Advertisement

                                                    அத்தியாயம் 13

 

ஷரப் வ்ருஷாத்துடன் சென்னையை நோக்கி பறந்த்துக் கொண்டிருந்தான். ஆன்ஷியை  விட்டுச் செல்ல மனம் இல்லாது, சென்னைக்கு அழைத்து செல்லவும் மனம் இல்லாது இருந்தவனை அணுகிய ஆன்ஷி

“பிஸ்னஸ் விஷயமாக தானே போறீங்க நான் இங்க பாட்டி, தாத்தாவுடன் இன்னும் ஒருநாள் இருக்கவா?” என்று கண்ணை சுருக்கி கெஞ்ச” அவள் வர மறுப்பது சற்று புரிய அவளை பிரிவதை நினைத்து நெஞ்சம் வலித்தாலும், அங்கே அழைத்துச் சென்றால் அவன் சரவணன் சௌதாகரின் குடும்பத்தார் மீது மனம் இளகி விடுவானோ என்று தோன்ற ஆன்ஷியை கோயம்புத்தூரிலேயே விட்டு விட்டு வ்ருஷாத்துடன் யொத்தாவை மீட்க சென்று கொண்டிருந்தான்.

 

ஷரப் நேற்று இரவு வ்ருஷாத்துடன் பேசி விட்டு அறைக்கு வந்து புன்னகை முகமாக தூங்கும் ஆன்ஷியை வெகுநேரமாக பாத்திருந்தவனுக்கோ தனது பாட்டி வசுந்தராதேவி இலகுவில் ஆன்ஷியை தனது மனைவியாக ஏற்க மாட்டார் என்று நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டு முறைப்படி கல்யாணம் நடந்திருந்தாலும் அதை வசுந்தராதேவி ஏற்றுக்கொள்ளாது மறுப்பதோடு மற்றுமில்லாது எவ்வழியிலாவது உடனே தனக்கு வேறு பெண்ணுடன் மனம் செய்து வைத்து விடுவர்.  என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு நல்லதொரு தீர்வும் கிடைக்க இரவென்றும் பாராது வ்ருஷாத்தை அழைத்தவன்

“உடனடியாக ஆன்ஷிக்கும் எனக்கும்  ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்கணும். நான் ராஜஸ்தான் போகும் போது எந்த காரணத்துக்காவது ஆன்ஷி என்னை விட்டு பிரிய கூடாது” என்று உத்தரவு போல் சொன்னவன் ஆன்ஷியை அணைத்தவாறே தூங்கி விட்டான். அன்று தான் வெகு நாளைக்கு பிறகு நிம்மதியாக தூங்கினானோ என்னமோ  சிரித்த முகமாகவே எழுந்தவன் ஆன்ஷியை தேட

காலையிலேயே குளித்திருந்தவள் பாட்டி கொடுத்திருந்த குட்டிப் பிள்ளையாரை வணங்கி கொண்டிருந்தாள். நன்றாக விடிந்திருந்தாலும் அவன் தூங்குவதை கெடுக்காமல் திரை சீலையை திறக்காது விட்டிருக்க, காற்றில் ஆடும் போது அதனூடாக வந்து போகும் ஒளிக் கதிரில்  தன்னவளின் முகம் ஜொலிப்பதை கண்ணிமைக்காது பாத்திருந்தவன் அவள் வணங்கி முடிந்த உடனே அவளை பின்னால் அணைத்திருந்தான்.

“என்ன பேபி காலையிலேயே குளிச்சிருக்க நமக்குள்ள தான் ஒண்ணுமே நடக்கலையே!. இப்படி குளிச்சி வாசமா என் முன்னால வந்தீனா நா எப்படி என்ன கண்ட்ரோல் பண்ணுறது?” ஆன்ஷியின் கழுத்தில் முகம் புதைத்தவாறே கூறிக்கொண்டிருக்க ஷரப் அணைத்ததில் அதிர்ச்சியடைந்தவள் அவன் சொல்லும் மொழி புரிய மேனி சிலிர்த்து வெக்கத்தில் இன்னும் சிவந்தாள்.

 

“நான் இப்போவே சென்னை போகணும் டி” என்றவாறே அவளை அவன் புறம் திருப்பி அவளின் கண்ணோடு கண்ணோக்கி பதிலை எதிர்பார்க்க

“மீண்டும் ஹெலிகாப்டரில்  போக பயந்தவள் “எப்படி மறுப்பது” என்று யோசிக்க…. ராஜஸ்தான் சென்றால் மீண்டும் தாத்தா, பாட்டியை காண முடியாது போய் விடுமோ என்று தோன்ற “தாத்தா பாட்டியுடன்  இந்த ஒரு நாள் மட்டும் இருக்கவா?” என கேக்க அதை ஓரளவு புரிந்துக் கொண்டவன்

தருணை அழைத்து தான் சென்னை செல்வதாகவும் ஆன்ஷி இங்கே ஹோட்டலில் இருப்பதாகவும் கூறியவன் தாத்தா பாட்டியை அழைத்து வரும் படி கேட்டுக் கொள்ள, தருணும் அழைத்து வருவதாக கூறினான். அவர்கள் வந்த பின்பே அனைவரிடமும் பேசியவன் ஆன்ஷியை பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு, அங்கே இருப்பவர்களை கண்டுக்காமல் அவளை முத்த மழையில் நனைய வைத்து விட்டே சென்னை நோக்கி புறப்பட்டான்.

***********************************

சென்னையில் சைதன்யன் சௌதாகர் வசிக்கும் செல்வந்தர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியிலுள்ள எஞ்சியிருந்த அனைத்து வீடுகளையும் ஒரே இரவில் வாங்கியவன் தனது திட்டத்தை செயல் படுத்த அவர்களை கண்காணிக்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவரை நியமித்தவன் தனது அனைத்து செயலிலும் கவனமாக அடியெடுத்து வைத்து யொத்தாவை நெருங்கினான்.

சென்னை வந்தடைந்தவன் நேராக சென்றது சைதன்யனை அடைத்திருந்த இடத்துக்கு அங்கே அவனுடன் சந்துருவும் இருக்க உறவு முறையில் சைதன்யன் அண்ணனே ஆனாலும் யொத்தாவை பெற அவனை கடத்தியது சரி என்றே தோன்றியது.

சைதன்யனின் மனைவியான மீராவையும் அவன் கஸ்டடியில் வைத்திருந்தவன் அவளுக்கு நடந்த எக்சிடண்ட்டையும் அவளின் அம்னீசியா நிலையையும் விசாரித்ததில் அறிந்து கொண்டவன் மீராவை கடத்த திட்டமிட்டதை கை விட்டு சைதன்யனை கடத்தினான். சந்துருவும் வந்து மாட்டிக்கொள்ள கடத்தும் போது மீரா அடி பட்டதால் அவளை அப்படியே விட்டு விட மனமில்லாது அவன் இடத்துக்கு கொண்டு வந்து வைத்தியம் பாக்கலானான். சரவணன் சௌதாகருக்கு கடத்தப்பட்டவர்களின் காணொளியை அனுப்பி வைத்தவன் யொத்தாவுக்காக காத்திருந்தான்.

அவ்வளவு நேரமும் யொத்தா கையில் கிடைக்குமா என்று கலவரத்தில் இருந்தவன், சரவணன் சௌதாகர் யொத்தா வாளுடன் அவருடைய பூர்வீக வீட்டிலிருந்து கிளம்பியதை அறிந்துக் கொண்டவன் சந்தோசமாக விசிலடித்த படியே ஆன்ஷிக்கு அழைத்தான்.

“ஹாய் பேபி என்ன பண்ணுற? என்ன மிஸ் பண்ணியா இல்லையா? சாப்டியா?” ஷரப் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாலும் மறுமுனையில் எந்த பதிலும் இல்லை.

கோயம்புத்தூரில் ஆன்ஷி தங்கி இருந்த ஹோட்டலுக்கு அழைத்து அறைக்கு இணைப்பை ஏற்படுத்தியவன் பேசிக் கொண்டே போக தன்னவளுக்கு பேச முடியாதென்று ஒரு கணம் மறந்து தான் போனான் ஷரப். தலையை தட்டிக் கொண்டு ஷரப் யோசிக்க

தன்னவனின் காதல் உருகும் குரலை கேட்டிருந்த ஆன்ஷிக்கு சத்தம் செய்தாவது பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் பேசாது மௌனமாகவே ரிசீவரை தட்டியவள் அது வேலை செய்கிறதா என்று பார்க்கலானாள்.

 

ரிஸீவரில் வரும் சத்தத்தில் புன்னகைத்தவன் “வந்த வேல இன்னைக்கே முடியும்னு தோணுது, முடிஞ்ச உடனே உன்ன பாக்க ஓடி வந்துடுறேன் டி” என்று கைப்பேசியை முத்த மழையில் குளிப்பாட்ட ஆன்ஷி வெக்கிச் சிவந்தாள்.

 

“என்ன ஆன்ஷி ஒரே ரொமான்ஸ் தான் போ. ஒரு நாளே பார்த்து காதல் கொண்ட நீ அதிரடியா கல்யாணமும் பண்ணி விட்டா ட்வின்ஸ் ரிலீஸ் பண்ணிடுவ போல. என்னை பாரேன் இவள ஐஞ்சு வருசமா லவ் பண்ணுறேன், திரும்பி கூட பாக்காதவ எனக்கு கல்யாணம் என்ற உடனே ஓடி வந்து காதலையும் சொல்லாம தாலிய வாங்கிட்டா. அவ வீட்டுக்கு சொல்லாம கொள்ளாம நா தாலிய கட்டிட்டேனு என் பாஸ்ட் நைட்டுக்கு ஆப்பு வச்சிட்டா” என்று தருண் சோகமாக சொல்ல

” என் அத்தானும் அக்காவும் வந்து கிட்டு இருக்காங்க உனக்கு இருக்கு” என்றவாறே  கையிலிருந்த தலைகாணியால் அவனை மொத்தி எடுத்தாள் அனிதா. “என்ன லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண பார்த்தவன் தானே நீ உனக்கு பர்ஸ்ட்  நைட் கேக்குதா” அவனின் தலை முடியை பிடித்து ஒரு உலுக்கு உலுக்க

 

“விடுடி ராட்சஷி” என்று அவர்கள் சண்டை தொடர்ந்துக் கொண்டே போக ஆன்ஷி புன்னகையாக  பார்த்திருக்க சிவஞானம் தாத்தா பரமு பாட்டியை வம்பிழுக்க ஆரம்பித்தார். இளையவர்கள் சண்டையை நிறுத்தி முதியவர்களின் காதல் கதையை ஆர்வமாக கேக்க ஆரம்பித்தனர்.

***********************

தன்னவளுடன் பேசி விட்டு வந்த ஷரப் சந்தோசவானில் பறந்தவாறே பியானோவை மீட்ட ஆரம்பித்தான். ஆன்ஷி கிடைத்தது  ரொம்ப நாள் கழித்து வந்த நிம்மதி என்றால், யொத்தா கிடைத்தது யுகங்கள் கடந்தது கிடைத்த சந்தோசம்   அதை கொண்டாட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசித்தவாறே இருந்தவனின் கண்கள் cctv  மானிடரின் பக்கம் செல்ல வாயிலில் சரவணன் சௌதாகர் உள் நுழைவதைக் கண்டான். கன்னக்குழி  விழ புன்னகைத்தவன் பியானோவை மீட்டுவதை நிறுத்தாது அவர் உள்நுழையும் வரை யொத்தாவை பார்க்கும் சந்தோசத்தில் மனம் துள்ளிக் குதிக்க காத்திருந்தான்.

யொத்தா வீர வாள் ஷரப்பின் கொள்ளுத்தாத்தா விஷ்வதீர சௌதாகருக்கு அன்றைய அரசர் போரில் வெற்றி பெற்ற போது பரிசாக கொடுத்தது, அது மட்டுமில்லாமல் தனது ஒரேமகளான காயத்திரி தேவியை  மணமுடித்து வைத்து ஒரு சமஸ்தானத்தையே அமைத்துக் கொடுக்க சந்தோசமாக வாழ்ந்தவர்கள், அவர்களின் மூத்த மகனுக்கு வாளை பரிசளிக்க அது தொடராக சந்ததியில் வரும் மூத்த மகனுக்கு வாள் சொந்தமானது, ஒரு தலை முறையி அண்ணன் தம்பி சண்டையிட்டு தம்பி வாளோடு தமிழ்நாட்டுக்கு வந்து விட அது தெரியாமல் அண்ணனும் அவருடைய சந்ததிகளும் யொத்தாவை ராஜஸ்தானில் தேட இந்த தலை முறையின் ஒரே வாரிசான ஷரப் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு வாளை கண்டு பிடித்தான்.

 

“ஹலோ மிஸ்டர் சரவணன் மாண்புமிகு என் சித்தப்பாவே எப்படி இருக்கீங்க”

சரவணன்  ஷரப் யாரென்று  முழிப்பதை நடிப்பதாக புரிந்து கொண்டவன், அவர் தனது மகனையும் மருமகளையும் கண்டால் தான் வாளை தருவதாக பேரம் பேச அவனிடத்து தனியாக வந்து மாட்டியிருக்கும் சரவணனால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் தோன்ற நக்கல் புன்னகையை சிந்தியவாறு கண்ணால் வருஷத்துக்கு கட்டளையிட்டவன், வ்ருஷாத் ஹாலிலிருந்த டிவி யை உயிர்ப்பித்து கடத்தப் பட்ட மூவரையும் காட்டியபின்னே சரவணன் வாளை ஷரப்பிடம் ஒப்படைத்தார்.

வாள் வீச்சில் தேர்ச்சி பெற்றவன் ஷரப்.   அதை பார்க்கும் போதே புரிந்துக் கொண்டான் அது யொத்தா இல்லைஎன்பதை.

 

“யாரை ஏமாற்ற பாக்குறீங்க என்னையா? இந்த ஷரப் சௌதாகரையா? அரண்மனையிலுள்ள எல்லா வகையான வாளையும் கைல் பிடித்து விளையாடியவன் நான். யொத்தா எங்க குல சொத்து அது எப்படி இருக்கும் என்பது எனக்கு புட்டிப்பாலை பாட்டி ஊட்டும் போது சொன்ன கதை. யார் கிட்ட” என்று மனதில் குமுறியவன் எதையையும் வெளிக்காட்டாது

 

. வாளை கையில் எடுத்து சுழற்றியவன் வருஷத்துக்கு கண்ணால் செய்கை செய்ய சைதன்யனும், சந்துருவும் இழுத்து வர பட ஒரே வீச்சாக வாளை சைதன்யனின் கழுத்துக்கு வீசினான். அவன் இரண்டடி பின்வாங்க வில்லையானால் நிச்சயமாக அங்கேயே இறந்திருப்பான்.

திடீரென சரவணனின் மனைவி லட்சுமி யொத்தா வாளோடு உள்ளே வந்து கதை சொல்ல ஆரம்பிக்க அவர் கண்ணில் கொஞ்சமேனும் பொய் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டவனுக்கு லட்சுமி அம்மாவை ரொம்பவே பிடித்துப் போனது.

கன்னக்குழி விழ அழகாக புன்னகைத்தவன் லட்சுமி அம்மா விடம் வந்து  “யொத்தா வாள் மட்டுமில்ல என் உயிர் மூச்சு, கண்டுபிடிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே வெறியா வளந்துட்டேன். எங்க குடும்ப கௌரவ பிரச்சினை அதான் இப்படி”என்று அங்கு நடந்த கலவரத்தை சுட்டிக் கட்டி விட்டு “அம்மா உயிரோட இருந்து என்ன வளர்ந்திருந்த ஒரு வேல நான் நல்லவனா இருந்திருப்பேனோ என்னமோ! உங்கள பார்த்தா எங்கம்மாவே நேர்ல வந்து சொன்னது போல் இருக்கு உங்க கிட்ட விசாரிக்காம வாளை தேடியெடுக்கணும் என்ற வெறீல யோசிக்காம பண்ணிட்டேன். ஒருதடவை நீங்க எல்லாரும் ராஜஸ்தான் வரனும்” என்று அனைவருக்கும் சேர்த்து வணக்கம் வைக்க

“அதுக்கென்னப்பா நீயும் அடிக்கடி இங்க வா அம்மாவா உனக்கு நான் இருக்கேன்” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு லட்சுமி அம்மா சொல்ல மனம் குளிர்ந்து போனான் ஷரப்.

அவர்களிடம் விடை பெற்று யொத்தா வாளோடு ஆன்ஷியை காண கோயம்புத்தூருக்கு வ்ருஷாத்துடன் தனது தனி விமானத்திலேயே கிளம்பிச் சென்றான்.

**************

“ஹலோ தாதிமா ஒரு சந்தோசமான விஷயம் எத்தனையோ வருசமா தேடிக்கிட்டு இருந்த யொத்தா கிடைச்சிருச்சு” ஷரப் போனில் சொன்ன விஷயத்தை கேட்ட வசுந்தராதேவியின் இதயத்துடிப்பு எகிறி துடிக்க சோபாவில் அமர்ந்திருந்தவர் துள்ளிக் குதித்து எழுந்து

 

“என்னது யொத்தா கிடைச்சிருச்சா” என்று கத்த அரண்மனை முழுக்க அவரின் குரல் எதிரொலிக்க பத்மாவும், தேஜ்வீர்  உற்பட வைஷ்ணவியும் ஓடி வர வசுந்தராதேவி முதுமையையும் மறந்து துள்ளிக் குதிக்க தேஜ்வீர் யோசனைக்குள்ளானான்.

கோயம்புத்தூர் வந்து சேர்ந்த உடனே ஷரப் செய்தது வசுந்தராதேவியை அழைத்து யொத்தா கிடைத்த சந்தோசத்தை பகிர்வதே. அதன் பின்னே தன்னவளை காணச்சென்றான்.

 

“ராஜஸ்தான் பூரா விஷயம் பரவட்டும், யொத்தா கிடைச்ச சந்தோசத்தை திருவிழா போல கொண்டாட வேணும். நம்ம கோவில்ல சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய். அரண்மனையும் சமஸ்தானம் முழுக்க அலங்காரம் தூள் பறக்கட்டும். நம்ம மக்களுக்கு எழு நாளைக்கு சாப்பாடு இலவசமாக அரண்மனையிலிருந்தே வழங்கப் படனும். பூஜை அன்னைக்கு மக்களுக்கு புதுத் துணி வழங்கணும். நம்ம சொந்த பந்தம் எல்லாருக்கும் செய்தி அனுப்பு, வெளியூர்லயோ, வெளி நாட்டிலேயோ எங்க இருந்தாலும் சிறப்புப்பூஜைக்கு வந்து சேரனும். உயிர் பாலி கொடுக்கணும்” என்று என்னென்ன வெல்லாம்  செய்யவேண்டும் என்பதை பட்டியல் இட்டவாறே வசுந்தராதேவி உத்தரவிட பத்மா தலையை ஆட்டியவாறே கேட்டுக் கொண்டாள்.

 

கோயம்புத்தூர் வந்திறங்கியவன் ஆன்ஷியிடம் யொத்தாவை காட்டி தங்களது அரச பரம்பரையின் கதையை சொல்ல விழிவிரித்து ஆச்சரியமாக பார்த்திருந்தவள் அவன் சொல்லும் போது அவனின் முகத்தில் வந்து போன முகபாவனையிலும் கன்னக்குழி அழகிலும் மீண்டும் அவன் மேல் காதல் கொண்டாள்.

தன்னவளின் காதல் பார்வையில் கதை சொல்வதை நிறுத்தி அவளை இழுத்து அணைத்தவன்

“என்ன டி இப்படி ஆள முழுங்கும் பார்வை பார்த்து வைக்கிற? ராஜஸ்தான் போகும் வர தாங்குவேனா? அங்க போய் எங்க குல வழக்கப்படி நம்ம கல்யாணம் நடக்கணும் அப்பொறம் தான் மத்தது எல்லாமே… என்று பொறுமையா இருக்கேன். இப்படி என் பொறுமையா சோதிக்கலாமா?” அந்த எல்லாமே இல் அழுத்தத்தை கூட்டி கூறியவன் தாடையை கையால் அழுத்தியவாறே யோசிக்க ஆன்ஷியின் முகம் வெட்கத்தால் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

அவளை ரசனையாக பார்த்திருந்தவன்

  “நாம நாளைக்கி ராஜஸ்தான் போறோம். பாட்டி ரொம்ப பழைமை வாய்ந்தவங்க, உன்ன ஏதாவது சொன்னாங்க என்றால் எனக்காக பொறுத்துப் போ ப்ளீஸ் டி” என்று ஆன்சியின் கையை பிடித்து கெஞ்ச

 

“என்னால் தானே பேசவே முடியல. நா உங்க பாட்டியா என்ன சொல்லிட போறேன்னு இப்படி பீல் பண்ணுறீங்க” என்று சைகையால் சொல்லி சிரிக்க  

உள்ளுக்குள் வலித்தாலும் அவளின் கையில் முத்தமிட்டு “தேங்க்ஸ் டி” என்று புன்னகைத்தவன் அறியவில்லை வசுந்தராதேவி அவனின் அன்பான பாட்டி, தனது மனைவியிடம் நடந்துக்கொள்ள போகும் விதத்தையும் அதனால் அவள் அவனையே வெறுத்து, அவனிடமிருந்து மனதளவில் விலகிவிடப் போவதையும்.

வ்ருஷாத்தின் ஏற்பாட்டின் படி சிவஞானம், பரமு பாட்டி முன்னிலையில் ஆன்ஷியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தவன். அவர்களிடம் தனியாக வெகு நேரமாக பேசினான். அவன் பேசியதை உள்வாங்கியவர்கள் கண்ணில் நீர் பெறுக அதை கட்டுப் படுத்த வழித்தெறியாமல் அழுது கரைய  அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி அவர்களை தேற்றியவன். என்ன ஆனாலும் ஆன்சியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூற அவர்களும் அவனின் கையை பிடித்து நன்றி கூற

 

“என்ன தாத்தா நன்றி கூறி என்ன அந்நிய படுத்துறீங்க? நான் உங்க பேரன் இல்லையா? இங்க வாங்க என்று அவரை கட்டி அணைத்தவன். பரமு பாட்டியை தட்டாமாலை சுற்ற அவர் காத்த ஆரம்பித்தார்.

 

இவர்களை தூரத்திலிருந்து பார்த்திருந்த ஆன்ஷி, ஷரப் தனது தாத்தா, பாட்டியுடன் அன்பாக இருப்பதை கண்டு மனம் குளிர்ந்தவள். தானும் அவனின் பாட்டி வசுந்தராதேவியுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணலானாள். ஆனால்  அவர் நடந்துக்க கொல்லப் போகும் விதத்தை கண்டபின் அவளின் முடிவு என்னவாக இருக்கப் போகுதோ?

 

அடுத்த நாள் காலை ராஜஸ்தானை சென்றடைந்தவர்களை மேளதாளங்களோடு வரவேற்றார் வசுந்தராதேவி.

 

Advertisement