அத்தியாயம் 19

 

மீரா சாவை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால்  முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை  முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை கூறி அங்கு சென்றே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஒரேயடியாக  தேவ் மறுக்கவில்லையானாலும் “தனியாக அங்கே அனுப்ப முடியாது, நீ சின்ன பொண்ணு சமாளிக்க  முடியாது” என பல வாறு கூறிப்பார்த்தும்

“ப்ளீஸ் வேத் அத்தான் ஜஸ்ட் ஒரு வருஷம் ஒரே வருஷம் அவர் அங்க லாஸ்ட் இயர் தான் படிக்கிறார். ஒரு வருஷம் முடிஞ்சதும் இங்கயே வந்துடுறேன்” சில பல ப்ளீஸ்களோடு தேவை சரிகட்டியவளுக்கு சரஸ்வதி அம்மாவை சமாளிக்க பெரும் பாடாகிப்போனது. உண்ணா விரதம் இருந்து தன் காரியத்தை சாதித்துக்கொண்டவள் ஊட்டி நோக்கி பயனப்பட்டாள்.

 

மீராவுக்கு ஆக்சிடென் என போன் வரவே மீராவை சென்று பார்த்தவனுக்கு உயிரே போய் விட்டது அவளை வீட்டுக்கு அழைத்து வந்த பின் தான் அவளின் சையுவின் நியாபகம் அவனுக்கு வந்தது.

யாரென்றே தெரியாத ஒருவனை எப்படி தேடுவது போன் மூலம் டெய்லி அவனை பத்தி மீரா சொல்லி இருந்தாலும் அவள் அவனிடம் தன் காதலை சொன்னாளா? என்று கேக்கும் போதேல்லாம் “நாளைக்கு கண்டிப்பாக சொல்லி விடுவேன்” என மீரா சொல்வாள்.

சையு மீராவை தேடி வராததால் அப்போ அவள் காதலை சொல்லவுமில்லை அவன் இவளை காதலிக்கவுமில்லை என்ற முடிவுடன் இருந்தான் தேவ்.

அன்று நடந்ததை சைதன்யன் வாய் மூலமே அறிந்துக்கொண்டவனுக்கு “என் தேவதைய இவன் இப்படி பேசி இருக்க கூடாது” கோவம் வந்தாலும் மீராவின் பழைய நினைவுகள் வந்தால் சைதன்யனை பழிவாங்குவாளா! மன்னிப்பாளா! அது அவள் கையில் உள்ளது.

 

தற்போது சைதன்யனும் மீராவை காதலிப்பதால் அவன் காதலை அவளுக்கு உணர்த்திய ஆக வேண்டிய கட்டாயத்திற்கு சைதன்யன் தள்ளப்பட்டிருக்கிறான். மீராவும்  முழுமையாக அவனுடைய காதலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளின் பழைய நியாபகங்கள் வந்தால் மற்றவர்களுக்காக இல்லாமல் அவனுக்காகவே அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அதற்கு இவர்கள் இருவரும் தனியாக ஒரே வீட்டில் இருப்பதே சரியாகும் என முடிவெடுத்தவன். சைதன்யன் தனஞ்சயனாக  மாறியதை தனதாக்கிக்கொண்டான்.

 

” [நிச்சயதார்த்தமன்று]  நேத்து மீரா கேள்விமேல கேள்வி கேப்பாள் அவளை எப்படி சமாளிப்பது என மண்டைய உடைக்காத குறையா யோசிச்சு வச்சதெல்லாம் வேஸ்ட்டு அவ சைதன்யான பார்த்தத்திலிருந்தே பிளாட்டு” என ப்ரியா புலம்ப அவளை பார்த்து தேவ் சத்தமாக சிரிக்க வினுவும் கை தட்டி சிரித்தாள்.

“இவளுக்கு உங்க கூட சேர்ந்து என்ன கடிக்க இருந்தா வேறொன்னும் தேவையில்ல”

என வினுவை பிடிக்க “சும்மா போம்மா அங்கிட்டு போ” கையை நீட்டி எச்சரிக்கை செய்வது போல்  சொல்லிய   வினு தேவிடம் சென்று அவன் மடியில் அமர்ந்துக்கொண்டாள். ” அவ என்ன கேட்டாலும் நா சமாளிச்சுக்கிறேன்னு சொன்னேன்ல எதுக்கு நீ டென்ஷன் ஆகுற” அவனை முறைத்தவள் “என் கிட்ட தானே கேட்டா உங்க கிட்டயா கேட்டா” வினு தேவை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் வைக்க அதை பொறாமையாக பார்த்தாள் ப்ரியா   

பேச்சை மாற்றும் விதமாக “ஆமா என்ன எப்போ  “டா” போட்டு பேச போற வார்த்தைக்கு வார்த்த வாங்க போங்கன்னு சொல்றியே மனசுலிருந்து தான் சொல்றியா நடத்தைல அப்படி ஒன்னும் இல்லையே ” கிண்டலாகவே முடித்தான்.  

“நாலு வருசமா அப்படித்தானே கூப்டுகிட்டு இருக்கேன் உங்கம்மா என்ன மொறச்சி கிட்டே இருந்தாங்க உங்கள டா போட்டு பேசி இருந்தா இன்னும் என்னெல்லாம் பண்ணி இருப்பாங்களோ” கழுத்தை நொடிக்க “ஹஹ்ஹ இப்போ தான் ராசியாகிடீங்களே  இப்போ கூப்பிடலாம்ல” தாபம் நிறைந்த குரலில் கூற  அவன் குரல் அவளை ஏதோ செய்ய “சரி” என்று தலை தானாக ஆடியது.

 

மீராவை ஆஃபீஸ் செல்ல வேண்டாம் என சரஸ்வதி அம்மா ஸ்ரிக்ட் டா ஓடர் போட்டு விட சைதன்யனுடன்  போனில் அதிக நேரம் உறவாடினாள். அவளை ஒரு வருட காலம் நெருங்கி  பழகி இருந்தாலும் அவளுக்கு பிடித்த வற்றை தெரிந்திருந்தாலும் அவனை மறந்துவிட்டவளுக்கு பிடித்தவைகளை  நியாபகம் இருக்கா என மீண்டும் மீண்டும் கேட்டு எல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது.

 

அவளோ “ஜெய் நீங்க சரவணன் சார் ட்ரஸ்ட்டுல தானே படிச்சீங்க உங்களுக்காக லட்சுமி அம்மா அவங்க பையனுக்கு செய்யுற மாதிரி எல்லாம் பண்ணுறாங்க அவங்க பையன் எங்க இருக்காங்க? நீங்க பாத்திருக்கீங்களா?  பாரின்ல எங்கயோ இருக்காங்கனு கேள்வி பட்டு இருக்கேன்? ஏன் இங்க வராம இருக்காங்க?” அவள் கேள்விகளை அடுக்க விழிபிதுங்கி  நின்றான் சைதன்யன். {இதுக்கே இப்படியா நீ இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குடா தம்பி }ஒருவாறு அவளை சமாளித்தவனுக்கு தெரியவில்லை அவள் என்னவெல்லாம் செய்ய போகிறாள் என்று.

 

லட்சுமி அம்மா காரில் வந்து கல்யாண ஷாப்பிங் என மீராவை அழைத்துச்செல்ல  சரஸ்வதி அம்மா “இல்ல நா வரல ப்ரியாவை கூட்டிட்டு போங்க” என்றும் ரவிக்குமார் “வாங்கி குடுக்குறத போட்டே பழகிட்டேன் ஷாப்பிங் பத்தி எனக்கு என்ன சம்பந்தி அம்மா தெரியும்” எனவும் மறுத்து விட கூடவே ப்ரியா மாத்திரம் சென்றாள்.சைதன்யன் நேராக அங்கேயே வந்து விடுவதாக கூறவே ப்ரியாவும் மீராவும் லட்சுமி அம்மா உடன் சென்றனர்.

 

மீராவுக்கு லட்சுமி அம்மா தனஞ்சயனின் மேல் வைத்துள்ள  கரிசனம் புரியாமல் தவித்த போது சௌமியா தான் சந்துரு சொன்னதாக “சைதன்யன் சாரும் நம்ம தனு அண்ணா சந்துரு எல்லாரும் பாஸ்கர்ட் பல் பிளேயர்சாம் டி சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருந்தவங்களாம். அன்னைக்கு………. தனு அண்ணா வந்தன்னைக்கு சந்துரு சொன்னானே அவங்க சின்ன வயசிலிருந்தே பிரெண்ட்ஸ் என்று. ஒரு தடவ நம்ம சைதன்யன் சார் உயிரை நம்ம தனுண்ணா தான்டி காப்பாத்தி இருக்கிறார். அதான் அந்தம்மா சொந்தப்பிள்ளை போல் எல்லாம் பண்ணுறாங்களாம்”  அன்னைக்கு நிச்சயதார்த்தமன்று கேட்க மறந்ததை சந்துரு விடம் கேட்ட போது உண்மையை கூறாது மழுப்பி இப்படி கூறி விட தோழி வருந்திக்கொண்டிருப்பாள் என சௌமியா உடனே போன் பண்ணி சொல்லியிருந்தாள்.  [இதுங்க ரெண்டும் போதும் மீரா சைதன்யான போட்டுத்தள்ள.]

 

பேசி சிரித்தவாறே அந்த பெரிய ஜவுளில்கடையும் வந்து விட உள்ளே சென்றனர்.

அங்கே கல்யாணத்துக்கு யார் யாருக்கு என்னெல்லாம் வாங்கணும்னு  லிஸ்ட்டை கையில் வைத்திருந்த லட்சுமி அம்மா ” மீரா நீ புடவை செக்சனுக்கு போ தனு இப்போ வந்துடுவான் யாருக்கோ கல்யாண அழைப்பிதழ் வைக்கணும்னு போனான். ரெண்டு பேருக்கும் பிடிச்சத எடுங்க” என ப்ரியாவை அழைத்துக்கொண்டு  வேறு பக்கம் சென்று விட

 

புடவைகளை பார்த்தவாறு சைதன்யனுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தவளை அணுகினால் ஒரு பெண் ” ஹே..ய் நீ மீரா தானே!” “ஆமா நீ………ங்க” “நீ எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாளாச்சில்ல” தான் யாரென கூறாமல் பேசுபவளை என்ன செய்ய “இவளை எங்கயோ பாத்திருக்கேன்.  எங்கே!’ என தனது நினைவடுக்கில் தேட அந்தோ பரிதாபம் இவளுக்கு அவளை தெரியவில்லை.

 

அவளருகில் வந்த ஆடவன் ஒருவன் “அம்பிகா இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றவன் மீராவை காண “யாரிவங்க ”  என்ற பார்வை அவனிடத்தில் “என்னங்க இது தான் மீரா நா ஊர்ல எக்ஸாம் எழுத முடியாத படி எங்க மாமா பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தப்போ! அப்பா எக்ஸாம் எழுத இங்க ஸ்கூல் சேர்த்தங்கனு சொன்னேனே! ரெண்டு மாசமே இருந்தாலும் இவ தான் எனக்கு பேஸ்ட்டு பிரென்ட்” என கணவனுக்கு மீராவை அறிமுக படுத்த  “நீ ஊட்டி காலேஜ்க்கு போறேன்னு சொன்னியே நாவேற ஊருக்கு போய்ட்டேன் உன் அட்ரெஸ்ஸ தொலைச்சிட்டேண்டி சாரி டி” மீராவின் பதிலை எதிர்பாராது  தொடர்ந்து இவ்வளவு உரிமையாக பேசுபவளிடம் என்னவென்று சொல்ல.

அங்கே வந்து சேர்ந்த சைதன்யன் மீராவை தேட அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது

அவளின் இடது பக்க தோற்றம் கொஞ்சமே தென்பட அவளின் முகபாவங்கள் சரியாக தெரியவில்லை யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் என அவளருகில் சென்று அவள் தோளின் மேல் கை போட அவனை கண்டு மீராவின் முகத்தில் வெட்கப்புன்னகை.

அவனின் உரிமையான செயலில் “ஓ நீங்க தான் மீராவோட ஹஸ்பனா” என்று அம்பிகா கேட்க ” கூடிய சீக்கிரம்” என ஒரு அழைப்பிதழை வழங்கியவன் கல்யாணத்துக்கு வருமாறு அழைத்து விட்டு மீராவுடன் புடவைகளை பார்க்கச்சென்றான்.

ஒவ்வொன்றாக எடுத்து அவள் மேல் வைத்து பொறுமையாக பார்த்தவன் பச்சை, சிகப்பு, நீலம் என மூன்று நிறங்களில் மூன்று புடவைகளை தேர்வு செய்து வேறு எதுவும் வேணுமா எனக்கேட்க அவள் தலை அசைத்த விதத்தில் அவள் கவனம் இங்கில்லை என புரிந்துக்கொண்டவன்.

” என்ன ஸ்ரீ ஒரு மாதிரி இருக்க தலைவலிக்குதா? டயடா இருக்கா? ஏதாவது ஜூஸ் சாப்பிடலாமா?” கரிசனமாக கேக்க இவ்வளவு நேரமும் அம்பிகாவின் நினைவில் உழன்றவள் அவளை புறம் தள்ளி “இல்ல சையு ஐம் ஓகே என்றாள்.”

அதை கேட்டு சைதன்யன் சந்தோசமாக புன்னகைக்க அங்கே வந்த ப்ரியாவுக்கோ திக் என்றானது. இவள் உணர்ந்து சொன்னாளா? மனசுல இருக்குறது வாய் வழியா வந்து விட்டதா என குழம்பியவளை  லட்சுமி அம்மா “ஏதாச்சும் சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்மா” என்ற குரல் பாவம் வயதானவர் நீண்ட நேரம் நின்றுகொண்டும்  அங்கும் இங்கும் அலைந்து திரிந்தும் கால் வேற வலி இருக்கும் என தோன்ற “சரிம்மா போலாம்” என்றாள்.

வாங்கின பொருட்களுக்கு சைதன்யன் பணம் குடுக்க போக லட்சுமி அம்மா தடுத்து தானே கொடுக்க புன்னகையுடன் “யார் குடுத்தா என்ன எல்லாம் சரவணன் சார் காசு” என்ற பார்வைதான் சைதன்யனிடம். அவன் பார்வையை சரியாக புரிந்துக்கொண்டவர். “என் மகனுக்கும் மருமகளுக்கும் நான்தான் செலவு பண்ணுவேன்.என்று சத்தமாக கூறி காசை கொடுக்க டைவரை அழைத்து எல்லா பைகளையும் காரில் வைக்குமாறு பணித்தார்.

சாப்பிட ஒரு ரெஸ்டூரண்ட்டை பார்த்து வண்டியை நிறுத்தியவர்கள் உள்ளே சென்று அமர்ந்து என்ன சாப்பிடுவதென்று மெனு கார்டை பாத்திருக்க அங்கே ஒரு பன்னிரண்டு வயதுக்கு பெண் குழந்தை  ஐஸ் கிரீம் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்த மீரா மயங்கிச்சரிந்தாள்.