Advertisement

                                                     அத்தியாயம் 16
நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட முடிச்சை ஆரோஹி நினைத்தாலும் அவிழ்த்துவிட முடியுமா? விஷ்வதீரன் தான் அவளை விட்டு விடுவானா?
“விஷ் ஷ கல்யாணம் பண்ணனும், பண்ண மாட்டேன், பண்ணுவேன், பண்ண மாட்டேன்” ஆரோஹி ஒவ்வொரு ரோஜா இதழாக பிய்த்து கீழே போட கடைசி இதழ் கல்யாணம் பண்ணனும் என்று வந்து நின்றது. ஆரோஹி சின்ன வயதில் இருந்தே செய்யும் வேலை இது. முடிவெடுக்க முடியாத சமயத்தில் கடவுள் விட்ட வழி என்று கடை பிடிப்பது இந்த பூவிதழ் பறிக்கும் முறை.   தலையை பிடித்தவாறு முழங்கால்களிலேயே சாய்ந்துக் கொண்டவள் என்ன செய்வது என்று யோசிக்க 
“மம்மி” என்று கத்தியவாறே அஜய்யும், விஜய்யும் அவள் மேல் ஏறி இருந்தனர். மற்றவைகள் அனைத்தும் பின்னுக்கு செல்ல, அவர்களை அள்ளி அணைத்தவள் செல்லம் கொஞ்ச 
“என்ன மம்மி ஸ்கூல  இருந்து சொல்லாம கொள்ளாம போயிட்ட? டாடி வந்து தான் எங்களை கூட்டிட்டு வந்தாரு” அஜய் சொல்ல 
“ஐஸ் கிரீம் சாப்பிட்டோம்”  விஜய் பெருமையடிக்க 
அப்பொழுதுதான் ஆரோஹிக்கு தான் பாடசாலையிலிருந்து மதியமே முதலமைச்சரை பார்க்க சென்றதும் அங்கே நடந்த களோபரத்தால் வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளின் நியாபகம் கூட வரவில்லை என்பதும். கண்ணில் நீர் கோர்க்க அவர்களை இறுக அணைத்துக் கொண்டவள் 
“சாரி” என்று சொல்ல 
அவளின் கண்ணீரை துடைத்து விட்டவர்கள் 
“உடம்புக்கு முடியாம தானே வீட்டுக்கு வந்தீங்க, அதான் டாடி கூட்டிட்டு வந்தாங்களே! இனி டெய்லி டாடியே வாரேன்னு சொன்னாரே” அஜய் சொல்ல 
“எஸ் மம்மி. இனிமேல் டாடியும் எங்க கூடவே இருப்பாராம், எப்போ நாம டாடி கூட டாடி வீட்டுக்கு போறோம்”  விஜய் ஆவலாக கேக்க 
“போலாம் கூடிய சீக்கிரமே போலாம்” ஒரு  முடிவோடு பதில் சொன்னாள் ஆரோஹி.
**************************************************************
“ஆமா சம்பந்தி, சரி சம்பந்தி” என்றவாறே அலைபேசியை தங்கதுரை  நிறுத்த 
“யாருங்க போன்ல” தங்கதுரைக்கு காபி எடுத்து வந்த புஷ்பா 
“சம்பந்திதான் போன் பண்ணாரு இந்த பொண்ணு பாக்குறது, நிச்சயதார்த்தம் எதுவும் வேணாமாம். பொண்ண தான் ஏற்கனவே பாத்துட்டோமே, எதுக்கு வீணா செலவு பண்ணனும், கல்யாணம் வேற அடுத்த வாரமே வைக்கணும்னு சொல்லுறாங்க” தங்கதுரை யோசனையாக சொல்ல 
“அவங்க சொல்றதுலயும் உண்மை இருக்கு” என்றவள் காபியை கையில் கொடுக்க
“என்ன இருக்கு? ஒரே பொண்ணு ஜாம்,ஜாம்னு கல்யாணம் பண்ண வேணாம்” தங்கதுரை எகிற 
“இதுக்கு எதுக்கு என் மேல பாயிறீங்க, நேத்து உங்க செல்ல பொண்ணு மழைல நனஞ்சிகிட்டே வந்து ஜுரத்துல படுக்குறா. கஞ்சி அவளுக்கு இறங்காது, ஒரே நாள்ல பல நாள் பிணில படுத்தவே மாதிரி ஆகிட்டா. இந்த நிலமைல மாப்புள அவள பாத்தா கல்யாணம் வேணாம்னு ஓடிட போறாரு. ஒரு வாரத்துல கல்யாணம் வைக்கணும்னு சொல்லுறாங்க, ஊரைக்கூட்டி சாப்பாடு போட்டா மட்டும் சந்தோசமா வாழ்வாங்களா? பெத்தவங்க நாம ஆசிர்வாதம் பண்ணாலே போதும். என் அம்மா அக்காவ சபிச்சு சபிச்சே போய் சேர்ந்துட்டாங்க, அவங்க விட்ட சாபம் அக்காவும் அல்பாயுசுல போய்ட்டா, அவ பொண்ணாச்சும் புருஷன் கூட வாழ்றாளா? தாலிய கட்டாம, அவரு ஒரு இடத்துல, அவ ஒரு இடத்துலன்னு பிரிஞ்சி தானே இருக்காங்க. ரெண்டு பேருக்குமே மாங்கல்ய தோஷம் இருக்கு அத நிவர்த்தி பண்ண பூஜ செய்யணும் னு ஜோசியர் சொன்னாரே! கல்யாணம் வேற ஒரு வாரத்துல வச்சி கிட்டு, எவ்வளவு வேலையைத்தான் நான் ஒத்த பொம்பளையா பாக்குறது. விஷ்வா மாப்புள ஆரோஹிக்கு என்ன வேணுமோ வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டாரு. அதுக்காக சும்மா எல்லாம் விட முடியாது. வதனிக்கு என்ன வாங்குறோமோ எல்லாம் அவளுக்கும் வரணும்” கறாராக சொல்லியவள்
“ஒரு பொண்ணாம் ஒரு பொண்ணு என் அக்கா பொண்ணும் எனக்கு பொண்ணுதான்” முணுமுணுத்தவாறே உள்ளே செல்ல 
“அப்பாடா இத நான் புரிய வைக்க முயற்சி செஞ்சிருந்தா, என்ன திட்டி தீர்த்திருப்பா. வாய் தவறி ஒரே பொண்ணுன்னு சொல்லிட்டேன், அதுக்காக என்னமா பேசுறா? கல்யாணம் முடியட்டும் டி நம்ம கல்யாண நாள நியாபகப்படுத்துறேன்” தங்கதுரை கருவிக்கொண்டு வெளியே செல்ல 
இவர்கள் பேசியவற்றை தனது அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பிங்கியின் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிய “இந்த கருமம் புடிச்ச காதல் எதுக்கு என் மனசுக்குள்ள வந்தது? பேசாம அம்மா அப்பா பாத்த பையனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்” புஷ்பா வைத்து விட்டு சென்ற மாப்பிள்ளையின் புகைப்படம் கவரில் போட்டது போலேயே மேசையில் இருந்து அதற்குள் இருப்பவன் அவளை பார்த்து  சிரித்தான். 
 அம்மா முடியலையே! துருப்புடிச்ச பிளேடு வச்சி அறுக்குறமாதிரி வலிக்குதே! நெஞ்ச யாரோ கசக்கி புழியிற மாதிரி இருக்கே! கூரான கத்தியால் குத்துற மாதிரி இருக்கே! மரண வலிகூட வலிக்காது போலயே!  நான் செத்துட்ட மாட்டேனா?” ஜூரமும் அவளை படுத்த தீரனால் கிடைத்த கரடி பொம்மையை கட்டிக்கொண்டு புலம்பியவள், 
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை….
பொம்மையின் கழுத்தை இறுக்கி தீரனாக நினைத்து “டேய்  பனமரம்.. கத்தி இல்லாம ரெத்தமில்லாம என்ன செஞ்சிடல்ல நீ? இருக்குடா உனக்கு. உன் கண்ணுக்கு நா பொண்ணாவே தெரியலையா? யாரடா அவ? உன்ன மயக்கி என் கிட்ட இருந்து கடத்திட்டு போனவ? நல்லா இருக்க மாட்டாடா? நல்லா இருக்க மாட்டா? நாசமா போக போறீங்க? கல்யாணமன்னைக்கு  அவ எக்ஸ் லவர் கூட ஓடி போய்டணும். இந்த பிங்கிய யாருனு நினைச்ச? நீ இல்லனா? அழுது கிட்டு மூலைல உக்காந்து சோக கீதம் வாசிப்பானு நினைச்சியா? பாக்குறேண்டா? நீயா? நானான்னு பாக்குறேன். நா சிந்துர ஒவ்வொரு கண்ணீர் துளி போல என் இதயத்த, சில்லு சில்லா உடைச்சிட்டல்ல. ஐயோ லைப்ல இவள மிஸ் பண்ணிட்டோமேன்னு உன்ன கதற வைக்கல என் பேரு பிங்கி இல்லடா. டேய் லூசு போலீஸ், எதுக்குடா? என் லைப்ல வந்த? எதுக்குடா உன் மேல எனக்கு காதல் வந்துச்சு” என்று தீரனை திட்டி தீர்த்தவள், புலம்பியவாறே மீண்டும் அழ  
“விதிப்படி எல்லாம் நடக்கட்டும்” என்று மனதுக்குள் நினைத்தவள் உடல் வேறு படுத்த மருந்தின் வீரியத்தால் சுருண்டு படுத்துக்க கொண்டாள்.  
*******************************************************************
அறையினுள்ளே விஷ்வதீரனுடன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரோஹி. வெளியே அஜய்யும், விஜய்யும் “டாடி” என அழைப்பதும் அதை தொடர்ந்தது விஷ்வதீரன் அவர்களை செல்லம் கொஞ்சுவதும் சத்தம் கேக்க ஒரு வித இனம் புரியாத பதட்டம் தொற்றிக் கொள்ள, வெளியே செல்வோமா? வேண்டாமா? என்று மனதோடு பட்டிமன்றம் நடாத்தியவள் கால்கள் பலமிழப்பது போல் தோன்ற கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட தான் கொண்டு வந்த பொருட்களை கொடுத்து குழந்தைகளை சமாதானப் படுத்தி விட்டு விஷ்வதீரன் அறையினுள் வந்து தாப்பாள் போட்டான். 
ஆரோஹி தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் விதமே சொன்னது அவள் என்ன சொல்ல அழைத்திருப்பாள் என்பதை. அவளிடம் எவ்வாறு பேசுவது? என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று தலையை கோதியவாறே ஒரு பெருமூச்சு விட்டவன் அவள் தோள் மீது கை வைத்து “ஆரா” என்றழைக்க   
அவனின் தொடுகையில் தலைநிமிர்த்தி பார்த்தவள் அவனின் கையை தட்டி விட்டு “என்ன தொட்டு பேசாதே விஷ்” என்று சொல்ல விஷ்வதீரனின் முகம் சுருங்கியது. 
“ஆரா உனக்கு என்ன பிரச்சினை? என்ன கல்யாணம் பண்ணுறதா? இல்ல நானா?” 
அவனை ஆழ்ந்து பார்த்தவள் “தெரியல” என்று குலுங்கிக் குலுங்கி அழ விஷ்வதீரன் கையை கட்டிக்க கொண்டு அவளை பாத்திருந்தானே ஒழிய அவளை அணைக்கவோ, ஆறுதல் படுத்தவோ முயற்சிக்கவில்லை.
“நீயெல்லாம் ஒரு பிரெண்டாடா? அழுது கிட்டே இருக்கேன், கண்ணீரை துடைக்கணும்னு தோனலயா? அழாதேன்னு  கூட சொல்ல மாட்டியா?” கண்களை துடைத்தவள் குழந்தை போல் கேக்க  
சிரிப்பை அடக்கியவாறு “நீ தானே பக்கத்துல வர வேணாம், தொட்டு பேசாதேன்னு சொன்ன?’ 
திருதிருவென்று முழித்தவள் “அவனை வர சொன்னது பேச, அழுது வீனா ஸீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்க” என்று மனசாட்ச்சி கேள்வி கேட்க 
“விஷ் நா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” மென்று முழுங்கியவள் எப்படி ஆரம்பிப்பதென்று தாவணியின் நுனியை திருக
ஒரு கதிரையை அவள் முன்னாள் இழுத்து போட்டு அமர்ந்தவன் சுவிங்கமொன்றை வாயினுள் திணித்துக் கொண்டு “சொல்லு” “நான் எதற்கும் தயார்” எனும் விதமான பார்வையை வீச அவளின் மௌனம் பூகம்பமாக தோன்றியது விஷ்வதீரனுக்கு.
“ஆரா உன் மனசுல என்ன இருக்குனு நீ சொன்னா தான் எனக்கு புரியும். பழசெல்லாம் மறந்து ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்கிறதுல உனக்கென்ன கஷ்டம்? நீ எப்போ தாலிய கழட்டி கொடுத்துட்டு போய்ட்டியோ அன்னைல இருந்து நான் சாமிய கும்பிட்டதே இல்ல. ஆனா எப்போ உன்ன நான் சந்திச்சனோ நம்மள படைச்சவன்  கணக்கு என்னனு எனக்கு புரிய ஆரம்பிச்சது. உன்ன பிரிஞ்சி மனம் ரணமாகி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்டி” ஆரோஹி ஏதோ பேசவர “உடனே நான் தான் உன்ன லவ் பண்ணவே இல்லையேன்னு சொல்லிடாத, நீ லவ் பண்ணலானா என்ன உனக்கும் சேர்த்து நான் லவ் பண்ணுறேன்” 
“இவன நான் பேச வர சொன்னா இவன் லூசு மாதிரி ஏதேதோ பேசுறான்” ஆரோஹி அவனை முறைத்தவாறே எழுந்து கொண்டவள் 
“என்னால உன்ன மட்டுமல்ல வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது?” உறுதியான குரலில் அவள் சொல்ல 
ஆறு வருடங்களுக்கு முன் நடந்ததை பற்றி சொல்வாளா? எதிர் பார்த்து காத்திருந்தாலும் மிக சாதாரணமாக  என்ன பிரச்சினை?” மிகவும் தாழ்மையாக ஒலித்தது விஷ்வதீரனின் குரல் 
அவனின் கேள்விக்கு பதிலளிக்காது “ஹாவ் யு எவர் பீன் ஹவிங் செக்ஸ் வித் எ கேர்ள்?” அவனின் கண்களை நேராக பார்த்து நிறுத்தி நிதானமாக ஆரோஹி கேக்க  
“இல்ல” உடனடியாக பதில் வந்தது விஷ்வதீரனிடமிருந்து {இப்போ நீ எதுக்கு இல்லனு சொல்லுற}
“இதத்தாண்டா எதிர்பார்த்தேன்” என்று வந்த புன்னகையை உதட்டிலே மறைத்தவள் “பட் ஐ ஹாவ் டன் இட்” 
“பண்ணாமாதான் குழந்தை பெத்து கிட்டியா? காட்டமாக பதில் வந்தாலும்  “இது தான் உனக்கு பிரச்சினையா? வா இப்போவே பண்ணலாம். இல்ல வேற பொண்ணு ஏற்பாடு பண்ணி பண்ணிட்டு வரேன்” அன்று நடந்ததை அவள் வாயால் தெரிந்து கொள்ள அவளை வெறுப்பேத்தினான்.  
“நீ இப்படி சொல்லுவனு எதிர்பார்த்தேன்” என்றவள் ஜன்னல் பக்கம் திரும்பி நின்று கொள்ள 
உண்மைய சொல்லுவான்னு பார்த்தா சொல்லா மாட்டேங்குறாளே!  இவ என்ன சொல்ல வந்திருப்பா? நா கெஸ் பண்ணது தப்பா? ஆமான்னு சொன்னா பத்து வருஷமா என்ன லவ் பண்ணுறேன்னு சொல்லிக் கிட்டு நீ இந்த வேல தான் பாக்குறியா?  என் கேரக்டரையே கொச்ச படுத்தி கல்யாணத்த நிறுத்த பார்ப்பா, இல்லனு சொன்னா அவ லைஃப  காரணம் காட்டுவானு இப்படி பேசினா இவ என்ன சொல்லவரா? ஒண்ணுமே புரியல” ஆரோஹி எந்த மாதிரி பேசி கல்யாணத்தை நிறுத்துவாள் என்று போலிஸான அவனுக்கு தெரியாதா என்ன? அவளை புரிந்துகொள்ள முடியாமல் விஷ்வதீரன் யோசனையில் விழ 
“அந்த கேள்வியை கேட்டதே.. ஆமா என்று சொன்னாலும் இல்லனு சொன்னாலும் உன்ன மடக்கத்தாண்டா” என்று கிண்டலாக புன்னகைத்தவள். “ஆரோஹி அவன் ஒரு போலீஸ் கவனமாக பேசு” என்று மனசாட்ச்சி நியாபகப்படுத்த நொடியினில் முகத்தை மாற்றிக் கொண்டவள் அவன் புறம் திரும்பி “எதுக்கு யாரோ பெத்த பசங்கள உன் பசங்கனு சொல்லுற?” விஷ்வதீரனுக்கு உண்மை தெரியாது என்றெண்ணியவள் கல்யாணத்தை நிறுத்த அடுத்த ஆயுதமாக குழந்தைகளை முன் நிறுத்தினாள்  
“நீ என் பொண்டாட்டி, உன் பசங்க என் பசங்க” மனத்தால் உணர்ந்து சொல்ல
“இப்போ பாசம் காட்டுற நீ நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆனா பிறகு அனாத ஆஸ்ரமத்துல சேர்க்க சொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்?”  ஆரோஹியின் குரல் கடுமையாக ஒலித்தது.
அவளை தன் புறம் இழுத்து நிறுத்தியவன் கோபம் கணக்க “எங்க என் கண்ண பாத்து சொல்லு? நான் அஜய், விஜய் கிட்ட காட்டுற பாசம் பொய்னு?” 
அவனின் மனதை ரணப் படுத்தவே உதட்டை சுளித்து “யாரோ பெத்த குழந்தைகள் தானே! உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா உன் பாசம் பின்னாடி கதவை திறந்து வெளிய ஓடிடும்”  
“என் பேர்ல உள்ள சொத்தையெல்லாம் பசங்க பேருக்கு மாத்திடுறேன்” அவள் அவனை ஒரு நம்பாத பார்வை பார்க்க “நமக்கு வேற புள்ளயே வேணாம். போதுமா?” அவள் மீது கோபத்தை காட்ட முடியாமல் வாயிலுள்ள சுக்கிங்கம் அரைப்பட 
“நான் உன்ன நம்ப மாட்டேன் விஷ். பத்து வருஷமா என்ன லவ் பண்ணுறேன்னு சொல்லுற? ரெண்டு செக்கன் தனிமை கிடைச்சாலும் என்ன கிஸ் பண்ணுறதும், ஹக் பண்ணுறதும், உன் சில்லமிசங்கள் சகிக்கல” வேண்டுமென்றே முகம் சுளித்தவள் “கல்யாணம் என்ற பேர்ல நீயும் நானும் தனியா ஒரே ரூம்ல இருந்தா நீ என்னெல்லாம் பண்ணுவ?” ஆவேசமாக ஆரோஹி கத்த
கோவம் வருவதற்கு பதிலாய் அவள் மனநிலையை நினைத்து இரக்கமாக அவளை பார்த்தவன் “உன் பிரச்சினை என்னனு எனக்கு புரியுது. என் விரல் நுனி கூட உன் மேல படாது. இது என் காதல் மேல சத்தியம். வேற ஏதாவது இருக்கா?” என்று எழுந்துக்கொள்ள 
அவன் கண்ணில் இருந்த உறுதியை கண்டு திகைத்தவளின் தலை “இல்லை” என தானாகா ஆடியது. 
“கல்யாணமன்று காலையில் என் பேருல உள்ள எல்லா சொத்தும் நம்ம பசங்க பேர்ல மாத்தி, கார்டியனா உன்ன போடுறேன் அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி நீ ட்ரின்க் பண்ணி போதைல இருந்தப்போ உன் கூட ஹோட்டல் ரூம்ல இருந்தது வேறு யாருமில்ல நான் தான் பேபி” என்று அவளை ஆழ்ந்து பார்க்க தாவி வந்தவள் அவன் சட்டையை இழுத்து வலது புற தோள்பட்டையை பார்க்க அங்கே வட்ட சிறிய பொட்டளவில் ஒரு மச்சம் இருக்க 
“நீ தானா அது” கண்களை அகல விரித்தாள் ஆரோஹி.
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் காவியம்
“அந்த செத்து போன ஸ்கூல் டீச்சர் ஜோதியோட பிரெண்டு, அவ பேரென்ன? ரேகா. ஆ அவங்க போட்டோ வ சீசீடிவி மாட்ச்சிங்ல போட்டு தேட சொன்னேனே ஏதாவது இம்ப்ரூமண்ட் இருக்கா?” தீரமுகுந்தன் புருவம் நீவ 
“இல்ல சார். ஒன்னு அந்த பொண்ணு ஊர விட்டு போய் இருக்கணும், இல்ல எங்கயாச்சும் ஒழிஞ்சிகிட்டு இருக்கணும்” மிதுன் சலிப்போடு  சொல்ல 
“கண்டிப்பா ஊரை விட்டு போகல, பயந்து பதுங்கி இருக்குறாங்கனு தோணுது” புருவம் நீவியவன் “யாருக்கு பயந்து என்றுதான் தெரியல. கூடிய சீக்கிரம் கண்டு புடிச்சிடலாம்” என்றவன், “நாம பொருத்திய கேமரால சந்தேகப்படும்படியான எவனாச்சும் சிக்கினானா?  
“இல்ல சார்” மிதுன் வெறுமையான குரலில் சொல்ல 
அவனின் தோளில் தட்டியவன் “டோன்ட் ஒர்ரி, மாட்டாம எங்க போய்ட போறான்” என்று புன்னகைக்க தீரனின் அலைபேசி அடித்தது. யார் அழைப்பதென்று பார்த்தவன் சென்னை தலைமை அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை காண்பிக்க இயக்கி காதில் வைத்தான். 
“சார் தொந்தரவுக்கு மன்னிக்கணும் நான் இந்தர் பேசுறேன்” 
“என்ன இந்தர், சொல்லுங்க” 
“சார் யாரோ அரசியல்வாதிகளை இலக்காகிக் கொண்டு ஒரு ரேடியோ சேனல் நடத்துறாங்க. அதுல எல்லா அரசியல்வாதிகளோட முகமூடிகளை கிழிகிழினு கிழிக்கிறாங்க” சொல்லும் போதே இந்தரின் குரலில் கேலிச்சிரிப்பை உணர்ந்தான் தீரன். 
“அதுக்கு உடனே நடவடிக்கை எடுங்க? யாருன்னு கண்டு பிடிங்க? போலீஸ் தூங்குதானு? அரசியல்வாதிகள் கோசம் போடுறாங்களா? எப்போதிலிருந்து இந்த சேனல் ஆரம்பிச்சு இருக்கானுங்க” என்னடா இந்த புதுக் தலைவலி என்று புருவம் நீவியவன் மறுமுனையில் பதிலுக்காக காத்திருக்க 
“ரெண்டு நாள் தான் ஆகுது சார். நாங்க கண்டு புடிச்ச வர இருப்பது, முப்பது வருஷத்துக்கு முந்தின டெக்னோலஜிய  வச்சி ஒலிபரப்புறாங்க. அந்த டெக்னோலஜி இப்போ இல்ல. அந்த ரேடியோ ஸ்டேஷனோட பேர் என்ன தெரியுமா? சார். சொன்னா சிரிப்பீங்க”
இந்தர் சொல்ல தீரனின் முகத்திலும் பெரியதொரு புன்னகை மலர்ந்தது. 
“யார் சார் போன்ல புது கேஸா?’ மிதுன் பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து கண்ணை எடுக்காமலேயே கேக்க 
“யாரோ ஒரு பெருசு, கொள்ளையர்களுக்கிட்ட இருந்து நாட்ட காக்க ரேடியோ ஸ்டேஷன் ஆரம்பிச்சு இருக்கு. அவரை கண்டு பிடிக்கணுமாம்” தீரன் புன்னகைக்க 
யாருடா அந்த இந்தியன் தாத்தா?” மிதுனின் வாய் தானாக சொல்ல, தீரனின் முகத்திலும் புன்னகை
“ஒருத்தன் நல்லது பண்ணா உடனே அவன அழிக்க துடிக்கிறானுங்க, என் கிட்ட கேட்டா யு டியூப் சேனல் வச்சி கொடுத்திருப்பேன்” மிதுன் ஆதங்கப்பட
“அந்த சேனலுக்கு பேர் என்ன தெரியுமா?” தீரமுகுந்தன் சொல்ல மிதுன் அவனை ஆவலாக பார்த்தான். 
“ஒட்டுக்கேட்கலாம் ஓட்டுப்போடலாம்” தீரன் சொல்லியவாறே சிரிக்கலானான்.

Advertisement