Advertisement

                                                         அத்தியாயம் 28
ரோஜாவின் அன்னையை காண நந்தன் வந்ததை புருவம் சுருக்கி பார்த்த மித்ரன் நந்தன் சொன்ன விஷயத்தில் கண்டிப்பா யாராவது கிளப்பி விட்ட செய்தி தான். என்று முடிவு செய்தவன் நந்தனை மாட்ட வைக்க அந்த நாலு பேர் உக்காரக் கூடிய வட்ட மேசையில் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவன் கேமராவை ஓன் செய்து காட்சிகளை அவர்கள் அறியாதவாறு சரி பார்த்து தனது ஷர்ட்டின் முன் பாக்கெட்டில் போனை வைத்து ஆடாது அசையாது அமர்ந்திருந்தான்.
வள்ளி பேசப் பேச அதிர்ச்சியடைந்தவன் ரோஜாவை நினைத்து கவலையடைந்தான், இரண்டு தங்கைகளுடன் பிறந்தவனாக செல்வியின் நிலையை எண்ணி வருந்தி வள்ளியை ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதியெடுத்தான்.
“நேர்மையின் சிகரம், உழைப்பை மட்டுமே நம்பும் சத்யதேவுக்கு இப்படி ஒரு அக்கா” என்று நந்தன் பல முகபாவங்களை காட்ட மித்ரன் வளமை போல் அமைதியானான்.
நந்தன் போனை கையில் எடுத்து செல்வமாணிக்கத்தின் ஆசிரமத்துக்கு அழைக்க மித்ரன் யோசினைக்குள்ளானான். செல்வமாணிக்கத்திடம் வள்ளிக்கு கொடுத்த தொகையை விட ஒரு  லட்சம் அதிகமாக கொடுத்ததாக சொல்லி போனை அணைக்க
“எதுக்கு சார் இப்படி பண்ணீங்க?” மித்ரன் கேக்க
“அந்த பொம்பள சொன்னதை கேட்டியா?  சத்யாவுக்கு அவ பொண்ண கட்டி வைக்க எந்த எல்லைக்கும் போவாளாம். அவ இருந்தா நம்ம திட்டம் தவிடு பொடியாகிடும். அவளை எலிமினேட் பண்ணா தான் நீ ரோஜாவ கல்யாணம் பண்ண முடியும். ஆனாலும் நேர்வழில கல்யாணம் பண்ண முடியாது போலயே!” என்று  யோசித்தவன் “பேசாம அந்த பொண்ண ரேப் பண்ணிடு என்று சொல்ல
காதலியையே சீரழிக்குமாறு காதலனிடம் சொல்லும் போது வரும் கோவத்தை மித்ரன் எவ்வாறு அடக்கினான் என்பதை அவனின் முகமே காட்டி கொடுத்திருக்கும் போனை நொண்டியவாறே பேசிய நந்தனின் கண்களுக்கு அது புலப்படவில்லை. மித்ரனினிடமிருந்து பதில் வராது போகவே
“என்ன மித்ரா வளமை போல சரி என்று தலய ஆட்டி சொன்னியா?” என்று நந்தன் சத்தமாக சிரிக்க தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த மித்ரன்
“நான் போன் பண்ணாலும் அதிக நேரம், பேச மாட்டா வெளியில எல்லாம் என் கூட வரவே மாட்டா” என்று மித்ரன் சொல்ல
“சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தானா அமையாது நாம தான் அமைச்சிக்கணும்” இன்னும் சில வற்றை பேசிய பின் கிளம்பினான்.
மித்ரனின் பிறந்த நாளன்று ரோஜா அவனை சந்திக்க வருவதாக சொல்ல அவளின் அன்னையை பற்றி அவளுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைக்க இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்ளலாம் என்று எண்ணியவன்
“அதுக்கு மட்டுமா? எஸ்கேப் ஆகிகிட்டே இருக்கா ஒரு கிஸ்ஸாவது அடிக்கணும்” என்று தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அன்று காலை ஹோட்டல் அறைக்கு வந்தவன் நந்தனுக்கு போன் செய்து அவன் சொல் படி அணைத்தும் நடப்பதாக கூறி விட்டு அறையில் எங்கயாவது காமெரா பொருத்தி இருக்கா என்று பார்த்து இல்லை என்றதும் குளித்து விட்டு வந்தவன் உள்ளுணர்வு சொல்ல கதவை திறந்தான் அங்கே அவன் தேவதை நின்று கொண்டிருக்க  அவளை இழுத்து இறுக அணைத்து கொண்டு இத்தனை நாள் காதலின் தாகம் தீர அவளின் இதழில் தேன் பருக ஆரம்பிக்க ரோஜாவும் அவளின் முதல் முத்தத்தில் மெய்மறந்து அவனுள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துக் கொண்டிருந்தாள்.
“மித்து, மித்து” என்று ரோஜா உருக மித்ரனுக்கே தன்னை கட்டுப்படுத்துவது பெரும் பாடாகி போக அவளை தன்னிடமிருந்து பிரித்திடுத்தவன் அவளை கட்டிலில் அமர்த்த
“யாரடா அது  என் பேவரிட் சாக்கியை பிடிங்கித் தின்னது” என்று முழிக்க அங்கே மித்ரன் ஆடையணிவதை  கண்டு திகைத்து திரும்பியவள்
“இப்படியா தன்னிலை மறந்து நடந்து கொள்வ?” என்று தலையில் குட்டிக் கொள்ள
“பாத்து பாத்து சிறு மூள கலங்கி மூக்கு வழியா ஒழிகிடும்” மித்ரனின் கிண்டலில் அவனை முறைத்தவள் அவனை திட்ட ஆடம்பித்தாள். ஒருவாறு பிறந்தநாளை கொண்டாடியவன் நந்தனின் திட்டத்தை சொல்ல
கண்கள் கலங்கியவாறே “மித்து இதுவே வேற யாராவதா இருந்தா இந்நேரம்……” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வள்ளியை பற்றி எவ்வாறு அவளிடத்தில் சொல்வதென்று முழித்தவன். சொல்லி தான் ஆகா வேண்டும் என்று முடிவெடுத்தவனாக
“உன் மாமா வைப் அவங்க எப்படி இருக்காங்க?”
“இப்போ தான் உடம்பு தேறி கிட்டு வருது நான் தமிழ போய் பார்க்கவே இல்ல”
“ஏன்”
எல்லா விஷயத்தையும் பகிர்ந்தவள். “யாரை நம்புறதுனு தெரியல, ஒரே குழப்பமாக இருக்கு” என்று நெற்றியை தடவ
“ஒரு வேல தப்பு உங்கம்மா மேல தான் என்றா என்ன பண்ணுவ?” யோசனையாக அவனை பார்த்தவள்
“கண்டிப்பா அம்மா தமிழ கொல்லுற அளவுக்கெல்லாம் போக மாட்டாங்க மித்து” என்று உறுதியாக சொல்ல
மித்ரன் போனில் இருந்த அந்த காணொளியை இயக்கி ரோஜாவின் கையில் கொடுக்க அதை பார்க்க பார்க்க தன் அன்னையின் கோரா முகம் கண்டு அதிர்ச்சியடைந்தவள் பேச்சற்று நின்றது சில கணமே!
“மித்து நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அம்மா தமிழ சந்தோசமாக வாழ விட மாட்டாங்க போல இருக்கு” என்று சொல்ல
“உனக்கு கல்யாணம் ஆனாலும், சத்யா சார்  நிம்மதியா இருப்பார்” என்று அவளின் கையை பிடித்துக் கொள்ள
“கல்யாணம் நடக்கணும் மித்து ஆனா எங்கம்மா மனசலவுல காயப்படணும்” என்றவள் “உங்க நந்தன் சார் சொன்னதை அரங்கேற்றிடலாம்” என்று சொல்ல
“பைத்தியம் மாதிரி பேசாத, இந்த வீடியோவ சத்யா சாருக்கு போட்டு காட்டினாலே போதும். உங்கம்மா அவரு வைப்ப நேருங்காம பாத்துப்பாரு”
“இல்ல மித்து, மாமா ரொம்ப நல்லவரு, என்ன முடிவெடுத்தாலும் யாருக்கும் பாதகமில்லாம முடிவெடுப்பவரு. அவர் கிட்ட போய் சொன்னா ரொம்ப மனசுடஞ்சி போய்டுவாரு. அதனாலதான் சித்தியும் எதுவுமே சொல்லுறதில்ல” என்று சொல்ல
“நீ என்ன சொன்னாலும் உனக்கு அந்த மாதிரியான ஒரு துரோகத்த பண்ண என்னால முடியாது” என்று மித்ரன் ஆணித்தரமாக சொல்ல
ரொம்ப நேரம் யோசித்தவள் “சரி அப்போ இங்க அப்படி ஒரு விஷயம் நடந்த மாதிரி காட்டினா? அம்மா மனவேதனைப் பட்டு, நம்ம கல்யாணத்த அவங்களே பண்ணி வைப்பாங்கள்ல?
வள்ளியின் மேல் வெறுப்பில் இருந்த மித்ரனுக்கும் அது சரியென தோன்ற வள்ளியின் போனுக்கு அழைத்து அந்த காலை செல்வராஜ் எடுத்தான் என்று அறியாமல் பட படவென பேசிவிட்டு அணைத்து விட்டான்.  
அறையை கொஞ்சம் மாற்றி அங்கே ரோஜா கற்பழிக்கபட்டாள் என்பது போல் அமைத்து ரோஜாவும் போர்வைக்குள் நுழைய கதவு வேகமாக தட்டுப்பட ரோஜா அருகில் இருந்த கிளாசில் உள்ள தண்ணீரை ஊற்ரிக் கொண்டு அழுதது மாதிரி  நடிக்க உள்ளே வந்தது செல்வராஜ்.
அவனை கண்டு “அப்பா” என்று குரல் கம்மி வெளியே வர அங்கே மித்ரனை கண்டு அவனை தாக்க ஆரம்பிக்க அவனை காப்பாற்ற போன ரோஜாவையும் அடித்தான் செல்வராஜ்.
நடந்தது நடந்து விட்டது. அன்னைக்கு விரித்த வலையில் தந்தை வந்து அநியாயமாக சிக்கிக் கொண்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தந்தையிடம் உண்மையை சொல்லலாம் என்று நினைக்க அவரோ நெஞ்சை பிடித்துக் கொண்டு விழ தான் செய்த காரியத்தின் பார தூரம் புரிந்து “என்னால் தான் அப்பாவுக்கு இப்டியாச்சு” என்று ரோஜா புலம்ப ஆரம்பித்ததுதான். மித்ரனின் ஆறுதலான வார்த்தைகளுக்கும் அவள் மனம் ஆறாமல் இருக்க என்ன செய்வதென்று மித்ரன் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்தான்.
பொறுமையை இழந்த மித்ரன் ரோஜாவின் கன்னத்தில் அறைய அழுது கொண்டிருந்தவள் திகைத்து விழிக்க “போதும் டி அழுதது அங்க உங்கப்பா உன்னையும், உங்கம்மாவையும் தேடுறாராம். அவர் பக்கத்துல இருக்காம இப்படி அழுது, அழுது  என் உயிர வாங்கிகிட்டு இருக்க” என்று சீற
திக்குத் தெரியாமல் அன்னையை தேடும்  திசை மாறி சென்ற குழந்தை போல் முழித்தவள் அவனை புரியாது பார்க்க “போ போய் முதல்ல குளிச்சிட்டு வா, நானும் ரெண்டு நாளா சாப்பிடல” என்று சொல்ல அது கொஞ்சம் வேலை செய்ய குளித்து விட்டு வந்தவள் அவன் ஊட்ட சாப்பிடலானாள்.
சாப்பிடும் போது ரோஜா கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காத மித்ரன் “முதல்ல சாப்பிடு அப்பொறம் சொல்லுறேன்” என்ற வண்ணமிருக்க கேள்வி கேற்பதை நிறுத்தினாள் ரோஜா.
அதன் பின் சத்யதேவின் வீட்டில் அவளை விட்டவன் எதுவும் பேசாமல் விடை பெற்றான்.
*******************************************************************
வள்ளியை பதினைந்த்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்க அங்கே ஹாஸ்பிடலில் படுத்துக்க கொண்டு செல்வராஜ் வள்ளி எங்க? ரோஜா எங்கன்னு? சத்யாவை இம்சை படுத்தி கொண்டிருந்தான்.
“மாப்புள ரோஜா எங்கடா? எந்த தப்பும் பண்ணலைனா எதுக்கு என்ன வந்து பாக்காம இருக்கா?”
“உங்களுக்கு இப்படி ஆனதுக்கு நான் தான் காரணம்னு கில்டில உக்காந்து புலம்பி கிட்டு இருக்கா ரெண்டு நாள்ல வந்துடுவா,
“உங்கக்கா என்ன பண்ணுறா? அவ என்ன வந்து பாக்காம இருக்க மாட்டாளே! அவ கூட பேசினியா?” செல்வராஜ் நிலைமை தெரியாமல் கேள்விகளை அடுக்க சத்யா முகம் மாறாமல் காக்க பெரும் பாடுபட்டான்.
“கேள்வி கேக்குறது ரொம்ப ஈசி” என்று முணுமுணுத்தவன் “உங்கள இப்படி பார்த்ததிலிருந்தே அக்கா மயக்கம் போட்டு விழுறாங்க, அவங்கள ரெஸ்ட் எடுக்கட்டும்னு வீட்டுலயே இருக்க வச்சிருக்கோம்” என்று சொல்ல தன் மனைவியின் காதலில் மனம் நிறைந்தான் செல்வராஜ்.
செல்வராஜின் நிலைமையை அறிந்து ஊரிலிருந்த வந்த செல்வராஜின் அன்னையும், தந்தையும் செல்வராஜை பார்த்துக் கொள்ள பத்து நாட்களில் வீடு திரும்பினான் செல்வராஜ்.
“ஏண்டா மாப்புள டிஸ்டாஜாகி வீட்டுக்கு போற அன்னைக்கும் உங்கக்கா ஏன் டா வரல”
“அவ திருப்பதிக்கு போய் இருக்கா, உனக்கு இப்படியாகிருச்சேன்னு ஏதோ வேண்டுதல நிறைவேற்ற போறான்னு சொன்னா, நானும் தடுக்கல” பதில் குறிஞ்சியிடமிருந்து வரவே அவரை நன்றியோடு பார்த்தான் சத்யதேவ்.
செல்வராஜை தங்களது வீட்டுக்கு அழைத்தும் அவன் மறுத்து விட்டு பெற்றோரோடு அவனது வீட்டுக்கே சென்றான்.
*******************************************************************
சத்யாவின் வீட்டில் ரோஜா புலம்பியவாறே இருக்க செல்வி அவளை சமாதானப் படுத்தலானாள்.
“என்ன மன்னிச்சுடு தமிழு நீ சொன்னதை நான் நம்பாம போய்ட்டேன், அம்மா என்ன பண்ணாலும் கொல பண்ணுற அளவுக்கு போவாங்கனு என்னால நம்ப முடியல, உண்மைய சொல்ல சந்தர்ப்பம் கிடைச்சும் அப்பாக்காக மௌனமா இருந்துட்டேன், அம்மாவ ஏதாவது பண்ணனும் னு போய் அப்பாவ ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டேன். மாமாவ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு என்னெல்லாம் பண்ணிட்டாங்க, என்னால தான் உனக்கு எல்லா கஷ்டமும். நான் அவங்க வயித்துல பொறக்காமலேயே இருந்திருக்கலாம்”
“ஏன் ரோஜா இப்படியெல்லாம் பேசுற, நீ அவங்களுக்கு மட்டுமா பொண்ணு செல்வராஜ் அண்ணனுக்கும் பொண்ணு தானே, உங்கம்மா மத்தவங்களுக்கு எப்படியோ உனக்கும், உன் அப்பாகும் உண்மையாக தானே இருந்திருக்காங்க? அவங்களுக்கு மாமா மேல பாசம் அதிகம் அதான் இப்படியெல்லாம் நடந்து கிட்டாங்க” என்று செல்வி அவளை சமாதானப் படுத்த
“அவங்க பண்ணுறதுக்கெல்லாம் மாமா மேல உள்ள பாசம்னு காரணம் சொன்னோம், ஆனா அவங்க மாமா மேல உண்மையா பாசம் வச்சிருந்தா? உன்ன அவர் கிட்ட இருந்து பிரிக்க நினைச்சி இருக்க மாட்டாங்கல்ல, எல்லாம் பணத்துக்காக தான் தமிழ்.  இன்னைக்கி அம்மா ஜெயில்ல இருக்குறதுக்கு காரணம் ஆசிரம குழந்தைகளின் சாபம் தான். இன்னும் யார் சாபமெல்லாம் சேத்து வச்சிருக்குறாங்களோ?” என்று கண்கள் கலங்க
“இந்த மாமா ரொம்ப பொய் சொல்லுறாரு ரோஜா” தமிழ் திடீரென இவ்வாறு சொன்னதும் குழப்பமாக செல்வியை ஏறிட
“மாமா உன்ன ரொம்ப தைரியமான  பொண்ணு எதுக்கும் கலங்காத பொண்ணுன்னு சொன்னாரு? அதெல்லாம் பொய்யா? எப்ப பாத்தாலும் அழுது கிட்டே இருக்க ரோஜானு பேர வச்சிக்கிட்டு அழுது அழுது செவந்து போய் இருக்க” என்று சொல்ல ரோஜாவின் இதழோரம் புன்னகை எட்டிப் பார்த்தது.
“என்ன யாருமே நம்பள, உங்கம்மா சொல்றத நம்பி மாமா என்ன ஒதுக்கி வச்சிடுவாரு என்று நானாகவே ஒண்ண நினைச்சி மருகி கிட்டு இருந்தேன். ஆனா நம்ம ரெண்டு பெருக்குள்ளேயும் இருக்கிற காதல் நம்மள தூரமாக்கவே இல்ல.
உங்க மாமா பொறுமையா யோசிச்சு ஒவ்வொண்ணையும் பண்ணுறதால தான் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிப்பான்னு உங்கப்பாவே அடிக்கடி சொல்லுறத நான் கேட்டிருக்கிறேன்.
உங்கம்மா பண்ணதுக்கு இன்னைக்கு ஜெயில்ல இருக்காங்க, அதுக்காக யாரு சந்தோசப் படவுமில்லை. நான் பெத்த பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு அத்த அழுறதும், என் முன்னாடி சகஜமா இருக்கிறதா காட்டிக்கிறதும்,
உங்க மாமா என் கிட்ட சிரிச்சு பேசுறாரு அங்கிட்டு போனா முகம் வாடிடும். இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா உங்கம்மாவால கஷ்டப்படுறாங்க, அதற்காக இப்படியே இருந்துட்டு முடியாதே! இந்த நேரத்துல உன் அப்பாவுக்கு நீதான் ஆறுதலாக இருக்கணும்” என்று செல்வி சொல்ல
கண்களை துடைத்துக் கொண்டவள் “ஆமா தமிழ் இது உடைஞ்சி   போய் உக்காந்து இருக்கிற நேரமில்லை, இந்த பிரச்சினையிலிருந்து உடனே வெளியவரனும்” என்று எழுந்து கொள்ள அங்கே சத்யதேவும் வந்து சேர
“குட் இப்போ தான் என் மாமா பொண்ணுன்னு நிரூபிச்சிட்ட” என்று சிரிக்க
“அக்கா பொண்ணு மாமா பொன்னாகிட்டாளா?” என்று ரோஜா புன்னகைத்தவாறே சொல்ல
அவங்க தப்பு பண்ணாலும் அக்கா இல்லனு ஆகிடாதே ரோஜா இப்போ அவங்க நியாபகம் எங்க எல்லாரையும் காயப்படுத்துது”  என்று மனையாளை நோக்க அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட செல்வி கிண்டலாக
“ஆமா ரோஜா உங்கமாமா உங்கம்மாவ ஓவரா நம்பினாரா? இப்போ என்ன நம்புறாரு, யாரையாவது நம்பலானா தூக்கம் வராதாம்” என்று சத்யதேவுக்கு பழிப்பு காட்ட
“மாமா நான் நாளைக்கு வீட்டுக்கு போறேன், அப்பா மித்ரன் பத்தி ஏதாவது கேப்பாரா?” ரோஜா யோசனைக்குள்ளாக
“உன் கிட்ட எதுவும் கேக்க வேணாம்னு சொல்லி இருக்கேன். கேக்க மாட்டாரு. அக்கா மேல அவருக்கு சந்தேகம் வந்திருக்கு அத கேக்க வீட்டுக்கு போனப்போ தான் மித்ரன் கால் பண்ணி பேசி இவரு அங்க வந்து ஹாஸ்பிடல்ல போய் படுத்து கிட்டாரு” சத்யா சொல்லும் அழகில் பெண்கள் இருவருக்கும் புன்னகை வர
“உங்கம்மா வில்லினா? வில்லிக்கே தண்ணி காட்ட இப்படி யொரு பிளான போட்டு இருக்கியே!” செல்வி சிரிக்க
“வள்ளி மக என்றா சும்மாவா?” ரோஜா கண்ணடிக்க
“என்ன பிளான் பண்ணி என்னத்த செய்ய அங்கிட்டு பேசுறது யார்னு கூட தெரியாம பேசி மாமாக்கு நெஞ்சு வலி வர வச்சிட்டீங்க” சத்யாவின் குரலில்  அக்கா மகள் செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கொஞ்சம் வருத்தம் வெளிப்பட
“உங்க கிட்ட சொன்னா வருத்தப் படுவீங்க, அம்மாக்கும் ஒரு பாடம் புகட்டணும்னு”  சத்யா முறைத்த முறைப்பில் அமைதியானாள் ரோஜா
“தப்பான வழில போனா எல்லாம் தப்பா தான் நடக்கும், உங்கம்மாக்கு பாடம் புகட்ட போய் அப்பா இப்போ இருக்குற நிலமய பார்த்தல்ல?’  இனிமேல் எது செஞ்சாலும் என் கிட்ட சொல்லிட்டு செய்” சத்யா கோபமாக பேச
“ஆமா ரோஜா தண்ணி குடிக்கிறாதா இருந்தாலும், சொல்லிடு” செல்வி சிரிக்காமல் சொல்ல
“நான் இங்க சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் கிண்டல் பண்ணுறியா” என்று செல்வியை சத்யா சிரித்தவாறே முறைக்க
அவர்களை பாத்திருந்த ரோஜா “நான் உள்ள போறேன்” என்று சிரித்தவாறே நழுவி விட
“இதோ வந்துட்டேன் அத்த” என்று அவனிடமிருந்து தப்பி செல்வி ஓட முயற்சி செய்ய
“எங்கடி ஓடுற என்று சத்யா செல்வியின் கையை பிடித்து சுற்றி இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்தவான் “நான் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க.  உன்ன என்ன பண்ணலாம்?” என்று பொய்யாக யோசிக்க   
“மாமா விடுங்க, பாப்பாங்க ரெண்டு பேரும் என்ன தேடி அழுவங்க,  நான் போகணும்”
“அத அழும் போது பாத்துக்கலாம்டி” என்றவாறே  அவளின் இடையை இறுக்கி அவள் திமிர திமிர வன்மையாக முத்தமிடலானான்.

Advertisement