Advertisement

                                                    அத்தியாயம் 13

 

ஏதோ சத்யா செல்வியை இஷ்டமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணி இருப்பான் என நம்பி இருந்த கோமளவள்ளிக்கு சத்யா செல்வியின் மேல் வீசும் காதல் பார்வையை கண்டு மனதுக்குள் பொருமினாள்.

கோமளவள்ளி இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தது செல்வியை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து அகற்றி ரோஜாவை சத்யாவுக்கு கட்டிவைப்பது எப்படி என்பதே. கல்யாணம் நடந்ததை அறிந்ததிலிருந்து பதற்றத்தில் இருந்தவள் செல்வியை கண்டதிலிருந்து மனதுக்குள் குதூகலித்தாள்.

இவளெல்லாம் என் கால் தூசிக்கு பெறுமா? இவளையெல்லாம் எனக்கு போட்டியா நினைக்க வச்சிட்டியே கடவுளே? இவ என் தம்பி கூட சேர்ந்து வாழ கூடாது” என்று நினைத்தவள், “செல்வி சத்யாவின் மனைவி கண்டிப்பா அவன் பார்க்கும் பார்வையிலேயே புரியுது இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும் என்று” தம்பியை ஆராச்சியாய் பாத்திருந்தவள் பாலில் தூக்க மாத்திரையை கலந்தாள். ஒரு நாள் கலக்கலாம், எந்தநாளும் கலக்க முடியாது, அப்படியே கலந்தாலும்  சந்தேகம் வந்திடாதா? என்ன பண்ணலாம்? தூங்காமல் யோசித்தவளுக்கு கிடைத்த ஒரே தீர்வு…….

தூக்கத்தை தொலைத்து யோசித்தவளுக்கு இருவரினதும் தாம்பத்திய வாழ்க்கையை தடுக்க முடியாது என்று புரிய, “டி ரோஜா நான் பெத்த மகளே! அழகா பொறந்து என்ன பிரயோஜனம் மாமனை மயக்க தெரியலையே! நீயெல்லாம் வேஸ்ட்டுடி. செல்விய பிரிச்சு உனக்கு என் தம்பிய கட்டி வச்சாலும் அது ரெண்டாம் கல்யாணம் தான், பரவால்ல அவன் செல்விமேல ஆச பட்டுட்டான். ஆச அறுபதுநாள் மோகம் முப்பத்துநாள். நல்ல அனுபவிக்கட்டும் இவ்வளவுநாள் கல்யாணம் பண்ணாம இருந்தானே! பாவம் ரெண்டு பொண்ண தொடுறது ஒன்னும் குத்தமில்ல” என  தன் போக்கில் சிந்தித்தவள். எப்படி செல்வியை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து அகற்றுவது என யோசிக்க

அவ குழந்தை பெத்துக்கலைனா?……..     பெத்துக்கலைனா எப்படியாச்சும் ரோஜாவ சத்யாவுக்கு கட்டிவச்சிட வேண்டியது தான். அம்மாவ எப்படி சமாளிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இருக்குறது ஒரே பையன் அவனுக்கு வாரிசு இல்லாம போகணுமா?” என்று கேட்டு ரெண்டு சொட்டு கண்ணீர அம்மாவ பாக்கும் போது வடிச்சா போதும் அப்படியே மனசு கரைஞ்சிடுவாங்க, அப்பொறம் அந்த பட்டிக்காட்டு பசுமாட வீட்டுல இருந்து அவ ஊருக்கே கிளப்பிட வேண்டியதுதான்.

அவ குழந்தை உண்டாகம இருக்க என்ன பண்ணலாம்? கருத்தடை மாத்திரைய விட்டமின் மாத்துரனு கொடுத்துட வேண்டியது தான். சபாஷ் டி கோமளவள்ளி என்னமா யோசிக்கிற நீ எல்லாம் அரசியல்ல இருக்க வேண்டியவடி” தன்னை தானே புகழ்ந்தவள், கருத்தடை மாத்திரைகளை எவ்வாறு பெறுவதென்று  யோசிக்க தனது ஹை சொசைட்டி நண்பர்களின் மூலம் அறிமுகமான  மகப்பேறு மருத்துவரை சந்தித்து பேசவேண்டிய விதத்தில் பேசி மாத்திரைகளை ஒரு மாதத்துக்கு வாங்கி எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதையும் அறிந்துக் கொண்டவள் செல்வியை காண அன்னையின் வீடு நோக்கி புறப்பட்டாள்.

 

********

சாமி கும்பிட்டியாடா கண்ணு வந்து சாப்பிடு, ரொம்ப நேரமாச்சு” கனகாம்பாள் முகம் கொள்ளா புன்னகையினூடாகவே சமையல் அறைக்குள் வந்த செல்வியை கண்டு சொல்ல

மன்னிச்சிடுங்க அத்த நாளைக்கு இதுபோல நேரங் கடந்து எந்திருக்க மாட்டேன் காலையிலேயே எழுந்து எல்லா வேலையையும் பாக்குறேன்” லேட்டாக ஸ்கூல் வந்த சிறுமி ஆசிரியையிடம் கூறுவதை போல் கூற

முதல்ல வந்து சாப்பிடு நாளைக்குள்ளத நாளைக்கு பாக்கலாம்” என்றவர் அவளின் கையை பிடித்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் அமர்த்தி சாப்பாடும் பரிமாற ஒரு வாய் உண்ட செல்விக்கு தம்பிகளின் நியாபகம் வந்து கண்ணில் நீர் கோர்க்க

ஐயோ என்னம்மா ரொம்ப காரமா இருக்கா” என்றவாறே செல்வியின் கண்களை துடைத்தவருக்கு தெரியாதா செல்வி அழுதது காரத்தால் அல்ல பாசத்தால் என்று.

செல்வி சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவர் “வீட்டுக்கு போன் போட்டு பேசுறியாடா?” என்று கேக்க

 

எங்க வீட்டுல யார் கிட்டயும் போன் இல்ல அத்த, இந்த நேரம் தம்பீங்க ஸ்கூல்ல இருப்பாங்க சாயங்காலம் மணி அண்ணாக்கு போன் போட்டு தம்பீங்க கூட பேசிக்கலாம்”  அவருடைய கரிசனத்தில் மனம் நிறைந்தவள்.

ஹாய் தமிழ் நல்லா சாப்டியா? உனக்கு என்ன விளையாட்டு தெரியும் வா நாம விளையாடலாம்” தாமரை செல்வியை அழைக்க

இல்ல தாமர அத்தைகி ஏதாச்சும் உதவி செஞ்சுட்டு வாறன்”

 

நீ போமா சமையல் எல்லாம் ஆச்சு” என்றவாறே கனகாம்பாள் நகர

 

ஆமா செல்வி நீ டீ ஷார்ட் எல்லாம் போடுவியா? இல்ல கல்யாணம் ஆனதால தம்பீங்கள பிரிஞ்சி இருக்க முடியாதுனு  திருப்பாச்சி விஜய் தங்கச்சி போல தம்பீங்க டீ ஷார்ட்டெல்லாம் சுருட்டீட்டு வந்துட்டியா?   சொல்லியவாறே தாமரை சிரிக்க

சத்யாவின் டீ ஷர்டை அணிந்திருந்ததை பார்த்து தாமரை ஏதாவது கேப்பாளோ என்று பயந்தவளுக்கு அவளே பதில் சொல்லவும் சற்று நிமிர்ந்து அமர்ந்தாள்.

சரி அதென்ன உன் வீட்டு எல்லா பிராணிகளுக்கும் எங்க பேர  வச்சிருக்க ஐ மீன் பூக்களின் பேர வச்சிருக்க ஏதாவது வேண்டுதலா?”

பிராணிகளை நியாபகப் படுத்தியதும் முகம் மலர்ந்தவள் “எனக்கு பூனாலும் பிடிக்கும், பிராணிகளும் பிடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், தனித்துவம் இருக்கு எனக்கு ரொம்ப புடிச்ச பூக்களின் பெயர்கள எனக்கு ரொம்ப புடிச்ச பிராணிகளுக்கு வச்சிட்டேன்”   சிரித்தவாறே சொல்ல

ஆமா செல்வி உனக்கு இங்க பிடிச்சிருக்கா” தாமரை விளையாட்டாக கேக்க செல்வி பதில் சொல்லும் முன் கோமளவள்ளி உள் நுழைவதை கண்ட தாமரை

ஐயோ பெரியம்மா வராங்க” என்ற வாறே சமையல் கட்டுக்குள் புகுந்துக் கொள்ள

வாங்க அண்ணி” செல்வி எழுந்து நின்று மரியாதையாகவே கோமளவள்ளியை வரவேற்றாள்.

சே என் வீட்டுலயே என்ன அந்நியமா பீல் பண்ண வச்சிட்டாளே” மனதில் கனன்றவள் சிரித்தவாறே “என்ன தமிழ் எங்க ஊரு, வீடு எல்லாம் பிடிச்சிருக்கா?” செல்வி தலையை அங்கேயும் இங்கயும் ஆட்டி வைக்க

சரியான செக்கு மாடு கணக்கா இருக்கா?”

அம்மா இல்லையா தமிழ்? வீட்டுல வேற யார் யாரெல்லாம் இருக்காங்க?” தான் வந்த வேலையை சரியாக செய்து முடிக்க தூண்டில் போட்டாள் கோமளவள்ளி.

அத்த சமையல் அறையில் தாமரையும் அத்த கூட….” என்று இழுத்தவாறே நிறுத்தினாள்.   

 தாமரை சமையல் அறையிலிருந்து தான் இல்லை என்று சொல்லும் படி செய்கையாலேயே சொல்ல அதை கண்டு செல்வி இழுத்து நிறுத்த

அதானே பார்த்தேன் பாட்டி மட்டும் தனியா இருக்காங்கனு இங்கயே டேரா போட்டவள காணோமே என்று” கேலி செய்வது போல் மனதினில் உள்ள வெறுப்பை கொட்டினாள் வள்ளி.

 

வா வள்ளி காலையிலேயே வருவான்னு பார்த்தேன். ரோஜா வரலையா?”

இல்லமா அத்தையும் மாமாவும் இன்னைக்கி தான் திருப்பதிலிருந்து வராங்க அதான் அவள வீட்டுலயே இருக்க சொன்னேன்”  என்றவள் தாமரையை ஏறிட்டு “என்ன நீ காலேஜ் போகாம இங்க இருக்க உங்கப்பாக்கு காசு கொட்டிக் கிடக்குதுன்னு படிக்க தேவலனு முடிவு பண்ணிட்டியா?” சாதாரணமாக பார்க்க கேலி செய்வது  போல் செல்விக்கு தோன்றினாலும் இது போல் பேச்சுக்கள் எந்தநேரமும் கேக்கும் தாமரைக்கு தெரியாதா? பெரியம்மாவின் குணம்.

 

செல்வியை தனியாக சந்திக்க எதிர்பாத்துக் கொண்டிருந்த கோமளவள்ளிக்கு சந்தர்ப்பம் அமையவே இல்லை செல்வராஜும் சத்யாவும் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர

 

என்ன வள்ளி இங்க இருக்க?” செல்வராஜ் ஆச்சரியமாக கேக்க

நான் என் அம்மா வீட்டுக்கு வந்தேன்” கோமளவள்ளி நொடித்துக் கொள்ள  

இந்நேரம் உன் பிரண்ட்ஸ் கூட சமூக சேவைன்னு கிளம்பி இருப்பியே! அதான் கேட்டேன்” புன்னகை முகமாகவே செல்வராஜ் சொல்ல

டாக்டரை பாக்க போய் இருந்தேன்”   என்று உளறியவள் நாக்கை கடித்துக் கொள்ள

பதட்டமான செல்வராஜ் கோமளவள்ளியின் அருகில் வந்து “என்னாச்சு, காலையில் நல்லா தானே இருந்த?” என்று நெற்றியை தொட்டுப் பாக்க

 

சத்யா அவர்களின் அந்நியோன்யத்தை கண்டு தானும் செல்வியுடன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க செல்வியை காதலாக பார்த்தான். அவளோ! சத்யாவின் முகம் பார்க்க வெக்கப் பட்டு அவன் தன்னை கண்ணிமைக்காது பார்ப்பதை கண்டு இதயம் தாறுமாறாக துடிக்க, அவன் புறம் திரும்பாமலையே! சாப்பாட்டு மேசையில் உணவுப் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

 

இவர்களின் காதல் நாடகத்தை பாத்திருந்த கோமளவள்ளி வயிறு எரிய “ஐயோ எனக்கு ஒண்ணுமில்ல” என்று  செல்வராஜின் கையை தட்டி விட செல்வராஜின் திகைத்த பார்வையை கண்டு மீண்டும் அவனின் கையை பிடித்துக் கொண்டவள் ” எனக்கு ஒண்ணுமில்லைங்க ஒரு குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணனும், என் பிரெண்டு  தான் போறேன்னு சொன்னா அவளுக்கு ஒரு அர்ஜென்ட் வாக் வந்திருச்சு அதனால நான் போய் டாக்டர  மீட் பண்ணி பணம் எவ்வளவு செலவாகும்? எப்போ பண்ணலாம்னு கேக்க போனேன்” என்று சொல்ல மனைவியின் பிறருக்கு உதவும் குணத்தை கண்டு நெகிழ்ந்து போனான் செல்வராஜ்.

 

கோமளவள்ளி காலேஜில் இருந்தே பிரெண்ட்ஸ்களுடன் சேர்ந்து ஊரு சுற்றுவதும், வெட்டி பந்தாவுக்காக செலவு செய்வதுமாக இருந்தவள். தந்தை காலமானவுடன் நடுத்தர குடும்ப வாழ்க்கைக்கு மாற, அவ்வாழ்க்கையை வெறுத்தவள் “பணத்துக்காக என்ன செய்யலாம்” என்று யோசிக்கும் போது பிறருக்கு உதவும் குணமுள்ள ஒரு நண்பி உதவி தேவைப்படுபவர்களுக்காக தான் ஒரு சங்கத்தில் சேர்ந்திருப்பதாகவும், பண உதவிக்காக செல்வந்தர்களை சந்திக்க வேண்டி உள்ளதை சொல்ல கோமளவள்ளியின் குறுக்குப் புத்தி  கணக்குப் போட்டது.

 

ஒரே  கல்லுல ரெண்டு மங்கா பணத்துக்கு பணமும் கைல குறையாது இருக்கும், ஹை சொசைட்டி மக்களும் கைக்குள்ள” என்று திட்டம் தீட்டியவள் எல்லா நண்பர்களையும் சங்கத்தில் சேர்த்துவிட பண உதவி கேட்டு அந்த சங்க உறுப்பினர்கள் சென்றால் ராஜமரியாதையுடன், பணமும் தாராளமாக கொடுக்க அப்பணத்தில் ஒரு பகுதியை கையாடல் செய்து தனது சொந்த செலவுக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

 

வீட்டையும், செல்வராஜையும் சமாளித்து தனது ஆடம்பர வாழ்க்கையை இத்தனை வருடகாலமாக கண கச்சிதமாக மறைத்து வீட்டாருக்கு ஒரு முகமும், வெளியில் ஒரு முகமுமாக கோமளவள்ளி தனது நடிப்பால் திறமையாக கையாண்டு வருகிறாள்.

துணிகளுடனே காலத்தை ஓட்டும் செல்வராஜுக்கு தெரியாத மனைவி சிம்பல் என்று சொல்லிக் கொண்டு அணியும் சேலைகள் விலை? அதையும் வாங்கி  உடனே அவனிடமே கொண்டு போய் காட்டி

பாருங்களேன் என் பிரென்ட் கலா இல்ல கலா அதான் அமெரிக்கால இருக்கானு சொன்னேனே அவ வரும் போது எனக்குன்னு வாங்கி வந்து இருக்கா. நா வேணான்னு எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், “இதைவிட காஸ்ட்லீயா வாங்கி இருப்பேன். நீ தான் சிம்பலா அணிவியே, வாங்கிக்க, வங்களனா நம்ம பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன்னு மிரட்டுற, அதனாலேயே வாங்க வேண்டியதா போச்சு என்னங்க பண்ணுறது இப்போ” என்று அவனிடமே புகார் வாசிப்பாள்.

இது தொடரவே செல்வராஜும்இங்க பாரு வள்ளி பிரெண்ட்ஸ் அன்பா தாரதை வேணான்னு சொல்லாத, நீ வேற நாலஞ்சு இடத்துக்கு போறவ நல்ல டிரஸ் பண்ணா தானே நம்மள நாலு பேர் மதிப்பாங்க நாம இப்போ இருக்குற நிலைமையில இவ்வளவு காஸ்டிலியா வாங்கவும் முடியாது” என்று மனைவியை சரியாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற கவலையில் சொல்ல அவனுக்கு ஆறுதல் சொல்லி தன் வேலையை சரியாகப் பார்கலானாள்.

ஆடை சம்பந்தமான சில  ஒடேர்ஸ்களையும் ஹை சொசைட்டி மூலம் தங்களது ஆடை தொழிற்சாலைக்கு  பெற்றுக் கொடுத்து அங்கேயும் இங்கயும் நல்ல பெயரை சம்பாதித்தாள்.  அவள் உதவுகிறேன் என்ற பெயரில் ஊரை சுற்றுவதை அறியாவிட்டாலும் அவளால் தங்கள் தொழிலுக்கு லாபம் ஏற்படுவதை கண்டு மனம் மகிழ்ந்தனர் அவளின் கணவனும் தம்பியும்.  இதையே சாக்காய் வைத்து இரு பக்கமும் கமிஷன் பணத்தையும் பெற்றுக் கொண்டாள். இன்னும் கூடுதலாகவே வெட்டிச்செலவு செய்தவள். நண்பர்களை ஒருநாளும் வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை. தன்னை நண்பி வந்து பிக் அப் செய்வாள் என்று கணவனிடம் கூறுபவள் கால் டெக்ஸீயில் பந்தாவாக சென்று இறங்குவாள். கோமளவள்ளியின் அற்ப ஆசைகளால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்குமோ?

 

அவங்க அவங்க புருசனுக்கு அவங்க அவங்க பரிமாருங்க” கனகாம்பாள் செல்விக்கு சொல்ல

எனக்கு தான் புருஷனே இல்லையே பாட்டி இல்லாத புருசனுக்கு நா எங்க போறது” தாமரை முந்திக் கொள்ள

புருஷன் இல்லாதவங்க பெத்த அம்மாக்கு பரிமாறனும் உன் அம்மா இங்க இல்ல அவளை பெத்த நான்தான் இருக்கேன். நீ எனக்கே பரிமாறு” என்றவாறு கனகாம்பாளும் அமர

 

கோமளவள்ளியும் செல்வராஜுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து சாப்பிடலானாள். காலை சாப்பாட்டை நேரம் சென்று சாப்பிட்டதால் செல்வி அமராமல் இருக்க அவளின் கையை பிடித்து தனதருகில் சத்யா அமர்த்திக் கொள்ள, செல்வி அவனை நேராக பார்க்க வெக்கப் பட்டு தலை குனிந்த வாறே இருக்க    

 

இப்படி வெக்கப் படுறாளே கன்னம் வேற ஆப்பிள் மாதிரி செவந்து இருக்கு ஐயோ இப்பவே கடிக்கணும் போல இருக்கே” சத்யாவின் மனம் போகும் போக்கை கண்டு திடிக்கிட்டவன் “நாம இவள பாக்கவே கூடாது பேசாம சாப்பிடுவோம். இல்லனா இன்னக்கி வேல பாத்த மாதிரிதான்” என்றவன் சாப்பாட்டில் கவனம் செலுத்த

என்ன இவரு சாப்பிடச் சொல்லிட்டு கைய விடாம பிடிச்சிக்கிட்டு இருக்கிறாரு? இப்போ நான் சாப்பிட வேணாமா? சாப்பிடவா? அவனின் முகத்தையும் கையையும் மாறி மாறி செல்வி பாக்க  

ஆமாம் சத்யா செல்வியின் கையை பிடித்து அமர்த்தியவன் கையை தன்கையோடு கோர்த்து மடியில் வைத்திருந்தான்.

என்னம்மா காலைல லேட்டா சாப்பிடத்துல பசிக்கலயா?” என்று கனகாம்பாள் கேக்க

ஆமாம்” என்று செல்வி தலையை அசைத்தாள்.

சத்யா செல்வியை பார்த்து புன்னகைக்க அவள் தனது கையை பிடித்து வைத்திருப்பதை பரிதாபமாய் பார்த்தாள். அவளின் பார்வையை சென்ற திசையை பார்த்தவன், தான் தானா சுயநினைவில்லாது இப்படி பண்ணி கிட்டு இருக்கிறோம் என்று  ஒரு கணம் அதிர்ந்தாலும் குறும்பு தலை தூக்க

அது வேறொன்னும் இல்லமா என் கையாள சாப்பிடணுமாம்” என்றவன் செல்விக்கு ஊட்டி விட

எல்லோரின் முன்னும் அவனின் இச்செயலை எதிர்பார்க்காதவள் விதிர் விதித்து போக அங்கிருந்து ஓடவும் முடியாமல் அனைவரினதும் முகம் பார்க்க வெக்கப் பட்டு தலையை  குனிந்தவாறே பெற்றுக் கொண்டாள்.

சத்யா சந்தோசமாக வாழ்வான் என்று கனகாம்பாளும், செல்வராஜும் நினைக்க கோமளவள்ளி வயிறெரிந்தது மட்டுமல்லாது தனது திட்டத்தை எப்படியாவது இன்றே அமுல் படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

*****

அம்மா நான் செல்வியை கடைத்தெருவுக்கு கூட்டிட்டு போய் வரேன், இனிமே அவ தானே எல்லாம் பாத்து, கேட்டு செய்யணும், எந்த சாமான் எங்க வாங்கணும்னு தெரிஞ்சிக்கட்டு”

 

ஆமாம் வள்ளி நானும் நெனச்சேன் இந்த மூட்டு வலியால என்னால ரொம்ப நடக்க வெல்லாம் முடியல நல்ல வேல நீ கூடிட்டு போறேன்னு சொல்லுற. சரி போயிட்டு வா?”

 

சத்யதேவும் செல்வராஜும் மீண்டும் தொழிற்சாலைக்கு சென்ற உடன் கோமளவள்ளி எப்படி செல்வியிடம் தனியாய் பேசுவதென்று எதிர் பார்க்க  கனகாம்பாளும் தாமரையும் மாறி மாறி செல்வியுடனே இருக்க என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு வெளியே ஏதோ கூவி கூவி பொருள் வித்த சத்தம்  கேக்க தனக்குள் உதடு வளைத்து புன்னகைத்தவள் கனகாம்பாளிடம் கேட்டு செல்வியை வெளியே அழைத்து செல்ல “நானும் வரேன்” என்று தாமரை ஆர்வத்தில் கத்திய போது கோமளவள்ளி முறைத்த முறைப்பில் கப் சிப் என்று அடங்கியவள் டிவி ரிமோட்டுடன் டிவியின் முன் அமர்ந்து விட்டாள்.

 

செல்வியை அழைத்து சென்று பேசியவள் செல்வி கேட்ட கேள்வியில் கடுப்பாகி தம்பியின் மனைவி என்று மறந்து தலையில் “நங்” என்று கொட்ட “எதுக்கு இப்போ கொட்டுனீங்க” என்று செல்வி கேக்க என்ன பதில் சொல்வதென்று முழித்தாள் கோமளவள்ளி.

கோமளவள்ளியின் உண்மையான குணத்தை அறிந்து கொள்வாளா செல்வி?

 

Advertisement