Advertisement

                                            அத்தியாயம் 15

“என்ன பாய் ஆச்சு” அரண்மனையிலிருந்து புறப்பட்ட ஷரப்பின் ஜீப் வண்டி அரண்மனை வாயிலிருந்து நூறு அடிகூட செல்லாது நின்று விட

அவனுக்காக வாயிலில் காத்திருந்த வ்ருஷாத் ஏறி கொஞ்சம் தூரம் செல்ல முன்னே வண்டி நின்று விட்ட கடுப்பில் கேக்க

“எனக்கென்ன தெரியும் இறங்கி பாரு” என்று ஷரப் அதட்ட

 

“இங்கன வெளிச்சம் கூட பத்தல” என்றவன் ஜீப்பிலிருந்து குதித்திறங்கி கைப்பேசியின் டார்ச் லைட்டை உயிர்ப் பித்தவன் நாளா புறமும் சுற்றி சுற்றி பார்க்க டயர் பஞ்சர் ஆன எந்த அறிகுறியும் இருக்க வில்லை.

 

என்ன நடந்ததுன்னு புரியாமல் யோசிக்க

 

“பெட்ரோல் போட்டியா? ஆயில் செக் பண்ணியா” என்று ஷரப் கேள்விகளை அடுக்க “

 

எல்லாம் வந்த உடனே பார்த்துட்டேன் பாய்”  வண்டிக்கு என்ன ஆச்சு என்று மண்டை காய

“பாய் எனக்கு புரிஞ்சி போச்சு உங்க டைகர் உங்க மேல செம கோவத்தில் இருக்கான் போல. எங்க போனாலும் அவன் மேல தான் சவாரி இருக்கும். ஐஞ்சு நாளா அவனை கண்டுக்கவே இல்லையே அதான் ஆட்டம் காட்டுறான்” என வ்ருஷாத் தான் ஏதோ பெரிய விஷயத்தை கண்டு பிடித்ததை போல் சொல்ல

 

அவனை முறைத்து பார்த்து “டைகருக்கு வயசாச்சு” என்று சொன்னவன் “வேற வண்டி எடுத்துட்டு வா” என்று அவனை அரண்மனையிலிருந்து வேறொரு வண்டி கொண்டு வரும் படி பணித்தவன் ஜீப்பின் மேல் ஏறி நிலாவை ரசிக்க ஆரம்பித்தான்.

 

“நம்ம அண்ணனா இது நிலாவை எல்லாம் ரசிக்கிறார்” என்று புன்னகைத்தவாறே அரண்மனையை நோக்கி வ்ருஷாத் நடக்க ஷரப்பின் போன் அலறியது மறுமுனையில் என்ன சொல்லப் பட்டதோ அரண்மனையை நோக்கி ஓட்டமெடுத்த ஷரப் வ்ருஷாத்தை தாண்டி ஓடவும் “என்ன ஆச்சு” என்று கத்தியவாறே அவனின் பின்னால் ஓடினான் வ்ருஷாத்.

 

சில நிமிடங்களுக்கு முன்

 

பத்மா உதைக்கவும் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த ஆன்ஷி  உருண்டு விழ அவளை தூக்கி நிறுத்தி கன்னம் கன்னமாக அறைந்தாள்.

தூங்கிக் கொண்டிருந்த ஆன்ஷி விழுந்த உடன் எழும்ப  முன்னே அவள் தூக்கி நிறுத்தப்பட்டதுமில்லாது அடிக்கவும் தூக்கம் கலைந்து அரண்டு விழித்தவள் பத்மாவை தடுக்க முனைய.

“என்னடி பாக்குற? கேவலம் பொண்ணுங்கள வித்து பொழைக்கிற மனீஷ் பொண்ணு நீ மட்டும் சுத்தமானவளா தான் இருப்பியா?” என்று பத்மா தாறு மாறா அடிக்க

இங்கு என்ன நடக்குதுன்னு புரியவே ஆன்ஷிக்கு சில கணங்கள் தேவை பட்டது

 

“பத்மா நிறுத்து” என்று வசுந்தராதேவி கட்டளையிட பத்மா கோபமாக மூச்சு வாங்கியவாறே நிற்க தேஜ்வீர் பக்கம் திரும்பியவர் “நீ கதவை சாத்திக் கிட்டு வெளியே போ” என கர்ஜிக்க   

 

வசுந்தராதேவி நிறுத்த சொன்னதும் அவரை நம்பிக்கையாக பார்த்தவள் அவரின் கர்ஜனை குரலில் அரண்டு போனாள் ஆன்ஷி.

தேஜ்வீரும் தான் நினைத்தது தனக்கு சேதாரமில்லாது நடக்கப் போவதை எண்ணி உள்ளுக்குள் குஷியுடனே வெளியேறினான் ஹரிலாலுக்கு போன் பண்ண.

 

தேஜ்வீர் கத்திக் கத்தி சொன்னதை அந்தப் பக்கமாக வந்த வ்ருஷாத்தின் காதலி கேட்டு விட என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே மூவரும் ஆன்ஷியின் அறையை நோக்கி நடக்க ஷரப்புக்கு அழைத்து விட்டாள்.

 

தேஜ்வீர்  கதவை சாத்தி விட்டு சென்றதும் ஆன்ஷியின் பக்கம் திரும்பியவர். உண்மையிலேயே நீ கன்னி தானா? பத்மா சொன்னது போல் பொண்ணுங்களை வித்து பொழைக்கிறவனுடைய பொண்ணு நீ உடம்ப விக்காம இருந்து இருப்பியா?” என்று  பேசியவாறே வந்தவர் ஆன்ஷியின் துப்பட்டாவை உருவ ஆரம்பித்தார்.

 

தொட்டாலே சிவந்து விடும் நிறமுடையவள் ஆன்ஷி. சுண்டினால் கூட இரத்தம் வெளியே வந்துவிடுமோ என்றிருக்கும் கன்னங்களில் பத்மாவின் கைத்தடங்கள். கன்றிச் சிவந்து கன்னம் வீங்கி பார்க்கவே யாரோ போல் இருந்தாள்.

 

தனது தந்தையை நியாபகப் படுத்தினாலேயே தாயின் நினைவுவந்து ஸ்தம்பித்து நின்றவள் வசுந்தராதேவி துப்பட்டாவை உருவியதை தடுக்க வில்லை. பேய் அறைந்தது  போல் இருந்தவள் அவர் செய்த செயலில் சுயநினைவுக்கு வர தன்னை காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை புரியாமல் தடுமாறி தனது தந்தையின் ஈனச் செயல்களுக்காக அவர்களின் முன் கூனிக் குறுகி நின்றாள்.

 

“பத்மா இவ மொத்த துணியையும் உருவி கன்னியானு பாரு, இல்ல இவளை கொன்னுடு” என்று உத்தரவிட பத்மா ஆன்ஷியின் அருகில் வந்து அவள் அணிந்திருந்த இரவுடையில் கைவைத்து கிழித்தெறிந்தாள்.

 

இரவுடையாக பருத்தியிலான கையில்லா சுடிதார் டாப் போல் தொடையளவு மேலாடையையும் ஒரு பாண்ட்டுமே அணிந்திருந்தாள் ஆன்ஷி. உள்ளாடை எதுவும் அணிந்திருக்க வில்லை. வன்கொடுமை என்பது ஆணுக்கு பெண் இழைப்பதா? இங்கே இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பந்தாடிக் கொண்டிருந்தனர்.

 

ஆன்ஷி மேலாடையில்லாது கூனிக் குறுகி தன் மார்பை  கைக்கொண்டு மூட ஓடவும் வழி இல்லாது, வெளியே செல்லவும் முடியாது, அவர்களிடத்தில் கெஞ்சவும் முடியாது, கெஞ்சி எந்த பயனுமில்லை என்பது அவர்களின் முக பாவனைகளிலேயே தெரிகிறது.  கத்தவும் முடியாத அவலநிலை. ஷரப்பை எப்படி அழைப்பது கட்டிலில் உள்ள போர்வையை எடுத்து தன்னை மறைக்கக் கூட கையை நீட்ட வேண்டும் என்ற நிலையில் என்ன செய்வது என்று கண்ணீர் மாத்திரம் வடிக்க, வழியும் கண்ணீர் கூட கன்னத்தில் விழுந்து அவளை வதைக்க கன்னம் பத்மா அடித்ததில் எரிய ஆரம்பித்தது.

 

அந்த கூர்வலியை தங்கவும் முடியாது, கை கொண்டு கன்னத்திலுள்ள கண்ணீரை துடைக்கவும் முடியாது, நரகவேதனையாய் உணர்ந்தவள். இதை விட மரணவலி மேலானதாக இருக்கும் என்றெண்ணலானாள்.

 

“என்ன பத்மா பேண்ட்டை உருவு.  என்ன பாக்குற சீக்கிரம்” வசுந்தராதேவி கொஞ்சமேனும் பெண்ணென்ற உணர்வில்லாது உத்தரவிட  அதற்க்கு மேலாக பத்மா நின்றாள்.

 

“எங்க போய்ட  போறா இந்த நிலையில் இவளால் வெளிய ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது, எங்க கிட்ட இருந்து தப்பிக்கவும் முடியாது” தான் ஒரு பெண். பெண்ணை பெற்று வைத்திருக்கிறேன் என்ற எந்த எண்ணமும் இல்லாது சத்தமாக சிரித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ஷியை நெருங்க அவளோ சுவருடனையே ஒட்டி சாய்ந்தாள்.

 

சாவதை தவிர வேறு வழி இல்லை என்று தோன்ற அந்த நேரத்தில் கூட இடது  கையை மார்புக்கு குறுக்கே கொண்டு வந்து வலது கையால் மேசையின் மேல் இருந்த கண்ணாடியிலான பூ ஜாடியை கையில் எடுத்தாள்.

ஆன்ஷி பூ ஜாடியை எடுக்கவும் தன்னை தாக்க எடுத்ததாக பத்மா நினைக்க

அக்கணம் ஷரப் கதவை உதைக்க பூட்டாமல் சாத்தியிருந்த பழமை வாய்ந்த, உறுதியான கதவு பெரும் சத்தத்தோடு ஒரு பக்கம் கழன்று விழுந்தது. பத்மா அதிர்ச்சியடைய வசுந்தராதேவி அசையாது நின்றார்.

ஆன்ஷியின் நிலையை கண்டவன் கோவத்தின் உச்சிக்கே சென்றாலும் அவள் செய்யப் போகும் காரியத்தை நொடியில் புரிந்துக் கொண்டு

 

“ஆன்ஷி…….. என் மேல் ஆணை உன் உயிர் என்வசம் எந்த காரணத்துக்காவது உயிரை விடணும்னு யோசிக்காத உன் பின்னாடியே நானும் வந்துடுவேன்”  அழுத்தமாக அவளின் கண்களை மாத்திரம் பார்த்துக் கூறியவனின் கை மட்டும் கட்டிலில் இருந்த போர்வையை எடுத்து வேகமாக கால்கள் அவளிடத்தில் அடைந்து அவளை போர்த்தியது.

 

அவளை இறுக்கி அணைத்தவன் “சத்தியம் பண்ணு எந்த காரணத்துக்காவது உயிரை விடமாட்டேனு உங்க அம்மா மேல சத்தியம் பண்ணு”

 

வசுந்தராதேவியையோ, பத்மாவையோ பொருட்டாகவும் நினைக்காமல் அவன் கூற்றிலேயே நிற்க

 

அழுதவாறே இருந்த ஆன்ஷிக்கு அவன் விம்பம் கூட கண்ணில் தெளிவாக  விழ வில்லை. கண்ணை சிமிட்டி சிமிட்டி கண்ணீரை வெளி தள்ளியவள் அவனை பார்க்க சத்தியம் செய்யுமாறு விடாப்பிடியாக நிறவன் அவளின் கையிலிருந்த பூஜாடியை அப்புறப் படுத்த அவனின் கையை இறுக்கிப் பிடித்தே சத்தியம் செய்து கொடுத்தாள் ஆன்ஷி.

 

அவன் அடுத்துப் பேசியதில். தான் இந்த சத்தியத்தை ஏன் செய்தோம் என்று நினைத்தவள். அம்மா மேல் சத்தியம் செய்திருக்கக் கூடாது, அம்மா இறந்த அன்னைக்கே நானும் இறந்து போய் இருக்கணும் என்று எண்ணலானாள்.

ஆன்ஷி சத்தியம் பண்ணவும் நிம்மதி பெரு மூச்சு விட்டவன். அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டே பத்மாவிடம் திரும்பி

 

“இந்த அரண்மனையிலேயே கொஞ்சமாச்சும் பாசமுள்ளவங்க என்று உங்கள மட்டும் தான் நம்பியிருந்தேன். நீங்க ஒரு பொம்பளத்தானே? நீங்க பெத்த பொண்ணு வைஷ்ணவியும் ஒரு பொண்ணு தானே? டில்லில படிக்கிறவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்ட என்று அவ்வளவு நம்பிக்கை இல்ல. அவளையும் இந்த மாதிரி துணிய கழட்டி செக் பண்ணுங்க போங்க” என்று கத்தி விட்டு

வசுந்தராதேவியின் பக்கம் திரும்பி கண்களாலேயே அவரை எரித்தவன்.

“உங்க கிட்ட நா இத எதிர் பாக்கல. சாத்தியமா உங்க கிட்ட நான் இத எதிர் பார்க்கல. எனக்கு வழிகாட்டியா இருந்த நீங்க என்ன புரிஞ்சிப்பீங்கனு நெனச்சேன். என்ன உங்க கைக்குள்ள வச்சிக்கணும்னு தான் ஆசைப்பட்டு இருக்கீங்க”

 

“இவ என் மனைவி கல்யாணமாகி ஐஞ்சு நாலாச்சு நமக்குள்ள ஒண்ணுமே நடக்கள்ளனு எப்படி நினைக்கிறீங்க? அதுவும் இந்தமாதிரி ஒரு பேரன் கிட்ட நீங்க அத எதிர் பாத்திருக்கக் கூடாது. என் மனைவி கன்னியா இல்லையானு நான் மாட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதும். உங்க பேரன் நான் ரொம்ப ஒழுக்கமானவனா? இவ தான் நான் மொத மொத தொடப் போற பொண்ணா? உங்க மனச தொட்டு சொல்லுங்க நான் பொண்ணுங்க கூட கூத்தடிச்சது உங்களுக்கு தெரியல்னு. நீங்க முதல்ல என்ன கன்னிப் பையனானு செக் பண்ணி இருக்கணும் அத விட்டுட்டு என் பொண்டாட்டி மேல கை வச்சிருக்கக் கூடாது”

 

வசுந்தராதேவியின் மேல் இருந்த ஆத்திரத்தில் தன்னை பற்றிய முழு உண்மையையையும் தன் வாயாலேயே ஆன்ஷிக்கு வாக்கு மூலம் கொடுத்துக் கொண்டிருப்பதை ஷரப் உணரவில்லை.

 

அவன் பேசப் பேச அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள் ஆன்ஷி. பெண்களை ஏமாற்றி பெண்களை விற்று பொழப்பு நடாத்திய தந்தைக்கும், பெண்களுடன் கூத்தடிச்சேன் என்று சொல்லும் தன் கணவனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அக்கணம் அவளுக்கு தோன்றவில்லை.

 

காதல் என்ற பெயரில் அன்னை ஒருவனிடம் ஏமார்ந்தாள் என்றால் தானும் அன்னையின் வழியையே பின் பற்றி காதல் என்ற பெயரில் நன்றாக ஏமாற்றப் பட்டு விட்டேன் என்று நெஞ்சம் விம்ம அலுவதற்க்கு கூட கண்களில் கண்ணீர் இல்லாமல், நடந்தவைகளை ஜீரணிக்கவும் முடியாமல், எதை பற்றியும் சிந்திக்க திறன் இல்லாது மூளையும் அதிர்ச்சியால் மரத்து போக, பட்ட அடிகளால் உடம்பு சோர்ந்து போய் இருந்தவள் ஷரப் சொன்னவைகளால் மனதில் பெரும் அடி வாங்கி இதற்க்கு மேல் எதையும் தாங்க முடியாதென்று அவளின் சிறு இதயம் நினைத்ததோ? மயங்கிச் சரிந்தாள்.

 

ஆன்ஷி கால்கள் தொய்ந்து விழவும் அவள் பக்கம் திரும்பிய ஷரப் அவள் மயங்கி அவன் மேலே விழவும் அவளை தூக்கி கட்டிலில் கிடத்தியவன். அவளின் கன்றிச் சிவந்து, வீங்கி இருந்த கன்னம் தட்டி அழைக்க முடியாமல் திண்டாடினான்.

 

வசுந்தராதேவியின் பக்கம் திரும்பியவன்

“நான் உயிரோடு இருக்கும் வரை இவ தான் என் மனைவி இவளை ஏற்காத யாரும் எனக்கு தேவையில்லை. உங்க மனசு மாறி எப்போ இவளை என் மனைவியா ஏற்ப்பீங்களோ! அப்போ அரண்மனைக்கு வருவேன்.” அவரின் எந்த ஒரு பதிலையும் எதிர் பாக்காமல் ஆன்ஷியை தூக்கிக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே செல்ல வசுந்தராதேவி தந்திரமான புன்னகையை சிந்தியவாறே அசையாது நின்றார்.

 

ஷரப்புடன் ஓடி வந்த வ்ருஷாத் அரண்மனை வாசலோடு தங்கி விட உள்ளே பெரும் சத்தத்தோடு கதவு விழவும் உள்ளே செல்வோமா? வேண்டாமா? என்று மனதோடு பட்டி மன்றம் நடத்தியவன் ஷரப்பின் குரல் ஓங்கி  ஒலிக்கவே கதவோடு தங்கி விட்டான். ஆன்ஷியை ஷரப் தூக்கிக் கொண்டு வரவும் வண்டியை எடுக்க ஓடியவன் காரை கொண்டு வந்து நிறுத்தி கதவையும் திறந்து விட

 

“வ்ருஷாத் டாக்டருக்கு போன் பண்ணி விருந்தினர் மாளிகைக்கு வரும் படி சொல்லு சீக்கிரம்” என்று சொல்லியவாறே ஆன்ஷியை வண்டியின் உள்ளே படுக்க வைக்க வ்ருஷாத் டாக்டரை  அழைக்க போனை எடுத்தான்.

 

“வ்ருஷாத் ஜீப்பை எடுத்துட்டே வா. டைகர் இல்லாம என்னால எங்கயும் போக முடியாது” என்று கட்டளையிட்டவாறே காரில் அமர்ந்து காரை கிளப்பிக் கொண்டு வேகமாக விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றான் ஷரப்.



அங்கே நடப்பவற்றை தேஜ்வீரின் போன் மூலம் கேட்டுக் கொண்டிருந்த ஹரிலால் கெக்காளிக்க ஆரம்பித்தான்.

“சபாஷ் தேஜ்வீர்  இனி ஷரப்பின் ஆட்டம் முடிந்தது. அவன் இனி செல்லா காசு அரண்மனை உனக்குத்தான்” என்றவன் மனதால் “அரண்மனை இனி எனக்குத்தான்” என்று போனை அனைத்து கை கொட்டி சிரிக்க ஆரம்பித்தான்.



அறைக்கு வந்த பத்மாவை கட்டி அணைத்து கொஞ்சலானான் தேஜ்வீர்

“என் பட்டு டி நீ. என்னா அடி. செமத்தியா குடுத்தியே டி செல்லம். இப்போ ஷரப் அரண்மனையை விட்டு போய்ட்டான். உன் பிளான் படி நீ எனக்கு பயந்த மாதிரி என்னமா நடிக்கிற உண்மையில் நான் தான் டி உன்ன கண்டு உள்ளுக்குள்ள நடுங்குறேன்”

 

“சத்தமா பேசாத. அவள அடிச்சதுல என் கையெல்லாம் வலிக்குது வந்து பிடிச்சி விடு” ஹப்பா….. அம்மா கிட்ட நடிச்சி ஷரப் கிட்ட பாசமா இருக்குற மாதிரி நடிச்சி அரண்மனையிலேயே காலத்தை ஒட்டிட்டேன். எவளோ ஒருத்தி வந்ததும் இங்க இருந்து போக வேண்டி வரும்னு  ஷரப்புக்கு கல்யாண ஆசையே வராம பாத்துக்க சொன்னேனே! இது தான் நீ பாத்துக்க கிட்ட லட்சணமா?”

 

“ரொம்ப நாளைக்கப்போறமா உன் கம்பீரக் குரல் என் காதுல தேனா பாயுது பத்து…” நான் என்னடி பண்ண நீ சொன்ன மாதிரி  தானே வித விதமான பொண்ணுங்கள அவனுக்கு அறிமுகப் படுத்தி அவன் மனசுல கொஞ்சம் கொஞ்சமா விஷத்தை கலந்தேன். அவன் ராஜஸ்தானை விட்டு போனதும் எனக்குத் தெரியாது. நா என்ன கனவா கண்டேன் யொத்தாவோட வாறவன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிக் கிட்டு வருவான்னு.  பத்மாவின் மேல் தேஜ்வீர் பொய்க் கோவம் கொள்ள

 

“அந்த மினிஸ்டர் கைக்குள்ள வச்சிக்க சொன்னேனே அதையாவது சரியா செய்ரீயா இல்லையா? அவன் ஒரு குள்ள நாரி அவன் கிட்ட பேசும் பொது மிக கவனமா இருக்கணும். புரிஞ்சுதா”  

 

“எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல பத்மா. உனக்கு உன் அண்ணன் மேல பாசம் அதிகம். அவர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் படியில் உருண்டு புள்ளத்தாச்சியா இருந்த நீ அடிபட்டு நம்ம பையனுக்கு மூள வளர்ச்சி இல்லாம  இப்படி ஆகிருச்சு. அண்ணன் மேல உசுரா இருந்த நீ அவன் பையன் மேல பாசமா இருக்குற மாதிரி நடிக்கிறியே ஏன்?”  

 

“அண்ணன் மேல பாசம் தான். அவன் கல்யாணம் பண்ணும் வர இருந்துச்சு எப்போ அவன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்க கிட்டானோ என் கிட்ட இருந்து விலகிட்டான்” என்று வாய் விட்டு சொன்னவள்

 

“இந்த அரண்மனை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதம் அண்ணன் ஆச பட்டவள கட்டிக் கிட்டான். நான் ஆச பட்டவனை அம்மா கொன்னுட்டாங்க. அதுக்கு என் அண்ணனும் உடந்தை. அவன் மட்டும் சந்தோசமா வாழணுமா? விட மாட்டேன்னு இருந்தப்போ அவன் சாவு எனக்கு பேரதிர்ச்சியா இருந்துச்சு. அத தாங்க முடியாம விழுந்துட்டேன்”

அவன் வாரிசு ஷரப் மேல எனக்கு எப்படி பாசம் வரும்? என்று தன் கண்களை துடைக்க தேஜ்வீர் யோசனையாக பத்மாவை பாத்திருந்தான்.

 

இங்கே வ்ருஷாத் ஜீப்பை கிளப்ப அவன் முன் வந்து நின்றாள் அவனின் கூர்விழியழகி.

Advertisement