Advertisement

                                                       அத்தியாயம் 9

“அத்த மாமா இங்க வாங்க உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” அதிகாரமாக சாருலதா அழைக்க

“இப்போ என்ன வில்லங்கத்த விலை பேசி இருக்காளோ” என்று மனைவியை உற்று கவனிக்கலானான் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த சிவதாஸ்.

 

ஆன்ஷி வந்ததிலிருந்து அவளை ஒரு வேலைக்காரி போல்  லதா நடத்துவதும் ஆன்ஷியால் பேச முடியாததால் மீனாட்ச்சியை பற்றி தரக்குறைவாக பேசுவதும் எதிர்த்து பேசமுடியாமல் ஆன்ஷி வரும் கண்ணீரை பாட்டிக்கும் தாத்தாக்கு தெரியாமல் மறைப்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிஞ்ச ரகசியம் என்றாலும் லதாவை பெரியவர்களே கேள்வி கேக்காதிருக்க சிறியவர்கள் மட்டும் என்ன செய்ய ?

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பரமு பாட்டி பேரன் தருண் காதில் விஷயத்தை போட தன் கண்ணை மறைத்து அன்னை செய்வதை எப்படி நிறுத்துவது  என்பதை யோசித்தவனுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு தான் அன்னை வழி தாத்தா சொத்தை இணைக்கும் போது மீனாட்சிக்கு பங்கு கொடுத்தது. அதை காரணம் காட்டி அன்னையின் வாயை அடைத்தவனுக்கு நா உன் அம்மாடா என்று நிரூபித்துக் கொண்டிருந்தாள் சாருலதா.

 

“உக்காருங்க மாமா, நீங்களும் உக்காருங்க அத்த”

 

“அத்த மாமான்னு கொஞ்சமேனும் மரியாதை இல்லாமல் காலுக்கு மேல் கால போட்டு அமர்ந்துக்கொண்டு என்னமா உபசரிப்பு” மனைவியை எதுவும் சொல்ல முடியாமல் பல்கலைக் கடித்து கோவத்தை அடக்கினார் சிவதாஸ்.

 

லதா கை காட்டிய சோபாவில்  வந்தமர்ந்த முதியவர்கள் இருவரும் என்ன ஏது என்று எந்த கேள்வியும் கேக்காது லதாவே பேசட்டும் என்ற விதமாக அமைதி காக்க  குடும்பத்தாரை தனது கைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் மமதையில் லதா பேச ஆரம்பித்தாள்.

“இதோ பாருங்க அத்த என்ன இருந்தாலும் மீனாச்சி இந்த வீட்டு பொண்ணு, அவ பண்ணது மன்னிக்க முடியாத தப்பாகவே இருந்தாலும் செத்துப் போனவள பத்தி மீண்டும் மீண்டும் பேசி என்ன பிரயோஜனம்? சொல்லுங்க. ஆன்ஷி இப்போ நம்ம பொறுப்புள இருக்கா, அவளுக்கு  ஒரு கல்யாணத்த பண்ணனுமா? வேண்டாமா? வெளிய மாப்புள பார்த்தா என்னவாகும்? சொல்லுங்க என்னவாகும்?” அவர்களிடத்தில் கேள்வியை நிறுத்தினாள் லதா.

மருமகள் எதை பற்றி பேசப் போகிறாளோ என்று படபடப்புடன் இருந்த முதியவர்களுக்கோ ஆன்ஷியின் கல்யாணத்தை பத்தி பேச தருனுக்கு ஆன்ஷியை கல்யாணம் பண்ணி வைத்து அவளை தங்கள் கூடவே வைத்திருக்க ஆசை வந்தாலும் அதை மருமகளிடம் வாய் திறந்து சொல்லும் அளவுக்கு அவளுடன் சுமூகமான உறவு இல்லாமல் போனது காலம் செய்த சோதனை.

 

“இதுவே தருண் பொண்ணா பொறந்திருந்தா கண்டிப்பா மருமகளுங்க அண்ணன் சத்யாவுக்கு  கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.” லதா பெருமூச்சு விட

 

இவர்களின் பேச்சு வரவேற்பறையில் நடந்துக்க கொண்டிருக்க சாப்பாட்டறையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த முல்லையும், மல்லிகையும் ஒருவரையொருவர் பார்த்து திகைத்தனர். அருண் தனது காதலை ஏற்காத மல்லிகையின் கழுத்தில் காலேஜில் வைத்து தாலியை கட்டிவிட அதையே காரணம் காட்டி முல்லைக்கும் வருணுக்கும் கல்யாணத்தை பண்ணது மாத்திரமல்லாது, கல்யாணச் செலவில் பாதிக்கு மேல் தங்களது அண்ணனின் தலையில் கட்டி, வரதட்சணை, சீர், சடங்கு என்று அண்ணனை உரித்தெடுத்தது போதாதென்று  பொண்ணு இருந்தா கட்டி வச்சிருப்பாங்களாம். இதெல்லாம் அண்ணன் ஒரு அப்பாவி தங்கைங்களுக்காக எதுவும் செய்வான் என்றறிந்து அவனையும் அவங்க அடிமையாய் வைத்திருக்க ஆசைப்பட்ட மாமியாரை நினைத்து உச்ச கொட்டிய இருவரும், செல்வியுடன் அண்ணன் இரண்டு குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையை நினைத்து நிம்மதியடைந்தனர்.

 

அங்கே நடப்பவற்றை தனக்கு சம்பந்தமில்லாத மாதிரி நியூஸ் பேப்பரில் கண்ணை வைத்தும் லதாவின் பேச்சில் காதை தீட்டிக் கொண்டிருந்த சிவதாஸை  அழைத்த சாருலதா

 

“என்னங்க அங்க உக்காந்துகிட்டு இருக்கீங்க எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு இருக்கோம் இங்க வந்து உக்காருங்க” அதட்டல் தான். சிவதாசும் வந்து தாய் தந்தையுடன் அமர

 

“நா தருனுக்கு ஆன்ஷிய கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டேன்” கல்யாணம் பண்ணி வைக்க நினைக்ககிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க? தருண்,ஆன்ஷி சம்மதிப்பார்களா? இது சரிவருமா? என்ற எதுவுமே இல்லாமல் தான் எடுத்த முடிவை சொல்லும் மனைவியை வெறுப்பாக பார்த்தான் சிவதாஸ்.

 

அம் முதியவர்களுக்கோ  வேறு ஒன்றும் தோன்றவில்லை பேத்தி தங்கள் கூடவே காலம் முழுக்க இருக்கப் போகும் சந்தோஷமும் பேரன் தருண் அவளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியும் மாத்திரம் மனதை நிறைக்க

“நீ  எது பண்ணாலும் நல்லா யோசிச்சி குடும்ப நன்மைக்காக தான் பண்ணுவாய் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கு” என்று சிவஞானம் சொல்ல

 

கண்களில் நீர்கோர்க்க “ரொம்ப சந்தோசமாக இருக்கு லதா எங்க என் பேத்தி தனிமரமா இருந்துடுவாளோ என்று பயந்துட்டேன் என் நெஞ்சில பால வார்த்துட்ட” பரமேஸ்வரி சொல்ல

 

“இல்லையா  பின்ன என் அப்பா கஷ்டப் பட்டு சம்பாதிச்ச சொத்து  எவனோ ஒருத்தனுக்கு அனுபவிக்க கொடுத்துடுவேனா?” மனதுக்குள் லதா பொரும  

“சோழியன் குடுமி சும்மா ஆடாதே இவ எதுக்கு இப்போ இந்த கல்யாண ட்ராமாவ ஆரம்பிச்சு இருக்கானு தெரியலையே! இவள இன்னும் புரிஞ்சிக்காம இருக்காங்களே!” தனது தாய் தந்தையரை கவலையுடன் பார்த்தான் சிவதாஸ்.

 

“எஸ் ஷரப் சௌதகர் ஸ்பீக்கிங்” சந்துரு என்பவரின் பேஸ்புக் இல் போடப்பட்ட வாளை பற்றி சந்தேகம் வர அதை பற்றி விசாரிக்க உத்தரவிட்டவனுக்கு சரவணன் சௌதாகர் என்பவருடைய மகன் சைதன்யன் சௌதகரின் திருமண சடங்கில் வாள் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்று தகவல் வரவும் அதை பற்றி முழுமையான விசாரணையை நம்பத்தகுந்த   துப்பறியும் முகவர் ஒருவருக்கு கொடுத்திருந்தவனை அழைத்திருந்தார் அவர்.

“மிஸ்டர் ஷரப் நா டிடெக்ட்டிவ் k7 பேசுறேன்” நீங்க சொன்னத வச்சி முழுமையாக விசாரிச்சிட்டேன்”

“ஒரு நிமிஷம்” என்றவன் காலை ரெகார்டிங் இல் போட்டு “சரி சொல்லுங்க”

“மிஸ்டர் சரவணன் சௌதாகர், மனைவி லட்சுமி சௌதாகர், ஒரே மகன் சைதன்யன் சௌதாகர். சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு. அவரோட மனைவி மீரா சௌதாகர். அவங்க அப்பா எக்ஸ் ஆர்மி மேன், கசின் பிரதர் அண்ட் அவரோட மனைவி ரெண்டு பேருமே டாக்ட்டர்ஸ்”

“நிறுத்துங்க இதெல்லாம் சாதாரண தகவல்கள் எனக்கு வேண்டியது சம்திங் ஸ்பெஷல். புரிஞ்சுதா? ரெண்டு வாரம் எடுத்துக் கோங்க அவங்க ஆணி வேர்வரை போய் தேடுங்க குறிப்பா சௌதாகர் என்று குடும்ப பேர் வச்சிருக்குறாங்களே! ராஜஸ்தான் ல சொந்த பந்தம் இருக்கா? ஏதாச்சும் லிங்க்? தேடுங்க அண்ட் அந்த வாள் பத்தி முக்கியமான டீடைல்ஸ் எல்லாம் வேணும்” என்றவன் போனை துண்டித்தான்.

“ரெண்டு பேரும் ஷாப்பிங் முடிச்சிட்டு இப்போ தான் வாரீங்களா? வாங்க வாங்க மெதுவா ஆற அமர வாங்க” அண்ணன்கள் கிண்டல் போல் கேப்பதை புரியாமல் பார்த்தான் தருண்.

பரமு பாட்டி ஓடி வந்து இருவரையும் கட்டி அணைத்து கணீர் வடிக்க “எதுக்கு பாட்டி இப்போ அழுது கிட்டு எனக்கு அழுமூஞ்சி பரமுவ பிடிக்கவே இல்ல அந்த ஞானம் எப்படித்தான் உன் கூட குடும்பம் நடத்துறாரோ?” என தருண்  சளித்துக் கொள்ள

“அடி படுவா  என்னையே கிண்டல் பண்ணுறியா? கல்யாணம் நடக்கட்டும் என் பேத்திக்கு ட்ரைனிங் கொடுத்து உன்ன நல்லா போட சொல்லுறேன்” பரமு பாட்டி சந்தோசமாக கூற புருவமத்தியில் முடிச்சுடன் அன்னையை ஏறிட்டான்.

“என்ன கல்யாண மாப்புள இப்போவே பொண்ணு கூட ஊற சுத்துறீங்க, கல்யாணத்துக்கு அப்பொறம் கூட நாங்க வந்து டிஸ்டப்  பண்ணிடுவோம், பாத்துக்கோங்க” அண்ணிகள் சொல்ல அப்பொழுதுதான் ஆன்ஷிக்கு புரிந்தது அவர்கள் சொல்வது தன்னையென்று.

தருணும் ஆன்ஷியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆன்ஷிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை, நெஞ்சில் ஏதோ பாரம் ஏறி அமர்ந்துக் கொண்டது போல் கசந்தது அன்று புழுதியை கிளப்பிக் கொண்டு வந்தவனின் முகம் கண்ணில் தோன்ற அவள் மனம் சொல்வதை புரியாமல் அதிர்ந்தாள்.

 

“தனதறைக்கு வந்த தருணுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை அவன் மனதில் ஒருத்தி காதல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க ஆன்ஷியை எப்படி மணப்பது? காதல் வந்த தருணத்திலிருந்து தன்னவளிடம் முன்மொழிந்துக் கொண்டவண்ணம் தான் இருக்கிறான். “எனக்கு படிப்புதான் முக்கியம் என்ன நிம்மதியா படிக்க விடு” என்பவளிடம் போய் என்ன வென்று புரியவைப்பது. அண்ணன் செய்ததுபோல் காதல் வேண்டாம் என்பவளுக்கு கட்டாய தாலி கட்டவா? குடும்பத்தாரின் முகத்தில் உள்ள சந்தோசம் அதை அழிப்பதா? ஆன்ஷி..அவள் என்ன நினைக்கிறாளோ தெரியவில்லை. முதலில் யாரிடம் பேசுவது புரியாமல் குழம்பினான் தருண்.

 

“ஆன்ஷிமா உனக்கு தருண கட்டிக்க சம்மதம் தானே?” பரமு பாட்டி கண்ணில் எதிர்பார்ப்போடு கேக்க அவருக்கு என்ன பதில் சொல்வது? அன்று ஒருநாள் சில நொடிகள் கண்டவனை என் மனம் நினைக்கின்றது என்றா? அவன் யாரோ? எவனோ? ராஜஸ்தானை விட்டு, அந்த கொடிய நரகத்தை விட்டு வந்தாச்சு மேலும் அங்கே உள்ள ஒருவனை பற்றி நினைப்பது அன்னைக்கு செய்யும் துரோகமாக தோன்ற “சம்மதம்” என்று தலையாட்டியவளின் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.

 

தருண் அவனின் மனம் நிறைந்தவளுக்கு அழைப்பெடுக்க எடுக்க, மறுமுனை காலை கட் செய்தவண்ணம் இருக்க சளித்துக் கொண்டவன் தன் விதி ஆன்ஷியுடன். பாட்டி தாத்தாவின் சந்தோஷத்திற்காக அவளை மணப்பதென்று முடிவெடுத்தவன் அவளை தேடித் செல்ல. பரமு பாட்டியுடன் வந்து சேர்ந்தாள் ஆன்ஷி.

 

ஆன்ஷி இங்கு வந்த நாளிலிருந்தே தருண் அவளை ஒரு நல்ல நண்பியாக ஏற்று, அன்னையிடமிருந்து பாதுகாக்க அவளை வெளியே அழைத்துச் செல்வதும், ஷாப்பிங் என்று ஏதாவது வாங்கி வருவதுமாக இருக்க வீட்டில் உள்ளவர்களுக்கு அவன் அவளை காதலிப்பதாகவே தோன்றியது, ஒருநாள் காபி சாப்பில் ஆன்ஷி அமர்ந்திருந்த திசையை நோக்கி திரும்பி இருந்தவன், காதில் ப்ளூடூத்தை மாட்டியவாறு அவனின் செல்ல ராட்சசிக்கு காதல் தூது விட, அவனை அங்கே கண்டு அவனருகில் வந்த சாருலதா அவன் ஆன்ஷியை பார்த்து தனியாக புலம்புவதாக தோன்றவே அவளின் கிரிமினல்ப்ரைன் வேலை செய்ய ஆரம்பித்தது.

“வா ஆன்ஷி, வாங்க பாட்டி” தருன்  அவனது அறைக்கு வந்த இருவரையும் அமர சொல்ல சங்கடத்தில் நெளிந்தாள் ஆன்ஷி.

“அப்பா தருணு உனக்கு என் பேத்திய கட்டிக்க சம்மதமாப்பா ” கையை நீட்டிக்க கேக்க அவரின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டவன் “சம்மதம்” என்று சொல்லியவாறே ஆன்ஷியை பார்த்தான்.

 

இன்னும் ஒரே வாரத்தில் நல்ல முகூர்த்தம் இருப்பதாலும் அதை விட்டால் நல்ல நாளும், மண்டபம் எல்லாம் சரியாக கிடைக்க மாட்டாதென்று சாருலதா வீட்டாரை அவசரகதியில் கல்யாணத்துக்கு தயாராக்க ஆன்ஷி, தருணை தவிர மற்ற அனைவரும் மகிழ்ந்தனர்.

கல்யாணப் பத்திரிகை மணமகன் மற்றும் மணமகளின் புகைப் படங்களோடு அச்சிடப் பட்டு வழங்கப் பட, வியாபார விஷயமாக ராஜஸ்தானிலிருந்து வந்த கிளைன்ட் ஒருவருக்கு பத்திரிகை வைத்த சாருலதா கூடுதல் தகவலாக தேவதை மாதிரி இருக்கும் ஆன்ஷியை தனது மகன் காதலித்து மனப்பதாக சொல்ல கல்யாணத்துக்கு வருகிறேன் என்றவர் பத்திரிக்கையுடன் ராஜஸ்தான் கிளம்பினார்.

அந்த பத்திரிகை ஷரப்பின் கையில் கிடைத்தது மாத்திரமல்லாது, சாருலதா சொன்ன கூடுதல் தகவலையும் கேட்டறிந்தவன், சரவணன் சௌதாகரிடம் இருப்பது யொத்தா தான் என்றறிந்தும் சென்னை செல்லாது கோயம்புத்தூர் வந்திறங்கினான்.

 

Advertisement