Advertisement

                                                               அத்தியாயம் 29
“என்ன மித்ரன்? சந்தர்ப்பம் அமைஞ்சும் ஒன்னும் பண்ணல”
“திடீறென்று அவ அப்பா செல்வராஜ் வந்து என்ன அடிக்க ஆரம்பிச்சிட்டார் சார். கடைசில அந்த ஆள நான் ஹாஸ்பிடல் சேர்க்கும் படி ஆகிருச்சு”
“நீ அங்க இருக்கிறது செல்வராஜுக்கு யார் சொல்லி இருப்பாங்க? கண்டிப்பா சத்யதேவுக்கு உதவி செய்றவனுடைய வேலையா தான் இருக்கும் ” என்று நந்தன் யோசிக்க  
“ஆமாடா உன் கண் முன்னாடி தான் இருக்கேன், இன்னும் நீ கண்டுபிடிக்கல, உன் கோபம் தான் உன்ன முட்டாளாகவே வைத்திருக்க உதவுது” என்று உதடை வளைத்து சிரித்தவன்.
“உன்ன அடக்க ஒரு வழி கிடைக்காமலா போய்டும், பாக்கலாம்” என்று மனதுக்குள் பொரும,
“என்ன மித்ரா வளமை போல அமைதியாகிட்டியா?” என்று நந்தன் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலானான்.
{அடப்பாவி நீ அமைதியாகிட்டன்னு பாத்தா மைண்ட்  வாய்ஸ் ல பேசுறியா?}  
*******************************************************************
“உன் பொண்டாட்டி ஓடி போய்ட்டா! காலைல கோவிலுக்கு போயிட்டு  வரேன்னு வீட்டை விட்டு போனவ எவன் கூடயோ ஓடி போய்ட்டா! அவ எவன்கூடயோ வண்டில போறத நம்ம பெரியசாமி பாத்திருக்கான். ரெட்டை  புள்ளையா பொண்ணுங்கள பெத்து வச்சவ அதுங்கள தவிக்க வச்சுட்டு ஓடியே போய்ட்டா… பட்டிக்காடா இருந்தவள இங்கிலீசு எல்லாம் படிக்க வச்சியே! அவ புத்திய காட்டிட்டா! சுயமா செயல் பட வேணும்னு வண்டியெல்லாம் ஓட்ட கத்து கொடுத்தியே!  சுயபுத்திய காட்டிட்டா”
வீட்டிலிருந்து போன் வழியா வந்த செய்தி சத்யதேவை  நிலை குழையச்செய்தது. மண்டைக்குள் ஒரு பிறழியமே நடக்க, கோபமாக காரை கிளப்பியவன் வீட்டை நோக்கி சீறிப்பாய்ந்தான்.
திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான் சத்யதேவ். “ஓ.. கனவு” என்றவன் செல்வியை பார்க்க அவள் அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள்.
“எதுக்கு இப்படியொரு கெட்ட கனவு? அதுவும் அக்கா போன் பண்ணி சொன்னது போல?” கனவை கண்டு விழித்தவன் யோசனையில் விழ அவனின் அசைவில் முழித்துக் கொண்ட செல்வி
“என்ன மாமா தூக்கம் வரலயா” என்று தூக்க கலக்கத்திலேயே கேக்க அவனை அனைத்து கொண்டவன்
“இல்ல தண்ணி குடிக்க எந்திரிச்சேன், நீ தூங்கு” என்று அவளின் தலை கோதியவனுக்கோ “வளைகாப்பு நடந்த அன்றும் இதே போல் கெட்ட கனவு வந்துருச்சு, அன்னைக்கி செல்விய அக்கா தள்ளி விட்டு பிரசவத்துல சிக்கல் ஆகி செல்வி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா! இன்னைக்கும் அதே மாதிரி கெட்ட கனவு” ஏதோ கெட்டது நடக்க போவதாக உள்ளுணர்வு சொல்ல தூக்கம் தூர ஓட தலையை கோதியவாறே குழப்பமடைந்தான்.
நடு இரவில் விழிப்பு தட்டியதால் நெடு நேரம் தூங்காமல் இருந்த சத்யதேவ் கண்விழித்த போது நேரம் ஒன்பதை தாண்டி இருக்க “சே இந்த அக்கா வேற கனவுல வந்து பயம் காட்டுறாங்க, அன்னைக்கும் இப்படி வந்த கனவை கண்டுக்காம விட்டதால் பெரிய பிரச்சினை ஆகிருச்சு, இப்போ அவங்க ஜெயில்ல இருக்காங்க யாரால என்ன ஆபத்து வரும்னு தெரியலயே!” கவலையடைந்தவனாக குளியல் அறையில் புகுந்தவன் காலை கடன்களை முடித்துக் கொண்டு பாக்டரிக்கு கிளம்பிச்செல்ல வெளியே வரும் போது செல்வியின் கொலுசு சத்தமில்லாமல் வீடே அமைதியானது போல் இருக்க
சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவாறே “அம்மா செல்வி எங்கம்மா?” ஓடி வந்து பரிமாறும் மனைவி இல்லாது அன்னை பரிமாறவும் செல்வியை தேட
“பார்வதி பாட்டி கூட கோவிலுக்கு போய் இருக்காடா. இப்போ வந்துடுவா, நீ சாப்பிடு” என்று சொல்ல ஏனோ தானோ என்று சாப்பிட்டவன் செல்வியின் வரவுக்காக காத்திருக்கலானான்.
நேரம் பத்தை கடந்து கொண்டிருக்க செல்வி வந்த பாடில்லை. “இவ்வளவு நேரம் என்ன பண்ணுறா?” என்றவாறே அவளின் அலைபேசிக்கு அழைக்க அது வீட்டிலிருந்து ஒலி எழுப்பியது.
செல்வியின் அலைபேசி வீட்டிலிருந்து அடிக்க சத்யாவின் மனமும் அடிக்க ஆரம்பித்தது. காலையில் கண்ட கனவு போல் ஏதாவது ஆகிடுமோ என்று பயந்தவன் “அம்மா செல்வி எந்த கோவிலுக்கு போய் இருக்கா” கனகாம்பாள் சொன்னதும் காரை கிளப்பினான் சத்யதேவ்.
“பாக்டரி அடுத்த தெரு என்று நடந்தே போவான், பொண்டாட்டிய பார்க்க கார்ல போறான் அவ்வளவு அவரசம்”  என்று மலர்ந்த முகமாகவே கனகாம்பாள் முணுமுணுத்தவாறே குழந்தைகளை காண ரோஜா இருக்கும் அறையில் நுழைந்தார்.  
தெருத்தெருவாக சத்யதேவ் செல்வியை தேட மித்ரன் கால் பண்ணியவாறே இருக்க அதை ஏற்கும் மனநிலையில் சத்யா இல்லை. “ஒரு வேல பாட்டிக்கு, ஏதாவதுனு பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலுக்கு போய் இருப்பாங்களா?” என்று யோசித்தவன் ஒவ்வொரு இடமாக தேட அங்கேயும் அவர்களை காணாது தான் கண்ட கனவு போல் கண்டிப்பாக செல்விக்கு ஏதாவது ஆகி இருக்கும் என்றெண்ணி
“செல்வி  எங்கடி இருக்க? என் கிட்ட வந்துடு டி, என்ன விட்டு போயிடாத டி” என்று புலம்பியவாறே சுற்றும் முற்றும் பார்த்தவாறே காரை செலுத்தலானான்.
கனகாம்பாள் குழந்தைகளை குளிப்பாட்ட ரோஜா துவட்டி ஆடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையாய் இருந்த கதையை சொல்லிக் கொண்டிருந்த கனகாம்பாள் வள்ளியின் நியாபகம் வந்து புலம்ப அவரை ரோஜா சமாதானப் படுத்த சற்று சமாதானம் அடைந்தவராக மித்ரனை பற்றி கேக்க “போங்க பாட்டி” என்று வெக்கப் பட்டவள் சகஜமாக அவருடன் மித்ரனை பத்தி பேச அவளது அலைபேசி அலறியது.
“அவருதான் கூப்பிடுறாரு பாட்டி” என்றவாறே போனை காதில் வைக்க மித்ரன் மறுமுனையில் சொன்னதோ!
“அபிநந்தன் சத்யதேவ் சாரோட வைப்பெய்யும், அவங்க பாட்டியையும் கடத்திட்டான். அத சொல்ல சாருக்கு கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறாரு நான் உனக்கு லொகேஷன் வாட்ஸ் ஆப் பண்ணுறேன் சாருக்கு ட்ரை பண்ணு” என்று வைத்து விட அதிர்ச்சியில் ரோஜா சிலையானாள்.
கனகாம்பாள் வந்து உலுக்க “பாட்டி, பாட்டி” என்று பதறியவள் வார்த்தை வராது சத்யதேவுக்கு கால் செய்ய
“என்னாச்சு ரோஜா” என்று அவளின் வெளிறிய  முகம் கண்டு கனகாம்பாளின் மனமும் அடித்துக் கொள்ள
“ரோஜா நான் அப்பொறம் பேசுறேன்” என்று சத்யதேவ் அலைபேசியை அனைத்திருந்தான்.
“மாமா” என்று கத்தியவள் அங்கே முருகவேலும், மரகதமும் வர அவர்களிடத்தில் ஓடியவன் “சித்தி, சித்தி அந்த அபிநந்தன் தமிழ கடத்திட்டானாம், மித்து போன் பண்ணான், மாமா அவரோட போன எடுக்க மாட்டேங்குறாங்க” என்று பதறியவாளாக சொல்ல மரகதமும், கனகாம்பாளும் அதிர்ச்சியடைய
“யாரு அந்த கங்கா இண்டஸ்ட்ரி மருமகன் அபிநந்தனா?” என்று  முருகவேல் கேக்க
“ஆமா ஆமா” என்று ரோஜா வேகமாக தலையாட்ட
“நான் பாத்துக்கிறேன்” என்று மட்டும் சொன்ன முருகவேல் வெளியே கிளம்பிச் சென்றான்.   
செல்வியும், பார்வதி பாட்டியும் ஒரு குடோனில் வாயும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் கதிரைகளில் அமர்த்தப் பட்டிருக்க சுத்தி ஒரு நாலு பேர் இருக்க மித்ரனும், அபி நந்தனும் அங்கே இருந்தனர். பாட்டி தடுமாற செல்வி மித்ரனையே பாத்திருந்தாள்.
கோவிலுக்கு சென்று வீட்டுக்கு வரும் வழியில் முக மூடி அணிந்த நாலு தடியர்கள் வந்து இழுத்து வேனில் போட்டதுமில்லாமல் கத்தியை கழுத்தில் வைத்து அமைதியாக இருக்கும் படி மிரட்டவும் பயந்து போன இருவரும் குடோனில் கட்டிப் போட்டதும் இங்கிருந்து எப்படி தப்புவதென்று யோசிக்க அங்கேவந்த நந்தனை கண்டு அறிமுகமில்லாத பார்வையை செல்வி செலுத்த தொடர்ந்து வந்த மித்ரனை கண்டு புருவம் சுருக்கினாள்.
அபிநந்தன்  செல்விக்கு முன்னாள் உள்ள கதிரையில் அமர அவனின் இடது பக்கத்தில் நின்று கொண்டான் மித்ரன்.
“என்ன மிஸ்ஸிஸ் சத்யதேவ் மித்ரன அப்படி பாக்குறீங்க? இவன் என் வலது கை நான் என்ன சொன்னாலும் செய்வான், என் சொல்படிதான் உன் வீட்டுக்காரரோட அக்கா பொண்ண லவ் பண்ணதும், அவள கல்யாணம் பண்ணி அவங்கப்பன் பேருல உள்ள பாக்டரி பங்க மித்ரன் பேருக்கு மாத்தி அப்பொறம் என் பேருக்கு மாத்தி, மீதி இருக்குற பங்குகளையும் கொஞ்சம் கொஞ்சமாக என் பேருக்கு எந்த வழியிலாவது  மாத்துறது தான் என் மாஸ்டர் பிளான். எதுக்குன்னு பாக்குறியா? உன் புருஷனால எனக்கு வரவேண்டிய நல்ல டீல் எல்லாம் அவனுக்கு போகுது. நீதி நேர்மனு பேசிக்கிட்டு, முட்டா பய. ஊற சுத்தி கடன் வாங்கி வச்சிருக்கான். காசு தாரேன் வித்துட்டு போடானா  கேக்க மாட்டேங்குறானே! எனக்கே அட்வைஸ் பண்ணி என் ஈகோவ கிளறிட்டான். அதான் அவன அழிக்க கங்கணம் கட்டி கிட்டு அலையுறேன். அந்த செல்வராஜ் மனைவிய போலீசில் மாட்ட வச்சதும் நான் தான். குடும்பமே கவலைல முழ்கி இருக்குமே! அவ ஒரு பொம்பள ரௌடி பப்ளிக் பிளேஸ்ல, முன்ன பின்ன தெரியாத என் கிட்டயே! உண்மைய சொல்லுறா, எனக்கு அப்படியே அதிர்ச்சில  உடம்பெல்லாம் உதரிச்சு, என்ன ஒரு தைரியம்? எனக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது. எனக்கு பொறுமை கொஞ்சமேனும் இல்ல. இப்படியே எல்லாரையும் வீழ்த்தி சத்யதேவ் கிட்ட இருந்து பாக்டரிய எழுதி வாங்குறதுக்குள்ள நா கிழவனாகிடுவேன். அதான் குறுக்கு வழில உன்ன கடத்தி உன் புருசனுக்கு போட்டோ அனுப்பினா அடுச்சு பிடிச்சு ஓடி வந்து நான் சொல்லுற படி எழுதி கொடுத்துட மாட்டானா?” என்று தனது திட்டம் முழுவதும் சொல்லி விட்டு செல்வியின் போட்டோவை சத்யதேவுக்கு அனுப்பி வைத்து கால் செய்து மிரட்டினான்.  
“யாரடா இது இவன்  எதுக்கு நம்மள தூக்கிட்டு வந்தான்” என்று  செல்வி நந்தனை ஆராய்ச்சியாக பார்க்க பின்னாடி வந்த மித்ரனை கண்டு சற்று முகம் மலர்ந்தவள் நந்தன் சொன்னவற்றை கேட்டு ரோஜாவின் வாழ்க்கையை நினைத்து கலங்கியவள் மித்ரனை உறுத்து விழிக்க மித்ரன் முகம் மாறாது இறுகி நின்றான்.
“என்னது மாமா ஊர் பூரா கடன் வாங்கி வச்சிருக்குறாங்களா? என்ன உளறுறான் இவன், எந்த கடங்காரனும் வீட்டு பக்கம் வந்து நான் பாத்ததில்லையே! பொய் சொல்லுறானோ!” தீர்க்கமாக நந்தனை முறைக்க, அடுத்து வள்ளியை பொய் கேசில் பிடித்து கொடுத்தேன் என்று சொன்னதும் “அடப்பாவி அவங்களே ஒரு தில்லாலங்கடி அவங்களுக்கு மேல நீ இருக்கியா?” என்று மனதில் நினைத்தவள் கை கட்டப்பட்டு இருக்க, அவனை வசைப் பாட முடியாமல்  திமிர அங்கே சத்யதேவ் நந்தன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து விட்டு செல்வியை காப்பாற்ற விரைந்து வந்து கொண்டிருந்தான்.
குடனுக்குள் நுழைந்தவரை கண்டு அபிநந்தன் திகைத்து எழுந்து விட “இது யாரடா புது என்ட்ரி” என்று செல்வி பாக்க வந்தவர் நந்தனை அறைந்திருந்தார்.
“ஏண்டா என் பொண்ணு உன்ன லவ் பண்ணுறா என்ற ஒரே காரணத்துக்காக உன்ன அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு கம்பனியையும் பாத்துக்க சொன்னா, நீ ஆள் கடத்தல், மிரட்டி தான் சொத்து சேர்க்கியா? உன்ன பத்தி ஏக கம்பளைண்ட் வந்து கிட்டு தான் இருக்கு கையும், களவுமா பிடிக்க தான் நானும் காத்து கிட்டு இருந்தேன். இங்க நடந்த அனைத்தையும் இந்த செல்லு வழியா என் பொண்ணு பாத்து கிட்டு இருக்கா உனக்கான முடிவை அவ கொடுப்பா” என்று சொல்ல நந்தனின் முகம் வெளிறியது.
அப்பொழுதுதான் உள்ளே வந்த சத்யதேவையும், முருகவேலையும் கண்டு செல்வி தடுமாற அவர்களிடம் ஓடி கட்டுகளை பிரிக்க சண்டை கோழியாய் சிலிர்த்தவள் மித்ரனை அறைந்திருந்தாள்.
ஆண்கள் அனைவரும் அவள் முகத்தில் இருந்த கோபத்தை கண்டு திகைக்க நீலகண்ட பூபதி “இவனையும் ரெண்டு போடுமா?” என்று சொல்லியவாறே முருகவேலிடம் தலையசைத்து விடை பெற அபிநந்தனும் அடங்கி அவர் பின்னால் சென்றான்.  
செல்வியை இழுத்தெடுத்தவன் “ஏய் என்னடி பண்ணுற வீட்டுக்கு வரப்போற மாப்பிளைய எதுக்கு டி அடிச்ச” எதிர்பாராத சம்பவத்தால் மித்ரன் அதிர்ச்சியடைய சத்யா ஆவேசமானான்.
“இன்னும் நல்லா ரெண்டு போடு” பார்வதிப் பாட்டி கத்த
“யோவ் கூமுட்டை மாமா, உங்கக்கா உன்ன ஏமாத்தினது பத்தாதா? இப்படி மனிசங்கள புரிஞ்சிக்காம இருக்கியே! இவன் நம்ம ரோஜாவ லவ் பண்ணுற மாதிரி நடிக்கிறானாம்” செல்வியின் ஆவேசமான பேச்சில் உண்மை புரிய
“நீ இங்க இருக்குறத சொன்னதே! மித்ரன் தான். முதல்ல மன்னிப்பு கேளு. உனக்கு வயசு கம்மி, பக்குவம் பத்தலன்னு நான் சொல்லுறது இதுக்கு தான்” முதல் பாதியை புரியும் படி சொன்னவன், இரண்டாம் பாதியை காதுக்குள் சொல்ல சத்யாவை நன்றாகவே முறைத்தாள் செல்வி.
“மாப்புள உங்கக்காவே பரவலடா, உனக்கு அர்ச்சனை நல்லா கிடைக்குது போல” என்று முருகவேல் நியாபகப்படுத்த அப்பொழுதுதான் செல்வி தன்னை அனைவரினதும் முன் திட்டியது சத்யாவின்  நியாபகத்தில் வந்தது.
“அய்யய்யோ நான் வேற எல்லார் முன்னிலையிலும் திட்டிபுட்டேனே! என்ன செய்ய போறாரோ!” என்று செல்வி சத்யாவை பார்க்க சத்யா அவளை முறைத்தவாறே  
“வீட்டுக்கு வா உன்ன வச்சிக்கிறேன்” என்று முணுமுணுக்க
“பரவால்ல சார் அவங்க உண்ம தெரியாம அடிச்சிட்டாங்க, நான் முதல்ல போய் வேலய ரிசைன் பண்ணிடுறேன்”   என்றவாறே மித்ரன் விடை பெற பார்வதிப்பாட்டி, முருகவேல், செல்வி, சத்யாவின் காரில் வீடு நோக்கி புறப்பட்டனர்.     
முருகவேல் வெளியே கிளம்பியது கங்கா இண்டஸ்ட்ரியின் உரிமையாளர் நீலகண்ட பூபதியை காண, அவரிடம் போய் விஷயத்தை சொன்னதும் “வாங்க நான் பாத்துக்கிறேன்” என்றவர் முருகவேலை தன்னோடு அழைத்து வர சத்யாவும் குடனுக்கு வந்தான். அங்கே முருகவேலை எதிர்பார்க்காத சத்யா நீலகண்ட பூபதியை கண்டு வணக்கம் வைக்க பதிலுக்கு வணக்கம் வைத்து “இனி அவன் உங்க விசயத்துல தலையிடாம நான் பாத்துக்கிறேன். வாங்க உள்ள போலாம்” என்று செல்வியை நந்தனிடமிருந்து காப்பாத்தினர்.
செல்வி கேட்டாளே! என்று முருகவேல் சொல்ல “இவ ஒருத்தி எந்த மாதிரி நிலைமையிலிருந்து நாம வெளிய வந்துருக்கிறோம், அங்க கனகா பாத்துகிட்டு இருப்பா, குழந்தைகள் வேற பசில இருக்கும்” என்று பார்வதி பாட்டி செல்வியின் வாயை அடைக்க அவள் அடங்குவதாக இல்லை.  
“இங்க வந்த உடனேயே போன் பண்ணி சொல்லிட்டேன் பாட்டி, நாங்க வர வரைக்கும் தான் காத்து கிட்டு இருக்காங்க” சத்யா சொல்ல
“ஆமாம் மாமா அந்த நந்தன் ஏதோ நீங்க ஊர் பூரா கடன் பட்டிருக்கிறதா சொல்லுறான். உண்மையா?” என்று செல்வி கேக்க
காலையில் இருந்து அலைஞ்ச அலைச்சலில் யோசிக்க முடியாமல் மனக்குழப்பத்தில் இருக்க  “ஊரு பூரா இல்லடி ஐஞ்சு இடத்துல வாங்கினேன். இன்னும் மூனு இடத்துக்கு காசு கொடுக்கணும், இந்த டீல் நல்ல படியா முடிஞ்சா கொடுத்திடலாம்” செல்வி கேட்டதும் சத்யாவும் இயல்பாக சொல்லி விட்டானே ஒழிய யோசிக்கவில்லை.
“ஏண்டா மாப்புள எதுக்கு கடன் வாங்கின? பாக்டரிக்காகவா?” முருகவேல் கேட்டபோது வள்ளியின் நிலையில் உழன்றவன் எரிச்சலாக
“மல்லி, முல்லை கல்யாணத்துக்கும்” தான் என்றவன் வரதட்சணை விஷயத்தையும் போட்டுடைக்க  
“ஏண்டா இப்படி பண்ணுற? ஊர்ல எவன் எவன்கிட்டயோ கந்து வட்டிக்கு காசவாங்கி கஷ்டப்படுறியே! என் கிட்ட கேட்டா கொறஞ்சா போய்டும்” முருகவேலின் கோபம் தலை தூக்க அப்போதுதான் மனக்குழப்பத்தில் தான் உளறி விட்டதாக சத்யாவும் உணர்ந்தான்.
 ” ஆமா உங்கக்காவ உன்  கிட்ட இருந்து பிரிச்சிட்டதாக நினச்சு, என்ன ஒதுக்கி வச்சிட்ட, ஏண்டா நான் உங்க  வீட்டு மாப்புளடா கொஞ்சமாச்சும் மரியாத தா. விசயத்த பகிர்ந்து கிறதுல என்னடா பிரச்சினை உனக்கு, இந்த எல்லா  பிரச்சினையினாளையும் தான் சகலைக்கு அட்டாக் வந்ததா? அத கூட சொல்லாம” முருகவேல் ஆதங்கமாகவே கேக்க  சத்யா அமைதியானான்.
“அது மட்டுமில்ல மாமா அந்த நந்தன் சொல்லுறான் வள்ளி அண்ணிய அவன் தான் பொய்யா கேஸ் கொடுத்து மாட்ட வச்சிட்டானாம், அவங்க கெட்டவங்களாகவே இருந்துட்டு போகட்டும், பண்ணாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது நல்லதில்லை, செல்வராஜ் அண்ணா வேற அவங்கள கேட்டு கிட்டே இருக்காங்க, அவருக்காகயாவதும் அவங்கள வெளிய கொண்டுவரலாம்ல” செல்வி சொல்ல
“என்னமாதிரியான பெண் இவள் தன்னை கொல்ல நினைத்தவளை கூட குடும்பத்துக்காக மன்னித்து ஏற்றுக்கொள்ள சொல்வது” என்று முருகவேல் நினைக்க
“நானும் அத பத்தி வீட்டுல பேசலாம்னு தான் இருந்தேன்” சத்யதேவ் சொல்ல பார்வதி பாட்டி கழுத்தை நொடித்தார்.  
இவர்கள் ஒரு பிரச்சினையை முடித்துக் கொண்டு வீடு வர அங்கே ருத்ர மூர்த்தியாக செல்வராஜ் சத்யாவின் வரவுக்காக காத்திருந்தான்.

Advertisement