அத்த்யாயம் 10
வீடு வந்தவர்களை சரஸ்வதியின் ஹை பிச் குரலே வரவேற்றது. வினு குட்டி பாட்டிக்கு பயந்து ஒரு மூலையில் கையை பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.
எதுக்கு இந்த அம்மா இப்படி கத்துறாங்கனு பாத்தா இந்த குட்டிப்பொண்ணு பண்ண வேல அப்படி.
ரவிக்குமார் அவருடைய மிலிட்டரி நண்பர் ஒருவர் தரும் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.
வினுவை போட்டிக்கில் வைத்துக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு ஹெல்ப் பண்ணுரேங்குற பேரில் கத்தரிக்கோலால் துணிகளை வெட்டி விட்டிருந்தாள். கடுப்பான சரஸ்வதி அம்மா வீட்டுக்கு அழைத்து வந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனலை வைத்து பார்க்குமாறு போட்டிக் பக்கம் நகர்ந்தவுடன்,
பிரிஜ்ஜெய் திறந்து சாப்பிட என்ன இருக்குனு தேடி எல்லாவற்றையும் வெளியே சிதறவிட்டாள்.
பின்பு ஆப்பிளை கழுவித்தான் சாப்பிடணும்னு குழாயை திறந்து விட்டு வந்து விட்டாள்.அங்கே சமையலறை வெள்ளத்தில் மூழ்கியது.
ஆப்பிள் கழுவும் போது போட்டிருந்த ஆடை நனைந்ததால் ஆடை மாற்றவென அறைக்கு சென்றவள் அலுமாரியிலிருந்த துணிகளை பறக்கவிட்டாள். வெளியே வந்து சமத்தா தொலைக்காட்சியை தான் பார்த்துக்கொண்டு ஆப்பிள் சாப்பிட்டாள்.{ நல்லவேளை ஆப்பிளை கட் பண்ணி தான் சாப்பிடணும்னு யாரும் சொல்லல}
வீட்டில் அத்தனை வேலைகளையும் சரஸ்வதி அம்மாவே பார்ப்பார். சமையலுக்கும் ஆள் வைக்க விரும்பாதவர். ஒரு பொழுதுபோக்குக்காகவே இன்னும் போட்டிக்கை நடாத்தி வருகிறார். நான்கு, ஐந்து பேர் தைப்பதற்கு இருந்தாலும் துணி வெட்டுவதை அவரே செய்வார். நல்ல வருமானம் வரும் என்றாலும் அதை விரிவுபடுத்த முயற்சிக்கவில்லை.தேவும் சொல்லிப்பார்த்து விட்டான். ” இது போதும்பா” என்று விட்டுவிட்டார்.
மீராவிடம் எந்த வேலையும் வாங்க மாட்டாங்க. ப்ரியா தானாய் வந்து செய்தாலும் பிடிக்காது.
தம்பி மனைவி சகுந்தலாவின் மேல் அளவுக்கதிகமா பாசம் வைத்துவிட்டார்கள். அதே பாசம் மீராவின் மேல் இம்மியளவும் குறையாமல் இருந்தது. தேவ்வை மீராவுக்கு காட்டிக்கொடுக்கும் எண்ணம் எல்லாம் இருந்ததில்லை. எப்போ சகுந்தலா எக்சிடெண்டில் உயிரை விடும்போது ” அண்ணி என் பொண்ண அம்மாவா பாத்துக்கோங்க” என்று கேட்டார்களோ! அக்கணம் எடுத்த முடிவுதான் தேவ் மீரா திருமணம். இடையில் மீரா எக்சிடெண்ட் ஆகா அவரது முடிவோ உறுதியானது.
தேவ் ப்ரியாவை காதலிப்பதாக வந்து நின்றதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மீராவின் பிடிவாதம் தான் ஜெயிச்சது.
ப்ரியாவிடம் முகத்திருப்பாளாலும் , ஜாடைமாடையான பேச்சுக்களாலும் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துவார். ப்ரியாவின் அச்சு அசலாக பிறந்ததினாலேயே வினுவிடமும் அவரின் கோபம் வெளிப்படும்.
ப்ரியாவும் தேவும் வேலைக்கு போகும் போது வினு மீராவுடன் ஐக்கியமாக்கினாள். இப்பொழுது மிராவும் செல்வதால் ரவிக்குமார் பார்த்துக்கொள்கிறார்.
போட்டிக்கில் வேலை இழுத்துக்கொள்ள இரண்டு மணித்தியாலத்துக்கு பின் தான் வினுவின் நியாபகம் வந்தவராக ” ஐயோ புள்ள என்ன செய்யுதோ” என்று பதறியவராக வீட்டுக்கு வந்தவரை வெள்ளத்தில் மூழ்கிய வீடே வரவேற்றது.
ப்ரியாவின் மேல் இருந்த வெறுப்பும், மனதிலுள்ள கவலையும் வாய் வார்த்தையாக வெளிப்பட்டு ஹை பிச்சில காத்த தொடங்கினார். பயந்து போன வினுக்குட்டி கதிரையிலிருந்து துள்ளி எழுந்தவள் ஒரு மூலைக்குள் தஞ்சமடைந்தாள்.
பாட்டி எதுக்கு கத்துறாங்கனு தெரியாத மூன்றுவயதே ஆனா சுட்டிப்பொண்ணுக்கு தான் செய்து வைத்திருக்கும் வேலை அறியவில்லை.
காரை நிறுத்திய தேவிற்கு சரஸ்வதி அம்மா ப்ரியாவை திட்டுவதே காதில் விழுந்தது. ப்ரியாவை ஒரு பார்வைப்பார்த்தவன் வீட்டினுள் ஓட ப்ரியாவும் ஓடினாள். உள்ளே வந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று நொடியில் புரிந்தது. வினுவை தூக்கி அணைத்தவான் ப்ரியாவிடம் தந்து அறையினுள் செல்லுமாறு கண்ணாலேயே சொல்ல ப்ரியாவும் குழந்தையுடன் சென்றாள். ப்ரியாவை கண்டவுடன் இன்னும் சரஸ்வதி அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
தேவோ அம்மா மேல் வந்த கோவத்தை அடக்கியவாறு சுத்தம் செய்யா ஆரம்பித்தான்.
சாவுகாசமா வீட்டினுள் நுழைந்தாள் மீரா. அவள் சிந்தனையில் சைதன்யனே நிறைந்திருந்ததால் சரஸ்வதியின் குரல்கூட அவள் காதுகளில் எட்டவில்லை.
மீராவை கண்டபின்பு அமைதியானவர் சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். மீரா தனக்குள் உழன்றவாறே அவளறைக்கு சென்றாள்.
மீராவின் நடவடிக்கையை வலியோடு பார்த்திருந்தான் தேவ். இந்நேரம் சரஸ்வதி அம்மாவை உண்டுஇல்லை என்று ஒரு வழி பண்ணியிருப்பாள். அவளோடு தனிமையில் பேசவேண்டும் என்று முடிவெடித்தவனாக வேலையில் கவனமானான்.
அறைக்குள் வந்த ப்ரியா வினுவை பேசி திசை திரும்பியவரே அவளுடன் சேர்ந்த துணிகளை மடித்து அடுக்கலானாள்.
சரஸ்வதி அம்மா சமையலை முடித்து தனதறைக்கு புகுந்துக்கொண்டவர் மீரா தன்னிடம் பேசாதது உறுத்தவே தான் பேசியது அதிகப்படி என்று மனம் வருந்தினார்.
வீட்டில் நடந்த சம்பவம் மீராவின் கவனத்தில் இல்லை ப்ரியா அழைத்ததும் சாப்பிட்டவள், தனதறைக்கு புகுந்தவள் சந்துருவை அழைத்து சைதன்யனின் நம்பர் வாங்கியவள் அவனுக்கு அழைக்க அது அணைக்கப்பட்டுள்ளது என்று வந்தது.
வினுவை தூங்கவைத்து தேவ்வை தேடிய ப்ரியாவுக்கு தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்த தேவ் தென்பட்டான்.
“தேவ் தூங்கலையா?” ப்ரியாவை கண்டவன் கசந்த புன்னகையை சிந்தியவாறே “ஏன் ரியா உனக்கு அம்மா மேல கோவம் இல்லையா?”
“எனக்கு உங்கமேலதான் தேவ் கோவம் கோவமா வருது பெரிய மனோதத்துவ டாக்டர் என்று பேர் அவங்க அம்மா மனச புரிஞ்சிக்க முடியலையே!” கண்ணை உருட்டி மிரட்டி ஆரம்பித்தவள் குறும்பாக முடிக்க
அவளை புரியாத பார்வை பார்த்தவனை ” மிஸ்டர் தேவேந்திரன் உங்க அம்மாக்கு என் மேல எந்த கோவமும் இல்ல.
டாக்டரே! அவங்க மீரா மேல வச்ச பாசம் தான் அவங்கள இப்படி பேசவைக்குது.
வினு பிரசவிக்கும் போது எங்கம்மாக்கு ஹார்ட் ஆபரேசன் பண்ணதால அத்த தானே என்னையும் பாபாவையும் பாத்துக்கிட்டாங்க”
” உனக்கு மீரா மேல எந்த வருத்தமும் இல்லல” “ஹாஹாஹா போங்க தேவ் காமடி பண்ணிக்கிட்டு, அவ உங்களுக்கு மூத்த பொண்ணு, எனக்கும் தான்” என்றாள் கண்ணில் நீர்கோர்க்க.
அவளை இழுத்து அணைத்தவன். “இன்னைக்கும் உன்ன மொத மொத கோவில்ல மீரா அறிமுகப்படுத்தினாலே அப்போ ஒரு வெட்கப்புன்னைகையோடு என்ன பாத்தியே அப்பப்பா செமயா இருந்தடி” வெக்கப்பட்டு அவன் கன்னத்தை மெதுவாக கடித்தவள் நா உங்கள மொத மொத எப்போ பார்த்தேன்னு தெரியுமா?” “கொசுவாத்தியா சுத்தப்பொறியா?” “போங்க தேவ்”அழகாக வெட்கப்பட்டாள்.
புக் ஷாப்பில் நுழைந்த ப்ரியா தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு பில் காட்டும் போது இரண்டு பெண்கள் பேசுவதை தற்செயலாக கேட்டாள்.
“ஆள் பாக்க ஹீரோ மாதிரி இருக்காண்டி கொஞ்சம் திரும்பிபாக்குறானான்னு பாரு” “திமிரு புடிச்சவனா இருப்பான்”
யாரைப்பத்தி சொல்றாங்கன்னு தலையே அங்கேயும் இங்கேயும் திருப்பி பார்த்தவளுக்கு தேவ் தென்பட அப்பெண்களின் மேல் கோவம் வந்தது
“ஹலோ அது என் ஆளு பேசாம போய்டுங்க இல்ல அசிங்கமாய் போய்டும்” முகம் வெளிறியவாறு அப்பெண்கள் அகன்றுவிட
” ஹாஹாஹா அப்பவே தேவதைகள் அப்படியே ஆகட்டுன்னு வாழ்த்தி இருப்பாங்க” தேவ் இடைமறிக்க “குறுக்க பேசாதீங்க தேவ்” அவன் வாயில் ஆள் காட்டி விரலைவைத்து தலையாட்ட.
“அன்னைக்கு நா அப்படி ஏன் சொன்னேன்னு எனக்கு தெரியல தேவ் அப்பொறம் உங்கள மீராகூட காபி ஷாப்பில் பார்த்தேனா உங்கள நல்ல ரெண்டு அறையணும்னு தான் வந்தேன்” என்று சிரிக்க ஆரம்பித்தாள்.
“யம்மா தாயே பப்லிக்கில் அப்படி ஏதும் செஞ்சிடாதே” என்று தேவ் கைகூப்ப அவன் கையை இறுக்கிப்பிடித்தவள் “அன்னைக்குதான் இந்த தேவ் என் ஆளுனு டிசைட் பண்ணதே” என்று அவனை முத்தமிட அதை அனுபவித்தவன். “ஏய் குட்டச்சி அப்படி என்ன பண்ணி உன்ன இம்ப்ரெஸ் பண்ணேன்” அவனின் மடியில் அமர்ந்து கழுத்தில் மாலையாக கை கோர்த்தவள்.
வண்டியில் வரும் போது போன் வரவே வண்டியை நிறுத்தி பேச ஆரம்பித்தாள் ப்ரியா. அவள் வண்டியை நிறுத்தியது கண்ணாடியிலான முற்றிலும் உள்ளே நடப்பது வெளியே தெரியக்கூடிய ஒரு காபி ஷாப்.
பேசியவாறே உள்ளே பார்த்தவளுக்கு தேவ் மீராவை பின்னாடி அணைத்தவாறு உள்ளே தள்ளிச்செல்வது தெரிந்தது. ஏதோ தப்பாய் பட உடனே போனை கட் செய்து உள்ளே சென்றாள்.
மீராவின் முகம் கலங்கி இருக்கவே ப்ரியா நினைத்தது தேவ் அவளை மிரட்டி அழைத்து செல்கிறான் என்று. உள்ளே சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது உள்ளே அவர்களை காணவில்லை.
இங்கே லட்சுமி அம்மா சைதன்யனை காணவில்லை என அவனது மொபைலுக்கு முயற்சி பண்ணிக்கொண்டே இருந்தார்.
அது திரும்ப திரும்ப அணைத்துவைக்கப்பட்டுள்ளது என்றே ஒலித்தது.