அத்தியாயம் 13
ஆபிசிலிருந்து வெளியேறி காருக்குள் ஏறிய மீராவிடம் “ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?”என ப்ரியா கேட்க “எங்க வேத் அத்தான் வரலையா அத்து” “ஏன் உங்க நொத்தான் வந்தா தான் காருல வருவீங்களோ?” ப்ரியா நொடித்துக்கொள்ளா.” ஐயோ செல்ல அத்து வினு மாதிரியே பண்ணுறியே!” “நா வினு மாதிரி பண்ணுறேனா? அவ தான் என்ன மாதிரி பண்ணுறா!” சிரித்து பேசியவாறே ஒரு காபி ஷாப்பில் வண்டிய நிறுத்திய ப்ரியா “வா உன்கூட கொஞ்சம் பேசணும்.
“காருல வரும் போது பேசிக்கொண்டு தானே வந்தோம்.” அவளை இழுத்து சென்ற ப்ரியா அமர்ந்து காபிக்கு ஓடர் கொடுத்து விட்டு “சொல்லு மீரா என்ன பிரச்சினை உனக்கு” “பிரச்சினையா? எனக்கா? என்ன கேக்குற அத்து புரியல!” புரியாத பார்வை பார்த்தவளை
” ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்க என்ன விஷயம்.” ஒரு கணம் முழித்தவள் புன்னகைத்து ப்ரியாவின் கையை பிடித்து “அத்து டென்ஷன் ஆகாத எனக்கு ஒருத்தர பிடிச்சிருக்கு அவரும் என்ன லவ் பண்ணுறார்” முகம் மாறினாள் ப்ரியா. அது யார்? எவரென? எல்லா வற்றையும் கேட்டுத்தெரிந்து கொண்டாள்.
ப்ரியாவுக்கு நிறையா யோசிக்க வேண்டி இருந்தது.தேவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவளாக “சரி உன் வேத் அத்தான் இருக்கும் போதே பேசலாம் வா இப்போ வீட்டுக்கு போலாம். சரியென தலை ஆட்டியவள் பிரியாவுடன் வீட்டுக்கு கிளம்பிச்சென்றாள்.
தேவிடம் இரவில் பேசலாம் என்றிருந்த ப்ரியாவிற்கு எமெர்ஜென்சி என ஹாஸ்பிடலுக்கு போனவளை விடியும் வரை அப்பிரசவ அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.
{நம்ம ஜென்ம ஜென்மங்களானாலும் கூட ஜீவன் உன்னோடுதான் தமிழ் செலிவிக்கு தான் பா பிரசவம் பாத்தா}
சரவணன் சௌதாகரின் வீட்டு போட்டிக்கோவில் காரை நிறுத்தினான் தேவ். வீடு என்று சொல்வதை விட மினி அரண்மனை என்றே சொல்லலாம் இரண்டு மாடி கொண்ட வீடானாலும் நீச்சல் குளம், பெரிய தோட்டம், பின்னாடி பாஸ்கெட் பால் விளையாட, 5, 6 கார்கள் நிறுத்த கூடியவிதமாக இன்னும் என்னவெல்லாம் என்று தேவ் பார்வையே சுழற்றும் போதே வெளியே வந்த சரவணன் சார் “உள்ள வாங்க தேவ்”என்றழைத்து கூடவே அமர்ந்துக்கொண்டார்.
“என்ன சாப்பிடுறீங்க தேவ்” ” நோ தேங்க்ஸ் சார் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கீங்கன்னா ஏதாச்சும் நல்ல விஷயம் பேசவா?
அனாதையாக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ‘அன்பு’ இல்லம். அனாதையான குழந்தைகளுக்கு ‘வெற்றி’ இல்லம். படிப்புக்காக ‘கல்வி’ டிரஸ்ட் இப்படி எல்லாம் செயிரீங்க என்ன கூப்டு இருக்கீங்கன்னா! மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யா ஆச படுறீங்களா?”
தானாகவே காரணம் கண்டு பிடித்து தேவ் சொல்ல சத்தமாக சிரித்த சரவணன் சார் “இது நல்ல ஐடியாவாக இருக்கே பண்ணிடலாம் தேவ் டோன்ட் ஒர்ரி”
அவர் சிரிப்பை புரியாது பார்த்தவன் லட்சுமி அம்மா வரவே எழுந்து வணக்கம் வைத்தான்.குசலம் விசாரித்தவர் குடிக்க ஏதாவது கொண்டுவருமாறு பொன்னம்மாவை பணித்தார். தேவ் சொன்னதை லட்சுமி அம்மாவிடம் பகிர்ந்தவர். கல்யாணப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என லட்சுமி அம்மாவின் முகம் பார்க்க “மீரா எப்படி இருக்கா? வரன் எதுவும் பார்க்கலயா?” இதுக்கு தான் பெண்கள் வேணுங்குறது சட்டென்று கேட்டு விட்டார்கள்.
“இனிமேல் தான்மா பாக்கணும்” ” எந்த மாதிரி இடம் பாக்குறீங்கா?” “பெருசா ஒண்ணுமில்லமா மீராவ நல்லா பாத்துக்கிட்டா போதும்” “மீராவ எங்களுக்கு குடுக்குறீங்களா?” ஒரு கணம் அவரை புரியாது பார்த்தவன் யோசனைக்குள்ளானான்.
சைதன்யனின் அருமை பெருமைகளை அல்லி விட்டவர். சரவணன் சாரின் குடும்ப பாரம்பரியத்தையும் சுருக்கமாக சொல்லி தேவை ஏறிட அவனோ சரவணன் சாரை ஏறிட்டான். இவ்வளவு நேரமாய் அமைதியாக இருந்தவர் “எங்களுக்கு முழு சம்மதம் பா. தனுக்கு கூட சம்மதம் உனக்கு விருப்பமென்றால் உங்க வீட்டுல பேசிட்டு சொல்லு.
சரவணன் சாரை தொழில் ரீதியாகவும் லட்சுமி அம்மாவை போட்டிக் வரும் போதும் பார்த்ததுண்டு இந்த குடும்பத்தில் மீரா இருந்தால் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் இருப்பாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தேவின் குழப்பமான முகத்தை கண்டு “என்ன தேவ் ஏதும் பிரச்சினையா”
ஆபீஸ் செல்ல தாயாராகி வந்த சைதன்யன் தேவ்வை கண்டு பாதியிலேயே நின்று விட்டான். தேவையும் மீராவையும் கணவன் மனைவின்னு தப்பாய் நினைத்ததை நினைத்து தலை கோதியவன் புன்னகைத்தான். லட்சுமி அம்மா கல்யாணவிசயம் பேசவும் உச்சி குளிர்ந்து போனவன் அவர்கள் பேசுவதை கவனிக்கலானான்.
தேவின் குழப்ப முகம் கண்டு அங்கே விரைந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி பொதுவான விஷயங்கள் பேசி விட்டு “அம்மா பேசியட கேட்டேன் தேவ் எனக்கு முழு சம்மதம்” என்று சிரித்தவாறே கூறியவனை தேவ்வுக்கும் பிடித்துப்போனது.
மீராவின் நிலையை இவர்களிடம் சொல்லிவிடலாம் என முடிவு செய்தவன் “மீராவை பத்தி சில விஷயங்கள் சொல்லனும் அத நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியாது” என்று மூவரினதும் முகத்தை மாரி மாரி பார்க்க ” ” எதுனாலும் தயங்காம சொல்லுபா’ லட்சுமி அம்மா சொல்ல,
சத்தம் எழுப்பி தொண்டையை சரி செய்தவன் “மீராகு 7 வயசுல அத்த கூட கடைக்கு போனபோது அத்த எச்சிடேன்ட் ஆகி இறந்துட்டாங்க, அத்தைய இரத்த வெள்ளத்துல பார்த்த மீரா ‘அம்மா அம்மா’ என்ற வண்ணம் தான் இருந்தா! அவ அத்த கிட்ட பேசுறதும் சாப்பாடூட்ட வாம்மா என இல்லாத அத்தையின் புடவைய இழுக்கிற மாதிரி கெஞ்சுறதும், நாங்களும் பெருசா கண்டுக்கல,
இந்த மாதிரி நெறய பண்ணப்போ பயந்து போய் சரியான நேரத்துல கண்டு பிடிச்சதால டாக்டரா பாத்து சரி பண்ணிட்டோம். அவளை அப்படி பாத்ததுக்கு அப்பொறம் தான் நா இது சம்பந்தமா படிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.
புன்னகைத்த சரவணன் சார் “அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லப்பா அதான் இப்போ சரியாகிருச்சே” லட்சுமி அம்மாவுக்கும் மீராவின் முகம் நியாபகத்தில் வந்து கண்ணில் நீர்கோர்த்தது.சைதன்யன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியல, தேவின் கையை பிடித்தவன் “மீராகு எல்லாமா நா இருப்பேன்” என்றான் வலி நிறைந்த புன்னகையுடன்.
சைதன்யனின் செயலால் கவரப்பட்ட தேவ் அவனின் கைகளை இறுக்கிப்பிடித்தவன் ஒரு கசந்த புன்னகையை சிந்தியவாறே “அவளுக்கு இன்னும் பிரச்சினை இருக்கு” ஆழ மூச்சை இழுத்து விட்டவன் 6 வருடங்களுக்கு முன் நடந்த ஏக்ஸிடண்ட் பத்தி விவரிக்கலானான்.
இங்கே தீரமுகுந்தன் திரும்பவும் லிபிட்டினுள் சைதன்யன் மீராவை அனைத்திருந்த காணொளியை ஓடவிட்டவாறு 6 வருடங்களுக்கு முன் மீராவை சந்தித்த விதம் பற்றி எண்ணலானான்.
தீரமுகுந்தனும் விசுவாதீரனும் இரட்டையர்கள். {my another story heroes}
விஷ்வதீரன் I .P .S ஒரு கேஸ் விஷயமாக தம்பி தீரனுடனும், ஸ்கூபியுடனும் ஜீப் இல் வந்து கொண்டிருந்தான் சரியான பேய் மழை வேறு வண்டியை ஒட்டி வந்தது தீரமுகுந்தன்.
இரண்டு பசங்களும் போலீஸ் ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசையென்பதால் கணனியில் ஆர்வமாக இருந்த தீரமுகுந்தன் அதில் தேர்ச்சி பெற்று ‘ஸ்பெஷல் கிரைம்’ எனும் பிரிவில் தனது திறமையை சிறப்பாக செய்துவருகிறான்.
அன்றும் வண்டியை மழையென்றும் பாராம அதி வேகமாக வளைவுகளில் வந்தவன் ஒரு வளைவில் குறுக்கால வந்த பெண்ணின் மேல் மோதி விட்டான்.
அப்பெண் வண்டியில் மோதியது மட்டுமல்லாது தூக்கி வீசப்பட்டு பள்ளத்தில் விழுந்துவிட்டாள்.
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியும் அப்பெண் தூக்கி எறியப்பட்டதை கண்ட அண்ணன் தம்பி இருவரும் குதித்திறங்கினர். பள்ளத்தை நோக்கி வேகமாக நீர் ஓடிக்கொண்டிருக்க அண்ணன் தம்பி இருவரும் கீழே பார்க்க பாறையில் தலை மோதியவளின் இரத்தம் சகதியுடன் கலந்தது விஷ்வதீரன் பள்ளத்தில் சறுக்கி இறங்கி பார்க்க கண்கள் சொருகி மயக்க நிலைக்கு சென்றாள் மீரா.
ஸ்கூபி வேறு ஊளையிட “சட் அப் ஸ்கூபி” என்று அதை அடக்கியவன். ஜீப்பில் இருந்த கயிறை எடுத்து ஒரு முனையை ஜீப்பில் கட்டி மறுமுனையை பள்ளத்தை நோக்கி வீசினான் தீரமுகுந்தன்.
கயிறை தன் இடுப்பில் கட்டிக்கொண்ட விஷ்வதீரன் மீராவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன். அவளது கைப்பையையும் இடுப்பில் சொருகியவன். கயிறை இழுத்து தம்பிக்கு சைகை செய்ய ஜீப்பை ரிவெர்ஸில் எடுத்தான் தீரமுகுந்தன்.
ஜீப் நகர நகர மீராவை தூக்கிக்கிக்கொண்டு வழுக்கும் அப்பாதையில் மட மட வென ஏறி மீராவை ஜீப்பின் பின் கிடத்தி “தீரா குயிக்” என்றான் ஜீப் வேகமெடுத்து மருத்துவமனை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஸ்கூபி “வெவ் வெவ்” வென கத்தியவாறிருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீராவின் நிலை மிக மோசமாக இருக்க அண்ணன் தம்பி இருவரும் இரத்தம் வழங்கினார். இருந்த இடத்திலிருந்தே விசுவாதீரன் மீராவை பற்றிய தகவல்களை திரட்டியவன் தேவ்வை அழைத்து விஷயத்தை சுருக்கமாக சொன்னான்.
மழையில் மெதுவாக போவென தீரன் கூறியும் வேகமாக போனதால் தான் இப்பெண்ணின் நிலைக்கு தான் காரணமாகி விட்டேன் எனக்கூறி தேவ் வரும் வரை இருப்பதாக தீரமுகுந்தன் கூறவே விஷ்வதீரன் விடைபெற்றான்.
ரவிக்குமார் இராணுவத்தில் இருந்ததால் சரஸ்வதியிடம் வெளியூர் போவதாக சொல்லி தேவ் ஒருவாறு வந்து சேர அதிகாலை ஆனது.
மூன்று நாட்களாக கண் திறக்காமல் மீரா இருக்கவே கோமாவிற்கு போய் விடுவாளோ என பயந்து போன தேவ் அவளை சென்னைக்கு அழைத்து செல்வதாக கூற இன்னும் ஒரு நாள் பொறுக்குமாறு டாக்டர் கூற, தீரமுகுந்தனின் நிலையோ வேதனையை தத்தெடுத்தது.
எவ்வளவோ கிரிமினல்களை சுட்டுக்கொண்டவனுக்கோ தன்னால் ஒரு குழந்தை போல் உள்ள பெண்ணுக்கு நேர்ந்ததை மன்னிக்க முடியவில்லை.மீரா சென்னை போகும் வரை எல்லா உதவிகளையும் தேவுக்கு முன்னின்று செய்துகொடுத்தான். அவள் கண்விழிக்கும் வரை எல்லாம் செய்தவன் கண்விழித்த உடன் நிம்மதியாய் அவ்விடம் விட்டு சென்று விட்டான்.
அதற்கு பிறகு மீரா என்ன ஆனால் என்று யோசிக்க அவன் வேலை விடவில்லை. அவளை எஸ்.எஸ். குரூப் ஒப் கம்பெனியில் கண்டவுடன் உரிமையாக பேசத்துவங்கினான் திரும்ப தேவ்வை சந்தித்த பிறகே மீராவுக்கு நடந்தது அறியவந்தது. அவளை கண்கணிக்கலானான் ஒரு பாதுகாவலனாய்.
எல்லா வற்றையும் யோசித்தவன். லிபிட்டினுள் நடந்ததை க்ளியரா வெரி பை பண்ணியவன்.இருவரும் காதலிப்பதாக முடிவு செய்தவன். சைதன்யன் தனஞ்சயனாக இருப்பது ஏன் என புரியாமல் குழம்பினான்.
மீரா கண்விழித்தாளா?