Advertisement

                                                     அத்தியாயம் 26
செல்வராஜை அமைதியான வீடே வரவேற்றது. மாற்று சாவியை போட்டு திறந்தவனுக்கு வெளியே வள்ளியின் செருப்பிருக்க அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று தெரிய வள்ளியை தேட குளியலறையில் சத்தம் கேக்கவே வராண்டாவில் உள்ள கதிரையில் அமர்ந்து எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்று சோசிக்கலானான்.
போன் வரவும் பேசியவன் பேட்டரி லோ என்று காட்டவும் போனை சார்ஜில் போட அங்கே வள்ளியின் போனும் இருக்க ரோஜாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. போனை உயிர்ப்பித்து “ஹலோ” சொல்லும் முன்  
“உன் பொண்ணு ஹோட்டல் பேலஸ்சில் ரூம் நம்பர் 842 ல சுயநினைவில்லாம இருக்கா, செம பிகரு, நல்லா கம்பனி கொடுத்தா.. சீக்கிரம் கிளம்பி வா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று போனை அனைத்திருக்க செல்வராஜ் திகைத்து நின்று விட்டான்.
“ரோஜா…ரோஜாக்கு என்ன ஆச்சு? என்று செல்வராஜ் கத்தியது மறுமுனையில் பேசிய மித்ரனுக்கு கேட்கவில்லை என்பதே செல்வராஜ் தற்போது மருத்துவமனையில் இருக்க காரணம்.
“ரோஜா.. ரோஜா.. ஒரு பார்ட்டிக்கு போறதாக தானே சொன்னா? அந்த ஹோட்டல் தான் என்று புலம்பியவன் தன்னுடைய சார்ஜில் போட்ட  போனையும் மறந்து வெளியே ஓடினான்.
சத்யாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்லணும், என்ற எண்ணம் இல்லாமல் அந்த ஆட்டோ ஓட்டுனரை “சீக்கிரம் போ, சீக்கிரம் போ” என்று ஏவியவாறே வந்து சேர்ந்தவன் அறையின் கதவை தட்ட அங்கே ரோஜா கழுத்துவரை மூடியவாறே அழும் கோலம் கண்டு ஒரு தந்தையாய் நடந்ததை ஊகித்தவன் மித்ரனை தாக்க ரோஜா அவனுக்காக பரிந்து வந்து சண்டை போடவும் குழம்பியவன் நெஞ்சு வலியோடு கீழே சாய்ந்தான்.
*******************************************************************
“என்ன மாமா சொல்லுறீங்க, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு” சத்யதேவ்க்கு தலை வலிப்பது போல் இருக்க
“ஆமாம் மாப்புள உங்கக்கா மேல ஏதோ தப்பிருக்கு, இத்தனை வருசமா எங்களையெல்லாம் ஏமாத்திக் கிட்டு இருந்திருக்கா. “என்ன ஏதோனு அடிச்சி புடிச்சி அங்க போய் பாத்தா அந்த அபிநந்தனோட பி.ஏ. அவன் ரோஜாவ ஏதோ பண்ணிட்டானு அவன அடிச்சி தொம்சம் பண்ணா நம்ம ரோஜா அவனுக்கு வக்காலத்து வாங்குறா. ரோஜா… அவ இப்படி பண்ணுவான்னு என்னால நினைக்கவே முடியல” என்று கண்கலங்க
“பொறுமையா இருங்க மாமா ரோஜா நம்ம பொண்ணு கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டா. மித்ரன் எனக்கு நல்லாவே தெரியும் ரொம்ப நல்ல பையன் என்ன ஏதுன்னு நான் விசாரிக்கிறேன்” என்று சொல்ல
“அப்போ எதுக்கு அவன் அப்படி பேசணும்” நெஞ்சை தடவியவாறே செல்வராஜ் கேக்க
“அவங்க  ரெண்டு பேரும் லவ் பண்ணுறது என் கிட்ட ஏற்கனவே சொல்லிட்டாங்க, அப்படியே தப்பு நடந்திருந்தாலும் ரோஜா அழுது கிட்டு இருக்கும் பொண்ணில்லையே! போராடுறவ, அக்காக்கு தானே போன் பண்ணாங்க உங்களுக்கில்லையே! அக்காவ எதுக்கு பயமுறுத்தி ஹோட்டலுக்கு வர சொன்னாங்கனு புரியல, நீங்க டென்ஷனாகாதீங்க முதல்ல உடம்ப தேத்துக்கோங்க, இந்த சின்ன  விசயத்துக்கு போய் நெஞ்ச பிடிச்சிக்கிட்டு ஹாஸ்பிடல்ல வந்து படுத்துகிட்டீங்களே! எங்களுக்கு தொழில்ல வராத பிரச்சினையா? அத இன்னைக்கி வர நாம சமாளிக்கலையா?” கிண்டலடித்தவாறே சத்யா செல்வராஜை சமாதானப்  படுத்த
“இருந்தாலும் மாப்புள தொழில் வேற குடும்பம் வேற”
“ரெண்டுல எதுல பிரச்சினை வந்தாலும் நாம தான் சமாளிக்கணும் மாமா. நீங்க வீனா  யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடுங்க, ரோஜா பிரச்சினைல எந்த பிரச்சினையும் இருக்காது. அக்கா கிட்ட நான் பேசுறேன்” என்று சொன்னவன் செல்வராஜின் கன்னத்தில் முத்தம் வைக்க
“ஏண்டா மாப்புள ரொம்ப காஞ்சி கிடக்குற மாதிரி  இருக்கே! என் கன்னத்த எச்சி படுத்துற” கவலையை  மறந்து செல்வராஜின்  குறும்பு தலை தூக்க
சத்யா புன்னகைத்தவாறே “அந்த கொடுக்கல் வங்களெல்லாம் குறை  இல்லாம நடந்து கிட்டு தான் இருக்கு” என்று கண்ணடிக்க
“உன் கிட்ட பேசின பிறகுதான் நிம்மதியாக இருக்கு மாப்புள” என்று செல்வராஜ் நிம்மதியாக புன்னகைக்க
“மத்தவங்களுக்கு உங்கள பாக்கணும்னு வைட் பண்ணி கிட்டு  இருக்காங்க. டென்ஷனாகாம இருங்க, ரொம்ப பேசிட்டீங்க” என்று சத்யா சொல்ல
‘பேசினதால தான் மனசு லேசாச்சு. நீ போ மத்தவங்க வந்து கொஞ்சம் அழட்டும்” என்று `உதடு விரிக்க
“மாமா ஓவரா பண்ணுறீங்க” என்றவாறே சத்யதேவ் வெளியேற. கனகாம்பாளும், வள்ளியும் அழுது தீர்க்க மரகதம் கண்கலங்க முருகவேல் கிண்டலடித்து சிரிக்க செல்வராஜும் மனம் லேசான மாதிரி உணர்ந்தான்.
வெளியே வந்த சத்யதேவ் ரோஜாவை தேட அவளோ அந்த வரான்டாவின் முடிவில் உள்ள பெஞ்சில் அமர்ந்தவாறே புலம்பிக் கொண்டிருக்க மித்ரன் ஒரு அறையின் முன்  உள்ள கதிரையில் அமர்ந்தவாறு ரோஜாவை பாத்திருந்தான்.
மித்ரனை கடந்து ரோஜாவிடம் சென்றவன் அவள் அருகில் அமர ரோஜா புலம்பலை நிறுத்தவில்லை.
“என்னாச்சு ரோஜா, நீ என்ன பண்ண இப்படி புலம்பிக் கிட்டு இருக்க?” என்று சத்யா அவளின் தலையை கோதியவாறே கேக்க
சத்யாவிடம் எப்படி சொல்வது என்று முழித்தவள் மித்ரனை தேட அவளருகில் மித்ரன் ஓடி வந்து
“சார் உங்க  கிட்ட சொல்லலாம்னு தான் நான் சொன்னேன். ரோஜா தான் இந்த பிளான போட்டா” என்று மித்ரன் தடுமாற
“என்ன சொல்லுறீங்க ஒன்னும் புரியல, உங்க ரெண்டு பேராலையும் மாமா இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கிறார். எது பண்ணாலும் என் கிட்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கணும்” என்று சத்யா கடிய
அதை யார் அறியக் கூடாதுன்னு நினைச்சோமோ அவனுக்கே  சொல்லும் படியான தங்களது நிலைமையை நொந்து கொண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க மித்ரன் தொண்டையை செறுமியவாறே சொல்ல ஆரம்பிக்க
“இங்க செல்வராஜ்னு ஒருத்தர் அட்மிட் பண்ணி இருக்காங்களா?”  மித்ரனின் பேச்சு தடை பட்டது. அவன் சொல்ல வந்ததை சொல்லி இருக்கணுமோ? சொல்லும் போது காலம் கடந்து விடுமோ?
“என் மாமா தான் என்று சத்யதேவ் எழுந்துக்க கொள்ள அங்கே வந்த போலீசை கண்டு ரோஜாவும், மித்ரனும் யோசனையாக பார்க்க
“அவங்க வைப் வள்ளி என்கிற கோமளவள்ளி இங்க தான் இருக்காங்களா?”
“இருக்காங்க சார். எதுக்கு தேடுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” சத்யதேவ் கேக்க
அவனை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவர் “அத அவங்க கிட்ட சொல்லுறேன்” என்று விட்டு செல்வராஜ் இருக்கும் அறையின் பக்கம் நடக்க வழியை மறைத்தான் மித்ரன்.
“மிஸ்டர் எங்க கடமையை செய்ய தடுத்ததுக்காக உங்கள கைது பண்ண வேண்டி இருக்கும்” என்று கர்ஜிக்க
“கடமையை செய்ங்க. யார் வேணான்னு சொன்னது? மாமா ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் பண்ணி இருக்கிறாரு. இப்போ உங்கள கண்டா அவர் உடல் நிலை பாதிக்கும். அக்காவ நான் கூட்டிட்டு வரேன்” என்று சத்யதேவ் சொல்ல சரி என்று அவர்கள் வள்ளியை அழைத்து வருமாறு உத்தரவிட்டனர்.  
சத்யதேவ் யோசனையாகவே செல்வராஜின் அறையை நெருங்க முருகவேலும், மரகதமும், கூடவே கனகாம்பாளும் வெளியே வர போலீசை கண்டு முருகவேல் என்னவென்று சத்யாவிடம் விசாரித்து அவர்கள் இருக்கும் பக்கம் நகர,
“மாமா இருக்கிற கண்டிஷன்ல போலீசை பற்றி கூறாமல் தான் அழைக்க வேண்டு.  தான் சென்று அழைத்தால் அக்கா வரவும் மாட்ட” என்ற சிந்தனையில் உழன்றவன்  அப்பக்கமாக வந்த நர்ஸை அழைத்து செல்வராஜின் அறையிலுள்ள வள்ளியை அழைத்து வரும் படி சொல்ல அதன் படியே வள்ளியும் வெளியே வந்தாள்.
போலீசை கண்டு புருவன் சுளித்தவள் சத்யாவிடம் கேக்க “தெரியல” என்று தலையசைத்தவன் வள்ளியை அழைத்துக் கொண்டு செல்ல
முருகவேலை அடையாளம் கண்டு கொண்ட அந்த சப்பின்ஸ்பெக்டர் “நீங்க மிஸ்டர் செல்வமாணிக்கத்துடன் வந்து தந்த கம்பலைட்டோட அக்கியூஷ்ட்ட பிடிக்கத்தான் வந்தோம்” என்று சொல்ல
“அட என் மாப்புள தான் அந்த ஐடியாவையே கொடுத்தது” என்று பெருமை பட
“யாரு இங்க இருந்து போனாரே அவரா?” என்று அந்த சப்பின்ஸ்பெக்டர் புருவம் உயர்த்தினார்.
வள்ளி, சத்யதேவ் அருகில் வந்ததும் ” ரொம்ப நன்றி சார். எங்களுக்கு இருக்குற ஆயிரம் கேஸ்ல இதுவும் ஒண்ணுனு கண்டு பிடிக்க எத்துண வருஷம் எடுக்குமோ! நீங்க போட்ட பிளானில் தான் இந்த கேஸோட அக்கியூஸ்டே பிடிக்க முடிஞ்சது. விதியை பாத்தீங்களா? சொந்த அக்காவ பிடிக்க தம்பி போலீசுக்கு உதவி பண்ண வச்சிட்டான் அந்த கடவுள்” சப்பின்ஸ்பெக்டர் சொல்ல
சத்யா, வள்ளி இருவரும் புரியாது முழிக்க
“என்னம்மா பாக்குற? மிஸ்டர் செல்வமாணிக்கம் நடாத்தும் ஆசிரமத்து பணத்தை கையாடல் பண்ண குற்றத்துக்காக மெயின் அக்கியூஸ்ட்டா உங்கள கைது பண்ணுறோம்” என்று சொல்ல
“என்ன உளறல்” என்று வள்ளி கத்த
“பக்கா எவிடன்ஸோட வந்திருக்கேன். சாரோட அக்கானு பாக்குறேன். இல்ல எப்படி மரியாத தந்து ஜீப்ல ஏத்தணும்னு எனக்கு நல்லாவே தெரியும். பி சி கமலா இவங்கள ஜீப்ல ஏத்துங்க” என்று சொல்ல, என்னடா இது ஒன்றன் பின் ஒன்றாக வரும் சோதனை என்று அனைவரும் கலங்க
“டேய் சத்யா போலீஸ் எதுக்கு வந்திருக்காங்க னு கேட்டப்போ  தெரியாதுன்னு சொல்லிட்டு  அக்கானு பாக்காம போலிஸ்லயா மாட்டி விடுற? உன் பொண்டாட்டிய தள்ளி விட்டதுக்கு பலி வாங்குறியா?” என்று ஆவேசமாக கத்த கனகாம்பாள் வள்ளியை அறைந்தார்.
“அடிப் பாவி என் வயித்துல வந்து பொறந்திருக்கிறியே என் குடும்பத்த அழிக்கணும்னு கங்கணம் கட்டி அழையிரியா? மரகதம் பக்கம் திரும்பியவர்  நீ சொன்னப்ப கூட நான் என் பொண்ணு அப்படி பண்ணியிருக்க மாட்டான்னு நெனச்சேனே” என்று தலையில் அடித்த வாறே அழ சத்யதேவ் கால்கள் தள்ளாட அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
கனகாப்பாள் அடித்ததில், வள்ளி ஆவேசப்  பட்டு தான் உண்மையை உளறி விட்டதாக புரிய அடுத்து என்ன செய்வதென்று குறுக்குப் புத்தியை கசக்க பி. சி கமலா லத்தியால் “நகரு” என்று தள்ள அவரை முறைத்தவாறே நடக்கலானாள்.  
“அக்கா இப்படி செய்வான்னு நான் நம்பவே இல்ல மரகதம் சொல்ல”
“உன்ன அவ கொடும படுத்தினப்பவே உண்மைய சொல்லி இருந்தா இன்னக்கி சத்யா வாழ்க்க நல்லா இருந்திருக்கும். அவளால தமிழ் சாவின் விளிம்புக்கே போய்ட்டா, குழந்தைகள் வேற குறையோடு பிறக்க வாய்ப்பிருக்குனு டாக்டர் சொன்னதால் எவ்வளவு பயந்தோம், எவ்வளவு பிரத்தினைகள்” என்று முருகவேல் சொல்ல
“அப்படினா அக்காவ பத்தி ஏற்கனவே உங்க எல்லாருக்கும் தெரியுமா? ஏன் என் கிட்ட சொல்லல?   சொல்லி இருந்தா என் செல்வி கஷ்டப்பட்டு இருந்திருக்க மாட்டாளே!” கவலை நிறைந்த குரலில் சத்யா சொல்ல
மரகதத்தை முறைத்த முருகவேல் “இதோ இருக்காளே உங்கக்கா, அவ கிட்ட எவ்வளவோ சொன்னேன். என் கிட்ட மட்டும் தான் இப்படி நடந்துகிறா,  சத்யா கிட்ட அன்பா தான் இருக்கா னு, என் வாய அடைச்சிட்டா டா மாப்புள. போதாததுக்கு இத பத்தி யார் கிட்டயும் பேச கூடாதுனு  சத்தியம் வேற வாங்கிட்டா டா. அட்லீஸ்ட் தமிழுக்கு கருத்தடை மாத்திரையை கொடுத்தப்போவாச்சும் சொல்லி இருக்கணும்” ஆதங்கமாகவே ஒலித்தது முருகவேலின் குரல்.
இது என்ன புதுக் கத என்று மரகதத்தை பார்த்தவன் “மாமா என்னக்கா சொல்லுறாரு? உண்மையிலேயே நீ தவறுதலா கொடுக்கலயா? இப்படி அக்கா தவரையெல்லாம் மறச்சி மறச்சே அவங்க ஜெயிலுக்கு போற நிலைமைக்கு வந்துருச்சு” என்று கண்கலங்க
“அன்னைக்கி நான் கருத்தடை மாத்திரைகளை கொடுக்கலைனு சொல்லலைனா? தமிழ் உண்மைய சொல்லி இருப்பா, சொன்னா நீ நம்பி இருப்பியா? தமிழ தள்ளி வச்சியிருக்க மாட்ட? அத சாக்கா வச்சி ரோஜாவ உனக்கு கல்யாணம் பண்ணனும். அதைத்தான் அக்கா எதிர்பார்த்தா”
மரகதத்தின் வார்த்தைகள் சத்யாவின் மனதை ஊசியாக குத்த, கண்டிப்பா சின்ன வயசுல இருந்து பாசத்தை மட்டும் காட்டும் அக்காவைத்தான் மனம் நம்பி இருக்கும் என்று நினைத்தவனின் மனசாட்ச்சியோ
“அப்போ உன்ன நம்பி வந்தவ? அவ காதல்? உன் மேல அவ காட்டும் அக்கறை? கொஞ்சமாச்சும் கட்டினவள நம்புடா” என்று சொல்ல
“அவள நம்பாம இல்ல, யார் பொய் சொல்லுறாங்கனு கண்டு பிடிச்சி இருப்பேன்” என்று மனசாட்ச்சியை தட்ட
“கிழிச்ச. உங்கக்கா பாசம்னு வேஷத்தை  காட்டி இத்துணை வருசமா உன்ன ஏமாத்தியிருக்கா” என்று சொல்ல ஒரு பெரு மூச்சு விட்டவன் தலையை திருப்ப அங்கே
ரோஜா அதிர்ச்சியில் திகைத்து நிற்பதையும் மித்ரன் அவளிடம் பேச முயற்சி செய்வதையும் கண்ட முருகவேல் மித்ரனை அடையாளம் கண்டு பேச முன் ரோஜா அவனை அணைத்த வாறே கதறி அழ மரகதமும், முருகவேலும் புருவம் சுருக்கினர்.
“அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க, மித்ரன எனக்கு ஏற்கனவே தெரியும்” என்று சொன்ன சத்யதேவ்  மித்ரனை அழைத்து ரோஜாவை இங்கிருந்து அழைத்து செல்லுமாறும் பார்த்துக் கொள்ளுமாறும் கூறலானான்.
தந்தை தன்னால் தான் படுக்கையில் விழுந்தான். என்று மனம் உடைந்திருந்தவள்,  அன்னையின் கோரா முகம் கண்டு திகைத்து ஆதரவற்ற குழந்தை போல் இருப்பவளை சமாளிக்க அவளின் காதலனே சரி என்று அனைவருக்கும் தோன்ற அமைதியானார்கள்.
“எப்படி மா அக்காவல இப்படியெல்லாம் பண்ண முடிஞ்சது? நாம என்ன பாவம் பண்ணோம்னு தெரியலையே! செல்வி சொன்னாலே கொல்ல பாத்தாங்கனு சொன்னாலே! நான் தான் அக்கா மேல உள்ள கண்மூடித்தனமான பாசத்தால, செல்விக்கு சின்ன வயசு  அவ ஏதோ கற்பனை பண்ணுறான்னு நெனச்சிட்டேனே! அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா? அவ இல்லாம நா எப்படி…” என்று கதற
“தமிழு பாசம் காட்டுவா வேஷம் போட அவளுக்கு தெரியாது. உங்கக்கா வீட்டுக்கு வந்தா அவள ஏதாவது சொல்லுவா. நானும் முதல்ல அத கண்டுக்கல, பார்வதி அத்த புலம்பும் போது மனது தவிக்கும். யார் பக்கம் பேசுவேன். வள்ளி என் பொண்ணுனா? தமிழும் எனக்கு பொண்ணுதான், அன்னைக்கி ஆசுபத்திரில தமிழ் வள்ளி தள்ளி விட்டு கொல்ல பாத்தானு சொன்னதுல இருந்தே மனசு சரியில்ல அத மரகதம் கிட்ட சொன்னப்போ…..
செல்வி மருத்துவமனையில் இருந்த வாரத்தில் ஒரு நாள்
“என்னம்மா? இங்க வந்து அழுது கிட்டு இருக்க”
அவளை அனைத்து கொண்டு அழுதவர் செல்வி சொன்னதை சொல்லி விட்டு “மரகதம், எனக்கு மனசே சரியில்லடி, உங்கப்பா வேற கனவுல வந்து ஏதேதோ சொல்லுறாரு. வள்ளி தமிழ ஏதாச்சும் பண்ணி இருப்பாளா?” என்று கலங்கியவாறே கேக்க  
யோசனையாக அவரை பார்த்தவள் “அம்மா உண்மைய என்னைக்கும் மறைக்க முடியாது. ஒருநாள் இல்ல ஒருநாள் உண்மை தெரியவரும் போது அதற்கு நாம முகம் கொடுத்தே ஆகனும்” என்று சொல்ல
“எதுவானாலும் சொல்லுடி”
“மனச திடப் படுத்திக்க” என்றவள் “அக்கா சின்ன வயசுல என் கிட்ட எப்படி நடந்துக்கிரானு உனக்கு நல்லா தெரியுமே!” என்று ஆரம்பித்தவள் செல்விக்கு கருத்தடை மாத்திரைகளை கொடுத்தது வரை சொல்லி விட்டு “கொல்லுற அளவுக்கு போவாளான்னு தெரியல ஆனா செல்வி பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை” என்று சொல்ல  கனகாம்பாள் தலையில் அடித்தவாறே
” உங்க எல்லாரையும் என் வயித்துல தானே சுமந்து பெத்தேன். அவள் மட்டும் ஏன் டி இப்படி ஆகிட்டா? உங்க அப்பாவும் மூத்த பொண்ணுன்னு அவளுக்கு தானே செல்லம் கொடுப்பாரு, என் வளர்ப்புல எங்க தப்பு பண்ணினேன்னு தெரியலையே!  தம்பி, தம்பின்னு உசுரா இருக்குற செய்ற வேலையா இது? அவன் வம்சத்த இல்லாம பண்ணி ரோஜாவை கட்டி வச்சா அவன் சந்தோசமா வாழ்வானா? இப்படி நடிக்க எங்க அவ காத்து கிட்டா” என்று அழ அவரை ஒருவாறு சமாதானப் படுத்தினாள் மரகதம்.
ஒருவாறு கனகாம்பாள் நடந்ததை சொல்லி முடித்து. “தமிழ் ஒருதடவை இத பத்தி என் கிட்ட பேச முயற்சி பண்ணா அவ சொல்லுற உண்மைய கேக்க எனக்கு மனசுல தெம்பில்ல அதனாலயே பிறகு பேசலாம்னு சொல்லிட்டேன். அன்னைலிருந்து என் கிட்டயும் ஒதுக்கம் காட்டுறா” என்று மூக்கை சிந்தியவர் ஏதோ நியால்பகம் வந்தவராக “அன்னைக்கி ரோஜாவும் இருந்தாலே! அவ எதுக்கு மௌனமா இருந்தா” என்று கேக்க
“பிஸ்னஸ்ல கொஞ்சம் பிரச்சினை வந்தப்போ மாமாக்கு ஒரு தடவ மைல்ட் அட்டாக் வந்துருச்சு, மித்ரன் ரோஜாவ கல்யாணம் பண்ணி தர சொல்லி வந்து கேட்டப்போ இத பத்தி சொன்னேன். அதனால தான் ரோஜா அமைதியா  இருந்திருப்பா” என்று சத்யா சொல்ல
“எங்க கிட்ட கூட சொல்லலையே! என்ன மாப்புள அட்டாக் வருமளவுக்கு என்ன பிரச்சினை?” என்று முருகவேல் கேக்க
“அத பத்தி பிறகு பேசலாம் மாமா. என்னால முடியல” என்று கண்ணை மூடிக்கொண்டான்.  

Advertisement