அத்தியாயம் 12      

   அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன்.  பக்கத்தில் சந்துரு அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் ” என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி வேல எல்லாம் பாக்க முன்னாடி இவனுக்கு பாக்கவேண்டி இருக்கே! என்னத்த குடிச்சி தொலச்சானோ மயங்கியே இருக்கான்.

மீரா சிஸ்டர் வேற போன் பண்ணிகிட்டே இருக்காங்க!  அவங்களுக்கு பயந்தே என் மியா குட்டிய பாக்க போகல அவ வேற போன் மேல போன் போட்டு எங்க இருக்கானு உயிர வாங்குறா! அவ கிட்ட காபி வேற கலெக்ட் பண்ண முடியல” என புலம்ப.  

“டேய் கோட் வர்ட் கு பொறந்த தறுதலை  தூங்க விடுடா கத்தாதே”

“எந்திரிச்சிட்டியா ராசா! மகாராசா! அப்படி என்ன சரக்குடா அடிச்ச? நாலு நாளா மயக்குத்துல இருக்க இதெல்லாம் என்கூட ஷேர் பண்ண மாட்டியே!” கடுப்பாய் மொழிந்தான் சந்துரு.

டாக்டர் வந்து பார்த்து விட்டு “நவ் யு ஆர் பேபெக்ட்டிலி  ஓல் ரைட். உங்க உடம்புக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும் எல்லா சரக்கையும் குடிச்சு இருக்கீங்களே! குடல் வெளிய வர்ற அளவுக்கு வாமிட் பண்ணி இருக்கீங்க! உங்க அப்பா சரியான டைம் கு அட்மிட் பண்ணதால ப்ரொபேர் ட்ரீட்மெண்ட் அளிக்க முடிஞ்சது. உடம்ப பாத்துக்கோங்க யங் மேன்.

சந்துருவின் வாயோ ” அடப்பாவி” என்றது.

நான்கு நாளைக்கு முன்

சைதன்யன் வீடு வந்து சேராது இருக்கவே அவனுடைய மொபைல் போனிற்கு அழைத்து ஓய்ந்த லட்சுமி அம்மா சரவணன் சாருக்கு அழைத்து அழுதே விட்டார்.

சைதன்யன் எங்கே இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீட்டுக்கு தொடர்ப்பு கொள்வான். காலையில் சரவணன் சரிடமும் இரவில் லட்சுமி அம்மா விடமும் பேசாமல் இருக்க மாட்டான்.

“நா தான் லட்சு ஒரு வேலையா அனுப்பினேன் மொபைல் ல சார்ஜ் இருந்திருக்காது, அழாத நா பாக்குறேன். அவருக்கும் பயம் வந்து விட்டது.

ஆபிசிலிருந்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தவருக்கு   நண்பனொருவரிடமிருந்து அவர் இந்தியா வந்திருப்பதாக போன் வரவே வீட்டுக்கு சென்றாலும் லட்சுமி அம்மா கேட்க்கும்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட நண்பனை பார்க்கச்செல்வதே மேல் என எண்ணியவாறாக லட்சுமி அம்மாக்கு அழைத்து, எட்டு மணியளவில் வீடுவருவதாக சொன்னவர் நண்பருடன் ஐக்கியமாகிவிட்டார்.

லட்சுமி அம்மா அழைத்து சைதன்யனை காணவில்லை என்றதும் ஏதோ சொல்லி சமாளித்தவருக்கும் பயம் பிடித்துக்கொள்ள நேசமணியை அழைத்து சைதன்யனின் மொபைல் கடைசியாக எந்த இடத்தில் ஸ்விட்ச் ஆப் ஆனது என்று பார்க்க சொன்னவர். அவரின் தகவலுக்காக காத்திருந்தார்.

பத்து நிமிடங்களை எடுத்துக்கொண்ட நேசமணி சைதன்யனின் போன் இருக்கும் ஏரியாவை சொல்ல தங்களுடைய ஆபீஸ் சம்பந்தமா  வெளியே இருந்து வரும் கிளைண்ட்களை தங்க வைக்க கட்டப்பட்ட ஒரு வீடு இருக்கும் பகுதி என்பதால் அங்கே விரைந்தார்.

அங்கே சைதன்யன் ஹாலிலேயே மயங்கி இருக்க வீடு முழுவதும் பாட்டில்களும் அவன் வாந்தி எடுத்ததன் காரணமாக நாரியா வீடே வரவேற்றது. காவலுக்கு இருந்தவரும் சரக்கடிச்சு கவுந்து படுத்திருந்தார். அவரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தவர்.  நேசமணியும் வந்துசேர இருவருமாக சைதன்யனை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தனர்.

காவலாளியிடமிருந்த நாட்டு  சரக்கையும் அவன் வாங்கி சென்ற நாலைந்து பாட்டில்களையும் கலந்து குடித்திருந்தான். ஒவ்வாமையின் காரணமாக வாந்தி எடுத்தவன் மயக்கமடைந்தான்

இடையிடையே விழித்தாலும் சோர்வின் காரணமாக தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் மொபைல் அந்த வீட்டிலேயே அவனை போலவே தூங்கிக்கிடந்தது.

அவனை வேலை விஷயமாக பெங்களுர் அனுப்பியதாக சரவணன் சார் கூறி லட்சுமி அம்மாவை   சமாதானப்படுத்தினார்.

மூன்று நாட்கள் பொறுமையாக இருந்தவர் பொறுக்க முடியாமல் சரவணன் சாரை ஒரு பிடி பிடித்து விட அவரை அழைத்துக்கொண்டு சைதன்யனை பார்க்க கிளம்பிவிட்டார்.

டாக்டர் சென்றதும்  ” என் மொபைல் எங்கடா” யாருக்கு தெரியும்  நாலு நாளா நா இங்க தான் இருக்கேன் அப்படி ஒன்ன கண்ணுல காணல”சந்துரு சொல்ல “நாலு நாளாவா இருக்கேன்” சைதன்யன் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தே விட்டான்.

” நா ஸ்ரீய பாக்கணும் டா என எழும்ப போனவனை” மொதல்ல போன் ல பேசு அப்பொறம் போகலாம்.  நாலுநாளில் கஞ்சிக்கே வழி இல்லாதவன் போல ஆகிட்ட உன்ன இப்படி பார்த்தா எந்த கோவில்ல பிச்சை எடுக்குறீங்கனு சிஸ்டர் கேப்பாங்க” அவனை முறைத்தவாறே போனை பிடுங்கியவன் மீராவை அழைத்தான்.

 

சந்துருக்கு அழைத்து அழைத்து பார்த்து பொறுமையை இழந்தவள் கால் போன போக்கில் நடந்து தீரமுகுந்தனின் மேல் மோதி நின்றாள். அவனுடன் பேச பிடிக்காது நகர்ந்தவள் கண்ணில் நீர்கோர்க்க  அவளிருக்கையில் வந்தமர்ந்தாள்.

போன் ஒலி எழுப்பவே கண்ணில் நீருடனையே  சந்துருவின் எண்ணை கண்டவள் சைதன்யனை பேசவிடாது “த்ரூ அண்ணா அவர்… அவருக்கு ஒண்ணுமில்லயே! நீங்க அவர் கூடத்தான் இருக்கீங்கல்ல! நல்லா இருகாரில்லா! ஏன் ஆபீஸ் வரல! உடம்புக்கு ஏதும் பிரச்சினையா!” என கேட்டுக்கொண்டே போக,

அவள் தன்மேல் வைத்திருக்கும் காதலை  கண்டு “ஸ்ரீ…. ஸ்ரீமா ” என்றவனது குரல் காதில் தேனாய் பாய “ஜெய்………நீங்களா! எங்க இருக்கீங்க! உடம்பு முடியாம இருக்கீங்களா!” அவளின் ஜெய் என்ற அழைப்போ அவனின் மூளைக்கு எட்டவில்லை.

அவள் பதட்டத்தை தாங்கமுடியாதவனாக “எனக்கு ஒண்ணுமில்ல ஸ்ரீ! ஒரு வேல விஷயமா வெளியூர் வந்துட்டேன் போன் காணாம போச்சு, நா நாளைக்கு ஆபீஸ் வரேன், நீ பதட்டப்படாம இரு. சரியா?”

“சரிங்க” “அப்போ வச்சிடவா” “சரிங்க” அவன் பேசிய சந்தோசத்தில் மொபைல் காணாமல் போனாலும் தொடர்ப்பு கொள்ள வேற வழியா இல்லை என்பதை மறந்து போனாள் மீராஸ்ரீ.

ஹாஸ்பிடலினுள் நுழைந்ததும் சரவணன் சாரின் கையை இறுக்கமாக  பற்றிய லட்சுமி அம்மா “தனுக்கு என்ன” கண்ணில் பயத்தை காட்டியவராக உடல் நடுங்க கேட்டார். அவரை அணைத்தவாறே “ஒண்ணுமில்லமா புட் பாய்சன்  இப்போ சரியாகிருச்சு” என்று கூறியவாறே அறையினுள் வந்து விட அவர் கூறியதை கேட்ட சந்துரு “புட் பாய்சன்!……. லிக்விட் பாய்சன்” என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தான்.

சைதன்யனின் கையை பிடித்துக்கொண்டு அருகிலேயே அமர்ந்தவர் நலம் விசாரிக்க ஆரம்பித்து சரவணன் சாருக்கு அர்ச்சனை பண்ணியே முடித்துக்கொண்டார். “இது உங்களுக்கு தேவைதான்” என்பது போல் சைதன்யன் சரவணன் சாரை முறைத்து பார்க்க.”உன்ன அப்போரமா கவனிக்கிறேன்” என்பது போல் பார்த்தார்.

அன்று ஆபீசில் இருந்து வெளியேறியவன் பைக்கில் மனம் போன போக்கில் சுத்திக்கொண்டிருந்தான். மனமோ நடந்ததை நினைத்து கொதித்துக்கொண்டு இருந்தது சடாரென பிரேக் போட்டவனின் வண்டி நின்றது ஒரு டாஸ்க்மார்க்கின் முன் இப்போது அவன் இருக்கும் மனநிலையில்  எல்லாவற்றையும் மறக்கணும்னு தோன்றவே எல்லா விதமான மதுபானவகையிலும் ஒவ்வொரு பாட்டிலை வாங்கிச்சென்றது அவன் வண்டியை நிறுத்திய ஏரியாவிலுள்ள அவர்களின் இன்னொரு  வீட்டுக்கு.

காவலாளியிடம் ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவருமாறு பணித்தவன் எல்லாவற்றையும் அப்பாத்திரத்தில ஊற்ற அதை பார்த்து நாவை எச்சில் படுத்திக்கொண்டு காவலாளி,

“தம்பி எங்கிட்ட நாட்டு சரக்கு இருக்கு குடிச்ச சும்மா குப்புன்னு போதை ஏறும்”

“நிஜமாவா! கொண்டுவாங்க” அதையும் கலந்து ஒரு பெரிய கிளாசில் ஊற்றியவன் மடக்மடக்கென்று அருந்த ஆரம்பித்தான். பாதிக்கு மேல் காலியாக,

‘இவன் குடிக்கிற ஸ்பீட்ல எனக்கு இல்லாம போகுமோ!’  என்று கவலைக்குள்ளான காவலாளி “தம்பி மெதுவாக குடிங்க” என்றவரை  போதையேறிய விழிகளால் பார்த்தவன்

“சூ…….ப்பர்யா! செமயா இருக்கு நீயும் குடி” குழறிகுலரிக்குரியவனின் வாய் மொழிக்காக காத்திருந்தவர் குடிக்க ஆரம்பித்தார். எல்லா வற்றையும் காலி  பண்ணியவன் தட்டுத்தடுமாறி எந்திரிச்சு வாசலுக்கு வந்து சேர்ந்தான். சில  நிமிடங்களின் பின் நிற்காமல் வாந்தியெடுத்தவன் மயங்கி சரிந்தான்.

ஒருவாறு வீடு வந்து சேர்ந்தான் சைதன்யன். லிபிட்டினுள் என்ன நடந்தது என்று விளக்கம் கேக்க விரும்பாதவராக தேவ்வை அழைத்து சந்திக்க வேண்டும் வீட்டுக்கு வரமுடியுமா என சரவணன் சார் கேட்டுக்கொள்ள நாளை காலை  வருவதாக கூறினான்.

நாளை சைதன்யனும் மீராவும் சந்திப்பார்களா!