Advertisement

                                                   அத்தியாயம் 11

கர்மசிரத்தையாக ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக்  கொண்டிருந்தான் தருண். வாய் மந்திரத்தை ஓதினாலும் மனமோ ஆன்ஷி சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தது.

அன்று பரமு பாட்டியுடன் வந்தவள் அவனுடன் பேச வேண்டும் என சைகையில் சொல்ல பாட்டியை அனுப்பி விட்டு அவள் எதிரில் வந்தமர்ந்தவன் என்னவென்று கேக்க எப்படி சொல்வதென்று ஆன்ஷி தடுமாற

 

“என்ன ஆன்ஷி எதுனாலும் சொல்லு” தருண் அவளின் கண்களை பார்த்து சொல்ல ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்தவள் மளமளவென எழுத ஆரம்பித்தாள்.

அவள் எழுதி முடித்ததும் ஆர்வமாய் அதை படித்தவனுக்கோ தன்னை நினைத்து சிரிப்பு வர சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பதை புரியாத பார்வை பாத்திருந்தவள் என்ன வென கேக்க

 

ஆன்ஷி எழுதியிருந்தது இதுதான். மானை துரத்தி செல்லும் போது புழுதியில் ஜீப்பில் வந்த ஒருவனை பார்த்ததாகவும், இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவனின் நியாபகம் அடிக்கடி வருவதாகவும் அது எந்த மாதிரியான உணர்வு என்று தெரியல, சினிமால காட்டுற மாதிரி அது காதல்னா உங்க கூட சந்தோசமா வாழ முடியுமானு தெரியல, எனக்கு பாட்டி, தாத்தாவோட சந்தோசம் ரொம்ப முக்கியம் அது உங்க கூட நடக்குற கல்யாணத்தால கிடைக்குமென்றால் உங்கள நான் கல்யாணம் பண்ண தயங்க மாட்டேன்.

 

சிரிப்பை நிறுத்திய தருண் தன்னுடைய ஒருதலை காதல் கதையை ஆன்சியிடம் சொல்லியவன். பல நேரம் அவ என்ன விரும்புறானு நினைக்க வைக்கிறா நெருங்கி போனா விலகி ஓடுறா, என் குடும்ப சந்தோஷத்துக்காக மட்டுமில்ல ஆன்ஷி உனக்காகவும் உன்ன நான் கல்யாணம் பண்ணிப்பேன். மஞ்சத்தாலி மேஜிக்ல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று கண் சிமிட்டியவன். {என்ன டிசைன் டா நீ உன்ன வச்சி செய்ய உன் ஆளு புறப்பட்டு வந்துகிட்டு இருக்கா அவ மட்டும்  இத கேட்டு இருக்கணும்}

“உன் ஹீரோ எந்த வண்டியில் வந்தான்”

ஆன்ஷி சைகையால் கூற

“ஓஹ் நேத்து பாத்த காக்க காக்க சூர்யா வண்டி மாதிரியா?” ஆன்ஷி ஆமாம் என தலையாட்ட

“சினிமால நடக்குற மாதிரி எங்க வாழ்க்கையிலும் ட்விஸ்ட், மிராக்கிள் நடந்தா எவ்வளவு சூப்பரா இருக்குமில்ல”

அவன் சொன்னது இன்னும் சிறிது நேரத்தில் நடக்க போவது அறியாமல் மாப்பிள்ளையாய் மணமேடையில் அமர்ந்திருந்தவன் ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான்.

 

தருண் தன்னுடைய நண்பர்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து பேஸ்புக்கில் கல்யாண அழைப்பிதழை போட அதை பார்த்து அவன் மனம் விரும்பிய அனிதா புயலாக உருமாறினாள்.

படிப்பு தான் முக்கியம் என்றிருந்தவள் தருணை எப்போ காதலிக்க ஆரம்பித்தாள் என்றே அறியவில்லை. முதலில் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி பிறகு தருணுக்கு சொல்லலாம் என்று அக்கா ப்ரியாவையும், அத்தான் தேவ்வையும் சந்தித்து தருண் பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதுதான் தருணின் அலைபேசி என்னிலிருந்து அழைப்பு வந்தது, காலை கட் செய்து சைலன்ட் மூடில் போட்டவள் விஷயத்தை ஒருவாறு சொல்லி முடிக்க, சிறிது நேரம் அவளிடம் விளையாடி விட்டே தேவ்வும், ப்ரியாவும் சம்மதம் தெரிவிக்க, சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவள் தருணை நேரில் சென்று சந்தித்து சொல்லி அவனின் முகத்தில் தோன்றும் ஆச்சரியமான சந்தோசத்தை காண அவனுக்கு திருப்பி அழைப்பை ஏற்படுத்தாது இருந்தவள், பேஸ்புக்கில் அழைப்பிதழை பார்த்து கொதித்தெழுந்தாள்.  

 

“என்ன லவ் பண்ணுறனு சொல்லிட்டு இப்போ எவளோ ஒருத்தி கலரா கெடச்ச உடனே அவள கல்யாணம் பண்ணி செட்டில் ஆகா பாக்கிறியா?  இருடா வரேன்” என்று கல்யாணத்தை நிறுத்த கிளம்பி இருந்தாள்.

 

கல்யாணம் திறந்த வெளியில் நடப்பதாக இருந்தாலும் அழைப்பு விடுத்தவங்கள் மாத்திரமே கலந்து கொள்ளும் படியாய் வரு வதற்காக ஒரு வாயிலும் போவதற்காக ஒரு வாயிலும் பப்பே முறையில் சாப்பாடு, நான்கு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கல்யாண மேடை ஒரு புறம் வருவோர் போவோருக்கு எந்த ஒரு தடையும் இல்லாதும், சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லது இருந்தது.

 

வாயிலில் அழைப்பிதழை சரிபார்த்து வந்தோரை உள்ளே அனுப்ப இருவர் இருக்க, நூறு பேர் கொண்ட குழு, ஒரே மாதிரியான ஆடை அணிந்து துப்பாக்கிகளுடன் இரு வாயில்களிலும் இருந்த காவலாளிகளை  தள்ளிக் கொண்டு உள்ளே வந்து வாயிலில் ஒருவன் சகிதம்  இருக்க மற்றவர்கள் உள்ளே சென்று முற்றுகையிட்டனர்.

ஐயர் பொண்ணை அழைத்து வரும் படி சொல்லவும் ஒரு கூடாரத்தில் அமர்ந்திருந்த ஆன்ஷியை அழைத்து வந்தனர் மல்லிகையும் முல்லையும். மணமகள் மண்டபத்தை நோக்கி வரும் போதே ஷரப்பின் ஆட்கள் உள்ளே நுழைந்து விட தருண் எழுந்து ஆன்ஷியின் அருகில் வர வானில் ஹெலிகொப்டர் வட்டமிடும் சத்தம் கேக்க அனைவரும் தலையை உயர்த்தி மேலே பார்த்தனர்.

ஹெலிகொப்டர் தரையில் இறங்கும் முன் அதில் இருந்து குதித்தான் ஷரப். ஹெலிகொப்டர் எழுப்பிய புழுதியினூடாகவே கோட் சூட்டில் கண்ணுக்கு கூலர் அணிந்து ஸ்டைலாக ஆன்ஷியை நோக்கி அடி எடுத்து வைக்க அவனை அடையாளம் கண்டு கொண்டவளின் வலது கண்ணில் இருந்து சரேலென ஒற்றை துளி கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ஸ்டைலாக கூலரை கழட்டி கண்ணக் குழி விழ புன்னகைத்தவாறே அவளை நோக்கி  நடந்து வருபவனை கண்டு இதயம் தாறு மாறாக துடிக்க, அக்கணம் அவள் அவனை நேசிப்பதை முளுமையாக உணர்ந்தாள்.

 

கோயம்புத்தூரில் ADGP ஆகா பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்வதீரனும் கல்யாணத்துக்கு வருகை தந்திருக்க அங்கே நடப்பதை யோசனையாக பாத்திருந்தவன் ஷரப்பை கண்டதும் புருவம் சுருக்கினான்.

 

ஹெலிகொப்டர் தரையில் இறங்கியதும் மெதுவாக இறங்கிய வ்ருஷாத் ஓடிவந்து ஷரப்புடன் சேர்ந்த்துக் கொள்ள ஷரப் ஆன்ஷியை அடைந்திருந்தான்.  

 

அவள் அவனை கண் இமைக்காது பார்க்க அவளை இளுத்து அவளின் இதழ்களில் தன் இதழை பொருத்தியவன் ஆயிரம் பேருக்கு தான் யார் என்று நிரூபித்தான்.

 

ஆன்ஷி அதை தடுக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை, சுற்றுப் புற சூழலை உணரவுமில்லை. அவள் கண்களுக்கு அவன் மாத்திரமே தெரிந்தான்.

அழைப்பிதழ் இல்லாமல் எவ்வாறு உள்ளே செல்வதென முழித்துக் கொண்டிருந்த அனிதாவை அதட்டினான் வாயிலில் இருந்த ஷரப்பின் ஆள் ” கல்யாணத்துக்கு வந்தேயானால் உள்ளே போ. இல்லையா வெளிய போ இங்க எல்லாம் நிக்கக் கூடாது” “அப்பாடா” என்று உள்ளே விரைந்தவளுக்கு காணக் கிடைத்தது ஷரப் ஆன்ஷியின் முத்தக் காட்ச்சிதான். என்னடா நடக்குது இங்க என்ற பார்வையில் அவர்களை பாத்திருந்தாள் அனிதா.

 

சாருலதாவின் குடும்பத்தாரை அடையாளம் கண்டு கொண்டு ஒவ்வொருத்தருக்கும் துப்பாக்கி ஏந்திய ஒருவன் வீதம் அவர்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருக்க, அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரியாமல் திகைத்து நின்றனர்.  

 

வ்ருஷாத்தின் பக்கம் ஷரப் கையை நீட்ட ஒரு பொன்தாலி ஷரப்பின் கையில் வைக்கப் பட அதை ஆன்ஷியின் கழுத்தில் கட்டினான்.

 

ஆன்ஷி தருணை காதலிக்கிறாள் என்றறிந்திருந்தவனுக்கு அவளை கொலைசெய்யும் அளவுக்கு கோவம் இருந்தாலும் வ்ருஷாத்திடம் கோவத்தில் பேசினாலும் அவனின் காதல் கொண்ட மனமோ அவளை வதைக்க இடமளிக்க வில்லை. கல்யாணம் ஊரில் உன் மக்கள் முன் நடக்க வேண்டும், அவள் உன் சொந்தமாகாமல் அவளை அழைத்து செல்லமுடியாது என கெக்கலிக்க என்ன செய்வதென்று புரியாமல் இருந்தவனின் கண்கள் டிவி யின் பக்கம் செல்ல அதிலே தாலி கட்டும் திரைப்பட காட்ச்சி ஒளி பரப்பப் பட உதடு வளைத்து புன்னகைத்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அக்கணம் முடிவு செய்திருந்தான்.

 

ஆனால் அங்கு வந்ததிலிருந்து ஆன்ஷி அவனை  பார்த்த பார்வையும் அவனுடைய வன்மையான முத்தத்தில் கரைந்து உருகியதும் அவளும் தன்னை விரும்புகிறாள் என புரிந்துக் கொள்ள போதுமானதாக இருக்க இவள் எனக்கானவள் என்ற மனநிம்மதியினூடே தாலியை கட்டி முடித்தான்.

 

யாரையும் எதிர் பார்க்காது ஷரப் ஆன்ஷியின் கை பிடித்து நடக்க ஆன்ஷி அசையவில்லை. என்ன என்று ஷரப் திரும்பும் போது இவ்வளவு நேரமாக அங்கே நடப்பதை தனது புலியை போன்ற கூர்மையான கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்த விஷ்வதீரன் ஆன்ஷியி நடப்பவைகளுக்கு மறுப்பு தெரிவிக்காது இருக்க அமைதி காத்தவன். ஷரப்புடன் அவள் செல்லாது இருக்க “ஒருவேளை விருப்பம் இல்லையென்றால்” என தோன்ற ஷரப் திரும்பும் போது அவனின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தான்.

 

அதைக் கண்டு ஆன்ஷி பதை பதைத்து ஷரப்பின் பக்கம் சென்று அவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ள தனது நெற்றிப் பொட்டில் வைத்த துப்பாக்கியை கண்ணுயர்த்தி பார்த்தவன் “யாரடா அது” என்று பார்க்க ஷரப்பின் ஆட்கள் சிலர் துப்பாக்கிகளை விஷ்வதீரனின் புறம் நீட்டி இருந்தனர்.

 

“ஹேய் யு…. நீ அவன் தானே மூனோ, நாளோ வருசத்துக்கு முன்னாடி டில்லில காதல் தோல்வியால் பார்ல சரக்கடிச்சு கவுந்து கிடந்தவன். இப்போ எப்படி இருக்க? உன்ன சொல்லிட்டு நான் காதல்ல விழுந்துட்டேன்” என்று ஆன்ஷியை அணைத்துக் கொள்ள ஆன்ஷி விசுவாதீரனை பயப் பார்வை பார்த்தாள். ஷரப் விஷ்வதீரனுடன் பேசினாலும் துப்பாக்கியை எடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக விஷ்வதீரன் புறம் நீண்டிருந்த துப்பாக்கிகளை அகற்றுமாறு தன்னுடைய ஆட்களுக்கு கையாலேயே சைகை செய்து உத்தரவிட்டான்.

 

ஷரப்பின் கேள்விக்கு பதில் சொல்லாது ஆன்ஷியின் புறம் திரும்பியவன் “நீ இவான விரும்புரியாமா?” என்று கேக்க

ஆன்ஷி  அவசரமாக “ஆமாம்” என்று தலையாட்டினாள்.

அவளின் செய்கையில் புன்னகை வர துப்பாக்கியை எடுத்தவன் “ஐம் விஷ்வதீரன் ADGP ஒப் கோயம்புத்தூர் பட் நவ் டிஜிபி யா   ப்ரோமொஷனோட திருச்சி ட்ரான்ஸ்பர் கிடைச்சிருச்சு” என்று ஷரப்புக்கு தகவலாக சொன்னவன் சிரித்தவாறே “ஹாப்பி மேரீட் லைப்  டா” என்று நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்த காலேஜ் நண்பனை கட்டித்தழுவினான்.

 

{நல்லா வருவீங்கடா நீங்க ரெண்டு பேரும். டேய் ஷரப் அவன் கொள்ளுப் பாட்டித் தாண்டா குடும்ப மானத்த வாங்கிட்டு ஓடிப் போனவங்க, அவங்க போனதுல உன் கொள்ளுத்  தாத்தாவும் சைதன்யனின் கொள்ளுத்  தாத்தாவும் சண்டை போட்டு அவரு வாளை தூக்கிட்டு போய்ட்டாரு. இது தெரியாம நீ சைதன்யன போட்டுத்தள்ள பாக்குறியே! இந்த உண்மை தெரிஞ்சா தீரான நீ என்ன பண்ணுவாயோ}

 

அங்கே நடப்பவற்றை வருகை தந்தவர்கள் வேடிக்கை பாத்திருக்க, பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருப்பது மட்டுமல்லாது வந்ததிலிருந்து ஹொலிவூட் பட ரேஞ்சுக்கு கலக்கிக் கிட்டு இருக்கும் ஷரப்பை பார்த்து ஈர்க்கப்பட்ட தருண் துப்பாக்கி முனையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து ஆன்ஷியின் புறம் திரும்பிய “இவர்தான் காக்க காக்க ஹீரோ சூர்யாவா?” என்று கண்சிமிட்ட

“ஆமாம்” என்று ஷரப்பின் கைவளைவினில் இருத்தவாறே ஆன்ஷி வெக்கப் பட்டு தலையசைக்க

“நல்லவேளை பாஸ் என்ன வந்து காப்பாத்திட்டீங்க  இல்லனா இங்க ஒரு கொலையே நடந்திருக்கும்” என்றவனின் பார்வை அனிதாவை தொட்டு மீண்டது

 

ஷரப்போ  “உன்ன கொல்லணும்னு தாண்டா இருந்தேன் என் தேவதை என்ன லவ் பண்ணுறதால தப்பிச்சிட்ட” என்று சொல்ல ஷரப் கிண்டல் பண்ணுவதாக நினைத்து சிரித்தான் தருண்.

 

அங்கே நடப்பவற்றை கையாலாத தனமாக பார்த்திருந்த சாருலதா விஷ்வதீரன் ஷரபின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தபோது சிறு நம்பிக்கை தோன்ற உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள். விஷ்வதீரன் ஷரப்பின் நண்பன் என அறிந்து அதிர்ச்சியடைந்து மீளமுன் தருண் அவர்களுடன் கூட்டு சேர துப்பாக்கியை பிடித்திருந்தவனை தள்ளிக் கொண்டு வந்து ஆன்ஷியை சாட ஆரம்பித்தாள்.

 

“அதானே  பாத்தேன் அம்மா போலத்தானே பொண்ணும் இருப்பா அம்மா எவன் கூடயோ ஓடிப் போனா பொண்ணு கல்யாணம் அன்னக்கி எவனையோ வரவச்சி ஓடிப் போறா. எங்க குடும்ப மானத்தை வாங்கவென்றே வந்து சேர்ந்திருக்கா பாரு மூதேவி, மூதேவி நல்லா இருப்பியா நாசமா போகப் போற. விளங்குவியா நீ ? நல்ல இருக்க மாட்டடி நீ. அத நான் பாக்கத்தானே போறேன்” கண்டபடி சாபம் விட

“அம்மா” என தருண் கத்த ஷரப்பை கண்டத்திலிருந்து தன்னை மறந்து இருந்த ஆன்ஷி சாருலதாவின் பேச்சில் உண்மை உரைக்க கண்ணீரில் கரைந்தாள்.

 

ஆன்ஷியின் கண்களில் வழியும் கண்ணீரை சகிக்காது ஷரப் சாருலதாவின் அருகில் செல்ல அவனை விஷ்வதீரன் தடுத்தான்.

 

“என்னடா அம்மா ஊரைக்கூட்டி உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா எவனோ வந்து நீ கல்யாணம் பண்ண வேண்டிய பொண்ண கல்யாணம் பண்ணுறான்.  அவனை வெட்டி பொலி போடாம நீ என்னடானா அவன் கூட கொஞ்சிக் குலாவிக் கிட்டு இருக்க. இப்போ யாரு உனக்கு பொண்ணு தருவா? எப்படி உன்கல்யாணம் நடக்கும்? ராசியில்லாதவன்னு யாரும் சொல்ல மாட்டாங்களா?” அடுக்கிக் கொண்டே போக

 

“அனி உன் மாமியார் லேசுப்பட்டவங்க இல்ல போலயே” அனிதா வாயை பிளக்க

 

தங்களது குடும்ப மானத்தை ஏலம் போடும் மனைவியை சிவதாஸ் வெறுப்பாய் பார்க்க முதியவர்கள் இருவரும் ஆன்ஷி ஷரப்பை விரும்பித்தான் மணந்தாள் என புரிய அமைதி காத்தனர்.

 

அன்னை போன் மூலம் அண்ணனின் திடீர் திருமணத்தை பத்தி சொன்னதும் தங்களது மாமியார் பேசிய பேச்சுக்கள் தருணத்தில் முல்லை, மல்லிகைக்கு நியாபகத்தில் வர பிறருக்கு சாபம் கொடுக்கும் மாமியார். அவர் சொன்னது போல் தருணின் வாழ்க்கை அமைந்து விடுமோ என்று  அஞ்சினர்.

 

“இப்போ என்ன உனக்கு என் கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே!” என்றவன் தட்டில் இருந்த தாலியை எடுத்து அனிதாவின் அருகில் சென்றவன் அவளை ஏறிட்டு பார்க்காமலேயே அவளுக்கு தாலியை கட்டி விட அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க

 

“இங்க இருக்குற பொண்ணுங்களிலேயே இவதான் பாக்க நல்லா இருந்தா அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பொண்ணுக்கு பிடிக்குதோ இல்லையோ தாலி கட்டுறது எங்க குடும்பத்துக்கு ஒன்னும் புதுசில்லயே!” தனது பெரிய  அண்ணியின் நிலையை நன்கு உணர்ந்தவனாக சொல்ல அருண் தலை குனிய, மல்லிகையின் கண்களில் நீர் கோர்த்தது.

தருண் சொன்னதை கேட்டு விஷ்வதீரனின் நெஞ்சிலும்  சுளீர் என வலியெடுத்தது.

 

தன்னிடம் அனுமதியும் கேக்காது தாலியை கட்டியதும் இல்லாமல் தன்னை யாரென்றே அறியாதவன் போல் பேசுபவனை கொல்லும் வெறியில் முறைத்தாள் அனிதா.

 

சிவதாஸிடம் சென்ற விஷ்வதீரன் ஏதோ பேச கல்யாணத்துக்கு வந்த அனைவரையும் சாப்பிட்டு போகும் படி அழைக்க சிலர் சாப்பிடச்செல்ல, சிலர் வெளிநடப்பு செய்தனர்.

 

அனிதாவிடம் வந்த சாருலதா தெனாவட்டாக பேச “ஐ எம் ஏ  டாக்ட்டர்” விஷ்வதீரனை பார்த்து “கட்டாய தாலி கட்டியதற்காக மிஸ்டர் தருண் மேல புகார்  கொடுக்குறேன். என் புருஷன அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளுங்க, கூடவே என் மாமியாரையும் சேர்த்து தள்ளுங்க என்ன தரக்குறைவான பேசியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் கேஸ் போடுங்க” கடகடவென ஒப்பிக்க அரண்டு போனாள் சாருலதா. விஷ்வதீரேனோ அனிதா சொன்ன என் புருஷனிலேயே அவள் சாருலதாவை மிரட்டுவதாக புரிந்த்துக் கொண்டவன் அசையாது இருந்தான்.

 

சாருலதாவை அனிதா அடக்கிவிடுவாள் என்ற நம்பிக்கை வீட்டார் அனைவருக்கும் தோன்ற ஷரப்பின் அருகில் வந்த தாத்தா பாட்டி இருவரும் அவனின் கையை பிடித்துக் கொண்டு ஆன்ஷியை நன்றாக பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ள

“அவ என் உயிர் என்ன விட அவளை யாராலும் நல்லா பார்த்துக் கொள்ள முடியாது” என சொல்ல அகமகிழ்ந்தனர் முதியவர்கள் இருவரும். {அவன் சொன்னதை காப்பாற்றுவானா?}

 

ஷரப் அவர்களிடம் விடை பெற்று செல்ல எத்தனிக்க மீண்டும் வாயை திறந்தாள் சாருலதா

” ஆன்ஷி உன் பேரிலுள்ள சொத்தை எழுதி தந்துட்டு போ”

என்ன சொத்து என்று ஆன்ஷி சையையாலேயே கேக்க வந்ததிலிருந்து அவள் ஒரு வார்த்தை பேசவில்லை என அப்பொழுதுதான் உரைத்தது, அவளை அதிர்ச்சியாக பார்த்தான் ஷரப்.

Advertisement