அத்தியாயம் 18
குழந்தைகளின் மனமோ! வெள்ளை காகிதம் போல் நாம சொல்றத பதிய வச்சிப்பாங்க அதிலயும் பொண்ணா இருந்தா இரண்டரை, மூன்று வயதிலேயே தெளிவா பேசவும் செய்வாங்க.
வினு குட்டியும் அப்படிதான் தேவ்வும் ப்ரியாவும் மருத்துவமனை செல்வதால் அதிக நேரம் சரஸ்வதியுடனும் ரவிகுமாருடனும் மீராவுடனும் இருந்தவள்.சரஸ்வதியின் புலம்பலில் முக்கியமாக தேவ் மீரா திருமணத்தை மனதில் பதிவு செய்து வைத்திருந்தாள்.[ சரியான டைம்ல போட்டும் கொடுத்துட்டா]
சரஸ்வதி அம்மா மருத்துவமனையில் இருந்து வந்ததிலிருந்து ப்ரியாவை கவனித்துக்கொண்டு தான் இருந்தார் ஹாஸ்பிடலில் வேலை பார்த்துவிட்டு வந்தாலும் அவரை வேலை செய்ய விடாது எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள். ப்ரியாவிடம் முகம் திருப்பா விட்டாலும் ஓரிரு வார்த்தை பேசினார்.
“லட்சுமி அம்மாவின் பையனுக்கு மீராவ கேக்குறாங்க” என்று தேவ் சொன்னதிலிருந்து சரஸ்வதி அம்மா அடைந்த நிம்மதி அலையில்லாத கடல் மாதிரி.
ப்ரியாவை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது பொறுப்பான மனைவியாய்,மருமகளாக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவள் தான்.
இதுவே வேறொரு பெண்ணாக இருந்தால் தனிக்குடித்தனம் போய் இருப்பாள். “அவ எங்க போவா இங்க தானே நா இருக்கேன் சம்பளமில்லாத வேலைக்காரியா” என்று பல தடவ மீரா திட்டும் போது சரஸ்வதி அம்மா சொல்லி இருந்தாலும் சரஸ்வதியை ப்ரியா திருப்பி ஒரு வார்த்தை பேசியதில்லை.
இதோ இன்று மீராவை அலங்கரிப்பதிலிருந்து வருபவர்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம் என்பதிலிருந்து எல்லாவற்றையும் தன் பொறுப்பென செய்து கொண்டிருக்கிறாள்.
கல்யாணப்பேச்சு ஆரம்பித்ததிலிருந்து இருவருக்கிடையிலும் சுமுகமான பேச்சு வார்த்தை ஆரம்பமாகி மாமியார் மெச்சும் மருமகளாக இருக்கிறாள்.
வினு தேவ் மீரா திருமணத்தை பற்றி கூற ப்ரியா சிரித்தாலே ஒழிய அதை பெரிதாக எடுக்கவில்லை.
சரஸ்வதி அம்மாவுக்கு தான் ப்ரியாவுக்கு அநீதி இளைத்து விட்டதாக தோன்றியது.
அனைவருக்கும் சாப்பிட எல்லாவற்றையும் பரிமாறி ஒவ்வொருத்தரும் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து கொண்டிருந்தவளை அன்பாக பார்த்த சரஸ்வதி அம்மா அவள் சமயலறைக்கு செல்லும் போது கூடவே சென்று கையை பிடித்தவாறே
“என்ன மன்னிச்சுடு ப்ரியா மீராகு இப்படி ஆகிருச்சே அவளை தேவுக்கே கட்டி வச்சிட்டா அவள பத்தி கவலை இருக்கதேன்னு நெனச்சேன். மீராவை நல்லா பத்துப்பேன்னு சகுந்தலாக்கு வாக்கு கொடுத்துட்டேன். இடைல தேவ் உன்ன விரும்பி மீரா சண்டை போட்டு இந்த கல்யாணத்த நடத்திட்டா. அவள இன்னொரு வீட்டுக்கு அனுப்பனுமே என்ற பயம் தான் உன்ன என் மனசு ஏத்துக்கல நீ ரொம்ப நல்லவ உன்ன புரிஞ்சிக்காம நிறைய பேசிட்டேன் என்ன மன்னிச்சிக்க” என மன்னிப்பும் கேட்டு விட்டார்.
அவர் மனதை புரிந்திருந்தவள் ” என்னத்த நீங்க என் அம்மா சொன்னா கேட்டுப்பேனே நீங்களும் எனக்கு அம்மா தான்” என முடித்துக்கொண்டாள். உச்சி குளிர்ந்து அவளை கட்டி அணைத்தவாறு கண்ணீர் சிந்த அங்கே இருந்தால் இமோஷனல் ஆகிவிடுவார் என “வாங்க போலாம் வந்தவங்க எங்கள தேடுவாங்க” என அழைத்து சென்றாள்.
ஐயர் நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கவென ஆயத்தமாக பெரிய பிரச்சினையாக சைதன்யனின் பெயர் முன் நின்றது.
இன்னாருடைய கொள்ளுப்பேரன் இன்னாருடைய பேரன் இன்னாருடைய மகன் சைதன்யன் என்றே லட்சுமி அம்மா கொடுத்து விட்டிருக்க இதை மீரா கேட்டால் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு ப்ரியா தான் பயந்து போனாள்.
உள்ளே இருந்து போன் பண்ணியதும் முதலில் ரிங் பொய் அடுத்த முறை போன் சுவிட்ச் ஆப் என்று வரவே சௌமியா சொன்னது போல் லட்சுமி அம்மாவின் பையனை தான் பேசிவந்திருக்கிறார்கள் என்று முடிவே பண்ணி இருந்தாள். எல்லாம் அறிந்த தேவ் இதை எப்படி அனுமதித்தான் என்று யோசிக்க மறந்தாள்.
நிச்சய புடவையை கொடுத்து அணிந்து வர சொன்னவளின் முகம் கலை இழந்து காணப்பட்டது.ஜெய் சூழ்நிலை கைதியாக இருக்கிறான் நான் தான் ஏதாவது செய்தாகணும் என்று முடிவெடுத்தவள். வாசலுக்கு வர பின்னாலயே வந்த சௌமியா அவள் அருகிலேயே அமர்ந்துக்கொண்டு “என்ன செய்ய போகிறாய் என நூறு தடவ கேட்க” “எல்லார் முன்னாடியும் நா ஜெய்ய லவ் பண்ணுறேன்னு சொல்ல போறேன் லட்சுமி அம்மா பையன கல்யாணம் பண்ண முடியாது” “குட் நமக்கு தேவையானதை நாம போராடித்தான் பெறணும்னா போராடுவோம்.
இந்த லூசு சந்துரு வேற அமைதியா இருக்கான் இங்க என்ன நடக்குதுனு நமக்கு அறியத்தரணுமா இல்லையா? அறையில் இருந்து போன் மேல போன் போட்டாலும் எடுக்கல இரு வரேன்” என அக்கூட்டத்தினுள் அவன் எங்கே இருக்கிறான் என பார்க்க அவளையே பார்த்திருந்தவனுக்கு அவனை வெளியே வருமாறு கண்ணாலேயே சைகை செய்து வெளியே செல்ல. “ஐ நம்ம மியா எதுக்கு வெளியே வர சொல்றா? நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்கப்போறாளோ என்னவோ!” ஆனந்தமாக வெளியே சென்றான்.
வெளியே வந்தவர்கள் சரஸ்வதி அம்மாவின் போட்டிக் பக்கம் செல்ல யாருமில்லாத அவ்விடத்தில் அவனை ஒரு பிடி பிடித்து விட்டாள் சௌமியா “ஹேய் லூசு போன் பண்ணா எடுக்க மாட்டியா? அண்ணா போன் வேற சுவிட்ச் ஆப் ஆகா இருக்கு” “போன் பண்ணியா” என பார்க்க ” சிஸ்டர் போன் பண்ணும் போது என் கைல தான் அவன் போன் இருந்துச்சு நா தான் சுவிட்ச் ஆப் பண்ணேன்” என்று இளித்தவன் சௌமியாவின் முகபாவத்தை கண்டு “ஆமா உள்ள இருந்துகிட்டு எதுக்கு போன் பண்ணாங்க?” என் போன சைலென்ட்ல போட்டுட்டேன். என கைல இருந்த மொபைலாலேயே நெத்தியை தட்டிக்கொள்ள “உன்ன” என அவன் கழுத்தை பிடித்து இறுக்க அவளின் கையை பிடித்து இழுத்து விளக்கியவன்.
“ராட்சசி ராட்சசி பேயே பிசாசே ரெத்த காட்டேரி” என கண்டமேனிக்கு திட்ட தொடங்க பெரிய பெரிய மூச்சுக்கலை எடுத்த வாறே துப்பட்டாவை இடுப்புப்பக்கம் கட்டியவள் அவன் தலைமுடியை இரண்டு கையாலையும் பிடித்து இழுக்க “ஆஆஆ” என கத்தியவன் அவளிடமிருந்து விலக முயற்சிக்க அவளோ கையை விடவே இல்லை வழியால் துடித்தவன்
அவளின் இடுப்பை பிடித்து கிள்ள கையை விட்டவள் அவனை அடிக்க துவங்க அவளை தடுத்துத் தடுத்துப் பார்த்தவன் பொறுமை இழக்க அவளை கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தான். திமிறி அவனிடமிருந்து விலக முயற்சித்தவளை அடக்கி தன கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டவனுக்கு இடம் சூழல் வந்த வேலை மறந்து போனது மீராவுக்காக சண்டையிட தொடங்கியவள் அவளை மறந்து அவனுள் மூழ்கி இருந்தாள். அப்பக்கமாக போன் பேசுவேன வந்த நேசமணி இவர்களை பார்த்துவிட்டார்.
பெயர் பிரச்சினையை எப்படி சரி செய்வதென்று சரவணன் சார் இருக்க லட்சுமி அம்மா பரம்பரை பெயர் எல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்ல “அது என் பரம்பரை டி நானே அவசியமில்லன்னு சொல்றேன்ல” வார்த்தையை கடித்துத்துப்ப “மாமாக்கு நா வாக்கு கொடுத்து இருக்கேங்க” என்றார் பரிதாபமாய். இவர்களின் நிலையை கண்டு தேவுக்கோ மீராவிடம் உண்மையை சொல்லாம் எனக்கூட ஒரு கணம் தோன்ற மறுகணம் மீராவின் ட்ரீட்மென்,அவ சந்தோசம் முக்கியமாக பட என்ன பண்ணலாம்னு மீராவை பார்க்க அவளோ ஏதோ சிந்தனையில் இருப்பதாகவே தோன்றியது.
மீராவை அழைத்து வந்து சில சடங்குகளை செய்ய மீரா நெருப்பின் மேல் இருப்பது போல் தவித்துக்கொண்டிருந்தாள். வாயை திறந்து பேசலாம் என நினைக்க “மாப்பிள்ளையை வர சொல்லுங்க” என ஐயர் அழைக்க கோவம் தலைக்கேற கழுத்தில் போட்ட மாலையை கழட்டவென மாலையில் கைவைக்க போக அவள் பாரம் தாங்காமல் மாலையை சரி செய்ய முயற்சிக்கின்றாள் என எண்ணியவானாக அவள் முன் வந்து நின்ற சைதன்யன் மாலையை சரிசெய்ய அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவளை கண்சிமிட்டி புன்னகை சிந்த எல்லாவற்றையும் மறந்தவளாக அவனுள் தொலைந்து போனாள்.
சைதன்யனின் குடும்ப முறைப்படி மணமகள் அதற்குப்பின் மணமகன் மாலையிட்டு,நெற்றியில் திலகமிட்டு, அழைத்து வரப்பட்டு இருவரும் முகம் பார்க்குமாறு நிற்கவைக்கப்பட்டு நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கப்படும்.
அவனின் மயக்கும் புன்னகையில் உருகி கரைந்த்துக்கொண்டிருந்தவளுக்கு அங்கே நடப்பவைகள் ஏதோ கனவுலகில் நடப்பது போலவே இருந்தது. வெட்கப்புன்னகை சிந்தியவாறே கோட் சூட் அணிந்து தலையில் வடநாட்டவர் போல் முண்டாசு கட்டி அழகாய் இருந்தவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் சுற்றுப்புற சூழலை கவனிக்கும் நிலையில் அவளில்லை. நிச்ச்யயதார்த்த பத்திரிக்கையில் சைதன்யனின் பெயர் வாசிக்கும் பொழுதும் அவன் முகத்தையே பார்த்திருந்தவள் பூர்வ ஜென்ம பந்தம் கை கூடிவிட்டது என்று மயக்கத்திலேயே இருந்தாள்.
அவளின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்திருந்தவனின் நிலையும் அதே போல் இருந்தது. அவளின் சந்தோசமான முகத்தை பார்த்திருந்தவனுக்கு அவளை அள்ளி அணைத்து முத்த மிட துடிக்கும் கைகளை மாலையை பிடித்து தடுத்துக்கொண்டிருந்தான் ஒரு வித மோனப்புன்னகையுடன்.
“மாலை கழண்டு கையேடு வந்துட போகுது தம்பி” என்ற தேவின் குரலுக்கு அசடு வழிந்தவனாக தலையை கோதி சமாளித்தவன் மீராவை பார்க்க அவளோ இன்னும் மோனா நிலையிலிருந்து விடுபடாமல் இருக்க மெதுவாக அவள் பக்கம் சாய்ந்து அவள் முகத்தின் மேல் ஊத அவனின் மூச்சுக்காற்று பட்டு சிலிர்த்து இமைகளை பட்டாம் பூச்சி போல் சிமிட்ட அசந்து தான் போனான் சைதன்யன்.
ஒரு வாறு நிச்சயதார்த்த மோதிரம் வழங்கப்பட அவள் வெண்பஞ்சு விரலை பிடித்து அவளை பார்த்தவாறே அணிவித்தான் சைதன்யன்.
அவனுக்கான மோதிரம் அவள் கையில் வழங்கப்பட அதை வாங்காது அவனையே பார்த்திருந்தவளை ப்ரியா உலுக்க சுயநினைவுக்கு வந்தவள் அழகாக வெட்கப்பட “இது தான் அழகுல மயங்குறது” ப்ரியா சொல்ல சிரிப்பு சத்தத்துடனே மீரா சைதன்யன் கையில் மோதிரத்தை அணிவித்தாள்.
இருவரையும் அமர்த்தி இன்னும் சில சடங்குகளை செய்ய வந்து சேர்ந்தனர் சந்துருவும் சௌமியாவும்.
நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்திருந்ததை கண்டு சௌமியா நிம்மதி அடைந்தவளாக மீரா பக்கத்தில் போய் நிக்க “எங்கடி போன” மீராவின் கேள்விக்கு சௌமியா திருதிருனு முழிக்க ஆரம்பித்தாள்.
அவளின் முழியை பார்த்து சைதன்யன் சந்துருவை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு “டேய் நல்லவனே நிச்சயதார்த்தம் நடக்கும் போது எங்க போன உன்னயெல்லாம் நம்ப முடியாது சைக்கிள் காப்பிலேயே ட்ரைன ஓட்டிட்டு போய்டுவ” என சிரிக்க அசடுவழிந்தான் சந்துரு.”எல்லாம் உன்னால் தான்” என்ற பார்வையோடு சந்துருவை முறைத்தாள் சௌமியா. “நா என்னடி பண்ணேன் ராட்சசி” என்று முணுமுணுதான் சந்துரு.
“அங்க என்ன பார்வை” என மீராவும் “இங்க என்ன முணுமுணுப்பு” என்று சைதன்யனும் ஒரே நேரத்தில் கேட்க “உன்ன அப்போரமா கவனிச்சிக்கிறேன்” என்றது சந்துரு சௌமியா பார்வைகள்.
இன்னும் பன்னிரண்டு நாட்களில் திருமணம் என பெரியவர்களால் முடிவுசெய்யப்பட சைதன்யனை கட்டிக்கொண்டு வாழ்த்துக் கூறினான் சந்துரு.
திருமண வேலைகள் தலைக்கு மேல் இருக்கு அதை பண்ணனும் இத பண்ணனும்னு லட்சுமி அம்மாவின் சந்தோசம் சரஸ்வதி அம்மாவை மெய்சிலிர்க்க வைத்ததென்றால், சௌமியாவின் முகமோ யோசனைக்குள்ளானது.
நாளை மறுநாள் நல்ல நாள் துணிமணியும் நகையும் வாங்க போலாம் என லட்சுமி அம்மா முடிவெடுக்க அங்கே மீராவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அறியாது மீராவையும் அழைத்து செல்வேன் கறாராக சொல்லி விட்டார்.