறி இருக்கா எங்க போறான்னு பாத்தோம் மதுரைக்கு போறாளாம், என் ஆளுங்க கிட்ட சொல்லி தூக்கிட்டேன். மிதுன் கிட்ட ஒப்படைச்சிட்டேன். மயக்கம் தெரிஞ்சதும் விசாரணையை ஆரம்பிக்கலாம்” தீரமுகுந்தன் புருவம் நீவியவாறே 
“ஒத்துழைப்பானு நினைக்கிறியா? தீரன் யோசனையாக கேக்க 
“ஒத்துழைச்சு தான் ஆகணும், ஒரு லேடி இன்ஸ்பெக்டரையும் கூடவே வச்சி கிட்டா நல்லா இருக்கும், நம்ம மேல நம்பிக்க வரும்” 
“சரி நாளைக்கு காலைல ஆரம்பிப்போமா?” 
“எதுக்கு காலவரை வெயிட் பண்ணனும்? நைட்டே போலாம்” போலீசாக மாற 
அவனை ஒரு பார்வை பாத்தவன் “நமக்கு இன்னைக்கி தான் கல்யாணமாச்சு, நான் கூட பரவால்ல ரெண்டாவது தடவ, இது உனக்கு முதல் தடவ, உன் பொண்டாட்டி உன்ன விட்டுட்டு என் முதுகுல டின் கட்டிடுவா” விஷ்வதீரன் கேலியாக சொல்ல தீரமுகுந்தன் யோசனையில் விழுந்தான்.  
தீரமுகுந்தனின் அறைக்கு சென்ற பிங்கியோ அறையை நோட்டம் விட “என்னடா இது ரூம போலிஸ்டேஷனா மாத்தி வச்சிருக்கான்” என்று ஒவ்வொரு கோப்பாக  எடுத்துக் பார்க்க பின்னால் வந்த தீரமுகுந்தன் அவளின் தலையில் கொட்டி விட்டு 
“என்ன பண்ணி கிட்டு இருக்க நீ? என் பொருட்கள தொடாத” என்று சொல்ல முகம் சுருங்கிய பிங்கி 
“எதுக்கு போலிஸ்டேஷன வீட்டுல வச்சிருக்க, ஒரே குப்பையா இருக்கு சுத்தம் பண்ண மாட்டியா” என்று கடிய 
“அன்னைக்கு நீ இந்த ரூமுக்கு தானே வந்த? அன்னைக்கு கிளீனா இருந்த ரூம் இன்னைக்கு குப்பையா தெரியுதா?” 
“அன்னைக்கு நான் ரூம எங்க பாத்தேன் உன்ன தானே பாத்துக்கிட்டு இருந்தேன்” என்று மனதில் நினைத்து சிரித்துக் கொண்டவள். “இனிமே இந்த குப்பையெல்லாம் இங்க இருக்க கூடாது. புரிஞ்சுதா? இல்ல இங்க தான் வைப்பேன்னு சொன்னா எல்லாத்தையும் எரிச்சி சாம்பலை கைல கொடுத்துடுவேன்” என மிரட்ட 
“யார் டி நீ” தீரன் எகிற 
“உன் பொண்டாட்டி, எல்லா உரிமையும் இருக்குனு தானே தாலிய கட்டி கூட்டிட்டு வந்த” பிங்கி வேண்டு மென்றே பேச 
“இதுக்குதான் நான் கல்யாணமே வேணான்னு சொன்னேன். கல்யாணம் என்ற பேர்ல ஒரு தொல்லைய என் தலைல கட்டிட்டாங்க” என்று சொல்லியவாறே எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் அடுக்கி அறையோடு  ஒட்டி இருந்த இன்னொரு அறைக்குள் புகுந்து கொண்டான்.  
அவன் சொன்னதை காதில் வாங்கி கிரகித்தவள். அவன் சொன்னது புரியாமல் திகைத்து நின்று விட 
“என்ன சொல்லிட்டு போறான் என்ன கல்யாணம் பண்ண முடியாதுனு  சொன்னானா? சே சே சும்மா வம்பு வளர்க்க சொல்லிட்டு போறான்” என்று தன்னையே சமாதானப் படுத்திக்க கொண்டாள் பிங்கி.  
தீரன் பிங்கியை காதலித்தானா? என்ற கேள்விக்கு இன்றிரவே பதில் கிடைக்குமென்று பிங்கி நினைத்து கூட பாத்திருக்க மாட்டாள்.
தூங்கி எழுந்த ஆரோஹி குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப் படுத்திக்க கொண்டு வெளியே வர விஷ்வதீரணும் அறைக்குள் நுழைந்தான். அவனை கண்டுக்காது ஆரோஹி வெளியே செல்ல போக 
“ஒரு நிமிஷம்” என்று அவளை குரலால் தடுக்க அவனை ஆரோஹி ஏறிட அலுமாரியை திறந்து ஒரு கோப்பை எடுத்தவன் 
“ஆரா நீ கேட்ட படியே என் சொத்தெல்லாம் பசங்க பேர்ல மாத்தி எழுதி கார்டியனா உன்ன போட்டிருக்கேன்” என்று அவள் கையில் கோப்பை கொடுக்க 
அதை வாங்காது “இவன் என்ன சொல்லுறான்” என்ற பார்வையை வீச 
விஷ்வதீரன் கோப்பை திணிக்காத குறையாக அவளின் கையில் வைத்து “காலையிலேயே தந்திருப்பேன். எப்படியும் நீ வீட்டுக்கு தானே வருவ சோ வீட்டுல வச்சே கொடுத்துடலாம் என்று இருந்துட்டேன். நீ தூங்கி கொண்டு இருந்ததால தர கொஞ்சம் லேட் ஆச்சு. சாரி போ தட்” என்றவன்  குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள 
கோப்பை திறந்து பார்த்தவளுக்கோ கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கல்யாணத்தை நிறுத்த எப்படியெல்லாம் பேசிப்பார்த்தும் மசியாதவனை குழந்தைகளை காரணம் காட்டி வெறுப்பேத்த உண்மையாகவே சொத்துக்களை குழந்தைகளின் பெயரில் எழுதுவான் என்று எதிர் பார்க்க வில்லை. 
கல்யாணமன்று காலையில் தருவதாக கூறி சென்றாலும் அவள் சொத்துக்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாததால் அந்த விஷயத்தை மறந்தே போய் இருக்க, காலையில் கொடுக்காததுக்கு காரணத்தையும் சொல்லி விட்டு செல்பவனை எந்த கேட்டகாரியில் சேர்ப்பது என்று கட்டிலில் அமர்ந்தவளின் மனமோ அவன் புறம் சாய
குளியலறையிலிருந்து வெளியே வந்த விஷ்வதீரன்  அவளின் தோற்றம் கண்டு மனதை பிசைந்தாலும் அமைதியாக வெளியே செல்ல கதவில் கை வைக்கும் போது ஆரோஹியின்  குரல் அவனை தடுத்தது. 
“விஷ் நீ என் கிட்ட என்ன எதிர் பார்த்து இப்படியெல்லாம் செய்ற? உனக்கு என் கிட்ட இருந்து என்ன தான் வேணும்?” நீ உண்மைய சொல்லியே ஆகவேண்டும் என்று ஆரோஹி அவனை நேர் பார்வை பார்க்க  
அடி ஏதோ புரியா ஆசை நெஞ்சின் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல் அடடா புதிதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட
எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட
எங்கே நீ இருந்தாய் பெண்ணே
எப்படி நீ எனக்குள் வந்தாய்
உன்னாலே நானும் உறக்கம் கேட்டு தன்னாலே நானும் எழுந்தேனே
உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி போனேன்
உன் பார்வை தீண்டும் போது கண்ணாடி போலே உடைந்தேனே
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்
“இவ என்ன புரிஞ்சிக்கவே மாட்டாளா?” வெறுமையாக நினைத்தவன் எதுவும் பேசாது கதவை திறக்க ஓடி வந்து கதவை மூடிய ஆரோஹி 
“சொல்லிட்டு போ விஷ். நா என்ன சொன்னாலும் பக்கம் பக்கமா வசனம் பேசுவியே! எல்லா சொத்தையும் தந்து என் கிட்ட இருந்து என்ன எதிர் பாக்குற? என் உடம்பையா?” என்று வாய் வார்த்தையாய் கேட்டு அவனின் மனதை குத்திக் கிழித்ததுமல்லாது  “கேவலமா இல்ல” என்ற பார்வையையும் வீச 
கதவை திறந்தவனை தள்ளாத குறையாக கதவின் மேல் அவள் சாய்ந்திருக்க விஷ்வதீரன் அவள் நகராத படி அவளை மறைப்பது போல இரண்டு கைகளையும் மூடிய கதவின் மீது வைத்து
உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் “ஆரா ஒரு நேரம் போல் ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன். பொறுமையா போறதால என்ன நீ என்ன வேணாலும் பேசிடுவியா? கேவலம் சொத்தை காட்டி உன்ன அடையணும்னு நான் நினைப்பேனா?  ” என்று கண்கள் சிவந்தவன் அவளை உறுத்து விழிக்க 
அவனின் சிரிக்கும் கண்களில் தெறிக்கும் அனலை கண்டு இன்னும் அவனை  கோபப்படுத்தினாள் ஆரோஹி.
“உன் குட்டு உடைஞ்சதுனு கோவம் வருதா விஷ். எல்லா ஆம்புளைங்களும் பொம்பளைங்களோட உடம்புக்காக தானே அலைறீங்க, நீ மட்டும் விதி விலக்கா? காதல்னு சொல்லி பார்த்த, நா ஏத்துக் கொள்ளாததால் கல்யாணம் பண்ணி கிட்டியா? இதோ இப்ப கூட உரசிக்கிட்டே தானே நிக்குற” என்று ஆரோஹி எள்ளிநகையாட 
அவனின் காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் கொச்சை படுத்துபவளை என்னவென்று சொல்ல  அவளிடமிருந்து சில அடிகள் பின்னாடி நகர்ந்தவன் அவளை நேர் பார்வை பார்த்தவாறே ” உன் உடம்புதான் வேணும்னு நினைச்சி இருந்தா கல்யாணம் பண்ண வேண்டிய அவசியமென்ன? தூக்கிட்டு போய் இருக்க மாட்டேனா? இல்ல பசங்கள தூக்கி உன்ன ப்ளாக் மெயில் பண்ணா? நீ என் காலடியில நாய் குட்டி மாதிரி சுத்தி கிட்டு இருந்திருக்க மாட்டியா?   
ஒரு நொடி தான் செய்ய இருந்த தவறை உணர்ந்தவன் அவள் சொல்வதில் தவறில்லை. என்று தோன்றினாலும், அவன் அதை செய்யத்தான் நினைத்தான். அது அவளின் உடலை அடைய இல்லையே! அவனின் ரணமான மனதை ஆற்ற.
அவன் கேள்வியில் ஆரோஹி அதிர்ச்சியாக அவனை பார்க்க 
“இன்னைக்கு உனக்கு இது போதும் டி” என்று நினைத்தவன் “ஸ்கூபி உன் மேலயா தாவினான்? நீ எதுக்கு நீ என்ன கட்டிபிடிச்ச? நீ தான் என்ன கட்டி பிடிச்ச, நான் உன்ன தொடவே இல்ல, உன்ன விலக்கி விட கூட உன்ன தொடலையே! நான் சொன்ன மாதிரி என் விரல் நுனி கூட உன் மேல படாது. நான் சொன்னா சொன்னதுதான். திரும்பவும் நீ என்ன தொட்டா அதுக்கு பின் நா இன்னைக்கு போல இருப்பேனானு தெரியல. நீயா என்ன தொடாதவரைக்கும் நான் உன் பக்கம் வரமாட்டேன்” என்றவன் கதவை திறந்து கொண்டு வெளியே போக 
எங்கே விஷ்வதீரனை மனம் கணவனாக ஏற்றுக் கொண்டு காதலிக்க ஆரம்பித்து விடுமோ என்று  ஆரோஹிக்கு பயம் பிடித்துக் கொண்டது. அவனது செய்கைகள் ஒவ்வொன்றும் அவள் மட்டுமல்லாது, குழந்தைகளின் நலனையும் கருதியே இருக்க, அவன் புறம் சாயும் மனதை கட்டுப் படுத்த முடியாமல், அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்க,  அவனை காய படுத்தவென்றே பேச ஆரம்பித்தவள் எதிர்த்து பேசி  அவனை காயப் படுத்தி தன் மனதை மறைத்துக் கொண்டது மட்டுமல்லாது, இனி அவன் தன்னை நெருங்க முயற்சிக்க மாட்டான் என்று எண்ணிக் கொண்டாள்.
அவன் பேசி விட்டு சென்றதில் அதிர்ச்சியடைந்தாலும் அவன் சொன்னவைகளில் இருந்த உண்மை சுட முதல் முதலாக அவன் பக்கமிருந்து யோசிக்கலானாள் ஆரோஹி.  
கதவு  திறக்கும் சத்தத்தில் கண்விழித்த பிங்கி தீரமுகுந்தன் கதவை திறந்து கொண்டு வெளியே செல்வதை கண்டு பூன நடை போட்டு அவன் பின்னால் செல்ல படிகளில் இறங்காமல் கைப்பிடியில் சறுக்கி இறங்கியவனை அந்த இருளிலும் வாய் பிளந்து பார்த்தவள் மெதுவாக படி இறங்க அவன் சலீம் பாயின் அறையினுள் புக “டேய் அவனா நீ” என்று வாய் முணுமுணுக்க சற்று முன் முதலிரவு அறையில் அவன் பேசியது மனதில் வந்தது.  

Advertisement