Advertisement

                                               அத்தியாயம் 17
இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர். 
விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக் கொண்டிருக்க, பக்கத்திலுள்ள மேடையில் அமர வேண்டிய தீரமுகுந்தனை காணவில்லை. 
“எங்கடா முகுந்த்?” தீரமணி திருமாறனிடம் கடிந்தவாறே கேக்க 
“வந்துடுவான் பா, நீங்க ஒன்னும் டென்ஷனாகாதீங்க”
“போன் பண்ணி கேளுடா எங்க இருக்கான்னு” தாத்தா கடுப்பாக சொல்ல 
“இதோ பண்ணுறேன்பா” என்று பம்மியவர் தீரனை அழைக்க 
“சொல்லுங்கப்பா” 
“எங்கடா இருக்க?  இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?” 
“வெள்ளிக்கிழம” 
“அடிங்க, நேத்து வீட்டுக்கே வரல, இன்னைக்கி உனக்கு கல்யாணம்டா கொய்யால. உன் அண்ணன் மேடைல சமத்தா உக்காந்து மந்திரம் சொல்லி கிட்டு இருக்கான், நீயுமிருக்கியே! தறுதல, சீக்கிரம் வந்து சேரு” 
“இக்கட சூடு” என்றவன் “ஹாய்” என்று கையசைக்க 
“என்ன வெறுப்பேத்துறத நீ வேலையா வச்சிட்டு அலையுற, சீக்கிரம் போய் ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாடா. உன் டிரஸ் ஆரோஹிகிட்ட இருக்கு. ஐயர் பொண்ண கூட்டிட்டு வர சொல்ல போறாரு” என்று கடிய 
“போறேன் திரு. இரு இரு” என்றவன் விஷ்வதீரனை கட்டியணைத்து வாழ்த்து சொல்லி விட்டே சென்றான். 
ஆரோஹி பேசியது மனம் வலிக்க செய்தாலும் விஷ்வதீரனால் அவள் மீது கோபம் கொள்ள முடியவில்லை. அவளின்  தற்போதைய மனநிலையும், வலிகளும், வேதனையும் நன்கு புரிந்து கொண்டவனாக அவளுக்கு மருந்தாக இருப்பது  அவனுடைய காதல் ஒன்றே என்று அறிந்தவனாக கண்டிப்பாக என் காதல் அவளை மாற்றும், காதலிக்கவும் வைக்கும் என்று நம்பிக்கையாக எண்ணலானான். ஆரோஹியிடமிருந்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்து தோற்றவன் மாற்று வழியை கண்டு பிடித்தான்.
கல்யாண ஷாப்பிங் தனியாக பண்ணியவன் தாத்தாவின் வற்புறுத்தலுக்காக ஒருநாள் ஒதுக்கி மாங்கல்ய தோஷ பூஜையில் கலந்து கொண்டான். அன்று தான் அவன் ஆரோஹியை கடைசியாக பார்த்தது. மத்த வேலைகளை தாத்தாவும், அப்பாவும் பார்த்துக்கொள்ள தீரமுகுந்தனோடு பெண்கள் தொடர் கொலை வழக்கில் தீவிரமாக இறங்கி இருந்தான். 
இந்த ஒரு வாரத்தில் அவர்களுக்கு கிடைத்த ஒரே துப்பு மாலாவுடைய பிணம் தான். ஒரு பணக்காரரின் விருந்தினர் இல்லத்தில் தற்காலிக தோட்ட வேலை செய்பவன் நூறுக்கு போன் செய்து தகவல் தர லோக்கல் போலீஸிடம் சென்ற விசாரணை அது மாலா என்றதும் விஷ்வதீரனின் நேரடி விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு மாலாவின் உடல் அன்புச்செல்வனின் கையில் ஒப்படைக்கப் பட்டது. 
அந்த பணக்காரனோ வெளிநாட்டில் இருக்க காவலாளி வீட்டை வாடகைக்கு விட்டதன் பலன் மாலாவின் இறப்பு, என்று விஷ்வதீரன் விசாரிக்க. அவனை விசாரித்ததில் உபயோகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அன்று அதிக மழையாக இருந்ததாகவும், இரண்டு பேர் நடுநிசியில் வந்ததாகவும், கார் நம்பரை கவனிக்க வில்லை என்றும், அவர்கள் கொடுத்த மதுபானத்தை குடித்த பின் தூங்கி விட்டதாகவும் சொன்னான். 
அவன் சொல்வது பொய் இல்லை என்றாலும் அடி பின்னி எடுத்திருந்தான் விஷ்வதீரன். என்ன கலர் கார் என்பதை கூறியவனுக்கு வாகனங்களை பற்றிய அறிவுமில்லை. அதனாலயே சொல்லத்தெரியாமல் தடுமாறி, விஷ்வதீரனின் அடியையும் தாங்காது மயங்கி விழுந்தவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 
மாலாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த அன்புச்செல்வத்தின் தகவல் படி மாலா மதியமே இறந்திருக்கிறாள் என்று சொல்ல 
“அப்போ பாடிய புதைக்க தான் பாத்திருக்கானுங்க” விஷ்வதீரன் கேள்வியாக அவரை நோக்க 
“என் வாழ்க்கைல நிறைய பிணங்களை பாத்திருக்கிறேன். இவனுங்க ஒரு விச சைக்கோ விஷ்வா சார்,எந்த பேரன்ட்ஸும் புள்ளைங்கள இந்த நிலைமைல பாத்தா தாங்க மாட்டாங்க. மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சி இருக்கானுங்க. அல்மோஸ்ட் பொணத்து கூட..” மேலே சொல்லாமல் நிறுத்தியவர் “சீக்கிரம் கண்டு பிடிங்க” என்றார் கண்ணில் நீர் கோர்க்க 
“செய்யும் வேலையை நிறுத்திய மிதுன் “அவனுங்கள கண்டு பிடிச்சா கோட், கேஸ்னு அலையாம சுட்டுத்தள்ளுங்க” என்றவன் வேலையை தொடர்ந்தான்.
விஷ்வதீரனும் மாலாவின் உடலை பார்த்ததால், அவள் மேனியில் இருந்த கசையடியும், இரத்தம் உறைந்த காயங்களும் அவள் எந்த மாதிரியான வலியோடு இறந்தாள் என்பதை சொல்ல மௌனம் காத்தான்.
 
கல்யாண வேலைகளும் இருக்க ஆரோஹியின் பிடித்தமில்லா பேச்சும், ஒன்றுக்கொன்று முரணான பேச்சும் அவனின் கோபத்தை தூண்டினாலும், பொறுமை பொறுமை என்று தன்னை தானே அடக்கியவன், தன்னவளை தனதாக்கிகொள்ள  இன்று அவளுக்காக மணமேடையில் காத்திருக்கலானான்.
ஆரோஹியின் மேனி வண்ணத்துக்கு பொருத்தமாக கருநீல நிற பட்டுசாரியும், மெட்டி,மங்கம்மாலை, ஒட்டியாணம், மூக்குத்தி, கொலுசு, ஜிம்கி என எல்லா நகைகளையும் பாத்துப் பாத்து வாங்கி இருக்க, தாலி மட்டும் வாங்கவில்லை. மேலோட்டமாக பார்த்தவள் அவனை காயப்படுத்தவென்றே பேசி அவைகளை பெற்றுக்கொள்ளாது விலகிக்கொள்ள ஒரு பெருமூச்சு விட்டவன் புஷ்பாவிடம் ஒப்படைத்தான்.
பிங்கி அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட மணமகளறையில் அமர்ந்தவாறு நகத்தை கடித்துக் கொண்டு இருக்க கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் தீரமுகுந்தன் 
மஞ்சள்  குளித்து அவள் முகம் ஜொலிக்க, பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தி, சிவப்பு நிற மருதாணியும் அவள் மேனி வண்ணத்தோடு போட்டி போட,  நெத்தி சுட்டி, சூர்யப்பிறை, சந்திரப்பிறை, வளையல், அட்டிகை லக்ஷிமாலை, கொடிமாலை, மூக்குத்தி, ஜிமிக்கி, வாங்கி என எல்லா நகைகளையும் பூட்டி தேவதையாய் பிங்கி மணப்பெண் கோலத்தில்
அவளின் மணமகள் அலங்காரம் கூட அவன் கண்ணில் விழவில்லை. இரும்புத்திரை போட்டு மனதை மூடி வைத்திருப்பவனுக்கு காதல் எப்போதுதான் வருமோ?   
“ஹேய் குட்டச்சி நீ என்ன இங்க பண்ணுற? அண்ணி எங்க?” என்று அவன் கேள்வி கேக்க பல்லை கடித்தாள் பிங்கி. 
அவனோ சாதாரண சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருக்க “அண்ணன் கல்யாணத்துக்கு வந்தேயானால் நல்லா கொட்டிக்கிட்டு போ” என்று முகத்தை திருப்பினாள். 
அவளின் கோபம் எதற்கு என்று புரியாவிட்டாலும் அவன் வம்பிழுக்க யோசிக்கையில் கழிவறையிலிருந்து புஷ்பா வரவே 
“அண்ணி எங்க அத்த” எனக்கேட்க 
“அடுத்த அறை” என்று புஷ்பா சொல்ல பிங்கியின் முடியை பிடித்து இழுத்து விட்டே அகன்றான் தீரமுகுந்தன். 
ஜுரத்தில் விழுந்த பிங்கி எழுந்துகொள்ளவே நாலு நாள் சென்றிருக்க,  தீரமுகுந்தன் அவளுக்கு அலைபேசியிலாவது அழைப்பான் என்று காத்திருந்தவளை காக்க வைத்தான் ஒழிய தொடர்ப்பு கொள்ளவே இல்லை. எதற்கும் அழுது பழக்கமில்லாதவள் தன்னையும் மீறி வெளியேறும் கண்ணீரை வெறுத்தாள். அவன் அழைக்காததால் “அவன் பொண்டாட்டியா வர போறவள கொஞ்சவே நேரம் சரியா இருக்கும்” என்று அவனை திட்டி தீர்த்தவள்,  ஈகோ தலைத்தூக்க தானும் அவனுக்கு அழைக்காது “நீ எனக்கு வேண்டவே வேணாம்” என்ற முடிவுக்கு வந்து விட்டாள். பிடிக்காத கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்ச்சியும் செய்ய தோன்றாமலேயே மற்ற மூன்று நாட்களும் போக அவளுக்கு கல்யாண நாளும் ராக்கெட் வேகத்தில் வந்தது போலேயே இருந்தது.   
“வதனி திரும்பு இந்த பூவை வை, முகூர்த்த நேரம் வேற நெருங்குது” என்றவாறே புஷ்பா பூவை வைக்க பிங்கி மனதுக்குள் தீரமுகுந்தனை திட்டித்தீர்க்கலானாள். 
“அண்ணி பசங்க எங்க” என்றவாறே உள்ளே நுழைந்தான் தீரமுகுந்தன் 
அவனை கண்டு புன்னகைத்தவள் “இப்போ தான் டிரஸ் பண்ணி அத்தையோடு வெளிய போனாங்க” என்றவள் ஒரு பையை கொடுத்து “இதுல உன் டிரஸ் இருக்கு போய் ரெடியாகு” என்று சொல்ல 
“அண்ணி அண்ணன் உங்கள ரொம்ப லவ் பண்ணுறான், உங்கள அவன் எவ்வளவு மிஸ் பண்ணான்னு கூட இருந்து பார்த்தவன் நான். உங்க ரெண்டு பேருக்கிடையிலயும் என்ன நடந்திருந்தாலும், ப்ளீஸ் பசங்களுக்காக மறந்துடுங்க” என்றவன் வெளியேற 
“ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறாங்களே பா அப்படி என்னத்த பண்ணிட்டேன்” என்று புலம்பியவள் “கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன், எப்படி எப்படியோ பேசி கல்யாணம் பண்ண சம்மதம் வாங்கிட்டான். இருக்கு அவனுக்கு. அவன் தானே ஜெய்ச்சான்” என்று பொரும 
பூஜையன்று விஷ்வதீரனை சந்தித்த ஆரோஹி “சொல்லு விஷ் எதுக்கு என் பின்னாடியே துரத்துற? அன்னைக்கி நடந்தத மறந்துடு. என்னால கல்யாண வாழ்க்கைல இணைய முடியாது, சொன்னா புரிஞ்சிக்க” 
“அதான் என் விரல் கூட உன் மேல படாதுனு சொன்னேனே! இப்போ என்ன பிரச்சின உனக்கு?” விஷ்வதீரன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு அவள் கண்களை பார்த்து கேக்க 
அவளின் பிரச்சினையே! அவன் தான் எங்கே மனம் அவன் புறம் சாய்ந்தது விடுமோ! அவன் ஆசையும், தேவையும் தீர்ந்த பின் அவளை விட்டு விடுவானோ! கணவனாக அவனை நம்ப மனம் தயாராக இல்லை. அவன் ஏமாற்றி விட்டால்? தாங்காது நெஞ்சம். அவனை பார்த்திருந்தாளே ஒழிய என்ன பதில் சொல்வதென்று முழிக்க 
“ஆரா நீ என்ன வாய் வார்த்தையா தான் நண்பன்னு சொல்லுறியா?”
“இல்ல” உடனே மறுத்தவள் “பயமா இருக்கு விஷ்” என்று கண்கள் கலங்க 
“ரொம்ப யோசிக்காத, கடைசி வரைக்கும் உனக்கொரு நல்ல நண்பனா  இருப்பேன்” அவன் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“அவன் உன்ன லவ் பண்ணுறதால பொறுமையா போறான் ரொம்ப ஆடாத நீ. ஷாப்பிங் போலாம் வானு கூப்பிட்டவன என்னமா பேசி திருப்பி அனுப்பிட்டு, புடவை, நகை நட்டுன்னு பாத்து பாத்து வாங்கி வந்தானே! வாங்கி வந்த பொருளையும் நொட்டம் சொல்லிட்டு இப்போ அதையே போட்டு ஜொலிக்கிற” மனசாட்ச்சி கடிய 
 
“நான் கேட்டேனா?” என்று மட்டும் சொல்லிக் கொண்டவள் “எந்த மனுஷனும் அவங்களோட சுயநலத்துக்காக தான் எல்லாம்  பண்ணுறாங்க, அவன் சுயநலம் வெட்ட வெளிச்சமாகும் போது இருக்கு அவனுக்கு” என்று கண்ணாடியில் தோன்றிய தன் விம்பத்திடம் சொன்னவள் புஷ்பா பூவோடும், மாலையோடும் வரவே அமைதியானாள்.
  
அவனருகில், அவன் பேச்சில் அவன் புறம் சாய்வதும், அவனில்லாத இடத்தில் அவனை திட்டித் தீர்ப்பதுமாக ஆரோஹி ஒருவாறு கல்யாணம் செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தாள்.
மேடையில் அமர்ந்திருந்த தீரமுகுந்தனின் எண்ணமெல்லாம் மாலாவ கடத்தினவங்க எப்படி கடத்தினாங்க? அந்த பத்து வாகனங்களுக்கும் ப்ளூமூன் ஹோட்டலுக்கோ, அதன் உரிமையாளன் பல்லவனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. எந்த வாகனமும் அந்த பக்கம் செல்லவில்லை. எல்லாம் தனியார் வாகனமாக இருக்க, குடும்பங்களோடு பயணித்தவர்கள், அவள் பிணம் கூட தற்செயலாக கிடைக்காவிட்டால் காணாமல் போனவள் காணாமல் போனவளாகவே இருந்திருப்பாள். 
“ஐயர் பொண்ண அழைச்சிட்டு வாங்க” என்று சொல்ல  விஷ்வதீரன் ஆவலாக எதிர்பார்க்க தீரமுகுந்தனோ மிதுனுக்கு குறுந்செய்தியை அனுப்ப அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.
பிங்கி தலையை தாழ்த்தியவாறு தான் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பத்தில் வர, ஆரோஹியின் முகத்திலும் புன்னகையில்லை. அவன் வாங்கியிருந்த கருநீல பட்டு அவளுக்கு பந்தமாக பொருந்தி தென்னிந்திய மணமகளாக அவள் ஜொலிக்க விஷ்வதீரனின் காதல் மனம் நிறைந்து வழிந்துக்கொண்டிருக்க ஆரோஹியும் அவனருகில் வந்தமர்ந்தாள்.
திருமாறன் முகுந்தனின் அலைபேசியை பறித்து அனைத்து விட்டு “பொண்ணு பக்கத்துல வந்துட்டா, இன்னும் போன் பேசிகிட்டு, எதுனாலும் நாளைக்கு” என்றவர் அவனை கண்ணால் மிரட்ட பிங்கியும் அவனருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.      
“கடவுளே! இவன் யாரோ எவனோ! இனி என் வாழ்க இவன் கைல, அம்மா, அப்பா ஆச பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன். என்னால அவங்களுக்கு எந்த மனக்கஷ்டமும் வராம பாத்துக்க” பிங்கி மனதால் வேண்டிக் கொள்ள   
“கல்யாணமே வேணாம்னு இருந்தவள கல்யாண பந்தத்துல இனச்சிட்ட இல்ல. விஷ் நீ ஒரு நல்ல அப்பாவா இருப்பன்னு நீ நடந்துக்கிற முறையிலேயே தெரியுது, உன்ன என் லைப் ல சந்திச்சிருக்கவே கூடாது விஷ்” என்று ஆரோஹி குழம்பிய மனநிலையில் சம்பந்தமில்லாமல் ஏதேதோ நினைக்க     
“கடவுளே! என் சந்தோசம் முழுக்க இவ தான். அவள சந்தோஷமா பாத்துக்க எனக்கு எல்லா வழிகளிலும் உதவு”  என்று விஷ்வதீரன் பிரார்த்திக்க 
தீரமுகுந்தனின் எண்ணமெல்லாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதிலேயே இருந்தது.  
“கெட்டிமேளம், கெட்டிமேளம்” ஐயரின் குரல் தேனாய் விஷ்வதீரனின் காதில் விழ உலகிலுள்ள மொத்த சந்தோஷமும் கிடைத்து விட்ட நிம்மதியிலேயே தன்னவளை தனதாக்கிக் கொண்டான். 
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் 
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் 
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து 
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் 
காலம் முடியலாம் 
நம் காதல் முடியுமா 
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே….. 
அவன் சொன்னது போல் அவன் நுனி விரல் கூட அவள் மேனியில் படாதவாறு அன்று அவள் கலட்டிக் கொடுத்து விட்டு சென்ற அதே அம்மனின் திருமாங்கல்யத்தை கட்ட, என்ன தான் விலகினாலும் அவனின் மூச்சுக்கு காற்று ஆரோஹியின் காது மடல் உரச, மேனி சிலிர்க்க, அவள் உடலினுள் புது ரெத்தம் பாய்வது போல் ஏதோ மாற்றம். கழுத்தில் தாலி ஏறும் இத்தருணம் அவன் விரல் நுனி மட்டும் அவள் மேனியை உரசினால் இக்கணமே  காதல் தீ பற்றிக்கொள்ளும். அவள் பேசியே அவனை தூர நிறுத்தி இருக்க காதல்தேவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு தீரமுகுந்தன் பக்கம் அம்போடு திரும்ப  
தீரமுகுந்தனின் தோளில் தட்டிய திருமாறன் “தாலிய கட்டுடா” என்று சத்தமாக சொல்ல, பிங்கியின் பக்கம் திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க அவளின் சோகமான முகத்தை பார்த்தவாறே தாலியை கட்ட சொந்தங்கள் தூவிய பூக்களோடு அவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சூடாக  அவன் கைகளில் விழுந்து இம்சித்தது. 
“இவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லயா” என்ற எண்ணம் தோன்றினாலும் அவளின் சோகமான  முகம் கண்டு “ஹேய் குட்டச்சி எதுக்குடி டேம தொறக்குற அம்மா, அப்பாவ பிரிஞ்சி இருக்க முடியாதுன்னா அவங்க கூடவே போய்டு. தொல்லை விட்டதுனு நான் நிம்மதியா இருப்பேன்” என்று அவள் காதுக்குள் குசுகுசுக்க  அதிர்ச்சியாக அவனை பார்த்து ஆனந்த கண்ணீரோடு புன்னகைத்தவள் அவனின் கையை கிள்ள “ராட்சஷி” என்று திட்டியவாறே அவளை முறைத்தான். 
“நீ இன்னும் கொஞ்சம் வளரனும் தம்பி” என்றவாறே காதல்தேவன் அகன்றான்.
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலினை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையானது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமான
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!
பிங்கியால் நம்பவே முடியவில்லை. “அப்போ இவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு, தெரிஞ்சி தான் என் கிட்ட வம்பு வளர்த்தானா? என்ன பார்த்த உடனேயே கண்டு பிடிச்சிட்டானா?” இல்ல கல்யாணம் பிக்ஸ் ஆனா உடனேயே கண்டு பிடிச்சிட்டானா?’ தனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டவள் அவனிடம் ஒரு வார்த்தை கேக்காத தவறியது விதி என்று தான் சொல்ல வேண்டுமோ?  
சடங்குகள் முடிவடைவது எங்கே என காத்திருந்த தீரமுகுந்தன் விஷ்வதீரனின் காதில் ஏதொ சொல்லி விட்டு பைக்கில் ஏறி பறந்து விட 
“போடா போ என்ன கண்டுக்காமயா போற நைட் என் கிட்ட தானே வரணும் அப்போ வச்சிக்கிறேன் உன்ன” என்று பிங்கி மனதில் கருவினாலும் இரவில் அவனை தனியாக சந்திக்க போகும் தருணத்தை எண்ணி வெக்கிச் சிவந்தாள். 
 
அஜய்யும், விஜய்யும் ஆரோஹியிடம் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க “இதெல்லாம் உன்னால் தான்” என்று விஷ்வதீரனின் மீது குற்றம் சுமக்கும் பார்வையை வீச 
அவர்களை தன்னிடம் அழைத்தவன் கல்யாணத்தை பற்றி அவர்கள் கேக்கும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்ல ஆரோஹி அவனை ஆச்சரியமாக பார்த்திருந்தாள். 
 
“என்னங்க இது மாப்புள சொல்லாம கொள்ளாம போய்ட்டாரு? நம்ம சொந்த பந்தங்களெல்லாம் கேள்வி மேல கேள்வி கேப்பாங்களே? புஷ்பா சிறிது கோபமாக பேச 
“அவன் போலீஸ் மா அதான் போன் வந்ததுன்னு போய்ட்டான், இப்போ வந்துடுவான்” பதில் திருமாறனிடமிருந்து வரவே 
அது புஷ்பாவுக்கு திருப்தியாக இருக்க வில்லை. “பெரிய மாப்பிள்ளையும் போலீஸ் தானே!” விஷ்வதீரனின் பொறுப்பான பெரிய பதவி அனைவருக்கும் தெரிய, தீரமுகுந்தனின் பதவியோ! நிலையையோ அறியாதவளாக புஷ்பா  கேக்க  
“அம்மா சும்மா இருமா அதான் மாமா வந்துடுவார்னு சொல்லுறாங்கல்ல” பிங்கி அன்னையை கடிய 
“பாத்தீங்களா சம்பந்தி சப்போர்ட்டு எங்க இருந்து வருதுன்னு?” தங்கதுரை பெருமையாக சொல்ல 
பிங்கியின் கன்னத்தில் தட்டிய திருமாறன் “சந்தோசமா இருமா” என்று வாழ்த்தி அகல புஷ்பாவும் முணுமுணுத்தவாறே அகன்றாள். 
“பின்க்ஸ் மாமா எங்க போனாரு? யாரை வேட்டையாட?” என்று அகில் பிங்கியின் காதில் குசுகுசுக்க 
“உன் நோமா வந்தா அவன் கிட்டயே கேளு” என்றவள் மண்டபத்தில் அவளுக்கான அறையினுள் புகுந்து ஓய்வெடுக்கலானாள்.
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
ஒருவாறு கல்யாணம் நல்ல படியாக நடந்து முடிய மணமக்களை வீட்டுக்கு அழைத்து செல்ல விஷ்வதீரன் ஆரோஹி மற்றும்  குழந்தைகள் ஒரு வண்டியில் ஏறி இருக்க பிங்கி மற்றும் அவளின் குடும்பம் ஒரு வண்டியில் ஏறி இருக்க மிஞ்சது தாத்தாவும், திருமாறனும், சலீம் பாயும், ஆயிஷா பேகமும் மாத்திரமே! 
“நீங்க முன்னாடி உக்காருங்க” திருமாறன் சொல்ல 
“இல்ல நான் ஆட்டோ புடிச்சி வந்துடுறேன்” ஆயிஷா சொல்ல 
“நீ என் கூட பின்னாடி உக்காருமா” தாத்தா தீரமணி சொல்ல ஆயிஷா அவரோடு அமர திருமாறன் முன்னாடி உக்கார சலீம் பாய் வண்டியை கிளப்பினார். 
பின்புறம் பார்க்கும் கண்ணாடியினூடாக ஆயிஷா பேகத்தை பார்த்து சலீம் பாய் பாட்டு படிக்க,  திருமாறனுக்கும் சிரிப்பு வர, தீரமணி கண்டும் காணாது இருக்க,  ஆயிஷா அவரை முறைக்க ஆரம்பித்தார்.
ஒருவாறு தீரமுகுந்தனும் வந்து சேர ஆழம் சுற்றி இரண்டு ஜோடிகளும் வீட்டினுள்ளே காலடி எடுத்து வைக்க எங்கிருந்தோ ஓடி வந்த ஸ்கூபி பிங்கியின் மீது தாவ ஆரோஹி பெரும் குரலெடுத்து கத்தியவாறே விஷ்வதீரனின் மேல் தாவி இருந்தாள்.

Advertisement