Advertisement

                                               அத்தியாயம் 14
“டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?” பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு
“யார் டா தீரமுகுந்தன்?” ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள் பிங்கி
“தீரன் சார் தான் இப்போ இருக்கிற ஸ்பெஷல் க்ரைம் யூனிட்ல ஸ்பெஷல் ஆஃபீசர். அவர் ஒரு ஹேக்கரும் கூட. என்ன மூள தெரியுமா? சிட்டில உள்ள மொத்த சீசீடிவியையும் இனச்சி ஒரு டிவைஸ் உருவாக்கி இருக்குறாரு. யாரும் கேமராவ ஜாம் பண்ண கூட முடியாது, வெளில பாக்கும் படியா கேமரா இருக்குனு உடைச்சாலும் அது ஒன்லேயே இருக்கும், குற்றவாளி எப்படியெல்லாம் யோசிக்கிறான்னு யோசிச்சு மனுஷன் வேல பாத்திருக்கிறாரு” அகில் பெருமையாக சொல்ல
“ஸயன்டிஸ்ட்டா?”  பிங்கி
“போலீஸ்”
“நீ சொல்லுறது புரியல”  
“சினிமால வார ஹீரோ இல்ல அவரு மல்டி டேலண்ட் உள்ள ஹீரோ. போலீஸ்ல க்ரைம் பிரான்ச், சைபர் க்ரைம் னு சொல்லுவோம்ல? அந்த எல்லா டிபார்ட்மென்ட்டையும் இனச்சி ஸ்பெஷல் க்ரைம் டிவிஷனா மாத்திட்டாங்க”
“ஆமா பேப்பர்ல படிச்சேன்”
“அது தீரன் சாராலதான் சாத்தியமாச்சு. அவர் கம்பியூட்டர் பீல்டுக்குல இருந்தா எங்கயோ போய் இருப்பாரு. போலீஸ் தான் ஆகணும்னு ரெண்டையும் சேர்த்து கத்துக்கிட்டாரா, ரெண்டையும் இனச்சி வேல பாத்து கிட்டு இருக்கிறார்”
“என்னென்னமோ சொல்லுற. சுத்தமா புரியல” பிங்கி தலையை சொரிய
“போ இன் ஒன் னு வச்சிகேயேன். ஒரே ஆளு ஒரே நேரத்துல நாலு வேல பாத்தா எப்படி இருக்கும்”
“அவ்வளவு  பெரிய அப்பா டக்கரா?”  
அகில் அவளை முறைத்தவாறே “உனக்கு புரியல்னு லூசு மாதிரி பேசாத, அவரை ஒரு தடவையாச்சும் பார்த்து கை கொடுக்கணும் எங்குறது தான் என் ஆச” அகில் பெருமையாக சொல்ல
“எதுக்கு வெயிட் பண்ணுற வா அவர் வீட்டுக்கே போய் பேசலாம்” பிங்கி எழுந்துகொள்ள
“உனக்கு அவர் யார்னு தெரியுமா? எப்படி இருப்பார்னு தெரியுமா?”
“ஏன் உனக்கு தெரியாதா?” நக்கலாக பிங்கி கேக்க
“அவரோட ஒரு போட்டோ கூட எங்கேயுமில்ல, பேப்பர், டிவி, சோசியல் மீடியானு தேடி பாத்துட்டேன்” அகில் சோகமாக சொல்ல
சத்தமாக சிரித்த பிங்கி “அப்போ அது போலீஸ் பரப்பின பொய்யா கூட இருக்கலாம் அப்படி ஒருத்தன் இந்த உலகத்துலேயே இல்லாம இருக்கலாம்”
யோசனைக்குள்ளான அகில் “கண்டிப்பா இருக்கிறார். அதுவும் இந்தியால. ஆனா இப்போ எங்க? என்ன செஞ்சிகிட்டு இருக்கிறார் என்பது தான் தெரியல”
“ஒரு தள்ளாடும் கிழவனா தான் இருப்பாரு அதான் மூஞ்ச காட்டாம இருக்கிறாரோ?”
“இல்ல அவர் பாக்குற வேல, சாதனைகள் எல்லாம் வச்சி பாத்தா முப்பத்துக்குள்ள தான் இருக்கும்”
“இருக்கும், இருக்கும் நீ அவரை பாக்க போய் உன் படிப்புல கோட்ட விட்டுடாத” பிங்கி கிண்டலடிக்க அவளை முறைத்தான் அகில்.
இன்றோ அவன் கனவு நாயகன், ரோல் மாடல் அவன் கண்முன்னால். இது கனவா என்று ஆச்சரியமா இருக்க கையை கிள்ளினான் அகில்.
“ஆ..” என்று கத்திய பிங்கி “தடிமாடு அது என் கை டா” என்று அகிலின் தலையில் கொட்ட
“ஹிஹிஹி” என்று இளித்தவன் தீரமுகுந்தனை கண்ணிமைக்காது பாத்திருந்தான்.
“டேய் அகில் இப்படி சைட் அடிக்காத அவனா நீ னு கேட்டுட போறாங்க” பிங்கி குசுகுசுக்க அவள் பக்கம் திரும்பினானில்லை.
“டேய் எனக்கென்னமோ இவன் பொய் சொல்லுறான்னு தோணுது” பிங்கி சத்தமாக சொல்ல
“வேணும்னா என் ஐடி கார்ட தரவா” தீரமுந்தன்
“அவ கெடக்குறா கூறு கெட்டவ, விடுங்க சார் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன” என்ற அகில் தீரமுகுந்தனை பார்ப்பதை விடுவதாய் இல்ல.
அவன் பிங்கியை பேசியதில் அவளின் மூக்கு நுனி சிவக்க ஆரம்பிக்க அவளை ரசனையாக பாத்திருந்தான் தீரமுகுந்தன்.
மிதுன் ஹார்ன் அடிக்கவே வந்த வேலை நியாபகத்தில் வர “ரித்திகா எங்க?” என்று கேக்க
“அவங்க வரமுடியாத சிட்டுவேஷனாம் சார்” என்று மிதுன் கலவரமாக சொல்ல புருவம் நீவிய தீரன் பிங்கியை பார்த்தான்.
ப்ளூமூன் ஹோட்டல் பார் அந்த ஹோட்டலின் இருபதாம் மாடியில் இருக்க மின்தூக்கியின் கதவு திறக்கும் போதே நுழைவு சீட்டை பரிசோதிக்க இரண்டு பேர் இருந்தனர்.
தீரமுகுந்தன் பிங்கியை அணைத்தவாறே நுழைவு சீட்டை நீட்ட அதை பரிசோதித்தவர்கள்  உள்ளே செல்ல அனுமதித்தனர்.
ரித்திகா வராததால் உள்ளே செல்ல முடியாது, இன்று விட்டால் மீண்டும் எப்போது அனுமதி கிடைக்குமோ என்றிருந்தவனுக்கு பிங்கியை பார்த்ததும் நொடியில் அந்த எண்ணம் தோன்ற
“உன்னால எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” தீரமுகுந்தன் பிங்கியை ஏறிட
“சொல்லுங்க சார் என்ன செய்யணும்” அகில் தான் பதில் சொன்னான்.
“பர்த்டே பார்ட்டி எந்த ப்ளோர்?”  
“மூனாவது”
“அகில் உன்னால முடியாது உன் அக்காவை கேட்டு சொல்லு”
“அவ செய்வா சார். என்ன பண்ணனும்”
இருவரையும் முறைத்த பிங்கி “அத நான் சொல்லணும். என்ன செய்யணும்” முடியாது என்று உள்மனம் சொல்ல சொன்னாலும் காதல் மனமோ அவனின் அருகாமையை ஏங்கிநிற்க தானாய் தலையை விட்டாள் பிங்கி.
குழந்தையை கடத்திய விஷயத்தில் பிங்கி சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டாலும் பாருக்குள் செல்ல ஒரு பெண் தேவை இப்பொழுது இவளை தவிர யாரும் உதவ முடியாது என்றே தீரன் அவளை அழைத்தான்.
“அகில் நீ பார்ட்டி முடிஞ்சி இங்க வந்து மிதுன் கூட இரு, பார்ட்டில எதுவும் சாப்பிடாத” கொஞ்சம் அதட்டலாகவே  அவன் குரல் ஒழிக்க மண்டையை ஆட்டினான் அகில்.
“சார் கேமராவ ஒன் பண்ணுங்க நான் லைவ் வா பாக்குறேன்” மிதுன் சொல்ல
அடுத்த நொடி மின் தூக்கில் மூவரும் இருக்க, அகில் மூன்றாம் மாடிக்கு செல்ல, இவர்கள் இருபதாம் மாடியை நோக்கி.
பிங்கி ஒரு லோங் பிரோக் அணிந்திருக்க அவளை திருப்தியாக பார்த்தவன் “ஏதோ குறையுதே” என்றவாறே அவளின் லூசாக விட்ட முடியை தூக்கி கொண்டையிட்டு பழைய சீனர்கள் முடியை கட்டும் குச்சியால் அவளின் முடியை கட்டி இருந்தான்.  “என் கூடவே இரு. மறந்தும் எதுவும் சாப்பிடாத” என்று சொல்லியவன் கதவு திறக்கும் முன் அவளை இழுத்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்தவாறு நுழைவுச் சீட்டை நீட்ட அவனின் மூச்சுக்கு காற்று பட்டு தேகம் சிலிர்க்க பிங்கி தான்  எழும் தாபத்த்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கலானாள்.
பெண்களின் உதவி தேவைப்படும் போது பெற்றுக் கொள்பவன், அவர்களை தொட்டு பேசினாலும் பிங்கியின் மேனி சிலிர்த்ததை உணர்ந்து கொண்டாலும் “இவ தான் போலீஸ் இல்லையே அதான் தொட்டதும் சிலிர்த்துகிறா” காரணம் கண்டு பிடித்தவன் வந்த வேலையை கவனிக்கலானான்.
   
உள்ளே செல்ல செவிப்பறையை கிழிக்கும் இசையும், மங்கலான ஒளிவிளக்குகளும் ஏற்றப்பட்டிருக்க சிலர் மேசையில் அமர்ந்தவாறு மது அருந்துவதும், இன்னும் சிலர் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு நடமாடிக்கொண்டும், இன்னும் சிலர் தங்களது இச்சையை தீர்த்துக்கொண்டுமிருக்க, பாரிலிருந்து போன் செய்தபடியால் அந்த லேண்ட்லைன் போன் எங்க இருக்கிறது என்று பாத்தவன்  இந்த கூட்டத்தில் அந்த போன் செய்த நபரை எப்படி கண்டு பிடிப்பது என்று தீரன் யோசிக்கலானான்.
அந்த பாருக்குள் சீசீடிவி  இருக்கவில்லை. அதுவே இங்கு எது நடந்தாலும் யாரும் அறியமாட்டார்கள் என்று பறை சாற்ற மர்மமான புன்னகை தோன்றியது தீரனின் முகத்தில்.
“ச்சி கருமம் கருமம் ரூமுக்குள்ள பண்ண வேண்டியத பப்லிக்கா பண்ணுதுங்க, எரும மாடுங்க” பிங்கி முகம் சுளிக்க அதை காதில் வாங்காது அவளை இழுத்துக் கொண்டு நகர
“எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்த? முதல்ல இடுப்பில இருந்து கைய எடு” என்று முகம் சிவந்தவள் “அந்த ரித்திகா வந்தாலும் இப்படித்தான் ஒட்டிக் கொண்டு அலைஞ்சிருப்பான்” என்ற எண்ணம் தோன்றி அவன் மேல் கட்டுக்கடங்காத கோவம் தலைத்தூக்க அவன் போலீஸ் என்றும், என்ன வேலையாய் வந்தோம் என்பதையும் நொடியில் மறந்தாள்.
அவளின் திடீர் கோவம் எதனால் என்பதை புரியாமல் குழம்பியவன் இடுப்பில் இருந்து கையை எடுத்து புருவம் நீவியவாறே “ரெண்டு வாரமா வெயிட் பண்ணி உள்ள வந்திருக்கிறேன், அரைமணி நேரத்தில் போலாம். டான்ஸ் ஆடுவதை போல் இந்த கேமராவை மேல உள்ள கடிகாரத்தில் வை அது தானாய் ஒட்டிக்கும்” என்று காதில் கூறியவன் மினி கேமராவை கையில் கொடுக்க
“இவன் பக்கா போலீஸ் தான் வந்த வேல முடியாம வர மாட்டான் போல” என்று முணுமுணுத்தவளின் காதுக்குள் அவன் காதுமடல் உரசி பேசியவை புகவே இல்லை. நொடியில் தான் மேலே தூக்கப்படுவதை அதிர்ச்சியானவள் கையில் உள்ள பொருள் என்ன என்று பார்க்க உள்ளே நுழைய முன் மிதுன் சொன்னது நியாபகத்தில் வரவே, கையை சுழற்றி கடிகாரத்தை தொட்டு விட்டு கையை எடுக்க அது ஒட்டிக் கொண்டது.
அவனின் அதீத அருகாமை பிங்கியை நிலைகுலைய செய்ய, சுற்றுப்புற காதல் காட்ச்சிகளும் உணர்ச்சியை கிளறி இருக்க மனதில் பயமும் குடிகொண்டது.
அவனோ அவளின் பாதுகாப்பை கருதி, யாரும் அவளை நெருங்கி சில்மிஷங்களை செய்து விடாமல் இருக்க அவளின் இடுப்பை சுற்றி தனது வலிய கையை இட்டு இறுக்கி அணைத்திருக்க அது பிங்கிக்கு பெரும் அவஸ்தையாகவே இருந்தது.  
“அடுத்தது எங்க” இந்த சத்தத்துல இப்படித்தான் பேச முடியும் என்று அவனை அணைத்து காதுக்குள்ளே கேக்க
பார் பக்கம் சென்றவர்கள் மதுவை ஆர்டர் செய்தவாறே அந்த மேசையின் மூன்று இடத்தில் கேமராவை பொருத்தினர்.
ஒவ்வொரு மேசையிலுமுள்ள பிளாஸ்டிக்கிலான பூச்சாடிகளே இருக்க அவைகளிலும் பொருத்தினர்.
“எல்லாம் ஓகே வா? இப்போ போலாமா?” இங்கிருந்து வெளியேறினால் போதும் என்று பிங்கி இருக்க
“அங்கே பார் அந்த பக்கம் ஒரு பால்கனி இருக்கு வா பாக்கலாம்” என்று அவளை அழைத்து செல்ல அந்த கண்ணாடிக் கதவு மூடப்பட்டிருக்க வெளியே எட்டிப் பார்த்தவனுக்கு நகரத்தின் இரவுத்தோற்றம் தெளிவாக தெரிந்தது.
தீரன் எதுக்கு இது? என்ற யோசனையில் இருக்க பிங்கியோ சர்வர் கொண்டு வந்த ஒட்காவை தண்ணீர் என்று அருந்தி விட்டாள்.
“டேஸ்ட் ஒரு மாதிரி தான் இருக்கு, ஸ்ப்ரைட்டோ?’
“டி என்னத்தடி குடிச்சி தொலச்ச” அவளின் கையில் இருந்த கிளாஸை பார்த்து கலவரமடைந்தவன் அவளை அதட்ட
“ரொம்ப தாகமா இருந்தது தண்ணி குடிச்சேன். ஆனா டேஸ்ட்டு வேற மாதிரி இருக்கு” என்று இளிக்க
“ஒரு நொடி அவளின் மேல் வைத்த கவனம் சிதறியதால் இந்த நிலை. தன்னையே நொந்து கொண்டவன், அதில் வேற ஏதாவது கலந்திருந்தால்? பழக்கமில்லாதது உள்ளே சென்றால் என்ன மாதிரி இவ நடந்து கொள்வாளோ?” என்றெல்லாம் எண்ணம் தோன்ற அவளை இழுக்காத குறையாக வெளியேறினான்.
பிங்கியை கையில் ஏந்தியவாறு தீரன் வரவே
“என்னாச்சு சார்” என்றவாறே மிதுனன் கார் கதவை திறந்து விட அவளை உள்ளே படுக்க வைத்தவன், அகிலுக்கு அழைத்து தாங்கள் வெளியே வந்து விட்டதாக கூற அவனும் வந்து சேர சீக்கிரட் மிஷன் கட்டிடத்தை நோக்கி வண்டியை செலுத்துமாறு மிதுனுக்கு சொல்ல, அகிலும் தனது வண்டியில் அவர்களை தொடர்ந்தான்.
அழைப்பு மணியடிக்கவே “இந்த நேரத்துல யாரு” என்றவாறு ஆயிஷா கதவை திறக்க
“என்ன ஆயிஷாம்மா யாருன்னு பாக்காம கதவ திறக்குறீங்க, பேட் ஹாபிட்” விஷ்வதீரன் புன்னகைக்க
“போலீஸ்காரன் வீட்டுக்கு வந்து மிரட்ட யாருக்கு தைரியம் வரும், சாப்பிட்டீங்களா?  தம்பி” ஆயிஷாவும் புன்னகைக்க  
இல்லை என்று தலையசைத்தவன் “குட்டிஸ் எங்க? தூங்குறாங்களா?”
“ரூஹி கத சொல்லி கிட்டு இருக்கா, நீங்க வந்து சாப்பிடுங்க”
“அவங்கள பாத்துட்டே வரேன்” என்றவன் அறைக்குள் நுழைய, அங்கே ஆரோஹி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்க இவனை கண்ட குழந்தைகள் “டாடி” என துள்ளிக் குதித்தவாறே அவன் மேல் பாய்ந்தனர்.
“எதுக்கு இந்த நேரத்துல வந்திருக்கிறான்?  புருஷன்னு சொல்லுறவன் அந்த உரிமையை நிலைநாட்ட வந்திருப்பானோ? ” மனதினுள் ஆழிப்பேரலையாக கற்பனைகள் விரிய அச்சத்துடன் அவனை பார்க்கலானாள்.
அவளின் பார்வையை கண்ட விஷ்வதீரன் அவள் என்ன நினைக்கிறாள் என்று நொடியில் புரிந்துக் கொண்டு மனதால் பெரும் அடிபட்டு போனான்.
சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்குள் பிங்கியை தூக்கியவாறே தீரமுகுந்தன் நுளைந்து “இவளோட ப்ளாட் செக் பண்ணுங்க, ஒட்க்கா தான் சாப்பிட்டா, ஒரு வேல அதுல அந்த புதிய போதை மருந்தை கலந்திருந்தால் நம்ம நல்ல நேரம்.  அந்த காலேஜ் மாணவனை கூட போதை மருந்து உட்கொண்ட போது பரிசோதிக்க முடியலல்ல,  அவனை வச்சு போதை மருந்தை எடுக்கலாம்னு நான் பிளான் பண்ணா அவனை வேற தீரா அமெரிக்கக்ககு அனுப்பிட்டான்” என்றவன் பிங்கியை பாத்திருக்க
“எப்படித்தான் இவரால் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமோ” என்று அகில் சிலாகிக்க, தீரன் பொருத்திய கேமராக்களின் நிலையை பரிசோதிக்கலானான் மிதுனன்.
“அவன் இன்னும் ரெண்டு தடவ உட்கொண்டிருந்தா உயிர் போய் இருக்கும்”  என்று சொல்லியவாறே உடனடியாக பிங்கியின் இரத்தம் பெறப்பட்டு பரிசோதனை குழாய்களில் இட்டவர் அவளுக்கு மாற்று மருந்தையும் செலுத்தி “அரைமணி நேரத்துல எழுந்துடுவாங்” அன்புச்செல்வன் சொல்ல
“சார் ட்ரின்க் பண்ணவங்க கண்ட படி உளறுவாங்க அக்கா என்ன இப்படி இருக்கா?” அகில் பயம் கலந்த குரலில் கேக்க
காலேஜ் மாணவனால் பெறப்பட்ட தகவலும், அவனை பரிசோதித்ததால் கிடைத்த சான்றுகளும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்க, அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தீரன் தயங்க
“இது புது விதமான போதை பொருள் தூக்கம் வர்ற மாதிரி, கனவு காண்கிறமாதி, வேற உலகத்துக்கே செல்லுறமாதிரி இருக்கும், அதிகமா உட்கொண்டா உயிர் போய்விடும்” அன்புச்செழியன் தான் பதில் சொன்னார்.
“அப்போ யாரையாவது கொல்ல வேண்டும் என்றாலும் இத கலந்து கொடுக்கலாமா?” அகில் ஆச்சரியமாக கேக்க
“கொடுத்தா செத்துடுவாங்க, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில தெரியும்” என்று நிறுத்திக் கொள்ள
“அக்காக்கு  ஒண்ணுமில்லையே”  
“ஷி வில் பி பாய்ன். டோன்ட் ஒர்ரி” என்று அவனின் தோளில் தட்டியவர் தனது வேலையை பார்க்கச்சென்றார்.
லைவா ஓடிய கேமராக்கள் படம் பிடித்ததை தீரன் ஆராய,  தீரன் பொருத்திய கேமராக்களின் கோணங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தான் மிதுன்.
“சார் கோணமெல்லாம் ஓகே எல்லா கேமராக்களும் தனித்தனி மொனிட்டர் செட் பண்ணிட்டேன். இத கவனிக்கிறதுதான் என் முழு நேர வேல” மிதுன் சாதித்த சந்தோசத்தில் சொல்ல
“சவுண்ட் கிளியரா வருதா? அவனுங்க என்ன பேசுறாங்கனு எனக்கு கிளியரா தெரியணும்”
“வருது சார்”
“குட் சந்தேகப் படும் படியா யார் இருந்தாலும் ஒடியோ செக் பண்ணுங்க” தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து கண்ணை எடுக்காம தீரன் பேச அகில் மெய்மறந்து அவனை பாத்திருந்தான்.
பிங்கியின் கொண்டையில் பொருத்திய சீனா குச்சியிலும் கேமராவை பொருத்தி இருக்க அது அவர்களின் பின்னாடி என்ன நடந்தது என்று காட்டிக் கொண்டிருக்க, இருவர் பிங்கியின் பின்னழகை ரசித்தவாறே ஏதோ பேசுவதை பார்த்த தீரனின் இரத்தம் சூடானது.
“சே இவள கூட்டிக்கிட்டு போயிருக்க கூடாது, குடிக்க வேணாம்னு சொல்லியும் குடிச்சு ஆபத்தை வாங்கிட்டா” என்று முணுமுணுத்தவன் அவளை திரும்பிப் பார்க்க நிர்மலான முகத்துடன் தூங்கி கொண்டிருந்தாள் பிங்கி.
அவளின் அருகில் சென்றவன் அவளின் குண்டுக் கன்னங்களை கண்டு முத்தமிடும் ஆவல் தோன்ற பெருவிரல் கொண்டு அவளின் கன்னம் நீவ, பிங்கி மெதுவாக கண்களை திறந்தாள்.
கையை இழுத்துக் கொண்டவன் “இப்போ எப்படி இருக்கு” என்று கேக்க
தலையை பிடித்தவாறே எழுந்தமர்ந்தவள் “தலைவலிக்குது” என்று சொல்ல
நெற்றியை நீவி விட்டவன் “தூங்கி எந்திரிச்சா சரியா போய்டும், வீட்டுக்கு போலாமா?” என்று கேக்க
“அகில் கூட பைக்லயே போறேன்” என்று சொல்ல அகிலும் வந்து சேர்ந்தான்.
அவளை முறைத்தவன் “ரொம்ப நைட்டாகிருச்சு நானே விட்டுடுறேன்” என்று சொல்ல பிங்கி மறுக்கவில்லை.
மேகமது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே
தீரனின் வண்டியில் காதல் மெல்லிசை ஒலிக்க இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.  அகில் வண்டியை பின் தொடர்ந்து வரவே, பின்னாடி திரும்பி திரும்பி பிங்கி பார்க்க
“அவன் வருவான் டென்ஷனாகாத?”
சரியென்று தலையை ஆட்டியவள் “சாரி” என்று சொல்ல
“என்ன சொன்ன? சரியா கேக்கல”
“சாரி, நான் தன்னினு குடிக்க போய், உங்க வேலைய பார்க்க முடியாம” பிங்கி கண்களில் நீர் கோர்த்தவாறே சொல்ல
“சகிக்கல” என்று முணுமுணுத்தவன் “இங்க பாரு போன வேல நினைச்சதை விட நல்லா தான் முடிஞ்சிருச்சு. நீ இப்படி கண்ண கசக்குறத நிறுத்து. பாக்க சகிக்கல”  சொல்லியவாறே கிண்டலாக சிரிக்க
அவன் முணுமுணுத்தது காதில் விழவே அவன் பக்கம் திரும்பியவள் அவன் சிரித்ததில் கோவம் தலைக்கேற அவனை வசை பாட ஆரம்பித்தாள்.
“ஹப்பா.. இப்போ தான் காதுல தேன் பாயுறமாதிரி இருக்கு” விசிலடித்தவாறே வண்டியை பிங்கியின் வீட்டுக்கு செலுத்தினான் தீரமுகுந்தன்.  
அவளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் இதயத்தை, அவளின் சோகமுகத்தை தாங்காது தவிக்கும் இதயத்தை புரிந்துக் கொள்ளாது இருப்பது ஏனோ?
“இதோ வந்துட்டா நீங்களே பேசுங்க” புஷ்பா அமைதியாக சொல்ல
“என்ன இன்னைக்கு அம்மா வாசலையே நிக்கிறாங்க” பிங்கி தன்னை தானே கேள்வி கேக்க
“பார்ட்டிக்கு  போய் வர அதிகாலை மூனு மணியானா கேள்வி கேக்காம? கொஞ்சுவாங்களா?” அவளின் மனசாட்ச்சி கேக்க
“நா தனியாவா போனேன் அகில் கூட தானே அதுவும் இவங்க கிட்ட சொல்லிட்டு தானே” என்று யோசிக்க
“போய் தூங்குமா எதுனாலும் காலைல பேசலாம்” என்று தங்கதுரை அவளின் தலையை தடவியவாறே சொல்ல அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் இரவு வணக்கத்தோடு அறைக்குள் புகுந்து கொண்டாள்.  அவள் கண்ணுக்குள் தீரமுகுந்தன். சுகமான கனவோடு கண்ணயர்ந்தவள் அறியவில்லை நாள் காலையில் கனவோடு அவனின் நினைவுகளும் களைந்து விடுமென்று.

Advertisement