Advertisement

                                                       அத்தியாயம் 12
விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட
“பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட் பண்ணிக்கலாம், நாக்குக்கு கீழையும் வைக்கலாம். கிட்டத்தட்ட பத்து நாளைக்கு சும்மா மிதந்து கிட்டே இருக்கலாம். ஆனா அது ஸ்லொவ் பாய்சன் மாதிரி உடல் உறுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும். செயல் இழக்கும் போது மரணம். அந்த பையனோட உடல் உறுப்புக்கள் சேதமடைய ஆரம்பிச்சிருக்கு, இன்னும் ரெண்டு தடவ அவன் பாவிச்சாலும் செத்துடுவான். அந்த போதை பொருள் ஒரு கிராம் கிடைச்சாலும் போதும் அடிவேர் வர கண்டு பிடிச்சிடுவேன்” என்று அதை வழங்க அதை பத்திரப்படுத்திக் கொண்டவன் மிதுனை ஏறிட
“மினி ட்ரான்ஸ்பேரன்ட் கேமராக்கள் எல்லாம் தயார். அதன் வெளிப்புறமும் கண்ணாடி மாதிரி ஓளி புகக்கூடிய பொருளால்  செய்ததால் எந்த இடத்தில் பொறுத்தினாலும் அல்லது பொருளில் பொறுத்தினாலும் வித்தியாசம் தெரியாது” தன்னுடைய வேலையில் எந்த குறையும் இருக்காது ன்று ஆணித்தரமாக சொல்ல அவனின் தோளில் தட்டியவன் தீரமுகுந்தனிடம் திரும்பி
“வாட் அபௌட் யு ப்ரோ” என்று ஏறிட
“வேற மாநிலங்களில் இந்த மாதிரியான வன்கொடுமை பண்ணி கொலை செய்த பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்படல்ல. ஆனா புதிய வகை போதை பொருள் பாவித்து இறந்து போன இரண்டு பெண்கள் டில்லில பதிவாகி இருக்காங்க. அவங்கள பத்தின முழு விபரமும் கூடிய சீக்கிரம் கிடைச்சுடும். அண்ட் ரீசண்டா மாலானு ஒரு பொண்ணு காணாம போய் இருக்கா. புதுசா கல்யாணமாகி இருக்கு. காலேஜ் முடிச்ச உடன் கல்யாணம் நடந்திருக்கு பிரெண்ட்ஸ்கு பார்ட்டி கொடுக்க போனவ வீடு திரும்பல. சீசீடிவி  புட்டேஜ் பாத்துட்டேன். பத்து வாகனங்களின் மேல் சந்தேகம் இருக்கு ஹோட்டல் ப்ளூமூன் கூட ஏதாவது சம்பந்தம் இருக்கா? என்ற கண்ணோட்டத்துல விசாரிச்சு கிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல ஹோட்டல் ப்ளூமூன் போய்டுவேன்” என்றவன் பொண்ணு ரெடியாக இருக்கணும் என்ற பார்வையோடு நிறுத்த
“வெல் சரியான பாதையில் போய் கிட்டு இருக்கு. அந்த மாலா என்ன ஆனா என்று தெரியட்டும்” என்றவன் விடைபெற்று சென்றான்.
புஷ்பா, பிங்கி மற்றும் அகில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு, புஷ்பா ஆரோஹிக்கு சில பல புத்திமதிகளை வழங்கி விட்டே வீடு திரும்ப ஆயிஷாபேகம் குழந்தைகளை தூங்க வைக்கவென செல்ல அவ்வளவு நேரமும் வராத விஷ்வதீரனின் நினைப்பு ஆரோஹியை ஆட்கொள்ள புஷ்பா சொன்னவைகளும் மனதில் வந்து போக தலையை பிடித்தவாறே அமர்ந்து விட்டாள்.
தனது பேனா நண்பரான ஹிமேஷ் ஷர்மாவை ஆரோஹியின் அன்னை பூவரசி உருகி உருகி காதலித்து  வீட்டை விட்டு சென்று கல்யாணமும் செய்து கொண்டாள்.
செல்லாத்தா, பாண்டியனுக்கு பிறந்தவர்கள் தான் பூவரசியும், புஷ்பவதியும். பெண் பிள்ளைகள் என்றாலும் தைரியமா இருக்கணும் என்று பாண்டியன் நினைக்க அதுவே அவரின் உயிரை எடுத்தது. பூவரசி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தவள் ஹிந்தியையும் கற்றுக் கொண்டாள். செல்லாத்தா படிக்காதவர், கணவனிடம் பெண்களுக்கு கல்வி அவசியமில்லை. அவர்களை கல்யாணம் பண்ணி கொடுத்து விடலாம் என்று சொல்ல பாண்டியன் பெண்களை கல்லூரியில் சேர்த்து விட்டார்.
பூவரசி அப்பா செல்லம். தான் எது செய்தாலும் அப்பாவிடம் பகிர்பவள் காதலை மட்டும் மறைத்து விட்டாள். ஆங்கில பத்திரிக்கையொன்றில் பேனா நண்பர் பகுதியில் ஹிமேஷின் புகைப் படத்தை கண்டு “ஹிந்தியில் பேசலாம், இங்கே பேச யாருமில்லை” என்ற ஆயிரம் காரணங்களோடு கடிதம் எழுதியவள் எப்போது காதலில் விழுந்தாள் என்பதை அறியாமல் இருந்தாள்.
ஹிமேஷ் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் படிப்பால் உயர்ந்தவன். பூவராசியோடு கடிதத் தொடர்ப்பில் இருந்தாலும் காதல் என்றெல்லாம் அவனுக்கு தோன்றியது அவளின் புகைப்படத்தை பார்த்த போது தான். அதன் பின் தான் மிக தீவீரமாக தனது வாழ்க்கை லட்ச்சியத்தில் காதலையும் சேர்த்துக் கொண்டான். தாய் இல்லாது தந்தை மட்டும் இருக்க அவரிடம் பூவரசியை பற்றி சொல்ல அவரிடம் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை.
சாதாரணமாக பேசி பழகியவன் காதலை கடிதம் மூலம் சொல்லிய போது தனது காதல் கைகூடுமா என்று ஏங்கித்தவித்தவளுக்கு ஹிமோஷே காதலை சொன்னது பல மடங்கு தைரியத்தை வரவழைத்திருந்தது.
இதற்கிடையில் செல்லாத்தா பூவராசியின் கல்யாணத்தை பற்றி பேசி பாண்டியனை நச்சரிக்க, அக்காவின் சோகமான முகத்தை வைத்து தோண்டி துருவி விசாரித்த புஷ்பாவுக்கு பூவராசி காதலிப்பதாக கூறி இருக்க தங்களது பெற்றோர் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள் என்று புஷ்பா புத்திமதி கூற வீட்டை விட்டு சென்றவள் அவர்களை தொடர்ப்பு கொள்ளவே இல்லை.
“கல்யாணம் பண்ணிக்கலாமா?”  என்று ஹிமேஷ்  பூவராசியிடம் கடிதம் மூலம் கேட்டிருக்க திடீரென பூவரசி வந்து நிற்பாள்  என்று எதிர் பார்க்காதவன் தந்தையின் உதவியோடு கல்யாணமும் செய்துகொள்ள அவர்களின் வாழ்க்கை இன்பமாகவே கழிந்தது.
ஹிமேஷின் தந்தையும் பூவராசிக்கு வீட்டுக்கு தகவல் சொல்லும்  படி வற்புறுத்தவில்லை. ஒரு பெண் காதலுக்காக வீட்டை விட்டு தனியாக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்றால் வீட்டில் ஏதோ பிரச்சினை என்று மட்டும் கருதியவர். ஒரு வேலை சாதி வெறி பிடித்தவர்களாக இருந்தால் பிள்ளைகளை பிரிப்பது மாத்திரமன்றி தனது ஒரே மகனின் உயிருக்கும் ஆபத்து வந்து விடும் என்று அஞ்சியவர் பூவராசியின் வீட்டாரை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை.
ஹிமேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்க, குடி இருக்கும் சிறிய வீட்டை விற்று விட்டு வேறொரு நல்ல இடத்தில் இரண்டு அறைகளை கொண்ட நல்ல சூழலோடு வீடு வாங்க பூவரசியும் கருவுற்றாள்.
இங்கே தனது செல்ல மகள் இழைத்த துரோகம் தாங்காது பாண்டியன் உடைந்து போக செல்லாத்தா அழுது கரைந்தவாறே பூவராசிக்கு கண்டபடி சாபமிட புஷ்பாவின் வாழ்க்கைதான் சூனியமானது. காலேஜில் இருந்து நீக்கப் பட்டு உடனடியாக செல்லாத்தாவின் உறவுமுறையான தங்கதுரைக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்பட்டது.
காதலில் மட்டும் தான் ஒரு பெண் பிள்ளை தப்பு செய்தால் தண்டனை மற்ற பெண்பிள்ளைக்கு வழங்கப்படும்.
தங்கதுரை பூவரசியை பற்றிய எல்லா உண்மைகளையும் அறிந்த பின்னே புஷ்பாவை கல்யாணம் செய்து கொண்டான். அவனுக்கு அது ஒரு பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை. முதலிரவன்றே  புஷ்பாவிடம் கூறியது
“புஷ்பா நம்ம கல்யாணம் அவசர அவசரமாக நடந்திருக்கலாம். உங்கக்கா பண்ணதுக்கு நீ பொறுப்பாக மாட்ட. நம்ம வாழ்க்கை நம்ம கைல. தொடர்ந்து படிக்கணுமா? படி, எதுனாலும் உன் இஷ்டம். மெதுவாகவே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்”
அக்கா காதலிப்பதை வீட்டாருக்கு சொல்லாமல் விட்டது தப்போ! அதனால் தான் அக்கா போனாளா? அவன் ஒரு ஏமாத்துக்காரனா இருந்திருந்தால்? அக்காவின் வாழ்க்கை என்னவாகும் என்று பயத்தில் வாய் திறக்காது இருந்தவளுக்கு காலேஜில் இருந்து நீக்கப்பட்டதும் திடீர் கல்யாணமும் கருத்தில் பதியவே இல்லை.
முதலிரவு அறையில் தான் தங்கதுரையை நெருக்குநேராக சந்தித்தாள். ஒரு கணவனாக அவன் எதிர்பார்ப்பதை தன்னால் முழுமனதாக நிறைவேற்றமுடியுமா? அக்காவை பற்றி அறிந்து கொண்டு வார்த்தையால் வதைப்பானோ என்று அஞ்சிக்கொண்டிருந்தவளுக்கு அவனின் ஆறுதல் வார்த்தைகள் மனம் நிறைக்க அவன் மீது மரியாதை வந்தது.
கொஞ்சம் தைரியம் வர தனது மனதிலுள்ள பயத்தை புஷ்பா சொல்ல
“உன் அக்காவுக்கு வந்த கடிதங்கள் இருக்குதானே அதவச்சி அட்ரஸ கண்டு பிடிக்கலாம்” தங்கதுரை நம்பிக்கியாக சொல்ல அவனை பரிதாபமாக பார்த்த புஷ்பா
“அவளோட எல்லா பொருட்களையும் அம்மா தீ வச்சிட்டாங்க” என்ன செய்வதென்று யோசித்தவன்
ஒருவாறு பழைய ஆங்கிலப் பத்திரிக்கையை தேடி எடுத்து ஹிமேஷின் விலாசத்தை கண்டு பிடித்து புஷ்பாவை அழைத்துக் கொண்டு டில்லி செல்ல அவர்கள் வீடு மாறி சென்று விட்டார்கள் என்ற தகவலே கிடைத்தது. பூவரசி யாரையோ நம்பி ஏமாறவில்லை. நன்றாக வாழ்கிறாள் என்ற மனநிமனதியுடன் புஷ்பா தங்கத்துறையுடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள்.
பூவராசியின் நினைவாகவே பாண்டியன் இறைவனடி சேர்ந்து விட பெற்ற மகளை நாள்தோறும் சபித்த படியே செல்லாத்தாவும் போய் சேர்ந்து விட அக்காவின் காதலால் தான் எல்லாமே பிரச்சினை என்று முடிவெடுத்த புஷ்பா காதலை வெறுத்தது மட்டுமல்லாது பிங்கி பிறந்ததிலிருந்து பெண்ணை பெற்ற அன்னையாய் கலக்கமடைந்தாள்.  
பக்கத்து வீட்டு குட்டிப் பையன் ஆகாஷ் பூவராசியின் தோழனாக ஆரோஹி பிறந்ததும் அவளுக்கு பெயர் வைத்ததும் அவனே!
சொந்தபந்தங்கள் இல்லாது வளர்ந்த ஆரோஹிக்கு நண்பனாகவும், அண்ணனாகவும் திகழ்ந்தவன் ஆகாஷ். பாடசாலை சென்று வந்த பின் முழுநேரமும் ஆரோஹியோடு கழிப்பவன் அவளுக்கு வழிகாட்டியாகவும் மாறிப் போனான்.
ஆகாஷின் தந்தை ஒரு ஜாதி வெறி பிடித்த மனிதர். ஆகாஷின் அன்னையோ அதிகம் பேசாதவர். பூவராசியோடு நன்றாக பழகினாலும் அவள் தமிழ் நாட்டை சேர்ந்தவள் என்று அறிந்ததிலிருந்து கணவன் இதை அறிந்தால் ஆகாஷை அவர்களோடு சேர விட மாட்டார் என்று அஞ்சிக் கொண்டுதான் இருந்தார்.
இதற்கிடையில் நிஷாவின் குடும்பமும் அங்கே குடி வர அவளும் இவர்களின் தோழியானாள். அப்போது ஆகாஷுக்கு பத்துவயது. ஆரோஹி அவனை விட ஆறு வயது சிறியவள். நிஷா ஆரோஹியை விட மூன்று வயது பெரியவள்.
இவர்களின் கூட்டணியை ஆகாஷின் தந்தையால் ஒன்றும் செய்ய முடியாமல் போகவே, அவர் ஒரு ஜாதி கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். இதற்கிடையில் ஹிமேஷின் தந்தையும் காலமானார்.  
ஆரோஹி பருவமடைய பூவராசியின் பொறுப்புகளும் அதிகரிக்க எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருக்க பூவராசியின் வாழ்க்கையில் சூறாவளியாக அவளுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாக டாக்டர் சொல்ல அப்போது தான் தனது பெற்றோருடைய நியாபகமும், தங்கையின் நியாபகமும் வந்தது.
ஹிமேஷ் ஒரு நல்ல கணவன், நல்ல தந்தை என்றாலும் ஆரோஹி பெண் குழந்தை அவளுக்கு புஷ்பா துணை நிற்பாள் என்று எண்ணம் தோன்ற வீட்டு எண்ணுக்கு அழைக்க அது இன்றும் இயங்க புஷ்பாவே பேச அக்காவின் குரலை கேட்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள், அன்னையும் தந்தையும் இறந்து விட்டதாக கூற, பூவரசி உடைந்து அழ, சில பல நலன் விசாரிப்புகளும், சண்டைகளும் முடிந்த பின் ஆரோஹியை அனுப்பி வைப்பதாக சொல்லி அனுப்பி வைத்தாள் பூவரசி.
ஹிமேஷ் மறுக்க மறுக்க பூவரசி பிடிவாதமாக ஆரோஹியை அனுப்புவதிலேயே குறியாக இருக்க, புஷ்பாவுடன் அலைபேசியில் தொடர்ப்பு கொண்ட ஹிமேஷ் ஆரோஹியின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னே அனுப்பி வைத்தான்.
அக்கா கணவர் பேசியதில் இனி அக்கா குடும்பத்தோடு தங்களது சுமூகமான உறவு இருக்கும் என்று புஷ்பா நினைக்க அன்னை விட்ட சாபமோ அக்காவின் உயிரை வாங்கியது.
ஹிமேஷிடம் தனது நோயை பற்றி சொல்ல அழுது கரைந்தவன், அவளை குணப்படுத்த முயற்சிகளை எடுக்க, வேண்டாம் கடைசி கட்டம் என்று மறுத்தவள் நாட்களை எண்ணலானாள்.
ஊருக்கு சென்ற ஆரோஹி ஆகாஷுடன் திடீரென வரவும் மகளை அழைத்து பல புத்திமதிகளை கூறியவள் கண்ணை மூட அதன் பின் ஆரோஹியின் வாழ்க்கை சூனியமானது.
ஊரில் விஷ்வதீரன் ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட இருவருக்கும் இடையில் காதல் என்ற எண்ணம் புஷ்பாவின் மனதில் தோன்றவில்லை. ஆரோஹி தாலியை கழற்றி  விஷ்வதீரனின் கையில் கொடுத்து விட்டு ஆகாஷோடு சென்றதை அதிர்ச்சியில் பார்த்திருந்தவள் அக்கா பொண்ணை வடநாட்டவரை போலயே வளர்த்தாளா? இல்ல அவள் நமது சாத்திர சம்பிரதாயங்களை மதிக்காதவளா? ஊர் மக்களும், சொந்தபந்தங்களும் ஆரோஹியின் செயலால் விஷ்வதீரனை விட்டு விட்டு ஆரோஹிக்கு குற்றமாலை சூட்ட புஷ்பா யார் மேல் கோவம் கொள்வதென்று தெரியாமல் இருக்க
ஒரு வாரம் கழித்து அன்னையின் இறப்பு செய்தியை சொல்ல அலைபேசியில் அழைத்திருந்த ஆரோஹியை பிடி பிடி என்று பிடித்துக் கொள்ள, அன்னை இறக்கும் போது இனி சித்தி தான் உனக்கு எல்லாமே என்று சொல்லி இருக்க அலைபேசியில் சித்தி பேசியவைகள் ஏன் என்றோ? தான் செய்த குற்றம் தான் என்ன என்றோ? புரிந்து கொள்ளும் மனநிலையில் ஆரோஹி இருக்கவில்லை.
ஹிமேஷ் ஒரு மூலையில், ஆரோஹி ஒரு மூலையில் என்று தஞ்சம் புக ஆகாஷே அவர்களுக்கு உறுதுணையானான்.
பூவரசி இல்லாத வாழ்க்கை வெறுமையாக. அவள் வாழ்ந்த வீடு தனிமையாக தோன்ற அமெரிக்கா செல்லலாம் என்று முடிவெடுத்த ஹிமேஷ் ஆரோஹியிடம் பகிர அவளோ படிப்பு முடியும் வரை ஹாஸ்டலில் தங்கி கொள்வதாகவும் அதன் பின் வருவதாக கூற ஆகாஷ் தான் பார்த்துக் கொள்வதாக கூறினான்.
அமேரிக்கா சென்ற ஹிமேஷ் ஒரு வருடத்தில் ஒரு ஆங்கில பெண்ணை மணக்க ஆரோஹி விழித்துக் கொண்டாள். அன்னை, தந்தையின் காதல் வாழ்க்கையை கண்கூடாக கண்டிருந்தவள் தந்தையால் எப்படி இப்படி ஒரு காரியத்தை பண்ண முடிந்தது என்று பதின் வயதில் அழுது கரைந்தாள்.
நாட்கள் நகர நகர வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டவள் தந்தையின் மனநிலையையும், உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு “அவரும் மனிதன் தானே எத்தனை நாள் தனியாக இருப்பார்” என்றெண்ணியவள் சகஜமாக பேச சிற்றன்னை ஜெனிபரும் நல்லவளாகவே தெரிய அவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாதவளாக அமெரிக்கா செல்லும் எண்ணத்தை கைவிட்டாள்.
அதன் பின் ஆகாஷின் காதல் வாழ்க்கை ஆண்களையே! வெறுக்க வைக்க, தந்தை  அன்னைக்கு பண்ணது துரோகம் என்று பதின் வயதில் மனதில் பதிந்து போன எண்ணம் மேலோங்கி  “காதல் எல்லாம் சும்மா. என்ன தான் உருகினாலும், உணர்சிகள் வடிந்த பின் உண்மை இல்லை” என்று மனதில் ஆணித்தரமாக படிய காதலையும், கல்யாணத்தையும் வெறுத்தாள். தான் நேசித்த  இரண்டு ஆண்களுமே பொய்த்து போக எந்த ஆணையும் தனது வாழ்க்கை துணையாக  ஏற்றுக்கொள்ள அவள் மனம் விரும்பவில்லை.
இரண்டு குழந்தைகளுக்கு கல்யாணமாகாமல் அன்னையானதும் அதை கூட தந்தை கண்டிக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் தந்தை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்த “முடியாது” என்று கடுமையாக மறுத்தவள் வார்த்தையால் அவரை காயபடுத்த விரும்பாமல் பேச்சை குறைத்தாள்.
பிங்கி வயதுக்கு வரவே புஷ்பாவின் மனம் அடித்துக் கொள்ள தங்கதுரை அவளின் மனதை புரிந்து கொண்டு பிங்கியை வழி நடாத்த அக்காவின் வாழ்க்கையை சொல்லி புலம்பும் புஷ்பாவுக்கு நீ பார்க்கும் மணமகனைத்தான் கல்யாணம் செய்வதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தாள் பிங்கி.
கணவன் இல்லாது குழந்தைகளோடு சென்றால் கண்டிப்பாக புஷ்பா வீட்டில் சேர்க்க மாட்டாள் என்று அறிந்திருந்த ஆரோஹி அன்று சித்தி பேசியவைகளும் அவள் மனதை ராணாப் படுத்தி இருக்க, அன்று சித்தியிடம் பேசியபின் அவர்களை தொடர்ப்பு கொள்ளும் எண்ணத்தை விட்டிருந்தாள்.
தனது வாழ்க்கையில் நடந்தவைகளை நினைத்து பார்த்தவள் ஆகாஷின் காதல் வாழ்க்கையையும் நினைவில் வர ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்து “காதல் கல்யாணம் எல்லாமே உணர்சிக்குள் கட்டுப்பட்டது. உண்மையான காதல் என்ற ஒன்று உலகத்தில் எங்குமில்லை. எல்லாம் உடல் பசியை தீர்க்கவேயன்றி வேறில்லை, பெண்ணுக்கு ஆண் துணை என்பது பொய். ஆணுக்கு பெண் தேவை  என்பதே உண்மை. ஒரு ஆணின் கையில் என் வாழ்க்கையா? நெவெர்” விஷ்வதீரனுக்கு எவ்வாறு மறுப்பு தெரிவிப்பது என்று யோசித்து எவ்வாறு பேச வேண்டும் முடிவெடுத்தவள் பத்து வருட காலமாக அவளை நினைத்து உருகும் அவன் மனதை உணர மறந்தாள் ஆரோஹி.  
இங்கு விஷ்வதீரணும் ஆரோஹியை எப்படியாவது சம்மதிக்க வைத்தது விடலாம் என்று எண்ணி தாத்தாவின் நண்பரும் விஷ்வதீரனுக்கு இந்த கேஸை ஒப்படைத்தவருமான முதலமைச்சரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றான்.  
“வாப்பா தீரா என்ன இந்த பக்கம் கேச முடிக்காம இங்க வரமாட்டியே” என்றவர் அவனை அமரும் படி செய்கை செய்தவாறே தானும் அமர்ந்து
“என்ன சாப்பிடுற” என்று கேக்க
அவன் வந்த காரியம் நடக்கணும் “இவரால் கண்டிப்பாக முடியும்” என்று வந்தவன் எப்படி ஆரம்பிக்கிறது என்று யோசிக்க அவர் என்ன சாப்பிடுறாய் என்று கேட்டதில் “ஏதாவது ஜில்லுன்னு” என்று சொல்ல
“ஜில்லுனு பியர் சொல்லவா” கிண்டலாக அவர் கேக்க
அவரை முறைத்தவன் ” உங்க நண்பர நம்பி விட்டா கெட்ட பழக்கங்கள சொல்லி கொடுக்குறாருனு தாத்தா கிட்ட சொல்லுறேன்”
“ஆமா பச்சை புள்ள நீ.  நா வேற சொல்லி கொடுக்கணுமோ! ட்ரைனிங் பீரியட்ல என்னெல்லாம் பண்ணி இருக்க எல்லா விஷயமும் எனக்கு தெரியும். எங்க அவன் உன் அன்புத் தம்பி அவனும் கூட்டு. பாவம்னு உன் தாத்தா கிட்ட நா சொல்லாம இருந்தா என்ன நீ போட்டு கொடுக்கிறியா” கிண்டலாக மனம் விட்டு பேசியவர் குடிக்க குளிர்பானம் வரவழைத்து அவன் கையில் கொடுக்க விஷ்வதீரணும் சகஜநிலைக்கு வந்திருந்தான்.
“யாரந்த பொண்ணு? அக்கியூஸ்ட் பின்னால மோப்பம் புடிக்கிறவன் பூவாசம் புடிக்கிறதா நியூஸ்ல சொன்னாங்க” கிண்டலாகவே கேக்க
“உங்க கண்ணுல இருந்து ஒன்னும் தப்பாதோ” புன்னகையாகவே
“ஊற பாத்துக்கணு உன் கைல கொடுத்துட்டு நா சும்மா இருக்க முடியுமா? நீ என்ன வேல பாக்குறானு நான் தெரிஞ்சி கிட்டா தானே, நீ ஊற எப்படி பாத்துப்பன்னு எனக்கு தெரியும்” அவரும் புன்னகைக்க
“சூப்பர்” என்று சிலாகித்தவன் “நான் அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கிட்டேன்” என்று ஆரம்பித்தவன் தனது வாழ்க்கையில் நடந்ததை சொல்ல
ஏற்கனவே தீரமணியும் நண்பனிடம் புலம்பிய படியால் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் “நா என்ன பண்ணனும்” என்று கேக்க
விஷ்வதீரன் தன் திட்டத்தை சொல்ல சில பல கேள்விகளுக்கு பின்
அவனை இரக்கமாக பார்த்தவர் “நீ சொன்ன படியே நடக்கும். அப்படியே கேஸையும் சீக்கிரம் முடிச்சிட்டு” என்று அவனுக்கு விடை கொடுக்க விஷ்வதீரணும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவோடு வீடு சென்றான்.
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

Advertisement