Advertisement

                                             அத்தியாயம் 19

நல்லவேளை அம்மா வரவில்லை என்ற நிம்மதியோடு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் ரோஜா. அவளிடம் ஓடி வந்த செல்வராஜ் “சத்யா பத்திரத்த படிச்சான்னா என்ன பிரச்சினை வருமோனு எனக்கு உள்ளுக்குள்ள குளிர் எடுக்குது”

அவனின் கையை ஆறுதலாக பற்றி “கவலைப்படாதீங்கப்பா நான் பாத்துக்கிறேன்” என்றவள் மரகதவள்ளியின் அருகில் சென்றாள்.  

“சத்யா, செல்வி வாங்க” என்று இவர்களை உள்ளே அழைக்கவும் உள்ளே சென்ற போது ஆவணங்களை சத்யதேவின் கையில் கொடுத்து எல்லாம் சரியாக இருக்கா என்று பாக்குமாறு சொல்ல அதை சத்யதேவ் கையில் வாங்கும் முன் மரகதவள்ளி வாங்கி இருந்தாள்.

செல்வராஜ் பதட்டத்தை உச்சியில் இருக்க “என்ன சகல இப்படி வேற்குது, உடம்புக்கு ஏதாச்சும்” என்று முருகவேல் கேட்டதில் கவனம் அவன் பக்கம் திரும்ப மரகதவள்ளி ஆவணங்களை வாங்கவும் உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம் இருப்பதை நன்றாகவே உணர்ந்தான் செல்வராஜ்.

“எல்லாம் சரியாகத்தான் இருக்கு. இங்க சைன் பண்ணு” என்று சத்யதேவிடம் சொல்லியவள் ஆவணத்தின் மேல் கையை வைத்து ஒரு பகுதியை மறைத்தவாறே  இருந்தாள்.

சத்யதேவ் கையொப்பம் இட்ட உடனேயே ரோஜா அவனை தன் பக்கம் திருப்பி ஏதோ கேக்க மரகதவள்ளி செல்வியிடம் கையொப்பம் இடுமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ரெஜிஸ்டர் நான் இருக்க இந்தம்மா என் வேலைய பாக்குது” என்று மரகதவள்ளியை ரெஜிஸ்டர் முறைத்தாலும் அவரை கண்டுக்காது செல்வியிடம் ஆவணங்களை வாங்கி அவரிடம் கொடுக்க

“ஓகே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்ல நிம்மதி பெரு மூச்சு விட்டான் செல்வராஜ்.

“அத்தான்  நீங்க இருந்து பேபர்ச கலெக்ட் பண்ணுங்க நாங்க வெளிய இருக்கோம்” என்று மரகதவள்ளி அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல ரோஜா செல்வராஜை பார்த்து கண்சிமிட்டினாள்.  

ஆம் ரோஜா மரகதவள்ளியிடம் செல்வியின் வயதை பற்றி சொல்ல ” திடீரென நடந்தாலும் நடந்த கல்யாணம் இல்லனு ஆகிடுமா? சத்யா ஒரு யதார்த்தவாதி தமிழ ரொம்ப நேசிக்கிறான். உண்மை தெரிஞ்சா கொஞ்சம் கவல படுவான்,  சத்யா நீ நினைக்கிறமாதி அவன் பொண்டாட்டிய தள்ளி எல்லாம் வைக்க மாட்டான் ரோஜா. வீனா கவலப்பட்டு விசயத்த இன்னும் சிக்கலாக்க வேணாம்”

“நீங்க என்ன சொன்னாலும். மாமா ரொம்ப அப்சர்ட் ஆவாங்க சித்தி. அவங்க லைப் நல்லா இருக்கணும். இதவச்சே எங்கம்மா புது பிரச்சினையை உண்டாக்குவாங்க” ரோஜா பேசிப் பேசியே தனது திட்டத்தில் மரகதவள்ளியை கூட்டு சேர்த்து சத்யாவின் கவனத்தை திசை திருப்பி காரியத்தை சாதித்து விட்டாள்.

செல்வியை சத்யா பகிரங்கமாகவே சைட் அடித்துக் கொண்டிருக்க ஆவணங்களுடன் செல்வராஜ் வெளியே வரவும் அதை வாங்கி சரி பார்த்த மரகதவள்ளி கனகாம்பாளிடம் கொடுத்து விட்டாள்.

“நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்று கனகாம்பாளோடு சத்யமூர்த்தியும், குறிஞ்சியும் செல்ல

“நாங்க எங்கயாச்சும் போறோமா?” என்று செல்வராஜ் புரியாமல் கேக்க

“என்ன சகல நீங்க. மாப்பிளைக்கு ரெண்டு தடவ கல்யாணம் ஆச்சு. பாங்க்சன் வைக்காம எஸ்ஸாக பார்த்தான். நான் தான் ரெஸ்டூரண்டாவது கூட்டிட்டு போய் நல்ல காபி வாங்கித்தானு சொன்னேன்” முருகவேல் சொல்ல

“அக்கா உன் கையாள சாப்புடுற காபி நல்லா இல்லனு மாமா நாசூக்கா சொல்லுறாரு” சத்யதேவ் முருகவேலை வம்பிழுக்க

“அட இதுக்கு இப்படியும் அருத்தம் இருக்கா?” என்று மரகதவள்ளியை பார்த்து முருகவேல் சிரிக்க

“வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு” மரகதமும் பொய்க் கோவம் கொண்டு சொல்ல

“என்ன இருக்குனு சொல்லிட்டு போடி” முருகவேல் மரகதத்தை வம்பிழுக்க

“சபையிலே சொல்ல முடியும்னா எப்பயோ சொல்லி இருப்பா சகல, எதால அடிச்சாலும் அடி கன்போர்ம்னு தெரியுது” செல்வராஜ் சொல்ல

“நான் அடிவாங்குறதுல உனக்கு என்ன அம்புட்டு சந்தோசம்? அங்க அனுபவம் தான் பேசுதோ?”

பேசி சிரித்தவாறே வண்டியில் ஏறியவர்கள் ரெஸ்டூரண்ட்டை அடைந்தனர்.

“தாமரையும், பூவரசும் ஏன் வரல சித்தி  ” ரோஜா கேக்க

“ரெண்டு பேருக்குமே எக்ஸாம் படிப்பு தான் முக்கியம்னு விட்டுட்டு வந்தேன்” என்று சொல்லி விட்டு “தாமரை வந்தா எங்க திட்டத்துல மண்ண அள்ளி போட்டுடுவா” என்று மரகதவள்ளி ரோஜாவின் காதில் சொல்லி சிரிக்க வெகுளியான தாமரை பத்திரத்தை எடுத்து பார்த்து அதிர்ச்சியில் கத்துவது போல் தோன்ற ரோஜாவால் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.

செல்வி உக்கார முடியாமல் தவிப்பதை பார்த்து எழுந்துக்க கொண்ட சத்யதேவ் அவளின் அவஸ்தையை புரிந்து கொண்டவனாக “செல்வி ரெஸ்ட்ரூம் போயிடு வரலாம் வா” வாஷ்ரூமுக்கு செல்வியை அழைத்துக் கொண்டு செல்ல பார்க்க

“மாமா நானும் போகணும் நீங்க இருங்க” என்று  ரோஜா எழுந்துக்க கொள்ள

“நீங்க சாப்பிடும் படியா ஏதாச்சும் ஆர்டர் பண்ணி வைங்க, நாங்க வந்துடுறோம்” என்று மரகதவள்ளியும் கூடவே சென்றாள்.

ரெஸ்ட்ரூமுக்கு வெளியே வந்த செல்வி அங்கே நின்று கொண்டிருந்த மரகதத்தையும், ராஜாவையும் பார்த்து புன்னகைக்க

“எங்க கிட்ட கேக்க நிறைய கேள்வி இருக்குனு உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது. வா அப்படி போய் பேசலாம்” என்று மரகதவள்ளி சொல்ல ஒரு இடத்தில் அமர்ந்தனர் மூவரும்.

செல்வி எதையும் கேக்காது கையை பிசைந்தவாறே இருக்க “என்ன மிஸிஸ் சத்யதேவ், எங்கம்மா, உங்க அண்ணி, ஏன் இப்படினு கேக்க இவ்வளவு நேரமா?” ரோஜா கண்சிமிட்ட

தயக்கத்த உடைத்த செல்வி “அவங்க அப்டித்தான்னு உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியும் என்பது நல்லாவே புரியுது. அன்னைக்கி அவங்கள மாட்டி விடாம எதுக்கு காப்பாத்தினீங்க?” கேட்டவாறே இருவரையும் முறைக்க

“கிராமத்துக்காரின்னு இவ்வளவு அப்பாவியா இருக்கக் கூடாது தமிழ்” என்று ரோஜா செல்வியை நன்றாகவே முறைக்க

“நாங்க எங்க அவளை காப்பாத்தினோம்? உன்ன தான் காப்பாத்தினோம். செல்வி உனக்கு சின்ன வயசு வெகுளியா எல்லாரையும் நம்பிடுற என் அக்காவை பத்தி நானே சொல்லி இருக்கணும். அவ வீட்டுப் பக்கம் வரவே இல்லனு கேள்விப்பட்டு தான் ஒன்னும் பண்ணலன்னு அமைதியா இருந்துட்டேன்.” மரகதம் கவலையாக சொல்ல

“ஆமா அந்த மாத்திரை பாட்டிலை எப்போ கொடுத்தாங்க? ரோஜா யோசனையாக கேக்க

“இங்க வந்த மறுநாளே கொடுத்தாங்க. அப்பொறம் மாசா மாசம் கால் டக்சில எங்கயோ போறதாக போன்ல என்ன வீட்டுக்கு வெளிய வர சொல்லி பாடில தந்துட்டு போவாங்க. எந்தநாளும் மாத்திரை சப்டியான்னு போன்ல விசாரிப்பாங்க”

“பாத்திங்களா சித்தி எப்படி கிரிமினலா வேல பாத்து இருக்காங்கனு. ஏன் சித்தி கால் ரெகோடார் எடுத்து அம்மாவை மாட்டி விட முடியாதா?” ஆதங்கமாகவே வந்தது ரோஜாவின் குரல்

ஒரு வலி நிறைந்த புன்னகையில் அவளை பார்த்த மரகதவள்ளி “என் தம்பி பொண்டாட்டி கிட்ட நான் எந்த நேரமும் பேசுவேன் என்று சிம்பிளாக சொல்லிடுவா” என்று நிறுத்தியவள் அவளை மாட்ட வைக்கணும்னா அத எப்பயோ பண்ணி இருப்பேனே உங்க அப்பா, அம்மா, சத்யா இவங்க மூனு பேருக்காகவும் தான்  பொறுமையா இருக்கிறதே” என்று பெரு மூச்சு விட

{மிலா’s  மைண்ட் வொய்ஸ்:- கோமளவள்ளியின் வயசென்ன? அனுபவமென்ன? இந்த அப்பாவி செல்வி அவ தில்லாலங்கடி வேலைகள் கிட்ட கூட திரும்ப முடியுமா? சின்ன பொண்ண வள்ளிய கும்மங்க் குத்து குத்த சொல்லி கியூட்டிபாய்ஸ் சொல்லுறாங்க? போதாததுக்கு சாருலதாவையும் ஒரு வழி பண்ண சொல்லுறாங்க? செல்வி பாவங்க அந்த புள்ளய போய் லதாவோட கோர்த்து விட சொல்றது ஷரப் கிட்ட மாட்டினா மனீஷ் மாதிரி.  மிலா நீ என்ன சினிமாவா எடுக்குற ஒரே பாட்டுல ஒரு சின்ன பொண்ணு ரெண்டு வில்லிங்கள வெளுத்து வாங்க? செல்வி அவ வழியில வள்ளிய ஏதாச்சும் பண்ணுவா. பொறுமையா இருங்க. லதாவ அனி பத்துப்பா. ஹப்பா மிலா எஸ்கேப்}

“அவங்கள என் வழியில பலி வாங்குறேன்” என்று செல்வி முகத்தில் கோவத்தை கொண்டு வர ரோஜா ஹைபாய் கொடுக்க கையை தூக்க செல்வி அவளை பாத்திருந்தாள். அது என்னனு சொல்லி புரியவைத்து ஹைபாய்யும் கொடுத்துக் கொண்டனர்.

“ஆமா சித்தி நீங்க உண்மையிலேயே எங்க அப்பாவை காதலிச்சிங்களா?” ரோஜா பட்டென்று கேக்க செல்வியிடம் தனது சிறிய வயதில் வள்ளி எவ்வாறெல்லாம் நடந்து கொண்டாள் என்பதை சுருக்கமாச் சொல்லி இருந்த படியால் செல்வி முழிக்காது கதை கேக்க ஆரம்பித்தாள்.  

“காதலிச்சேன் தான். எப்போ அக்கா புருஷன்னு ஆனங்களோ அப்பவே அந்த மரியாதைய கொடுத்து ஒதுங்கிட்டேன்” மரகதம் புன்னகைக்க

“அப்போ முருகவேல் அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியுமா” செல்விதான் கேட்டாள்.

“ஆமா” என்றவள் அன்று முருகவேலின் ஆபீசில் நடந்ததை கூறி “அவர் அத சாதாரண விஷயமா எடுத்து கிட்டார்னு நெனச்சேன் ஆனா என் கிட்ட பேசின கொஞ்சம் நேரத்திலேயே என்ன நல்ல புரிஞ்சிகிட்டு முழு மனசாக தான் என்ன ஏத்துக்க கிட்டாருனு அவர் கூட வாழ்ந்த இத்தன வருஷ  வாழ்க்கையில நல்லாவே புரிஞ்சி கிட்டேன். சந்தோசமாக சொல்ல

தனது அன்னையை நினைத்து ரோஜா கவலை பட

தானும் சத்யாவும் இது போல் வாழவேண்டும் என்ற ஆவல் கொண்டாள் செல்வி.

சிறிது நேர அமைதியின் பின் “ஏன் சித்தி, தமிழ் சாப்பிட்ட மாத்திரையால் ஏதாச்சும் பிரச்சினை வருமா? ரோஜா பயந்தவாறே கேக்க

“அது ரொம்ப வீரியமான மாத்திரை இல்ல. கிட்டத் தட்ட ஒரு மாசமா தான் பாவிச்சு இருக்கா,சைட் எபக்ட் சிலது இருந்திருக்கும். ஒரு மாசமா சாப்பிடல என்பதால  நோர்மல் ஆகி இருப்பா. பயப்பட ஒன்னும் இல்ல. எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போன் மூலம் விசாரிச்சிட்டேன்” என்று சொல்லி விட்டு செல்வியிடம் சில விஷயங்களை கேட்டு டாக்டரை அணுக தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவள்.

“செல்வி உனக்கும் சின்ன வயசு, ஆங்கிலம் தெரியாததால் ஈஸியா அக்கா உன்ன ஏமாத்திட்டா, ஏன் நீ படிக்க கூடாது” மரகதம் கேள்வி எழுப்ப

“நான் அஞ்சாம் வகுப்பு கூட தாண்டல நான் எப்படி?”

“நான் சத்யா கிட்ட பேசுறேன்.” மரகதம் சொல்ல

“உண்மையிலேயே நல்ல யோசனை” என்ற ரோஜா “வாங்க போலாம் எங்களை அங்க தேடிகிட்டு இங்கயே வந்துட போறாங்க” என்றவாறு எழுந்து கொள்ள

“ஆமா காபி வேற ஆறி இருக்கும்” என்றவாறே முன்னாள் நடந்தாள் மரகதவள்ளி.

முருகவேலும் இதையே தான் சத்யதேவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

வீட்டில் நடந்த அமளி துமளியை மரகதம் முருகவேலிடம் பகிர்ந்திருக்க தன் கையை கட்டிப் போட்டிருக்கும் மனைவியின் மேல் கோபம் வந்தது. இருந்தாலும் சத்யா, செல்வியின் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்காமல் சமயோகித்து பேசிய மனைவியின் மேல் பெருமை கொண்டான்.

“ஏன் மாப்புள தமிழுக்கு  என்ன வயசிருக்கும்” முருகவேல் வயசை பற்றி கேட்கவும்

“ஐயோ மரகதம் சகல கிட்ட சொல்லல போல இருக்கே “ஊதி  ஊதி செல்வராஜ் குடித்துக் கொண்டிருந்த காபியை சூடென்றும் பாராது குடித்தது விட்டு அவஸ்தை பட சத்யா பதில் சொல்லாது அவனை கவனிக்கலானான்.

“எனக்கென்னமோ தமிழ ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்ல சேர்த்து விடலாம்னு தோணுது’ முருகவேல் தான் திரும்பவும் பேசினான்.  

“அது மட்டும் போதாது மாமா அவ திறமையை பார்த்து ஏதாச்சும் கோர்ஸ் படிக்க வைக்கணும்” சத்யதேவ் இயல்பாக சொல்ல சந்தோசமாக அவனின் தோளில் தட்டினார்கள் மாமன்கள் இருவரும்.  

“ஆமாம் மாப்புள வீடு பாக்குறது எந்த லெவல்ல இருக்கு” செல்வராஜ் வேண்டுமென்றே முருகவேலின் முன்னால் கேக்க

“என்ன மாமா தெரியாத மாதிரி கேக்குறாரு காசு கைல கிடைச்சா தானே எதுனாலும் பண்ண முடியும். அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே” என்று சத்யதேவ் செல்வராஜை புரியாமல் பார்க்க

என்ன விஷயம் என்று முருகவேல் விசாரிக்க

என்ன எதுன்னு செல்வராஜ் சொன்னவன் செல்வியின் தம்பிகளின் ஸ்கூல்  விஷயத்தையும் சொல்ல

“என்ன மாப்புள நீ. என்ன ஒதுக்கியே வச்சிருக்க? எதுக்கு கூலிக்கு வீடு தேடுற உன் பாக்டரிக்கு அடுத்த தெருவிலதான் எங்க இன்னொரு வீடு இருக்கு. சும்மா பூட்டியே இருக்கு. அங்கேயே தங்கிக்கலாமே. வீடும் பெருசா இருக்கு பின்னாடி தோட்டம், தமிழோட பிராணிகளையும் வளர்க்க  போதுமான இட வசதி இருக்கே”

“அதுக்கில்ல மாமா” சத்யதேவ் மறுத்து பேசும் முன்

“என் கிட்ட உதவீனு நீ எத கேட்டு வந்திருக்க? இப்போ வேணான்னு சொல்ல? உன் பொண்டாட்டியோட தம்பிகளுக்கு நீ செய்யலாம் நான் என் பொண்டாட்டியோட தம்பிக்கு செய்ய கூடாதா? நீ மட்டும் நல்லவன்னு பேர் எடுக்கலாம் நான் எடுக்க கூடாதா? இங்க பாரு நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை ரொம்ப நல்ல நாள் உடனே வந்து பால் காச்சுவியோ? பாயாசத்தை காச்சுவையோ எனக்கு தெரியாது, நீ அங்க வரல உனக்கு மரகதம்னு ஒரு அக்கா இருக்குறத மறந்துடு ஏன் செல்வராஜ் மட்டும் தான் உன் மாமாவா? அவன் கிட்ட மட்டும் எல்லாம் பகிர்ந்துக்கிற? நான் யாரு உனக்கு? சொல்லுடா? ” அன்பை மிரட்டலாக சொல்ல சத்யதேவாலையும் மறுக்க முடியவில்லை.

அத்தோடு செல்வியின் தம்பிகளின் ஸ்கூல் விஷயத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக முருகவேல்  பொறுப்பெடுத்துக் கொள்ள பெரியதொரு பிரச்சினையிலிருந்து மீண்டு விட்டதாகவே தோன்றியது செல்வராஜுக்கு.

உறவுகளுக்குள்  புரிந்துணர்வும், அன்பும், பாசம், நேசம்   எல்லாம் கொட்டிக் கிடந்தால் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக் கொண்டு, உதவியும்  செய்த்து கொண்டு தொழிலையும் பெருக்கலாம். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

“என்னப்பா இவங்கள இன்னமும் காணோம்?” செல்வராஜ் கேக்க

“ஒருவேளை மேக்கப் பண்ணுறாங்களோ?” முருகவேல் சிரிக்க

“இருங்க அக்கா வரட்டும் அவங்க இல்லாத இடத்துல அவங்கள கிண்டல் பண்ணுறது சொல்லுறேன்” சத்யா கண்ணடிக்க

“டேய் என் சாப்பாட்டுல கைய வைச்சிடாதடா” முருகவேலும் கேலிசெய்ய பெண்களும் வந்து சேர்ந்தனர்.

ஒருவாறு கேலி பேசியே பொழுதை கழித்தவர்கள் அவரவர் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாக ரோஜாவின் முகத்தில் வந்து போன வெக்கப் புன்னகையை கண்ட செல்வி அவள் பார்க்கும் திசையை பார்க்க அங்கே மித்திரன் நின்று கொண்டிருந்தான்.

“யார் அது நம்ம ரோஜாவை இந்த பார்வை பாக்குறாரு? ரோஜாவும் வெக்கப் படுத்து” என்ற யோசனையிலேயே செல்வி நடக்க

சத்யதேவின் காலனியில் நடக்கும் பொது தெறித்த சிறு கல்லொன்று வந்து  சிக்கிக் கொள்ள அதை எடுக்க குனிந்தவனின் மீது மோதி நின்றாள் செல்வி.

“என்ன செல்வி நா எப்போ குனிவேன்னு காத்து நின்னியா இப்படி வந்து மோதுற? இன்னும் கொஞ்சம் குனிஞ்சு இருந்தா குப்புற விழுந்து இருப்பேன். இன்னைக்கி தான் கல்யாணம் ஆச்சு மறுபடியும் முதலிரவை முதல்ல இருந்து கொண்டாட வேண்டாமா? நீ என்ன சொல்லுற?” என்று கேள்வியை அவளிடம் திருப்ப வெக்கத்தில் தலை குனிந்தவள் ரோஜாவை மறந்தாள்.  

அடுத்து வந்த நாட்களில் பால்காய்ச்சி முருகவேலின் வீட்டுக்கு குடியேறி இருந்தனர். சத்யதேவ், செல்வி மற்றும் கனகாம்பாள்.

செல்வியின் தம்பிகளை நல்ல ஒரு  பாடசாலையில் முருகவேல் சேர்த்து விட அவர்களும் பார்வதி பாட்டியுடன் வந்து சேர்ந்தனர். முகத்தை தூக்கிக் கொண்டே வந்த பார்வதி பாட்டி வீட்டையும் சூழலையும் பார்த்து மனம் மகிழ்ந்து போனார்.

செல்வியை ஒரு ஆங்கில வகுப்பில் சத்யதேவ் சேர்த்து விட்டிருக்க தம்பிகளின் உதவியோடு திறமையாக கற்றுக் கொண்டிருந்தவள் தம்பிகளின் பாடப் புத்தகங்களையும் வாசிக்கலானாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல சாத்தியதேவின் துணிகளை சுமந்த கப்பல் ஆஸ்திரேலியாவை சென்றடைந்து முழுப்பணத்தையும் பெற்றுக் கொண்டிருந்தான்.

ஐந்து பேரில் இருவருக்கு அசலை மொத்தமாக கொடுத்து. கடன் தொல்லையிலிருந்து கொஞ்சம் விடு பட்டவன் செல்வியோடு ஹனிமூன் கிளம்பிச் சென்றான்.

“அவன் பொருள் கப்பல்ல செல்ல கூடாதுனு, அதை தடுக்க ஏற்பாடு பண்ணி இருந்தேனே அது எப்படி சொதப்பியிருச்சு? கடைசி நேரத்துல அவன் வேறொரு கப்பல்ல எதுக்கு பொருட்களை அனுப்பினான்? அவன ஒழிக்க நா செய்யும் முயற்சியெல்லாம் யாரோ முறியடிக்கிறாங்க. மித்ரா அவனுக்கு மறை முகமா உதவி செய்றது யாரென்னரு தேடு” அபிநந்தன் உத்தரவிட அன்று போல் இன்றும் மித்திரன் அமைதியாகவே தலையசைத்தான்.

Advertisement