Advertisement

                                                   அத்தியாயம் 20

ஷரப் போனை காதில் வைத்ததும் “ஷரப் நான் பத்மா பேசுறேன். போன வச்சிடாத. நீ என்ன வெறுக்குறன்னு தெரியும். நா செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்க போன் பண்ணல. உன் பொண்டாட்டிய அம்மா இங்க தூக்கிட்டு வந்திருக்காங்க. அவ நிலைமை கொஞ்சம் கவலைக் கிடமா இருக்கு”

போதை மருந்தால் தான் ஆன்ஷி இப்படி இருக்கிறாள் என்று அறியாத பத்மா சொல்ல ஷரப் ஆக்சலேரேட்டரை மிதித்தான்.

என் பொண்ணு உன் கூட இருக்கானே வ்ருஷாத், அவன விரும்புறா. இது அம்மாக்கு தெரிஞ்சா அவன கொன்னுடுவாங்க நீ தான் ரெண்டு போரையும் சேர்த்து வைக்கணு” என்று சொல்ல புருவம் சுருக்கினான் ஷரப்.

“அங்க தான் வந்து கிட்டு இருக்கேன்” என்று போனை அணைத்தவன், அக் கணம்  பத்மாவை நம்பவில்லை.

அரண்மனையினுள் வந்தவனை பத்மா ஓடிவந்து ஆன்ஷி இருக்கும் அறைக்கு அழைத்து செல்ல பத்மாவின் முகத்தில் என்றுமில்லாத தெளிவு இருப்பதை கண்டு கொண்டான். எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட துப்பாக்கியை அவள் கையில் கொடுத்து “இப்படி பேசுங்க” என்று சொல்ல

பத்மா துப்பாக்கியை பிடித்திருந்தால் என்பதை தவிர  உண்மையை மாத்திரமே பேசினாள். வசுந்தராதேவி ஆன்ஷியை காப்பாற்ற  பார்க்கிறார் என்பதை மட்டும் மாற்றிக் கூறினாள்.

ஒருவாறு ஷரப் சொல்லி முடிக்க பத்மாவை பார்த்து வைஷ்ணவி “அம்மா” என்று கட்டிக்க கொள்ள

“போயும் போயும் இவன லவ் பண்ணி இருக்க” என்ற பார்வைதான் தேஜ்வீரிடம்

“என்ன மாமா அப்படி பாக்குறீங்க” என்று வ்ருஷாத் கேட்ட வாறே வைஷ்ணவியுடன் சேர்ந்து அவர்களின் காலில் விழ ஆசிர்வாதம் பண்ணியவர்கள்

” நீங்க எல்லாரும் அரண்மனைக்கு போங்க. நான் அங்க வந்த பிறகு நிறைய பேச வேண்டி இருக்கு” என்று பத்மா சொல்ல

” நானும் பத்மா கூட இருக்கேன் என்று சொன்ன  தேஜ்வீர் ஷரப்பின் கைகளை பிடித்துக் கொண்டு

“என்ன மன்னிச்சுடு  ஷரப் உங்க அப்பாவையும், அம்மாவையும் கொன்னுட்டான்னு தெரியாம அந்த ஹரிலாளோட கூட்டு சேர்ந்துட்டேன். தெரிஞ்சிருந்தா சத்தியமா அப்படி பண்ணி இருக்க மாட்டேன். உங்க அம்மா என்ன கூட பொறந்த சகோதரனுக்கு உரிய எல்லா உரிமைகளையும் தந்து என்ன கௌரவப்படுத்தி இருக்காங்க அந்த நன்றி கூட இல்லாம நீ வழிதவறி போக நான் காரணமாகிட்டேன்” என்று கண்கலங்க

“எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” என்று பத்மா சொல்ல

“இல்ல பத்மா என்னதான் நீ சொல்லி இருந்தாலும் சுயபுத்தி இல்லாத நான் தானே இத பண்ணேன்” என்று சொல்லி தேஜ்வீர் வருத்தப் பட

“நடந்தது நடந்து போச்சு. எல்லாத்தையும் மறந்து ஒரு புது வாழ்வ ஆரம்பிப்போம்” என்று ஷரப் சொல்ல ஆன்ஷி அவனையே கண்கொட்டாமல் பாத்திருந்தாள்.

தன் கணவன் பிறப்பால் வீரன் மாத்திரமல்ல நல்லவனும் கூட ஏதோ தப்பான வழி காட்டலால் வழி தவறி போய் கொண்டிருந்தவனை தன் காதல் நேர்வழியில் செலுத்தி இருக்கிறது என்று புரிந்தவளாக ஷரப்பை பார்த்து புன்னகைக்க  

“இப்படி எங்க இருக்கிறோம் என்று இடத்தை  பார்க்காமல் சைட் அடிச்சா என் நிலைமை ரொம்ப மோசம்” என்று ஆன்ஷியின் காதில் சொன்னவனின் போன் அலற அதை காதில் வைக்க ஆன்ஷியை அழைத்துக் கொண்டு அந்த மருத்துவமனையின் ஆறாம் மாடிக்கு சென்றான்.

தேஜ்வீரின் பக்கம் திரும்பிய பத்மா “நான் மன்னிப்பு கேக்கனும்னா உன் கிட்ட மட்டும் தான் முழு மனஸா மன்னிப்பு கேக்கணும் என்றவள் அவனின் காலில் பட்டென்று விழ

“பத்மா” என்று அலறியவாறே அவளை தூக்கி நிறுத்தி “என்னைக்குமே என் பத்மா கம்பீரமா தான் இருக்கணும்” உன் காயத்தின் ஆழம் எனக்கு நல்லாவே புரியுது பெற்றோரை என் கண் முன்னால இழந்தவன் தான் நானும்” என்று விட்டு “இனிமேல் பழசை பேசாதே” என்ற உத்தரவோடு அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அவர்களை கண்ணீர் வழிய வைஷ்ணவி பாத்திருக்க வ்ருஷாத் அவளை அணைத்துக் கொண்டான். அங்கே நடப்பவைகளை அறியாது வசுந்தராதேவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.

*******************************************************************

ஷரப் ஆன்சியை ஆறாவது மாடிக்கு அழைத்து செல்ல அங்கே தனது தாய் வீட்டு சொந்தங்கள் அனைவரும் இருக்க அவர்களை கட்டிக்க கொண்டு நலம் விசாரிக்க

“ஆன்ஷிக்கு மீனாட்ச்சி அத்தையை பற்றி எதுவும் தெரியாதா” என்று தருண் கேக்க  

“தெரியாது” எனும் விதமாக தலையசைத்தான் ஷரப்.

“ஆமா ஏன் எல்லோரும் இங்க வந்து இருக்கீங்க? அரண்மனைக்கு வந்தவங்க பாட்டிய பாக்க வந்தீங்களா? என்று கேக்க அனிதா அவளின் கையை ஆறுதலாக பற்றி மீனாட்ச்சியின் நிலையை சொல்ல “அம்மா” என்று உடைந்தழுதவளை தேற்ற யாராலையும் முடியவில்லை.  

கல்நெஞ்சம் கொண்ட சாருலதா கூட கண்ணீரை ஆறாக வடித்தவாறே  “மீனாட்ச்சி எனக்கு குட்டி தங்கை. அவ இப்படி ஒரு நிலமைல இருப்பான்னு நான் சாத்தியமா எதிர் பாக்கல.  பணம் பணம்னு அலைஞ்சேன் அதவச்சி இவ உயிரை வாங்க முடியல” என்று புலம்ப மனம் திருந்திய மாமியாரின் கையை ஆறுதலாக பிடித்திருந்தார் மருமகள்கள் மூவரும்.

மீனாட்ச்சி விரலையசைத்தாள் என்றதும் வந்து பார்த்த ஷரப்புக்கு கிடைத்த செய்தி “அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிடுங்க” என்பதே

“ஆன்ஷியிடம் எவ்வாறு சொல்வேன்  அவள் அழுவதை என்னால் பாக்க முடியாது” என்று ஷரப் புலம்ப

முதல்ல அண்ணியோட தாத்தா பாட்டிக்கு சொல்லுங்க” என்று வ்ருஷாத் சொல்ல அலைபேசியில் தருணை அழைத்து விஷயத்தை சொல்லி இருக்க முழுக் குடும்பமே வருவார்கள் என்று அவனும் எதிர்பாத்திருக்கவில்லை.

அன்னை இருந்த அறைக்கு அடியெடுத்து சென்ற ஆன்ஷி மீனாட்ச்சியை கட்டிக் கொண்டு மேலும் அழ ஒவ்வொருவராக வந்து மீனாட்ச்சியிடம் தங்களை அறிமுகப் படுத்திக்க கொண்டு நலம் விசாரிக்க

‘அம்மா கண்ண திறந்து பாருமா. உன்ன பாக்க எல்லாருமே வந்திருக்குறாங்க. எனக்கு கல்யாணம் ஆச்சுமா. உன் கனவு நிறைவேறி இருக்கு” ஷரப்பின் கையை  இழுத்து மீனாட்சின் கை மேல் வைத்து “இவர் தான் என் கணவர். எங்க சமஸ்தானத்து வாரிசு. என்ன விட்டு போயிடாத” என்று ஆன்ஷி கதறி அழ, ஆழ்ந்து உறங்கி கொண்டிருப்பது போல் இருந்த மீனாட்ச்சியின் கண்ணிலிருந்து  ஒரு துளி கண்ணீர் வழிவதை கண்டு பரமு பாட்டி

“என் பொண்ணு அவ பொண்ணோட குரலை கேக்கவென்றே உசுர கையில பிடிச்சிருந்தா போல, எங்க எல்லாரையும் கடைசியா பார்த்த சந்தோஷத்துல நிம்மதியா போய் சேர்ந்துடுவா. ஆண்டவா அடுத்த ஜென்மத்திலயாவது அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடு” என்று பிரார்த்திக்க மீனாட்ச்சியின் உயிரும் இவ்வுலகை விட்டு நிம்மதியாக பிரிந்தது.

மீனாட்ச்சியின் ஈமைக்கிரிகைகளும் அரண்மனையிலேயே நடந்தது. ஆன்ஷி அழுதவாறே இருக்க ஷரப் அவளை தேற்ற வழி தெரியாது தவித்தான்.

ஷரப்பின் ஒட்டகப் பண்ணையில் பாலுக்காகவும், மாமிசத்துக்காகவும் ஒட்டகங்கள் இருக்க ஒட்டகங்களை அறுக்கவென வேறு இடம் இருந்தது அந்த கழிவுகளை உன்னவென்னரே பெருங்கழுகளை  வளர்கிறான் ஷரப்.

அவை அவ்விடத்தை விட்டு செல்ல முடியாத படி வேலியும் அமைத்திருக்க அங்கே இரண்டு கைகளும்,  கால்களும்  உடைக்கப்பட்டு ஒரு கம்பத்தில் தர்மேந்திரனும், ஹரிலாலும் சாய்ந்து அமர்த்தி வைக்கப் பட்டிருக்க உடலில் பல இடங்களில் கத்தியால் கீரிடப்பட்டு இரத்தம் வழிந்துக் கொண்டிருக்க கழுகுகள் அவர்களை கொத்திக் கொண்டிருந்தன.

கைகளும், கால்களும் உடைபட்ட நிலைமையில் அசையவும் முடியாது, உடம்பில் ஒட்டுத் துணியும் இல்லாது கழுகுகளால் இருவரின் சதைகளையும் பிய்த்து தின்ன உயிர் போகும் வழி என்ன வென்று ஷரப் அவர்களுக்கு உணர்த்தியிருந்தான். பிரானா மீனினால் சில நொடிகளில் உடல் அழிந்து உயிர் போய் விடுமென்றால்,  இராட்சத கழுக்களினால் சதை கொய்யப்படும் நொடியெல்லாம் தாங்க முடியாத வலியோடு இரதம் வழிய கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போகும்.

பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றி, போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றி,  சீரழித்து,  வாழ்க்கையை அழித்திருந்த ஹரிலால் இன்கம்டேக்ஸ் ரெய்டுக்கு பயந்து ஓடி ஒழிந்து விட்டார் என்று செய்திகள் பரவ  யாருமற்ற ராஜஸ்தான் மணல் வெளியில் சுடும் வெயிலில் குடிக்க நீர் கூட இல்லாது கழுகுகளுக்கு  இரையாகி இறந்து போனார் என்பது யாரும் அறியாத செய்தி. கூடவே ஹரிலாலுக்கு உடந்தையாக இருந்த தர்மேந்திரனும் பரிதாபமாக இறந்து போய் இருக்க ஒருவாரமாக அவர்களை தேடிக்கொண்டிருந்தனர் ராஜஸ்தான் காவல் துறையினரும், ஊடகங்களும். கிடைத்த பாடுதான் இல்லை.

மீனாட்ச்சியின் காரியங்களுக்கு பின் சாருலதாவின் குடும்பமும் கோயம்புத்தூருக்கு திரும்ப வசுந்தராதேவியும் மருத்துவமனையிலிருந்து அரண்மனைக்கு அழைத்து வர பட்டார். கட்டிலே கதி என்றானவர் பேசவும் முடியாமல் மற்றவர்களின் உதவியை நாடும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டார்.

பணபலம், ஆள்பலம், உடல்பலம் இருக்க மனிதன் ஆடும் ஆட்டம் உயிர் இருக்கும் வரை மட்டும் தான்.  

ஆன்ஷி தனது கவலையிலேயே மூழ்கி இருக்க வேறெதிலிலும் அவள் கவனம் இல்லை. “அம்மா நீ செத்து போய்ட்டதாக நினச்சு உன்ன தேடாம இருந்துட்டேன்” என்றே புலம்பிக் கொண்டிருக்க அவளருகில் வந்தான் லக்ஷித் வைஷ்ணவியின் சகோதரன்.

வசுந்தராதேவி லக்ஷித் குறையுடன் பிறக்கவே அவனை ஒரு அறையிலேயே பூட்டி வைத்திருக்க, பத்மாவும் கண்டுக்கவில்லை என்றதும்  கேட்பாரற்று அனாதையானான்.

லக்ஷித் ஆன்ஷியின் அருகில் வந்து கண்ணீரை துடைத்து விட சுயஉணர்வுக்கு வந்தவள் அவனோடு வந்த வைஷ்ணவியை கண்டு “யார்” என்று கேக்க

“என் தம்பி. சின்ன வயசுல இவன் ரூம எட்டி, எட்டி பார்ப்பேன் பாட்டி துரத்தி விடுவாங்க. வாழ்க்கையில இவன் வெளியுலகத்தை பார்த்ததே இல்ல இன்னைக்கி தான் இவன் சுதந்திரமா எல்லா இடத்துக்கும் போனான். நீ அழுது கிட்டு இருக்கிறத பார்த்து உன் கிட்ட வந்து கண்ணீரை தொடச்சி விட்டான். குறை இருக்குற அவனுக்கே மத்தவங்களோட கவலை  புரியுது” என்று கண்கலங்கியவாறே சொல்லி முடிக்க அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் ஆன்ஷி.

கீழே ஷரப் பியானோ இசைத்தவாறே ஆன்ஷியை நினைத்து உருகி உருகி பாடிக் கொண்டிருக்க அப்பாடலின் வரிகளால் கவர பட்டவள் அவனிடத்தில் சென்று கவலைகளை மறந்தவளாக புன்னகைக்க அவளை இழுத்து அணைத்தவன் கழுத்து வளைவில் முகத்தை  புதைத்து கண்ணீர் வடித்தவாறே

 “ஏன்  டி என்ன விட்டு போக முடிவெடுத்த? என்ன இருந்தாலும் என் கிட்ட பேசி இருக்கணுமா இல்லையா?” என்றோ கேக்க வேண்டிய கேள்வியை சந்தர்ப்பமும் சூழ் நிலையம் அமையாததால் இன்று கேட்டான்.

அவனின் கண்ணீரை துடைத்து விட்டவள் “இனிமேல் நான் அழ மாட்டேன் ஷரப். அம்மாக்காக அழுதது அவங்களுக்கே பிடிக்காது. அரண்மனையில் வாழ்ந்தாலும், குடிசைல வாழ்ந்தாலும்  நமக்கு வார கஷ்டத்தை நாம தாங்கியே ஆகணும்” அங்கே வந்த லக்ஷித்தை பார்த்தவாறே சொன்னவள் அவனை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்து ஷரப்புடன் மனம் விட்டு பேசலானாள்.

“உங்கள எப்போ பார்த்தேனோ அப்போவே நீங்க என் மனசுக்குள்ள வந்துட்டீங்க. எப்போ தருண் கூட என் கல்யாணம்னு முடிவாச்சோ அப்போ தான் புரிஞ்சிக்க கிட்டேன்” என்று சொல்ல

தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை பார்த்த உடனே காதல் அதை உணராமல் என்னெல்லாமோ நடந்து விட்டது என்றெண்ணியவன்

   

“நீயும் அன்னைக்கே என் மனசுக்குள்ள வந்துட்ட அத உணர்ந்தது அந்த ஹரிலால்  உன்ன தூக்கிட்டு போனப்ப, நீ அந்த பாத் டப்பில் சுயநினைவில்லாம இருக்கிறத பார்த்தபின்” என்று கவனமாக உன் அப்பா உன்னை ஹரிலாலிடம் விற்று விட்டான் என்பதை தவிர்த்தான்.

“நீங்க என்ன காப்பாத்தினது தெரியாம இங்கிருந்து தப்பிச்சு போன்றதாக நினைச்சி கோயம்புத்தூர் போய்ட்டேன்” எவ்வாறு சென்றடைந்தேன் என்று சொல்ல

அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “உனக்கு ஏதாவது நடந்திருந்தால்?”

“எல்லாம் நடப்பது நன்மைக்கே. அங்க போனதால என் தாய் வீட்டு சொந்தங்கள் கிடைச்சது” அவனை சமாதானப் படுத்த

“ஆமா நான் வரலைனா நீ அந்த தருண கட்டிக்க கிட்டு இருப்ப” என்று முகம் திருப்ப

“கண்டிப்பா நடந்திருக்காது, நீங்க இல்லனா அனிதா நிறுத்தி இருப்பா. ஹப்பா என்னமா என்ட்ரி கொடுத்தீங்க” என்று அன்று நடந்ததை நினைத்து இன்றும் வியந்தவளாக கண்களை அகல விரிக்க  

“கல்யாணம் மட்டும் தான் நடந்திருச்சு இன்னும் நடக்க வேண்டிய ஒன்னும் நடக்கல” என்று சொன்னவன் ஏதோ நியாபகம் வந்து முகம் கவலையை தத்தெடுக்க

“என்ன சொன்னீங்க” என்று ஆன்ஷி மீண்டும் கேக்க

“ஒன்றுமில்லை” என்றவன் பேச்சை மாற்றும் பொருட்டு “உன் அம்மாவ இரத்த வெள்ளத்துல பாத்தப்போ போன உன் குரல், சில்பாவ நான் கொன்னப்போ இரத்தத்தை பார்த்த அதிர்ச்சில வந்திருச்சு. என் கிட்ட மனசு விட்டு பேசணும்னு கூட தோணாம, என்ன நாலு அடி அடிச்சு சண்ட போடாம ஏன் என்ன விட்டு போன? முகத்தில் கடுமை குடிகொள்ள

அவனின் நெஞ்சில்  சாய்ந்துக் கொண்டு “எல்லாத்துக்கும்  காரணம் உங்க காதலை புரிஞ்சிக்காதது தான். அன்னைக்கி அரண்மனையில் உங்க அத்த அடிச்சது விட நீங்க சொன்னது தான் என்ன ரொம்ப பாதிச்சது.

அப்பொறம் நீங்களும் வ்ருஷாத் அண்ணனும் பேசினது அரை குறையாய் கேட்டு உங்கள மேலும் தப்பானவனாகவே நினைச்சிட்டேன். அப்பொறம் அந்த பொண்ணு வந்து பேசியதும், அவ சாவும் என்ன ரொம்ப பாதிச்சது.

கீழ உள்ள அறைல கண் முழிச்சதும் அந்த அறைய பார்த்துட்டு அன்னக்கி என்ன அந்தாளு உங்க கிட்ட தான் என்ன வித்துட்டான்..” அப்பா என்று சொல்ல பிடிக்காமல் கம்மியா குரலில் சொல்லிக் கொண்டிருந்தவள் மனீசை பற்றி சொல்லும் போது உடல் நடுங்க  ஷரப் ஆன்ஷியை தன்னுள் இறுக்கிக் கொள்ள மேலும் தொடர்ந்தாள்.

“நீங்க என்ன பலவந்தமான கல்யாணம் என்ற பேர்ல கூட்டிட்டு வந்துட்டேனு நினைச்சி வாழறத விட செத்து போலாம்னு உங்க இடத்துல சாக கூட பிடிக்காம உங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதா நினைச்சி அந்த மினிஸ்டர் கிட்ட மாட்டிக் கிட்டேன்”

ஆன்ஷி சாக போனேன் என்றதும் அவளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன் “ஏன் டி சாகமாட்டேனு உங்க அம்மா மேல சத்தியம் பண்ணியே மீறலாமா? மீறலாமா?” என்று அவளை உலுக்க

“என்ன இங்க இருந்து காப்பாத்தி அனுப்பிய வயசான பொம்பளையும் கொன்னுட்டதாக நினைச்சி ..” ஆன்ஷி சொல்லும் போதே அவளை முறைத்தவன்

“அவங்க முதுமையின் காரணமா இறந்துட்டாங்க. என்ன ஏன் டி வில்லனாகவே  பாக்குற”

“நடந்ததெல்லாம் அப்படித்தான் இருக்கு” என்று ஆன்ஷி முகத்தை தூக்கிக் கொள்ள

“உன் கிட்ட என்ன பத்தி முழுசா சொல்லணும்னு தான் நினச்சேன். மறைக்கணும்னு நினைக்கல டி. உன்ன பாட்டிக் கிட்ட இருந்து காப்பாத்த சொன்னவைகள் உன்ன காய படுத்தும்னு நினைக்கல, என்ன நீ புரிஞ்சிப்பனு நினச்சேன்.

நம்ம உயிரிலும் மேலா நினைக்கிறவங்களுக்கு ஆபத்தென்றால் கொன்னுடுவேன்னு சொல்லுவோமில்லயா அத தான் நான் செயல்ல காட்டினேன்.  உன் உசுருக்கு ஆபத்தென்றால்? அது யாரா இருந்தாலும் கொன்னு இருப்பேன். அன்னைக்கி பாட்டிய கொள்ளும் வெறில தான் அரண்மனைக்கு வந்தேன் பத்மா அத்தையால மனசு மாறிச்சு.” கண்கள் சிவப்பேறி ஷரப் சொல்லிக் கொண்டிருக்க அவனின் கைகளை பற்றியவள்

“அப்படி என்ன அவ்வளவு லவ் என் மேல” அவனின் கண்களை பார்த்தவாறே கேக்க

“தெரியல அன்னக்கி உன் கண்ணுல இருந்து உருண்டு விழுந்த ஒரு துளி கண்ணீர் அது என் நெஞ்சுல விழுந்து என்ன முழுசா எரிச்சி கிட்டே இருந்தது.   

நீ அழும் போதெல்லாம் உன் கண்ணீரை துடைக்கணும் என்று என் மனசு துடிக்கும், உனக்கு ஆபத்தென்றா என் மனது தவிக்கும். இது தான் காதலா? என்று அவளிடமே கேள்வியை கேக்க

தன் மேல் அவன் வைத்திருக்கும் ஆழமான காதலை கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்த ஆன்ஷி அவன் முகமெங்கும் முத்தமழை பொழிய ஆனந்த அதிர்ச்சியடைந்தான் ஷரப்.

“ஏன் டி முகத்துல ஒரு இடம் விடாம கிஸ் பண்ண என் லிப்ஸ் பட்டும் என்ன பாவம் பண்ணியிருச்சு” கன்னக்குழி விழ புன்னகைத்தவன்  

“ஆ முழு சமஸ்தானத்துக்கு நம்ம கல்யாணம் நடக்கும்னு அறிவிச்சி எவ்வளவு நாளாச்சு” என்று அசால்டாக சொல்ல

“கல்யாணம் நடந்த பிறகு நீ வேணா கிஸ் பண்ணிக்க இப்போ நான் பண்ணிக்கிறேன்” என்று அவள் விலகி விடாத வாறே   அவளை இழுத்து அணைத்தவன் தனது முரட்டு உதடுகளால் ஆன்ஷியின் செவ்விதழை சிறை பிடித்தான்.

Advertisement