Advertisement

                                                             அத்யாயம் 11
வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை “மம்மி” என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு
“நீ தீரா தானே! ஆளே மாறிட்ட” என்று சிரிக்க
அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க
“விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்” என்றவள் “நீயும் என் மேல கோவத்துல தான் இருக்கியா?” தீரமுகுந்தனின் கையை பிடித்து கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
அவள் தாலியை கழட்டி கொடுத்தது ஏன்? என்பதை கேக்கிறாளா? குழந்தைகளின் விஷயத்தை மறைத்தது பற்றி  கேக்கிறாளா?  என்று புரியாம தீரமுகுந்தன் யோசிக்க ஆரோஹி தீரமுகுந்தனின் கையை பிடித்திருப்பதை பார்த்தவாறே உள்ளே நுழைந்தான் விஷ்வதீரன்.
அண்ணனை கண்டு குறும்பு தலைத்தூக்க ஆரோஹியின் கைகளை பற்றிக் கொண்டவன் “கோவம் இருந்துச்சு ஆனா நீங்க எனக்கு அண்ணியா வந்தா கோவத்த மறந்துடுறேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்க்கும் படி கூறியவன் விஷ்வதீரனை பார்த்து கண்ணடிக்க ஆரோஹி அவனை யோசனையாக பார்த்தாள்.
ஆரோஹி கையை பிடித்திருப்பதை பார்த்தவாறே வந்தவன் தீரமுகுந்தன் வேண்டுமென்றே செய்வது புரிந்தாலும், கோபமா? பொறாமையா? என்று பிரித்தறிய முடியாமல் உள்ளுக்குள் மனம் எரிய, ஆரோஹியை கடியமுடியாமல் தீரமுகுந்தனின் மேல் அனல் பார்வையை செலுத்தினான்.
அஜய்யும், விஜய்யும் “டாடி” என்றவாறே வந்து விஷ்வதீரனின் மேல் தொங்கி இருந்தனர்.
குழந்தைகளிடம் கொஞ்சியவாறே தீரமுகுந்தனை முறைத்தவன் “உடனே போய் மிதுன பாரு” என்று கட்டளையாக சொல்ல உள்ளுக்குள் சிரித்தவாறே தீரமுகுந்தன் விடைபெற்று சென்ற உடன் ஆரோஹியின் பக்கம் திரும்ப அவளும் அவனை தான் பாத்திருந்தாள்.  
“என்ன” என்று புருவம் உயர்த்தி கேட்டவனை
ஒரே ஒருநாளில்  குழந்தைகளை தன் பக்கம் சாய்த்திருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்தவாறே “இது எப்போதுல இருந்து”  என்று குழந்தைகளை கண்ணால் காட்ட
கண்சிமிட்டி புன்னகைத்தவன் அவளை தன் அருகில் அழைக்க “முடியாது” எனும் விதமாய் தலையசைத்தவள் உள்ளே செல்ல
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன்  “போடி போ இன்னும் எத்தனை நாளைக்கு தான் என் கிட்ட இருந்து ஓட போற, எங்க சுத்தினாலும் கடைசில என் முன்னாடி தான் வந்து நிற்கணும்” என்று கருவிக்கு கொண்டான்.
ஆரோஹிக்கும் அவன் பேசியதை பற்றி நிறைய யோசிக்க வேண்டி இருக்க, ஊர் கோவிலில் நடந்த சம்பவமும் கண் முன் தோன்றி இம்சிக்க மேலும் அவளை யோசிக்க விடாது புஷ்பா குடும்பத்தோடு வந்திறங்கினாள்.
அழுதவாறே தான் வந்தாள் புஷ்பா. விஷ்வதீரனை கண்டு ஒரு நொடி திகைத்தாலும், குழந்தைகளை கண்டு யோசனையாக பார்க்க அவர்களும் விஷ்வதீரனை “டாடி” என்று அழைப்பதும், அவனும் அவர்களிடம் செல்லம் கொஞ்சுவதுமாக இருப்பதை கண்டு பிங்கியை முறைத்தாள்.
ஏனெனில் ஆரோஹியை பற்றியும் குழந்தைகளை பற்றியும்  சொல்லியவள் ஆரோஹியின் கணவனை பற்றி சொல்லி இருக்கவில்லை. பிங்கிக்கே தெரியாத விஷயத்தை எப்படி சொல்வாள்? அது மட்டுமின்றி ஆரோஹியின் குழந்தையை கடத்தி விட்டார்கள் என்று சொல்லியதிலிருந்தே! அக்கா இறந்த பின் சொந்தமென்று தான் இருந்தும்  குழந்தைகளை சுமந்த போது தனியாக என்ன கஷ்டத்தை அனுபவித்திருப்பாளோ என்று எண்ணி அழ தொடங்கியவள் ஆரோஹியை கண்டதும் அவளை கட்டிக்க கொண்டு மேலும் அழ அவளை சமாதானப் படுத்துவது ஆரோஹிக்கு பெரும் பாடாகிப்போனது.
‘அம்மா நீ அக்காவ பாக்க வந்தியா? இல்ல ஒப்பாரி வைக்க வந்தியா?” பிங்கி அதட்ட
அவளை முறைத்த புஷ்பா “மாப்புள அவ உங்க கூட தான் இருந்தங்குறது சந்தோசம். நாங்க திருச்சிக்கு வந்தது அவளுக்கு தெரியாம இருக்கலாம் நீங்க நினைச்சிருந்தா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்க மாட்டிங்களா? ஆனாலும் சொந்தம்னு நாங்க இருக்கும் போது அவள எங்க கண்ணுலயும் காட்டாம இருந்திட்டீங்களே!” என்று குறை பட
என்ன சொல்வதென்று விஷ்வதீரனுக்கே புரியவில்லை. ஆரோஹி துரோகமிழைத்தாள் என்று தினம் தினம் அவளை வஞ்சித்துக் கொண்டிருந்தவன் அவளை மீண்டும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கி ஆரோஹி என்றாவது அவர்களை தொடர்ப்பு கொண்டால்? அவளை பார்த்தாலாவது மனதிலுள்ள ரணம் குறையும் என்றிருந்தவன்  பிங்கியின் வீட்டை கண்காணிக்கலானான். அப்படித்தான் பிங்கியை பற்றியும் முழு விவரம் கிடைத்தது. பதில் சொல்ல போன ஆரோஹியை கண்ணால் தடுத்தான் விஷ்வதீரன்.
ஆயிஷாபேகம் வந்து அனைவருக்கும் குளிர்பானம் வழங்க அவரின் கைகளை பிடித்துக் கொண்ட புஷ்பா “அக்கா இறந்தது கூட தெரியாம என் பொண்ண என்னென்னவெல்லாமோ பேசிட்டேன். அவ பிரசவ சமயத்துல கூட இருந்து பாத்துகிட்டத்துக்கு ரொம்ப நன்றி” என்று கூற
ஆயிஷாவோ விஷ்வதீரனை பார்க்க, அவரின் பார்வை சென்ற திசையை பார்த்த புஷ்பா விஷ்வதீரன் தான் ஆயிஷாவை ஏற்பாடு செய்து ஆரோஹியை பார்த்துக் கொண்டான் என்று நினைத்து நன்றியோடு அவனை பார்க்க அவனின் முகமோ எந்த ஒரு உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை.
எல்லாம் தன் கைமீறி நடப்பது போலவே ஆரோஹிக்கு தோன்றினாலும் அமைதிகாத்தாள்.
ஒருவாறு சமாதானமடைந்த புஷ்பா சகஜமான நிலைக்கு வர அங்கே சந்தோச பேச்சலைகள் ஆரம்பமானது. அஜய்யும், விஜய்யும் தங்களுக்கு கிடைத்த புதிய உறவுகளோடு ஒட்டிக் கொண்டு திரிய பிங்கி விஷ்வதீரனுடன் ஐக்கியமானாள்.
“விஷ், விஷ்” என்று அவள் அவனை அழைப்பதை கண்டு புஷ்பா
“என்ன மரியாதையில்லாம பேசுற மாமான்னு கூப்பிடு” என்ற அதட்டலோடு உள்ளே செல்ல மாலை வருவதாக கூறிக் கொண்டு விடைபெற்று கிளம்பினார் தங்கதுரை.
அகில் குழந்தைகளோடு விளையாட ஆரம்பிக்க புதிதாய் கிடைத்த மாமாவுக்கு ஆர்ம்ஸ் இல்லை என்ற குறையுடனேயே அவனை படுத்தி எடுத்தனர் குழந்தைகள்.
“சோ மாம்ஸ். லைஃப் எப்படி இருக்கு” பிங்கி நக்கலாக கேக்க
ஸ்டைலாக காலுக்கு மேல் காலை போட்டவன் அவளை நேர் பார்வை பார்த்தவாறே “எனக்கென்ன குற, அழகான பொண்டாட்டி, ரெண்டு சிங்கக்குட்டிங்க, என் லைஃப் ஜம்முன்னுதான் இருக்கு. நீ எப்போ கல்யாணம் பண்ண போற” என்று அசால்ட்டாக கேக்க
“அடப்பாவி உலகமகா நடிப்பு இது” என்று அவனை முறைத்தவள்.
தீரமுகுந்தனின் முகம் கண்முன் வந்து போக தலையை உலுக்கிக் கொண்டு “அத அப்பா பாத்துக்க கொள்வார்” என்று புன்னகைக்க அவனின் போலீஸ் கண்ணில் பிங்கியின் சோக கண்கள் சிக்கினாலும் ஆரோஹி அங்கு வரவே அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்து இதயம் காதல் நாதம் வாசிக்க அவளை ரசிக்க ஆரம்பித்தவன் பிங்கி அங்கிருப்பதையும் பொருட்படுத்தாது
“ஆரா” காதல் கொஞ்சும் குரலில் அழைக்க அவனை  முறைத்து விட்டு அங்கிருந்த டம்ளர்களை எடுத்துக் கொண்டு அகன்றாள்  ஆரோஹி.
இவர்களின் நாடகத்தை பார்த்த பிங்கிக்கும் தீரமுகுந்தன் சொன்னது போல் டில்லியில் என்ன தான் நடந்தது? ஒரே குழப்பமாக இருக்கு, விஷ் நடத்துகிறது பாத்தா ரொம்ப அந்நியோன்யமா இருக்காங்க னு தோணுது. அக்காவ பாத்தா விஷ் மேல கடுப்புல இருக்கிற மாதிரி தான் தோணுது” ஆழ்ந்த யோசனையில் விழுந்தாள் பிங்கி.
மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் விஷ்வதீரனுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க ஆரோஹியிடம் சொல்லிக் கொண்டு போகவேண்டும் என்ற பிடிவாதம் தலை தூக்க கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் அவளை என்ன செய்வதென்று இருந்தவனுக்கு சாப்பிட்டு விட்டே போகும் படி சொல்ல “சரி” என்று சொன்னவன் சாப்பாட்டு மேசையில் அமர
“ஆரோஹி அங்க என்ன பண்ணுற வந்து மாப்பிளைக்கு பரிமாறு” புஷ்பாவின் குரல் தனது அம்மாவின் குரல் போல் இருந்ததாலையே மறுக்கத்தோன்றாமல் அமைதியாக வந்து பரிமாற
விஷ்வதீரேனோ “இனிமேல் எல்லாம் இப்படித்தான்” என்ற பார்வையோடு அவளை பார்த்து கண்சிமிட்ட மனம் அவனை ரசிக்க “வேண்டாம் ரூஹி” உள்மனம் கூச்சலிட அவன் புறம் பார்ப்பதை தவிர்த்தாள்.  
ஆரோஹியை  கவனித்த புஷ்பா “ஆரோஹி தாலி எங்கடி” என்று கேக்க என்ன பதில் சொல்வதென்று ஆரோஹி முழிக்க
“ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணோம் அத்த. தாலியெல்லாம் கட்டல, ஏற்கனவே கட்டினத தான் கழட்டி கொடுத்துட்டு போய்ட்டாளே!” விஷ்வதீரனின் வாய் புஷ்பாக்கு பதில் சொன்னாலும் பார்வை முழுவதும் ஆரோஹியின் மேலேயே “இப்போ என்னடி செய்வ” என்று இருந்தது.
புஷ்பா ஆரோஹியை முறைத்தவாறே “இவளுக்கு தான் நம்ம சாத்திர சம்பிரதாயங்கள் எதுமே தெரியலையே! கழுத்துல தாலி இல்லாம இருந்தா ஊரு உலகம் தப்பா பேசுமே! ஒரு நல்ல நாள் பார்த்து தாலி கட்டுற சம்பிரதாயத்தை வச்சிக்கலாமா?” புஷ்பா விஷ்வதீரன் என்ன சொல்லுவானோ என்று கலக்கமாகவே பார்க்க
உள்ளுக்குள் சிரித்தவன் “இவங்கள பேச விட்டா நான் நினச்சத நடத்தி கொடுத்துடுவாங்க போல இருக்கே” என்று ஆரோஹியை பார்த்து கண்ணடித்தவன், “நீங்க சொன்னா சரிதான் அத்த ஆனா அப்பா, தாத்தா கிட்ட கலந்து பேசி எதுவானாலும் பண்ணலாம்” என்று சொல்ல புஷ்பா சந்தோசமாக தலையசைத்தாள்.
விஷ்வதீரன் ஒரு முடிவோடுதான் இருந்தான். ஆரோஹியே மறுத்தாலும் அவளை அடைவதென்று. பதின் வயதில் அவசரப்பட்டு செய்ததை போல் இல்லாது தனக்கு உறவென்று உள்ளவர்களின் ஆசிர்வாதத்தோடு அவளை கைப்பிடிக்க ஆவல் கொள்ள புஷ்பாவே பேசும் போது வீட்டில் பேச முடிவெடுத்தவன் அறியவில்லை இதனால் தீரமுகுந்தன் மாட்ட போகும் சிக்கலை.
விஷ்வதீரன் சந்தோசமாக ஆரோஹியிடம் விடை பெற்று செல்ல அவள் என்ன முடிவெடுப்பதென்று முற்றாக குழம்பித்தான் போனாள்.
கோவிலின் உள்ளே சென்றவளோ சாந்தமான அம்மனின் முகத்தை பாத்து “என் வாழ்க்கைல என்னென்னமோ நடந்திருச்சு, என் கூட இருந்தவங்களையெல்லாம் பிரிச்சிட்ட, இப்போ எதுக்கு என்ன இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க”
“என் வாழ்க்கைல என்ன நடக்கணுமோ அத நடத்திட்ட, இவள பிரிஞ்சி இத்துன வருஷமா படாது பாடு பட்டுட்டேன், இனிமேலும் பிரிஞ்சி இருக்க என்னால முடியாது, இன்னைக்கி அவகிட்ட மனச விட்டு பேசணும்னு முடிவெடுத்து கூட்டிட்டு வந்துட்டேன். நீ தான் எல்லாத்தையும் நடத்தி கொடுக்கணும்” விஷ்வதீரேனோ கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்தான். வேண்டுதலை முடித்து கொண்டவன் ஆரோஹியை ஏறிட அவளோ அம்மனை பாத்திருக்க அவள் அம்மனிடம் மனத்தால் சண்டையிட்டு கொண்டிருக்கிறாள் என்று தோன்ற அவளின் தோளின் மேல் கைவைத்து உலுக்கி
“ஆரா வா அங்க கொஞ்சம் உக்காந்துட்டு போலாம்” என்று சொல்ல அவன் கூடவே ஆரோஹி நடக்க விஷ்வதீரனின் போன் அடித்தது.
“அதோ அங்க உக்காரு இதோ வந்துடுறேன்” என்று விஷ்வதீரன் போன் பேச செல்ல ஆரோஹி அவ்விடத்தை நோக்கி நடக்க அங்கே குறி சொல்லும் ஒரு பெண் அவளை அழைத்தாள்.
“எதுக்கு கூப்டீங்க” என்று ஆரோஹி அவரை ஏறிட
“கைய குடுமா, உன் எதிர்காலத்தையே சொல்லுறேன்”
கசப்பான புன்னகையில் அவரை கடக்க முயன்றவளை தடுத்தது அவர் குரல்
“புருஷன்னு தெரியாம புருஷன் கூட வந்திருக்க, கட்டின தாலிய கழட்டி கொடுத்துட்டா கட்டினது இல்லனு ஆகிடுமா? உனக்கும் அவனுக்குமான பந்தம் இல்லனு போய்டுமா?”
அவரை திரும்பி பார்த்தவள் கைப்பையை திறந்து ஒரு இருநூறு ரூபாயை எடுத்து நீட்ட
“உன் கையை பிடிச்சு பாக்காம காசு வாங்க மாட்டேன், சோறு எனக்கு ஆத்தா போடுவா” என்று சொல்ல அங்கே வந்த ஒரு ஜோடி
“ஆத்தா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம், ரெண்டு வீட்டிலேயும் சேர்த்துக்கள கொஞ்சம் பார்த்து சொல்லு” என்றதும்
ஆரோஹியின் கண்கள் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியின் பக்கம் செல்ல அது மஞ்சள் கயிறாளான தாலியாக இருக்க “எங்கயோ பாத்திருக்கோமே” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
“இந்தாம்மா இத கொண்டு போய் அந்த வேப்ப மரத்துல கட்டு” என்று அந்த குறி சொல்லும் பெண் மஞ்சக்கயிறை ஆரோஹியின் கையில் கொடுத்து  “அந்த மரத்துல கட்டுமா எல்லாம் நல்ல படியாக நடக்கும்” என்று வற்புறுத்தி சொல்ல
மரத்தை பார்த்தவளுக்கோ அங்கே நிறைய மஞ்சக்கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்க கையில் உள்ளதை “இது என்னது” என்று சிறு நடுக்கத்துடன் அவரை பார்க்க
“தாலி அத ஒரு ஆண் ஒரு பெண்ணின் கழுத்துல கட்டினா அவங்களுக்கு கல்யாணம் நடந்ததா அர்த்தம்” பதில் விஷ்வதீரனிடமிருந்து வரவே அதிர்ச்சியாக  அவனை பார்த்தவள்
அன்று ஊரில் நடந்தவைகளை மனதில் ஓட்டிப் பார்த்து “ஏன் அன்னைக்கு அப்படி செய்தாய். உன்னை நண்பனாக ஏற்றத்துக்கு இது தான் நீ செய்வதா” என்று குற்றம் சாட்டும் பார்வையை வீச அவளின் கை பிடித்து மரத்தின் அருகில் அழைத்து சென்றவன்
“ம்ம் கட்டு” என்று உத்தரவிடும் தொனியில் சொல்ல அவள் மறுத்து வாய் திறக்கும் முன்
“அன்னைக்கி ஏன் அப்படி பண்ணேன்னு தெரிஞ்சிக்க வேணாமா? சீக்கிரம் கட்டு” என்று புன்னகைக்க “நீ கட்டாமல் உன் கேள்விகளுக்கு பதிலும் கிடைக்காது, இந்த இடத்தை விட்டு அசையவும் மாட்டேன்” என்றிருந்தது அவன் பார்வை.
என்ன நினைத்தாளோ தாலியை மரத்தில் கட்டியவள் விறு விறுவென கோவிலை விட்டு வெளியேற விஷ்வதீரன் அவளை பின் தொடர்ந்து அவளை இழுக்காத குறையாக வண்டியில் அமர்த்தி வண்டியை கிளப்பி இருந்தான்.
 
ஆரோஹிக்கு தலை வலிப்பது போல் இருக்க தலையை பின்னோக்கி சாய்த்துக் கொண்டவள், அன்று புஷ்பா கத்திய கத்தலும், அன்னை இறந்த செய்தியை சொல்ல அழைப்பு விடுத்த போது பேசியவைகளும் நியாபகத்தில் வந்து “எல்லாம் இவனால்” என்று விஷ்வதீரனின் புறம் திரும்பி அவனை முறைக்க,  வண்டியை ஆள்அரவம் அற்ற சாலையில் நிறுத்தி இருந்தான் விஷ்வதீரன்.
“இதை சொல்லத்தான் உன்னை அழைத்து வந்ததே! அந்த அம்மனே உனக்கு புரிய வச்சிட்டா” என்று ஆரோஹியை பார்க்க
“ஏதோ வீர சாகசம் பண்ணது மாதிரி சொல்லுறத பாரு” மனதுக்குள் திட்டியவாறே “தாலி கட்டிட்டா மட்டும் கல்யாணம் ஆகுமா?” என்று அவனை முறைக்க
“ஆகாது தான் பாஸ்ட் நைட் னு ஒன்னு நடக்கணும்” என்று கண்ணடிக்க அவனை அடிக்க ஆரம்பித்தாள் ஆரோஹி.
அது கூட அவள் மனது அவனை உரிமையாக ஏற்று கொண்டது  என்பதை புரியாமல் இருப்பது யார் கொடுத்த சாபமோ?
அவளின் கைகளை பிடித்து கொண்டவன் “ஆரா உனக்கு என்ன கோவம் என் மேல? தாலி கட்டினதா? இல்ல உன்ன வந்து பார்க்காததா?”
“நான் தான் உன்ன லவ் பண்ணவே இல்லையே பின்ன ஏன் இப்படி பண்ண?”
“நீ தானே சொன்ன என்ன விரும்புறேன்னு? அதுக்கு லவ் பண்ணுறேன்னு இல்லாம வேறென்ன அர்த்தம்”
பிங்கி அவளிடம் விளையாடியதாக நினைத்து மனதுக்குள் திட்டி தீர்த்தவள் சொல்லவருவதை கேக்காமல்
“எதுக்கு விஜய் கிட்ட டாடி நேம் விஷ் னு சொன்ன?”
“நா எப்போ சொன்னேன்? நா சொல்லல” ஆரோஹி உடனே மறுக்க
அவளின் வாயில் விரலை வைத்து “பேசாதே” என்று தடுத்தவன்
ஒரு நாள் நீ தனியா உக்காந்து அழும்  போது அஜய்யும், விஜய்யும் வந்து டாடி நேம் என்னனு கேட்டிருக்கானுங்க உன் வாயிலிருந்து “விஷ்” னு தான் வந்திருக்கு. அவன் மேலும் கேள்வி கேக்காமல் ஆயிஷாம்மா கூட்டிகிட்டு போய் இருக்காங்க. வேணும்னா ஆயிஷாம்மா கிட்டயே கேளு. உன்னை மறந்து சோகத்துல இருக்கும் போது கூட என் பேர் தான் உன் வாயில் வந்திருக்கு, இது போதும் டி உன் மனசுல நான் இருக்கேனு சொல்ல. நீ தான் புரிஞ்சிக்காம இருக்க. எங்க ரெண்டு பேரோட பந்தம் ஜென்ம ஜென்மமா தொடருதுனு நான் நினைக்கிறன். இல்லனா உன்ன பார்த்த உடனே உன் கிட்ட மொத்தமா விழுந்திருக்கவும் மாட்டேன், நீ என்ன காதலிக்கிறதாக சொன்ன உடனே உன்ன விட்டுட கூடாதுனு சட்டுனு அம்மன் கழுத்துல இருந்த தாலிய எடுத்து கட்டி இருக்கவும் மாட்டேன்.  நீ என்ன ஏமாத்திட்டதா நினைச்சி தினம் தினம் உன்ன மறக்க முடியாம தவிச்சு கிட்டு இருக்கவும் மாட்டேன்” என்று அவளின் கண்களை பார்த்தவாறே சொல்ல வாயடைத்து போனாள் ஆரோஹி.
ஒருவேளை அன்று ஆகாஷ் வராமல் இருந்திருந்தால்? விஷ்வதீரனை பிரியும் போது ஆரோஹி காதலை உணர்ந்திருப்பாளோ? ஒருவேளை அன்னையும் உயிரோடு இருந்து தந்தையும் அவள் கூடவே இருந்திருந்தால்? அவர்களின் காதல் வாழ்க்கையால் அவளின் மனதில் காதல் பூ பூத்திருக்குமோ? அல்லது ஆகாஷின் வாழ்க்கையாவது நன்றாக இருந்திருந்தால்?
ஊரில் அவனை பார்த்ததோடு சரி அவனின் நினைப்பே அவளுக்கு வந்ததில்லை. காதல் என்றாலே அவளுக்கு கசந்து வழிந்தது, அது தனது அன்னையின் காதலாலும் அவள் பாசம் வைத்த ஆகாஷின் காதலாலும், இதில் அவள் ஒரு ஆணை நம்பி காதலில் விழ தயாராக இல்லாத போது தன்னையே ஒருவன் பத்து வருட காலங்களாக காதலிப்பதாக சொல்வது ஆச்சரியமான விஷயம் என்றாலும் வாழ்க்கையில் அவள் கண்டவைகள் விஷ்வதீரனை நண்பனாக முழுமனதோடு ஏற்றுக் கொண்டாலும், காதலனாகவோ, கணவனாகவோ நினைத்து பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் அவள் மனம் இடமளிக்கவில்லை.  
“நோ விஷ் என்னால கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது, எனக்கு அதுல நம்பிக்கையில்ல.  நீ என் நண்பனாகவே இரு அது போதும். காலம் மாறிருச்சு, ஒரு ஆண் துணை இல்லாம பெண்ணாலே வாழ முடியும் நான் வாழ்ந்து காட்டுறேன்” என்று ஒரு முடிவோடு சொல்ல
“இவ்வளவு நாளும் அஜய்யும், விஜய்யும் அப்பா எங்கன்னு கேக்கலைனு நீ நினைச்சி கிட்டு இருக்க, ஆனா இவனுங்களுக்கு அப்பா பேர், எப்படி இருப்பார் என்கிற வரைக்கும் தெரிஞ்சிருக்கு. இதுதான் டி கடவுளின் முடிவு. கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும், அஜய்க்கும் விஜய்க்கும் நான் தான் அப்பா” விஷ்வதீரனின் குரல் தீவிரமாக ஒலிக்க
அப்பொழுதுதான் குழந்தைகளின் நியாபகம் அவளுக்கு வந்தது
“குழந்தைங்க எங்க விஷ்? நா உடனே அவங்கள பாக்கணும்”
“ஏன் குழந்தைகளை கடத்தி உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சியா?” தான் கடத்தி அவளை அடைய நினைத்ததை இப்படி சொல்ல அவளின் முகமோ பயத்தை பூசிக்கொண்டது.
அவளை இறுக அணைத்தவன் “லூசு பொண்டாட்டி எந்த அப்பனாவது புள்ளைங்கள கடத்தி அம்மாவ கல்யாணம் பண்ணிப்பானா? தீரன் தான் கோவில்ல வச்சு  போன் பண்ணான் பசங்க பண்ணும் சேட்ட தாங்க முடியாதுன்னு கூட்டி கிட்டு வறானாம்” என்றவன் அவளின் கன்னத்தில் முத்த மிட்டே விலகினான்.
அவனின் அணைப்பையோ முத்தத்தையோ தடுக்காதவள் காதலை உணராமல் இருப்பதை நினைத்து வருந்தியவன் அமைதியாகவே வண்டியை வீட்டுக்கு செலுத்தினான்.
அவன் பேசியவற்றை நினைத்து பார்த்தவள் குழந்தைகளும் விஷ்வதீரனுடன் ஒன்றிவிட்டார்கள் அவனும் அவர்களை ஏற்றுக் கொண்டான். குழந்தைகளுக்காக விஷ்வதீரனை கல்யாணம் பண்ணலாமா? என்ற எண்ணம் தோன்ற, அவளின் மனசாட்ச்சியோ “நீ இந்த ஜென்மத்தில் திருந்தவே மட்ட” என்று வசை பாடியது.   

Advertisement