Advertisement

                                             அத்தியாயம் 19

அரண்மனையினுள் ஓடிய ஷரப் சென்றது ட்ரெக்கிங் டிவைஸ் காட்டிய இடத்துக்கு ஆன்ஷியை கண்டவன் நொடியில் புரிந்துக் கொண்டான் அவளுக்கு போதை மருந்தை உட்செலுத்தி இருக்கிறார்கள் என்று. மருந்தை பற்றி அறிந்தவனுக்கோ அது யாரின் வேலை என்ற ஒரு ஊகம் இருந்தாலும் அதை பற்றி சிந்திக்க தோன்றாமல் ஆன்ஷியை கையில் ஏந்திக் கொண்டு வெளியே வரும் போது போன் அலற ஆன்ஷியை சோபாவில் கிடத்தியவன் அவளது தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு போனை காதில் வைத்தான்.

வெளியே ஜீப்பில் இருந்து இறங்கிய வ்ருஷாத் வலியால்  துடித்துக் கொண்டிருந்த தர்மேந்திரனை கட்டிப் போட

“டேய் ஒரு போலீசை போய் கட்டிப் போட்டுக் கிட்டு இருக்க” என்ற வாறே வந்தாள் வைஷ்ணவி

“இவன தூக்க நாள் பாத்துக்க கொண்டிருந்தேன் இன்னக்கி தான் மாட்டினான்” என்று தர்மேந்திரன் போலீஸ் என்ற பெயரில் செய்யும் அக்கிரமங்களை சொல்ல

“நம்ம நாடு உருப்படாம போனதுக்கு இவனுங்க மாதிரி அதிகாரத்துல உள்ள குள்ள நன்றிங்க தான் காரணம்” என்று பொறுமியவள் கழுத்தில் அணிந்திருந்த தொப்புள் வரை நீண்ட  வெள்ளியிலான மாலையை கழட்டி கையில் ஒரு தடவை சுற்றி “கசைபோல் இருக்கா” என்று கேட்டவாறே தர்மேந்திரனை அடிக்க ஆரம்பித்தாள்.     

“போதும் டி செத்துட போறான்” வ்ருஷாத் அவளை தடுக்க

“செத்தா சாகட்டும் டா” வைஷ்ணவி மூச்சு வாங்கியவாறே அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க

அவளை இழுத்து நிறுத்தியவன் “அவனுக்கு வேற டிரீட்மென்ட் வச்சிருக்கோம். வா உள்ள போவோம்” என்று அவளை இழுத்துக் கொண்டு செல்ல

“இன்னைக்காவது உள்ள வருவீயா? இல்ல கதவோடு தங்கி விடுவீயா?” கிண்டல் செய்தவாறே உள்ளே செல்ல

“பத்மா” என்ற வசுந்தராதேவியின் அலறல் தான் அவர்களை வரவேற்றது.

ஷரப் ஆன்ஷியின் மேல் வைத்திருந்த காதலை கண்டு அவளை கொல்லும் வெறியில் இருந்த வசுந்தராதேவி, ஆன்ஷியை கொன்று விட்டால் ஷரப் என்றைக்கும் தனக்கு இல்லாமல் போவான் என்று புரிய ஆன்ஷியை தனது கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டால்? ஷரப்பை அடக்கி தனது கைப் பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என்ற தெளிவான முடிவுக்கு வந்தவர்

ஷரபுக்கு போன் செய்து ஆன்ஷி தன்னிடம் தான் இருக்கிறாள் என்று சொல்ல அவன் திரும்பிப் பார்க்கும் படி சொல்லவும் யோசனைக்கு குள்ளானவர் திரும்ப, அங்கே ஷரப் ஆன்ஷியை மடியில் படுக்க வைத்தவாறே ஸ்டைலாக அமர்ந்திருக்க பத்மா ஷரப்புக்கு ஷொட்கன்னை நீட்டியவாறே நின்றிருக்க அதிர்ச்சியில் “பத்மா” என்று கத்தவும்

கதவோடு தங்கி விடும் வ்ருஷாத் வசுந்தராதேவியின் அலறலில் ஷரப்பின் முன் வந்து அவனை மறைத்துக் கொண்டு பத்மாவின் துப்பாக்கிக்கு நேராக நெஞ்சை நிமிர்த்தியவாறே நிற்க அவனை மறைத்துக் கொண்டு வந்து நின்றாள் வைஷ்ணவிதேவி.

“வைஷூ அங்கிட்டு போ என் பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன்” என்று பத்மா மிரட்டிக் கொண்டிருக்கும் போது தேஜ்வீரும் வந்து சேர்ந்தான்.

“என்ன பண்ணுற பத்மா?” தேஜ்வீர் பயத்தில் அலற

“இன்னைக்கி ஷரப் சாகனும் அதுவும் என் கையாள சாகனும்” பத்மா கொலை வெறியில் கத்த ஆன்ஷி தான் இருக்கும் மயக்க நிலையிலும் அங்கு நடப்பவற்றை கண்டு நடுங்கலானாள்.  

“பத்மா… உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு” வசுந்தராதேவி கத்த

“ஆமா பைத்தியம் தான் புடிச்சிருக்கு. எனக்கு இந்த அரண்மனை வேணும். அத உன் பையன் வாரிசுக்கு போக விடமாட்டேன்” பத்மா கண்கள் சிவக்க சொல்ல

“என்னடி உளறுற” வசுந்தராதேவி புரியாமல் குரல் உயர்த்த

“நான் காதலிச்சவன நீயும் உன் பையனும் கொன்னது எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா?” பத்மா வசுந்தராதேவியை ஒரு நொடி பார்த்த போது வ்ருஷாத் வைஷ்ணவியை பிடித்து இழுத்தவன் பத்மாவின் மேல் பாய்ந்திருந்தான்.

துப்பாக்கியை அவளிடமிருந்து பறிக்கப் பார்க்க பத்மா தடுமாறி விழுந்தாள். துப்பாக்கிலிருந்து குண்டு பாய்ந்து மேலே உள்ள மின் விளக்கில் பட்டு அது உடைந்து ஆடிக் கொண்டிருக்க துப்பாக்கி சூட்டில் வ்ருஷாத்தின் கவனம் சிதற பத்மா சுதாரித்துக் கொண்டாள்.

எது தனது மகளுக்கு தெரிய கூடாதென்று வசுந்தராதேவி நினைத்திருந்தாலோ அதை தெரிந்துக் கொண்டு இந்தனை வருட காலங்களாக நெஞ்சம் முழுக்க வஞ்சம் வைத்துக் கொண்டு பத்மாவதி இருந்திருக்கிறாள் என்பது வசுந்தராதேவிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன பாக்குற? உன் பையன் மட்டும் அவன் ஆசப் படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்தான். நான் மட்டும் என் ஆசப் படி வாழக் கூடாதில்ல?” ஆத்திரத்தில் அறிவிழந்து பத்மா பொரிந்துக் கொண்டிருக்க  தேஜ்வீருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தன்னை மணந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றவள் இன்னும் வேறொருவனை நினைத்துக் கொண்டிருப்பது பெருத்த அவமானம். கோழையான தேஜ்வீர் பத்மாவிடம் கெஞ்சலானான்.

“என்ன பத்மா பேசுற? நான் உன்ன முழு மனசா தான் விரும்பி கல்யாணம் பண்ணிக்க கிட்டேன். பழசெல்லாம் எதுக்கு இப்போ? பாரு நம்ம பொண்ணு பயந்து போய் இருக்கா?” என்று அவளை சமாதானப் படுத்த.

“என் விருப்பம் இல்லாம தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க கிட்டேன். அதுவும் என் காதலனை  கொன்னுட்டாங்க என்ற அதிர்ச்சில இருக்கும் போது நடந்தது. என்ன தொட விட்டேனா? தேஜ்வீரின் மனமோ பழசை ஓட்டிப் பார்த்தது.

எப்போ என் அண்ணன் அவன் இஷ்டப்  படி கல்யாணம் பண்ணானோ! அப்போவே முடிவு பண்ணேன் என் அண்ணன பலி வாங்கணும்னு

யாமினி மனசுல நஞ்ச  விதைக்க முயற்சி செஞ்சேன். அவ பணக்கார வீட்டு பொண்ணு, பரம்பரையும் நமக்கு ஏத்ததுனு அம்மா அவள  ஏத்துக்க கிட்டாங்க. அவள என்னால நெருங்க முடியல.

அவ கர்ப்பமான உடனே முடிவு  பண்ணேன் என் வாரிசு தான் இந்த அரண்மனையை ஆளணும்னு. என் வயித்துல வைஷு வந்து பொறந்தா. எனக்கு ஆண் வாரிசு வேணும்கிறதால உன்ன நாடினேன். நிறமாசமா இருக்கிறப்போ தான் என் அண்ணன் எக்சிடன்டுல செத்து போய்ட்டான். அவனை  பலி வாங்க முடியல என்ற அதிர்ச்சில விழுந்து தொலைச்சிட்டேன். என் பையன் இப்படி வந்து பொறந்துட்டான். விழுந்ததுல அடி பட்டு கர்பப் பைய நீக்கிட்டாங்க.

என் காதலனுக்கு நடந்த அநியாயத்துக்கு நான் யாரை பலி வாங்குறது? அம்மா ஷரப்ப பாசத்தை ஊட்டி வளக்குறத பாத்து எனக்கு வயிறு பத்திக் கிட்டு எரிஞ்சது. அவன் என் அண்ணன் வாரிசு அல்லவா?  ஷரப் கிட்ட பாசமா இருக்கிற மாதிரி நடிச்சேன். அவன வழிகெடுக்க உன்ன வச்சி  பொண்ணுங்க சகவாசத்தை பழக்கிட்டேன். கல்யாண ஆசையே வராம பாத்துக்க சொன்னேன். ஆனா அவன்? அப்பனையே மிஞ்சிட்டான். நான் எதிர் பார்த்த மாதிரி அரக்கனா இருந்தவன் காதல்ல விழுந்து மனுசனா மாறி இதோ இவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான்.

அவன் பொண்டாட்டிய அந்த அடி அடிச்சேன்? எதுக்கு இதெல்லாம் பண்ணேன்? அம்மாக்கு எதிரா அவன திருப்பத்தான்.

ஆனா அம்மா அவன் பொண்டாட்டிய காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்காங்க. சரித்திரம் திரும்புது. என் காதலன் இறந்ததும் இதே நாள் இன்னக்கி ஷரப்பின் இறந்த நாள் ஆனா தான் அவன் ஆத்மா சாந்தியடையும். எனக்கும் மன நிம்மதி கிடைக்கும்.

வாரிசில்லாம இந்த அரண்மனைல வசுந்தராதேவி தன்னந் தனியா அழுது கிட்டு இருப்பாங்க” என்று தனது மனதில் உள்ள வற்றையெல்லாம் சொல்லி முடிக்க வசுந்தராதேவி அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்ல தேஜ்வீர் திகைத்து நின்று விட்டான்.

பத்மாவதி பேசப் பேச தேஜ்வீர் சாட்டையால் அடிவாங்கியது போலானான். வசுந்தராதேவியின் தூரத்து சொந்தமான தன்னை ஒரே மகள் பத்மாவதிக்கு கல்யாணம் பண்ணி வைத்ததும். அவள் அழகில் மயங்கியவன் அவளை  நெருங்கும் போது அடி பின்னி விட்டாள் பத்மா.

பிறப்பிலேயே தாய் தந்தையை இழந்த தேஜ்வீர் பயந்த சுபாவம் கொண்டவன். பத்மாவே தன்னை நெருங்கும் போது அவள் மீது கொண்ட மயக்கமும், மனைவி என்ற உரிமையும் அவனின் தயக்கத்தை நீக்கி இருந்தது.

அன்று கீழே விழுந்து அடி பட்ட பின் கணவன், மனைவி என்ற உறவு போய் அவளின் சொல் கேட்டு நடக்கும் அடிமை வாழ்க்கைதான் அவனுடையது. பத்மாவை கல்யாணம் பண்ணி வைத்த வசுந்தராதேவியின் மீது இருந்த வெறுப்பை அப்பப்போது காட்டுவான். பத்மா சொன்ன படி ஷரப்பை வழி கெடுத்தவன் ஒரு நாளும் கொல்ல நினைக்க வில்லை.

தான் எவ்வாறெல்லாம் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்று புரிய எரிமலையாய் குமுறியவன் பிள்ளைகளுக்காக கோவத்தை அடக்கிக் கொண்டிருந்தான்.

தன் அன்னை சொல்பவற்றை கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி தன் பிறப்பின் இரகசியத்தை சபையில் அறிந்துக் கொண்டு திகைத்து தலை சுற்றுவது போல் விழப் போக வ்ருஷாத் அவளை ஆதரவாக பற்றிக் கொண்டான்.

சோபாவில் அமர்ந்து ஆன்ஷியின் தலையை கோதியவாறே பத்மாவின் கதையை கேட்டுக் கொண்டிருந்த ஷரப் எந்த மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவன் ஆன்ஷியின் மேல் வைத்த காதலால், காதலனின் மரணம் பத்மாவை  இப்படி மாற்றியதை அவனால் நன்றாகவே புரிந்துக் கொள்ள முடிந்தது. பத்மாவின் மேல் பரிதாம் வந்தாலும், தாதிமாவையும், அப்பாவையும் அவர்கள் இழைத்த குற்றம் உயிரை கொன்றது என்றால்? அவனும் எத்தனையோ உயிரை எடுத்தவன் தான். அதில் சிறு நியாயம் இருந்திருக்கும். காதலித்தான் என்றதுக்குக்காக ஒருத்தனை கொன்றது இன்றைய ஷரப்பால் அவர்களை மன்னிக்க முடியவில்லை.

ஆன்ஷி கொஞ்சம் கொஞ்சம் தெளிய எழுந்து அமர்ந்துக் கொண்டாள் அவளுக்கு தண்ணீர் புகட்டினான் ஷரப். அவனின் தோளில் சாய்ந்த ஆன்ஷி ஏதோ சொல்ல வர பத்மா ஷரப்புக்கு மீண்டும் துப்பாக்கியை நீட்டி இருந்தாள்.

“ஷரப் நீ சாவது தான் ஒரே வழி”

“சாவை பார்த்து நான் ஒன்றும் பயப்படல. நான் செத்தா எல்லாம் சரியாகிடுமா? உங்களுக்கு இந்த அரண்மனைதான் வேணும்னா எழுதித்தரேன். நா சுயமா சம்பாதிச்ச எல்லா சொத்தையும் நான் என் தம்பியா நினைக்கிற வ்ருஷாதுக்கு கொடுத்திடுறேன். உங்க பொண்ணு ஆசப் பட்டது போல அவனையே அவளுக்கு கட்டி வைங்க. அப்படியும் மனசு ஆறலைனா என்ன கொன்னுடுங்க. ஆனா ஆன்ஷிய மட்டும் பத்திரமா அவ தாத்தா பாட்டிக் கிட்ட வ்ருஷாத் அனுப்பி வச்ச பிறகு.

ஷரப் சொல்லி முடிக்க வசுந்தராதேவியோ ” நான் செய்த தவறுதான் என்ன என்பதை நன்றாக புரிந்துக் கொண்டார். அதிகாரம், ஆள் பலம் இருந்தும் தன் இரத்தமே ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து கொல்லாத் துணியும் போது ஏற்படும் வலி சொல்லில் அடங்காதது. தான் இழந்தது என்ன என்பதையும் காலம் கடந்து நன்றாகவே உணர்ந்துக் கொண்டார்.

வைஷ்ணவியை ஒரு பார்வை பார்த்த பத்மா “நான் ஆசப் பட்டவனை என்னால அடைய முடியல. என் பொண்ணு ஆசப் பட்டவன் கூடயாவது சந்தோசமா வாழட்டும். அதுக்கு என் அம்மா வசுந்தராதேவி குறுக்கவரமாட்டாங்கனு நினைக்கிறேன்” என்றால் எதையோ சாதித்ததை போல்.

ஒரு வாறு தன்னை சுதாரித்துக் கொண்ட ஆன்ஷி குளறியவாறே “ஷ…ர…ப் உங்…க அப்….பா……..வும், அம்…மா…வும் எக்சிட..ன்டுல சா..கல அவங்..கள அந்த மினிஸ்..டர் தான் கொன்…னு இருக்கான். அத அவனே… என் கிட்ட சொன்னான்” என்று சொல்லி முடிக்க வசுந்தராதேவி மயங்கி விழுந்தார்.

இவ்வளவு நேரமும் நடந்தவைகளால் அதிர்ச்சியடைந்து, மன உளைச்சலில் இருந்த வசுந்தராதேவி தனது ஒரே மகன் கொலையுண்டான் என கேட்ட போது மயங்கி விழவும் பத்மா தான் துப்பாக்கியையும் வீசி விட்டு அவரிடத்தில் ஓடி இருந்தாள். உடனடியாக வசுந்தராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

*****************************

ஆன்ஷியை அனுபவிக்க முடியாமல் இன்கம்டேக்ஸ்ட்  ரைடு வருவதாக போன் வரவும் நடு இரவுனு பாராது தனது வீட்டிலுள்ள எல்லா ஆவணங்களையும் அப்புறப் படுத்திய ஹரிலால் பதுக்கி வைத்த தங்கக் கட்டிகளையும்  பணத்தையும் பத்திரமான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்டே ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.

“ஹப்பா சொத்து சேர்க்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, அத பாதுகாக்கிறது தான் பெரிய விஷயம்” என்று புலம்பியவன் “சே கைல கிடைச்ச சான்ச மிஸ் பண்ணிட்டேனே. இந்நேரம் தர்மேந்திரன் குஜாலா பண்ணிக்க கிட்டு இருப்பான்” என்று பொறாமை கொண்டவராக அவனுக்கு அழைக்க போன் கட் பண்ணப் பட்டது.

“நீ அனுபவிடா என்ன அந்த ஷரப்ப பலி வாங்க வீடியோ எடுக்க முடியல அவனை எடுக்க சொல்ல போன் பண்ண கட் பண்ணுறான். மெசேஜ் பண்ணுவோம்” என்றவர் தர்மேந்திரனுக்கு குறுந்தகவல் அனுப்ப  

மருத்துவ மனையிலிருந்து வ்ருஷாத் அந்த குறுந்தகவலைப் பார்த்து ஷரப்புக்கு சொல்ல சிறிது நேரம் தனியாக பேசியவர்கள் வைஷ்ணவியிடம் ஆன்ஷியை ஒப்படைத்து விட்டு கிளம்பிச்சென்றனர்.

தர்மேந்திரனிடமிருந்து குறுந்தகவல் வரவும் துள்ளிக் குதித்தார் ஹரிலால் அதில் இருந்த செய்தியை மீண்டும் படிக்க

“தலைவரே நான் இன்னும் அவள தொடவே இல்ல. உங்களுக்காக தான் வச்சிருக்கேன். நான் சொல்லுற இடத்துக்கு தனியாக வாங்க” என்று ஒரு விலாசத்தின் லொகேஷனையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட நாளை நடக்க போகும் ரைடிங் கவலை கொஞ்சம் கூட இல்லாமல் தனியாக வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றார்.  

ஆன்ஷி நடந்த வற்றை சொல்லி இருந்த படியால் ஹரிலாலின் குறுந்தகவலை பார்த்த ஷரப் கொதித்தெழுந்தான். வ்ருஷாத்தின் தோளில் கை வைத்தவன்

“அவன மாட்டி விடனும்னு மட்டும் தான் நினச்சிக்க கிட்டு இருந்தேன். ஆன்ஷிக்கு போதை மருந்து கொடுத்து இருக்காங்க என்றதும் அவன் மேல தான் சந்தேகம்  வந்தது நடந்த கலவரத்துல யோசிக்க முடியல. எப்போ என் பெற்றோர கொன்னது அவன் தான்னு தெரிஞ்சதோ! அப்போவே முடிவு பண்ணிட்டேன். அவன் சாவு என் கைல தான்னு” ஆவேசமாக பேசிய ஷரப் சொல்லியபடி ஹரிலாலுக்கு குறுந்தகவலை வ்ருஷாத் அனுப்ப ஹரிலாலை தூக்க இருவரும் புறப்பட்டு சென்றனர்.

வசுந்தராதேவி அதிக மன அழுத்தம், அதிர்ச்சி, கவலை என்பவற்றால் பக்கவாதத்தில் விழுந்தார். அவரை கொஞ்சம் நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல அவரை அருகில் இருந்து பத்மா பார்த்துக் கொள்வதாக கூற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகள்.

பலி வாங்க துடித்த இவரா?   என்று ஆன்ஷி யோசிக்க

“கடைசி  வரைக்கும் பத்மாவதி புரியாத புதிர் தான்” என்று தேஜ்வீரும்

“அம்மா நல்லவங்களா? கெட்டவங்களா?” என்று வைஷ்ணவியும் யோசிக்க

மருத்துவமனை வந்து சேர்ந்த வ்ருஷாத் மற்றும் ஷரப் இதையறிய

“உங்கம்மா வசுந்தராதேவிய கொன்னுடுவாங்கனு நினைக்கிறேன்” என்று வைஷ்ணவியின் காதில் வ்ருஷாத் முணுமுணுக்க அவனை வைஷூ முறைத்தாள்.

“கொஞ்சம் நேரத்துக்கு முன்னால துப்பாக்கியோடு இருந்தத மறந்திட்டியே வைஷூ” என்று நெஞ்சில் அடித்துக் கொள்ள

பத்மாவின் அருகில் சென்ற ஷரப் அவரின் கைகளை பிடித்துக் கொண்டு நன்றி கூற அனைவரும் “என்னடா நடக்குது இங்க” என்ற பார்வையில் இருந்தனர்.

“என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க?” என்ற ஷரப் தன் அருகில் இருந்த ஆன்ஷியின் தோளில் கை போட்டவாறே வ்ருஷாத்திடம் திரும்பி

“நாங்க அரண்மனைக்கு ஆன்ஷிய தேடித் போகும் போது போன் வந்ததே, அது பத்மா அத்த தான் பண்ணாங்க” என்று போனில் பத்மா சொன்னதை சொன்னான்.

ஷரப்பின் போன் அலறவும் “பாய் வைஷூ தான் கூப்புடா என்று நினைக்கிறேன். அரண்மனை லேண்ட் லைன்ல இருந்து வருது”

ஷரப் போனை காதில் வைத்ததும் “ஷரப் நான் பத்மா பேசுறேன். போன வச்சிடாத. நீ என்ன வெறுக்குறன்னு தெரியும். நா செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்க போன் பண்ணல. உன் பொண்டாட்டிய அம்மா இங்க தூக்கிட்டு வந்திருக்காங்க. அவ நிலைமை கொஞ்சம் கவலைக்கு கிட்டுமா இருக்கு”

“அங்க தான் வந்து கிட்டு இருக்கேன்” என்று போனை அணைத்தவன், அக் கணம்  பத்மாவை நம்பவில்லை.

அடுத்த அத்தியாயத்தில்

ஹரிலால், தர்மேந்திரனின் நிலையென்ன?

பத்மா மனம் திருந்தினாளா?

மீனாச்சி என்ன ஆனாள்?

Advertisement