Advertisement

                                                      அத்தியாயம் 10

பாய் ஆள தூக்கிட்டேன்” வ்ருஷாத் சந்தோசமாக சொல்ல

யாரடா? இருக்குற பிரச்சினை பத்தாதென்று இவன் வேற பிரச்சினை பண்ணிக்கிட்டு” ஷரப் ஆன்ஷியின் ஓவியத்தின் முன் அமர்ந்துக் கொண்டு அதை கண்சிமிட்டாமல் பார்ப்பதை முழு நேர வேலையாக வைத்திருக்க அதை  தொந்தரவு செய்யும் விதமாக வ்ருஷாத் வரவே எரிச்சலாக சொல்ல

 

அவன் தான் பாய் அந்த மினிஸ்டரோட பினாமி” விருட்டென எழுந்த ஷரப்

எங்கடா அவன்?”

பின்னாடி உள்ள சீக்ரட் ரூமுல” வ்ருஷாத் சொல்லி முடிக்க முன் அவ்விடத்தை நோக்கி வேகமாக நடந்தான் ஷரப்.

 

அறையில் மயங்கி கிடந்தவனை தண்ணீர் குளியலால் எழுப்பி இருக்க ஷரப்பை கண்டு நடு நடுங்கிப் போனவனாக கீழே அமர்ந்திருக்க அவன் முன்னாடி ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த ஷரப்

 

நீ வாயத்தொறந்தா உசுரோட இருப்ப, நா கேக்குற எல்லாத்துக்கும் பதில் சொல்லிடு உன்ன விட்டுடுறேன், என்னமோ தெரியல இப்போ எல்லாம் யாரையும் டோசேர் பண்ண பிடிக்கல, யாராச்சும் கத்தும் போதோ, கதறும் போது அவ என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா” என்று புலம்பியவன்.சரி நீ சொல்லு அந்த லுச்சா  மினிஸ்டருடைய சொத்து மதிப்பு என்ன? எங்ககெங்க எல்லாம் இன்வெஸ் பண்ணி இருக்கான்?  எங்ககெங்க பணத்தை பதுக்கி இருக்கான்?  எங்ககெங்க நிலம் வாங்கி இருக்கான்? எந்ததெந்த பேங்க்ல பணத்தை போட்டு வச்சிருக்கான்? அக்கவுண்ட் டீடைல்ஸ்? இன்னும் என்னெல்லாம் இருக்கோ அத்தனையையும் சொல்லிடு” ஷரப் கேள்விகளை அடுக்க அவன் ஷரப்பை பயப்பார்வை பாத்திருந்தான்.

 

வ்ருஷாத் டேய் உன் பேரென்ன பிரதாப் மோஹி யா? ஷாஹியா? உனக்கு ரெண்டு பொண்ணு, டில்லில படிக்கிறாங்க இல்லையா?” ஷரப் பக்கம்  திரும்பி பாய் நம்ம வைஷ்ணவி தங்கி இருக்குற பிளாட் தான்”

 

நல்லதா போச்சு உன் பொண்ணுங்க கதய பக்காவா அவ ஸ்டைல்ல  முடிச்சிடுவா” ஷரப் அவனை கூர்மையாக பார்த்து சொல்ல

மினிஸ்டரின் பையன் யாதவை வைஷ்ணவி என்னென்ன பண்ணினாள் என்று மினிஸ்டரின் வாயால் அறிந்துக் கொண்டிருந்த பிரதாப்

ஐயோ என் பொண்ணுங்கள எதுவும் பண்ணிடாதீங்க, அவங்க வாழவேண்டிய பொண்ணுங்க” என்று கெஞ்ச

 

எந்த ஒரு மனிதனின் கெஞ்சலும் அசைக்க முடியாத ஷரப்பின் இதயம் பிரதாப் பொண்ணுங்களுக்காக கெஞ்சியது ஒரு கணம்  கொஞ்சம் அசைக்க உடனே மனதை திடப் படுத்திக்க கொண்டவன் விட்டுடலாம், விட்டுடலாம் நீ உண்மையா சொன்னா விட்டுடலாம் உன்னையும் சேர்த்து”

 

ஷரப்பை நம்ப அவன் தயாராக இல்லை. தனது உயிர் போனாலும் பரவால்ல பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிட கூடாதென்று நினைத்தவன்

நா உண்மையா சொன்னா அந்த மினிஸ்டர் என்னை கொன்று விடுவான். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என் பசங்க பாதுகாப்பாய் இருந்தால் போதும்” ஒரு நல்ல தந்தையாக பேச

உண்மையை பெற்றுக் கொண்ட பின் கொன்று  விடுவதே ஷரப்பின் நோக்கமாக இருக்க ஒரு தந்தையாய் பிரதாப் பேசியது இக் கணம் அவனுக்கு பிடித்துப் போனது. காதல் கொண்ட அவன் மனம் ஆன்ஷிக்கும் இவனை போல் ஒரு தந்தை இருந்திருக்கலாமோ? என்று எண்ணியது மறுக்கமுடியாத உண்மை.

 

பிரதாப்பை சில நொடிகள் கண் இமைக்காமல் பாத்திருந்தவன் ” உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் எதுவும் ஆகாது. வெளிநாட்டுல செட்டில் ஆக என்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சு தரேன் எனக்கு வேண்டியது உண்மைகள் மட்டும்” அழுத்தமாக ஷரப் சொல்ல

 

அவனை நம்பாத பார்வை பார்த்த பிரதாப்  ” என் சூட்கேசில் என் டயரி இருக்கு எல்லாம் கோட் வர்ட்ல எழுதி வச்சிருக்கேன். இவங்க என்ன கடத்த போகும் போது அத ஒரு வீட்டின் வாட்டர் டேங்கில் போட்டுட்டேன்” அது எந்த இடம் என்று சொல்ல வ்ருஷாத் விரைந்தான்.

 

*****

வ்ருஷாத் கொண்டு வந்த சூட்கேஸை திறந்தவனுக்கு கையில் கிடைத்ததோ ஆன்ஷியின் கல்யாண அழைப்பிதழ். அதை வெறித்தவாறே ஷரப் இருக்க வ்ருஷாத் பறிக்காத குறையாய் பிடுங்கி பார்க்க தருணும், ஆன்ஷியும் அழகான புன்னகையுடன் முன் பக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

டேய் எங்க இருந்து இது உனக்கு கிடைச்சது” வ்ருஷாத் பிரதாப்பின் சட்டையை பிடித்திருக்க

 

கோயம்புத்தூரில் ஒரு பிசினஸ் விஷயமா போனப்ப ஒரு லேடி இன்வைட் பண்ண வெட்டிங். மினிஸ்டர் அவசரமா வர சொன்னதால் போகல, பொண்ணு சும்மா தேவதை மாதிரி இருக்கா, லவ் மேரேஜ்னு பையனோட அம்மா சொன்னாங்க” அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் என்பதை இவர்கள் கேக்கும் முன்பே எல்லாவற்றையும் கொட்டினான் பிரதாப்.

 

போட்டோவை கண்டு திக் பிரம்மை பிடித்திருந்த ஷரப் “எப்போ கல்யாணம் நடந்தது” நெஞ்சை இறுக்கும் வலியோடு கேக்க

கல்யாணம் இன்னும் ரெண்டு நாள்ல” பிரதாப் சொல்லி முடிக்கும் முன் அவசர அவசரமாக அழைப்பிதழை பிரித்து படித்தவன்

வ்ருஷாத் குயிக் நாம இப்போவே கோயமுத்தூர் போறோம்” ஷரப் வேகமாக நடக்க வ்ருஷாத் அவனை பின் தொடர்ந்தான்.

 

இரண்டு மணித்தியாலங்களுக்குள் எல்லாம் தயார் செய்த ஷரப் தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான்.

அவன் தயாராகும் போது k7 அழைக்கவே அவரை கோயம்புத்தூர் வரும் படி உத்தரவிட்டவனின் முகத்தில் யொத்தா கிடைத்த சந்தோசம் கொஞ்சமேனும் இருக்கவில்லை. முகம் இறுகி கல்போல் இருக்கா அவனின் கோவத்தின் அளவு வ்ருஷாத்தை கூட நடுங்க வைத்தது.  

 

தனி விமானத்தில் வரும் போது கல்யாண அழைப்பிதழலில் உள்ள ஆன்ஷியின் புகைப்படத்தையும், பெயரையும் கண்சிமிட்டாமல் பார்த்திருந்தவனின் மனம் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. “ஏன்டி இப்படி பண்ணின போயும் போயும் இவன போய் லவ் பண்ணி இருக்க, எனக்கென்ன குறை, நேர்லவந்து பேசிக்கிறேண்டி, அவனை வெட்டி போலி போட்டாவது உன்ன கல்யாணம் பண்ணுறேன் டி” மனம் ஆரவேயில்லை மனதுக்குள் ஒரு பிரளயமே நடக்க வ்ருஷாத்துடன் கூட அதிகம் பேசவில்லை. “என்ன செய்ய போறோம் ” என்ற அவனின் கேள்விக்கும் அமைதிகாத்தவன் கோயம்புத்தூர் வந்திறங்கியவுடன் செய்த முதல் வேலை ஆன்ஷி கல்யாணம் பண்ண போகும் பையனை பற்றியும் அவனின் குடும்பத்தை பற்றியும் அறிந்துக் கொள்ள ஒருவனை ஏற்பாடு செய்தது.

 

பாய் k7  வந்திருக்கிறார்” வ்ருஷாத் அவரை அழைத்துவந்து அமரச்சொல்ல ஷரப்பும் வந்து அவரின் முன்னாள் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.

 

அதே வாள் தானே பேஸ்புக்கில் போட்டோ போட்டு ரெண்டு மாசத்துக்கு மேலாகுது யார் போட்டா?  எப்போ எடுத்த போட்டோ?  எல்லாம் சரியா வெறிபாய் பண்ணிடீங்கள்ல எந்த தப்பும் நடக்க கூடாதென்று தான் பொறுமையா விசாரிச்சு காய் நகர்த்துறேன்.  தட்ஸ் மை ஸ்டைல். என கர்வமாக புன்னகைத்தவன். அவன் முன் இருந்தவரை கேள்வி கணைகளால் துளைத்துக் கொண்டிருக்க அவனுடைய மொபைல் அலறியது பேசிக் கொண்டிருந்தவரை அமைதியாக இருக்கவும் என சைகை செய்தவன் காலை எடென்ட் பண்ணினான்.

 

சார் அந்த பொண்ணு கல்யாணம் பண்ண போறது சொந்த மாமா  பையன, அந்த பையனோட அம்மா இங்க செல்வாக்கானவங்க அவங்களே தான் சொல்லி இருக்காங்க லவ் மேரேஜ்னு அதுல எந்த சந்தேகமும் இல்ல”

 

மறுமுனையில் சொல்லப் பட்ட விஷயத்தை கேட்டு கொதித்தவன் “வோ மெரி ஹேய் சிரப் மெரி  ஹேய்” {she  is mine   only mine } . நான் அவளை அடைந்தே தீருவேன்,  யார் தடுத்தாலும் ஏன் அவளே தடுத்தாலும்” என கர்ஜனை குரலில் கூறியவன் போனை அணைத்து முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன் K7 நோக்க அவர் சொன்னவற்றை உள்வாங்கியவன்.

 

ஐ நீட் மை ஸ்வார்ட்  ப்ரோம் தேம் அண்ட் ஆல்சோ கோயி ஸ்மால் டீடைல் பீ மத் சோடியே {ஒவ்வொரு சின்ன டீடைலாயும் விடாதீங்க}  என் பார்வைக்கு எல்லாம்  எல்லா……….மேவரனும்.  அந்த எல்லாமே யை சொல்லும் போது அவரை  அழுத்தமாக பார்த்து கூறி என்ன பண்ணனும் எப்ப பண்ணனும் நா சொல்லுறேன் ஐ ஹாவ் லிட்டில் ஒர்க் ஹிய முடிச்ச உடனே சென்னை கிளம்பிடுவேன் நீங்க இப்போ சென்னை போய் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க நா வரேன்” என குரூரமாய் புன்னகைத்தான்.

 

பல காலமாய்   ராஜஸ்தானை புரட்டிப் போட்டு  மூளை முடுக்கிலும் தேடிய வாள்  இருக்கும் இடம் அறிந்தவன் மகிழ முடியாமல் அவன் நெஞ்சில் சுமப்பவளுக்கு திருமணமாம் அதுவும் காதல் திருமணம் என்றதும் சென்னை செல்லாது கோயம்புத்தூர் வந்திறங்கியவன் அவளின் மேல் கொலைவெறியில் இருந்தான்.

 

காதல் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகிறது இரண்டு தலைமுறையாய் தேடும் வாளை விட தன்னை வேண்டாம் என்று சொன்னவள் தான் முக்கியமென அவளை அடைவது தான் குறிக்கோளாலென அவளை கடத்தியாவது அவளை அடைய முடிவு செய்தான். அவனுக்கு தேவையானதை எவ்வழியிலும் அடைந்தே தீருபவன்.

 

என் பணத்தைப் பார்த்து அழகப்ப பார்த்து என் படுக்கைக்கு வராத பெண்ணும் இல்ல  என் கன்னக்குழியில விழாத பெண்ணும் இல்லடி என்னையே வேணாம்னு சொல்லுறியா வரேண்டி வந்து உன் காதலன் முன்னாடியே உன்ன தூக்குறேன்டி” வெறிகொண்ட வேங்கையாய் அறையினுள் அங்கும் இங்கும் நடை பயின்றான். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்தவன் வ்ருஷத்தை ஏறிட்டான்.

 

வ்ருஷாத் யொத்தாவும் கிடைச்சிருச்சு என் கல்யாணம் எங்க ஊர்ல என் சொந்த பந்தங்கள் முன்னாடி தான் நடக்கணும், எங்க மூதாதையர்கள் வாக்கு கொடுக்க வாளில்லாம கூனிக்குறுகி கல்யாணம் பண்ணும்  போது இழிவா பார்த்து கேலியா சிரிச்ச ஊர் மக்கள் முன்னாடி தான் என் கல்யாணம் நடக்கணும்”

 

பாய் அண்ணி வேறொருத்தன விரும்புறாங்க அவங்கள கல்யாணம் பண்ணாம எப்படி கூட்டிட்டு போக போறீங்க?”

 

அவனை கொன்னுட்டு தூக்குவேன், அவள மாதிரியான பொண்ணுங்களுக்கு கற்பு, மனம் எல்லாம் ரொம்ப பெரியவிஷயம். இல்லையா?” ஷரப் குரூரமாக புன்னகைத்தவாறே சொல்ல.

 

பாய்” என அலறியே விட்டான் வ்ருஷாத்.

*****

 

சாருலதா கல்யாணத்தை வெகு விமர்சையாக செய்ய இந்த இரண்டுவாரங்களில் மெனக்கிட்டு கல்யாணத்தை ஒரு மண்டபத்தில் வைக்காமல் ஆங்கிலேயர் போல் ஒரு திறந்தவெளியில்  ஊரிலுள்ள எல்லாரும் கலந்து கல்யாணத்தை பார்க்க கூடிய விதமாக கல்யாண மேடை அமைத்து, அலங்காரம் எல்லாம் தூள் பறக்க,நிறைய செலவு பண்ணி செய்திருந்தார்.

 

அன்று காபி ஷாப்பில் தருண் ஆன்ஷியை பார்த்து காதல் மொழி பேசியதாக எண்ணியவள் இருவரையும் கவனிக்கலானாள். சாருலதா எதையும் அலசி ஆராய்ந்து செயல் படுவாள். இருவரும் காதலிப்பதாக அவளின் கழுகுக் கண்களுக்கு  தென்படவில்லை. அப்போ  தருண் வேறு யாரையோ  விரும்புறானா?. அருண்,வருண் மணந்திருப்பது அக்கா தங்கைகளை அவர்கள் ஒன்று கூடி தருணை விட்டுவிடக் கூடாது, அது போல் ஆன்சியின் சொத்தும் வேண்டும். இதற்க்கு ஒரே வழி தருண், ஆன்ஷி கல்யாணம். என முடிவுசெய்தவள். மாமனார், மாமியாருடன் நயனமாக பேசி சம்மதம் வாங்கியது மட்டுமல்லாது அழைப்பிதழை தானே எல்லாருக்கும் வாங்கியவள்  யாரும் ஆன்ஷியின் சொத்துக்காக அவளை தன் குடும்பம் ஏற்றதாக பேசி விடக் கூடாதெனவும் தருண் ஆன்ஷியை தான் காதலிப்பதாக அனைவருக்கும் பறைசாற்றி தருணையும் தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்து தன்னை மீறி எதுவும் செய்து விடாத படி இருக்க இது காதல் கல்யாணம் என அறிவித்திருந்தாள்.

 

மணவறையில் தருண் ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்க மணமகளை அழைத்துக் கொண்டு வரும் படி ஐயர் உத்தரவு பிறப்பிக்க ஆயிரம் பேர் அமர்ந்திருந்த அந்த திறந்தவெளியில் நடக்கும் கல்யாணத்தை சுற்றி வளைத்தனர் ஆயுதம் ஏந்திய நூறு பேர். வானில் ஹெலிகாப்டர் விமானம் வட்டமடிக்க அனைவரும் ஆவென மேலே பாத்துக்க கொண்டிருக்கும் போது விமானம் தரையை தொடும் முன்னே அதிலிருந்து குதித்திராங்கினான் ஷரப் சௌதாகர்.

Advertisement