Advertisement

                                                    அத்தியாயம் 21

“ஹலோ லஷ்மிமா நான் ஷரப் பேசுறேன். நல்லா இருக்கீங்களா?’ தங்களது திருமண  விஷயத்தை ஷரப் முதலில் சொன்னது சென்னையில் உள்ள லட்சுமி அம்மாவிடம் பதிலுக்கு அவனிடம் நலம் விசாரித்தவர்

“இப்போ தான் உனக்கு இந்த அம்மாவின் நியாபகம் வந்ததா?” என்று குறை பட

“ஐ…. என் செல்ல லஷ்மிமாகு கோவம் கூட வருமா?” பேசிப் பேசியே அவரை தாஜா பண்ணியவன் கல்யாண விஷயத்தை சொல்லி அழைப்பு விடுக்க கண்டிப்பாக வருவதாக சொல்லி போனை அணைத்தார்.  

சமஸ்தானம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப் பட்டிருக்க தேவதைகள்  போல் கல்யாண கோலத்தில் ஆன்ஷியும் வைஷ்ணவியும் வர மணமகன்களான ஷரப்பும் வ்ருஷாத்தும் அவர்களின் கையைப் பிடித்து மணமேடை வரை அழைத்து சென்று தன இடுப்பில் சொருகி இருந்த யொத்தாவை வெளியே எடுத்த ஷரப் யொத்தாவின் மீது சத்தியம் செய்து மீண்டும் ஆன்ஷியிக்கு வாக்களித்து கரம் பிடிக்க, வ்ருஷாத் மாறும் வைஷூவின் திருமணமும் இனிதே   நடை பெற்றது.

வ்ருஷாத்தின் திருமண பரிசாக ஷரப் சொல்லியது போல் அவனது சுய சம்பாத்தியம் முழுவதும்  வ்ருஷாத்தின் பெயரில் மாற்றப் பட்டு மணமக்கள் கையில் திருமணப் பரிசாக வழங்கப் பட்டது.

சென்னையிலிருந்து லட்சுமி அம்மா மற்றும் சரவணன் சௌதாகர் மாத்திரம் வருகை தந்திருக்க ஆன்ஷியின் குடும்பம் மொத்தமும் வருகை தந்தனர்.  

மணமக்கள் லட்சுமி அம்மாவிடமும் சரவணனிடமும் ஆசிர்வாதம் வாங்க வசுந்தராதேவி சக்கர நாட்காலியில் அமர்ந்து அவர்களை வெறித்து பாத்திருந்தாரே ஒழிய எதிர்த்து விரலைக் கூட அசைக்க முடியவில்லை.

“லட்சுமிமா எங்க என்னோட சகோதரன் அவனை ரொம்ப எதிர் பார்த்தேன்” என்று சைதன்யன் வராததை குறித்துக் கேக்க

“அவன் பொண்டாட்டி உண்டாகி இருக்கால்ல. ஏதோ அவ மட்டும் தான் இந்த உலகத்திலேயே குழந்த பெத்துக்க போறது மாதிரி  தங்கு தங்குனு தாங்குறான். ஆபீஸ் பக்கமே வரமாட்டேங்குறான்” பதில் சரவணனிடம் வர

“உங்களுக்கு பொறாமை. நீக்க ஆபீஸ கட்டிக்க கிட்டு அழுறது பத்தாதென்று அவனையும் இழுக்க பாக்குறீங்க” என்று பொரிந்தவர் ஷரப்பின் பக்கம் திரும்பி “நீயும் சீக்கிரமே நல்ல சேதி சொல்லு. உன் குழந்தைக்கும் நான் தான் பாட்டி” என்று பெருமையாக சொல்ல முகம் மாறினான் ஷரப்.

பெண் வீட்டு சீதனமாக ஆன்ஷிக்கு சேர வேண்டிய சொத்து பத்திரத்தை சாருலதா கொடுக்க அதை ஏற்க மறுத்தாள் ஆன்ஷி.

“இது உன் அம்மாக்கு என் அப்பா கொடுத்தது. நியாயமா உனக்கு சேர வேண்டியது. உன் அம்மா ஓடிப் போன கோவத்தில் உன்னையும் ஏதேதோ பேசி, பணம் பணம்னு அலஞ்சி உறவுகளையும்  மதிக்காம இருந்துட்டேன். நாளை நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரியாம என்ன ஆட்டம் போடுறோம். எல்லாம் உடம்புல உயிர் இருக்கும் வரை தான்” என்று கண்கள் கலங்கியவள்

“மாப்புள நீங்களாச்சும் வாங்கிக்க சொல்லுங்க” என்று ஷரப்பை நோக்க, இதுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, இதில் என் மனைவியின் முடிவே என் முடிவு என்று அவன் அமைதி காக்க

“உன்ன என் பொண்ணா நெனச்சி தான் நான் இந்த பத்திரங்களை கொண்டு வந்தேன். என்ன நீ மன்னிச்சுட்டேன்னா மட்டும் இத வாங்கிக்க” என்று அதட்டலாகவே சொல்ல

“என்ன அத்த பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க கொண்டாங்க நான் வாங்கிக்கிறேன்” என்று இன் முகமாகவே வாங்கி கொண்டவள்  சாருலதாவின் மன மாற்றத்தை கண்டு நெகிழ்ந்து அவரை கட்டிக்க கொள்ள சந்தோசமாக கோயம்புத்தூர் வரும் படி அழைப்பு விடுத்தவாறே சாருலதாவின் குடும்பம் விடை பெற்றது.

முதலிரவு அறைக்கு வந்த வ்ருஷாத் “செம்ம டையடா இருக்கு. என் கல்யாணத்துல நானே தனியா வேல பாக்க வேண்டி இருக்கு” என்று சொல்லியவாறே கட்டிலில் அமர்ந்திருந்த வைஷூவின் முகத்தை மூடி இருந்த துப்பட்டாவை நீக்க அவனை மொத்த ஆரம்பித்தாள் வைஷூ.

“ஏய் ராட்சசி சொல்லிட்டு அடி டி ” அவளின் இரு கைகளை வ்ருஷாத் பிடிக்க கண்கள் கலங்கியவாறே

“ஏன் டா உனக்கா நான் இங்க காத்துக் கிட்டு இருக்கேன். நீ ஆடி அசஞ்சு வரியா?  நம் கல்யாணம் நடக்குமா? என்ற சந்தேகத்தோடு இருந்தேன். எப்படியோ ஜாம் ஜாம்னு கல்யாணம் நடந்திருச்சு.  இந்த நாள கொண்டாட எவ்வளவு ஆசைகளோடும், கனவுகளோடும்,உன் வரவுக்காக எதிர் பாத்துக்க கொண்டிருந்தா ஆற அமர வந்ததுமில்லாம தூக்கம் வருதுன்னா சொல்லுற” என்று மூக்கு நுனி சிவக்க சொல்ல அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் வ்ருஷாத்.  

இங்கே ஷரப்பின் அறையில் அவனின் வரவுக்காக காத்திருந்தாள் ஆன்ஷி. பூக்களால் அலங்கரிக்கப் பட்ட அறையும், கட்டிலும் சிவப்பு நிற லேகங்காவில் பாதி முகத்தை மூடியவாறே கட்டில் அமர்ந்தவாறே அவனிக்காக காத்திருக்க அவன் தான் வந்த பாடில்லை.

அவனோ விருந்தினர் மாளிகையில் ஆன்ஷியின் ஓவியத்தின் முன்னால் அமர்ந்தவாறே கதறிக் கொண்டிருந்தான்.

“ஏன் டி என் கண் முன்ன வந்த. உன்னால என் வாழ்க்கையே மாறிப்போச்சு. எவ்வளவோ ஆசையாக உன்ன கல்யாணம் பண்ணேன். உன் கூட வாழனும்னு எவ்வளவு  கனவு கண்டேன். எல்லாம் போச்சு. நீ அழுதது போதும் டி. என்னால நீ இன்னும் அழ வேணாம். நீ அழுறதையோ! வலில துடிக்கிறதையோ என்னால தாங்க முடியாது” என்றவாறே சரக்கை வாயில் ஊற்ரிக் கொண்டவன்

“என் வேதனை என்னோடு போகட்டும். அது உனக்கு வேணாம். மன்னிச்சிக்கடி இனி மேல் குடிக்க மாட்டேன் என்று உன் மேல சத்தியம் பண்ணேன் அத மீறிட்டேன்” என்று ஓவியத்திலிருந்து கண்ணெடுக்காமல் புலம்பியவன் விடியற்காலையிலேயே அரண்மனைக்கு சென்று தூங்கி கொண்டிருந்த ஆன்ஷியை கவலையுடன் பார்த்தவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

                      After 3 years

ஹரிலால் பதுக்கி வைத்திருந்த பணமும், தங்கள் கட்டிகளையும் அவனை கடத்தும் போதே உயிர் பிச்சை கேட்டு எங்கே வைத்திருக்கிறான் என்று சொல்லி இருக்க அவைகளை கைப் பற்றியவன் சமஸ்தான மக்களுக்காக செலவழிக்க ஒதுக்கி. ஹரிலாலின் பத்திரங்களை அரசிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடும் செய்தான் ஷரப்.

ஆன்ஷியை பார்க்கும் போதெல்லாம் தேஜ்வீரும், பத்மாவும் மன்னிப்பு கேட்க ஆன்ஷி சங்கடமாக உணர்ந்தாள்.  

தேஜ்வீர் காசிக்கு செல்ல முடிவெடுக்க பத்மாவும் “போக வேண்டும்  அம்மாவை யார் பார்த்துக் கொள்வது” என்று கவலைப் பட ஆன்ஷி பொறுப்பேற்றாள்.  

ஆன்ஷியிடம் அரண்மனை பொறுப்புகளையும், வசுந்தராதேவியையும் ஒப்படைத்து விட்டு பத்மாவும், தேஜ்வீரும் காசி சென்றவர்கள் அரண்மனைக்கு திரும்பவே இல்லை. போன் மூலம் தொடர்ப்பு கொள்பவர்கள் தங்களது பாவம் கழிய கோவில் கோவிலாக ஏறி, இறங்கினர்.

அரண்மனைக்கு வருமாறு பல தடவை அழைத்த போதும், வசுந்தராதேவி இறந்த போதும் வரவே இல்லை.

ஆம் ஆன்ஷியின் பொறுப்பில் விட்டுச்சென்ற வசுந்தராதேவியை ஆன்ஷி பொறுப்பாகவும், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள, அவளின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கண்டு ஆச்சரியம் அடைந்தவர். அவர் இருக்கும் நிலைமையில் வார்த்தையால கூட வதைக்காது அன்பாக பேசுபவளின் கையை பிடித்து மன்னிப்பு வேண்டியவர் ஷரப்பின் வாழ்க்கையில் இனி வசந்தம் என்று நிம்மதியுடன் உயிர் நீத்தார்.

                                             

புழுதி பறக்க குதிரையை ஷரப் செலுத்திக் கொண்டிருக்க வ்ருஷாத்தும் அவனுக்கு இணையாக குதிரையை செலுத்திக் கொண்டிருந்தான். அவர்களை வேடிக்கை பார்த்தவாறே அரண்மனையின் பின்னால் இருக்கும் குதிரை கொட்டகையில் போட்டிருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தனர் மற்றவர்கள்.

அவர்கள் வேகமாக செல்வதை கைதட்டியவாறே வைஷ்ணவிக்கு லக்ஷித் காட்ட அவளின் இரண்டு வயது மகன் விரேன் ஆன்ஷிக்கு காட்டினான். ஒரு புண் முறுவலோடு அவர்களை பாத்திருந்த ஆன்ஷியின் கண்களில் ஜீவனில்லை.

“ஏன் ஆன்ஷி கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆகுது. இன்னும் ஏன் குழந்தை பெத்துக்கிறத பத்தி யோசிக்க மாட்டேங்குறீங்க?” வைஷ்ணவி தனது மூனு மாதக் குழந்தையான  விராட்டை கொஞ்சியவாறே கேக்க ஆன்ஷி தொண்டையில் சிக்கிய துக்கத்தை அடக்கியவாறே புன்னகைத்தாள்.

“புருசனும், பொண்டாட்டியும் சிரிச்சே சமாளீங்க” என்ற வைஷ்ணவி ஆன்ஷியின் கையை பிடித்து “இப்போ மெடிக்கல் சயன்ஸ் ரொம்ப வளர்ந்திருக்கு என்ன பிரச்சினையென்றாலும் சரி பண்ணலாம். வாடகை தாய் தேவைப் படுவதாக இருந்தாலும், உன் பிள்ளையை  நான் சுமக்கிறேன் ” என்று புன்னகைக்க

ஆன்ஷியின் கண்களில் நீர்கோர்த்தது. அதை வைஷூவுக்கு காட்டாது புன்னகைத்தே சமாளித்தவளின் நினைவுகள் பின்னோக்கி செல்ல   

திருமணம் ஆனதிலிருந்து ஷரப் அரண்மனையில் தங்கவில்லை. வ்ருஷாத்தும் வைஷ்ணவியும் தேன்நிலவுக்காக சென்றிருக்க ஷரப் ஹரிலாலின் சொத்து விஷயத்தில் தீவிரமாக இறங்கி விட்டான். ஆன்ஷியை நெருங்க அவன் முற்சிக்கவே இல்லை. ஆன்ஷி நெருங்கும் போது முத்தத்துடன் விலகிவிட, அவனை புரிந்துக் கொள்ள ஆன்ஷியால் முடியவில்லை.

வ்ருஷாத் வைஷூவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, இரவில் அவன் அறையை விட்டு தலை காட்டுவதே இல்லையென்றானது. பத்மாவும், தேஜ்வீரும் காசிக்கு செல்ல அதனாலயே ஷரப், ஆன்ஷியின் கண்ணா மூச்சியாட்டம். யார் கண்ணிலும் சிக்கவில்லை.

விருந்தினர் மாளிகைக்கு சென்று ஆன்ஷியிடம் சொல்ல வேண்டியவைகளை ஆன்ஷியின் ஓவியத்தின் முன் புலம்பி விட்டு அதிகாலையில் அரண்மனைக்கு வருபவன் ஆன்ஷியை அணைத்துக் கொண்டு தூங்குவதும், ஆன்ஷி கண்விழிக்கும் போது அவளை கொஞ்சிக் கெஞ்சி வெளியே செல்பவன் இரவில் மாத்திரம் ஆன்ஷியை தூரவே நிறுத்தியிருக்க ஆன்ஷி அவனை கேள்வி கேக்கும் நாளும் வந்தது.

வைஷ்ணவி கர்ப்பம்தரிக்கவும் அரண்மனையே விழாக்கோலம் பூட்ட ஆன்ஷிக்கும் தங்களது குழந்தையை பற்றிய ஆசை வந்தது. ஷரப்பிடம் நேரடியாகவே

” நாம எப்போ குழந்த பெத்துக்க போறோம்” என்று கேக்க ஷரப்பின் தாடைகள் இறுக்கியதை ஆன்ஷி கவனிக்க வில்லை.

“நமக்கு இப்போ குழந்த வேணாம்” என்று ஷரப் சொல்ல அவனை நெருங்கி அமர்ந்தவள்

‘அதனால தான் சார் என்ன தொடாமலேயே இருக்கீங்களா! இதுக்கு போய் யாராவது தள்ளி இருப்பாங்களா? பாதுகாப்பு முறையயை கையாளலாம்” ஏதோ அவன் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட அவளை நெருங்காது இருப்பதாக நினைத்து பேச

“சரி” என்று தலையசைத்தவன் ஆன்ஷியை எந்த வித மாத்திரையையோ, ஊசியையோ செலுத்த விடாது அவன் மாத்திரமே பாதுகாப்பு முறையை கையாண்டான்.

அதன் பின் வந்த காலங்கள் ஆன்ஷிக்கு சொர்க்கமென்றானது. ஷரப் அவளை விட்டு அகலவே இல்லை. ஒவ்வெருநாளும் புது புது அனுபவங்களாக காதலை  காட்டியவன் மறந்தும் குழந்தை பற்றி பேச்செடுக்க வில்லை.

ஆனால் தான் என்றுமே தாயாக போவதில்லை என்று அறியும் நாளும் ஆன்ஷிக்கு வந்தது.

அது வைஷ்ணவி இரண்டாவதாக குழந்தையை சுமந்த போது

ஷரப்பின் அணைப்பில் இருந்தவாறே ஆன்ஷி “ஏங்க வைஷ்ணவி ரெண்டாவது தடவையாகவும் உண்டாகி இருக்கா. நாம எப்போ நம்ம பாப்பாவை பாக்கப்போரும்” வெக்கப்பட்டவாறே ஆன்ஷி கேக்க அவளை உதறியவாறே எழுந்தவன்

“இன்னைக்கே” என்று அவளை இழுக்காத குறையாக ஜீப்பில் ஏற்றி அழைத்து செல்ல கணவனின் இறுகிய முகம் கண்டு ஆடித்தான் போனாள் ஆன்ஷி.

ஷரப் அவளை அழைத்து சென்றது ஒரு அநாதை ஆசிரமத்துக்கு அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட அநாதை சிறுவர்கள் இருக்க ஷரப் அவர்களை தத்தெடுத்தடாக அந்த ஆசிரம பொறுப்பாளர் சொல்ல

“இனிமேல் இவங்க தான் எங்க குழந்தைகள்”   சற்று முன் கடுமை காட்டியதையும் மறந்து கணவனின் புதிய பரிமாற்றத்தில் அவன் மீது மேலும் காதல் பொங்கியது.

அரண்மனைக்கு திரும்பும் வழியெல்லாம் அவன் புகழ் பாடியவள் “சீக்கிரமே நான் உங்க பேபிய சுமக்கனும்” என்று அவனின் கையை தொட சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன்

“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா” என்று கத்த ஆன்ஷி  திகபிரம்மை பிடித்தது போல் நின்று விட்டாள் என் கணவனா என்னை திட்டியது என்ற முக பாவத்தை ஆன்ஷி காட்ட

“சொன்னா புரிஞ்சிக்க ஆன்ஷி. நமக்கு குழந்தையே வேணாம்”

” ஏங்க? உங்களுக்கு வாரிசு வேணாமா? இந்த சமஸ்தானத்துக்கு வாரிசு?”

அவளின் வாயில் விரலை வைத்தவன் “அதான் வ்ருஷாத், வைஷூ குழந்தைகள் இருக்கே அது போதும், அவங்களே இந்த சமஸ்தானத்து வாரிசா இருந்துட்டு போகட்டும்”

“என்னங்க பேசுறீங்க? எனக்கு நான் சுமந்து பெறுகிற ஒரு குழந்த வேணும்க” ஆன்ஷி கெஞ்சாத குறையாக சொல்ல

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “நமக்கு குழந்தை பொறுக்காது ஆன்ஷி. நீ அந்த ஆசையை மட்டும் விட்டுடு” என்றவாறே வண்டியை அரண்மனைக்கு செலுத்தினான்.

“ஒரு வேலை கண்ட கண்ட பெண்களோடு உறவு வைத்திருந்த படியால் ஏதாவது பாலியல் நோயால் பாதிக்கப் பட்டு தான் தன்னை ஒதுக்கி வைத்தானோ?”  நான் பாதுகாப்பு முறையை கையாளுகிறேன் என்று சொன்ன போதும் வேண்டாம் என்று அவன் மாத்திரம்  பாதுகாப்பு முறையை மேற்கொண்டது இதனால் தானோ என்று ஆன்ஷியின் எண்ணம் போக ஆன்ஷி கண்ணீருடன் நாட்களை கடத்தினாள். ஷரப் அவளை ஆறுதல் படுத்த நினைக்க வில்லை, உடலாலும் அவளை நெருங்க முயற்சிக்க வில்லை.

ஷரப்பின் குதிரை சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் அவன் முகம் பாராது அரண்மனையினுள் செல்ல ஆன்ஷியிடம் கேட்ட அதே கேள்வியை வைஷ்ணவி ஷரப்பிடம் கேட்டு விட்டு ஆன்ஷியிடம் தான் வாடகைத்தாயாவதுக்கு தயார் என்று சொன்னதையும் சொல்ல புருவம் சுருக்கி யோசித்தவன்

“நிஜமாகவே அப்படி ஒரு வழி இருக்கா நீ நம்ம குழந்தையை சுமந்து தரீயா” என்று ஆவலாக கேக்க அப்போ ஆன்ஷிக்கி மெடிகளி ஏதாச்சும் ப்ரோப்லம் இருக்கா என்ற கேள்வியை முன் வைத்தனர் வ்ருஷாத் மற்றும் வைஷூ.

மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பின் ஆன்ஷியை தட்டாமாலை சுற்றி கன்னக்குழி விழ சிரித்து முத்தம் வைத்தவன் வைஷ்ணவி சொன்னதை சொல்ல அப்போ இவருக்கு எந்த பிரச்சினையும் இல்லையா? எனக்கா? என்று யோசித்தவள்

“எனக்கு என்ன பிரச்சினை ஷரப்? ஏன் என்னால் குழந்தையை சுமக்க முடியாது?” என்று கேக்க

“வேணாம் ஆன்ஷி பிரசவ வலி மிக கொடுமையானது. அத நீ தாங்க மாட்ட” என்று சொல்ல

“என்ன சொல்லுறீங்க”

“உங்கம்மா இறந்த பின் நீ அழுது கிட்டே இருந்த. உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியாம நான் ஒரு நாள் வண்டிய எடுத்துக் கிட்டு போனேன். அன்னைக்கி ஒரு பொண்ணு ரோட்ல பிரசவத்துல துடிச்சிக்கிட்டு இருந்தத பார்த்தேன். அவளை நான் ஹாஸ்பிடல் கொண்டு போகும் முன்னே குழந்த பொறந்துச்சு, அவ கத்தினதும், கதறினதும் என் மண்டைக்குள்ளயே இருக்கு, எவ்வளவு இரத்தம் என் ஜீப் முழுக்க, அவளுடைய வலிய நான் நல்லாவே உணர்ந்தேன். என்னால உனக்கு அப்படி ஒரு வலிய கொடுக்க முடியாது. அன்னைக்கே முடிவு பண்ணேன். நமக்கு குழந்தையே வேணாம்னு, அதான் உன் கிட்ட இருந்து ஒதுங்கி நின்னேன். பாதுகாப்பு முறையோடு நெருங்கலாமேன்னு நீ சொன்னதும் டாக்டரை அணுகி விசாரிச்சேன். பெண்களுக்கான வழிகள் எல்லாம் உன்ன ஏதோ ஒரு வகைல கஷ்டப்படுத்தும் என்று தோணினதால அத நானே பாதுகாப்பு முறையை கையாண்டேன். நீ குழந்த வேணும்னு சொல்லும் ஒவ்வொரு தடவையும்   அன்று அந்த பெண்ணின் வலி நிறைந்த முகம் என் கண்ணுக்குள்ள வந்து என் சர்வமே நடுங்கும். ஆனா இன்னைக்கி வைஷு நம்ம குழந்தையை சுமக்குறேனு சொன்னதும், எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு” என்று ஆன்ஷியை அணைக்க அவனை தள்ளி விட்டாள் ஆன்ஷி.

கணவன் பேசப் பேச பிரசவ வலி கூட என்னால் உனக்கு வரக் கூடாது என்று சொன்னதை கேட்டு  

அவன் தன் மேல் வைத்த காதலை கண்டு பிரமித்தவள்.

“அப்போ வைஷூ கத்தினா, கதறினா பரவாலயா” அவ யாரோவா உங்களுக்கு முகம் சிவக்க கத்த

“என்ன பேசுற ஆன்ஷி வ்ருஷாத் எனக்கு தம்பினா? வைஷ்ணவி என் அத்த பொண்ணு என் தங்கை, அவளுக்கு ஒன்னுனா முதல்ல நிக்கிறது நான் தான். ஆனா அவளுக்கு பிரசவ வலியே வரலையே. இரண்டு குழந்தைகளையும் அப்படி போய் இப்படி வந்தேன்னு தானே பெத்தெடுத்தா”

உண்மைதான் வைஷ்ணவிக்கு வலி என்பதே தெரியாமல் தான் குழந்தைகள் பிறந்தன. வைஷூ முதல் குழந்தையை சுமக்கும் போது, மசக்கையாலும் அவதி படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போதும் வ்ருஷாத்தை விட பயந்தது ஷரப். வைஷூ கத்தவே இல்லை. டாக்டர் சொன்ன திகதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவள் சாப்பிட்டவாறே கதையடித்துக் கொண்டிருக்க பனிக்குடம் உடைந்தது போதுதான் அவளை பிரசவ அறைக்கு அழைத்து சென்றதே அவள் கத்தும் சத்தம் கூட கேட்கவில்லை என ஷரப் யோசிக்க உள்ளே இருந்து வந்த வ்ருஷாத்

“என்னடா உன் தங்கச்சி இரும்புமனிசியா இருக்கா கொஞ்சம் கூட கத்தவே இல்ல” என்று பெருமையாக சொல்ல நிம்மதி பெரு மூச்சு விட்டான் ஷரப்.   வைஷு வாடகை தாயாவேன் என்று சொன்னதும் ஷரப் அவளின் நிலையறிந்தே சந்தோசமாக தலையசைத்தது. அதைத்தான் ஆன்ஷியிடம் சொன்னான் ஷரப்.

ஷரப்புக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று மண்டையை பிச்சைக் கொண்ட ஆன்ஷி  

“ஒரு தாயிடமிருந்து குழந்தையை பிரிக்கிறது எவ்வளவு பெரிய குற்றமோ அதே குற்றத்தை தான் நீங்களும் செய்றீங்க, என் குழந்தையை என்ன சுமக்க விடாம பண்ணுறதும் குற்றம்” என்று சொல்ல

அவளை விழிகளை கூறாக்கி பார்த்தவன் “இப்போ நீ என்ன சொல்ல வர” என்று கேக்க

“உங்க குழந்தையை நான் சுமக்கனும், என் வயிற்றுல இருக்குறத நான் உணரணும், அவனுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியணும், அவனை சுமந்தத்துல இருந்து பெத்தெடுக்கும் வர அவன் கூட பேசணும், அவனுக்கு எல்லாமே நானாக இருக்கணும்” ஆன்ஷி தனது நியாயமான ஆசையையும், உரிமையையும் சொல்ல அதை புரிந்துக் கொள்ளும் மன நிலையில் ஷரப் இல்லை

“நீ என்ன சொன்னாலும் அது நடக்காது. நாளைக்கே ஹாஸ்பிடல் போறோம் டாக்டரை பாக்குறோம்” என்று உத்தரவிட்டு வெளியேற ஆன்ஷிதான் செய்வதறியாது திகைத்து நின்று விட்டாள்

Advertisement