Advertisement

                                                        அத்தியாயம் 14

திரும்பவும் ஹெலிகாப்டர் பயணமா?” என்று  ஆன்ஷியின் நெஞ்சம் பதை பதைக்க ஷரப்பின் கையை இறுக்கிப் பிடித்தவள் கண்ணை மூடியவாறே வர அவளின் நிலை கண்டு உள்ளுக்குள் சிரித்த ஷரப்

ஐயோ பாட்டி”  என்று கத்த ஆன்ஷி தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருப்பதையும் மறந்து ஷரப்புக்கு என்ன ஆச்சோ என்று பதறியவள்  கண்ணை திறந்து அவனை தொட்டு தொட்டு பார்த்தவாறே கண்கள் கலங்க

அவளின் கண்களை துடைத்து விட்டவன். கன்னக்குழி விழ புன்னகைக்க “எனக்கு ஒண்ணுமில்ல டி என் கியூட் பொண்டாட்டி அங்க பாரு என்று ஜன்னல் பக்கம் கை காட்ட

நன்றாகவே திரும்பி அமர்ந்தவள் இவ்வளவு உயரத்திலிருந்து பூமியை பார்த்து  அதன் அழகில் லயித்து விட

அவளின் இடையோடு அணைத்து  அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் செவ்வனே என அவனின் சில்மிஷங்களை ஆரம்பிக்க

அவனை தடுத்துத் தடுத்து பார்த்த ஆன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் கரைந்து, கலந்துக்க கொண்டிருந்தாள்.

 

இந்த தடவையும் வ்ருஷாத்தை கண்டுக்காமல் ஷரப் காதல் செய்ய கடுப்பானான் வ்ருஷாத்.

 

பாட்டி அங்க என்ன பிரச்சினை பண்ணுவாங்களோனு நான் டென்ஷன்ல இருக்கேன். இவங்க ரெண்டு பேரும் வானத்துல பறந்து கிட்டே லவ் பண்ணுறாங்க. என்ன கொடுமைடா சாமி, இந்த முரட்டு சிங்கள், மின்கள் ஆனாதுல இருந்து பண்ணுற அலப்பறை இருக்கே? நா ஒருத்தன் இருக்கேனு கண்டுக்கிறாங்களா? நா என்ன ஜவுளிக் கடை பொம்மையா? உணர்ச்சியுள்ள மனிதன் தானே” என பயணம் முடியும் வர  புலம்போ புலம்புனு புலம்பித தள்ளினான்.

******************************************

ராஜஸ்தானிலுள்ள அரண்மனைக்கு சொந்தமான பெரிய கோவிலின் மேல் ஹெலிகாப்டர் வட்டமிட பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது.

யொத்தாவை காண மக்களும் கூட்டம் கூட்டமாக திரண்டிருக்க, ஹரிலாலும் தனது தொண்டர்களுடன் வருகை தந்திருந்தார்.

அரச குடும்பம் மேடையில் அமர்ந்து யொத்தாவுக்காக காத்திருக்க, ஹரிலாலும் தொண்டர்களும் கீழே அமர்ந்திருந்தனர்.

 

ஷரப்பின் ஹெலிகாப்டர் தரை  இறங்கியதும் ஹெலிகாப்டரிலிருந்து மேடைக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட கதவை திறந்து கொண்டு ஷரப் இறங்கி ஆன்ஷிக்கு கை கொடுத்து அவளை இறக்கி விட்டவன் அவளின் கையை விடாது தன்னுடைய இடது கையேடு கோர்த்துக் கொண்டவன் வருஷத்துக்கு கண்ணால் உத்தரவிட ஹெலிகாப்டரிலிருந்து   ஒரு பெட்டியை இழுத்துத் திறந்த வ்ருஷாத் யொத்தாவை வெளியே எடுத்து ஷரப்பிடம் கொடுக்க வலது கையில் ஏந்தியவன் மேடையை நோக்கி ஆன்ஷியுடன் நடக்க ஆரம்பித்தான்.

ஷரப் ஒரு பெண்ணுடன் வருவதைக் கண்ட தேஜ்வீர் எள்ளல் நகையுடன் “இவனுக்கு உடம்பு பூரா மச்சம் டா எங்க போனாலும் பொண்ணுங்க கூடவே சுத்துறான்” என வசுந்தராதேவியின் காது பட சத்தமாக முணுமுணுக்க

 

வசுந்தராதேவியின் முகமும் ஷரப்பின் இச்செயலில் அதிதிருப்தியை காட்டியது. தன் சமஸ்தான மக்கள் முன்னாள் ஷரப்பின் மதிப்பு  குறைவதை பொறுக்காதவர் வசுந்தராதேவி. என்னதான் பெண்களுடன் கூத்தடித்தாலும் எல்லாம் அரண்மனைக்கு வெளியே வைத்துக் கொள்பவன். யாரோ ஒருத்தியை யொத்தாவுடன் அழைத்து வருவது கொஞ்சம் அவரை நெற்றிச் சுருக்கி யோசிக்க வைத்தது.

 

இவர்கள் ஜோடி போட்டு நடந்து வருவதை பார்த்த ஹரிலால் “என்னா பொண்ணுடா” என்று வியந்து ஜொள்ளு விட அவரின் வலது கை ஆன்ஷியை பார்த்த உடனே அடையாளம் கண்டு கொண்டான்.  

 

இருட்டில், கிராமத்து உடையில் முகம் சுடுபட்டதை போலிருந்த ஆன்ஷியை கண்டிருந்த ஹரிலாலுக்கு தேவதை போன்ற அலங்காரத்தில் ஜொலித்த ஆன்ஷியை அடையாளம் தெரியவில்லை.

 

மேடைக்கு வந்த ஷரப் முதலில் செய்தது ஆன்ஷியை அவன் எதிரில் நிறுத்தி யொத்தாவை வான்  நோக்கி உயர பிடித்து

 

விஷ்வதீர பரம்பரையின் இன்றைய வாரிசான ஷரப் சௌதாகராகிய நான் என் மனைவியான ஆன்ஷி சௌதாகருக்கு என் உயிர்  இருக்கும் வரை உன் மானம் காப்பேன் என யொத்தாவின் மேல் ஆணையாக உறுதி மொழி அளிக்கின்றேன்”

 

மேடையிலிருந்து யாரையும் பாராது தனது மனைவிக்கு உறுதி மொழி அளித்து  அவளின் கையில் வாளை கொடுக்க கண்ணீர் மல்க அதை ஆன்ஷி பெற்றுக் கொண்டதும் அவளின் நெற்றியில் முத்த விட்டவன், யொத்தாவை வாங்கி   மேடையில் யொத்தாவை வைக்கவென அமைத்த இடத்தில் பொருத்தி மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தான்.

 

என் சமஸ்தானத்து மக்களுக்கு வணக்கம். ஷரப் சௌதாகராகிய நான் யொத்தாவை தேடித்  கண்டு பிடித்தது மாத்திரமல்லாது என் உயிரின் பாதியையும் கண்ட உடனேயே அவளை சட்ட ரீதியாகவும், அவளின் குடும்ப முறை படியும் மணந்து கொண்டேன். யொத்தாவின் மேல் வாக்கும்  இப்பொழுது கொடுத்து விட்டேன். எங்க குல வளக்கப் படி மீண்டும் என் மனைவியை கூடிய சீக்கிரம் என் பாட்டியின் ஆசிர்வாதத்தோடு மணப்பேன். எங்களை ஆசிர்வதிக்கும் படி உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என அறிவிக்க வசுந்தராதேவியின் முகம் கோவத்தில் சிவந்தது.

 

தான் என்ன செய்தால் வசுந்தராதேவியால் ஒன்னும் செய்து விட முடியாது என்று நன்றாக அறிந்திருந்தவன்  தனது சமஸ்தான மக்கள் முன்னாள் ஆன்ஷி யார் என்ற உண்மையை போட்டுடைத்தான் ஷரப்.

 

யொத்தா கிடைத்து விட்டதை மக்களுக்கு அறிவித்தது மாத்திரமன்றி அதை பார்க்க நேரடியாகவும் ஒளி பரப்பப் பட்டுக் கொண்டிருக்க தனக்கும் ஆன்ஷிக்குமான உறவை பகிரங்கப் படுத்தி வசுந்தராதேவிக்கு செக் வைத்ததுமில்லாது, அவரை செல்லா காசா மாற்றியும் விட்டான் ஷரப்.

தேஜ்வீர் உட்பட அரச குடும்ப அனைவருக்கும் இது பேரதிர்ச்சியாக இருக்க, ஹரிலாலுக்கு இடியாய் இறங்கிய செய்தியானது.

 

ஆன்ஷியை வசுந்தராதேவிக்கு அறிமுகப் படுத்த அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவர். அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும் ஷரப்பும் கூடவே அவரின் காலில் விழுந்தான். தனது கோவத்தை  கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாயால் மாத்திரம் ஆசிர்வாதம் செய்த வசுந்தராதேவிக்கு ஆன்ஷியின் பூர்வீகத்தை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பார்க்க லட்சணமாக, சிவந்த நிறத்தில் அரச குடும்பத்துக்கு எல்லா விதத்திலேயும் பொருத்தமாக இருந்தாலும் அவளின் குடும்பப் பின்னணியை அவர் அறிய வேண்டியிருந்தது.

 

பேரன் தன் கைமீறி போய் விடுவானோ என்றஞ்சிய வசுந்தராதேவி ஏதோ ஷரப் ஆன்ஷியின் அழகில் மயங்கி இருப்பதாக முடிவு செய்தவர். பெண்கள் விஷயத்தில் ஷரப் எப்படி பட்டவன் என அறிந்திருந்த படியால், ஆசை தீர அனுபவித்தபின் ஆன்ஷி எனும் மலர் கசந்து வேறு மலர் தேடி வண்டாய் பறந்து விடுவான் என  மனதை தேற்றிக் கொண்டார்.

 

அவர் அறியாதது ஷரப் எந்த பெண்ணையும், அந்த பெண் விருப்பமில்லாமல் தொடவும் மாட்டான். பலவந்தப்  படுத்தவும் மாட்டான். இஷ்டமில்லை என்றால் அனுப்பி விடுவான். பெண்களை ஆண்களின் அடிமை என்று சொல்லி வளர்த்தாலும், ஒரு வயதுக்கு மேல் புரிந்து கொண்டான். அவனுடைய பாட்டி வசுந்தராதேவியின் கம்பீரமான தோற்றமும், ஒரு சமஸ்தானத்தியே கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அழகு அவன் மனதில் பதிந்தது மாத்திரமன்றி, இக்காலத்தில் சாதனை பெண்களின் மீது அவனுக்கு தனி மரியாதை இருந்தது. அன்னை யாமினியின் நற்குணங்களும் அவனின் இரத்தத்தில் கலந்திருப்பதனாலையோ! என்னவோ  அவனின் பெண்கள் மீதான பார்வை கோணம் கொஞ்சம் மாறி இருந்தது. அதை முழுசாக மாற்றியவள் ஆனிஷியே.

 

ஆன்ஷியை பார்த்த போது உணராத காதல், ஆன்ஷியை பிரிந்த போது உணர்ந்தான். ஒரு வேலை ஆன்ஷி அவனிடமிருந்து தப்பிச் செல்லவில்லையானால் அவன் அவள் மேல் கொண்ட ஆழமான காதலை புரிந்த்துக் கொள்ளாமல் பொய் இருப்பானோ?

 

தந்தையின் நாட்குறிப்பில் அன்னையை பற்றியும் அவர் காதல் கொண்டு பலவந்தமாக அன்னையை மணந்ததை பற்றியும், பின் அன்னை தந்தையின் காதலை புரிந்துக் கொண்டு சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்ததாக குறிப்பிட்டிருக்க

ஆன்ஷியை தன்னோடு நிரந்தரமாக இணைக்க திருமணம் என்ற ஒன்றால் மட்டுமே முடியும் என்று மனதில் ஆழமாக பதிய வைத்திருந்தவன். தருணுடனான ஆன்ஷியின் திருமணத்தை நிறுத்த வழிகள் நிறைய  இருந்தும் ஆன்ஷியை திருமணத்தின் மூலமே தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என முடிவுசெய்து படையெடுக்காத குறையாக ஆன்ஷியை திருமணமும் செய்து கொண்டான்.

சிறப்புப் பூஜையை முடித்துக் கொண்டு அரச குடும்பம் அரண்மனைக்கு திரும்பியது.

*******************************************************************

என்னடா சொல்லுற அது மனீஷ் பொண்ணா? இருக்காது அவ மூஞ்சிதான் எரிஞ்சு போச்சே, நீ வேற யாரையோ பார்த்து குழம்பி போய் இருக்க” ஹரிலால் வலது கையிடம்  எகிற

 

இல்ல தலைவரே எனக்கு ஒரு தடவ பார்த்தா நல்லா நியாபகம் இருக்கும். அது மனீஷ் பொண்ணுதான். அன்னைக்கி அந்த ஷரப் என்னமா துள்ளினான்” வலது கை சொல்ல

அப்போ….. போயும் போயும் அவன் மனீஷ் பொண்ணு மேல ஆசப் பட்டு கல்யாணமே பண்ணிக்கிட்டானா? குட்டி செம கலருதான் போ. இந்த ராஜஸ்தான் பூரா தேடினாலும் அவ மாதிரி அழகி கிடைக்க மாட்டா. அவ மனீஷ் பொண்ணுன்னு தெரிஞ்சா அந்த தேஜ்வீர்  என்ன பண்ணுவான்? வசுந்தராதேவி என்ன பண்ணுவாங்க?

கண்டிப்பா அந்த பொண்ண ஏதாச்சும் செய்வாங்க”

 

அப்படி செஞ்சா ஷரப் என்ன செய்வான்?”

 

அவன் அந்த பொண்ணுமேல வச்சிருக்கிற ஆசையால் வசுந்தராதேவி கூட சண்டை போடுவான்”

 

என்னடா சண்டை போடுவான்னு சொல்லுற சமஸ்தானத்தை விட்டே போய்டணும்” என்று ஹரிலால் குரல் உயர்த்தி கத்தியவாறே தேஜ்வீருக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

**************************************************************

 

அரண்மனைக்குள் ஷரப்புடன் வலது காலை  எடுத்து வைத்து உள்ளே வந்த ஆன்ஷி அரண்மனையை அதிசயமாக பார்த்திருந்தாள். அவளும் சமஸ்தானத்து பிரஜைதான். ஊர் மக்களால் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்ததால் அரண்மனையை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. பாடசாலை செல்லும் போது நண்பர்களின் மூலம் அறிந்திருந்தாலும் அது இப்பொழுது நியாபகத்தில் இல்லை.

அவளை அரண்மனையின் ஒரே வாரிசான ஷரப்பின் மனைவியாக ஏற்காத காரணத்தாலயே வசுந்தராதேவி  எந்த சடங்கும் இல்லாமல் அவளை உள்ளே அழைத்து வந்தார். ஷரப் அவரை கேள்வியால் ஏறிட

 

நம்ம குல வழக்கப் படி கல்யாணம் நடந்த பிறகு சடங்கெல்லாம் செய்யலாம். அவளை அவலறையில் கொண்டு போய் விடு” என்று ஷரப்புக்கு உத்தரவிட

 

பாட்டி எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிருச்சு” என்று கண்சிமிட்டியவன் அவர் சொல் படியே ஆன்ஷியை தனியறையில் விடச் சென்றான்.

அறைக்குள் வந்தவன் “ஆன்ஷி மை டார்லிங். நீ எனக்கே எனக்குன்னு சொந்தம்மாகிட்ட, இனிமேல் உன்ன விட்டு பிரியவேமாட்டேன். உன்ன என்னை விட்டு பிரியவும் விடமாட்டேன்” என்று அவளை இடையோடு இழுத்து அணைத்தவன் அவள்  இதழை சிறை பிடித்தான்.

***************************************************

 

தனது அறைக்கு வந்த வசுந்தராதேவி தனது கோவத்தை கட்டுப் படுத்த முடியாமல் பொருட்களை எல்லாம் போட்டுடைத்துக் கொண்டிருந்தார். ஷரப்பின் கண்களில் ஆன்ஷியின் மீதான காதல் அப்பட்டமாக தெரிய ஆன்ஷியை அவன் வாழ்க்கையிலிருந்து விரட்டுவது அவ்வளவு இலேசான காரியமாக தெரியவில்லை. அவரின் அருகில் வர பயந்த பத்மா கதவுக்கு வெளியே இருந்தவாறே கையை பிசைந்தவண்ணம் இருந்தாள்.

 

எவளோ ஒருத்தியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தது மட்டுமில்லாமல் நா ஏற்காமல் ஏதாவது பண்ணிடுவேன்னு தெரிஞ்சே சமஸ்தான மக்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்ததை பறைசாற்றி என்னை ஒன்னும் இல்லாதவளா ஆக்கிட்டானனே” என கத்தியவர்

 

நீ என் பேரன்டா……. என்ன மாறி தானே இருப்ப, உன் காட்டுல இப்போ மழை நல்லா கொண்டாடு எனக்குன்னு ஒரு காலம் கூடி வரும் அப்போ வச்சிக்கிறேன்” என்று பொறுமியவர் அறியவில்லை இன்றிரவே தேஜ்வீர்  மூலம் அவருக்கு அவர் சொன்ன நேரம் கூடிவரப் போகுது என்று.

**************************************************

ஆன்ஷியை கொஞ்சிக் கெஞ்சி அவளிடமிருந்து பல முத்தங்களை பெற்றுக் கொண்டு தனதறைக்கு வந்த ஷரப்பை அழைத்தான் வ்ருஷாத்

 

என்னடா இந்த நேரத்துல தொந்தரவு பண்ணிக்கிட்டு” ஆன்ஷியின் முத்தத்தின் தித்திப்பில் நனைந்து கொண்டிருந்த ஷரப் கடுப்பாகி கேக்க

 

தொந்தரவா? யாருக்கு? ஏதோ பாஸ்ட் நைட் நடந்து கொண்டு இருக்கும் போது தொந்தரவு பண்ண மாதிரி என்ன ஒரு பில்டப்பு” வ்ருஷாத் சத்தமாக சிரிக்க

டேய் வர வர உன் வாய் ரொம்பதான் நீளுது”

 

எல்லாம் காதல் படுத்தும் பாடு” தன்னவளின் கூர்விழியை மொபைலில் பார்த்தவாறே கூற

என்ன சொன்ன” ஷரப் மீண்டும் அழுத்திக் கேக்க

உங்க காதலால் நான் படும் பாட்ட சொன்னேன் பாய்” என்று சிரித்து மழுப்பினான்.

 

இத சொல்லத்தான் கால் பண்ணியா எரும எரும” கண்ட படி வ்ருஷாத்தை திட்ட

 

காதை ஒரு விரல் நுழைத்து குடைந்தவன் “அப்பா என் காதுக்கு வாய் மட்டும் இருந்துச்சு அது அழுது ராஜஸ்தானையே தண்ணீர்ல சீ… கண்ணீர்ல மூழ்க வச்சிடும்”

இப்போ எதுக்கு போன் பண்ண சொல்லித் தொல”

 

அப்பா முடியல…” என்று   நெஞ்சை பிடித்தவன் “வேற எதுக்கு கோயம்புத்தூர்  போகும் போது ஒருத்தன அடச்சீ வச்சிட்டு போனோமே அவன் நிலைமை என்னனு பார்க்க தோனலயா? அந்த மினிஸ்டருக்கு செக்கு வைக்க புலி மாதிரி என்னமா பிளான்  போட்டிங்க, அண்ணி வந்ததும் எல்லாத்தையும் மறந்து அவங்க பின்னாடி பூன குட்டியா சுத்தி கிட்டு இருக்கீங்க” என்று ஷரப்பை சந்தர்ப்பம் பார்த்து வாரினான் வ்ருஷாத்.

 

வ்ருஷாத் வாருவதை புன்னகையில் முடித்துக் கொண்ட ஷரப் “அட ஆமா மறந்துட்டேன். அவன் பேரென்ன? பிரதாப் வா உடனே போய் விசயத்த கறந்துடலாம்” என ஷரப் அரண்மனையிலிருந்து விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு செல்ல

ஹரிலாலின் போன் காலை பேசி விட்டு தேஜ்வீர் அரண்மனைக்குள் வரவும் சரியாக இருந்தது.

ஹரிலாலின் கால் வந்தாவே தேஜ்வீர்  அரண்மனைக்கு வெளியே சென்றுதான் பேசுவான். இன்றும் அதே போல் பேசியவன் ஷரப் புறப்பட்டு செல்வதை பார்த்து

கட்டின புதுப் பொண்டாட்டிய தொட முடியலன்னு இன்னொருத்தியை தேடி போய்ட்டானா” இகழ்ச்சியாக புன்னகைத்தவன் ஹரிலால் சொன்ன விஷயத்தை உடனே வசுந்தராதேவியிடம் பகிர ஓடினான்.

ஹரிலால் தேஜ்வீரிடம்   ஆன்ஷி மனீஷ் பொண்ணு என்று சொன்னதும்

எவன் பொண்ணா இருந்தாள் என்ன, அவனுக்கு கல்யாணம் ஆச்சு இனி குழந்தை குட்டியோடு சந்தோசமா இறுக்கப் போறான், நாம புறங்கையை நக்கிட்டு போக வேண்டியது தான்” என்று கடுப்பில் சொல்ல

 

டேய் முட்டாளே!” என்று மினிஸ்டர் கத்திவிட

 

யோவ் மினிஸ்டர் மரியாதை, மரியாதை, யார் கிட்ட பேசுறேன்னு யோசிச்சு பேசு நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன்” என தேஜ்வீர்  குரல் உயர்த்த

 

இதுக்கொண்ணும் குறைச்சலில்ல, சொந்தமா யோசிக்கவும் மாட்டான். சொல்லுறதையும் புரிஞ்சிக்க மாட்டான்” என ஹரிலால் புலம்பி விட்டு

அது இல்ல தேஜ்வீர் அந்த மனீஷ் யாருன்னா….” மனீஷை பற்றி சொல்லியவர் தேஜ்வீரை  எப்படி வசுந்தராதேவியிடம் பேச வேண்டும் என்பதையும் மெருகேற்றி விட அந்த மினிஸ்டரின் கைபொம்மையும் அதன் படி ஆட வசுந்தராதேவியை நோக்கி ஓடியது.

 

வசுந்தராதேவியின் அறை வாசலில் பத்மா கையை பிசைந்தவாறே நிற்பதை கண்டு அவரை தள்ளி விட்டு அறைக்குள் புக கண்ணாடி குவளை ஒன்று தேஜ்வீரின் தலையின் அருகே பறந்தது.

 

ஐயோ அம்மா” என்று கத்தியவன் வந்த விஷயத்தை எவ்வாறு சொல்வதென தடுமாறி திரைசீலைக்கு பின்னால் ஒழிந்துக் கொண்டவன் ஷரப் அரண்மனையில் இல்லாததால் கத்திக் கத்தி சொல்ல

என்னடா சொன்ன” என்று தேஜ்வீரின் அருகில் வந்த வசுந்தராதேவி அவன் சொன்னதை காதில் வாங்கியவர்.

 

இப்போ பாரு அவளை என்ன பண்ணுறேன்னு” என்று ஆன்ஷியின் அறையை நோக்கி வேகமாக நடக்க தேஜ்வீரும் கூடவே போனவன் தூங்கி கொண்டிருந்த ஆன்ஷியை வசுந்தராதேவி நெருங்க முன் எட்டி உதைத்திருந்தாள் பத்மா.

 

அடுத்து நடந்தவைகளால் பேச முடியாத ஆன்ஷி கத்தக் கூட முடியாமல் கூனிக் குறுகி நிற்க அரண்மனையில் நடந்து கொண்டிருக்கும் அவலத்தை ஷரப்புக்கு அழைத்து சொன்னாள் வ்ருஷாத்தின் மனம் கவர்ந்தவள்.

 

Advertisement