Advertisement

                                                   அத்தியாயம் 24

செல்வி மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் அப்படியொரு அமைதி நிலவியது சத்யதேவ் மற்றும் செல்வியின் இடையில். செல்வி தூங்கும் போது வந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்பவன். மறந்தும் அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது வர மாட்டான்.

செல்வி எதையோ நினைத்து குழம்பிப் போய் இருக்கிறாள். கொஞ்சம் நல்லாக யோசிக்கட்டும். என்னைக் கண்டால் தான் சொல்லுவது தான் சரி என்று வாதிடுவாள். பிரச்சினையை  சரி செய்ய கொஞ்சம் ஆரப் போடுவதே சரியாகவும் என்று எண்ணி சத்யதேவ் செல்வியின் முன் வராதிருக்க

செல்வி அவன் தன்னை ஒதுக்கியே விட்டதாக நினைக்க யாரிடமும் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. கனகாம்பாளிடம் ஒரு தடவை “அத்த நான் பொய் சொல்லல, உண்மையிலேயே அவங்க..” என்று பேச்சை ஆரம்பிக்கும் போது

“எதுனாலும் அப்பொறம் பேசிக்கலாம் தமிழு. முதல்ல நீ முழுமையா குணமடைஞ்சி வா’ என்று சொல்லி பேச்சை நிறுத்திக் கொள்ள, அதிலிருந்து அவள் அவரிடமும் எதையும் எதிர் பார்க்கவில்லை. பார்வதி பாட்டியையே எதற்கும் அழைக்கலானாள்.

அன்று மரகதம் இருக்காததால் நடந்தது எதுவும் அறியாதவளோ செல்வியிடம் சகஜமாக பேச “இவர்களுக்கும் அவங்க அக்கா தானே! ரோஜா  மாதிரி அவங்க பக்கம் தான் பேசுவாங்க” என்று அவளாகவே முடிவெடுத்தவள் மரகதத்திடமிருந்தும் ஒதுங்க உடல் வலியால் தான் செல்வி தான் பேசும் போது கண்ணை மூடிக்கொள்கிறாள் என்று மரகதம் நினைக்கலானாள்.

செல்வராஜும், ரோஜாவும் ஆடை தொழிற்சாலையை பார்த்துக் கொள்ள அன்று மருத்துவமனைக்கு வந்து விட்டு சென்ற வள்ளி வீட்டிலும் அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி, புலம்பியவாறே இருக்க செல்வராஜ் இல்லாத சமயம் பார்த்து ரோஜா

” நீ தான் கருத்தடை மாத்திரையை கொடுத்ததாக எனக்கு நல்லாவே தெரியும். உண்மையா சொல்லு தமிழ கொல்ல பாத்தியா”  குரல் உயர்த்தி கேக்க   

“என்னடி சொல்லுற அப்போ மரகதம் கொடுக்கலயா?” அதிர்ச்சியடைந்தவள் போல் கேட்ட வள்ளி “அப்போ நான் கொடுத்தேன்னு தமிழ் சொன்னாளா? எதுக்கு அப்படி சொன்னா” என்று யோசிக்க

“நடிக்காத உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்க நீ எந்த எல்லைக்கும் போவ” ரோஜா குரல் கோவமாக மாற

“சத்யா என்றா எனக்கு உசுருடி. எப்படியாச்சும் உன்ன அவனுக்கு கட்டி வைக்கணும்னு நினச்சேன். அது தப்பா? வயசு வித்தியாசத்தை பார்த்து எங்க நீ மறுத்துடுவியோன்னு  பயந்து, பணத்தை வைச்சு ஆச காட்டினேன். அத தவிர வேற என்ன பண்ணேன்? சத்யா கல்யாணம் திடீருன்னு நடந்தது. ஒருநாள் போய் பார்த்துட்டு வந்த பிறகு அந்த பக்கமே நான் போகலேயே! போன்ல அடிக்கடி பேசினேன். எத  பத்தி? என் தம்பிக்கு அத பிடிக்கும், இத பிடிக்கும், சாப்பிட அத செஞ்சுக்குடுனு தானே சொன்னேன். அந்த பாட்டி வந்த பிறகுதான் தமிழ் மாறிட்டா. முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறா. அப்படியே கருத்தடை மாத்திரையை நான் கொடுத்திருந்தாலும், கொல்லுற அளவுக்கு போவேனா? சொல்லு”” என்று கண்ணீர் மல்க பேச முதன் முதலாக ரோஜாவுக்கும் செல்வியின் மேல் சந்தேகம் வந்தது.

தன் அன்னையின் பேச்சில் முற்றாக குழம்பியவள். தத்ரூபமான நடிப்பில் ஏமாந்து போன ரோஜா கண்டிப்பாக அன்னை செல்வியை கொல்ல ஒரு போதும் நினைக்க மாட்டாள். என்ற முடிவுக்கு வந்து யோசனையாக அமர்ந்து விட

“அடியை ரோஜா நான் உனக்கு அம்மாடி. உங்க அப்பா முன்னாடி நீ எதயும் பேச மாட்டேன்னு தெரிஞ்சி தான், அந்த பட்டிக்காட பார்க்க உள்ள போனேன். அவ என்ன கண்டதும் கத்துவானு தெரிஞ்சே தான் சத்யாவை பார்த்த உடனே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணேன். அப்பா…. எவ்வளவு கண்ணீர் ? கண்ணீருக்கு கரையாத மனசு உண்டோ?. இப்போ உன்னையும் குழப்பிட்டேனா? நல்லா குழம்பு உன்ன வச்சி தான் தமிழ விரட்டணும்” என்று மனதுக்குள் பொறுமியவள் கண்ணீரை அழுத்தித் துடைத்தவாறே எழுந்து சென்றாள்.

ஒரு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்த செல்வி.  முகத்தில் இருந்த கூந்தலை ஒதுக்கியவாறே பாத்திருந்தான் சத்யதேவ். அவள் முகத்தில் வலியின் ரேகைகள். தான் தொட்டாலே ஆழ்ந்த தூக்கத்திலும் சிணுங்கும் மனையாள் எந்த உணர்ச்சியுமில்லாது மருந்தின் வீரியத்தால்  தூங்குவதை பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டவன்.

“வீட்டுக்கு வந்து மூனு மாசமாகப் போகுது, மாமாவை பார்க்கணும்னு தோணவே இல்லையா? மாமா புது டீல் கிடைச்சதிலிருந்து பிஸியாகிட்டேண்டி. முன்ன எல்லாம் ரொம்ப லேட் நைட்ல ஆனாலும் வீட்டுக்கு வரேன். இப்போ பாக்டரி அடுத்த தெரு என்பதால அங்கேயே தங்குறேன். குளிக்க, துணி மாத்த மட்டும் தான் வீட்டுக்கு வர்றதே.  வேந்தனும், வாணனும் இருக்குறதால மூணு வேலையும் வீட்டு சாப்பாடு டைம்க்கு வந்துடும். அது உன் வேலைனு தெரியும் டி. அவனுங்கள சாப்பிடவிடாம  அவனுங்க கைல சாப்பாட அனுப்பி, அவனுங்க கூடவே சாப்புட வைக்கிறது. லவ் யு டி பொண்டாட்டி” என்று கன்னத்தில் முத்தம் வைக்க செல்வியிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.

.  

ஆம் செல்வி மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று மாதங்களாக போகுது வரும் போது செல்வியை பார்த்தது தான். தன்னையே கண் கொட்டாமல் பாதித்திருக்கும் மனையாளைக் காண சத்யாவுக்கு சிரிப்பாக இருந்தது. அன்று நடந்தது செல்வியின் சிறு பிள்ளை தனமான செயல் என்று இருந்தவன், அவளிடம் சற்று விளையாடி பார்க்க எண்ணியவனாக அவள் புறம் திரும்பாமல் இருக்க  சத்யா தன்னை பார்க்கப் பிடிக்காமல் முகம் திரும்புகிறான் என்றெண்ணலானாள் செல்வி.

“அவ்வளவு தானா? மாமாக்கு என்ன பிடிக்காம போயிருச்சா? அப்போ திடீரென  நடந்த கல்யாணத்தால தான் என்ன ஏத்துக்க கிட்டாரா?” என்று மனம் நொந்தவள், அவனின் காதலை மறந்து, இத்தனை நாள் வாழ்க்கையை மறந்து அமைதியின் சிகரமே என்றானாள்.  

பார்வதி பாட்டி அவளிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்ய எதையோ தொலைத்தது போல் இருப்பவள் அவர் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டலானாள். கனகாம்பாள் கண்ணீர் வடித்தவாறே  செல்வி, சத்யா வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். அவளது நிலையையும், குழந்தைகளையும் கருத்தில் கொண்டு மருத்துவமனையிலிருந்து வந்தவள் பாட்டியின் அறையிலேயே தங்கி விட சத்யாவை பார்க்கும் சந்தர்ப்பம் அமையவே இல்லை.        

“அக்கா செல்வி சின்ன பொண்ணுக்கா ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிக்கோ கா…” சத்யா சொல்ல

“என்னடா நீ மன்னிப்பெல்லாம் கேக்குற அதான் அவ சின்ன பொண்ணுன்னு நீயே சொல்லிட்டியே! அவள நல்லா பாத்துக்க, நீ சந்தோசமாக இருந்தா அதுவே போதும்”

வள்ளி எந்தநாளும் போன் செய்து சத்யாவிடம் செல்வியின் நிலைமையை பற்றி விசாரிப்பதும், வருந்துவதுமாக காட்டிக் கொள்ள தன மனைவி சொன்ன குற்றச்சாட்டையும் கருத்தில் கொள்ளாது செல்வியின் நலனில் அக்கறை கொள்ளும் அக்காவை நினைத்து பெருமை பட

இதையே தான் செல்வராஜும் சொன்னான் “அது சின்ன பொண்ணுடா ஏதோ தவறா புரிஞ்சிகிட்டா போல, நீ அவள கோபமா பேசிடாத” தனது அக்கா மாமாவின் பெருந்தன்மையான குணத்தை கண்டு சத்யதேவ் அகமகிழ்ந்தான்.

செல்விக்கு பதினெட்டு வயதென்றதும் அவளின் சிறு பிள்ளைத்தனமான செயல்களுக்கு வயதே காரணம். கண்ட கண்ட டிவி சீரியல்களை பார்த்து அதிலுள்ள வில்லிகளை போல் அக்காவை கற்பனை செய்து வைத்திருக்கிறாள், அதனால் அக்கா எதை பேசினாலும் தப்பாகவே எடுத்து கொள்ள்கிறாள் போலும், என்று அவள் வள்ளியை பற்றி சொன்னதை எடுத்துக் கொண்டவன். கொஞ்சமேனும் அதில் உண்மை இருக்கும் என்றெண்ணவில்லை.செல்வியை அக்காவும் மாமாவும் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்று பெருமைப் பட்டுக் கொண்டவன், மனைவியின் மனவேதனையை அறியத்தவறினான்.

இதற்க்கு கிடையில் சாருலதா போன் செய்து தனது மூன்றாவது மகன் தருணுக்கு அவசரமாக அடுத்த வாரமுள்ள முகூர்த்தத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும், குடும்பம் சகிதமாக அனைவரும் வந்து வாழ்த்துமாறும் கேட்டுக் கொள்ள

செல்வியின் நிலையை சொல்லி மரகதம் மற்றும் முருகவேல் வருவார்கள் என்று சத்யா சொல்லி விட மரகதமும், முருகவேலும் மாத்திரம் கோயம்புத்தூருக்கு திருமணத்துக்காக சென்றனர். {அந்த கல்யாணம் தான் நடக்கலயே! ராஜஸ்தான் புழுதிப்புயல் தாக்கிருச்சு ஹி ஹி ஹி}  

“ஏய் கிழவி….. நீ தான்! கொஞ்சம் நில்லு, உன்னத்தான். எப்ப பாத்தாலும் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு. உன் பேத்தியும் அப்படியே உன்ன மாதிரி. என் பொண்டாட்டி உன்னாலதான் இப்படி இருக்கா” சத்யா பார்வதி பாட்டியிடம் வம்பு வளர்க்க

மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து முகத்தை தூக்கிக் கொண்டிருந்தவர், வீட்டுக்கு வர எத்தனை மணியானாலும் செல்வியை பார்த்து விட்டு தான் இருப்பதையும் கண்டுக்காது தூங்கிம் அவளை முத்தமிட்டு பேசி விட்டு செல்பவனை கண்டு மனம் இறங்கினர்.

“இது என்னடா கூத்து? நான் தான் சலங்கை கட்டி விட்டேன் பாரு, இல்லனா அவளுக்கு ஆட தெரியாது பச்சை புள்ள பாவமில்லை” என்று முகவாயை கை வைக்க

“மாமா பாப்பங்களுக்கு என்ன பேர் வைக்கணும்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்” வேந்தனும் வாணனும் அங்கே வர அவர்களின் பேச்சு தடை பட்டது.

“டேய் சின்ன பசங்களா நீங்க பேர் வைக்க போறீங்களா? விளங்கிடும். அரைகுறையா துணிய போட்டுக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு சினிமால ஆடுற எவ பேரையாவது வைக்க போறீங்க. போங்கடா போக்கத்த பசங்களா, என் கொள்ளு பேத்திங்களுக்கு நான் தான் பேர் வைப்பேன்” பார்வதி பாட்டி கொதிக்க

‘கிழவி அடங்கி இரு” என்று வேந்தன்  எகிற

“நம்ம பாப்பங்களுக்கு பேர் செலெக்ட் பண்ணி கொடுத்தது யார் தெரியுமா? நம்ம ரீடர்ஸ் சங்க தலைவி பானுமா” என்று வாணன் சொல்ல

“எடு கட்டைய எவ அவ என் பேத்திகளுக்கு பேர் வைக்க” பார்வதி பாட்டி முந்தியை இடுப்பில் சொருகியவாறே முன்னாடி வர

“அவங்க ராஜ பரம்பரை வாரிசுகளுக்கு மட்டும்  பேர் வைக்கிறவங்க, கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக்கிட்டதால எங்க பாப்பங்களுக்கு பேர் செலெக்ட் பண்ணி கொடுத்தாங்க”

“அப்படி என்ன ஊரில் இல்லாத பேர வச்சி புட்டாக” நொடித்தவாறே பாட்டி கேக்க

“ஆனந்தவர்ஷினி, அமிர்தவர்ஷினி” என்று இருவரும் ஒரேயடியாக சொல்ல

“பேர் நல்லா தான் இருக்கு” என்று பாட்டி முணுமுணுக்க

“என்ன முணுமுணுப்பு? நாங்க பிக்ஸ் ஆகிட்டோம்” என்று இருவரும் பாட்டியின் காதில் கத்தி விட்டு ஓடிவிட்டனர்.

 ஷரப் -ஆன்ஷி,  சத்யா – செல்வி பொண்ணுங்களுக்கு பெயர் செலெக்ட் பண்ணி தந்த நம்ம பானுமாகு ஒரு ஓ….. போடுங்க}  

இவர்களின் விளையாட்டை ரசித்து பார்த்திருந்தவன் “செல்வியும் இதே போல் தான் துரு துறுனு ஓடி கிட்டே இருப்பா, இப்போ அவ சத்தம் கூட காதுல கேக்க மாட்டேங்குது” என்று நினைத்தவன் பார்வதி பாட்டி செல்ல முற்பட வழியை மறித்து

“பேர் வைக்கிறத பத்தி தான் பேச வந்தேன். என் குட்டி மச்சானுங்க என் பாரத்த குறைச்சிட்டாங்க” என்று முறுவலிக்க

“பேரான்டி உன் அக்கா சரி இல்லடா, உன் கிட்ட ஒரு முகம், தமிழு கிட்ட ஒரு முகம்னு இருக்கா, பாத்து சூதானமா இரு” அந்த கிராமத்து மனிசி வெள்ளந்தியாக  சொல்ல

“நீங்க அக்காவ தப்பாவே புரிஞ்சிகிட்டு இருக்கீங்க” என்றவன் அன்று மருத்துவமனையில் வள்ளி அழுதவாறே வந்ததையும், இந்த இரண்டு மாதங்களாக செல்வியின் நலனில் அக்கறை எடுத்து நலன் விசாரிப்பதையும் கூற

“கடவுளே நீ தான் எல்லாத்தையும் பாத்து கிட்டு இருக்கியே!” என்று கையை மேல தூக்கியவாறே புலம்பிய படி செல்ல அங்கே வந்த கனகாம்பாள் இவர்கள் பேசுவதை கேட்டு விட்டு நெஞ்சடைக்க கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட புடவை முந்தியால் துடைத்தவாறே பேச வந்ததையும் மறந்து உள்ளே சென்றார்.

*******************************************************************

“அந்த ஆசிரம அதிபர் செல்வமாணிக்கம் கொடுத்த கம்பளைண்ட்டோட இன்வெஸ்டிகேஷன் எந்த லெவல்ல இருக்கு” இன்ஸ்பெக்டர் கேக்க

“சந்தேகம் படும் படியா இருக்கிறவங்கள பாலோவ் பண்ணி கிட்டு தான் இருக்கோம்” சப்பின்ஸ்பெக்டர் சொல்ல

“அவங்க பேங்க் டீடைல்ஸ், வருமானத்துக்கு அதிகமா செலவு செய்ததற்கான பில்ஸ் எல்லாம் தேடி எடுத்து தரவா செக் பண்ணு”

“கண்டிப்பா மாட்டுவான் சார்”

“சீக்கிரம் பிடிச்சு கேச க்ளோஸ் பண்ணு” இன்ஸ்பெக்டர் தொப்பியை கழட்டியவாறே சொல்ல

“ஓகே சார்” என்று சலியூட் வைக்க  

“சரி, சரி. போய் வேலைய பாரு” கடுப்பாக மொழிந்தவர் அடுத்த பைலை கையில் எடுத்தார்.

போலீஸ் வள்ளிக்கு வலை விரிக்க இதையறியாத வள்ளியோ! “சே கைல சுத்தமா காசில்ல. என் புருஷன் தர்ற சொச்ச காசு கூல் ட்ரின்க்குக்கே சரியாகுது” என்று முணுமுணுத்தவள் வெளியே கிளம்பிச் சென்றாள்.    

*******************************************************************

செல்வியின் உடல் சற்று தேறி இருக்க இடுப்பில் உள்ள வலியின் காரணமாக அதிக நேரம் அமர்ந்திருக்க முடியாமல் திண்டாடினாள். குழந்தைகளுக்கு பால் புகட்டத்தான் அதிகம் சிரமப்பட்டாள். செல்வி இருக்கும் அறையில் நுழைந்த சத்யதேவ் அவளை பார்க்க அவளோ தூங்கி கொண்டிருந்தாள்.

குழந்தைகளை பாட்டியும், கனகாம்பாளும் குளிப்பாட்ட எடுத்து சென்றிருக்க அவளருகில் வந்தவன் அவளின் கையை தன் கைக்குள் அடக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைக்க செல்வியின் உடல் சிலிர்த்தது.

“இப்போ தாண்டி உன்ன பாக்கவே டைம் கிடைச்சது, அதிகாலையிலேயே வந்து உன் முகத்தை பார்த்துட்டு போனா தான் அந்த நாளே நல்ல இருக்கு. தெம்பா வேல பாக்கலாம். உன் லொட லொட பேச்சு கேக்காம வீடே அமைதியா இருக்கு. இப்படியே தூங்கி கிட்டு இருந்து எக்ஸாம்ல கோட்ட விட்டுடாத. பாவம்னு விட்டுட மாட்டேன். திரும்ப முதல்ல இருந்தே கிளாஸ் எல்லாம் எடென்ட் பண்ணனும். இல்ல பாப்பாங்களோட சேர்ந்து நீயும் ஸ்கூல் போக வேண்டி இருக்கும். அப்பொறம் நம்ம பாப்பங்களுக்கு பேர் வைக்கணும், மொட்ட போடணும், காத்து குத்தணும், நீ சீக்கிரம் குணமானா தான் இதெல்லாம் செய்ய முடியும் ” வளமை போல் பேசிக்கொண்டே போக

அதிக நேரம் தூக்கத்தில் இருப்பதால் யார் வந்து என்ன பேசினார்கள் என்று அறியாதவள் தன்னை ஒதுக்கி வைத்து விட்டான் என்று மனமுடைந்து  எந்த எதிர்பார்ப்புமில்லாது வாழலானாள். குழந்தைகளுடன் கூட அதிகம் ஒட்டவில்லை. முகம் பார்த்து சிரிக்கும் போது தான் சற்று செல்வியின் மனம் ஆறுதலடைய உடற்காயமும் விரைவாக குணமாக ஆரம்பித்தது. மருந்தின் வீரியமும் குறைக்கப்பட இன்று காலையிலேயே கண்விழித்தவள் பாட்டி குழந்தைகளை தூக்கிக் கொண்டு போனதும் எழுந்து காலைக் கடனை முடித்தவள் இடுப்பு சற்று வலிப்பது போல் இருக்க காட்டில் சாய்ந்தாள்.

சத்யா உள்ளே வரும் போதே வருவது அவன் தான் என்ற அவனின் சுகந்தம் காட்டிக் கொடுக்க தூங்குவதை போல் கண்ணை மூடிக் கொண்டவள், அவன் கையை பிடிக்கவும் அதிர்ச்சியடைய முத்தமிட்டதில் மேனி சிலிர்த்தவள், அதிலும் எந்தநாளும் வந்து உன்னை பார்த்து பேசி விட்டு செல்கிறேன் என்பதை கேட்டதிலிருந்து சந்தோஷமடைந்தவளின்  கண்களிலிருந்து அவன் பேசப் பேச கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

செல்வியின் கண்களிலிருந்து கண்ணீர் வழியவும் அவளின் கண்களை துடைத்தவன் “ஏய் தூங்குறமாதிரி நடிக்கிறியா? எதுக்கு இப்போ அழுகை” என்று கேக்க அவனின் மடியில் முகம் புதைத்தவள்

“மாமா என்ன மன்னிச்சிடுங்க, என் மேல கோபமிருந்தா ரெண்டு அடி அடிங்க என் கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க” என்று செல்வி சத்யா தன்னை ஒதுக்கியதாக எண்ணி மன்னிப்பு கேக்க

தன் அக்காவை பற்றி குறை கூறியதுக்காக தான் செல்வி மன்னிப்பு கேக்கிறாள் என்று தப்பாக புரிந்த்துக் கொண்டவன்

 

“அத விடு செல்வி, இப்போ எதுக்கு அத பத்தி பேசிக்கிட்டு, நான் எந்தநாளும் உன் கிட்ட பேசிகிட்டு தானே இருக்கேன். முதல்ல தெம்பா எழுந்து நீ வீட்டுல நடமாடனும், நீ பேசுறத, உன் சிரிப்பு சத்தம் என் காதுல கேக்கணும்” என்றவாறே அவளின் தலைக்கு கோத நெடுநாள் கழித்து கணவனின் அருகாமையில் மனம் குளிர்ந்தாள் செல்வி.

பிரச்சினையை பேசி தீர்த்துக்கலாம் என்பதை போலவே தள்ளிப் போடுவதாலும் சில சமயம் பிரச்சினைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது.

செல்வியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளின் விசேஷங்கள் தள்ளிப் போய் கொண்டிருக்க, அவள் பயணம் செய்ய முடியும் “நோ ப்ரோப்லம்” என்று  டாக்டர் சொன்ன உடன் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காத்து குத்தி, பெயர் சூட்டும் விழாவை ஊரில் நடத்தலாம் என  முடிவு செய்திருக்க  அந்த அசம்பாவிதம் நடந்தது.  

Advertisement