Advertisement

                                                   அத்தியாயம் 13
விடியக் காலையில் வீடு திரும்பிய தீரமுகுந்தனை ஸ்கூபி எழுப்பி கொண்டிருக்க
“இன்னைக்கு நோ ஜோக்கிங் ஸ்கூப் செம்ம டயட் நாளைக்கு போலாம்” என்று திரும்பி படுக்க
“சுத்தம் இவனுக்கு அங்க ஆப்பு ரெடியாகி கிட்டு இருக்கு இவன் என்னடான்னா தூங்கிக் கிட்டு இருக்கான். வெளிய வாடா மவனே! நீ இதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு பாக்கிறேன்” அப்பாவியான முகத்தை வைத்தவாறு ஸ்கூபி கருவிக்கு கொண்டு வெளியே ஓடியது.
நன்றாக தூங்கி எந்திரிச்சி வந்தவன் சலீம் பாயிடம் கிறீன் டி கேக்க வீடே அமைதியாக இருந்தது. மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் அனைவரும் வீட்டிலேயே இருக்க அந்த அமைதி அவன் போலீஸ் மூளைக்குள் “ஏதோ சரியில்ல” என்று மட்டும் மணியடிக்க கிறீன் டீயை பருகியவன் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதை கண்டு
“பூனைக்கு மணி கட்டுவது யார் என்று கண்ணாலேயே பேசிக்கொள்ளுறாங்க. தீரா.. வாய கொடுத்து மாட்டிக்காத” போலீஸ் மூளை எச்சரித்தாலும் மனமோ “என்னான்னு கேளுடா, கேட்டாத்தான் சொல்லுவாங்க போல இருக்கு” என்று மாற்றி சொல்ல, அவன் நாக்கில் சனி வந்து குடி கொண்டது.
“என்ன மூனு பேரும் மூன்றாம் உலகப் போர் நடக்க போவது போல பலமா யோசிக்கிறீங்க”   
“மாட்டிக்கிட்டாண்டா, வாய வச்சி கிட்டு சும்மா இருக்காம மாட்டிக்கிட்டாண்டா இப்போ அனுபவி” ஸ்கூபி தான் அவனை பாவமாக பார்த்து முனகியது.
விஷ்வதீரனின் முகத்தில் புன்னகை பூசிக்கொள்ள தாத்தாவே சொல்லட்டும் என்று பத்திரிக்கையில் கண்ணை செலுத்தினான்.
“தீரா உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” ஆரம்பிச்சது தாத்தா தான்
“ஆஹா பெருசு தீரானு கூப்பிடுதே! என் கிட்ட என்னவோ காரியம் ஆகா வேண்டி இருக்கு போலயே!” தீரமுகுந்தனின் மனம் கூவ மெளனமாக அவரை ஏறிட்டவன் மேலே பேசுவதை கேக்கலானான்.
“உங்கண்ணன் எல்லாத்தையும் சொல்லிட்டான், அந்த பொண்ண டில்லில இருக்கும் போது ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டானாம்”
“இது எப்போ? சொல்லவே இல்ல”  அண்ணன் பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிய  அண்ணனை முறைக்க அவனோ தலையை நிமிர்த்தி பார்த்தானில்லை.
விஷ்வதீரன் சொன்னது ஆரோஹியை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாமல் டில்லியில் பணி புரிந்த போது மீண்டும் அவள் மேல் காதல் கொள்ள அவளும் அவனை காதலிக்க எங்கே மீண்டும் விட்டுட்டு போய் விடுவாளோ என்றஞ்சி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டதாகவும், அவள் படித்து முடிந்த பின் வீட்டில் சொல்லலாம் என்றிருக்கும் போது அவள் கருவுற்றதாகவும்,  இனி எப்படி கலயாணத்தை பற்றி சொல்லுவது என்று சொல்லாமல் மறைத்ததாகவும் சொல்லியவன்,
ஆரோஹிக்கும் சொந்தமென்று புஷ்பா குடும்பம் மாத்திரமிருக்க அவர்களும் திருச்சிக்கே வந்து விட்டார்கள். நானும் வேலைனு ஊர் பூரா சுத்தி கிட்டு இருக்கேன். ஊருக்கே மாற்றலாகி வரும் போதே ஆரோஹிய குழந்தைகளோடு இங்கயே வரவழைத்தேன். ஒரு நல்ல நாள் பார்த்து அப்பா, தாத்தா விடம் பேசி அவர்களை வீட்டுக்கு அழைத்து வர இருந்ததாகவும் அஜய்யை கடத்தியதால் அடி பட்ட ஆயிஷாவிடம் ஆரோஹியை விட்டு விட்டு குழந்தைகளை அழைத்து வந்ததாக கோர்வையாக கூற   திருமாறன் ஏற்றுக் கொண்டாலும் தீரமணி கேள்விகளை கேட்டு அவனை துளைக்க அசராமல் பதில் சொன்னவன் அவரை நம்ப வைத்தான்.
“ஆனாலும் எங்களால அத கல்யாணமா ஏத்துக்க கொள்ள முடியாது. தாலி கட்டாம ரெண்டு புள்ளய பெத்து வச்சிருக்கான்” என்று விஷ்வதீரனை முறைத்தவாறே கூற
“அதான் கோவில்ல வச்சு கட்டிட்டானே! அண்ணி கழட்டி கொடுத்துட்டு போனா இவன் என்ன பண்ணுவான்” அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி தனது குழியை வெட்டிக் கொண்டான் தீரமுகுந்தன்.
“அதைத்தான் நானும் சொல்லுறேன். தாலி கட்டி முறைபடி மனைவியா இந்த வீட்டு மருமகளா வாறதென்றா வரட்டும்”
“இல்லனா வீட்டை விட்டு போனு சொல்லுறியா? அதென்ன வந்ததுல இருந்து நாங்க நாங்கனு சொல்லுற அரசும் கூட்டா? பெருசு அவன் லைஃப் எப்படி இருக்கணும்னு அவன் தான் முடிவு பண்ணனும்” என்று முடிக்க
“எங்க முடிவு இதுதான் அவன் மனைவிய நாங்க ஏத்துக்கணும்னா எங்க ரெண்டு கண்டிஷனையும் அவன் செய்யணும்”
“ரெண்டா? மத்தது என்ன பெத்த குழந்தைகளை அனாதை ஆஸ்ரமத்துல சேர்க்கணுமா?” நக்கலாக தீரமுகுந்தன் சொல்ல
“உங்கண்ணன் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினப்பாவே எங்க மானம் போச்சு, புதுசா போக என்ன இருக்கு?” அப்பா திருமாறன் தான் பேசினார்.
தீரமுகுந்தன் விஷ்வதீரனுக்காக வாதிட்டுக் கொண்டிருக்க அவனோ பத்திரிக்கையில் மிக முக்கியமான செய்தியை படிப்பது போல் மூழ்கி இருந்தவன் கொஞ்சமேனும் தலையை தூக்கி பார்த்தானில்லை. “நீங்க என்னவேனாலும் பேசுங்கப்பா நா பதிலுக்கு ஒன்னும் பேசமாட்டேன்” என்றமர்ந்திருந்தான்.  
“அதானே பார்த்தேன் மானம், மரியாதானு அவன் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க”  அண்ணனை பார்த்தவன் “இவன பத்தி பேசிகிட்டு இருக்கோம், இவன் அமைதியா இருக்கிறத பாத்தா எல்லாரும் ஒன்னு சேர்ந்து ஏதோ பிளான் பண்ணிட்டாங்க போல இருக்கே, என்னவா  இருக்கும்” தீரமுகுந் புருவத்தை சுருக்க
அவனின் மைண்ட்  வாயிசை கேட்ச் பண்ணிய ஸ்கூபி “இப்பயாச்சும் உன் மண்டைல பல்ப் எரிஞ்சதே, சந்தோசம்” என்று முனகியது.
“திரு நீ பேசாம இரு” என்று கூறிய தீரமணி “தீரா அவன் மனைவியோட புள்ளைகளையும் ஏத்துகிறதுல எங்களுக்கு எந்த பிரச்சினையுமில்ல. உனக்கும் அவனுக்கும் ஒரே வயசு அவனுக்கு அஞ்சு வயசுல ரெண்டு புள்ளைங்க நாளைக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணும் போது சொந்த பந்தங்களெல்லாமே உன்ன கேலிக் கூத்தா பேசிட போறாங்க, உனக்கு நான் பாத்து வச்ச பெண்ணோடு கல்யாணம் இவனுக்கு மாங்கல்ய தோஷம் அதான் ரெண்டாவது தடவ தாலி கட்டுறான்னு சொல்லி இவன் கல்யாணத்த நடத்தணும். இது தான் நாங்க முடிவு பண்ணது”
“என்னது கல்யாணமா? யாரை கேட்டு முடிவு பண்ணீங்க? என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது” தீரமுகுந்தன் ஒரேயடியாக மறுக்க
“பாத்தீங்களா அப்பா  இப்போ கல்யாணம் பண்ண முடியாதாம். இப்போவே இருபத்தி ஒன்பது, இனிமேல் யாரு பொண்ணு கொடுப்பா?” திருமாறன் எகிற
“சொல்லவேண்டியது சொல்லியாச்சு இனி அவன்தான் முடிவு பண்ணணும்” என்றெண்ணியவன் “அவனை கொஞ்சம் யோசிக்க விடுங்க. நீ யோசிச்சு முடிவு சொல்லு” விஷ்வதீரன் அகல
“உன் அண்ணன் வாழ்க்கையும் உன் கைல தான் இருக்கு” என்று மிரட்டியவாறே தீரமணி நகர
“நீ கல்யாணம் பண்ணிதான் ஆகணும்” என்ற பார்வையோடு திருமாறன் உள்ளே செல்ல
“ஆ டண்டணக்கா ஆ டனக்குடக்கா கெட்டிமேளம் கொட்ட போகுது நம்ம வீட்டுல” என்று பாடியவாறே சலீம் பாய் வெளியே செல்ல தீரமுகுந்தன் அமர்ந்திருந்தான்.
ஆரோஹி அண்ணனின் வாழ்க்கையில் நடாத்திய காதல் நாடகத்தால் பெண்களை வெறுக்கா விட்டாலும் காதலை வெறுத்தான் தீரமுகுந்தன். எந்த பெண்ணிடமும் ஒரு எல்லை கோட்டை போட்டே பழகியவன் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணுமா? என்ற கேள்வி தோன்ற அண்ணன் கல்யாணம் பண்ணா மட்டும் தான் பண்ணிப்பேன் என்ற உறுதியோடு இருக்க இன்று சூழ்நிலையோ வேறு மாதிரி மாறி இருந்தது. ஆரோஹி அண்ணனுக்கு துரோகமே இழைக்கவில்லை. அண்ணனும் அவளை மறக்காது இன்றும் காதலித்து கொண்டுதான் இருக்கின்றான்.
வாழ்க்கையில் நாம் நினைப்பது என்ன? நடப்பது தான் என்ன? கல்யாணம் பண்ணிக்கலாம். ஒரு பிரச்சினையுமில்ல. ஆனா என் கல்யாணம் நடக்காம அண்ணன் கல்யாணம் நடக்காதாம் லூசுங்க” என்று புன்னகைத்தவன் அமைதியாக தனது வேலையை பார்க்க சென்றான். அப்போது கூட  அவனுக்கு பிங்கியின் நியாபகம் வராதது காலம் செய்த சோதனை.
“பய புள்ள சிரிக்கிறது பார்த்தா கல்யாணத்துக்கு சம்மதிப்பான் போல இருக்கே. நம்மள கண்டுக்க தான் யாருமில்ல” ஸ்கூபி வாலையாட்டியவாறே வெளியே ஓடியது.
அறைக்கு வந்த விஷ்வதீரன் “ஹப்பா… அப்பாவையும், தாத்தாவையும் எப்படியோ சமாளிச்சாச்சு தீரா எந்த கேள்வியும் கேக்கல மௌனமா இருக்குறத பாத்தா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவான் போல” என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன்
அவன் ஆரோஹியை முறை படி கல்யாணம் செய்யணும் என்று வந்து நின்ற போது தாத்தா கூறியது கண்முன் வந்தது.
“இங்க பாரு தீர எங்க நீ அந்த பொண்ண நினச்சு கிட்டே உன் வாழ்க்கையை நாசமாக்குவியோன்னு அஞ்சி தான் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணோம். உன்னால உன் தம்பி கல்யாணத்தையே வெறுத்துட்டான் னு தான் எனக்கு தோணுது. இப்படியே விட்டா அவன் காலம் பூரா தனியா இருந்துடுவான். திடிரென்று உனக்கு கல்யாணம், அதுவும் தாலிய கழட்டிட்டு போன பொண்ணு கூட கல்யாணம் ஐஞ்சு வயசுல ரெண்டு பசங்க இருக்காங்கனு சொந்த பந்தங்க கிட்ட சொல்ல முடியுமா? ஒவ்வொருத்தரும் கட்டுக்கதைகளை இஷ்டத்துக்கு பறக்க விட்டுடுவாங்க.
உன் தம்பிக்கும் கல்யாணம் நடக்கணும், உன் கல்யாணமும் நடக்கணும் வேற வழியில்லை அவனை மிரட்டியாவது நான் பாத்து வச்சிருக்கும் பொண்ணு கூட கல்யாணம் நடக்கணும். அதுக்கு நீ கொஞ்சம் கோப்ரட்  பண்ணு” என்று சொல்ல அவர் சொல்வது சரியென்று தோன்ற தீரமுகுந்தனை யோசிக்க விட்டவன் அவனுடன் சில விடயங்களை பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
*******************************************************************
“என்ன ரூஹிமா பலத்த யோசனையாகவே இருக்க, விஷ் தம்பிய கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன பிரச்சினை உனக்கு” ஆயிஷாபேகம் நேரடியாகவே கேக்க ஆரோஹி அவரை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“இது உங்களுக்கு எப்படி தெரியும்” என்று வாய் தந்தியடிக்க  
“உன் சித்தி விஷ் தம்பி உன் புருஷன்னு வந்ததிலிருந்தே நம்பி கிட்டு பேசினாங்க, நீயோ, அந்த தம்பியோ மறுக்கல. அப்படினா உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதோ நடந்திருக்கு. நீ தூங்கி கிட்டு இருக்கும் போது அவர் உன்ன பத்தி என் கிட்ட கேட்டாரு, நானும் சொன்னேன்”
“என்ன சொன்னீங்க”
“நான் உன் மாமியார் என்றும், என் பையன தான் நீ கல்யாணம் பண்ணி இருப்பதாகவும் தப்பா  நினைச்சதா சொன்னாரு, அஜய் கூட அவரை டாடின்னு கூப்பிட்டதாகவும் அப்படினா அவங்களோட அப்பா என்ன ஆனாருனு கேட்டாரு?. உன் கூட நான் சேரும் போது ரெண்டு பசங்களோடு நீ தனி மரமா நின்னதாகவும், உன் புருஷன பத்தி நீ என் கிட்ட எதுவும் சொல்லலனும் சொல்லிட்டேன். ஒரு நாள் நீ அழுது கிட்டு இருக்கும் போது விஜய்  “அம்மா டாடி நேம் என்னனு” கேட்டப்போ நீ விஷ் னு சொன்னதாக சொன்னேன். அப்பொறம் குழந்தைகள் கேட்ட எல்லா கேள்விக்கும் ஆர்மில இறந்து போன என் பையன ஒப்பிட்டு சொல்லிட்டேன்னும் சொன்னேன்”
“அதுக்கு அவர் என்ன சொன்னாரு”
“ஆரோஹி என் மனைவி, அவங்க ரெண்டு பேரும் என் குழந்தைகள்னு சொன்னாரு. வேற எதுவும் சொல்லல” ஆயிஷா அவளுக்கு சொல்ல வேண்டியதை மாத்திரம் சொல்லி முடிக்க
அவன் பெறாத குழந்தைகள் மீது அவனுக்கு இருக்கும் பாசம் கண்டு ஆச்சரியமாக கண்கள் விரிந்தாலும், உள்மனமோ! “அடியேய் கூறு கெட்டவளே உன்ன அடைய அவன் என்ன வேணாலும் செய்வான். அத புரிஞ்சிக்க முடியாம அவனுக்கு சட்டிபிகேட் கொடுக்குற” என்று குட்ட தன்னை கேள்வியாக நோக்கும் ஆயிஷாவிடம் என்ன சொல்வதென்று குழம்பினாள்.
“என் வாழ்க்கைல நான் பட்ட அனுபவத்தோடு சொல்லுறேன் ரூஹி. ஒரு பொண்ணு தனியா வாழ இந்த சமுதாயம் விடாது. விஷ் தம்பிய பாத்தா நல்லவரா தான் தெரியுது.  நீ அவரை விட்டு விலக நினைத்தாலும் கடவுள் உன் வாயாலேயே அவர் தான் குழந்தைகளுக்கு அப்பான்னு அடையாளம் காட்டி இருக்கான்னா, அவர்தான் உனக்கு எல்லாமே!  பசங்க கூட அவரோட ஒன்னாகிட்டாங்க. உனக்கு அவர் மேல என்ன கோபம்னு தெரியல குழந்தைகளை அவர் கிட்ட இருந்து பிரிச்சிடாத, ரெண்டு பிள்ளைகளை தனியா வளர்த்து ஆளாக்கிய அனுபவத்துல சொல்லுறேன், அப்பான்னு ஒருத்தர் பசங்க கூட இருந்தா குழந்தைகளும் நீயும் சந்தோசமா இருப்பீங்க” என்றவர் அவள் யோசிக்கட்டும் என்று சென்று விட
“யாருக்கு பொறந்தாங்க என்றே தெரியாத குழந்தைகளுக்கு அவன் தான் அப்பான்னு நினைச்சி பேசிட்டு போறீங்க அத்த” என்று கண்கள் கலங்க நின்றாள் ஆரோஹி.
*******************************************************************
“முகுந்த் எங்கடா வெளிய கிளம்பிட்ட” அப்பா திருமாறன்
“ஏன் கல்யாணம் பண்ண போறதுன்னா எந்த வேலையையும் பாக்காம வீட்டுலையே இருக்கணுமா?” என்று தனது சம்மதத்தை சொல்ல
அவனை கட்டிக்க கொண்டவர் “டேய் ரொம்ப சந்தோசம்டா”
“விடுப்பா எப்ப பாத்தாலும் மேல தொங்கி கிட்டு. போய் உன் மூத்த மகன கொஞ்சம் கொஞ்சு” என்றவன் விஷ்வதீரன் வரவே
“பொண்ணு ரெடியா” என்று கேக்க
“கல்யாணம் வேணான்னு சும்மா நடிக்கிறாண்டா, பாத்தியா பொண்ணு ரெடியானு கேக்குறான்” அப்பா கிண்டலடிக்க
“அப்பா” என்று தீரமுன்னுந்தன் பல்லை கடிக்க
“அவன் கேஸ் விஷயமா கேக்குறான்” என்று விஷ்வதீரன் புன்னகைக்க
“ஏன்டா கேஸான பொண்ணுங்க கூட உனக்கு என்ன சகவாசம் வேண்டாத நோய் வந்துட போகுதுடா”
அவரை முறைத்தவன் “சத்தியமா முடியல ஒரு அப்பா பையன் கிட்ட பேசுற மாதிரியா பேசுற? நீயெல்லாம் ஒரு வக்கீலு. கோட்டுக்கு கடைசியா எப்ப போன” என்று அவரை வார
“டைலியும் ஆபீஸ் போய்கிட்டு தானே இருக்கேன்”
“ஆபீசுக்கு கேஸ் கட்டோட போற சரி. ஜஜ்ஜு முன்னாடி போய் எந்த கேச கடைசியா வாதிட்ட”
“நா எதுக்குடா போகணும் அதுக்குதான் என் ஜுனியர்ஸ் இருக்காங்களே!” மீசையை நீவ
“அதான் கோட்டுக்கே போகாத வக்கீல வச்சி கிட்டு எதுவும் பேச கூடாததுன்னு சொல்லி இருக்காங்க” என்றவன் விஷ்வதீரனை ஏறிட்டு அவன் கேட்ட கேள்விக்கான பதிலை எதிர் பார்க்க
“நீ அங்க போ. ரித்திகா R2 ஸ்டேஷன் சப்பின்ஸ்பெக்டர்  அங்க வருவாங்க” என்று சொல்ல தீரமுகுந்தன் விடை பெற்று சென்றான்.
“டேய் தீரா என்னடா சொல்லிட்டு போறான் அவன்”
“அவன் கிட்ட கேக்காம அவன் போனதும் ஏன் என் கிட்ட கேக்குறீங்க. அவன் கிட்டயே கேளுங்க” என்று சிரித்தவாறே உள்ளே சென்றான்.
“என்ன சொல்லுறான் ஒண்ணுமே புரியலையே!” என்று அவர் குழம்பி நிக்க
“முகுந்த் வெளிய போறான் போல இருக்கு. என்ன சொன்னான்” திருமாறனின் யோசனையாக முகத்தை கண்டு தீரமுகுந்தன் மறுத்து விட்டானோ என்று அஞ்சியவராக தாத்தா கேக்க
“அவன் சம்மதம்னு சொல்லிட்டுதான் போறான்”
“பொண்ண பத்தி சொன்னியா?”
“அப்பொறம் சொல்லலாம்” என்று பதிலளித்தவர் யோசிக்க
“இவனுக்கு என்ன ஆச்சு” என்ற பார்வையோடு தாத்தா உள்ளே சென்றார்.
******************************************************************
ப்ளூமூன் ஹோட்டல் கார்பாக்கிங்கில் காரினுள் அமர்ந்திருந்த தீரமுகுந்தனும் மிதுனும் ரித்திகாவிற்காக காத்திருக்க
“சார் நைட் என்றதால் கூலர்  போட முடியாது இந்தாங்க இந்த மாலைய போட்டுக் கோங்க, இந்த காதணியையும்”  என்று ஒற்றை காதணியை மிதுன் கொடுக்க
“கேமரா எங்க இருக்கு” என்று கேட்டுக் கொண்டவன் அவற்றை அணிந்துக் கொண்டு, மிதுன் தயாரித்த ட்ரான்ஸ்பேரன்ட் கேமராக்களை கால் சட்டையில் நிறைத்து கொண்டு
“அந்த ரித்திகா இன்னும் இல்ல. பங்சுவாலிட்டி என்னனா தெரியுமோ?” என்று எரிச்சல் பட
“லேடிஸ் இல்ல சார் என்ன பிரச்சினையோ” என்று மிதுன் சொல்ல
“லேடீஸ்னா  பண்ணசுவாலிட்டி தேவ இல்லையா? போலீஸ் என்றாலே டைமிங் ரொம்ப முக்கியம்” என்றவன் பிங்கி அகிலோடு பைக்கில் வருவதை கண்டு முகம் மலர கதவை திறந்தவன் அவள் அருகில் இருந்தான்.
அவனின் உடையை கண்டு பிங்கி “பக்” என சிரிக்க
யாரோ ஒரு ரவ்டி அக்காவிடம் வம்பு பண்ண வந்ததாக அகில் நினைத்து கையிலிருந்த ஹெல்மட்டால் அடிக்க ஒங்க, அதை லாவகமாக தடுத்தான் தீரமுகுந்தன்.
“அகில் என்ன பண்ணுற அவர் மாமாவோட தம்பி” பிங்கி கத்த
“என்ன இப்படி இருக்கிறாரு” என்ற பார்வை தான் அகிலேஸ்வரிடம்.
“அக்காவும் தம்பியும் இங்க என்ன செய்றீங்க?” ஆபத்தான இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்ற அக்கறையோடு கேக்க
“இவன் பிரெண்டோட பர்த்டே பார்ட்டி” என்று பிங்கி சொல்ல அகில் அவளை முறைத்தான்.
“பாக்க ரவ்டி மாதிரி இருக்கான் இவன் கிட்ட போய் விளக்கம் சொல்லி கிட்டு” “அக்கா வா போலாம்” கொஞ்சம் கோபமாகவே வந்தது அவன் குரல்.
“சார் கூட போலீஸ் டா” என்று அகிலிடம் சொன்னவள் “சார் இன்னைக்கி யாரை பிடிக்க இங்க வந்து இருக்கீங்க” என்று பிங்கி அகில் முன்னிலையில் மரியாதையாக பேசினாலும் குரலில் “உனக்கெல்லாம் மரியாதை தர வேண்டி இருக்கே” என்று அவளின் குரலில் கொஞ்சம் கிண்டல் இருந்ததோ!    
“போலீஸா?  என்ன டிரஸ் இது” என்ற பார்வையோடு அகில் “ஆமா போலீஸ்னா  எந்த டிபார்ட்மென்? உங்க பேரென்ன?” என்று அகில் கேக்க
“அட நான் கூட கேக்கணும்னு நினச்சேன். போலீஸ்ல என்னவா இருக்கிறீங்க” அவன் கையில் வைத்திருந்த வினோதமான பொருட்களை  கண்டிருந்த பிங்கியும் ஆர்வமாக கேக்க
“சுத்தம்” என்று அக்காவை பார்த்து முணுமுணுத்தவன் தீரமுகுந்தனை ஏறிட்டான்.
“ஐம் தீரமுகுந்தன். ஸ்பெஷல் க்ரைம் டிபார்ட்மென்ட். இன்சார்ஜ் ஹெட் ஆப் டெக்னிகள் டிவிசன் அண்ட் DCP  ஆப்  ஸ்பெஷல் க்ரைம்” என்று சொல்ல
“சார்” என்றவாறே அகில் சாலியூட் அடிக்க பிங்கி வாயை பிளந்து பாத்திருந்தாள்.
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
நானும் மாறிப் போனதேன்
என் நளினம் கூடிப் போனதேன்
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
ஓ வாஹா ஓ வாஹா யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

Advertisement