அத்தியாயம் 27

 

மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து , அனுபவித்து  வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை மாலை தாய் தந்தையை அழைத்து பேசி விடுகிறான்.

 

மீரா ப்ரியா விஷயத்தில் கோவம் கொண்டு வது அத்தையை திட்டினாலும் அவரின்  மனம் புண்படும் படியான ஒரு வார்த்தையையும் உபயோகிக்க மாட்டாள். அவருடன் கோபம் கொண்டு ஒரு நாளைக்கு மேல் அவருடன் பேசாமல் இருந்ததுமில்லை. எல்லாம் ஒரு நாளிலேயே முடித்துக் கொள்வாள். சூரியன் உதித்த உடன் புது நாள் புது ஆரம்பம் என நேற்று  நடந்த சண்டையை மறந்து இயல்பாகி விடுவாள்.

 

சைதன்யனின் நியாபகம் வந்திருக்கா விட்டாலும் அவளை சந்தித்த அன்றிலிருந்து பாசத்தை மட்டும் காட்டும் லட்சுமி அம்மாவின் மனம் நோகும் படி கல்யாணம்  அன்று எந்தக் கேள்வியும் கேக்காது எல்லா சடங்குகளையும் செய்திருந்திருப்பாள்.

சரவணன் சார் கேட்டுக் கொண்டதற்காக சைதன்யன் தனஞ்சயனா இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவள். சூழ்நிலையில் மாட்டி கொண்டிருக்கும் லட்சுமி அம்மாவை நினைத்து மிகவும் வருந்தினாள்.

 

சௌமியா சொல்வதை போல் சைதன்யன் நேரடியாக தான் தனஞ்சயன் என்றோ, அநாதை என்றோ கூறவில்லை எல்லாம் சந்துருவின் வாய் மொழியாக  இருந்தாலும் சைதன்யன் எதையும் மறுக்கவுமில்லை. ‘சரி ஆபீஸ் ல ஏதாவது தில்லு முல்ல கண்டு பிடிக்கணும் ஓகே ஏன் என் கிட்ட மட்டும் மறைக்கிறாங்க.’

 

“ஏய் கியூடிப்பை எந்திரிடி தூங்கு மூஞ்சி” மீரா கண்விழித்த போது சைதன்யன் அவளை அணைத்த வாறு தூங்கிக்கொண்டிருந்தான். அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின்  என்ன ஓட்டத்தை அவனின் குரல் தடுத்து நிறுத்தியது.

 

“ம்ம் காபி கொடுங்க சையு” மேலும் அவனை அணைத்தவாறே “கிட்சன் அந்த பக்கம் டி போய் காபி போட்டு கொண்டு வா” “என்னது நானா?  காப்பியா?  காபி என்ன கலர்னு மட்டும் தான் சையு எனக்கு தெரியும் ப்ளீஸ் நீங்களே போடுங்க” அவளின் நெற்றியில் முட்டியவன் “ஓகே பொண்டாட்டி” என்றவாறே எழ அவளும் குளியலறையில் புகுந்தவாறே “அப்படியே ப்ரேக்பாஸ்ட்டும் பண்ணிடுங்க எனக்கு எதுனாலும் ஓகே” எனக்கூற அவளை அதிர்ச்சியாக திரும்பிப்  பார்த்தான் சைதன்யன்.

 

குளித்து விட்டு  ஜன்னல் பக்கமாக தோட்டத்தை பார்த்தவாறே தலை துவட்டியவள் காபியோடு பிரட் டோஸ் பண்ணி எடுத்து வந்தவனை திரும்பி பார்த்து  “என்ன சையு இது இட்லி, தோசை ஏதும் இல்லையா? பிரிஜ்ஜில் இட்லிமா வச்சதாக லக்ஸ் அத்த சொன்னாங்களே!” தன் பாட்டுக்கு தலையை துவட்டியவாறே பேசுபவளை வெற்றுப் பார்வை  பார்த்தான் சைதன்யன்.

 

“சரி பரவால்ல விடுங்க லஞ்ச் என்ன செய்ய போறீங்க” என்றவாறே காபியை அருந்த “என்னது லன்ச்சா?” அலறியே விட்டான்.  அவனின் அலறலில் தனக்குள் புன்னகைத்தவள் வந்த சிரிப்பை காபி மக்கில் செலுத்தி “எனக்கு சமைக்க தெரியாதுப்பா!” கண்ணை உருட்டியவாறே “நீங்க அனாதை இல்லத்தில்  பல குழந்தையோடு குழந்தையா வளந்தவரு  எல்லா வேலையும் கத்து கிட்டு இருந்தீப்பீங்க. தனியா வந்த பிறகு சமைச்சு தானே சாப்டீங்க?  டெய்லி கடையிலயா சாப்பிடமுடியும்? கட்டுப்படியாகுமா?”

ஏதோ எனக்கு ஒண்ணுமே தெரியல நீ தான் எல்லா வேலையையும் பார்த்தாகணும் என்பதை போல்  பல முகபாவங்களுடன் ஏற்ற இறக்கத்தொடு மீரா சொல்ல நிதர்சனம் உணர்ந்தான் சைதன்யன்.

 

எப்பேர் பட்ட பரம்பரை அவனுடையது பான் வித் சில்வர் ஸ்பூன் னு சொல்ல கூடாது பிளாட்டினம்னு சொல்லணும். அவன் சின்ன வயசுல எதுக்குமே அழுதான் என்றால் கிடையவே கிடையாது. கேட்டது உடனே கிடைக்கும். அவன் பாரினில் இருந்தப்பகூட தனி வீடெடுத்து தங்கி இருந்தவன். எல்லா வேலைகளுக்கும் தனித்தனியாக வேலையாட்களை நியமித்திருந்தான்.

அவனை போய் சமையல் செய் துணி துவைனா என்ன மாதிரி ரியாக்சன் கொடுப்பது என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது.

 

அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என ஊகித்தவள். “ஏதோ உங்க லிட்டில் பாஸ் சைதன்யன் சௌதகர் உயிரை நீங்க காப்பாத்த போக லக்ஸ் அத்த இவ்வளவும் செய்றாங்க உங்க பாஸ் அவர் வீட்டுல தங்க இடம் கொடுத்திருக்காங்க ஆனாலும் எந்நாளும் இங்க இருக்க முடியாதில்ல. என்ன கல்யாணத்து அப்பொறம் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு வது அத்தையும் லக்ஸ் அத்தையும் சொல்றாங்க உங்க சம்பளத்துல தான் எல்லாம் பண்ணனும். வீடு கட்டணும் நிறைய குழந்தைகளை பெத்துக்கணும் நெறய செலவிருக்கே சையு சமையலுக்கு ஆள் வச்சா நாங்க மிச்சம் வக்கிரதெப்படி. எல்லா வேலையும் நாங்களே தான் பாக்கணும். என்று அவன் தலையில் பாமை தூக்கிப் போட்டாள்.

 

ஒரு பொய் சொல்ல போய் ஹனுமார் வால் போல் நீண்டு அவன் கழுத்தை நெறிப்பது போலவே உணர்ந்தான் சைதன்யன். அவள் பேச்சாலேயே எல்லா வழிகளையும் அடைத்து விட விழி பிதுங்கி நின்றான். மீரா தனக்கு சமைக்க தெரியாதென்றும் எல்லா வேலையையும் நாங்களே பார்க்க வேண்டும் என சொல்லியதே சைதன்யன் அப்பொழுதாவது  அவளிடம் உண்மையை சொல்வான் என்று அவனோ உண்மையை அறிந்தால் அவளின் நிலை என்னவாகும் என அஞ்சியவன் பெவிகால் போட்டு ஒட்டியதை போல் வாயை இருக்க மூடி நின்றான்.

 

அவள் சைதன்யனை பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் அவளை அடக்க, திசை திருப்ப அவன் ஒரு வழியை கண்டறிந்தான். அந்த வழியை நேரம் காலம் பாக்காது கையாண்டான்.

 

“சையு ஜி” “என்னது ஜி யா?” “எஸ் ஜி ராஜஸ்தான்ல புருஷன ஓ….ஜி, ஏஜி, சுனியேஜி இப்படி தானே கூப்டு வாங்க” அவள் சொன்ன விதம் சிரிப்பை மூட்ட அவள் எங்க சுத்தி எங்க வர போறாள் என அறியாதவன் அவளின் கையை பிடித்து இழுத்து மடியில் அமர்த்தி கூந்தலில் வாசம் பிடித்த வாறே ம்ம்.. நல்லா தான் இருக்கு உன் இஷ்டம் போல கூப்டு” மாட்டினியா என்று மனதில் நினைத்தவள் ” நீங்க என்ன ராஜஸ்தான் பரம்பரை வாரிசா” கிண்டல் போல் சொல்லி உடனே

 

“ஆமா உங்க பாஸ் ஓட பையன் அதான் நீங்க உசுர காப்பாத்தீ பாரின் அனுப்பி வச்சீங்களே உங்க நண்பன் சைதன்யன் சௌதாகர் அவரு இந்தியா வரமாட்டாரா?  நம்ம கல்யாணத்துக்கும் வரல” சோகமான குரலில் கூறி உடனே “ஆமா அவர் உயிரை நீங்க எப்போ? எப்படி? காப்பாத்துனீங்க ”   ஆச்சரியமாக கேப்பது போல் கண்ணை அகல விரித்து அவன் புறம் திரும்ப என்ன சொல்வதென்று ஒரு கணமேனும் யோசிக்காமல் அவளின் இதழை சிறைபிடித்து மேலும் அவளை பேச விடாது தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவளை ஆழத்  தொடங்கினான்

 

நாட்கள் அதன் போக்கில் செல்ல சைதன்யன் ஒரு நல்ல குடும்பத்தலைவனாக மாறினான். அவன் சமையல் செய்கிறேன் என யு டியூபின் உதவியோடு  சமையல் அறையில் கையை சுட்டுக்கொண்டதும்,  வெட்டிக்கொண்டதும் தான் நடந்தது அவனின் நிலையை கண்டு மீரா உள்ளுக்குள் உருகினாலும் வெளியே தனக்கு எதுவும் தெரியாதென்றே காட்டிக்கொண்டவள் அவனுக்கு சிறிய சிறிய உதவிகளை செய்தாள்.

 

காய் கறிகளை வெட்டிக் கொடுப்பதும்,  துணி துவைப்பதிலும்,  ஷாப்பிங் செல்வத்திலும் கூடவே இருந்தாள். மொத்தத்தில் தங்களது வேலைகளை தாங்களே பார்த்துக் கொண்டனர்.  துணி துவைக்க துவைக்கும் இயந்திரம் இருக்க ஈ.பி  யை கட்டுப்படுத்த என நிறையா மின்சார பொருட்களை பாவிப்பதை நிறுத்தி இருந்தாள்.

 

என்ன செய்து பார்த்தும் சைதன்யனின் வாயிலிருந்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியவில்லை மாறாக அவன் நடுத்தர வர்க்கத்தினர் போல்  வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டான்.  தேவ் நினைத்தது போல் இருவரின் தனிமை  புரிதலையும், காதலையும் அதிகப் படுத்தியதோ?

 

அவன் உண்மையை சொல்ல வில்லை என்பதை தவிர இருவருக்கிடையில் காதலிலும் கூடலிலும் எந்த  குறையோ தடங்களோ வரவே இல்லை. மாறாக அவனின் பால் அவளின் காதல் பெருகியது என்றே சொல்லலாம்.

 

“டி கியூடிப்பை பொண்டாட்டி ஹனி மூன் எங்க போலாம்” உலகத்தின் எந்த மூலைக்கும் அழைத்து செல்ல வசதி படைத்தவன் கேட்க ” நாங்க இருக்கும் வீடும் சரி இடமும் சரி ஹனி மூன் வந்த மாதிரி தான் சையு இருக்கு எங்கும் போக வேண்டியதில்லை” என  சிரிக்க அவள் வெகுளியாக சிரிப்பதா அர்த்தம் கொண்டான். அவனின் அருகாமையில் எல்லாவற்றையும் மறப்பவள் அவனின் காதலை உணர்ந்தாலும் அவனை புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடினாள்.

.

லட்சுமி அம்மா அடிக்கடி வந்து சென்றாலும் அவரிடம் எதுவும் கேட்டு அவரை சங்கடப்படுத்த தோன்றவில்லை. புதுமண தம்பதியரை தொந்தரவு பண்ண கூடாதென மற்றவர்கள் சைதன்யனின் வீட்டுக்கு செல்ல வில்லை. தேவ் மேல் சிறு கோபம் வேறு இருக்க மீரா அவள் வீட்டுக்கு அதிகம் செல்ல வில்லை போனில் பேச்சை முடித்துக் கொள்வாள். வேலைக்கும் போகாததால் எந்தநாளும் ஆபீசில் நடப்பவற்றை சௌமியா மூலம் அறிந்துக் கொண்டாள்.

 

இன்னைக்கி எப்படியாவது அவன் வாயிலிருந்து உண்மையை வெளிக் கொண்டு வந்தே ஆகனும் என்ற பிடிவாதத்துடன் மாலையில் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திலுள்ள ஒரு மரநிழலில் போடப்பட்ட அலங்கார இருக்கையில் அமர்ந்தவள் கையேடு அவன் போனை எடுத்து வந்தானா என நோட்டம் விட்ட வாறே கப்பில் டீயை ஊற்றி அவனிடம் கொடுத்து மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

 

“ஏன் சையு உங்க பாரின் பிரெண்டு போனாச்சும் பண்ணுவாரா போன் போட்டு தாங்க நா பேசனும் “மீரா நினைத்தது தோட்டத்தில் இருந்தால் அத்து மீற மாட்டான் உண்மையை சொல்லியே ஆகணும் என்று  “யாரை பத்தி கேக்குற” உசாராக கையிலிருந்த கப்பை கீழே வைத்தான் “அதான் நம்ம வருங்….” “ஸ்ரீ அங்க பாரேன் பட்டர்பிளை” என அவள் பேச்சில் குறுக்கிட்டவன் அவள் கையிலிருந்த கப்பையும் கீழே வைத்து அவளை இழுத்து சென்றான்.

 

அங்கே எந்த பட்டர்பிளையையும் காணாது அவனை முறைக்க அவளை அவன் அழைத்து வந்த இடம் கொஞ்சம் மறைவானதாக இருக்க அவளை எதுவும் பேசவிடாது அவளின் இதழை சிறை பிடிக்க அவனுள் தொலைந்து கொண்டிருந்தவள் மேலும் முன்னேற அவளை இழுத்து தன்னை விட்டு வலுக்கட்டாயமாக பிரித்தவன் “ஸ்ரீ ஸ்ரீ நாம கார்டன் ல இருக்கோம்” என அவளை உலுக்க “ஐ நீட் யு சையு ஐ நீட் யு ரைட் நவ்” என ஈனசுரத்தில் முனங்க “வாவ்”என புருவம்  உயர்த்த அதில் மேலும் மயங்கி அவன் கழுத்தில் மலையக கையை கோர்த்தவள் அவனை முத்தமிட ஆரம்பிக்க அவளை தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றான் சைதன்யன்.

 

கூடல் முடிந்து தனது நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவாறே “கியூட்டிபாய் நீ ரொம்…..ப ஆக்ட்டிவ், செம்ம்ம்…..ம எனர்ஜி  டி ” என அவளை முத்தமிட்டு அவன் பால் இறுக்கிக் கொண்டு  மீண்டும் அணைக்க அவள் புறத்திலிருந்து விசும்பல் ஒலியே வந்தது. அவள் எதற்க்காக அழுகிறாள் என புரியாதவன் அடித்துப் பிடித்து எழ அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி யடைந்தான்.

 

வெகு நாளாய் ராஜஸ்தானை புரட்டிப் போட்டு தெடிக் கொண்டிருந்த ‘வாள்’ தமிழ் நாட்டிலிருப்பதை கண்டறிந்த ‘அவன்’ தமிழ் நாட்டை நோக்கி புறப்பட்டான்.