Advertisement

                                                                                           அத்தியாயம் 22

“எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா” சரஸ்வதி அம்மா கொஞ்சம்  அதிகாரமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் கூற சௌமியாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.

 

காலையில் எழுந்த சௌமியா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் போகணும்னு சொல்ல “இன்னைக்கு நீ லீவு ஏற்கனவே ஆபீஸ்க்கு போன் பண்ணி சொல்லியாச்சு” மீரா கூலாக “குளிச்சிட்டு இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க ஒரு இடத்துக்கு போகணும்” உத்தரவு போட  

மீராவை ஆச்சரியமாக பார்த்த சௌமியா “எங்கடி போக போறோம் சைக்கஸ்ட்ரிக்ட் பாக்க” “பக்கத்து ரூமுக்கு போக எதுக்கு இந்த அலும்பு” சௌமியாவை முறைத்தவள் “பி சீரியஸ் கெட் ரெடி” என்று கண்ணாடி முன் நின்று தலையை வார “கேள்வி கேட்டா பதில் சொல்லணும் இங்கிலீஸ்ல பேசி வாயடைக்க கூடாது” சௌமியா கண்ணாடியிலுள்ள மீராவின் விம்பத்துக்கு பழிப்பு காட்டியவாறே குளியலறைக்குள் புகுந்தாள்.

 

அவள் வெளியே வரும் போது மீரா டீ சாப்பிட்ட வாறே ஏதோ பைல்களை புரட்டிக்கொண்டிருக்க அவள் அருகில் வந்தமர்ந்த சௌமியா தனக்கான டீயை பருகியவாறு “அப்படி என்னத்த பாக்குறா” என்று எட்டிப்பார்க்க மீராவை பழைய புதிய மருத்துவ அறிக்கைகள் “இத வச்சி என்ன செய்ய போற” “ம்ம் டாக்டர் கிட்ட காட்ட போறேன்” “உன் அத்தான் தான் ஏற்கனவே பாத்திருப்பாரே செகண்ட் ஒபினியனா?” “அப்படியும் சொல்லலாம் வீட்டுக்கு தெரியாம போறோம் வா சாப்டுட்டு கிளம்பலாம்”

 

அப்படி சாப்டுட்டு கிளம்பியவர்களை தான் சரஸ்வதி அம்மா நிக்கவச்சி கேள்வி கேட்டு கிட்டு இருந்தாங்க ” என்ன மீரா இந்த சௌமியா பொண்ணு இந்த முழி முழிக்குறா?”

“பியூட்டி பார்லர் போறோம் அத்த உங்க ஹை பீச் வாய்ஸ் கேட்டு பயந்துட்டா போல எப்படி அத்த இப்படி வாய்ஸ்லயே பயமுறுத்துறீங்க? வீட்ல தனியா இருக்கும் போது பழைய சினமா ஓவரா பாப்பீங்களோ?” அவரை கொஞ்சி தாஜா பண்ணி முத்தம் வைத்து சௌமியாவை இலுத்துக்கொண்டு   வெளியே வர

 

“தேவ் கிட்ட சொல்லி இருந்தா அவன் ஹாஸ்பிடல் போகும் போது விட்டுட்டு போய் இருப்பானே மா” ரவிக்குமார் மகளை அன்பாக பார்க்க “திடீர் பிளான் பா இந்த சௌமிய தான் நாலஞ்சு நாள்ல கல்யாணம் பண்ண போற பாலர் போலாம்  வா னு ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டா”

“அடிப்பாவி ஊமை தான் ஊரையே கெடும்கும்னு சொல்வாங்க இன்னைக்கு கண்ணாலேயே பாத்துட்டேன். அமுல் பேபி மாதிரி பேச வச்சிக்கிட்டு இந்த புளுகு புளுகுறா இந்த அங்கிள் ஆர்மில அப்பம் சுட்டாரா? இப்படி சிரிச்சிகிட்டே இவ சொல்றத நம்புறாரு” நீ எவ்வளவு பேசுவ,  சௌமி வெஸ்ட்டு டி  மீரா ஒரே பேச்சு ஒரே வீச்சு” மீராவின் மறுமுகத்தை பார்த்து அசந்து நிற்க,

 

“என்னடி வாய பொளந்துக்கிட்டு நிக்குற சீக்கிரம் வா டைம் ஆச்சு ரொம்ப நாளைக்கு அப்பொறம் என்   ஸ்கூட்டியை வெளிய எடுக்குறேன்” “என்னது ரொம்ப நாளா எடுக்கலயா?   சரியா ஓட்டுவியா இல்ல  நேராய் போய் ஹாஸ்பிடல்ல சேர்ந்துடனுமா?   இல்ல சுவர்க்க வாசல் தானா?” சௌமியா நெஞ்சில் கை  வைத்தவாறே கிண்டலடிக்க “ஹய்ய இதோடா ஏறு டி உனக்கு சுவாரகத்துக்கு போக போறான்னு கேரண்டி இருக்கா? அவ்வளவு புண்ணியம் சேர்த்து வச்சிருக்கியா? நீ பேசுற பேச்சுக்கே உன்ன நரகத்துலகூட இடம் இல்லனு சொல்லுவாங்க”  பதிலுக்கு அவளை வாற

 

“இன்னைக்கு ரொம்ப ஓவரா பேசுறாளே அமுல் பேபி” என பேச்சை மாற்றவென  சௌமியா “ஆமா தனுண்ணா  போன் பண்ணலயா?” “பண்ணாரே உன் கூட வெளிய போறேன்னு சொல்லிட்டேன் அவரும் த்ரூ அண்ணாவும்   வராதா சொன்னாரு”  இவ என்ன பண்ண பிளான் பண்ணி இருக்கா  என குழம்பியவாறே சௌமியா “என்னடி சொல்லுற நாங்க டாக்டர்கிட்ட போறேன்னு சொன்ன” “ஆமா சொன்னேன்” “இப்போ அவங்களையும் வர சொல்லி இருக்க” “நாங்க எங்க போறோம்னு நா சொல்லவே இல்லையே!” “போன் பண்ணுவாங்களே!” “என் போன மறந்து வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். உன் போன்ல சார்ஜ் இல்ல”

 

“என்னடி என்னென்னமோ சொல்லுற” “உன் மொபைல நீ குளிக்கும் போதே சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் திரும்பவும் ஆன் பண்ணலயே” மீரா பாதித்திருக்கும் வேலைகளை கண்டு அவளின் முதுகில் ரெண்டு அடி போட்டவாறே “ஹேய் நீ பக்கா கிரிமினல்  டி” என சிரிக்க  தோழிகள் இருவரும் பேசி சிரித்தவாறே அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

 

அது நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு பழைய வீடு. “யார் வீடு டி இது டாக்டர பாக்க இங்க வந்திருக்க” “வா சொல்லுறேன்” அழைப்பு  மணியை அழுத்தி காத்திருந்தவர்களை ஒரு வயதான அம்மா வந்து கதவை திறக்க அவரின் பழைய கால ஹேர் ஸ்டைல் ஐ கண்டு புருவம் உயர்த்தினாள் சௌமியா.

அப்பெண்மணி இவர்களை உள்ளே அழைத்து செல்ல “என்னடி இது பூத் பங்களா மாதிரி இருக்கு”சௌமியா பயந்தவாறே கண்ணை உருட்ட “இங்க உக்காருங்க டாக்டர் வருவாரு” என்ற வாறே அப்பெண்மணி அகல அவரை அந்த கால பேய் படங்களில் வரும் பேய் போல் கற்பனை பண்ணியவள் “ஐயோ அம்மா” என காத்த “என்னடி ஆச்சு” மீரா அவளை உலுக்க “ஹிஹிஹி அது வந்து……..அது வந்து……. அதோ வந்துட்டார். என டாக்டர் வருவதை கை காட்ட மீரா எழுந்து வணக்கம் வைத்தாள். பின்ன தான் கற்பனை பண்ணியதை சொன்னால் தோழி பேய் ஓட்டு ஓட்டுவாளே.

 

உட்காருமாறு கை காட்டியவர் கிட்டத்தட எழுபத்தி ஐந்து வயதுக்கும் மேற்பட்ட ப்ரொபெஸர் க்ரிஷ்ணமூர்த்தி மனநல,நரம்பியல்,மூளையதிர்ச்சி[concussion ], அம்னீஷியா, இன்னும் என்னவெல்லாம் இருக்கோ எல்லாவற்றிலும் கற்று தேர்ச்சி பெற்றவர். {அதாங்க கரச்சி குடிச்சிட்டாரு}

 

மீராவின் மருத்துவ அறிக்கையை திரும்பத்திரும்ப பார்த்தவர். “நடந்ததெல்லாம் மறக்குறது ஒரு வரம் மா” என்று சிரிக்க, இந்த வயசுலயும் பல்லு விழாம இருக்குனு தான் சௌமியாவின் ஆராய்ச்சியாக இருந்தது.

 

“உன்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் ஓகே யார் உன்ன பாக்குற டாக்டர்” “டாக்டர் தேவேந்திரன்” “ம்ம் நீ சொல்லுறத வச்சி பார்த்தா சைதன்யன பார்த்த பிற்பாடுதான் கனவு வர ஆரம்பிச்சிருச்சு எம் ஐ ரைட்” “ரைட்டு ரைட்டு” சௌமியா ராகம் இருக்க அவளை கிள்ளிய மீரா “ஆமா சார்”

 

“உனக்கு என்ன நடந்ததுன்னு நா சரியா தெரிஞ்சிக்க ஹிப்னோடிசம் பண்ணனும் உன் ரிப்போர்ட் எல்லாம் ஓகே இன்னைக்கே இப்பவேணாலும் பண்ணலாம் டாக்டர் தேவ் ஏன் பண்ணலன்னு புரியல பண்ணி இருந்தா நியாபகங்கள் எப்போவே வந்திருக்கும்.

 

துணுக்குற்றாள் மீரா “அப்போ வேத் அத்தான் எனக்கு பழைய நியாபகங்கள் வராம இருக்கணும்னு நினைக்கிறாரா?”

மீரா அறியாதது “சையு” அவளை தேடி வராததால்  ஒரு வேல அவன் மீராவின் காதலை அன்று ஏற்கவில்லையோ!  பழைய நியாபகங்கள் மீராவுக்கு வந்தால் மீண்டும் அவனை தேடி போய் விடுவாளோ! ஒரு வேல அவன் வேறொரு பெண்ணை காதலிப்பதாக இருந்தால் ஏன் கல்யாணம் கூட ஆகி இருந்தால் என்ற  தேவின் அச்சம் தான் முழுமையான வைத்தியத்துக்கு தடையாக இருந்தது.

 

சௌமியாவோ இவர்கள் பேசுவதை புரியாதவளாக அமர்ந்திருந்தாள்.அங்கு சைதன்யன் மீராவை போனில் அழைத்து அழைத்து பார்த்தவன் அது எடுக்கப்படாமல் போகவே மீராவின் வீட்டுக்கு வந்துவிட்டான் சந்துருவோடு  

 

“வாங்க மாப்புள உள்ள வாங்க நீங்களும் வாங்க தம்பி” ரவிக்குமார் உள்ளே அழைக்க அவரின் மீசையை கண்டு “இன்னும் மில்ட்டரிலேயே இருப்பதாக நினைப்பு” என சைதன்யனின் காதை கடிக்க

அவரின் முன் அவனை அடிக்க முடியாமல் முறைத்தவாறே “ஸ்ரீ……… போன் எடுக்கல”  “போன் எடுக்காததற்கு வீடு வரை வந்திருக்குறாரே” என்று ஆச்சரியமாக “அவ சௌமியா கூட பாலர் போய் இருக்கா மாப்புள” அவருக்கு தெரியாதே இவங்க  ஒன்னா சுத்த பிளான் பண்ணது. “இந்த எகோமியா வேற போன ஆப் பண்ணி வச்சிருக்கா” சந்துரு கடுப்பாய் முணுமுணுக்க

 

 “அப்போ நாங்க வரோம் மாமா” “இருங்க மாப்புள ஏதாச்சும் சாப்டுட்டு போங்க” அவர் கூறும் போதே சரஸ்வதி அம்மா வினுவை தூக்கிக்கொண்டு போட்டிக் பக்கமிருந்து வர அவள் கையில் மீராவின் போன். அதை பார்த்த சந்துரு “லிட்டில் பாஸ் சிஸ்டருக்கு அம்னீசியா மட்டுமில்லடா அடிக்கடி மறதியும் இருக்கு போல” அவன் சாதாரணமாக சொல்ல ரவிகுமாரினதும் சரஸ்வதி அம்மாவினதும் முகம் வேதனையை தத்தெடுத்தது.  

 

அவன் தலையில் கொட்டியவன் “உன் மியா என் மீராவ என்ன சொல்லி டென்ஷன் பண்ணி கூட்டிட்டு போனாலோ” என மீண்டும் கொட்ட வினு கைதட்டி சிரிக்க அவளை தூக்கி தட்டாமாலை சுற்றி “சந்துரு அங்கிள்ல இன்னும் ரெண்டு போடலாமா?” என அவனை விரட்ட “ஐயோ யாராச்சும் என்ன காப்பாத்துங்க” என்று சந்துரு ஓட ரவிக்குமாரின் முகத்தில் புன்னகை அரும்ப சரஸ்வதியின் முகத்தில் நிம்மதி.

 

“இப்போ நீங்க ஆழ்ந்த தூக்கத்துக்கு போக போறீங்க” “தூங்கத்தான் இங்க வந்தாளா” சௌமியா குறுக்கிட “பேசாம இருக்க முடியும்னா இரு இல்லாட்டி வெளிய இரு” ப்ரொபெஸர் கிருஷ்ணமூர்த்தி கண்ணாடியை சரிசெய்தவாரே கூற கப்சிப் என மௌனமானாள் சௌமியா.

 

“சொல்லுங்க இப்போ எங்க இருக்கீங்க” “காலேஜ் வாசலில் உள்ள போக போறேன்” மீரா தூக்கத்தில் கூறுவதாக சௌமியா நினைக்க “ம்ம் சொல்லுங்க உள்ள போனீங்களா?” ” ம்ம் நடந்துக்கிட்டே இருக்கேன் அங்க….அங்க அது சையு என் சையுவே தான் ஐ….என்னதான் கைகாட்டி கூப்பிட்டாரு.நா வே…….கமா  ஓடி போய்ட்டேன்.

 

“ஏய் பாப்லிமாஸ் உன் பேர் என்ன”

யார்டா இந்த மங்கூஸ் மண்டையன் மீரா கண்ணை உருட்டி அவனை முறைத்து விட்டு சைதன்யனை பார்த்தவாறே “ஸ்ரீ” என்று கூற “ஸ்ரீராமா? சாய்ராமா?” நவீன் பக்கத்தில் இருந்த கவிதாக்கு ஹைப்பை கொடுக்க “டேய் ஸ்ரீ கு ஸ்ரீராம் ஓகே சாய்ராம் எப்படிடா லூசு லூசு” மனதுக்குள் அர்ச்சித்தவாறே   “மீராஸ்ரீ” என்று சைதன்யனை பார்த்தவாறே சொன்னாள்.

 

சரி உனக்கு பாட தெரியுமா?? ஆட தெரியுமா??” நவீன் கேட்க மீரா மனதுக்குள் “நவீனா உன் பேர் வீன் வீணாப்போனவனே..

“மினி பூசணிக்கா மாதிரி இருக்கா இவ ஆடினா பூமி தாங்குமா??வொய்ஸ் வேற கர கரனு துரு புடிச்ச தகரம் மாதிரி இருக்கு” கவிதா பக்கத்தில் இருந்த ரேஷ்மா குரல் கொடுக்க

 

“குண்டு பூசணிக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன சொல்லுறியா பேர பாரு ரேஷ்மானவாம் ரேஷன் அரிசி வாங்க ரேஸ் ஓட போற என் வாய்ஸ் துரு புடிச்ச தகரம் மாதிரி  இருக்கா உனக்கு தாண்டி காக்கா வாய்ஸ் சைதன்யன் பாத்துக்கொண்டிருப்பதால் கண்கள் கலங்க

 

“பாக்க பச்சை புள்ள மாதிரி இருக்கா இவளைப்போய் இப்படி சொல்லிட்டியே ரேஷு’ எப்பொழுதும் ரேஷ்மாவின் காலை வாரும் குணால் சத்தமாக சொல்ல “நா பச்சை புள்ளையா வேணா விட்டுடு

 

 “நீ சொல்லுடா மச்சான் இந்த குட்டிக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம்” நவீன் சைதன்யனை ஏறிட அவனை கண்கள் விரித்து பார்த்தவள் என்ன சொல்ல போறானோ என உள்ளுக்குள் தவிக்க “கியூட்டா இருக்கா பேசாம உனக்கு புடிச்ச யாருக்காச்சும் ஐ லவ் யு சொல்லிட்டு போய்கிட்டே இரு கியூடிப்பை”

ஐ………சையுவே சொல்லிட்டாரு பொறுமையா தனது பையிலிருந்து சாக்லெட்டை எடுத்து சையுக்கு கொடுத்துட்டு ‘ஐ லவ் யு சோ மச்’ என்று சிரித்தவாறே தனது வகுப்பை தேடி நடக்க ஆரம்பிச்சிட்டேன். மீரா அன்று நடந்தவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

Advertisement