Advertisement

                                                        அத்தியாயம் 22

மரகதத்தின் மேல் இருந்த வெறுப்பால் தாய் வீட்டு சொந்தம் அவளுக்கு கிட்ட கூடாதென்றும், சத்யதேவின் சொத்தும் தங்களுக்கே வரவேண்டும் என்று ரோஜாவை சத்யாவுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்த வள்ளி அவன் செல்வியை திருமணம் செய்யவும் அவளை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து எப்படி துரத்தியடிப்பது என்று யோசித்து காய் நகர்த்த அவளை நெருங்க விடாது மரகதம் இருக்க வள்ளியின் நெஞ்சில் வன்மம்  ஏறிக் கொண்டது.

செல்வி ஒரு கிராமத்து பொண்ணு அப்பாவியா இருப்பா என்று எண்ணி கருத்தடை மாத்திரைகளை செல்விக்கு வழங்க  அதில் இருந்து செல்வி தப்பியதுமில்லாது. தன்னை பற்றிய உண்மைகளையும் அறிந்து கொண்டது வள்ளிக்கு கிடைத்த முதல் தோல்வி.

அதை பெரிதாக எடுக்காது செல்வியை கண்ட நேரமெல்லாம் வார்த்தையால் சாட செல்வியின் அமைதி அவள் மரகதத்தை போல் தன்னை கண்டு பயந்து விட்டாள் என்று தப்பாக எண்ணியவள் செல்வியை வார்த்தையால் குதறி எடுக்க செல்வியோ அமைதியாக தன் வழியில் வள்ளியை பலி தீர்க்கலானாள்.

“முருகவேலின் வீட்டில் சத்யா குடியிருந்த நாளிலிருந்தே அங்கு சென்றால் தனக்கு ஏதாவது வந்து விடியுது, அந்த வீடு எனக்கு ராசியில்” என்று புலம்பியவள் அறியவில்லை எல்லாம் செல்வியின் வேலை தான் என்று.

பார்வதி பாட்டியையும், செல்வியின் தம்பியையும் கண்டவளுக்கோ இவர்களை படுத்ததும் பாட்டில் செல்வி ஓடணும் என்று திட்டமிட முதலில் பார்வதி பாட்டியிடம் தனது ஆட்டத்தை ஆரம்பிக்க அவரோ வள்ளிக்கு மேலாக நின்று அவளை வீழ்த்த செல்வியின் தம்பீகளின் மேல் கவனத்தை திருப்பினாள்.    

என்ன சொன்னாலும் அமைதியாக இருக்கும் செல்வி கூட தம்பிகளை சொன்னதும் வெகுண்டெழுந்து நாயையும், ஆட்டையும் ஏவி விட, பார்வதி பாட்டியின் அடாவடித்தனமும் வள்ளியை தாய் வீட்டின் பக்கம் செல்ல விடாதது அவள் நெஞ்சில் தீயை மூட்ட செல்வியை விரட்டினால் போதும் என்றிருந்தவள் செல்வியை கொல்லும் வெறியில் இருந்தாள்.

அதற்க்கு சந்தர்ப்பம் பாத்திருந்தவள் வளைகாப்புக்கு செல்ல செல்வி சுமந்திருப்பது தனது தம்பியின் பிள்ளைகளை என்ற எண்ணம் சிறிதும் இல்லாது, சாவை பற்றி பேசி செல்வியை கலவர படுத்த ஏற்கனவே பயத்தில் இருந்த செல்வி அரண்டு விட்டாள்.

“மாப்புள லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வர்ற மாதிரி ட்வின்ஸோட வரப்போற” முருகவேல் சொல்ல

“எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்றது தான் இவன் ஸ்பெஷலே. புள்ள பெக்குறதையும் பிளான் பண்ணிட்டான்” செல்வராஜ் சொல்ல

புன்முறுவலோடு அமர்ந்திருந்தான் சத்யதேவ்.

“என்ன சொன்னாலும் அமைதியா இருந்து தப்பிச்சிடலாம்னு பாக்குறியா?” என நினைத்து  “என்ன மாப்புள கொஞ்சம் கூட வெக்கமில்லாம பொண்டாட்டிய சைட் அடிக்கிற”  செல்வராஜ் வம்பிழுக்க

“என் பொண்டாட்டிய நான் சைட் அடிக்காம வேறு யார் அடிப்பாங்க. அங்க பாருங்க முருகவேல் மாமாவ இந்த வயசுலயும் சைட் அடிக்கிறத” சத்யா குரலை தாழ்த்தி சொல்ல அது முருகவேலின் காதில் தெளிவாக விழுந்தது

“இவ்வளவு நேரம் உன்ன ஓட்டினோம் அமைதியாத்தானே இருந்த பொண்டாட்டிய பத்தி  சொன்னதும் வாய் பூட்டு கழண்டுக்கிச்சே. நானும் என் பொண்டாட்டிதான் சைட் அடிக்கிறேன். அதென்ன இந்த வயசுன்னு சொல்லுற? எந்த வயசானாலும் நான் அடிப்பேன்” மரகதத்தின் மேல் வைத்த கண்ணை எடுக்காது முருகவேல் சொல்ல

“அப்போ நானும் என் பொண்டாட்டிய சைட் அடிக்க போறேன். யாரும் என்ன டிஸ்டப் பண்ணாம பாத்துக்கோங்க”    செல்வராஜ் சொல்லி விட்டு வேலையை ஆரம்பித்தான்.

************

வள்ளி பேசியதில் கலங்கி கொண்டிருந்த செல்வியின் கவனம் இங்கில்லை. தனக்கு ஏதாவது நடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்கு ஒன்றும் நடந்து விடக்க கூடாது என்று மனதால் பிராத்தித்தவாறே இருந்தவள் சத்யாவை திரும்பியும் பார்க்கவில்லை.

வளையல்  அணிவிக்குமாறு சத்யாவை அழைக்க செல்விக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு நிறத்திலும் தட்டில் அடுக்கி ரோஜா நீட்ட

அவளின் கையை பிடித்து சத்யா வளையல்களை அணிவிக்க அவனது தொடுகையில் சுய உணர்வுக்கு வந்த செல்வி அவனை பார்த்து புன்னகைக்க நிறைமாத பூரிப்பில் கொழுக் மொழுக் என்று ஆகி இருந்த செல்வியின் கன்னங்களை கடிக்கும் எண்ணம் தோன்ற நிறைந்திருந்த சபை என்றும் பாராது செல்வியின் கன்னத்தில் முத்தமிட்டு காதில் ஏதோ கிசு கிசுத்து விட்டே நிமிர்ந்தான்.

அவனது செய்கையில் வெக்கம் பிடிங்கித் தின்ன தலை குனிந்தவளின் காதில் அவன் சொன்னது இன்னும் அவளை சிவக்க வைக்க தலையை நிமிர்த்தினாள் இல்லை.

ஒவ்வொருத்தரும் கேலி பேச ககாம்பாளும், பார்வதி பாட்டியும் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக “ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும்” என்று ஒரே நேரத்தில் சொல்ல வள்ளி மட்டுமே முகம் திருப்பினாள்.

சத்யதேவின் முகத்தில் இருந்த ஆனந்தத்தை கண்டு செல்வியின் மனமோ “மாமா என்னைக்கும் சந்தோசமாக இருக்கணும். என் வாழ்க்கைல எனக்கு கிடைச்ச வரம் அவர் தான்” வள்ளியை பார்த்தவள் கர்வமாக புன்னகைக்க வள்ளியினுள் ஏதோ ஒன்னு பற்றியெரிந்தது.

வளைகாப்பு முடிந்து ஒவ்வொருவராக விடை பெற “போய் புடவையை மாத்து தமிழ் ரொம்ப நேரமா உடுத்தியதால அசௌகரியமான இருக்கும்” என்று கனகாம்பாள் அவளை அனுப்பி வைக்க குளியல் அறைக்கு புகுந்தவள் குளித்து விட்டே வந்தாள்.

அறைக்கு வந்தவளை பின்னாடி இருந்து சத்யா அணைத்துக் கொள்ள செல்வியின் மனதில் வள்ளி சொன்னவைகள் வந்து கண்ணில் நீர் கோர்க்க அவனின் கைகளை இறுக்கப் பிடித்தவள் கையில் முத்தம் வைக்க அவனின் கையை நனைத்தது கண்ணீர் துளிகள்.

“ஏய் எதுக்கு இப்போ கண் கலங்குற” என்று செல்வியின் கண்ணீரை துடைத்து விட்டவன் “அங்க பாரு உன் கன்னத்த முகத்தையே மறைக்கிற மாதிரி உப்பி இருக்கு”  என்று கண்ணாடியில் தெரிந்த அவளின் விம்பத்தை காட்ட செல்வியின் முகத்தில் புன்னகை

“ஏன் மாமா நான் குண்டாயிட்டேன்ல?”

“ஆமாண்டி முன்ன உன்ன அசால்ட்டா தூக்கிடுறேன். இப்போ தூக்கினா என் இடுப்பெலும்பு முறிஞ்சிடும்” என்று சொல்லியவாறே கன்னத்தில் முத்தம் வைக்க

“குண்டாயிட்டதால உங்களுக்கு என்ன பிடிக்காம போய்டுமா?” கண்ணாடியில் தெரிந்த அவனின் விம்பத்தின் மேல் கண்ணை வைத்தவாறே கேக்க

“இப்போ தான் ரொம்ப புடிச்சிருக்கு, கொழுக் மொழுக்னு இருக்குறதால எப்பயும் உன்ன கட்டிக்கிட்டே இருக்கணும்னு தோணுது, என்ன வயிறு தான் இடிக்கிது” என்று மீண்டும் கன்னத்தில் முத்தம் வைக்க

“நான் செத்து போய்ட்டேனா”

“நானும் செத்து போயிடுறேன்” கொஞ்சமும் தாமதிக்காமல் வந்தது சத்யாவின் வாயிலிருந்து

“என்ன பேசுறீங்க மாமா. அப்போ குழந்தைகள யார் பார்ப்பாங்க, நான் செத்து போய்ட்டா நீங்க தான் பாக்கணும்” செல்வி அவனின் வாயில் கை வைத்து மூடியவாறே சொல்ல

அவளின் கையை விளங்கியவன் “அப்போ நீ மட்டும் என்ன விட்டுட்டு சாகலாமா? மாமா மட்டும் தனியா பாபங்கள எப்படி பாத்துகிறதாம்?” என்று புன்னகைத்தவாறே கேக்க அவனின் நெஞ்சில் சாய்ந்தவள்

“அப்போ கடவுள் என்ன உங்க கிட்ட இருந்து பிரிச்சிட மாட்டாரே” என்று குழந்தை போல் கேக்க

“மாட்டாரு”

பிரசவ சமயம் நெருங்க நெருங்க பெண்களுக்கு ஏற்படும் சாதாரண பயம் தான் இது பொறுமையாக கையாளவேண்டும் என்று மருத்துவர் சொல்லி இருக்க சத்யா அமைதியாகவும், அன்பாகவும் செல்விக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான்.

*************

மாலை மங்கி வரும் வேளையில் பிராணிகளை கூட்டில் அடைக்க செல்வி பின் பக்கமாக செல்ல அவள் தனியாக செல்வதை பார்த்து வள்ளி பின் தொடர்ந்த்தாள்.

ஊரில் இருக்கும் போது அது செல்வியின் வேலையாக இருக்க திருமணத்தின் பின் அவளால் செய்ய முடியாமல் போக இந்த வீட்டுக்கு குடி வந்ததிலிருந்து தம்பிகளையும் செய்ய விடாது தானே எல்லா வேலைகளையும் பார்க்கலானாள்.

இன்றும் வளமை போல் பிராணிகளை அடைக்கவென வந்தவளை வள்ளி பின் தொடர்ந்து வருவதை அறியாமல் செல்வி தனது வேளையில் கவனமாக இருக்க வள்ளி அவள் முன் வந்து நின்று கோபமாக பேசலானாள்.

“ஏண்டி பட்டிக்காடு ஒரு கிராமத்தையே கொண்டு வந்து இங்க குடியமர்த்தியிருக்கியே! என் தம்பி காச பூரா அழிக்கனும்னே கங்கணம் கட்டிக்க கிட்டு அலையிறியா”

வள்ளியின் குரலை கேட்டு திடுக்கிட்ட செல்வி வள்ளியை அங்கே எதிர் பாக்க வில்லை. வள்ளி சொன்னதை கேட்டு புசு, புசுனு கோவம் தலைகேறினாலும் பல்கலைக் கடித்து பொறுமை காத்தவள் அவள் சொன்னது காதில் விழாத வாறு தனது வேலையில் இருக்க வள்ளி சொன்னதில் உண்மை இல்லையென்பதே உண்மை.

பாலும், முட்டையும் தாராளமாகவே கிடைக்க வள்ளிக்கும், மரகதத்துக்கும் பங்கு செல்கிறது அதையறிந்தும், வள்ளி சொல்வது போல் செலவழிக்கும் சத்யாவே சும்மா இருக்கும் போது வள்ளியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் செல்விக்கு இருக்கவில்லை.

“என்னடி அமைதியாக இருக்க, என் தம்பிய முந்தானைல  முடிஞ்சிட்டேனு நினைப்போ” அடிக்க குரலில் சீற

வள்ளியை உறுத்து விழித்தவள் பொறுமை பறக்க “என் புருஷன தானே முந்தானைல முடிஞ்சேன், உங்களுக்கென்ன வந்தது?” என்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க

“என்னடி சொன்ன?” என்று செல்வியின் கூந்தல் நுனியை  பிடித்து இழுத்தவள் அடிக்க கையோங்க

வள்ளியை தடுத்த செல்வி கூந்தலை  பிடித்திருந்த கையை கடித்தாள்.

செல்வியின் கூந்தலை வள்ளி பிடுத்ததும் அவளின் செல்லப் பிராணிகளுக்கு அவளுக்கு வரும் ஆபத்து புரிந்ததோ கத்த ஆரம்பிக்க செல்வி கையை கடித்ததில் வெகுண்ட வள்ளி செல்வியை தள்ளி விட செல்வி கீழே விழுந்தாள்.

யாருமற்ற அந்த இடத்தில்  செல்வி கீழே விழுந்து வலியால் கதற அவளை குரூரமாக பார்த்தவள் “செத்துத் தொலை” என்றவாறே சென்று விட்டாள்.

வள்ளி செல்வியை தள்ளியது முன் பக்கத்திலிருந்து செல்வி விழுந்தது அமர்ந்திருப்பது  போல். வள்ளி தள்ளி விடுவாள் என்று எதிர் பார்க்காத செல்வி கீழே விழும் போது அனிச்சையாக வயிற்றில் கை வைத்தாலும் வேகமாக விழுந்ததில் சுளீரென வலியெடுக்க அது இடுப்பில் இருந்தா? வயிற்றில் இருந்தா? என்று உணரும் நிலையில் அவளில்லை.

வலியால் துடித்துக் கொண்டிருந்தவளை “செத்துத் தொலை” என்று வள்ளி சொல்லி விட்டு  சென்றதும் இருள் சூழ்ந்த அவ்வேளையில் காலையில் இருந்து தோன்றியது போல் செத்து விடுவேனோ என்று தோன்ற வலியால் முனகியவள் எழ முயற்சி செய்ய தோற்றவளாக கண்ணீர் வடித்தவாறே துடித்தாள்.

வீட்டினுள் வந்த வள்ளி கொஞ்சமேனும் குற்ற உணர்வில்லாது செல்வராஜை வீட்டுக்கு போலாம் என கிளப்ப ரோஜாவும், அவனும் மறுத்து விட்டனர்.

தான் தள்ளி விட்டதாக செல்வி சொன்னாலும் சமாளிக்க முடியும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள். செல்வி கடித்ததில் கை காயமாகி  இருக்க இங்கே இருந்தால் மரகதம் கண்டு பிடித்து விடுவாள் என்று எண்ணி வேலை இருப்பதாக கிளம்பி விட்டாள்.

முருகவேலும் செல்வராஜும் வராண்டாவில் அமர்ந்து கதையளக்க வராண்டாவில் ஓரத்தில் அமர்ந்து  பார்வதி பாட்டி பாக்கை உரலில் இடித்துக் கொண்டிருந்தார்.

மரகதம், ரோஜா, தாமரை வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக இறங்கியிருக்க, சத்யாவும் வாணனும், வேந்தனும், பூவரசம்  கடை வீதிக்கு சென்றிருக்க கூடவே ஆவாரம் அவர்கள் பின்னாடி ஓடியது.

செல்வி அறையில் ஓய்வு எடுக்க  கனகாம்பாள் சொல்லியிருந்த படியால் அவர் சமயலறையில் இருக்க வீட்டிலிருந்து தூரத்திலுள்ள கூட்டில் அடைக்கப் பட்ட  பிராணிகளின் சத்தமும், செம்பருத்தியின் [பசுமாடு] சத்தமும் காதில் விழுந்தாலும் அவர் கவனத்தில் இல்லை.

கடைக்கு சென்று விட்டு வந்த சத்யா செல்வி அறையில் இல்லாது தேட அக்கணமே ஆவாரம் பலமாக குறைக்க ஆரம்பித்தது.

“செல்வி எங்கம்மா” என்றவாறே அந்த பெரிய வீட்டை ஒரு சுற்று தேடிப்பார்த்து விட்டு சமயலறையில் இருந்த கனகாம்பாளிடம் கேக்க

“அறையில தானே இருந்தா?” என்றவாறு சாம்பாரை தாளிக்க சமையலறை கதவருகில் வந்து ஆவாரம் குறைத்தது.

“வேந்தா  எதுக்குடா ஆவாரம் இந்த கத்து கத்துறான்” என்று பார்வதி பாட்டி முன்  வாசலில் இருந்து கேக்க யோசனைக்கு குள்ளான வேந்தன் ஆவாரம் இருக்கும் பின் வாசலுக்கு ஓட கூடவே வாணனும், பூவரசும் ஓட பார்வதி பாட்டியும் எழுந்து நடக்கலானார்.

ஓடி வந்த வேந்தன் “மாமா ஆவாரம் எதையோ பார்த்து தான் கத்துறான் கொஞ்சம் என்னானு பாருங்க” என்று சொல்ல சத்யாவும் ஆவரத்தின் அருகில் செல்ல அது செல்வி இருக்கும் இடத்துக்கு ஓட எண்ண ஏதோ என்று டார்ச் லைட்டோடு செல்வராஜும், முருகவேலும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

“கோழித்திருடன் எவனாவது உள்ள புகுந்துட்டானோ” வாணன் கேக்க

“ஏதாவது பிராணி செத்திருச்சோ” பூவரசு கேக்க   

“மத்த எல்லா பிராணிகளும் ஏன் கத்துது” என்று கேட்டவாறே வேந்தன் நடக்க அங்கே செல்வியை கண்டு அதிர்ச்சியடைந்தனர் அனைவரும்.

“அக்கா” என்று தம்பிகளும் “செல்வி” என்று சத்யதேவும் கத்த “மாமா” என்று முனகியவள் மயக்கத்துக்கு செல்ல உடனே செல்வி  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டாள்.

*******

“ஐயோ  ஐயோ.. நான் நினைச்ச மாதிரியே நடந்திருச்சே” பார்வதி பாட்டி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ தீவிர சிகிச்சை பிரிவின் முன் அனைவரும் கூடி அழ அங்கே பெரும் சத்தமாக இருந்தது

நர்ஸ் வந்து “இப்படி இங்க இருந்து கிட்டு அழாதீங்க, கும்பலா இருக்காம ரெண்டு பேர் மாத்திரம் இங்க இருங்க மத்தவங்க வைட்டிங் ரூம்க்கு போங்க” என்று சொல்ல

கண்களில் நீரோடு அமர்ந்திருந்த சத்யதேவ் நர்ஸிடம் வந்து ” டாக்டர் இன்னும் வரலையா? என் வைப் நிலைமை?”

“அவங்கள பார்த்த டாக்டர் லீவ்ல இருக்கிறாங்க டாக்டர் ப்ரியாக்கு தகவல் சொல்லிட்டோம் வந்து கிட்டே இருக்காங்க” என்று விட்டு அகல செல்வி மயங்கியதிலிருந்து கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்தான் சத்யதேவ்.

டாக்டர் ப்ரியா தேவேந்திரன் {என்னை மறந்தவளே! நம்ம மீராவோட அத்து/ தேவின் ப்ரியா} வேக நடையோடு பிரசவ அறைக்குள் புகுந்தவாறே “இந்த பேஷண்டோட பைல் எடுத்துட்டு வாங்க” என்று நர்ஸிடம் சொல்ல

“உள்ள இருக்கு” செல்வியின் நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதால் மருத்துவர் எதை கேப்பார் என்று அறிந்து எடுத்து வைத்திருந்தார் அந்த நர்ஸ்.

செல்வியை பரிசோதித்த ப்ரியா “இவங்களுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும். தயார்  படுத்துங்க” என்று வெளியே வந்தவள் செல்வியின் குடும்பத்தாரை விசாரிக்க சத்யதேவும், மரகதமும் மாத்திரமே அங்கே இருந்தனர்

“நீங்க தான் செல்வியோட கணவரா?” சத்யதேவ் “ஆம்” என்று தலையசைக்கவும்

“கீழ விழுந்து வயித்துல அடி படலானாலும், இரட்டை குழந்தைகள் என்பதாலையும்,  அவங்க விழுந்ததுல இடுப்பெலும்பு பிசகி இருக்கு கொஞ்சம் க்ரிடிகளான கண்டிஷன் தான், உடனே ஆபரேஷன் பண்ணனும், வலியில ரொம்ப நேரம் இருந்திருக்குறாங்க, ஏஜ் வேற பதினெட்டுனு சொல்லுறீங்க, சின்ன வயசுல இடுப்புல சதா சுமக்கிறது மாதிரி ஏதாவது வேல செஞ்சாங்களா? இடுப்பெலும்பு கொஞ்சம் பலகீனமா இருக்கு.  பேர்பர்ஸ் வரும் சைன் பண்ணிடுங்க. விழுந்த அதிர்ச்சில குழந்தைகள் குறையோடு பிறக்க வாய்ப்பிருக்கு, மனச திடப் படுத்திக்கோங்க ஐ வில் ட்ரை மை பெஸ்ட்” என்றவாறே ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றாள்”

ப்ரியா பேசப் பேச செல்வியின் வலியை போன்ற வலியோடு நெஞ்சம் கணக்க கேட்டிருந்தவன், செல்விக்கு பதினெட்டு வயது என்றதும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தான்.

மரகதம் வந்து ஆதரவாக சத்யாவின் தோள் மீது கையை வைக்க

அவளின் கையை பிடித்துக் கொண்டவன் “அக்கா… நான் என்ன செய்வேன்..கா… செல்வி என்ன விட்டு போய்டுவா போல இருக்கே, அவளுக்கு பதினெட்டு வயசுன்னு டாக்டர் சொல்லுறாங்க, உண்மையா?”  உருவத்தை பார்த்து அவளின் வயதை தீர்மானித்த தன்னை நொந்து கொண்டான்.

ஏதோ நியாபகம் வந்தவனாக “நீ தானே அன்னைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆபீஸ்ல பேர்பர்ஸ் எடுத்து பார்த்த? உனக்கு ஏற்கனவே உண்மை தெரியுமா? ஏன்கா என் கிட்ட  சொல்லல? எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்வேனே. என் கல்யாணம் என் கைமீறி நடந்தது. அவ சின்ன பொண்ணுக்கா, பாவம் கா.. அவ” என்று கதறி அழ

“நடந்த கல்யாணம் இல்லனு ஆகிடுமா?” மரகதம் சொல்ல

அவளை ஏறிட்டவன் “அட்லீஸ்ட் குழந்தை பெத்துக்கிரதையாவது தள்ளி போட்டு இருப்பேனே” அவனை தேற்றத்தான் மரகதத்தால் முடியவில்லை.

விடிய விடிய அந்த தீவிர சிகிச்சை பிரிவின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தவாறே புலம்பிக் கொண்டிருந்தான் சத்யதேவ்.

Advertisement