Advertisement

                                                  அத்தியாயம் 30 -2
சில நாட்களுக்கு பிறகு
“ஹப்பா இந்த ஊரு காத்து கூட சுகமா வீசுது” என்றவாறே சாருலதா குடும்பத்தோடு காரை விட்டு இறங்க
“வாங்க, வாங்க” என்று சத்யதேவ் அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்து  குலதெய்வ கோவிலில் நடக்கும் குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்கு என்று அமைக்கப் பட்ட கூடாரத்தின் கீழ் அமர்த்த அங்கே வந்த செல்வியை கண்டு
“நீ தான் தமிழ்செல்வியா? சத்யாக்கு பொருத்தமா தான் இருக்க, உங்க கல்யாணத்துக்கும் வர முடியல. இது உனக்கும், சத்தியாக்கும், இது பாப்பங்களுக்கு” என்று பரிசு பொருட்களை கொடுக்க” லதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பெற்றுக் கொண்டவள் மல்லி, முல்லையிடம் நலம் விசாரித்து சகஜமாக பேச
“உங்க அத்தைய பத்தி ஒவ்வொரு கத சொன்னாங்க, ஆனா அவங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே” செல்வி யோசனையாக சொல்ல
“ஹாஹாஹா அவங்கள பத்தி தெரியாம பேசுற அவங்க அனிதாவ கண்டா மட்டும் நடுங்குவாங்க” மல்லிகை சொல்ல அங்கே வந்த தருணின் மனைவி அனிதா
“என்ன கண்டா இல்ல  ஊசிய கண்டா, அவங்க என்ன பேசினாலும், ஊசிய தூக்கி காட்டினா போதும் கப்சிப் தான்” என்று சிரிக்க
முல்லையும் “அது மட்டுமா  ராஜஸ்தான் புழுதி புயல் தாக்கி சேதாரத்தோட தப்பிச்சிட்டாங்க” என்று சிரிக்க என்ன ஏது என்று கேட்ட செல்வியை சத்யா அழைக்கவே
“நீங்க போங்க அண்ணி ஒரு வாரம் இங்க தான் இருக்க போறோம் பேச நிறைய இருக்கு அப்பொறம் சொல்லுறேன்” மல்லிகை சொல்ல “சரி” என்று தலையாட்டியவாறே அகன்றாள் செல்வி.
வாணன், வேந்தன் மடியில் அமர்த்தி குழந்தைகளுக்கு மொட்டையடித்து, காது குத்த பூவரசும் “நானும் இருப்பேன்” என்று வேந்தன், வாணன் நடுவில் அமர்ந்திருந்தான்.
சத்யாவின் திருமண சாப்பாடையும் சேர்த்து முழு ஊரையும், சொந்த பந்தங்களையும் அழைத்து விருந்து வைத்தார் கனகாம்பாள். அங்கேயே குழந்தைகளுக்கு ஆனந்தவர்ஷினி, அமிர்த்தவர்ஷினி என பெயர்களும் இடப்பட நிகழ்ச்சியும் இனிதே நடைபெற்றது.
வள்ளியின் விஷயமறிந்த வம்பு வளர்க்கும் சிலர் மாத்திரம் கேக்க செல்வராஜை கைகாட்டி விட்டனர் மற்றவர்கள். அவனிடம் கேக்க பயந்தவர்கள் ஒதுங்க சிலர் சென்று விசாரிக்க “என் பொண்டாட்டிய பத்தி எதுக்கு கேக்குற” என்று எகிற “எதுக்குடா வம்பு” என்று அவர்கள் ஒதுங்க வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.  
சாருலதா குடும்பத்தோடு வந்ததை ஆச்சரியமாக பார்த்த கனகாம்பாள் ஏதாவது கேப்பாளோ! மனம் நோக்கும் படி சொல்வாளோ! என்று அஞ்ச அவருக்கு உதவியாக வேலை பார்த்தவளை பார்த்து வாயை பிளந்தார்.
மல்லி, முல்லை குழந்தைகள் இருவரும், மாமா, மாமா வென சத்யாவின் பின்னால் ஓட அதை கண்டு சாருலதா “என்ன இருந்தாலும் ரத்த சம்பந்தம் இல்லையா அதான் பாசம் பொங்குது” என்று புன்னகைக்க
“ஹாஹாஹா மம்மி நீ ரொம்ப இனசன்ட்” என்று தருண் கிண்டலடிக்க
லதா “இப்போ என்ன சொல்ல வர ” என்று முறைக்க
“இது டெக்னோலஜி உலகம் அண்ணிக ரெண்டு பேரும் வீடியோ காலில் டெய்லி பாசப்பயிற வளக்குறாங்க, பசங்களுக்கு மாமாவ தெரியாம போய்டுமா?” என்று கேள்வியாய் நிறுத்த
லதா என்ன சொல்ல போகிறாள் என்று அனைவரின் முகமும் கலவரமடைய “இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு, உங்க குடும்பத்த பிரிச்சிட்டேனோ! என்று பயந்துட்டேன்” என்றவள்
அனைவரின் முன்னிலையிலும் சத்தியாவிடம் வந்து “என்ன மன்னிச்சிக்க சத்யா, இதுல  நீ கொடுத்த வரதட்ச்சன பணம், பொருள் அனைத்துக்கும் பெறுமதியான  பணம் இருக்கு வாங்கிக்க என்று சொல்ல”
“அத்த நீங்க திருந்திட்டதாக சொன்னாங்க, அதுக்காக ஒரேயடியா இவ்வளவு நல்லவங்களா ஆகா கூடாது, நாடு தாங்காது. என் தங்கைகளுக்கு கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும்” என்று நாசூக்காக மறுத்து விட்டான் சத்யதேவ்.  
மல்லியும், முல்லையும் அவனை கட்டிக் கொண்டு நாங்க தான் இப்போ நம்ம கம்பனிய  பாத்துக்கிறோம், அத்த எங்க பொறுப்புல விட்டுட்டாங்க” என்று சந்தோசமாக சொல்ல சத்யாவுக்கு தங்கைகளின் படிப்பு வீன் போகாமல் வேலை பார்ப்பது மகிழ்ச்சியை தர
“ஆனா உனக்கு உதவ முடியாம……….” என்று மல்லிகை இழுக்க
“எனக்கு உதவ என் பொண்டாட்டி இருக்கா அவ படிச்சு பட்டம் பெற்று என் கூட வேல பாக்க போறா” என்று சத்யா செல்வியை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தி கழுத்தில் கை போட செல்வி திரு திருனு முழிக்க ஆரம்பித்தாள்.
*******************************************************************
நாட்கள் உருண்டோட சத்யாவின் மொத்த கடனையும் முருகவேல் கொடுக்க புதிய டீலில் கிடைத்த லாபத்தில் பாக்டரியை இன்னும் விரிவு படுத்தியவன் டெக்ஸ்டைலிலும் கால் பதித்தான். அந்த கடையை ரோஜா, மித்ரன் பொறுப்பில் விட்டவன் மித்ரனுக்கு அதில் பங்கும் கொடுத்து, ரோஜா, மித்ரனின் திருமணத்தையும் நடத்தினான்.
முருகவேலுக்கு காசை திருப்பி கொடுத்தாலும் வாங்க மாட்டான் என்று அறிந்ததால் தாமரை, பூவரசின் பெயரில் பேங்கில் கணக்கு வைத்து பணம் போட்டு வருகிறான். அதை முருகவேல் அறிந்துகொள்ளும் நாளில் சத்யாவுக்கு வசை மழை எதிர்காலத்தில் காத்துக் கொண்டிருக்கின்றது.
சிரித்த முகமாக தூங்கும் கணவனையே கண்கொட்டாமல் செல்வி பாத்திருக்க மெதுவாக கண்விழித்தவன் செல்வியை கண்டு இழுத்து இறுக்கி அணைக்க
“என்ன மாமா ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கீங்க”
“ஒரு அழகான கனவு, எனக்கு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் விருது கிடைச்சது” கனவு நிஜமாகும் தூரம் மிக அருகில் என்பதை அறியாமல் சத்யா சொல்ல
“நிஜமாவா” செல்வி அவனை அணைத்துக் கொள்ள ஒற்றை கண்ணை திறந்து பார்த்தவன்
“உனக்கும் ஏதோ ஆவடு கிடைச்சது செல்வி என்னன்னுதான் தெரியல”
“எனக்கா?” எனக்கெதுக்கு கொடுக்க போறாங்க செல்வி யோசனைக்குள்ளாக
“உன்ன புது கோஸ்ல சேர்த்து விடலாம்னு இருக்கேன், அத படிச்சா கண்டிப்பா விருது கிடைக்கும்” சத்யா சிரிப்பை அடக்கியவாறே சொல்ல
“இப்போ தான் ஒன்ன முடிச்சேன் அதுக்கே ரெண்டு வருஷம் ஓடிப்போச்சு இன்னொன்னா?” என்று மனதுக்குள் சத்யாவை முறைத்தவள் இன் முகமாகவே “மாமா கோச கம்ப்ளீட் பண்ணா என் பையன பத்தி யோசிக்கலாம்னு சொன்னீங்க மறந்துட்டீங்களா?”
“ஆமா சொன்னேன். எந்த கோஸ்னு சொல்லலையே!  முதல்ல இந்த கோச முடி” அவன் சொன்னதில் கடுப்பானவள்
” என்ன? என்ன ஏமாத்த பாக்குறீங்களா? ஏற்கனவே ரெண்டு முடிச்சிட்டேன். முதல்ல பையனுக்கு வழி பண்ணுங்க” என்றவள் எழுந்து செல்ல பார்க்க
“முதல்ல கோச முடி, பொண்ணுங்களுக்கு நாலு வயசு கூட அகல அதுக்குள்ளே என்ன அவசரம் இன்னும் மூனு வருஷம் போகட்டும்” சொன்னவன் திரும்பி படுக்க  கோவத்தின் உச்சிக்கே சென்று தலையணையால் அவனை மொத்த ஆரம்பித்தாள் செல்வி .
ரெண்டு குட்டி வர்ஷினியும் வந்து சேர அங்கே ஒரு குளிர் யுத்தம் போல் அறை காட்ச்சியளித்தது. “வள்ளியை பாக்க போக வேண்டாமா” என்று கனகாம்பாள் குரல் கொடுத்த போதுதான் அனைவரும் மேனி முழுவதும் பஞ்சோடு வெளியே வர அனைவரையும் குளிக்க துரத்தி விட்டார் கனகாம்பாள்.
“இந்த குட்டி வாலுங்க பண்ணுற சேட்ட பத்தாதுன்னு, அதுங்கள பெத்ததுன்களும் ஆட்டம் போடுதுங்க” என்று முணுமுணுத்தவாறே கனகாம்பாள் வெளியே செல்ல தயாராகி வந்தார்.    
அது ஒரு அரசாங்க மனநல காப்பகம் உள்ளே நுழைந்த கனகாம்பாளையும், சத்யா மற்றும் செல்வியையும் வள்ளி அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் விட்ட அந்த செவிலி வெளியேற வள்ளியின் அருகில் சென்றனர் மூவரும்.
செல்வராஜ் பேசி விட்டு சென்றதும் மயங்கி விழுந்த வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டாள். அவலுடன் இருந்த சில கைதிகள் வள்ளி பணத்திமிரை காட்டுவதாக நினைத்து அடிபின்னி எடுத்திருக்க உடம்பிலுள்ள காயங்களுடன் கோட்டில் நிறுத்தப்பட்டாள்.  
பணத்தை பல வருடங்களாக கையாடல் செய்ததுமில்லாது, பணம் வசூலிக்கும் இளைஞர்களையும் பணத்தாசை காட்டி கூட்டு சேர்த்து மோசடியில் ஈடு பட வைத்த  குற்றத்துக்காக கோட் தண்டனை வழங்க வள்ளியின் மயான அமைதி அவளின் மனநிலையை சொல்ல, கைதிகளுக்கான அரச மனநல  காப்பகத்தில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கோட் தீர்ப்பன்று வள்ளிக்காக வீட்டிலிருந்து யாரும் செல்லவில்லை. வள்ளியின் நிலையை வீட்டுக்கு அறிவித்ததும் செல்வியும் கனகாம்பாளும் மாத்திரமே வள்ளியை பார்க்க வேண்டும் என்று துடிக்க, மரகதம் முருகவேலை பாவமாக பார்க்க அவன் முறைத்த முறைப்பில் அமைதியானாள். மற்றவர்களோ! செஞ்ச பாவத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனையாகவே! ஏற்றுக்கொண்டனர்.
கனகாம்பாளையும், செல்வியையும் அழைத்து சென்ற சத்யாவிடமும் அந்த காப்பக மருத்துவர் சொன்னது, “சின்ன வயசுல இருந்தே தனக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கணும்னு, கவனிக்கணும், செல்லம் கொஞ்சமும், முதலில் எல்லாம் எனக்கே கிடைக்கணும் என்ற மாதிரியொரு மனநிலையில் இருந்து இருக்காங்க, அங்க தான் பிரச்சினை ஆரம்பம் ஆகியிருக்கு, அப்போவே சரி பண்ணி இருக்கலாம், அவங்க கணவன் பேசினது தான் அவங்கள ரொம்ப பாதிச்சு இப்படி ஆகி இருக்காங்க அவர் வந்தா இவங்கள குணப்படுத்த வாய்ப்பிருக்கு, உறுதியா சொல்ல முடியாது” என்று வள்ளியின் நிலையை சொல்ல
செல்வராஜிடம் சொன்ன போது “என்ன மன்னிச்சிடுடா மாப்புள என்னால அவளை மன்னிக்க முடியல, எப்போ என் மனசு அவளை மன்னிக்கிதோ! அப்போ வந்து பாக்கிறேன்” என்று மறுத்து விட மூன்று மாதங்களுக்கு ஒரு முறையென்று செல்வியும், கனகாம்பாளும் போய் பார்த்து விட்டு வர இன்றும் அதுபோலவே வந்தனர்.
வள்ளி புலம்பியதெல்லாமே செல்வராஜ் பற்றியும், அப்பா முத்துக்குமார் பற்றியும் தான். அவளின் நிலையை கண்டு மூவரும் வருந்தினாலும், கடவுளின் தீர்ப்பை ஏற்றவர்களாக அவளை குளிப்பாட்டி, உணவூட்டி விட்டு விடை பெற்றனர்.
சத்யாவுக்கு வளர்ந்து வரும் இளம்தொழிலதிபர் விருது இந்த வருடம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட அந்த சந்தோசத்தை கொண்டாட விடாமல் செல்வி பொண்ணுங்க அப்பா கட்ச்சி எனக்கு பையன் வேணும் என்று ஸ்ட்ரைக் பண்ண, வாணனும், வேந்தனும் காலேஜில் சேர இருப்பதால் “இதை தான் படிப்பேன்” என்று வாதாட செல்வி “இல்ல இதை தான் படிக்கணும்” என்று சண்டை போட  சத்யதேவ் தான் தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்க, அந்த பக்கம் தாமரை போன் செய்து காலேஜில் ஒருவன் லவ் பண்ண சொல்லி டொச்சேர் பண்ணுவதாக சொல்ல,
சத்யாவின் வாழ்க்கையில் டிசைன் டிஸைனா பிரச்சினைகள் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் இருக்க எல்லாவற்றையும் அவன் சமாளிப்பான் என்ற நம்பிக்கையில் அவர்களிடமிருந்து விடை பெறுவோம்.
                                                      நன்றி
                                                 வணக்கம்
                                                                                                                              MILA

Advertisement