அத்தியாயம் 21

சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். “சோ போரிங்” என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூற “என்னது மீரா ப்ரெக்னன்டா” என்று கூவ லூசு மாதிரி  யோசிக்கிறதே இவளுக்கு வேலையா போச்சு’ என முணுமுணுத்தவன்.

 

“காத்தாதேடி கேக்குறவங்க தப்பா எடுத்துக்க போறாங்க” என கூற “அதானே அவங்க மீட் பண்ணி ஒரு மாசம் கூட அகலயே!’ காதில் வைத்திருக்கும் போனை மறந்து தனக்குள் கூறியவாறு யோசிக்க அந்தப்பக்கம் பல்லை கடித்தான் சந்துரு.

 

“ஆத்தா பரதேவதையே! உன் வாய திறக்காம நா சொல்றத கேளுமா!” கடுப்பாக மொழிந்தவன் நடந்தது என்னவென கூற “என்னது அம்னீசியாவா?” என்று அதிர்ச்சியடைந்தாள்.”என்னடி கத்துற மீரா சிஸ்டர் உன்கிட்ட சொல்லலையா!” “இல்லடா இரு இன்னக்கி அவள போய் காட்டுற காட்டுல பழைய நியாபகங்கள் எல்லாம் வந்துடும்” கோவமாக கூறினாலும் தோழியின் நிலையறிந்து வருந்தியவள் ஆபிசிலிருந்து மீராவின் வீட்டை நோக்கி சென்றாள்.

  

மீரா வீட்டுக்கு வந்த சௌமியாவை வரவேற்றது சரஸ்வதி அம்மா. “எங்கம்மா அவ” என்றவாறு வந்தவளை “அவ அறையிலதாம்மா இருக்கா நீ போய் பாரு உனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்” “ஏதாச்சுமில்லை ஸ்ட்ரோங்கா டீ கொண்டுவாங்க” என்று உத்தரவிட்டு  மீராவின் அறையினுள் போக கதவருகே இருந்தவளை கட்டியணைக்க இழுத்து நிறுத்தி கதவடைத்திருந்தாள் மீரா.

 

அவளின் இச்செய்கையை கண்களை அகலவிரித்து ஆச்சரியமாக பார்த்தவள் “என்னடி பண்ணுற அண்ணனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தியா!’ என குறும்பாக கேட்க அதை ரசிக்கும் மனநிலையில் மீரா இல்லை.

 

தோழியின் சோர்ந்த முகம் ஏதோ சரியில்லை என புரிந்துக்கொண்டவள் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு “என்னாச்சு மீரா?” என்று கேட்க ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எனக்கு ஹெல்ப் பண்ணுறியா?” என்றாள் கண்களில் கெஞ்சலை தேக்கியவாறு “ஒரு நிமிஷம்” என்றவள் கதவை திறந்துக்கொண்டு போய் சரஸ்வதி அம்மாவிடமிருந்து டீயை வாங்கி வந்தவள் அதை பருகியவாறே “ம்ம் சொல்லு என்ன செய்யனும்” என்று கேட்டாள்.

 

தான் கண்ட கனவையும் இன்று அம்பிகாவை சந்தித்ததையும் கூறியவள் அவர் பெயர் சைதன்யன் தாண்டி அப்போ எதுக்கு தனஞ்சயனா இருக்காரு?அன்னைக்கு அவர் என்ன சரியா பார்க்க கூட இல்ல ஆனா அவருக்கு என்ன தெரிஞ்சிருக்கு ஒரு வேல லவ் பண்ணி இருப்பார் போல ஊட்டில தான் சந்திச்சு இருக்கணும் என்னோட கெஸ்சிங் என்னென்றா எனக்கு எக்சிடண்ட் ஆனது அவருக்கு தெரியாது என்ன தேடிகிட்டு இருந்தவருக்கு இங்க என்ன பார்த்ததும்  நா அவரை  மறந்துட்டேனு தெரியல”

மீரா சொல்லியதை கேட்டவள் டீயை   அருந்தியவாறே “ம்ம்ம்” என்று எதையோ யோசித்தவள் போனை நோண்ட ஆரம்பித்தாள். அவள் செய்வதை பார்த்த மீரா “என்னடி செய்ற எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கேன்” என கடுப்பாக

 

‘லவ் பண்ணுறேல்ல’ என்று சந்துருட  எல்லா பாஸ்வர்டையும் தெரிஞ்சிக்கிட்டது நல்லதா போச்சு பழைய போட்டோஸ் எல்லாம் இங்க தான் பத்திரமா வச்சிருக்கான்’ என்றவாறே  

சந்துருவின் பேஸ்புக் எகவுன்டை ஓபன் செய்து அவளிடம் போனை நீட்டியவள்  அதில் சந்துரு  உடன்  சைதன்யன்  இருக்கும் புகைப்படங்களை காட்டினாள்.

 

ஒன்றும்  புரியாமல்  மீரா அவளை ஏறிட சில பழைய புகைபடங்களை காட்டி “சைதன்யன் சௌதாகர்” என்று சொல்ல அப்புகைப்படத்தை நன்றாக பார்த்தவளுக்கு புரிந்தது. அது ஒரு சுவர் பக்கமாக இருந்து எடுத்த செல்பீ புகைப்படம். சுவர் பூரா இருவரினதும் பெயர்கள் மாத்திரம் இருந்தது. தனஞ்சயன்னு யாருமில்ல இருந்தா மூவர் அந்த செலபீயில் இருந்திருக்கணும்.

 

“ஆறுமணி தாண்டிரிச்சு” என்றவாறு கடிகாரத்தை பார்த்த சௌமியா அவளது வீட்டுக்கு அழைத்து தான் இன்று மீராவுடன் தங்கி விடுவதாக கூற மீராவுக்கே ஆச்சரியமாக இருந்தது தான் கேட்க நினைத்ததை தோழி செய்து விட்டாள் என.

 

“அம்பிகா பத்தின நியாபகம் திரும்பிருச்சுனு ஏன் உன் வேத் அத்தான் கிட்ட சொல்லல”

“நான் தான் ஊட்டி போகணும்னு முடிவு  பண்ணேன் ஆனா வேத் அத்தான் அவர் ஏதோ வேல விஷயமா போனதாகவும் அவர் கூட நா போனதாக சொன்னாரு அதான் அவர் கிட்ட இருந்து மறைச்சேன்”

“உனக்கு அம்பிகா மட்டும் தான் நியாபகத்துல வந்தாளா இன்னும் வேற ஏதாச்சும்…..”

கனவுல சில முகங்கள் ஏதோ ஒரு காலேஜ் ல சையுவும் நானும் ம்ம்ம்ம்…ஸ்வீட் மெமரீஸ் மாதிரி யார் முகமும் தெளிவா நியாபகத்துல இல்ல கனவுனு விட்டுட்டேன்”

“அப்போ பழைய நியாபகங்கள் தான் கனவு மாதிரி வருதுன்னு சொல்றியா?”

“ஆமா”

 

ப்ரியா, தேவ் வீடு வர இரவு  சாப்பாட்டை ஒன்றாக முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தவர்கள் அறைக்கு வர அங்கே மீராவின் போன் மின்னி மின்னி ஒளிர்ந்தது அதை பார்த்த சௌமியா “ஹேய் அண்ணாத்தாண்டி” “எடுத்து நா தூங்கிட்டேன்னு சொல்லு” மீரா சொன்ன படியே சௌமியா சொல்ல சில பல கேள்விகளின் பின்னே போனை வைத்தான் சைதன்யன்.

 

“ஹப்பா முடியலடி இதுக்கு பேசாம நீயே  அவர்கிட்ட பேசி இருக்கலாம்” “நா பேசி இருந்தா விடியும்  வர பேசிகிட்டு இருப்பாரு பரவாலையா!” “அந்த லூசு சந்துரு என்னடானா பேசிகிட்டு இருக்கும் போதே தூங்கிடுறான்” என்று அந்த நேரத்திலையும் அவனை திட்டியவள் சரி வா எங்க வேலைய பார்க்கலாம்.

 

“சரி சொல்லு உனக்கு என்ன டவுட்டு” சௌமியா ஆரம்பிக்க

“1 :- சைதன்யன் ஏன் தனஞ்சயனா மாறனும்?

 

2  :- எனக்கு மறந்திருச்சு பட் ஏன் என் கிட்ட மறைக்கணும்?

 

3 :- இந்த விஷயம் யார் யாருக்கெல்லாம் தெரியும்?

 

4 :- நா சையுவ லவ் பண்ணுறது வேத்  அத்தானுக்கு தெரியும் இருந்தும் தனஞ்சயன் எனும் சைதன்யனுடன் என் கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காரு இந்த விஷயம் அவருக்கு தெரியுமா தெரியாதா?

 

5:- ஊட்டில என்ன நடந்தது? நா அங்க போனத வேத்  அத்தான் அவருக்காக தான் போனேனு ஏன் சொல்லணும்?

 

தட்ஸ் ஆல்” மீரா சொல்லி முடிக்க அங்கும் இங்கும் நடந்தவாறே யோசித்த சௌமியா.

” ஓகே

1 :- அண்ணா ஆபீஸ்ல எக்கவுண்ட் செக்சன்ல சேர்ந்திருக்காரு அதுவும் வேற பேர்ல வருங்கால M.D வேற ஆஃபீஸ்ல ஏதாச்சும் தில்லுமுல்லு நடக்குதான்னு பாக்க நடிக்கிறார்.  சௌமியா சொல்ல

 

“ம்ம்ம் இருக்கலாம் வேற காரணம் பொருந்தல்ல.நெக்ஸ்ட் “

 

2 :- ஒரு வேல நீ நோ சொல்லி இருந்தா உன்ன திரும்பவும் காதலிக்க வைக்க”  மீரா சௌமியாவை நன்றாக முறைக்க ” 1st  ரீசன் தான்மா உனக்கு தான் மறந்திருச்சில்ல”

 

3:- கண்டிப்பா சரவணன் சார், லட்சுமி அம்மா, நேசமணி அங்கிள் அண்ட் சந்துருக்கு தெரியும்.

 

4:- கண்டிப்பா உன் அத்தானுக்கு தெரிஞ்சிருக்கு அதான் கல்யாணத்த பிக்ஸ் பண்ணிட்டார்.நாலாவதும் ஓகே

 

5:- அஞ்சாவது தான் இடிக்குது அத தெரிஞ்சது ரெண்டு பேர் ஒன்னு நீ மத்தது அண்ணாக்கு.

 

“அவர் கிட்ட கேக்க முடியாது” மீரா உடனே சொல்ல,  அங்க என்ன நடந்ததுன்னு எல்லாம் தெரியாட்டிலும் வேத் அத்தானுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கு கண்டிப்பா நா சொல்லி இருப்பேன்.  அப்படி இருந்தும் மறைக்கிறாருனா நா தெரிஞ்சிக்க கூடாதுனு நினைக்கிறார். மீரா சொல்ல,

 

“இப்போ என்ன பண்ண போற”


“அவர் தனஞ்சயனா இருக்குறது சரவணன் சருக்காக. எப்போ சொல்லணும்னு தோணுதோ சொல்லட்டும்.” கொஞ்சம் வருத்தமாகவே வந்தது அவள் குரல்.

 

மீராவின் கைமேல் கை வைத்து சௌமியா “சந்துரு கூட என் கிட்ட சொல்லல. உன் வேத் அத்தானும்  சொல்லாம இருக்கார் என்றால் விஷயம் பெருசுனு  அர்த்தம்.  சரி விடு பாத்துக்கலாம்.

 

தன்னை நம்பாமல் பொய் மேல் பொய் சொல்லும் சந்துருவின் மேல் கோவம் கோவமாய் வந்தாலும் அவனிடம் மீராவுக்கு தனஞ்சயனாக சைதன்யன் நடிப்பது தெரியும் என்று கூற போவதில்லை என முடிவெடுத்தாள்.

 

அப்பொழுது நியாபகம் வந்தவளாக சௌமியா “கல்யாண அழைப்பிதழை பார்க்கலயா? சந்துரு அழைப்பிதழோடு வீட்டுக்கு வரேன்னு சொன்னான் நான் தான் யாரும் வர மாட்டாங்க நாமட்டும் தான் வரேன் அழைப்பிதழ் வேணாம்னு சொல்லிட்டேன். அப்பாக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சே போன் பண்ணி கேட்டிருப்பான்.    பிராடு

 

“மாதிரி வடிவமைப்பு இதழை அத்து காட்டினா பெயர் எல்லாம் அச்சிட்ட பின் பாக்கணும்னு இருந்தேன் மறந்துட்டேன். பூஜையறையில் இருக்கு நா போய் எடுத்துட்டு வரேன்”

 

அழைப்பிதழை பார்த்தவர்களுக்கு பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை அதில் சரவணன் சாரின் பரம்பரை எல்லா பெயர்களுடனும் சைதன்யனின் பெயர் இருந்தது.

 

“என்னடி இது ஆபீஸ் ல இருக்கிறவங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருப்பாங்களே தனஞ்சயனா இருக்கணும்னா இது எப்படி சாத்தியமாகும். எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே அப்போ உன்கிட்ட மட்டும் தான் மறைக்கிறாங்களா? எல்லாமே குழப்பமாக இருக்கே மொத சந்தேகமே ஆட்டம் காணுதே……. அப்படி எண்ணத்தடி மறந்த இவனுங்க மறச்சி தொலைக்குறானுங்க.

 

“இந்த சந்துரு தாண்டி பொய் மேல பொய் சொல்லுறான் அண்ணா உயிர அவரே காப்பாத்தினாராமே! என்னை என்ன………”பல்லை கடித்தவாறே  “முட்டாள் லிஸ்ட் ல சேர்த்து வச்சிருக்கான் அவன் சொல்றதெல்லாம் நம்புறேன் பாரு.ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவன் கைல மாட்டுவான்ல அப்போ இருக்கு அவனுக்கு” சௌமியா கோவமாக பொரிந்தாள்.

 

“எனக்கு ஏன் பழைய நியாபகங்கள் வரமாட்டேங்குது” கண்கலங்க மீரா கேட்க

அவளை அணைத்து “கவல படாம கல்யாணத்துக்கு ரெடியாகு எல்லாம் சரியாகும் இப்போ தூங்கலாமா?” சிரித்தவாறே கேட்க கண்ணீருடன் சரியென தலையாட்டினாள் மீரா

 

ப்ரியா வினுவை அணைத்தவாறு தூங்கி இருக்க தேவோ தூக்கம் வராது மீராவின் சிந்தனையிலேயே இருந்தான் அவள் மயங்கி விழுந்த காரணம் புரியாமல்.

 

“என்ன தேவ் தூக்கம் வரலையா? கல்யாண வேலைய நெனச்சி கலங்குறீங்களா? மீராவ  நெனச்சா?” என்றவாறே அவன் நெஞ்சில் சாய அவளைஅணைத்துக்கொண்டவன் சிறிதும் நினைக்கவில்லை மீரா தன்னிடம் அம்பிகாவை சந்தித்ததை மறைப்பாள் என்று.

 

ஹாஸ்பிடலிலிருந்து வீடுவரை மீராவை விட்டு அவளுடன் சிறிது நேரம் பேசியவாறு இருந்து விட்டு வந்த சைதன்யனின் சிந்தனையெல்லாம் மீராவே நிறைந்து இருந்தாள். சௌமியா மீரா தூங்கி விட்டாள் என்று கூறியதும் அவள் சாப்பிட்டாளா? டேப்லட் போட்டாளா? என விவரமாக கேட்டுத்தெறிந்தவன் தேவுக்கும் அழைத்து விசாரித்த பின்னே போனை அணைத்தான்.அவளுடன் பேசாது தூக்கம் வராது இருந்தவன் எப்போ தூங்கினான் அவனுக்கே தெரியவில்லை.

 

மீரா தூக்கம் வராது தவிக்க  சௌமியா தூங்கிக்கொண்டிருந்தாள். மடிக்கணணியை திறந்தவள் இணையத்தளத்தில் அம்னீசியா பற்றிய தகவல்களை படிக்கலானாள். சில மணிநேரம் எடுத்துக்கொண்டவள் ஒரு முடிவுடன் தூங்கச்சென்றாள்