அத்தியாயம் 35

லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப் பட்டவர்கள்  நியாபகத்தில் வர அறக்கப்பறக்க அவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு “அத்த” என்று கத்தியவாறே அவரை கட்டிக்க கொண்டு அழ “என்னாச்சு ஏன்மா அழகுற” அவளை சமாதனப்படுத்த “சந்துருவையும் தனுணாவையும் கடத்தியவங்க அவங்கள அடிக்கிறத படமெடுத்து அனுப்பி இருக்காங்க” என்னம்மா சொல்லுற?” அவர் அதிர்ந்ததையும் அறியாது பேசிக் கொண்டே போக இந்த மூவரையும் கடத்தியதை அறியாத அவருக்கு அது பேரிடியாக இருக்க தலையில் அடித்தவாறு அழ சௌமியா சேர்ந்து அழுதாள்.

 

சரவணன் சாரின் கார் அந்த காம்பவுண்ட்டுக்குள் நுழையும் போதே அவரை வ்ருஷாத் ராஜ மரியாதையுடன் வழி நடத்தி சைதன்யனின் எதிர் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

அந்த வீட்டில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தவனை யாரடா இவன் என்ற பார்வையில் அளவிட “ஹலோ மிஸ்டர் சரவணன் மாண்புமிகு என் சித்தப்பாவே எப்படி இருக்கீங்க” “சித்தப்பா…வா எனக்கு அண்ணனே இல்லையே” குழம்பியவாறே அவனை பார்க்க  “என்னமா? நடிக்கிறிங்க வாஹ் வாஹ் சூப்பர். உங்களுக்கும் கத சொல்லணுமோ?” இரட்டையர்த்தத்தில் சொல்ல “என் பையனும் மருமகளும் எங்க?” கர்ஜனையாகவே கத்த “உக்காருங்க சாச்சா{சித்தப்பா} பொய்யாய் உபசரிக்க “யொத்தா” கண்ணாலேயே கேட்க்க “முதல்ல எங்க வீட்டு பசங்கள காட்டு” கோவத்தை அடக்கிய குரலில் சொல்ல “வ்ருஷாத்” ஷரப் கண்ணாலேயே வ்ருஷாதுக்கு கட்டளையிட நடு ஹாலில் இருந்த பெரிய தொலைக்காட்சி உயிர்ப்பிக்கப் பட்டு மூவரும் தெரிந்தனர்.

பூட்டியிருந்த ஆறு வீட்டையும் ஒரே நாளில் வாங்கி சைதன்யனின் எதிர் வீட்டிலிருந்து சைதன்யன் வீட்டில் என்ன நடப்பதென்று அவனுடைய ஆட்களை வைத்து அறிந்துக் கொண்டான். அதன் படி காய் நகர்த்தி சைதன்யனை கடத்தி எதிர் வீட்டில் வைத்திருக்க மீரா அவள் வீட்டிலேயே அவனுடைய கண்காணிப்பில்  வைக்கப் பட்டாள்.

“எங்க என்னோட  பரம்பரை சொத்து?” என்றவாறே சரவணன் சார் பக்கம் கை நீட்ட அவருடைய கையிலிருந்த பெட்டியை கொடுத்தார். அதை வாங்கிய வ்ருஷாத் திறந்து வாளை கையில்  ஏந்தி அதை ஷரப்பிடம் கொடுக்க அதை வாங்கியவன் கைதேர்ந்த போர்வீரன் போல் வாளை வீச ஒருகணம் அவனை கண்ணிமைக்காது பார்த்தார் சரவணன்.

அவரை திரும்பிப் பார்த்த ஷரப் “வாள் நல்லா இருக்கு என் யொத்தா தல்வார் {வீர வாள்} எங்க? கண்ணக் குழி விழ புன்னகைப்பவனின் கண்களில் கருணை கிஞ்சத்துக்குமில்லை.

“அதான் பா இது” வ்ருஷாத்தை ஏறிட்டவன் தலையசைக்க சைதன்யனும், சந்துருவும் பக்கத்து அறையிலிருந்து இழுத்து வரப் பட்டனர். கைகள் கட்டப் பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் இருந்த இருவரையும் கண்ட சரவணன் சாருக்கு மூச்சே நின்று போனது போல் இருந்தது அவர்களிடத்தில் ஓட சைதன்யனின் கழுத்தை நோக்கி வாளை வீச சைதன்யன் தானாக இரண்டடி பின் வாங்கினான் சரவணன் சார் அசையாது அதே இடத்தில் நின்று விட்டார்.

 

“என்ன பாக்குறீங்க யொத்தா எங்க? யொத்தாவ கண்ணால பாத்திருக்க மாட்டானே எத கொடுத்தாலும் வாங்கிட்டு ராஜஸ்தான் போய்டுவானு நெனச்சீங்களா? யொத்தாவ கண்ணால பாத்ததில்ல மனசால பாத்தேன். எவ்வளவு நீளம்? என்ன உலோகத்தால் செய்யப்பட்டது? என்ன சின்னம் அதுல பொறிக்கப் பட்டிருக்கு, கைல பிடிச்சா எப்படி இருக்கும் என்பதுவர சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டவன் நான். இதோ இருக்கானே சந்துரு இவன கொன்னுட்டு வாள் எங்கே என்று கேக்க மாட்டேன் ஒரேயடியா உங்க பையன் கழுத்த  வெட்டிட்டு தான் கேப்பேன் என்று சைதன்யன் பக்கம் திரும்பியவன் “உன் உடம்புல ஓடுறதும் எங்க வம்ஷ ரெத்தம் தான்” என்று கண் சிமிட்ட அவனை நோக்கி பாய்ந்த சைதன்யன்   தலையால் அவனின் நெஞ்சின் மீது அடித்தான்.

 

எங்கிருந்தோ ஓடி வந்த மீரா ஷரப்பை அணைத்து சைதன்யனை முறைக்க ஆரம்பித்தாள்.

 

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சந்துரு குறும்பு தலை தூக்க “மச்சான் உன் தம்பி உனக்கு ஆப்ப சொருகிட்டான்யா சொருகிட்டான்.” என்று கூச்சலிட்டான்.

 

மீரா ஷரப்பை அணைத்ததை  அதிர்ச்சியாக பார்த்த சரவணன் சார் இங்க என்ன நடக்குது என்று புரியாமல் குழம்ப லட்சுமி அம்மா “யொத்தா” வோடு உள்ளே நுழைந்தார்.

தேவ், ரவிக்குமார், நேசமணி உடன் லட்சுமி அம்மா உள்ளே வந்ததை விநோதமாகப் பார்த்தான் ஷரப் அவர்களை சுற்றி வளைத்தனர் ஷரபின் அடியாட்கள். தேவ்வையும் ரவிகுமாரையும் கண்ட மீரா ஷரப்பை விட்டு அவர்களிடம் ஓடினாள்.

 

“இந்தாப்பா நீ கேட்ட வாள் நீ யாரென்று எனக்கு தெரியாது உனக்கு தேவ இந்த வாள் தானே வச்சிக்க என் குடும்பத்த விட்டுடு என் மாமா சாகும் போது சொன்னார்

இந்த வாள் எங்களுக்கு சொந்தமில்லை என் தாத்தா அவங்கண்ணன் மேல இருந்த கோவத்துல தூக்கிட்டு வந்துட்டாரு என் அப்பாவும் “வாள்” குடும்பச்சொத்து அது இதுனு இருந்துட்டாரு நானும் அப்படித்தான் இருந்தேன் ராஜஸ்தானுக்கு ஒரு தடவ போனப்ப  தான் உண்மைய தெரிஞ்சிகிட்டேன். அங்க “யொத்தா” என்ற இந்த வாளை மும்முரமா தேடிகிட்டு இருக்காங்க எங்க கிட்ட இருக்குறது தெரிஞ்சாவே எங்க உயிருக்கு உத்தரவாதமில்லை. கொள்ளுத்தாத்தா ‘விஷ்வதீரனுக்கு சொந்தமான வாள் எங்க குடும்ப சொத்து என்பதைத்தவிர  என் பையனுக்கு வாளோட பேரையோ அத பத்தின உண்மையையே சொல்லாம வளத்துட்டேன்.

அவர் சொன்ன படி அந்த உண்மை என் கணவருக்கோ என் பையனுக்கோ தெரியாது. இது உனக்கு சொந்தமானது இப்போ உன் கிட்ட சேர்த்துட்டேன் எங்க பசங்கள நான் கூட்டிட்டு போறேன்.

என்று அவர் சைதன்யனை தாங்க சரவண சார் லட்சுமி அம்மாவை கண் சிமிட்டாது பாத்திருக்க “சைட் அடிச்சது போதும் பையன பிடிங்க” லட்சுமி அம்மா முறைக்க சிலைக்கு உயிர் வந்தது போல் சரவணன் சார் சைதன்யன் பக்கம் நகர்ந்தார். சந்துருவை  தேவ்வும் நேசமணியும் பிடிக்க எல்லோரும் வெளிக் கதவு பக்கம் நகர

வாளை கையில் எடுத்தவன் அதை திருப்பித் திருப்பிபார்த்தவன் வாளை சுழற்றி  சுழற்றி வீசிப் பார்த்து, முத்தமிட்டு எதையோ சாதித்ததை போல் மகிழ்ந்தவன்” ஒரு நிமிஷம்” என்று ஷரப் அழைக்க “திரும்ப ஆரம்பிச்சிட்டாண்டா விடாது கருப்பு போல இவனொருத்தன்” என்று அவன் பக்கம் மெதுவாக சந்துரு திரும்ப அவனுக்கு முன் அனைவரும் திரும்பி அவன் இன்னும் என்ன சொல்ல போகிறான்  என சிறு அச்சத்துடனே பார்த்தனர்.

கன்னக்குழி விழ அழகாக புன்னகைத்தவன் லட்சுமி அம்மா விடம் வந்து  “யொத்தா வாள் மட்டுமில்ல என் உயிர் மூச்சு, கண்டுபிடிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே வெறியா வளந்துட்டேன். எங்க குடும்ப கௌரவ பிரச்சினை அதான் இப்படி”என்று அங்கு நடந்த கலவரத்தை சுட்டிக் கட்டி விட்டு “அம்மா உயிரோட இருந்து என்ன வளர்ந்திருந்த ஒரு வேல நான் நல்லவனா இருந்திருப்பேனோ என்னமோ! உங்கள பார்த்தா எங்கம்மாவே நேர்ல வந்து சொன்னது போல் இருக்கு உங்க கிட்ட விசாரிக்காம வாளை தேடியெடுக்கணும் என்ற வெறீல யோசிக்காம பண்ணிட்டேன். ஒருதடவை நீங்க எல்லாரும் ராஜஸ்தான் வரனும்” என்று அனைவருக்கும் சேர்த்து வணக்கம் வைத்தவன்

“இவன் எங்களை ராஜஸ்தான்ல வச்சி போட்டு தள்ள முடிவு பண்ணிட்டான்’ என்று சந்துரு முணுமுணுத்தான்.

“அதுக்கென்னப்பா நீயும் அடிக்கடி இங்க வா அம்மாவா உனக்கு நான் இருக்கேன்” என்று அவனின் நெற்றியில் முத்தமிட சைதன்யனை கண்சிமிட்டியவாறே பார்த்தான்.

மீராவிடம் ஏதோ சிரித்து பேச அவளும் புன்னகைத்தவாறே பதில் அளித்தாள். அதை கண்டு “திக்” என்றது சைதன்யனின் மனது.

அவ்வளவு  நேரமும் அமைதியாய் நின்றவன் ஷரப்  மீராவை நெருங்கி நின்று பேசவும் வலியையும் பாராது கையை மடக்கி உடம்பில் உள்ள எல்லா பலத்தையும் கைக்கு கொண்டு வந்தது போல்  அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட ஷரப்பின் மூக்கிலிருந்து உதிரம் கொட்ட ஆரம்பித்தது. வ்ருஷாத் சைதன்யன் மீது பாய மற்ற அடியாட்கள் மற்றவர்களை இறுக்கிப் பிடித்தனர். ஷரப் அவர்களை தடுத்து வ்ருஷாதை சைதன்யனிடமிருந்து பிரித்தெடுத்தவன் “இவன் எனக்காக உயிரையும் கொடுப்பான் என் கூட பொறக்காத தம்பி” லட்சுமி அம்மாவை ஏறிட்டு சொல்லியவன் வ்ருஷாத்துக்காக மன்னிப்பும் கேட்டு சைதன்யன் பக்கம் திரும்ப

“உங்க வம்சத்து ஆட்கள் உடம்புல சூடான ரெத்தம் தான் ஓடுது நா அத ஒத்துக்கிறேன்” சந்துரு சொல்ல “சைதன்யனை இறுக்கி அணைத்தவன் “எனக்கு யார் கிட்டேயும் மன்னிப்பு கேட்டு பழக்கமில்லை ப்ரோ அண்ணியோட ராஜஸ்தான் வா” ” என்றவாறே நகர்ந்தான் ஷரப்.

 

சைதன்யனும் சந்துருவும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட மீராவை தேவ்வும் ப்ரியாவும் பார்த்துக் கொண்டனர். ஷரப் வாளோடு ராஜஸ்தான் புறப்பட்டு சென்று விட்டான்.

 

தனது குடும்பத்தோடு ஒன்றிய  மீரா லட்சுமி அம்மாவையும் அந்நிய பார்வை பார்த்து வைக்க கதி கலங்கி போனார். ஒரு வாரமாக சைதன்யன் மருத்துவ மனையிலிருந்து மீரா அவனை வந்து பார்க்கவில்லை.

“வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும்” சைதன்யனை பார்த்தவாறே சந்துரு பாட கட்டில் அருகே இருந்த மேசையிலுள்ள பொருட்களால் அவனை அடித்தான். “என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்   சின்ன கொழந்தைங்க மாதிரி ஹாஸ்பிடல்ல இருக்குற நினைப்பு இருக்கா இல்லையா?” சௌமியா அதட்ட “மியா காபி குடிச்சு ஒரு வாரத்துக்கு மேல் ஆகுது டி” ” நீ அடங்கவே மாட்டியா” அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள். நர்ஸ் வந்து சத்தம் போடவே அமைதியானார்கள் மூவரும்.

 

“தனுண்ணா மீராகு எங்க நியாபகம் வரவே வராதா?” கவலைக்குரலில் சௌமியா “தெரியல” கண்கள் கலங்க சைதன்யன் கண்களை மூடி நெஞ்சில் எரியும் வேதனை எனும் நெருப்பை  அணைக்க ஆழமாக மூச்சு விட்டு முயற்சி செய்தான்.

 

லட்சுமி அம்மா உணவு எடுத்து வரவே “லஷ்மிமா அன்னைக்கி எப்படி நீங்க கரெக்ட்டா யொத்தா வோட என்ட்ரி கொடுத்தீங்க” சந்துரு சாப்பிட்டவாறே பேச்சு கொடுக்க ‘எத்தன தடவ தான் கேப்ப” லஷ்மி அம்மா நொடித்துக் கொள்ள “சும்மா படையப்பா ரேஞ்சுக்கு பட்டாயா கிளப்பிட்டீங்க மா இன்னொருதடவ சொல்லுங்க” “ப்ளீஸ் மா அன்னைக்கு நா இல்ல சொல்லுங்களேன்” சௌமியா கெஞ்ச சைதன்யனும் கதைக்கேக்க ஆரம்பித்தான்.

 

“போட்டோ பார்த்து மயங்கிட்டேன் அப்பொறம் கண்ணு முழிச்சா ஹாஸ்பிடல் பெட்ல. சௌமியாவும் கலாவதியும் அழுதுகிட்டு இருந்தாங்க அவங்க பேசுனது வச்சு சரியா ஒன்னும் புரியல அப்போ தான் ப்ரியா உள்ள வந்தா

“உன்ன அங்க தேடிகிட்டு இருக்கேன் நீ வந்து இங்க அழுதுகிட்டு இருக்க” ப்ரியா சௌமியாவை கடிந்து கொள்ள ‘ என் பையனுக்கு என்ன ஆச்சு உண்மைய சொல்லுமா’ கலாவதி அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ உண்மையை கூறாமல் அவர்களை சமாதானப் படுத்த முடியாதென்று புரிந்துக் கொண்ட ப்ரியா “யொத்தா” பத்தி சொல்லி அந்த வாளையெடுக்க பூர்வீக வீட்டுக்கு சென்று விட்டதாக கூற எழுந்து அமர்ந்தே விட்டார் லஷ்மி அம்மா.

 

“கடவுச்சொல் எனக்கு மட்டும் தெரியும் என்பதால் உங்கப்பாக்கு போன் போட்டேன் போன எடுத்தா தானே! மத்தவங்களுக்கு எல்லாருமே முயற்சி  செய்ய தேவ் கிடைச்சான் வேற ஒன்னும் தோனல உடனே அவனுக்கு கடவுச்சொல்லை சொல்லி யொத்தாவ வெளியே எடுத்து உன் வீட்டுக்கு வர சொல்லிட்டு நானும் அங்க போனேன். என்ன இந்த ப்ரியா போக விடவே இல்ல ப்ரியாவையும்  கூட்டிட்டு போனா அங்க நெறய தடியனுங்க வேற. தடியன்கள எப்படி சமாளிக்கிறதென்று  வண்டிய கொஞ்சம் தள்ளியே நிறுத்தி நோட்டம் விட்டோம் எப்படி உள்ள போறதுன்னு யோசிக்கும் போது தான் அங்க குடியிருக்கிற வயசான ஜோடி  எங்களை பாத்து ஏன் இங்க நிக்கிறீங்க யாரோ வி ஐ பி எல்லா வீட்டையும் வாங்கிட்டாங்களாம் அதான் சிகியூரிட்டி டைட் பண்ணி இருக்காங்க வண்டி ரிபயார் னு சொல்ல ப்ரியாவை வெளிய வச்சிட்டு நாங்க அரை மணித்தியாலத்தில் வெளியே வரல்லனா போலீசுக்கு போன் பண்ண சொல்லிட்டு அவங்க கூடவே அவங்க வண்டில வந்ததால உள்ள விட்டான்னுங்க. படையப்பா நீலாம்பரிமாதி என்ட்ரி கொடுத்தேன்ல” ஸ்டைலா லஷ்மி அம்மா சொல்ல

“சரவணன் சார் விட்ட ஜொல்லுல நாங்க நீச்சலடிச்சிதான் ஹாஸ்பிடல் வந்தோம்” சந்துரு கிண்டலடிக்க இந்த சௌமியா பொண்ணு உண்மைய சொல்லி உங்கம்மாவை ஏத்தி விடலனா உங்கள எல்லாம் காப்பாத்தி இருக்க முடியாது” லட்சுமி அம்மா சௌமியாவின் அழுகையை நியாபகப் படுத்த அவளை வார ஆரம்பித்தான் சந்துரு.

இவர்கள் பேசியதை கேட்டவாறே உள்ளே வந்த சரவணன் சார் “லட்சு எவ்வளவு பெரிய குடும்ப ரகசியத்தை மனசுல வச்சிருந்தியே! என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல” “எதுக்கு ஷரப் கிட்ட ஆடு மாதிரி தானா போய் தலையை கொடுக்கவா” அவரை ஆடு என்றதும் மற்றவர்கள் சிரிக்க அவர்களை முறைத்தவர் “என் புருஷன நா என்ன வேணாலும் சொல்வேன்” என்ற பார்வையோடு “நானே நேர்ல போய் கொடுத்திருப்பேன் ஷரப் ரொம்ப கொடூரமானவன் என்று விசாரிச்சதுல தெரிஞ்சிகிட்டேன். அந்த ஆசையா விட்டுட்டேன். இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி என்ன பண்ணுறது என்றவாறு சைதன்யனை பார்த்தார். அவன் கண்கள் சொல்வதென்ன?  

 

இங்கு மீராவோ சைதனயனின் நினைவுகளில் கரைந்துகொண்டு அவன் பேசியதை மறக்கவும் முடியாமல் அவனையே மீண்டும் காதலித்து மணம் புரிந்து அவனின் குழந்தையை சுமப்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.