அத்தியாயம் 26

 

காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர்.

அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து.

ஒரே மதில் சுவருக்குள் கட்டப்பட்ட பத்து வீடுகள் கிட்டத்தட்ட ரிசார்ட் மாதிரி எல்லா வசதிகளுடனும் பணத்தின் செழுமை ஓங்கி ஒளித்திருந்தது.

ஒவ்வொரு வீடும் வெளிப்புறம் வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்க உட்சுவர்கள்  ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு நிறமென இருந்தது. இந்த வீடெல்லாம் சென்னையிலா இருக்கு எனும் விதமாக கட்டப்பட்டிருந்தது.   ஸ்விமிங் பூல் ஒவ்வொரு வீட்டையும் இணைத்து அமைக்கப்பட்டிருந்தது.  

 

பூமரங்கள் பாதை ஓரத்திலும் வீடுகளிலும் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்க.

கனி தரும் மரங்களிலும் { பழங்களிலும் }உயர்வானது என சொல்லப்படும் பழ மரங்கள் மாத்திரம் நாட்டப்பட்டு இருந்தது.

அந்தந்த வீட்டு வாகனம் நிறுத்த தனி இடம் இருக்க காவலாளிகள், தோட்டத்தை பராமரிக்க வென இரண்டு  பேர் இருந்தனர்.

பத்து வீடுகளிலும் நான்கு வீடுகளிலேயே ஆட்கள் குடியிருந்தனர் ஆறு வீடு பூட்டி இருக்க குடி இருக்கும் நான்கு வீடுகளிலும் இரண்டு வீட்டில் வார இறுதியில் மாத்திரம் உரிமையாளர்கள் வந்து செல்கின்றனர். ஒரு வீட்டில் சைதன்யன் இருக்க மறு வீட்டில் ஒரு வயதான தம்பதியினர் வசிக்கின்றனர்.

 

“பீச் ரிசார்ட் பாத்திருக்கேன் இப்படி ஒன்ன பாத்ததே இல்ல” என சௌமியா வாயை பிளக்க மீராவோ யாருக்கு வந்த விருந்தோ என அமைதியாய் இருக்க அவளுடைய அமைதி தேவ்வை யோசிக்க வைத்தது.

 

ஒன்பது  வீடுகளிலும் கதவில் அவ்வீட்டு உரிமையாளரின் பெயர் இருக்க சைதன்யனின் வீட்டு கதவு மாத்திரம் வெறுமையாய்……. கூர்ந்து கவனித்த மீராவுக்கோ பெயர் பலகை நீக்கப்பட்டதுக்கான அறிகுறி தெரியவே புன்னகைத்தவாறே உள்ளே சென்றாள்.

 

இது வீடா ஹோட்டல் ரூமா’ எனும் விதமாக படுக்கையறை இருக்க நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனும் விதமாக சமையலறையும், குளியலறையும் வரவேற்றப்பரையும் இருந்தது. வரவேற்பறையிலேயே பூஜையறை சிறியதாய் இருந்தது. சிவப்பு நிறத்தில் உட்சுவர்கள் நிறம் பூசப்பட்டிருந்தது.

மொத்தத்தில் மீராவின் வீட்டை விட பாதியளவில் இருந்த வீடு சரவணன் சாரின் மினி அரண்மனையை விட பணத்தால் குளித்திருந்தது.

 

” மீரா……. அண்ணா கூட கோவிச்சாலும் ஒரே ரூம்லதான் இருக்கணும், சண்டை போட்டாலும் தனியா தூங்க கூடாதுன்னு ஒரே ஒரு ரூமா கட்டி வச்சிருங்காங்க” சௌமியா கண்ணடித்த வாறே சொல்ல மீராவின் சிந்தனையோ வேறாக இருந்தது.

 

“என்னை ஏமாற்ற வேண்டும் என நினைத்திருந்தால் கண்டிப்பாய் சைதன்யன் இந்த வீட்டுக்கு அழைத்து வந்திருக்க மாட்டார்.” பார்த்தாலே தெரியுது வீட்டின் செழுமை. மீராவின் அமைதியால் யாரும் அவளுக்கு வீட்டை பற்றிய விளக்கம் கொடுக்க வில்லை. வீட்டை பற்றி கேட்டு அவர்கள் பொய் சொல்லும் நிலைமையை ஏற்படுத்த அவள் விரும்பவுமில்லை. “நான் சையுவ  காதலிக்கிறேன் அது மட்டும் என் நினைவில் இருந்தாள் போதும்” என்ற மனநிலையில் இருந்தாள் மீரா.

 

ஆண்கள் அனைவரும் வாசலில் இருக்க லட்சுமி அம்மா, ப்ரியா, சரஸ்வதி அம்மா சமையல் வேளையில் இருக்க சௌமியாவும் மீராவும் படுக்கையறையில் தீவிர சிந்தனையில் இருக்க வினுக்குட்டி அங்கும் இங்கும் என ஓடியவாறே இருந்தாள்.

 

நேற்று இரவு ரிசப்ஷன் முடிந்து மீராவின் வீட்டு போனபோது சைதன்யனுக்கு தேவ்வுடன் பேச வேண்டி இருந்தது.அவளின் உடல் மற்றும் மனநிலை பற்றி இன்னைக்கு எந்த சடங்கும் வேண்டாம் என் வீட்டிலேயே எல்லாம் வைத்துக்கொள்ளலாம் என தேவிடம் கூறி இருந்ததால் அவனிடம் பேசி விட்டு வரும் போது மீரா தூங்கி இருந்தாள்.

கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் இரண்டு நாளாக ஓயாத அலைச்சல் அவளின் நிலை என கருத்தில் கொண்டவன் அவளை சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவன் அணைத்தவாறே தூங்கிப்போனான்.

 

இந்த வீடு சைதன்யனின் பெயரிலேயே சரவணன் சார் முன் பணம் கொடுத்திருக்க மிகுதியை  அவன் பாரினில் இருந்த பொது சம்பாதித்த பணத்தை கொடுத்து கட்டியிருந்தான். என் காதலி, என் மனைவி.எங்க வாழ்க்கை எங்கள் வீட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை.

மீரா வீட்டை பார்த்து விட்டு என்ன சொல்லுவாளோ என இருந்தவனுக்கு அவள் அமைதி நிம்மதியை தந்தது.

 

லட்சுமி அம்மாவுக்கு மீரா தன்  மருமகளாக தங்கள் வீட்டுக்கு வராதது கவலையாக இருந்தாலும் தன் மகனுடன் அவள் வாழப்போகும் இல்லற வாழ்க்கை சுபிட்சமாக விளங்க எல்லா பூஜைகளையும் செய்தவர் கல்யாணத்தையும் தங்கள் குடும்ப முறை படி நடத்தி விட்டார்.

சரவணன் சார் முறைத்தாலும் மீரா என்ன கேள்வி கேட்டாலும் அவளை சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு மீரா எந்த கேள்வியும் கேக்காது அவர் சொல்வதெல்லாம் செய்தவளை ரொம்பவும் பிடித்தது. அந்த நம்பிக்கையில் எல்லா சடங்குகளையும் சரியாகவே பண்ணி விட்டார்.

 

இதோ இன்று பால் காச்சி புது வீட்டில் மணமக்களை குடியமர்த்தினார்.

சரஸ்வதி அம்மாவுக்கோ மீராவின் வாழ்க்கை சந்தோசமாகவும் நல்ல குடும்பத்தில் அமைந்ததை எண்ணி நிம்மதி அடைந்தார்.

 

“இரவு சாப்பாடு சாப்டுடு  தான் போறோம்” என தேவ் சைதன்யனை வெறுப்பேத்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே மீராவை அவன் கண்ணில் காட்டவில்லை. சமயலறையில் அவள் இல்லை படுக்கை அறையில் இருப்பதை கண்டவன்  “வாஷ் ரூம் போகணும்” னு அடிக்கடி அறைப்பக்கம் செல்ல சௌமியா அவளை இழுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தாள்.

 

வெளியே வந்தவர்கள் வெளிப்பக்கமாக ஏதோ ஒரு அறை இருப்பதை காண என்னவென்று பார்த்தவர்களுக்கு  அது ஸ்டோர் என புரிந்தது பெயிண்ட் டப்பாக்கள் நிறைந்து காணப்பட்டது.

அப்பக்கம் வந்த ஒரு காவலாளி “நாளைக்கு சுத்தம் செய்யும்  ஆட்கள் வருவங்கம்மா” என்றவாறு நகர அங்கே கிடந்த பலகையில் பார்வைவை செலுத்தியவள் அதை கையில் தூக்கிக் கொண்டு வாசல் வழியாக வர

அவள் கையிலுள்ள ‘சைதன்யன் சௌதகர்’ என்ற பெயர்  பலகையை கண்டு அனைவரும் ஸ்தம்பித்து எழுந்து நின்றனர்.  மீரா என்ன கேக்க போறாளோ என அனைவரும் கலங்க சந்துரு தான் முன்னாடி வந்தான். “இன்னும் என்ன புழுகப் போறானோ”  என சௌமியா மீராவின் காதை கடிக்க சந்துரு பேச முன்னாடி முந்திக்கொண்டு அவன் கூறுவது போல

 

“இது சைதன்யன் சார் வீடு  தான் சின்ன வயசுல இருந்தே ரெண்டு பெரும் திக் பிரெண்ட்ஸ் அவர் உயிரை இவன் {சைதன்யனை விரல் நீட்டி  காட்டிய வாறே} காப்பாத்தியதால் இந்த வீட்டுல தங்க சொல்லி இருக்கார்.  தனு மறுத்தாலும் லட்சுமி அம்மாவும் சரவணன் சாரும் வற்புறுத்தி இங்க தங்க வச்சிட்டாங்க அப்படி தங்கலனா நம்ம பிரெண்ட்ஷிப முடிச்சிக்க வேண்டியது தான் என சைதன்யன் சார் சொல்லி இருக்காரு” அப்படி தானே த்ரூ அண்ணா என கிண்டல் குரலை முயற்சி செய்து அடக்கி {யாராச்சும் சோடா கொடுங்க பா}  என்ன நா தான் அவரை இன்னுமே பார்க்கல கல்யாணத்துக்கும் வரல என்ன திக் பிரெண்ட்ஷிப்ப்போ’ சொல்லி முடித்தவள்  கையேடு கொண்டு வந்த பெயர் பலகையை மாட்டி விட்டே அகன்றாள்.

 

அனைவரும் அவள் சொல்வதை என்னடா இது புதுக் கத என பார்க்க சைதன்யன் மானசீகமாக தலையில் கை வைத்துக் கொள்ள   சந்துரு முழி பிதுங்கி “வா……ட் அ ப்ரோபோமன்ஸ்” என வியக்க  தேவ் சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடினான்.

 

மீரா சந்துரு சொன்னது போல் சொல்லி அனைவரையும் சிரிப்பு மூட்டியவள் சைதன்யனை “நீங்க எப்போ உண்மையா சொல்ல போறீங்க” என்ற பார்வையை வீசிய வாறே உள்ளே சென்றாள்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ‘உண்மையை சொன்னால் மீராவின் நிலை என்னவாகும் என அஞ்சி சொல்லாமல் இருந்தது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கு’ சரவணன் சார் பெருமூச்சு விட எல்லாம் சந்துருவின் செயல் என அவனை கொலை வெறியில் முறைத்தான் சைதன்யன்.

 

“மீ பாவம்டா உன் ஐடென்ட்டி வெளிய தெரியாம இருக்க சில பல பொய்கள் சொல்ல நேர்ந்தது பெயர் பலகையைய நா தான் ஸ்டோர் ரூமில போட்டேன்   ” என கூலாக சொல்ல. “தம்பி இவன அந்த பெயர் பலகையாலேயே அடிச்சி கொன்னுடுங்க. இவனே போய் முட்டிகிட்டு செத்ததா நா சாட்சி சொல்லுறேன்” நேசமணி இப்படியொரு புள்ளய பெத்துட்டேனே என்றவாறே ரிஎக்ஸன் கொடுக்க “நா என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன்” என்ற பார்வைதான் சந்துருவிடம்.

சரவணன் சருக்குமே இவர்களின் பேச்சில் சிரிப்பு வர “சந்துரு மீரா கிட்ட உண்மையா சொன்னா சைதன்யன் உயிரை அவனே எப்படி காப்பாத்தினான் னு உன்ன தான் கேப்பா அப்போ பதில் சொல்லு” என தேவ் சொல்ல மண்டையில் பல்ப் எரிஞ்ச விதமா ரிஎக்ஸன் தந்து யோசித்தான்.

 

ஒருவாறு இரவும் வர ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்ட பின் கிளம்ப அவர்களை வழியனுப்பினார் புது மண தம்பதியினர்.

போகும்  போதும் மீராவை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து விட்டு சென்றார் லட்சுமி அம்மா.

 

சமயலறையில் செய்ய ஒன்றுமே இல்லாது எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு சென்றிருந்தனர். சமயலறையில் தஞ்சம் புகுந்தவளுக்கோ தான் உயிருக்குயிராய் காதலித்தவன் எனக்கே எனக்காக என்ற சந்தோச பூரிப்பு முகத்தில் இருந்தாலும்  மீராவின் மனமோ ‘திக் திக்’ என அடிக்க ஆரம்பித்தது. சைதன்யனை மீண்டும்  சந்தித்தது, கல்யாணம் எல்லாமே அவசரமாக நடந்து  முடிந்ததை போல் ஒரு தோற்றம்.

 

வாழ்க்கையையும் ‘அவசரமாக ஆரம்பிக்க வேண்டுமா?’ என ஒரு மனமும் ‘அதில் என்ன தவறு நீ தானே ஆறு வருசமா லவ் பண்ணுற’ என இன்னொரு மனமும் சண்டை போடா

‘என்னது ஆறு வருசமாவா? ஹிஹிஹி ஐஞ்சு வருசமா அவன் யார் என்றே தெரியாம நீ அவன மறந்து இருந்துட்டா’  இருமனமாய் மனதோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்தவளை “ஸ்ரீ கிச்சன்ல இன்னும் என்ன பண்ணி கிட்டு இருக்க” சைதன்யனின் குரலில் சுயநினைவுக்கு வந்தவள் என்ன சொல்வதென்று யோசித்தவள் “பா……..ல்  பால் எடுத்து வரேன் இருங்க” என்றால் ஒருவாறு சமாளித்து அவள் பால் டம்ளரோடு வரும் போது

 

அவன் டிவி ரிமோட்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனிடம் டம்ளரை நீட்டியவள் திரும்ப உள்ளே போக “உனக்கு”   “ஆ….” எடுத்து கொண்டு வரேன்” அவன் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை.

 

அவனுக்கும் கொஞ்சம் பதட்டமாக இருந்தது.  யாருமில்லாத தனிமை காதலி மனைவியாக. அவள் சமயலறையில் தஞ்சம் புக அவளை இயல்பு நிலைக்கு கொடு வரவே அவளை அழைத்தான். பால் கொண்டுவந்தவளின் முகத்தை கூட பார்க்காமல் டிவி இல் என்ன போகுதுனும் பார்க்காம சேனலை மாற்றியவாறே இருக்க பால் டம்ளரோடு வந்தவள் அவன் அருகில் கொஞ்சம் இடம் விட்டு அமர அவளைப்பார்த்து புன்னகைத்தவன்.

 

என்ன பேசுவது எப்படி ஆரம்பிக்கலாம் என யோசித்தவாறே இருவரும் பாலை மிடறு மிடராக அருந்திமுடிக்க,  அவனின் டம்ளருக்கு கையை நீட்டினாள் மீரா  அவள் கையை பிடித்தவாறே எழுந்து குறும்புப் புன்னகையுடன் அவன் கையை இழுக்க அவளோ  கையை உருவ முயற்சித்தவள் திக்கித்திணறி “டம்ளர்” சத்தம் வெளியே வரவே இல்லை.

 

அவளை இழுத்து அணைத்தவன்  “லவ் யு ஸ்ரீ” அவள் மேனி நடுங்குவதை உணர்ந்தவன் அவளை விட்டகன்று “பதட்டப்படாம போய் தூங்கு” அவள் ட்ரம்லருடன் அகன்றதும் “உப்ப்ப்” என வேகா மூ ச்சை வாயால் வெளியிட்டவன் டிவி யை அணைத்து அறைக்கு வர அங்கே?

என்ன தான் காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் போனில் அதிக நேரம் பேசினாலும் தனிமையில் நேரில் சந்தித்த போது ஏதோ ஒரு தயக்கம் மீராவினுள்

பால் டம்ளருட ஓடாத குறையாக சமையலறையை அடைந்தவள் அவனுக்கு முன் சென்று தூங்கி விடவேண்டும் என அவசர அவசரமாக டம்ளர்களை கழுவி விட்டு ஓடி அறைக்கு வந்த மீரா சைதன்யன் மேல் மோதி நின்றாள். அறையை கண்டவளுக்கு தலை கோதியவாறு நின்று கொண்டிருந்த சைதன்யன் “யார் பார்த்த வேலைனு நல்ல தெரியுது என் கூடவே தானே இருந்தானுங்க எப்ப பாத்தானுங்கனு தான் தெரியல ” என்று அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தவாறே கூற அவளுக்கும் புன்னகை கீற்றாக எட்டிப்பார்த்தது.

 

நம்ம சந்துருவும் தேவும் சேர்ந்து அறையை முதலிரவுக்காக அலங்கரித்து விட்டு சென்றிருந்தனர்.

 

“இப்போ எப்படி தூங்குறது” சைதன்யன் புருவம் துரத்தி யோசிக்க “அழகாக இருக்கு” மீரா இயல்பாக சொல்ல “அப்போ வேஸ்ட் பண்ண வேணாங்கிரியா கியூடிப்பை” குரலில் குறும்பா? தாபமா? பிரித்தறிய முடியவில்லை. அவனின் கியூட்டிபய் என்ற அழைப்பில் உள்ளுக்குள் உருகிக் கரைய  தயக்கம் நீங்க தாவி அவனை “சையு” என அழைத்த வாறே அணைத்திருந்தாள்.

 

எதிர் பாராத அவளின் அணைப்பில் கட்டுண்ட காதல் மனம் துடித்து பெருக்கெடுக்க தன்னை மறந்து அவளில் மூழ்கினான். அதன் பின் சைதன்யன் அவளை விடவே இல்லை. விடியும் வரை காதல் பாடம் நடத்தினான்.