Advertisement

                                                   அத்தியாயம் 11

 

செல்வி வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் வந்ததிலிருந்து வீட்டை  கண்ணால் அளந்தவளுக்கு கிராமத்திலுள்ள கனகாம்பாளின் வீடு பெரியதாகவும், சுற்றுப்புறசூழலுடன் அம்சமாக அமைந்திருக்க, எல்லாவசதியும் இருந்தாலும் இதமான சூழல் இல்லாத நகரத்தில் எதற்கு  இவர்கள் இந்த சின்ன வீட்டில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. இடவசதி பத்தாத காரணத்தால் கூட சத்யதேவ் தம்பிகளை பிறகு அழைத்து வருவதாக கூறி இருக்கலாம் என்று தோன்ற அவன்பால் மனம் இளக ஆரம்பித்தது. கனகாம்பாள் போல் ரோஜா, தாமரை போல் அவர்களது அன்னைகளும் அன்பாக இருப்பார்கள் என்றே தோன்றியது செல்விக்கு.

 

ரோஜா வந்ததிலிருந்து அன்னையை தான் ஆராச்சியாக பார்த்தாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது புன்னகையுடன் இருக்கும் கோமளவள்ளி என்ன வேலை பார்த்து இருப்பாள் என்று யோசிக்க அவளின் குட்டி மூளைக்கு ஒன்றும் தோன்றவில்லை. அன்னை வீட்டுக்கு போலாம் என வற்புறுத்த அனைவருடனும் இன்னும் கொஞ்சநேரம் இருக்க ஆசை இருந்தாலும் அன்னையை இங்கிருந்து எப்படி அழைத்துச் செல்வதென்று இருந்தவளுக்கு அன்னையே போலாம் எனும் போது ஓடிவிட்டாள்.

 

பரவால்ல கிராமத்து பொண்ணா இருந்தாலும் நகரத்து பொண்ணுபோல நல்ல அம்சமா சத்யாவுக்கு ஏத்த பொண்ணா இருக்கா” வண்டியை ஒட்டியவாறே செல்வராஜ் சொல்ல கோமளவள்ளி முகத்தை சுளிக்க ரோஜா கண்கள் சொக்க கொட்டாவி விட்டவாறே “ஆமாம்” என தலையசைத்தாள்.

 

என்ன ரோஜா ரொம்ப டயடா இன்னும் நாம சப்டல சாப்பிடாம தூங்கிடாத” செல்வராஜ் கரிசனையாக சொல்ல

நா பால் சாப்பிட்டேன் பா, அதுவே எனக்கு போதும், தூக்கம் தூக்கமா வருது” ரோஜா மீண்டும் கொட்டாவி விட

 

பகீர் என்றானது கோமளவள்ளிக்கு “என்னது பால் சாப்டியா? என்ன பால் அங்க சத்தியாவுக்கு காய்ச்ச பால் மட்டும் தானே இருந்துச்சு” எங்கே மகள் முதலிரவுக்காக வைத்த பாலை குடித்து விட்டாலோ என்று கலக்க மடைந்த கோமளவள்ளி ரோஜாவை ஏறிட

 

அன்னையை சீண்டிப் பார்க்க நினைத்து “ஆமாம்மா அடுப்புமேல இருந்த பால் தான்” உள்ளுக்குள்  சிரித்துக் கொண்டாள் ரோஜா. ரோஜா கழிவறைக்கு செல்லும் போது அன்னை சமயலறைக்கு புகுவதை கண்டு யோசனையாக சித்தியின் காதில் குசுகுசுக்க மரகதம் கோமளவள்ளி சமையல் அறையில் என்ன செய்கிறாள் என எட்டிப் பார்த்தாள்.

 

ரோஜா பாலை அருந்தி விட்டதாக சொன்னதால் அன்னை நகத்தை கடித்தவாறு யோசிப்பதை பார்த்த ரோஜா தனக்கு நெஞ்சு வலின்னு சொல்லி அன்னை மருத்துவமனையில் போய் படுத்துக்க கொண்டாலும் ஆச்சரியமில்லை என தோன்ற  உடனே விளையாட்டை கை விட்டு “மாமாக்கு வச்ச பால சித்தி பத்திரமா எடுத்துவச்சிட்டாங்க அதுல பாதாம், முத்தரி எல்லாம் போட்டு இருந்ததால டேஸ்ட் பண்ண கூட சித்தி தரல” மரகதவள்ளியின் மேல் கடுப்பானவள் போல் சொல்ல நிம்மதியடைந்த கோமளவள்ளி பொய்யாய் புன்னகைத்தாள்.

 

ரோஜா வந்து சொன்னதும் பல்கலைக் கடித்த மரகதவள்ளிஇவ இந்த ஜென்மத்தில் திருந்தா மாட்டா போலயே! சத்யா பொண்டாட்டி வேற அப்பாவியா இருக்கா, இவளை சமாளிக்க முடியுமா? நேரடியா மோதினா ஏதாச்சும் பண்ணலாம். மறை முகமா மோதினா என்ன பண்ணுறது” சலிப்பு தோன்றியது மரகதவள்ளிக்கு

 

அம்மாவுக்காக தான் பொறுமையா போய் கிட்டு இருக்கேன். ரோஜா ஒருத்திய கல்யாணம் பண்ணி கொடுத்ததும், மாமா கிட்ட சொல்லாம்னு நினச்சேன். அவரும் பாவம் தான் இவள இன்னமும் நம்பிக்கிட்டு, நா சொன்னாலும் நம்புவாரான்னு தெரியலையே!” ஒரு பெருமூச்சு விட்டாள் மரகதவள்ளி.

 

கோமளவள்ளியை இங்கிருந்து அனுப்பிவிட்டால் போதும் என்று தோன்ற “நா எல்லாருக்கும் சேர்த்தே சமைச்சி எடுத்து  வந்திருக்கேன் எல்லாரும் சாப்டுட்டே போங்க” கோமளவள்ளியை ஓரக் கண்ணால் பார்க்க

 

என்னது உன் சாப்பாட்ட நா சாப்பிடணுமா? உன் கையாலே பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன். இதுல சாப்பிடணுமா?” என பொறுமியவள் செல்வராஜ், ரோஜாவை இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.   

 

ஒரு காலத்தில் அக்கா மனம் நோக பேசும் போது அழுது கரைந்தவள் தான் மரகதவள்ளி முருகவேளை கல்யாணம் பண்ண தன் பின் கோமளவள்ளியிடமிருந்து ஒதுங்கிப் போனாள் அது கோமளவள்ளியின் பார்வையில் மரகதம் பயந்து ஒடுங்குவது போல் தோன்ற இன்னும் இன்னும் சீண்டினாள். போகும் போகுது கூட

 

என்ன இப்போ எல்லாம் ரொம்ப வாய் நீளுது”

 

என் வாய் எப்போவும் ஒரே மாதிரிதான் அம்மா, சத்தியாவுக்காக பொறுத்துப் போனேன் இனிமேல் அப்படி இருப்பேன்னானு தெரியல” செல்வியின் விஷயத்தில் தலையிடாதே என்று மறைமுகமாக மிரட்ட அதை அலட்ச்சியப் படுத்திய கோமளவள்ளி ஒரு கோணல் சிரிப்பை உதிர்த்து  விட்டு அகன்றாள்.

 

என்ன மரகதம் அக்கா கிளம்பிட்டா நீயும் உடனே போகாம தமிழ தயார் பண்ணி விட்டுட்டு போ”

 

சரிம்மா தமிழ் குளிக்கப் போயிட்டா”

தமிழை குளிக்க அனுப்பும் போது “போய் நல்லா குளிச்சிட்டு வா தமிழ்” மரகதம் சொல்ல

ஆமா அண்ணி ரொம்ப கசகசன்னு இருக்கு, குளிச்சா செமயா தூங்கலாம்” என்றவாறே குளியல் அறையினுள் புக

 

என்ன இவ புரிஞ்சி சொல்லுறாளா? புரியாம சொல்லுறாளா? இல்ல என்ன கிண்டல் பண்ணுறாளா? வெகுளியா சொல்லுறாளா?” மரகதவள்ளி குழம்பிப் போய் இருக்க

 

தனது அன்னையின் முகத்தில் வந்து போன பாவனையில் சத்தமாக சிரித்த தாமரை

என்னம்மா உன்னையும் குழப்பிட்டாளா? அவள பார்த்ததிலிருந்து இப்படித்தான் சில நேரம் சின்ன குழந்தைபோல நடந்துக்ககிறா, சில நேரம் கிழவி மாதிரி கருத்தா பேசுவா இவளை புரிஞ்சிக்கவே முடியல”

 

தாமரையின் தோளில் ரெண்டு அடி போட்ட மரகதவள்ளி “என்ன  அவ, இவனு பேசுற அவ உனக்கு அத்த மரியாதையா பேசு”

 

ஹி ஹி ஹி நீ வேற எங்கள் அக்கானு கூப்பிட்டவமா  அவ என்ன விட ஐஞ்சு, ஆறு வருஷம் பெரியவாளா இருபால்ல, ஏன் இப்படி நடந்துக்கிரானே தெரியல”

 

ஒரு வேல கிராமத்துல வளந்ததால இப்படி இருக்கிறாளோ என்னமோ” தமிழ் செல்வியின் உண்மையான வயதை அறியாமல் அன்னையும் மகளும் பேச குளித்து விட்டு வெளியே வந்தாள் செல்வி அவளை அலங்கரிக்க ஆரம்பித்தனர் அன்னையும் மகளும்.  

 

எதுக்கு அண்ணி தூங்க போற நேரத்துல இந்த அலங்காரமெல்லாம்” செல்வி புரியாமல் கேக்க அவளின் தலையில் கொட்டுவது போல் கையை கொண்டு சென்று எடுத்துக் கொண்ட தாமரை

 

நீ சினிமா எல்லாம் பாபியா மாட்டியா”

 

பாப்பேன்”

 

உனக்கு கல்யாணம் ஆச்சுல்ல”

 

ஆமா”

 

அதுல கல்யாணம் ஆனா பொண்ண முதலிரவு அறைக்கு அலங்கரிச்சு பால் செம்போட அனுப்பி வைப்பாங்கள்ல”

தாமரை கடுப்பாக சொல்லிக் கொண்டிருக்க

 

அட ஆமா இன்னைக்கு முதலிரவா? அறையெல்லாம் பூவால் அலங்காரம் பண்ணி இருக்குமில்ல, நெறய சினிமால  பாத்திருக்கேன்” செல்வி பெருமையாக சொல்ல

 

அவளை வெட்டவா குத்தவா என முறைத்த தாமரை “அங்க என்ன நடக்கும்னு தெரியுமா?” கடுப்பில் தன் கேட்டாள்.

 

பொண்ணும், மாப்பிள்ளையும் பால்,பழம் சாப்பிடுவாங்க அப்பொறம் விளக்க அணைச்சிட்டு தூங்கிடுவாங்க”

செல்வி சொன்ன விதத்தில்  மரகதம் சிரிக்க

 

ஐயோ கடவுளே!” என தாமரை கையில்  இருந்த சீப்பால் தன்னையே அடித்துக் கொள்ள செல்வி கலகலனு சிரிக்க ஆரம்பித்தாள்.

 

செல்வி ஏதோ தாமரையை கிண்டல் செய்கிறாள் என எடுத்துக் கொண்ட மரகதவள்ளி அலங்காரம் முடிந்தது என அன்னையை அழைக்க

 

அத்த கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க” மரகதம் சொல்ல அதன் படியே செய்தவளை உச்சிமுகர்ந்து

 

தமிழு என் பையன் ரொம்ப நல்லவன்மா அவன் மனசு நோகாம நடந்துக்க, நீ அவன் கூட சந்தோசமா வாழ்ந்தா அதுவே போதும்மா, சீக்கிரமா ஒரு பேரனையோ பேர்த்தியையோ பெத்துக்குடு இல்லனா உன் கூடத்தான் சண்டை பிடிச்சிக்கிட்டு இருக்கணும்” சிரித்தவாறே கனகாம்பாள் சொல்ல அவரை கட்டி அணைத்தவள் “ஒன்னென்ன அத்த ரெண்டு பெத்து தாரேன்” என சொல்ல

அப்படி போடு அருவால” என தாமரையும் விசில் அடிக்க

போ போ முதல்ல அவளை போய் அறையில் விட்டுட்டு வா, நேரமாச்சு” கனகாம்பாள் தாமரையை முறைக்க

 

அம்மா நாலடி எடுத்துவச்சா மாமாரூமு வந்துட போகுது” உதடு சுளித்து பழிப்பு காட்டிய தாமரை செல்வியுடன் செல்ல அந்த நாலடியை எடுத்து வைக்க செல்விக்கு பெரும்பாடானது.

 

ஊரிலிருந்து வரும் போது அப்பத்தாவும் சொன்னது இது தான் “தமிழு நீ இன்னும் சின்ன பாப்பா இல்ல, உன் புருஷன் சொல்லுறத கேட்டு நடந்துக்க, வீணா முரண்டு பிடிக்காத, பொறுத்துப் போ, உன் அடாவடியெல்லாம் இங்கயே மூட்ட கட்டி வச்சிட்டு, உன் மாமியார் கிட்ட நல்ல பேர் எடுக்கப் பாரு, கனகா தங்கமானவ அவளுக்கிருக்கிறது ஒரே பையன், உன் மூலமா தான் அவங்க வம்சம் விருத்தியடையோனும். உன் அம்மாவ என் பதினஞ்சு வயசுல பெத்தேன். பொண்ணுங்களுக்கு புருஷன் தான் எல்லாமே புரிஞ்சுதா?” பார்வதி பாட்டி அவரது பாணியில் மிரட்டலாக சொன்னதை கனகாம்பாள் அன்பாக சொன்னார்.

செல்வியை அறையினுள் விட்டு விட்டு மரகதவள்ளி கணவனுடன் வீடு திரும்ப தாமரை கனகாம்பாளுடன் தங்கிவிட்டாள்.

 

சத்யதேவ் போனில் பேசிக் கொண்டிருந்தவன் அறையினுள் செல்வி வந்து கதவை அடைக்க தாவணியிலே பெரியபெண்ணாக இருந்தவள் புடவையில் ஒரு முழுமையான பெண்ணாக மாறி இருக்க அவளை கண்ணிமைக்காது பாத்துக்க கொண்டிருந்தான்.

 

என்ன இவரு நம்மள இப்படி பாக்குறாரு” என்றெண்ணியவள்என்ன அப்படி பாக்குறீங்க?” அவனின் ஆளை விழுங்கும் பார்வையில் வார்த்தை தந்தியடிக்க ஒருவாறு கேட்டுவிட

 

அவளை உச்சிமுதல் பாதம்வரை வேண்டுமென்றே  பார்த்தவன் போதா குறைக்கு அவளை சுத்தியும் வந்து பார்த்து விட்டுபுடவையில் சூப்பரா இருக்க” அவளை வம்பிழுக்கவென்றே சொல்ல

 

அன்னைக்கு கூட புடவைதான் கட்டி இருந்தேன்.” என்னை ரசிக்க உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு என்பது போல் செல்வி சொல்ல

 

அன்னைக்கி நடந்த பிரச்சினையில்ல அதெல்லாம் எங்க பார்க்க” என்றவாறே அவளருகில் வர

 

அருகில் வந்தவனின் முகத்தின் முன் பால் செம்பை நீட்டியவள் “இந்தாங்க இத உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க”

 

ரொம்ப முக்கியம்” என்று சத்யா முணுமுணுத்தவாறே அதை வாங்கி மேசையில் வைக்க

 

முக்கியம்தான் மாமா, நா உங்கள மாமான்னு கூப்பிடலாம்ல” அடுத்த விசயத்துக்கு தாவினாள்.

 

ஆசையா மாமான்னு கூப்டுட்டு இப்போ எதுக்கு பெர்மிசன் கேக்குற” சிரித்தவாறே சத்யா கட்டிலில் அமர்ந்து அவளின் கையை பிடித்து தனதருகில் அமர்த்திக் கொள்ள

 

“”ஐயோ ஆசையா எல்லாம் கூப்பிடல ரோஜாவும், தாமரையும் உங்கள அப்படி தானே கூப்பிடுறாங்க அதான் அப்படி கூப்பிட்டேன்” பட்டென்று சொல்லிவிட சத்யதேவ் சத்தமாக சிரித்தே விட்டான்.

 

இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க” செல்வி புரியாமல் கேக்க

 

உன் கூட இருந்தா சிரிச்சு கிட்டே இருக்கலாம்  போலயே!”

 

ஐயோ மறந்துட்டேன்” என்று செல்வி எழுந்து பால் செம்பிலிருந்து பாலை ஊற்றி அவன் கையில் கொடுக்க அதை வாங்காது

உனக்கு”

நீங்க சாப்பிட்டு பாதிய கொடுங்க நா சாப்பிடுறேன். அப்படித்தான் எல்லாரும் சொன்னாங்க”

 

சிறுகுழந்தைபோல் பேரம்பேசியவளை அக்கணமே அள்ளிப் பருக மனம் துடிக்கவேறென்ன சொன்னாங்க” உதடு கடித்து சிரிப்பை  அடக்கியவாறே கேக்க

 

ஒவ்வொன்றாக சொன்னவள் “அத்த சீக்கிரம் பேரனோ பேர்த்தியோ பெத்து கொடுக்க சொன்னாங்க” சொன்ன பின்னால் அவன் முகம் பாக்க வெக்கம் வர தலையை குனித்துக் கொண்டு கப்பில் ஊற்றிய பாலை நீட்டியவாறே இருக்க

 

அப்போ சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடவேண்டியது தான்” என கப்பை வாங்கி மீண்டும் மேசையில் வைத்தவன். அவளின் இடையோடு அணைத்தது அவளின் இதழை சுவைக்க ஆரம்பித்தான்.

 

கட்டிலில் அமர்ந்திருந்தவன் அவளின் அருகில் எப்போ வந்தான் என்று உணரும் முன்னே அவனின்  இறுகிய பிடியில் அவள் சிக்கி இருக்க அவனை விளக்க முயன்ற அவளின் முயற்சியை தடுத்தவன், அவனின் மெதுவான அணுகுமுறையிலேயே அவளை தன் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

 

சத்யதேவின் எண்ணமெல்லாம் கிடைத்த டெண்டரை நல்ல முறையில் முடித்து வட்டிக்கு வாங்கிய ஐந்து பேரில்  இருவருக்காவது அசலை கொடுத்து கொஞ்சமேனும் கடன் பிரச்சினையிலிருந்து வெளியே வந்து ஆடை தொழிற்சாலையை விரிவு படுத்த, அத்துடன் அப்பா செய்த ஜவுளி தொழிலிலும் கால் பாதிக்க வேண்டும் என்பதே. அவனுக்கு உதவியாக மல்லிகை இருப்பாள் என்றெண்ண அவளின் திடீர் திருமணமும், அதனால் மேலும் கடனாளியானதே மிஞ்சியது. மல்லிகையின் திருமணத்தால் மனதளவில் நன்றாக பட்டுவிட்டவன். வரதட்சணை என்ற பெயரில் ஒரு பெண்ணையோ அவள் குடும்பத்தையே வதைக்க அவன் விரும்பவில்லை. வரதட்சணை தருவதாக யார் கூறினாலும் அதை வெறுத்தவன் கல்யாணத்தை பத்தியெல்லாம் அவன் சிந்தித்து பார்க்கவுமில்லை. அக்கா கோமளவல்லி ரோஜாவை கல்யாணம் பண்ணச்சொல்லி வற்புறுத்த, அவனை விட அதிகமான  வயது இடைவெளி உள்ள சின்னப்ப பெண்ணை மணப்பது தப்பாக தோன்றவே அன்னைக்காக என்றோ ஒருநாள் திருமணம் முடிக்கவேண்டும். முதலில் இருக்கிற பிரச்சினையை பார்ப்போம் என்றிருந்தவனுக்கு கடவுளாய் பார்த்து கல்யாண பந்தத்தில் இணைத்து விட்டார்.

 

அவனின் மனைவி செல்வி அவளை முதல்முதலில் கண்ட போது அவனுள் வந்த மாற்றம், அவளுக்கு ஆபத்து என்றதும் மனதும், உடம்பும் பதைபதைக்க விதம், அவளை மயக்க நிலையில் கண்டபோதும், அவளை ஒருவன் நாசம் செய்ய பார்த்தபோதும் ஏற்பட்ட வலியும், கோவமும், அன்னை தாலியை கட்ட சொன்ன போது அவளின் கண்களில் கண்டது அவனுக்கான காதலை.

 

ஆம் காதல் தான். தன் இணையை கண்டு கொண்டான். அவளையே கரம் பிடித்தான். ஆனால் வாழ்க்கை? வாழ்க்கையை ஆரம்பிக்க காதலோடு புரிதலும் மிக அவசியம். அதன் பின் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றிருந்தவனை அவனின் மனையாள் பேசியே உசுப்பேத்தி விட்டிருக்க அவளின் இதழுக்கு தண்டனை வழங்கி கொண்டிருந்தான்.

 

கணவனே ஆனாலும் ஒரு ஆணின் முதல் இதழ் தீண்டல் தப்பாய் தோன்ற அவனை விளக்கும் முயற்சியில் இருந்தவள் மெல்ல மெல்ல அவனுள் கரைய ஆரம்பித்தாள். கணவன் மனைவி  உறவை சரியாக அறியாதவள் அவனின் அத்துமீறல்களில் மேனி சிலிர்க்க, அவனை விளக்கவும் முடியாமல் அவனிடமே தோற்க, அவன் ஏற்படும் வலிகள்கூட இன்ப அவஸ்தையாக அவனிடமே தஞ்சமடைந்தாள்.

 

அவளின் மறுப்பும், எதிர்ப்பும் இன்னும் அவனை அவளுள் தேடாத தூண்ட அதையெல்லாம் இலகுவாக முறியடித்தவன் அவனின் நீண்டநாள் பிரம்மச்சரியத்தை செல்வியிடம் முடித்துக் கொண்டு அவனை அவளிடம் முழுமையாக ஒப்படைத்தான் ஒரு காதல் கணவனாக.

வாய் மொழியால் சொன்னால் தான் காதலா? செய்கையாலும் காதலை உணர்த்தலாம். சத்யா உடல்மொழியால் காதலை உணர்த்தினான் கணவனாக.

 

இங்கே கோமளவள்ளி தூக்கம் வராமல் பாலை குடித்தார்களா? இல்லையா என மனதோடு பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்க “இன்றைக்கு தடுத்தாலும் நாளை நீ என்ன செய்வாய்” என்று மனம் கேள்வி எழுப்ப வெகு நேரமாக யோசித்தவள் நல்லதொரு தீர்வு கிடைத்து விட்ட சந்தோசத்தில் கண்ணயர்ந்தாள்.

 

Advertisement