Advertisement

                                                        அத்தியாயம் 21
காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது. 
உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் “இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு” என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க 
“பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி” என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள் வாயினுள் திணித்தான். 
அவன் ஊட்டி விட்டதை சாப்பிட்டவாறே அவனை முறைத்து பார்த்தவள் “நீ வேணா காஞ்ச ரொட்டிய சாப்பிடு, நா நெய் தோசை தான் சாப்பிடுவேன்” என்று அவன் கன்னம் கிள்ள 
“அடியேய் நெய், வெண்ணனு சாப்பிட்டு உன் கன்னம் தான் உப்பி இருக்கு, ஏன்டி  என் கன்னத்த கிள்ளுற?” என்று அவன் கன்னங்களை உப்பியவாறே கன்னத்தை தடவிக் கொள்ள 
“அச்சோ வலிக்குதா?” என்று மீண்டும் கிள்ளியவள் ஹிஹிஹி என்று இளித்தாள்.  அங்கே அனைவரும் இருக்க, இவர்களின் காதல் நாடகம் அரங்கேற
ஓ… கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்தப் பீழா என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ… ம்…
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ… ம்…
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வாழ்க்கை அவள் வார்த்தையில்
 
பிங்கிக்கு குடும்ப உறுப்பினர் அனைவரும் ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவள் யதார்த்தமான ஒட்டிக் கொள்ள ஆரோஹி தான் கொஞ்சம் தடுமாறினாள்.
அன்று நடந்தது அவளை பொறுத்த மட்டில் கல்யாணமே அல்ல என்ற போதும், வீட்டாருக்கும், விஷ்வதீரனுக்கும் அவள் தாலியை மதிக்காது கழட்டி கொடுத்து விட்டு சென்றவள் அல்லவா? ஏதாவது சொல்வார்களோ! ஏடா கூடமாக கேப்பார்களோ என்று அஞ்சியவாறே அவள் இருக்க,  யாரும் அவளிடம் கடந்த காலத்தை பற்றி கேக்கவில்லை. குழந்தைகளையும் உடனே ஏற்றுக் கொண்டதும் அவளை வியக்க வைத்திருக்க இவர்களிடம் அப்படி என்ன சொல்லி இருப்பான் ஆரோஹியின் பார்வை விஷ்வதீரனின் மேல் இருக்க அவனோ!
வீட்டார் அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்தில் பிங்கி தீரமுகந்தனின் கன்னத்தை கிள்ள 
“தம்பி ஹனிமூனுக்கு டிக்கட் எங்க போடணும்” என்று விஷ்வதீரன் கிண்டலாக கேக்க
தீரமுகுந்தன் என்ன பதில் சொல்வதென்று முழிக்க 
“ஹனிமூன் தானே போலாமே நீங்களும் அக்காவும் எங்க போறீங்க அங்கயே போலாம். இல்லங்க”  என்று தீரமுகுந்தன் புறம் திரும்பி உதட்டை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பியவள் ஆரோஹியின் புறம் திரும்பி “எங்க போறீங்க?” வெகுளித்தனமாக கேற்பதாக மற்றவர்களுக்கு தோன்றினாலும் தீரமுகுந்தனின் பார்வை அவளை எடை போட, மனமோ அவளின் செயலால் கவரப்பட்டு  உள்ளுக்குள் சிரிக்க  சலீம் பாய் வந்து பரிமாற அவரை ஏறிட்டான். அவரிடத்தில் எந்த பதட்டமோ, குழப்பமான மனநிலையே இருப்பதாக தெரியவில்லை.
“எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே? இதுக்கும் நீயே சொல்லு” என்று ஆரோஹி விஷ்வதீரனின் பக்கம் திரும்பி கண்ணால் மிரட்ட
அவள் கண்கள் சொல்லும் பாஷையை புரிந்தவன் புன்னகைத்தவாறே “நாங்க போலீஸ் மா, இப்படி திடீரென எங்கயும் போக முடியாது” 
“பெரிய பிஸ்தா போலீஸ்” பிங்கி முணுமுணுக்க 
“இப்போ ஒரு முக்கியமான கேஸ்ல இன்வோல் ஆகி இருக்கோம் அது முடியட்டும்” 
“அப்போ இந்த ஜென்மத்துல ஹனிமூன் போக முடியாது” மீண்டும் பிங்கி முணுமுணுக்க 
“நீ சொல்லுறது எனக்கு கேட்டிருச்சு” என்று தீரமுகுந்தன் அவள் புறம் சாய்ந்து சொல்ல 
“கேக்கத்தாண்டா சொன்னேன் என் வெண்ண”
“என்ன சொன்ன”
“வெல்ல கட்டி” என்று இளிக்க அவளை முறைத்தவாறே எழுந்தவன் விடை பெற 
“ஏய் எங்க சொல்லாம கொள்ளாம போற? பொண்டாட்டிக் கிட்ட சொல்லிட்டு போ” பிங்கி அவனை மிரட்ட  அப்பாவும், தாத்தாவும் புன்னகைத்துக் கொண்டனர்.
“சரி டி பொண்டாட்டி போயிட்டு வரேண்டி பொண்டாட்டி” என்று டி களை அள்ளி விட 
“என்ன மாமா உங்க பையனுக்கு ட்ரைனிங் என்ன குடுத்தீங்க?” என்று திருமாறனை ஏறிட அனைவரும் அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்க 
திருமாறனை முறைத்தவாறே “வேலைக்கு போற புருஷன் பொண்டாட்டி கிட்ட கிஸ் கொடுத்து கிஸ் வாங்கிட்டு தானே போகணும். இதெல்லாம் நீங்க சொல்லி கொடுக்க மாட்டிங்களா?” தனது அதிமுக்கியமான சந்தேகத்தை எழுப்பியவள் அனைவரையும் மாறி மாறி பார்க்க
“உங்க கொடுக்கல், வாங்கல்ல தலையிட முடியாதும்மா. பிரச்சின பண்ணுறான்னா சொல்லு கோட்டுல கேஸ் போட்டுடலாம்” சிரித்தவாறே திருமாறன் சொன்னார்.
பெண்களே இல்லாமல் இருந்த வீடு, இன்று அவளால் அனைவரும் நொடிநேரமும் சிரித்துக்கொண்டே இருக்க பிங்கி பேசியதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.  
 
 தீரமுகுந்தனுக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரையேறி வாயாலும், மூக்காலும் வர அனைவரும் வந்த சிரிப்பை வாய்க்குள் சாப்பாடோடு திணிக்க விஷ்வதீரன் ஆரோஹியை ஏக்கமாக பார்த்தான். 
“இன்னம் கொஞ்சம் நேரம் இருந்தா என் மானத்த கோணில போட்டு ஆணியடிச்சு ஏணில ஏத்தி தோணில இறக்கி பத்திரமா அனுப்பி வச்சிடுவாளே” தீரமுகுந்தன் அப்பாவை முறைத்து விட்டே விறு விறுவென வெளியே சென்றான்.
அவன் பெண்களிடம் பழகாதவனல்ல. போலீஸ், அக்கியூஸ்ட் என்றும், அப்பாவி பெண்கள் வரை அவன் போலீஸ் என்பதால் நல்லவள் கெட்டவள் என்று பிரித்து வைத்து கூட பழகி இருக்கிறான்.  ஆனால் இவள் வேறு அவள் குறும்பு மனதை நிறைக்கும் ஆனாலும் பெண்களிடம் ஒதுங்கியே இருந்தவனுக்கு சட்டென்று அவளை ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று தடுக்க பிங்கியும் எட்டி உதைத்தாலும் காலை சுற்றும் பூனை குட்டியாய் அவனையே சுற்றிக் கொண்டிருந்தாள்.  
அவள் பின்னால் ஓடி வந்தவள் “ஒய் புருஷா எங்க ஓடுற? நான் கேட்டத கொடுத்துட்டு போ” என்று அவன் பைக்கின் முன் வந்து நின்றாள். 
“பேசாம போடி” என்று வண்டியை இயக்க 
வண்டியை அனைத்து சாவியை கையில் எடுத்தவள் “நான் கேட்டத கொடு, சாவிய தரேன்” பிடிவாதக் குழந்தையானாள்.
“சரி வா” என்றவன் அவள் அருகில் வந்ததும் சாவியை பறிக்க முயல 
“யார் கிட்ட” என்றவள் நொடியில் இடுப்பில் சொருகி புடவையால் மறைக்க ஒரு நொடி அவள் இளம்சிவப்பு நிற இடையை கண்டவனின் பார்வை மீலாது அங்கேயே  தங்கி விட்டது. 
அவன் பார்வை இருக்கும் இடத்தை கண்டு சொடிக்கிட்டு அழைத்தவள் “என்ன பார்வ? அங்க எல்லாம் பார்க்க கூடாது,  தளபதியையே தலையால தண்ணி குடிக்க வச்ச ஏரியா. வெரி டேஞ்சரஸ்” என்றவள்  “நான் கேட்டது” என்று விடா பிடியாக நின்றாள். 
“சரி  வந்து தொல” என்றவன் வேண்டா வெறுப்பாக உதட்டை குவிக்க 
“நீ சரிப்பட்டு வரமாட்ட” என்றவள் வீட்டுக்குள் செல்ல திரும்பி நடந்தாள். 
அடுத்த அடியை வைக்கும் முன் அவளது இடது கையை பிடித்து இழுத்து அணைத்தவாறே கன்னத்தில் முத்தமிட்டிருந்தான் தீரமுகுந்தன். 
அவளின் கொழுகொழு கன்னங்களின் மென்மையில் கரைந்தவன் மேலும் அழுத்தமாக முத்தமிட மின்னல் வெட்டியது. சுதாரித்து விலகியவன் சாவிக்கு கை நீட்ட 
“விட்டா கடிச்சு சாப்பிடுவ போல, டெய்லி முத்தம் தந்துட்டு தான் போகணும் டீலா? நோ டீலா?” பிங்கி பேரம் பேச 
“உன் அக்கா உனக்கு சரியா தாண்டி பேரு வச்சிருக்காங்க பிங்கினு” பிங்கி சாவியை எடுக்க இடுப்பில் கைவைத்து சேலையை விலக்கவும் மூளை பார்க்காதே என்றாலும் அவன் பார்வை தானாக அங்கே அலைய வாய் முணுமுணுத்தது. தலை அவள் கேட்ட கேள்விக்கு  “ஓகே” என்று தானாக ஆட சாவியை பெற்றுக் கொண்டு புன்னகை முகமாகவே பைக்கில் பறந்து விட 
“மெதுவா போ” என்று உறக்கக் கத்தினாள் பிங்கி.  அவள் உள்ளே செல்லும் போது விஷ்வதீரன் வெளியே இருந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை போல் பாசாங்கு செய்தவன் அவள் புறம் திரும்பி புன்னகைக்க
“என்ன மாமா உங்கள வழியனுப்ப உங்க பொண்டாட்டி வரலையா?’ என்று பிங்கி கண்ணடிக்க 
“அஜய், விஜய்” என்று குரல் கொடுக்க அஜய்யும், விஜய்யும் வரவே பின்னாடி ஆரோஹியும் வந்தாள்.
 
“பொண்டாட்டி வந்ததும் என்ன மறந்துட்டானுங்க” என்ற ஸ்கூபி ஆரோஹியை கண்டு பதுங்க
பிங்கி கண்சிமிட்டியவாறே உள்ளே செல்ல ஆரோஹி விஷ்வதீரனை ஏறிட குழந்தைகளை முத்தமிட்டு அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன் “பாய் டி பொண்டாட்டி” என்றவாறே ஜீப்பில் ஏற ஆரோஹி அவனை முறைக்கலானாள். 
“நீ எதுக்குடி பொண்டாட்டி முறைக்கிற நான் கிஸ் பண்ணது என் பிரெண்டு ஆராவ” என்றவன் புன்னகைக்க ஆரோஹியின் முகத்திலும் புன்னகை 
நீ தொடாமல் நான் தொட மாட்டேன் என்றிருந்தவன் ஒதுங்கி இருந்து அவளை மனதில் உள்ள பாரத்தை கரைக்க முடியாது, ஆரோஹி அன்புக்கு எங்கும் குழந்தை, பாசம் வைத்தவர்களின் வேஷம் கலைய, எங்கே நண்பனாக இருக்கும் விஷ்வதீரன், கணவனாகி, காதலனாகி மனதை உடைத்து விடுவானோ என்று  அன்று பேசியது அவனை கோபப் படுத்த மாத்திரமே! சகஜமாக அவளையும் அஜய், விஜய்யை கொஞ்சுவது போல தனது அன்பை புரியவைக்க வேண்டும் என்று இரவு நடந்த சம்பவத்தால் முடிவெடுத்திருந்தான் விஷ்வதீரன்.     
“எங்க உன் ப்ரெண்ட் விஷ் கு கிஸ் ஏதும் கிடையாதா?” கன்னத்தை தொட்டுக்க காட்டியவாறே புன்னகைக்க 
“கொன்னுடுவேன்” என்று ஒரு விரல் கொண்டு மிரட்டினாலும் அவனின் நெருக்கத்தை மனதுக்குள் ரசித்தவாறே குழந்தைகளோடு உள்ளே செல்ல ஓட்டுனரை அழைத்து வண்டியை எடுக்க சொன்னான் விஷ்வதீரன்.
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
மேகம் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
சந்தேகம் என்று ஒன்று வந்தா அடிவேர் வரை அலசி விட்டே திருப்தியடைவான் தீரமுகுந்தன். பிங்கி சலீம் பாய்க்கும், ஆயிஷாவுக்கும் ஏதோ தொடர்ப்பு இருக்கு என்று சொல்லவும் புருவம் நீவி யோசித்தவன் இருவரையும் கண்காணிக்கலானான். இருவரும் கண்ணாலாவது பேசிக் கொள்கிறார்களா என்றால் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டவன். அதற்குமுன் ரேகாவை விசாரிக்க வேண்டி உள்ளதால் பிங்கியிடம் விடை பெற்று சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு கிளம்பிச் சென்றான்.  
சீக்ரட் மிஷன் கட்டிடம்
விஷ்வதீரன் வந்து சேரும்  போது முதல் கட்ட விசாரணையை ஆரம்பித்திருந்தான் தீரமுகுந்தன்.   
அங்கே தீரமுகுந்தன் முகம் பார்க்கும் கண்ணாடியிலான அறையில் ஒரு மேசையின் முன் அமர்ந்திருக்க ரேகா அடுத்த பக்கம் அமர்ந்திருந்தாள். கண்ணாடியில் அவர்களுக்கு அவர்களுடைய விம்பம் தெரிவது போல் வெளிப்புறம் உள்ளவர்களுக்கு அவர்களை பார்க்கவும், கேட்கக் கூடியதாக இருக்க விஷ்வதீரன் வெளிப்புறமுள்ள அறையில் இருந்து அவர்கள் பேசுவதை கேக்கலானா. 
“இப்படி நீங்க கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாம இருந்தா உன் பிரெண்ட் ஜோதி செத்து போன மாதிரி, நெறைய பொண்ணுங்க செத்து போவாங்க. உங்க அமைதி குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் ஒழிய ஜோதிக்கு ஒரு நீதி கிடைக்குமா? சொல்லுங்க அவனுங்க யாரு? 
தீரமுகுந்தன் பொறுமையாக புரிய வைத்தபடி கேள்விகளை தொடுக்க ரேகா பயத்தில் நடுங்கியவாறே அவள் அமர்ந்திருந்த கதிரையில் ஒன்றி விட விஷ்வதீரனுக்கோ கோவம் தலைக்கேற அலைபேசியை எடுத்தவன்  
“ரித்திகா எங்க இருக்க? சீக்கிரம் வா” என்று கத்த  
“உள்ள வந்துட்டேன் சார். மேலதான் வந்து கிட்டு இருக்கேன்” விஷ்வதீரனின் குரலில் இருந்த சூட்டை கண்டு லிப்டுக்காக காத்திருக்காமல் படிகளில்  தாவியேறியவள் தீரமுகுந்தன் உள்ள அறைக்குள் புக ரேகா தாவி வந்து அவளை அணைத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தாள். 
விஷ்வதீரனின் குரலிலேயே ரேகா வாயை திறக்க வில்லை என்று புரிந்து கொண்ட ரித்திகா வந்ததே ரேகாவை அடி பின்னியெடுக்க பார்த்துக் கொண்டு, ரேகாவின் இந்த செயல் பெண்ணான ரித்திகாவுக்கும் ஒரு மாதிரி இருக்க செய்வதறியாது தீரமுகுந்தனை பார்த்தாலும் அவளின் கை தானாக ரேகாவின் முதுகை தடவிக் கொடுத்தது.  
“முதல்ல உக்காருமா” என்று ரேகாவை அமர்த்தியவள் “அண்ணா! அந்த தண்ணி கிளாசை இங்க கொடுங்க” என்று தீரமுகுந்தனை ஏவ அவனும் அதை ரித்திகாவின் கைகளில் கொடுக்க “என்னமா பாக்குற இவர் என் அண்ணன் தான். போலீஸ்ல பெரிய பதவில இருக்காரு நீ உண்மைய சொன்னா தானே உனக்கு உதவி பண்ண முடியும்” ரித்திகா தன்மையாக சொல்ல ரேகாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தது. 
ரேகா மருத்துவமனையில் எந்தமாதிரி சிகிச்சை பெற்றாள் என்பதை விசாரித்த தீரமுகுந்தன் அவள் அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கப் பட்டாள் என்றும், எதற்க்கோ பயந்து போய் இருக்கிறாள் என்றும் சொல்ல அவளிடம் தன்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன், விஷ்வதீரன் இன்று தான் கல்யாணம் ஆச்சு நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் வீட்டில் இருந்தவர்களின் கண்ணை மறைத்து பிங்கியிடமும் சொல்லிலக்க கொள்ளாமல் வெளியே சென்று ரித்திகாவுடனும் பேசி இருக்க, ரேகா நடந்து கொண்டதை வைத்து நொடியில் புரிந்துக் கொண்ட ரித்திகாவும் அதற்க்கு ஏற்றால் போல் பேச ரேகா வாயை திறந்தாள். 
“அவனுங்கள விட்டுடாதீங்க சார். கொன்னுடுங்க, கொன்னுடுங்க, கொன்னுடுங்க” என்று கத்தியவள் “ஜோதி.. ஜோதி என் உயிர் சார். என் அம்மா சார். அவள கொன்னவங்கள சும்மா விடாதீங்க. என்ன பாவம் பண்ணா என் கூட இருந்த அவள நான் படுகுழில தள்ளிட்டேனே” புலம்பியவாறே, இடையிடையே கத்தி அழுதவாரும் சொல்லலானாள் ரேகா. 
நானும் ஜோதியும் அறிமுகமானது எனக்கு போஸ்டிங் கிடைச்ச போதுதான். அவ மேத்ஸ் டீச்சர். நா சயன்ஸ். ரொம்ப வெகுளி, பயந்த சுபாவம். யார் உதவின்னு கேட்டாலும், ஓடி போய் பண்ணுவா. எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ அம்மா மாதிரி பாத்து கிட்டா. 
“என்னால தான் சார் செத்தா. என்னால தான். அந்த ரகு எங்க ஊர் தான். என் பர்த்டே னு அவள ரெஸ்டூரண்ட் கூட்டிட்டு போனேன், வரமாட்டேன்னு சொன்னவள இழுத்துட்டு போனேன், அங்க வச்சி தான் அவன பாத்தா. அவனும் காதல்னு இவ பின்னாடி சுத்தினான்.  அவளுக்கும் விருப்பம் இருந்துச்சு. ஊருல இருந்த வரைக்கும் நல்லா தான் இருந்தான் இங்க வந்ததும் மிருகமா மாறிட்டான்” 
அவள் சொல்வதெல்லாம் விஷ்வதீரனின் அறையில் மிதுன் இருந்து பதிவு செய்ய, யாரும் அவள் பேச்சில் குறிக்கிடாது அவள் சொல்வதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். 
“மூனு மாசம் நல்லா தான் இருந்தா திடிரென்று ஆளே மாறிட்டா, பசங்களுக்கு சரியா பாடமெடுக்க மாட்டேங்குறானு ஸ்கூல்ளையும் காம்ப்லைன் பண்ண ஆரம்பிச்சாங்க. நான் திட்டினபோ என் கூட பேசுறத  குறைசி கிட்டா. சுவர வெறிச்சி பாத்து கொண்டு இருந்தா? ஒருநாள் அதட்டி கேட்டேன் ஓ.. னு அழுது எல்லாத்தையும் சொன்னா. எனக்கு அதிர்ச்சியாகிருச்சு. நம்பவே முடியல. இவனுங்க எல்லாம் ஒரு அம்மா வயித்துல தான் பொறந்தானுங்களா? ஆம்பளைங்கள பாத்தாவே அருவருப்பான இருக்கு” ரேகா அவள் பாட்டுக்கு ஆண்களை திட்ட தீரமுகுந்தன் ரித்திகாவுக்கு சைகை செய்ய 
ரேகாவின் தோளில் கை வைத்து “அப்படி என்னத்த பண்ணான் ரகு” என்று கேள்வியாய் ஏறிட
மீண்டும் அழ ஆரம்பித்தவள் அழுகையினூடாகவே “என் கிட்ட ஆதாரம் இருக்கு, ஜோதி தற்கொலை பண்ணல, அவள கொன்னுட்டாங்க, பாவிங்க கொன்னுட்டாங்க, என்னால தான் ஆச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ
நடந்தது என்னவென்று சொல்லாமல் கதறுபவளை கடிய முடியாமல் தீரனும், ரித்திகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ரேகா அழுக்கையூடாகவே சொல்ல ஆரம்பித்தாள். 
“காதலிக்கிறேன் என்ற பேர்ல அவளுக்கு போதை மருந்த கொடுத்து சுயநினைவு இல்லாம இருக்கும் போது அவள நாசம் பண்ணி, உடம்பு பூரா காயம்”  
என் கிட்ட சொன்ன பிறகு “வா போலீஸ் ல போய் காம்ப்லைன் பண்ணலாம்னு கூப்பிட்டேன்” முடியாது போலீஸ் கேஸுன்னு போக முடியாதுனு மறுத்தா.   
“ரகு ப்ளூமூன் ஹோட்டல்ல மேனஜரா வேல செய்றதா தான் எங்க கிட்ட சொன்னான். ஜோதி அவன பாக்க ஹோட்டல் போய்   மேனஜரை பாக்கணும்னு சொல்லி இருக்கா வேற ஒருவர் வரவும் ரகுக்கு கால் பண்ணி இருக்கா, அவனும் இத்தனாவது மாடிக்கு வா, இந்த அறைக்கு வானு கூப்பிட இவளும் போய் இருக்க, அங்க அவனோட அவன் நண்பனும் இருந்திருக்கான். அவனுங்க ட்ராக்ஸ் எடுத்திருப்பானுங்க போல ஜோதியை கண்டதும் அவனுங்க வெறி தலைக்கேறி அவள அடைய பாத்திருக்கானுங்க, அவனுங்களோட போராடியத்துல அவ உடம்பு பூரா காயம் ஏற்பட்டிருக்கு, எப்படியோ தப்பிச்சு வந்தவ வீட்டுக்கு வந்த கொஞ்சம் நேரத்திலேயே! அவளுக்கு ராகுவோட பிரண்டு போன் பண்ணி   
“என்ன டீச்சர் தப்பிச்சு போய்ட்டதா நினைப்போ? செம்ம பீஸ் டி நீ. போதைல அவன் மட்டும் தான் உன்ன அனுபவிச்சான்னு நினைச்சி கல்யாணம் பண்ண சொல்லி கேக்க வந்தியா? அப்போ நீ என்னையும் தான் கல்யாணம் பண்ணனும் பாஞ்சாலி. ஏன்னா நானும் தான் உன்ன” என்றவன் சத்தமாக சிரிக்க 
“இல்ல நீ பொய் சொல்லுற” ஜோதி நடுநடுங்கி போனாள்.
 “அத நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன்” அவளின் உடல் பாகங்களை அசிங்கமாக விவரித்தவன் “மரியாதையா வந்து இப்போ ஏறின சூட்ட தனிச்சிட்டு போற இல்ல உன் வீடியோவ நெட்ல போட்டு ஊருக்கே டெலிகாஸ்ட் பண்ணிடுவேன்”  என்று மிரட்டி விட்டு போனை அனைத்திருக்க, இங்கே ஜோதி செய்வதறியாது திகைத்து நின்றாள். மூன்று மாதங்களுக்கு முன் ரகு தன்னை ஏமாற்றி மிருகமாக நடந்து கொண்டிருக்க அதிர்ச்சியில் பிரம்மை பிடித்தது போல் இருந்தவள் ரேகாவிடம் மன பாரத்தை கொட்டிய பின் சற்று தெளிந்து கிராமத்தில் வளர்ந்த அவள் போதையில் பண்ணி இருப்பான் என்றும், இது தான் முடிவென்று தப்பான முடிவெடுத்தாள்.  அது ரகுவை பார்த்து பேசி அவனையே கல்யாணம் பண்ணணும் என்பது.  அவனை சந்திக்க சென்றவளுக்கு அவன் மேனஜர் இல்ல கிளீனர் என்று தெரியவரவும், அதை கூட மன்னித்தவள்  அவனை சென்று பார்க்க அவனும், அவன் நண்பன் பாலாவும் அவளை மீண்டும் இரையாக்க முயற்சி செய்ய அவர்களுடன் போராடி உடல் காயங்களோடு வெளியேறி இருக்க ரகுவின் நண்பன் சொன்னதை கேட்டு இனி உயிரோடே இருக்கக் கூடாதென்று கை நரம்பை துண்டித்திருந்தாள்.  
“அவ ரெத்தத்த கண்டாவே பயப்படுவா சார், அவ போய் கைய அறுத்து கிட்டான்னா” என்று தேம்பித் தேம்பி அழ அவளை ஆறுதல் படுத்திய ரித்திகா 
“அந்த ஆதாரம்” என்று கேக்க
“ஒரு லோகார்ல வச்சிருக்கேன்” என்றவள் லாக்கர் எங்கே இருப்பதென்பதையும் அதன் எண்ணையும் மளமளவென குறித்துக் கொடுத்தாள் ரேகா.
அவள் கொடுத்த துண்டுப் பேப்பரை எடுத்துக் கொண்டு ஆதாரத்தை தேடி பைக்கில் பறந்தான் தீரமுகுந்தன்.

Advertisement