Advertisement

                                                      அத்தியாயம் 10

செல்வராஜ் சொன்ன விஷயத்தை கோமளவள்ளியால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுடைய நெடுநாள் திட்டமென்ன? அதை உடைத்தெறிவது போல் சத்யாவின் திருமணம் நடந்ததெப்படி? ஒன்றும் புரியவில்லை.

தன்னிடமும் மரகதவள்ளியிடமும் ஒரே மாதிரி பாசம் காட்டும் சத்யாவை முழுதாக மரகதத்திடமிருந்து பிரிப்பதென்றால் தனது மகள் ரோஜாவுக்கு சத்யாவை திருமணம் முடித்து வைப்பதே ஒரேவழி என்று நினைத்தவள் ரோஜாவின் மனதில் சத்யா தான் உன் புருஷன், அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணனும், இல்லையென்றால் தாமரை பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கே வந்து அதிகாரம் பண்ணுவா இன்னும் என்னெல்லாமோ சொல்லி அவளை தயார் படுத்தியிருக்க அந்த கூறு கெட்டவளுக்கு அவன கைக்குள்ள போட்டுக்க தெரியல, நா என்ன சொன்னாலும் மண்டய மண்டய நல்லா ஆட்ட வேண்டியது, அப்பொறம் அவன கோட்ட விடவேண்டியது.

 

அவனயாச்சும் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்னு பாத்தா அம்மாவை கூட்டிகிட்டு தூரமா போய்ட்டான். மாமா வீட்டுல இருந்தவரைக்கும் மரகதமும் அவ புருஷன் அந்த வளந்து கெட்டவனும் ஏதாவது விஷேசம்னா மட்டும் வந்துடு போனவங்க இப்போ அங்கேயே டேரா போட ஆரம்பிச்சிட்டாங்க.

 

பூஜை, பரிகாரம் ஊருக்கு போகணும் அம்மா வானு கூப்பிட போதே போய் இருக்கணும், அங்க போய் தூசில இருக்கணும்னு மாட்டேன்னு சொன்னா ரோஜா துள்ளிக் கிட்டு கூட போய்ட்டா. போய் என்ன பிரயோஜனம்? எவளுக்கோ கல்யாணத்தப்பண்ணி கூட்டிட்டு வாரங்களே! இதுல ஒரே சந்தோசம் அந்த குண்டு பூசணி தாமரைய சத்யா கல்யாணம் பண்ணாதது தான்.

 

ஏதோ மரகதத்த காதலிச்சதாக நினைச்சி அத்தான கட்டிக்க கிட்டேன். வீட்டுல ராணி மாதிரி ஒரு வேலையும் பாக்காம ஜாலியா லேடீஸ் க்ளப்பு, சோசியல் சேவிஸ்னு ஊற சுத்திக்கு கிட்டு இருக்கேன், அவள இந்த பக்கம் அண்டவிடாம பாத்துக்க கிட்டேன். அதே மாதிரி ரோஜாவ சத்யாகே கல்யாணம் பண்ணி வச்சி அவளுங்கள வரவிடாம பண்ணனும்னு பாத்தா எவளையோ கிராமத்திலிருந்து கூட்டிட்டு வாரங்களா? வரட்டும் வரட்டும் உன்ன ஓட ஓட விரட்டுறேன்.

 

சத்யா தொழில் வேற சுமூகமான போய் கிட்டு இருக்கு எவளோ அத அனுபவிக்க விட்டுடுவேனா?

 

அம்மாடியோவ் அந்த சாருலதா! அவ பையன் மல்லிய லவ் பண்ணுறேன்னு சொன்னதும் அவன் கூட ஓடிப் போகாம கூறுகெட்ட தனமா தாலிய வாங்கி கிட்டது மட்டுமில்லாம முல்லையையும் அவன் தம்பிக்கு கட்டி வச்சு பாதி சொத்த கறந்துட்டா, எவ்வளவு பவுனு நகை சீதனமா கொடுத்தான். சீர், சடங்குனு அள்ளி அள்ளி கொடுத்தானே! இம்புட்டு காசையும் எங்க வச்சிருக்கானோ! ஒரு பெரிய வீடு காட்டுடா நாமெல்லாம் ஒண்ணா இருப்போம்னு சொன்னா சிரிச்சி மழுப்புறான். அந்த எலிக்குகை மாதிரி சின்ன வீட்டுல இருக்கான். ஆடம்பர செலவில்லாம இருக்குறது நல்லதுதான். என் தம்பி கஞ்சன் இல்லையே! பொறந்தநாள் வந்தா நகைகூட வாங்கி தாரான். என்ன சிம்பிளா வாங்கித்தறான். என் தம்பிய விட நல்ல மாப்புள என் பொண்ணுக்கு கிடைக்குமா?

 

விட்டுடுவேனா?

என்ன பண்ணலாம்?

 

செல்வராஜ் சொன்னது இதுதான் “வள்ளி உனக்கு சத்யாமேல எவ்வளவு பாசம்னு எனக்கு நல்லாவே தெரியும். நா சொல்ல போற விசயத்த கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத, நாங்க ஆசப் பட்டா மட்டும் போதுமா? கடவுள் தீர்மானிச்சது தான் நடக்கும்” செல்வராஜ் சுத்தி வளைத்து சொல்ல

 

“என்ன அத்தான் புதிர் போடாமல் சொல்லுங்க” என குழைய அவளின் கையை ஆறுதலாக பிடித்துக் கொண்டவன் ஊரில் நடந்ததை சொல்ல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண தோன்றினாலும் அமைதியாக செல்வராஜ் முன்னால் முகம் மாறாது காத்தவள் கடுப்பானாலும் பல்லைக் கடித்து  சிரித்துவைத்தவள்.

 

“என்ன மாமா சொல்லுறீங்க நேத்து நடந்ததுன்னு சொல்லுறீங்க, அவங்க ஊருல இருந்து புறப்பட்டு வந்து கிட்டு இருக்காங்க, நீங்க வேற ஆற அமர சொல்லி கிட்டு எவ்வளவு நல்ல விஷயம் சத்யாக்கு கல்யாணம் ஆனது. அதைப் போய் சோகமா சொல்லிக் கிட்டு நகருங்க எனக்கு ஆயிரம் வேல இருக்கு, சீக்கிரம்  ரெடியாகுங்க நாம அம்மா வீட்டுக்கு போலாம் வரவங்கள கவனிக்கனுமே” என்று நகர்ந்து வந்தவள் சமயலறையினுள் புகுந்து பொருட்களை உருட்டியவாறே மனதில் தோன்றிய எண்ணங்களுடன் என்ன செய்யலாம்னு யோசிக்கலானாள்.  

 

செல்வராஜுக்கு பலநேரம் கோமளவள்ளியை புரிந்துக் கொள்வது ரொம்ப கஷ்டம் அவள் கத்தி ஆர்ப் பாட்டம் பண்ணுவாள்னு பார்த்தா இப்படி சொல்லிட்டு போறாளே! சின்ன விசயத்துக்கு பிரச்சினை பண்ணுபவள் பெரிய விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டதை யோசித்திருந்திருக்கணுமோ?

 

பர்வத்திப் பாட்டி ஒருவாறு வருவதாய் சமாதானமாகி இருக்க வேந்தனுடனும்,வாணனுடனும் பேசியவன் அவர்கள் புரிந்துக் கொண்டு அக்காவிடம் விடை பெற, தம்பிகள் தன்னுடனே வருவதாக செல்வி நினைத்திருக்க இன்றே வந்தால் அவர்களின் பள்ளி நாட்கள் தடைபட்டும் முதலில் நாம் அங்கே சென்று நல்லதொரு பாடசாலையை தேர்ந்தெடுத்து அதன் பின் அவர்களை வரவழைப்போம்.என்று சத்யதேவ் சொல்லியிருக்க தம்பிகளை கட்டியழுதவள் சத்யாவின் மீது கோவத்திலேயே வண்டியில் ஏறினாள்.

சாத்தியதேவ் காரை ஓட்ட செல்வி அவனுடன் முன் இருக்கையில் அமர தாமரை,ரோஜா, கனகாம்பாள் அம்மா மூவருமே பின்னாடி அமர்ந்து கதை பேசிக் கொண்டு வர செல்வி முகத்தை தூக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். புரிந்துக் கொள்ளாமல் சிறு பிள்ளை போல் நடந்துக்க கொள்பவளின் மேல் கோபப் படாமல் அவளை தொந்தரவும் செய்யாமல் ஆயிரம் சிந்தனைகளுடன் வண்டியை ஓட்டினான் சத்யதேவ்.

 

வீடு வந்து சேர்ந்தவர்களை ஆலம் சுற்றி வரவேற்றனர் அக்காக்கள். மரகதவள்ளிக்கும் தகவல் கனகாம்பாளின் மூலம் சொல்லப் பட கணவனுடன் வந்திருந்தாள். மணமக்களை உள்ளே அழைத்து சென்று இங்கேயும் செல்வியை விளக்கேற்ற சொல்ல கோணல் சிரிப்பை உதிர்த்தாள் கோமளவள்ளி.

 

“போடி போ திரிய நல்லா தண்ணீல ஊரவச்சு வச்சிருக்கேன் நீ எவ்வளவுதான் பத்த வச்சாலும் பத்தாது” என உள்ளுக்குள் சிரிக்க செல்வி சென்று பத்தவைத்ததும் விளக்கு பிரகாசமாக எரிந்தது. இது எப்படி சாத்தியம் என்று கோமளவள்ளி வாயை பிளக்க மரகதம் அக்காவை பார்த்து புன்னகைத்தவாறே “நீ என்னெல்லாம் பண்ணுவேன்னு எனக்கு தெரியும்” என்று அவளின் காதில் முணுமுணுக்க மரகதத்தை முயன்றமட்டும் முறைத்தாள்.

 

“அங்க என்ன அக்காவும் தங்கையும் குசு குசுன்னு பேச்சு” கனகாம்பாள் கேள்வி எழுப்ப கோமளவள்ளி பேச முன் முன்திக் கொண்ட மரகதவள்ளி

“அது வந்துமா நேத்து சடங்கு எதுவும் வைக்கலைனு அக்கா சொல்லிச்சு இன்னைக்கு நாள் நல்லா இருக்கு இன்னைக்கே வச்சிடலாம்னு பேசிகிட்டு இருந்தோம்”

கோமளவள்ளி என்னெல்லாம் செய்வாள் என்று கணித்து மரகதம் முன்திக் கொள்ள நல்லவள் வேஷம் போடும் கோமளவள்ளி “ஆமாம்” என்று தலையாட்டுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

அக்கா இருவரும் எதை பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்துக் கொண்ட சத்யா செல்வியை பார்க்க அவளோ ஏதோ சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தாள்.  

 

“இப்படி ஒரு சம்பவம் நடந்து நா இவ கழுத்துல தாலிய கட்டலைனா இந்த ஜென்மத்துல இவ கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா போலயே! இவளை எப்படி என் வழிக்கு கொண்டு வர்றது” சத்யதேவ் யோசனைக்குள்ளாக அடுத்த வேலைகளை கவனிக்க மற்றவர்கள் செல்ல செல்வராஜும், முகவேலும் அவனருகில் வந்து கேலி செய்ய ஆரம்பித்தனர்.

 

“மாமா என்ன மன்னிச்சிடுங்க” சத்யா முருகவேலிடம் மன்னிப்பு கேக்க

“எதுக்குடா மன்னிப்பு கேக்குற?” புரியாமல் முருகவேல் குழம்ப

“அது வந்து செல்விக்கும் ரெண்டு தம்பீங்க இருக்காங்க, இருந்தும் கல்யாணம் ஆனதும் அவங்கள விட்டுட்டு வரவேண்டியதா போச்சு, நீங்க அக்காவ கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு போனதிலிருந்து உங்க மேல செம காண்டுல இருந்தேன், அவ அழுத அழுகையை பாத்து எனக்கு  கஷ்டமா போச்சு, அக்கா உங்க கூட போகும் போது அழுதாளே அதே மாதிரி” என்று நிறுத்த அன்று மரகதவள்ளி சத்யாவை கட்டிக்க கொண்டு அழுத அழுகை இருவரினதும் கண்களில் வந்து போக

 

“உன் கூட தானே வாரா எதுக்கு இந்த கண்ணீர்னு நீ காண்டா இருப்பியே!” முகவேல் சொல்லிச் சிரிக்க

 

“வை பிளட் சேம் பிளட்” சத்யா சிரித்தான்.

 

ஒரு போன் பேசிட்டு வரேன்னு சென்ற செல்வராஜ் இவர்களின் சுமுகமான நிலையை கண்டு புன்சிரிபீனூடே விசாரிக்க, சத்யா விஷயத்தை சொன்னதும்.

 

“வள்ளி அழுது நா பாத்ததே இல்ல” செல்வராஜ் பெருமையாக சொல்ல

 

“அவ மத்தவங்களதானே அழ வைப்பா” முருகவேலால் மனதில் நினைக்க மாத்திரமே முடிந்தது, மரகதவள்ளிக்கு செய்து கொடுத்த சத்தியம் அப்படி, எந்த சூழ்நிலையிலும் குடும்ப நிம்மதி சீர்குலையும் படி நடந்துக்க வேண்டாம் என்பது மரகதத்தின் வேண்டுகோளாய் இருக்க வழிய போய் சத்தியம் செய்தான் முருகவேல். அதை பிடித்துக் கொண்ட மரகதம் அக்கா செய்வது அவர்களோடு போகட்டும் உங்க வாயால யார் கிட்டயும் எதுவும் சொல்லிடாதீங்க என்று மிரட்டலாகவே சொல்லி இருந்தாள்.  அன்புமனைவியின் மனம் நோக கூடாதென்று பொறுமை காத்தவன், செல்வராஜுக்காகவும் அமைதியானான்.

 

“என்ன மாமா உடனே அக்கா கூட டூயட் பாட போய்ட்டிங்களா?, இருந்தாலும் உங்க அலும்பு தாங்கல மாமா அதென்ன எப்ப வந்தாலும் அக்கா பின்னாடியே சுத்திக்கு கிட்டு என்ன அக்கா கிட்ட நெருங்க விடாம பண்ணிட்டீங்களே!” அன்றைய நினைவில் மனம் வலிக்க நெஞ்சில் உள்ளங்கையை மடித்து அடித்துக் கொள்ள

 

“கோமளவள்ளியிடமிருந்து மரகதத்தை காப்பதாக நினைத்து இவனின் மனம் நோகும் படி நடந்து கொண்டிருக்கிறோம்” என்று புரிந்துக் கொண்ட முருகவேலின் முகம் சுருங்க

 

“இப்போ உனக்கு கல்யாணம் ஆச்சுல்ல உன் பொண்டாட்டி  பின்னாடி நீ சுத்துறத நாங்களும் பாக்கத்தான் போறோம் மாப்புள” செல்வராஜ் சத்யாவின் தோளில் அடித்து சிரிக்க  முகவேலும் புன்னகைத்தான்.

 

“முதலிரவு நடக்க விடாம  பண்ணலாம் என்று பார்த்தா அதுக்கும் வேட்டு வச்சிட்டாலே இப்போ என்ன பண்ண? பேசாம பால்ல தூக்க மாத்திரையை கலந்துட வேண்டியது தான். ஆண்கள் வராந்தாவில் பெண்கள் அன்னையின் அறையிலும் இருப்பதை உறுதி செய்து கொண்ட கோமளவள்ளி சமையல் அறையினுள் புகுந்து பாலில் தூக்க மருந்தை கலந்து விட்டு எதுவும் தெரியாதது போல் அன்னையின் அறையினுள் வர

{டி கோமளவள்ளி உன்ன பெரிய வில்லி ரேஞ்சுக்கு நா பில்ட் அப் பண்ணி வச்சா நீ இந்த மாதிரி சில்லி வேலையெல்லாம் பாக்கிறியே}

“அங்கே பெண்கள் அனைவரும்  கதையடித்துக் கொண்டிருக்க   

“தமிழ்செல்வி தானே உன் பெரு”

“ஆமாங்கண்ணி”

“கொஞ்சம் தூங்கி எந்திரிக்கலாம்ல ரொம்ப தூரம் ட்ராவல்  பண்ணி வந்திருக்க” இரவுக்கான சடங்கை நினைத்து மரகதவள்ளி சொல்ல

“இப்போ தூங்கினா இரவுல  என்னால தூங்க முடியாது அண்ணி” அதான் சும்மா பேசிகிட்டு இருந்தோம்” செல்வி சொல்லி முடிக்க சிரிப்பை அடக்க பேரும் பாடு பட்டனர் தாமரையும், ரோஜாவும்.

 

“அது சரி இப்போ தூங்கினா தூக்க மாத்திரை போட்டது என்னத்துக்கு ஆவது” நினைத்த படி சிரித்த முகமாய் கோமளவள்ளி வர  அவளை கண்டுக்காது

 

“இரவு சாப்பாடெல்லாம் நானே என் கையாள சமைச்சி கொண்டு வந்திருக்கேன், எல்லாருக்கும் போதுமா இருக்கு சாப்டுட்டே போங்க” மரகதவள்ளி கோமளவள்ளி என்ன சொல்வாள் என புரிந்துக் கொண்டு சொல்ல

 

“உன் சாப்பாட்டை நான் சாப்புடுறதா” என நினைத்தவள் செல்வராஜையும், ரோஜாவையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

 

வில்லங்கம் கிளம்பிருச்சு முதலிரவு நடக்குமா?

Advertisement