அத்தியாயம் 17
அவன் முன்னாடி யாரோ அமரவும் தலையை உயர்த்தி பார்க்க தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு இருக்க “கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்” என அலட்சிய பார்வை பாக்க “ஹலோ சைதன்யன்” என அவனுக்கு ஷாக் கொடுத்தான் தீரமுகுந்தன்.
எல்லா இடத்திலும் தனது “ஐம் வாட்சிங் யு” சிஸ்டர்த்தை அமுல் படுத்த அவனுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து “சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்” என்ற முக மூடியுடன் அவனே நேரில் செல்வான்.” எஸ்.எஸ்.குரூப்புக்கு வந்த வேலை முடிஞ்சது நடையை கட்டணும்” என்றிருந்தவனுக்கு சைதன்யனின் தனஞ்சயன் எனும் முகம் எதுக்கு என தெரியும் வரை பொறுமையாக இருந்தவன் அவர்களின் வீட்டில் பொருத்தப்பட்ட cctv மூலம் உண்மையை கண்டு பிடித்து விட்டான்.
ஒரு நிம்மதியுடன் சைதன்யன் முன் வந்தமர அவனுடைய அலட்சிய பார்வையை புறம் தள்ளியவனாக பென்ட்ரைவை எடுத்து மேசையின் மேல் வைக்க ஏற்கனவே ஷாக் இல் இருந்தவன் இது என்ன என பார்க்க,
” அன்னைக்கு லிப்ட் ல நடந்த சம்பவத்துக்கான சாட்சி” என புன்னகைக்க அதை உடனே கையில் எடுத்தவன் தீரனை முறைக்க,
“கூல் ப்ரோ மீரா எங்க வண்டியில தான் ஆக்ஸிடென்ட் ஆனா ரெத்தம் குடுத்து காப்பாத்தி இருக்கோம். சோ அவ எனக்கு ரெத்த சம்பந்தம் மாப்புள! சிஸ்டர நல்லா பாத்துக்க”
தேவ் தீரன்[ஸ்] பத்தி சொல்லி இருந்தாலும் விஷ்வதீரனை அறிந்திருந்தவன் அவன் தம்பியை சிகியூரிட்டி இன்ச்சார்ஜ் ஆகா கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவன் யார் எனும் உண்மையை சொல்லாமலேயே புரிந்தது. தீரமுகுந்தனுடைய புகை படங்களை சைதன்யன் எங்கும் பார்த்ததில்லை.அவனை பத்தி செய்திகள் வந்தவண்ணம் தான் இருக்கின்றன. அவனை நன்றியுடன் பார்த்தவன் மனதால் சாலியுட் வைத்தான்.
‘அமர் வர்மா’ என்ற அவனுடைய நேம் டக் இல் பெயர் இருக்கவே “ஹலோ மிஸ்டர் தீரன்” என்று கண் சிமிட்ட “ஹாஹாஹா அப்போ தீரன்{ஸ்} யாரென அறிந்து தான் வச்சிருக்க”
“ம்ம் ரெண்டு பேருக்குமே தீரன் என்றே கூப்பிட பிடிக்கும் என்பது வர தெரியும் ஐம் யுவர் பேன் தீரன். பட் எங்க கம்பெனில உங்களுக்கு என்ன வேல” கேட்ட வாறே கண்களை கூர்மையாக்க,
அழகாக புன்னகைத்தவன் “மீரா ஆக்ஸிடென்ட் பத்தி உன் கிட்ட சொன்ன தேவ் தீரா{விஷ்வதீரன்}பத்தியும் சொல்லி கூடவே அவர் தம்பியும் இருந்தார் என்ற ஒத்த வரியிலேயே நா தான் தீரன் என்று சொன்னியே கிரேட். ஐம் டுயிங் மை மிஷன். நல்லவனா இருந்தா தீரன் வருகை பத்தி கவலை படாதே!” என்றவாறே எழுந்தவன் ” ஓகே ஐம் லீவிங் டுடே வந்த வேல முடிஞ்சிருச்சு” கையை நீட்ட அவன் கையை பிடித்து சைதன்யன் கை குலுக்க “தனஞ்சயனா இருக்குற வர பேஸ்புக் டிவீட்டர் ல இருக்குற உன் போட்டோஸ் ச எடுத்துடு மீரா கண்டுபிடிச்சிட்டா!” என மீண்டும் ஷாக் கொடுத்து விட்டே அகன்றான்.
ஐந்து மணியளவில் பொண்ணு பார்க்க வந்து விடுவார்கள் என்பதால் மூன்று மணிக்கே மீராவை அழைத்து செல்ல வந்து விட்டாள் ப்ரியா ” எதுக்கு அத்து பொண்ணு பாக்குறது எல்லாம் “அவரும் நானும் தான் ஏற்கனவே பார்த்துட்டோமே! இன்னைக்கி கூட பேசினேன் பா! ப்ரியாவின் மனமோ ‘இதுக்கே இப்படி வீட்டுக்கு போய் புடவை கட்ட சொன்னா என்ன சொல்வாளோ! ” அத்த தான் எல்லாம் முறைபடியாய் நடக்கணும்னு வர சொன்னாங்க பா”
சரஸ்வதி என்றதும் அமைதியானவள் “இப்போ எல்லாம் காபி ஷாப்லயே பொண்ணு பாக்குறாங்க இந்த அத்த என்னென்றா இன்னும் பழையபடியே வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்களே! புடவைய கட்டி கிட்டு அவங்க முன்னாடி காபி கோப்பைகளை தூக்கி கிட்டு ” அம்மா தாயே கொஞ்சம் வாய மூடிட்டு வா எதுனாலும் அத்த கிட்டயே கேளு” என்று சிடு சிடுக்க பிரியா ஏதோ கோவத்தில் இருக்கிறாள் என நினைத்தவள் அமைதியானாள்.
வீட்டுக்கு வந்தவளை ரவிக்குமார் தலையை தடவ அவர் நெஞ்சில் சாய்ந்தவளை “அவங்க இப்போ வந்துடுவாங்க போய் குளிச்சிட்டு வா சீக்கிரம்” என சரஸ்வதி அம்மா அதட்டா “அத்த” என அவர் கழுத்தை கட்டியவள் முத்தம் வைத்து சமத்தாக அவர் சொல்வதெல்லாம் செய்தாள்.
அப்பாவினதும் அத்தையினதும் முகத்தில் இருந்த அதிகப்படியான சந்தோசமே அவள் வாய் திறவாது எல்லா வற்றையும் செய்தாள். இருந்தாலும் பட்டுப் புடவையை பார்த்து ப்ரியாவிடம் கண்களால் கெஞ்ச அதை கண்டும் காணாதது போல் ப்ரியா முகம் திருப்ப அவளை உதடு பிதுக்கி “வினு குட்டி உன் அம்மா ஓவரா பண்ணுறாடி சொல்லி வை” என்றதும் வினுவும் “அம்மா ஓவரா மேக் அப் பண்ணாத” என்று அவளுக்கு புரிந்ததை சொல்லா. ப்ரியாவும் மீராவும் வாய் விட்டே சிரித்தனர்.
மீராவை ப்ரியாவே அலங்கரிக்க பட்டுப் பாவாடையை அணிந்து கொண்ட வினுவும் “எனக்கு எனக்கு” மேக் அப் கிட்டிலுள்ள எல்லா வற்றையும் போடச்சொல்லி கொஞ்ச அவளையும் அலங்கரித்து மீராவிடம் விட்ட ப்ரியா சரஸ்வதி அம்மாவுக்கு உதவ சமயலறைக்கு சென்றாள்.
சரியாக லட்சுமி அம்மா ஐந்து மணிக்கே பத்து சொந்தக்கார பெண்களை அழைத்துக்கொண்டு வந்து விட சரவணன் சாரும் , சைதன்யனும் நேசமணியுடன் ஆபிசிலிருந்து நேராக வர சரவணன் சாருக்கே அதிர்ச்சி தரும் விதமாக லட்சுமி அம்மா பதினெட்டு விதமான தட்டுக்கோளோடு நடு ஹாலில் அமர்ந்திருந்தார்.
சௌமியாவும் சந்துருவோடு வந்தவள் “என்னடி இது அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்க வந்த மாதிரி இம்புட்டு தட்டோட வந்திருக்காங்க! பூவை கூட விட்டு வைக்காம வித விதமா கொண்டு வந்திருக்காங்க! தனு அண்ணா சாருக்கு பையன் மாதிரின்னு சந்துரு சொன்னான். அவர் ஜாடை வேற சார் மாதிரி இருக்கு ஒரு வேல அப்படி இருக்குமோ!” தனது அதி முக்கிய சந்தேகத்தை சொல்லி மீராவின் காதை கடிக்க “போடி லூசு மாதிரி பேசிகிட்டு சார பத்தியே தப்ப சொல்றியா? சைதன்யன் தான் தனஞ்சயன் என்ற உண்மையை சௌமியா மீராவிடம் உளறி விடக்கூடும் என்று சந்துரு சொல்லாமல் விட்டது எந்தெந்த மாதிரி விளைவுகளை எற்படுத்துமோ?
பொண்ணை அழைத்து வர சொன்னவர் மீராவை தன பக்கத்திலேயே உட்கார வைக்க “லட்சுமி மா” என்றவளை “அத்தனு சொல்லுமா” என்று பரம்பரை நகையை அணிவிக்க மீராவுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
வந்திருந்த பெண்களும் லட்சுமி அம்மா விடம் “பொண்ணு அழகா இருக்கா உனக்கேத்த மருமக தான்” என சிலாகிக்க அங்கே நடந்த பேச்சுக்கள் மீராவின் சிந்தனையை சௌமியா சொன்னது உண்மையா இருக்குமோ என யோசிக்க வைத்தது சௌமியாவும் “என்னடா நடக்குது இங்க” என்ற பார்வையிலேயே இருக்க, முதல் முதலாக மீராவை புடவையில் பார்த்தவனுக்கு அவளை விட்டு எங்கும் கண்ணை திருப்ப முடியவில்லை. அவளுக்கான அலங்காரமும் அவளை தேவதையாக காட்ட சைதன்யன் மீராவை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்துக்கொண்டிருந்தான்..
அவனை சந்துரு ஓட்டிக்கொண்டிருக்க “இருடா நல்லவனே உன் கல்யாணத்துல வைக்கிறேன் வேட்டு என கருவிக்கொண்டான். ப்ரியாவை அழைத்த தேவ் மீராவை உள்ளே அழைத்து செல்லு மாறு கூற ப்ரியாவும் சௌமியாவுக்கு கண்ணை காட்ட அவளும் மீராவுடன் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்த மீராவிடம் சௌமியா” என்னடி அவங்க பையனுக்கு பொண்ணு பாக்க வந்த மாதிரியே பேசுறாங்களே! ஒரு வேல நா சொன்னது தானோ! சரவணன் சார் வாலிபத்துல வழுக்கி விழுந்துட்டாரோ!”
மிராவும் அறையை அளந்தவாறே “சீ வாய கழுவு” என சொல்லியவாறே நடக்க “ஒரு இடத்துல உட்காரு”என அவளை இழுத்து அமர வைத்தவள். “ஒரு வேல அவங்க பையனுக்கு தான் உன்ன பாக்க வந்தங்களோ! அண்ணா வேற அமைதியா இருக்குறத பாத்தா அண்ணா வரும் முன்னாடியே இந்தம்மா வந்ததால வளத்தவங்க பாசம் னு அவங்க பையனுக்கு உன்ன கல்யாணம் பண்ணட்டும்னு அமைதியா இருக்காரோ!” { நீ தமிழ் சினமா பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்ட} என மீராவை நன்றாக குழப்ப மீராவின் மனமோ வேகமாக அடிக்க ஆரம்பித்தது.
நாம மட்டும் போனா போதும் வேணும்னா நேசமணி குடும்பத்தை அழைத்து செல்லலாம் னு சரவணன் சார் சொல்லி இருந்தும் லட்சுமி அம்மா சொந்தபந்தங்களை அழைத்து வந்து அவர்கள் பேசியவற்றை கேட்டு மீரா குழம்பி இருக்கிறாள் என புரிந்துக்கொண்ட சரவணன் சார் பொண்ணு பாக்கவே இப்படின்னா நிச்சயதார்த்தம்னு ஒரு ஊரையே கூட்டிட்டு வருவான்னு சரியாக லட்சுமி அம்மாவை கணித்தவர்.
“எல்லாரும் இருக்குறதால நிச்சயதார்த்தத்தையும் இப்போவே செய்யலாமே இன்னைக்கு நல்ல நாளும் கூட ” என அதை லட்சுமி அம்மா மறுத்து பேசிட முன் தேவுக்கு கண்ணை காட்டிய வாறே சொல்ல அதை புரிந்து கொண்டவன் ” ஆமா ஆமா மீரா வேற ரொம்ப சந்தோசமா இப்போ லட்சுமி அம்மா பண்ணதே பார்த்து அதிர்ச்சியை இருக்கா இன்னும் நிச்சயதார்த்தம்னு பெருசா பண்ண சந்தோசம் தாங்காம மயங்கி விழுவா னு சத்தமாக சிரிக்க
மீராவை பார்த்தவுடன் ஆர்வக் கோளாறுல அவள் நிலையை மறந்து தான் நடந்து கொண்டதை நினைத்தவர் அவளுக்கு ஏதாவது என்ற உடன் அமைதியானார்.சைதன்யனோ கனவுலகில் இருக்க இங்கே நடந்தவைகளை சாதாரணமாக பாத்திருந்தான்.
சைதன்யனை அணுகிய வினு “நீங்க தான் மீராவ கல்யாணம் பண்ண போறிங்களா! பாட்டி தேவ் தான் பண்ணனும்னு சொல்றாங்க” னு சரியான சமயத்தில் சொல்ல என்னடா புது குழப்பம் என்ற பார்வைதான் அவனிடம். சைதன்யன் என்ன நினைப்பானோன்னு தேவும் தர்மசங்கடமாக உணர குட்டிக்குழந்தையை அதட்ட மனமில்லாது வெற்றுப்பார்வை பார்க்க
ரவிக்குமார் உடனே “தேவ்கு ஒரு தம்பி இருந்தா மீராவ அவனுக்கே கட்டிக்கொடுத்துடலாம்னு அக்கா அடிக்கடி சொல்வா அத தான் வினுக்குட்டி புரிஞ்சிகிட்டு இப்படி சொல்றா” என சூழ்நிலையை சமாளித்தவாறே அவளை மடியில் அமர்த்திக்கொண்டார்.
வந்திருந்த பெண்களுக்கும் “மீராக்கு முறைப்பையனான தேவுக்கு வெளில பொண்ணு எடுத்து இருக்காங்க” என்ற கேள்வியை லட்சுமி அம்மாவிடம் கேட்டிருந்தாலும் தேவுக்கும் மீராவுக்கு அதிக வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி இருந்த படியால் வினுவின் கேள்வியை அப்பெண்கள் பெரிதாக எடுக்கவில்லை.
வம்பு வழக்கும் நோக்கத்துடன் ஒரு பெண்மணி “ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சா? பொண்ணு அம்மா வேற அல்பபாய்சுலா செத்து போய்ட்டாங்களாமே? ” என கேள்வி எழுப்ப சரஸ்வதி அம்மா தான் கலங்கி நின்றார். நல்ல உள்ளம் கொண்ட லட்சுமி அம்மா அவர் பேச்சை கண்டுக்காது “அதெல்லாம் பத்து பொருத்தமும் நல்ல பொருந்துது” என பேச்சை முடித்துக்கொண்டார்.
இந்த கலவரத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் சரஸ்வதி அம்மா ப்ரியாவிடம் சுமூகமாக நடந்துக்கொண்டது.
அறையில் மீரா நகத்தை கடித்தவாறு அமர்ந்திருந்தாள்.