Advertisement

                                                   அத்தியாயம் 12

“உங்க கவலை எனக்கு புரியுது. ஆன்ஷி எனக்காக பொறந்தவ அவளை பார்த்துக் வேண்டியது என் பொறுப்பு அவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீராவது வர விடாம பாத்துக்கிறேன்.” ஆன்ஷியை கண்ணால் பருகியவாறே ஷரப் ஆர்த்மார்தமாக சொல்ல ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் முதியவர்கள் இருவரும்.

“அப்போ இனிமேல் உங்க வீட்டுல வெங்காயம் வெட்டுறது உங்க ஜாப். இல்லனா ஆன்ஷி வெங்காயம் வெட்டும் போது அழுதிடப் போறா” தருண் நக்கலாக சொல்ல

“நம்ம அண்ணா ரேஞ்ச் என்ன அவர போய் வெங்காயம் வெட்ட சொல்லிக்கிட்டு” முணுமுணுத்தவாறே வ்ருஷாத் தருணை முறைக்க

“ஷரப் இப்போயாச்சும் உன் படிகர்ட்ஸ்ச அனுப்பு” விஷ்வதீரன் சொல்ல

தலைவனை அழைத்து சென்னை செல்லுமாறு உத்தரவிட்ட ஷரப், அங்கே சென்ற உடன் போன் பண்ணும் படி கூற அவன் கட்டளையை ஏற்று  தலையசைத்தவாறே விடைபெற்றான்.

“சரி பாஸ் ராஜஸ்தான்ல நீங்க என்ன தொழில் செய்றீங்க” தருண் ஷரப்பின் அதிரடி என்ட்ரியில் ஆன்ஷியின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற கலக்கத்தில்  கேக்க பதில் வ்ருஷாத்திடமிருந்து வந்தது.

அண்ணன் அரச பரம்பரையை சேர்ந்தவர் ராஜஸ்தான்ல உள்ள எல்லா சொத்தும் அவங்க குடும்பத்துக்கு சொந்தமானது. பத்து தலைமுறை தாங்கும் போதுமா?” தருணை முறைத்தவாறே வ்ருஷாத் சொல்ல ஆன்ஷியின் நெஞ்சில் பயம் குடிகொண்டது.

 

அவளின் மேனி நடுங்குவதை உணர்ந்த ஷரப் அவளை ஏறிட்டு கண்ணாலேயே ஆறுதல் சொல்லியவன் ஆன்ஷியின் பாட்டி தாத்தா விடம் ” எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றதோடு காலில் விழ முதியவர்களின் உள்ளம் அவனது செயலில் குளிர்ந்து தான் போனது

தருணும் அனிதாவின் கையை இறுக்கிப் பிடித்தவாறே “எங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றவன் அவளை இழுக்காத குறையாக காலில் விழ சாருலதா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

தனது அன்னையை பார்த்த தருண் லதாவின் முகத்திருப்பலில் தந்தையிடம் மட்டும் ஆசிர்வாதம் வாங்க மனமில்லாது அமைதி காத்தான்.

 

“சரி அப்போ நாங்க கிளம்புறோம்” என்று ஷரப் விடை பெற “என்ன பாஸ் நீங்க எங்க வீட்டு பொண்ண இப்படி இழுத்துட்டு போறீங்க வாங்க வீட்டுக்கு போயிட்டு போலாம்” என தருண் அழைப்பு விடுக்க சிவதாசுக்குமே ஆசை இருந்தாலும் மனைவியிடம் வாங்கி கட்டிக்க கொள்ள விரும்பாதவராக அமைதி காத்தார்.

வீட்டில் தருணை  தவிர மற்ற யாருமே சாருலதாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசுபவர்களல்ல என்பதை புரிந்துக் கொண்ட ஷரப் “நோ ப்ரோ நிறைய வேலை இருக்கு கண்டிப்பா நெஸ்ட் டைம் வரேன் என விடைபெற்றான்”

ஷரப் ஒரு அடி கூட எடுத்து வைக்க முன் ஆன்ஷியின் தோளை பற்றி இழுத்த சாருலதா

 

அடியேய் எங்கடி போற? உன் பேருல எங்க அப்பா எழுதிவச்சிருக்கும் சொத்த அசால்டா ஆட்டய போடலாம்னு பாக்குறியா? போட்டிருக்குற நகை உன் அப்பன் வாங்கித்தந்ததா? பட்டுப் புடவையே ஐம்பதாயிரம், எல்லாத்தையும் சுருட்டி கிட்டு ஓட பாக்கிறியா?  இந்த சாருலதா இருக்குற வரைக்கும் அப்படி நடக்க விடமாட்டேன் டி. உன் சொத்து என்ன விட்டு வெளியே போகக்கூடாது என்று தான் என் பையன் தருணுக்கு உன்ன கட்டி வைக்க பார்த்தேன். இல்லனா உன்ன இதோ இவன் மாதிரி ஒருத்தன் கட்டிக்கொண்டு வப்பாட்டியாதான் வச்சிப்பான்” லதா உண்மையை உளறியவாறே கண்ட படி பேச

 

அவள் சொத்து பற்றி பேச ஆரம்பிக்கும் போதே என்ன என்று ஆன்ஷி சைகையால் வினவ அதை கண்டு கொள்ளாது லதா மேலும் பேச ஷரப் “ஏய்” என்ற வாரே லதாவை அடிக்க கையை ஓங்க ஆன்ஷி அவனை பிடித்து இழுத்து தன் பக்கம் நிருத்தினாள்.  அவள் சைகையால் “வேண்டாம்” என சொல்ல அவளை அதிர்ச்சியாக பார்த்தான் ஷரப்.

 

சாருலதாவை மறந்து வந்ததிலிருந்து ஆன்ஷி ஒரு வார்த்தை பேசவுமில்லை, அவள் பேசி அவன் கேட்டதுமில்லை ஒரு வேலை அவள் ஊமையா? என்ற சந்தேகத்தினூடே ஆன்ஷியின் பக்கம் திரும்பி ஷரப் எதுவும் கேட்ட முன் லதா

“அதானே பாத்தேன் என்னடா இவ அழகுல மயங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டானே! வைச்சி ஒழங்கா குடும்பம் நடத்துவானானு, ஊமை என்று கூட தெரியாம தாலிய கட்டிட்டானா? இனி உன் பாடு கஷ்டம் தான். ஒரு வேல தாலி கட்டினது  உன்ன இங்க இருந்து கூட்டிட்டு போக மட்டும் தானோ? நல்லா அனுபவிச்சிட்டு கைகழுவாப் போறான். இதுதான் நடக்கப் போகுது. நான் சொன்னதை எழுதி வச்சிக்க” நிருத்தாமல் பேசிக் கொண்டே போக பல்லை கடித்தான் ஷரப்.

 

அவனுடைய கோவத்தின் அளவு அதிகரிக்கவும் அரக்கனாக மாறிக் கொண்டிருந்த ஷரப்பின் கை தனது இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை தானாக எடுக்க அக்கணமே லதாவை அறைந்திருந்தார் சிவதாஸ்.

 

“நானும் பொருத்து பொருத்து பாக்குறேன் கண்ட படி பேசிகிட்டே போற, வெளியே இருந்து யாரும் வேணாம்டி நீ போதும் குடும்ப மானத்த வாங்க பேசாம இங்க இருந்து போய்டு இல்லனா என் கையாலேயே உன் கழத்த நெருச்சி கொண்ணுடுவேன். நானும் குடும்ப நிம்மதிக்காக இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தேன். நீ பண்ணதெல்லாம் பொறுத்து போனேன் இனி மேல் அமைதியாக இருக்க மாட்டேண்டி, பசங்க சந்தோசமா வாழறதுதாண்டி முக்கியம் பணம் பணம்னு அலையுற, பணத்தாசை புடிச்ச பேய் டி நீ. உன்ன எல்லாம்…. சாபமாடி கொடுக்குற சாபம். யாருக்குடி? அதுவும் தேவதை மாதிரி இருக்குற என் தங்கச்சி பொண்ணுக்கா? உன்ன மாதிரி ஒரு ராட்சஷி குடுக்குற சாபம் எல்லாம் பலிக்காதுடி”

 

சிவதாஸ் இவ்வளவு நாளும் அடக்கி வைத்திருந்த கோவத்தையெல்லாம் ஒன்றாக சேர்த்து அடித்திருக்க லதா வின் கடைவாய் பல் ஒன்று உடைந்தது மாத்திரமல்லாமல் கன்னம் வீங்கி, உதடு வெடித்தது இரத்தம் வழிய ஆரம்பித்தது.

 

தான் எது செய்தாலும் அமைதியின் சிகரமாக திகழும் கணவன் அடித்த அதிர்ச்சியில் பேச்சு வராது ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் சாருலதா. பிள்ளைகளும், மாமனார், மாமியாரும் யாருமே அருகில் வந்து சிவதாஸை தடுக்கவில்லை என்றதில் மனதளவில் காயப்பட்டு போனாள்.

 

இங்கே நடக்கும் நாடகத்தை பார்க்க சகிக்காத ஷரப் வ்ருஷாதுக்கு கண்ணால் சைகை செய்ய அவனுடைய செக் புக் நீட்டப் பட அதில் கையொப்பமிட்டு சாருலதாவின் முன் வந்தவன்

“இது பிளாங்க் செக் ஆன்ஷிக்கு நீங்க செலவு பண்ண ஒவ்வொரு ரூபாவையும் கணக்கு பார்த்து பில் பண்ணுங்க, வேணும்னா அதுக்கு மேலயும் எடுத்துக்கோங்க” புன்னகை முகமாக ஷரப் சொன்னாலும் கண்கள் இரண்டிலும் கோவம் அனல் பறக்க நின்றிருந்தான்.

 

அடி வாங்கியதையும் மறந்து. அவனது பேச்சில் காசு வந்தா லாபம் என்று லதா காசோலையை பெற்றுக் கொள்ள

 

“என்ன மாப்புள நீங்க ஆன்ஷி என் தங்க பொண்ணு அவளுக்கு நா செலவு பண்ண மாட்டேனா? இவ ஒருத்தி கூறு கெட்டவ உறவுகளின் அருமை தெரியாதவ திமிரு புடிச்ச அடங்கா கழுதை. ” என்றவாறே  சிவதாஸ் காசோலையை லதாவிடம் இருந்து  பிடுங்கி சுக்குநூறாக கிழித்தெறிந்தான்.

 

அவரின் செயலில் கோவம் சிறிது மட்டுப் பட அனைவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தவன் ஆன்ஷியுடன் ஹெலிகோட்டரை நோக்கி நடந்தான் ஷரப்.

 

விஷ்வதீரனும் சிவதாஸிடம் ஒரு தலையசைப்பில் விடை பெற்று நண்பனுடன் நடக்க “உன் கெத்து அன்னைக்கும் இன்னைக்கும் குறையவே இல்ல. பட் நீ அரச பரம்பரைன்னு காலேஜ்ல இருக்கும் போது சொல்லவே இல்ல உன் சர் நேம் கூட” என்று விஷ்வதீரன் யோசிக்க

“சௌதாகர். ஷரப் சௌதாகர், விஷ்வதீர் சௌதாகருடைய பரம்பரையில் வந்தவன். எனக்கு உன்ன புடிச்ச ஒரே காரணம் உன் பேர். ஓகே டூட் கீப் இன் டச்” என்றவன் ஆன்ஷியுட விமானத்தில் ஏறிச்செல்ல விஷ்வதீரன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

****

“வாங்க வீட்டுக்கு போலாம்” என்று சிவதாஸ் அனைவரையும் அழைத்தாலும் லதாவை திரும்பியும் பார்க்கவில்லை. அங்கே உள்ளவர்களிடம் விடை பெறவேண்டும் என்ற எண்ணமெல்லாம் சிவதாசுக்கு இல்ல காரணம் அதிகமானோர் வியாபார சம்பந்தமான உறவுகள். நெருங்கிய சொந்த பந்தங்களுக்கே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது அதிலும் பாதி பேரே வருகை தந்திருந்தனர்.

முல்லை மல்லிகையின் வீட்டிலிருந்து சித்தியும் சித்தப்பாவும் மாத்திரம் வருகை தந்திருந்தனர். இங்கே நடப்பவைகளை ஒரு ஓரமாக பாத்திருந்தவர்கள் விடைபெற்று சென்றனர். {செல்விக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆகி இருக்க கனகாம்பாள் வரவில்லை. கோமளவள்ளிக்கு சாருலதாவை பிடிக்காத ஒரே காரணத்தினால் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாள்.  செல்வராஜும், சத்யாவும் தொழில் விஷயமாக வெளியூர் சென்றிருந்தனர்.only for ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் fans }

*****

ஷரப் தங்கியிருந்த ஹோட்டலில் விமானம் தரையிறங்க வசதி இருந்ததால் ஆன்ஷி, தருண் திருமணம் நடக்கும் இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தவன், அவ்வழியே ஹோட்டலை அடைந்தான். ஹெலிகாப்டரிலும் ஆன்ஷியிடம் நெருக்கமாக அமர்ந்து அவளின் கையை இறுக்கப் பிடித்திருந்தவன் இறங்கியும் அணைத்தவாறே அறையை அடைந்தான்.

ஆன்ஷிக்கு இது முதல் ஹெலிகாப்டரில் பயணம் சர்வமும் நடுங்க கண்ணையும் மூடியவள் ஷரப்பை நெருங்கி அமர அவனுக்கு அது வசதியாகிவிட அங்கே வ்ருஷாத் என்ற ஒருவன் இருப்பதை கண்டுக்கவே இல்லை.

ஆன்ஷி தன்னையறியாமலேயே ஷரப்பை இறுக்கி அணைத்திருக்க  அவன் அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு நெற்றியில் உதடு பதித்திருந்தவன் கைகளால் அவள் உடலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான். அதை உணரும் நிலையில் கூட ஆன்ஷி இல்லை பயத்தின் காரணமாக இன்னும் இன்னும் அவனுள் புதைத்தாள்.

வ்ருஷாத் தான் இவர்களின் காதல் காட்சியை காணச் சகிக்காது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது போல் தலையை திருப்பிக் கொள்ள அவனின் மனதை பறிக்கும் ராட்சஷியின் நினைவுகள் வந்து தீயை மூட்ட அவளை மனத்தால் சாட ஆரம்பித்தான்.

 

அறைக்கு வந்தவன் ஆன்ஷியை எலும்புகள் நொறுங்கும் வரை இருக்க அணைத்தான். “எங்கடி போன உன்ன தேடி தேடியே என் பாதி உசுரு போச்சு மீதி உசுர கைல வச்சிருந்ததே உன்ன பாக்கத்தான். பாத்துட்டேன்” என்றவன் அவள் முகமெங்கும் முத்தமிட்டவாறே “இப்போ நா செத்தாலும் சத்தோசமாக சாவேண்டி” என்றவாறே முத்த மழையை தொடர, அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயன்று முயன்று தோற்றவள் வழியில் முனக அவளை விட்டு அகன்றவன்.”என்னாச்சு? வலிக்குதா? என்ன பண்ணுது” என்று பதறியவனாக அவளின் உடல் முழுவதும் தொட்டு தொட்டு ஆராய்ச்சி செய்ய

 

அவனின் கரிசனத்தில் மனம் உருக நின்றவள் அவன் தொட்டு தொட்டு பேசவும் அவனின் இடது கையால் அவளின் வலது கையை இறுக்கிப் பிடித்திருந்த வலியையும்  தாண்டி கூச்சத்தில் நெகிழ அவளுள் நடக்கும் மாற்றங்களை வித்தியாசமாக பார்த்திருந்தான் ஷரப்.

 

எதனை பெண்களை கண்டிருந்தாலும், பணத்துக்காக அவனிடத்தில் வந்த பெண்களிடம் இந்த வெக்கத்தையோ, அவன் தொடும் போது நெகிழ்ச்சியையோ அவன் கண்டதில்லை. கூடலுக்கு மாத்திரம் தான் பெண், ஆண்களின் அடிமைகள் என்றிருந்தவனை தனது ஒற்றை துளி கண்ணீரால் வீழ்த்தியிருந்தாள் ஆன்ஷி.

வாளைக் கொண்டு ஒரே நேரத்தில் பத்து பேரை கூட வீழ்த்தும் வல்லமை கொண்டவன் ஷரப். ஷத்ரீய  வம்சத்தில் பிறந்தவன் அவன். போரில் தோல்வியை தழுவாத பரம்பரையில் வந்தவன். சாதாரண ஒரு பெண்ணின் கண்ணீர் துளியில் கரைந்து அவளின் முகம் தேடி ஊன் இன்றி, உறக்கமின்றி அலைந்தது காதலால் அன்றி வேறில்லை.

தனது ஒற்றை கண்ணீர் துளியில் ஒரு ஆறடி  ஆண் மகனையே கரைத்து தன் கண்ணுக்குள் வைத்திருக்கும் ஆன்ஷி அவனின் மறு பக்கத்தை அறியும் போதும்  அவளின் மனம் சில்லு சில்லாக உடையும் போதும் தேற்றார் யாருமில்லாது அழுது கரைவாள் என் பதில் சந்தேகமில்லை.

ஷரப் ஆன்ஷியின் வெக்கத்தை ரசித்தவாறே கையை இன்னும் இறுக்க வழியில் கத்தினாள். அவளின் கத்தல் கூட வித்தியாசமாக இருக்க கையை எடுத்தவன் கன்றிச் சிவந்திருந்த அவளின் கையை கண்டு “சாரி, சாரி டி, சாரி” என்று சொன்ன வாறே அறையிலிருந்த குளிர் சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடமிட்டவன் வ்ருஷாத்தை அழைத்து கைக்கு பூச களிம்பு கொண்டு வரும் படி சொன்னவன் ஆன்ஷியின் புறம் திரும்பினான்.

அவனின் ஒவ்வொரு செய்கையையும், துடிப்பையும் கணிமைக்காது பாத்திருந்தாள் ஆன்ஷி.

“எப்படி உனக்கு இப்படி ஆச்சு இதற்கும் உங்கப்பன் தான் காரணமா?” கோவத்தில் கண்கள் சிவக்க கேக்க அப்பா என்றதும் ஆன்ஷியின் உடல் உதற அவளை மென்மையாக  அணைத்துக் கொண்டவன். ” பயப் படாதே நான் இருக்கும் வரைக்கும் ஒன்னும் ஆகாது” என்ற வாறே அவளின் முதுகை தடவ இவ்வளவு நாளும் மறந்திருந்த  தாயின் இழப்பு,  தந்தை என்ற ஒரு சொல்லில் அன்று நடந்தைவைகள் நியாபகத்தில் கொண்டு வந்து கதறி அழுதாள்.

 

“போதும் டி போதும் இனிமேல் உன் கண்ணில் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தக் கூடாது” என்றவாறே அவளின் கண்களில் வழியும்   கண்ணீரை துடைத்தவன், மென்மையிலும் மென்மையாக அவளுக்கு வலிக்குமோ என்று அஞ்சியவனாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

வ்ருஷாத் வந்து களிம்பை தர அதையும் அவள் கைகளில் மெதுவாக பூசியவன்

“ஏதாச்சும் சாப்பிடுறியா? இல்ல குடிக்க மட்டும் கொண்டு வரவா ?”

இது தான் ஷரப் ஒரு பெண்ணிடம் அதுவும் இளம் பெண்ணிடம் கனிவாய் பேசியது. வசுந்தராதேவியிடம் கூட சில சமயம் சிடு சிடுப்பான். இவ்வளவு கனிவு ? வ்ருஷாத் ஷரப்பை ஆச்சரியமாக பாத்திருக்க

 

“வேண்டாம்” என்று மறுப்பாக தலையசைத்தவாறே ஆன்ஷி புன்னகையினூடாகவே அவனை கணிமைக்காமல் பாத்திருந்தாள்.

இது எத்தகைய பந்தம்? பார்த்த ஒரே நாளில்? சில நொடி நேரம் மட்டும் கண்ட முகம் மனதில் பதிந்து போனது விந்தையிலும் விந்தை.

 

உன் முகம் மட்டும் பார்த்து என் ஆயுள் முடித்துக் கொள்வேன் அன்பே!

உன் மூச்சு காற்று போதும் நான் இன்னும் கொஞ்சம் நாள் உயிர் வாழ அன்பே!

 

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே

உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தே கடந்தேன் பகல் இரவை

உன் அலாதி அன்பினில்

நனைந்தபின் நனைந்தபின்

நானும் மழையானேன்

 

ஆன்ஷி சாப்பிட மறுக்கவே அவளை தூங்கச்சொல்லி போர்வையையும் போர்த்தி விட்டவன், தூங்கும் வரை அருகிலேயே அமர்ந்து  அவளின் கையை பிடித்துக் கொண்டு அவளின் முகத்தை பார்த்திருந்தவன். “ஆன்ஷி……, ஆன்ஷினா என்ன பொருள் தெரியுமா? கடவுள் தந்த பரிசு சரியா தான் டி உங்கம்மா உனக்கு பேர் வச்சிருக்காங்க, நீ எனக்கு கடவுள் தந்த பரிசு தான் டி. இந்த ஜென்மத்துல எனக்கு கிடைச்ச மிக சிறப்பான பரிசு”  

ஆன்ஷி ஷரப்பை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள் “நீங்க தான்  உண்மையிலே எனக்கு கடவுள் தந்த பரிசு” என்று செய்கையில் சொல்ல அவள் சொன்னது ஒண்ணுமே அவனுக்கு புரியவில்லை, மனம் வலிக்க புன்னகைத்தவன் தூங்குமாறு தட்டிக் கொடுக்க அவள் தூங்கியதும். அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,

வ்ருஷாத்தை அழைத்து  “நாளை காலைலயே சென்னை போகவேணும். அவனுங்க சென்னை போய் சேர்ந்ததும் என்னோட அன்பு சகோதரனை தூக்கிட சொல்லு” என கண்ணக் குழி விழ புன்னகைத்தவன். வாழ்க்கையில் அடையவேண்டிய பொக்கிஷமாக நினைத்த யொத்தா வாளை மீட்க போகும் சந்தோசத்தில் கையில் கிடைத்த சுவர்க்கம் ஆன்ஷியை நாடிச் சென்றான்.  

Advertisement