Advertisement

                                             அத்தியாயம் 17

வ்ருஷாத்துடன் புறப்பட்டு சென்ற ஷரப்பின் மனம் தாறுமாறாக அடிக்க

“வண்டியை  திருப்பு” என்றவன் விருந்தினர் மாளிகையை ஐந்தே நிமிடத்தில் வந்தடைந்தான்.

வாயிலை திறந்து விட்ட காவலாளியின் எள்ளல் பார்வையை கண்டு யோசனையாக ஆன்ஷியை காணச்சென்றவனுக்கு அங்கே சில்பா ஆன்ஷியிடம் குரல் உயர்த்தி  பேசுபவைகளை காதில் விழ நடையை எட்டிப் போட்டான்.

சில   நிமிடங்களுக்கு  முன்

ஆன்ஷி சோகமே உருவான மெழுகுச்சிலை போல் பெல்கனியில் அமர்ந்து வானை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“நீ தானா அது ஷரப் கூட்டிட்டு வந்திருக்கும் புது கிராக்கி, பாக்க அம்சமா தான் இருக்க” சில்பாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய  ஆன்ஷி “யார் இவள்” என்று யோசனையாக பார்க்க

“அப்படி ஏன் கிட்ட இல்லாதது  உன் கிட்ட என்ன இருக்குனு உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தான்” என்று அவளை சுத்தி சுத்தி வந்து பார்த்தவள்.

ஆன்ஷி பேசாது இருக்கவே கடுப்பான சில்பா “என்ன பாக்குற இந்த விருந்தினர் மாளிகை எனக்கு அத்துப்படி இதோ இந்த கட்டிலில் தான் நானும் ஷரப்பும் கூடிக்குலாவினோம்” என்று அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக சொல்ல

 ஷரப்பின் வாயாலேயே அவனுடைய ஆட்டமெல்லாம் கேட்டிருக்க சில்பா பேசியதில் ஆன்ஷி அதிர்ச்சியடையவில்லை. அவளை அருவருப்பாய்  பார்த்தவள், மனதுக்குள் குமுறினாள். தனது அத்தை சாருலதா கூறியது போல் தன்னையடையவே ஷரப் தாலியை கட்டியதாக நினைத்தவள். முழு சமஸ்தானத்துக்கும் இவள் என் மனைவி என்று அறிமுகப் படுத்தியதை வசதியாக மறந்தது போனாள்.

சில்பாவை வெறித்து பாத்திருந்தாலே  ஒழிய பேச முடியாத ஆன்ஷி கையையாவது உயர்த்தி தடுக்கவில்லை. தனது காதலும், கணவனும் பொய்த்து போனதை எண்ணி உள்ளுக்குள் மறுக அவளை வெற்றுப் பார்வை பார்க்கலானாள்.  

அதில் கோபமடைந்த சில்பா ஆன்ஷியை வாயால் சாடி விரட்ட முடியாது என்று தோன்றவே ஆன்ஷியின் கழுத்தை இருகைகளாலும் இறுக்கினாள்.

ஆன்ஷி மூச்சு விட முடியாமல் தடுமாறும் போதுதான் ஷரப் உள்ள வந்ததே!

தனது உயிரையே பறிக்க ஒருத்தி உள்ளே வந்து இருக்கிறாள் என்று கண்டவனுக்கு அது சில்பா என்றோ, ஒரு பெண் என்றோ தோன்றவில்லை. தோன்றியதெல்லாம் ஆன்ஷி, ஆன்ஷியை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே.

ஆன்ஷி மூச்சுக்காக தவிக்கும் ஒவ்வொரு நொடியும் தனது மூச்சு நின்று விடும் போல் இருக்க ஷரப்பினுள் தூங்கிய ராட்சஷன் எழுந்துக்கொண்டான்.

அவனின் கண்கள்  பாத்திருந்தது ஆன்ஷியை மாத்திரமே கையோ அங்கே தொங்கி கொண்டிருந்த வாளை உருவி சில்பாவின் கழுத்தை நோக்கி வீசி இருக்க தலை துண்டிக்கப் பட்டு தலை வேறு முண்டம் வேறாக அவள் சரிய

குருதியை பார்த்த அதிர்ச்சியில் ஆன்ஷியின்  கண்களுக்குள் அன்னை அன்று குருதியில் நனைந்து பரிதாபமாக விழுந்து இருந்தது தெரிய “அம்மா” என்று கத்தியவாறே மயங்கிச் சரிந்தாள்.

அன்று விஷ்வதீர் சௌதாகர் ஒரு பெண்ணின் மானம் காக்க சாகும் தருவாயில் கூட கையில் இருந்த வாளை வீசி ஒருவனை கொன்றார்.

இன்று தன் மனைவியின் உயிரை காக்க ஷரப் வாளை வீசியது குற்றமா? அல்லது சில்பா பெண் என்பதால்  இருவரையும் விளக்கி சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டுமோ?

ஒரு சாதாரண மனிதன் அதைத்தான் செய்திருப்பான். ஷரப்போ வீர பரம்பரையின் இன்றைய வாரிசு. அவனது குருதியில் வீரம் கலந்திருக்க தவறான வழி காட்டலால் அரக்கனாக மாறி இருந்தவன். தன் மக்களை காக்க உயிர் கொடுக்கும் வீரனின் குருதி அவனை மனைவியை காக்கும் படி தூண்டி விட்டதா? அவனுள் தூங்கி கொண்டிருந்த அரக்கன் விழித்துக் கொண்டானா? ஆன்ஷி சொன்னால் கேட்டிருப்பான். பேசா மடந்தையான அவளுக்கே ஆபத்து எனும் போது யார் சொல்லி அவன் கேப்பான்?  

ஷரப்பின் பின்னால் வந்த வ்ருஷாதுக்கும் இது பெரிய அதிர்ச்சியே! வாள் வீச்சில் தேர்ச்சி பெற்றவனிடம், கை தேர்ந்த வீரனே சண்டையிட அஞ்சும் போது நிராயுதபாணியாக நின்றவளின் நிலை?

ஆன்ஷி மயங்கி விழுவதை கண்டவன்  வாளை கீழே வீசி விட்டு அவளை அணுகி தூக்கியவனின் முகம் இறுகி இருந்தது.

“பாய் அண்ணிய கீழ உள்ள ரூமுக்கு கூட்டிட்டு போங்க நா இங்க க்ளீன் பண்ணிடுறேன்” என்ற வ்ருஷாத் ஆட்களை அழைத்து சில்பாவின் உடம்பை அப்புறப் படுத்தியவன் அந்த அறை இருந்தது போல் சுத்தம் செய்வித்து  மாற்றினான்.

ஷரப்பின் கெட்ட நேரம் அவன் ஆன்ஷியை தூக்கிச்சென்றது அன்று அவன் ஆன்ஷியை ஹரிலாலிடமிருந்து காப்பாற்றி கூட்டிக் கிட்டு வந்த அறைக்கு. ஷரப்பின் உண்மை  முகம் கண்டு அவனிடமிருந்து ஒதுங்கியவள் அந்த அறையை விட்டு வேறு எங்குமே செல்லாது அவ்வறையிலேயே அடைந்து கிடக்க இன்று நடந்த சம்பவத்தால் அவளை கீழே உள்ள இந்த அறைக்கு கொண்டுவந்தவன் அவளை சுத்தம் செய்து  அவளிடமிருந்து அசையவே இல்லை.

கண்ணை விழித்த ஆன்ஷி தன்னருகில் தன்னை கட்டிக்க கொண்டு தூங்கும் ஷரப்பை கண்டு புருவம் சுருக்கியவள் அறையை பார்க்க விதிர்விதைத்து போனாள்.

“அப்போ அன்று என்னை தூக்கிட்டு வந்தவன் ஷரப்பா? என் அப்பா என்ன வித்தது இவன் கிட்டயா? அது தெரியாம இவனையே காதலிச்சு ஏமாந்தது மட்டுமல்லாது அவன் கிட்டயே வந்து மாட்டிக் கிட்டேன்” என்று கலங்கியவள்

மேலே அறையில் வெட்டுண்டு இறந்த பெண்ணின் முகம் நியாபகத்தில் வர உடனே போலீசுக்கு அழைத்து தகவல் சொல்லி அவர்களுக்காக காத்திருந்தாள்.

ஷரப் கண்விழுத்து பார்க்க ஆன்ஷியை காணாது திடுக்கிட்டவன் வாசலுக்கு ஓடி வர அங்கே அவனது ஆளுயர புகைப்படத்தின் முன் நின்று அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆன்ஷி.

“என்ன பேபி அசல் இங்க இருக்க, நகல்  அங்க போய் இப்படி சைட்  அடிக்கிற” என்று அவளை பின்னால் அணைத்துக் கொள்ள வாயிற்காவலாளி வந்து போலீஸ் வந்திருப்பதாக சொல்ல புருவம் உயர்த்தினான் ஷரப்.

உள்ளே வந்தது ஹரிலாலின் அல்லக்கை தர்மேந்திரன்.

“நமஸ்தே ஷஹாப்” என்று உள்ளே வந்தவன் ஆன்ஷியை கழுகு பார்வையால் அலச பல்லை கடித்தான் ஷரப்.

“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க” என்று ஷரப் கேக்க

“நான் தான் வரச் சொன்னேன்” பதில் ஆன்ஷியிடமிருந்து வரவும் ஷரப் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

தர்மேந்திரனை பொருட்படுத்தாது ‘ஹேய் பேபி உன்னால பேச முடியுமா? இது எப்போதில இருந்து” ஆன்ஷி “அம்மா” என்று கத்தியது ஷரப்பின் காதில் விழுந்திருந்தாலும் கருத்தில் இல்லை. அவள் பேசியதில் சந்தோசமாக கேக்க

“இன்ஸ்பெக்டர் மேல ரூம்ல தான் அந்த பொண்ண இவர் வெட்டிக் கொன்னது. வாங்க காட்டுறேன் என்று அவரை அழைத்தது செல்ல” ஷரப்பால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை

ஆன்ஷி எனக்கெதிராக செயல் படுகிறாளா? அதுவும் அவளை காப்பாற்ற ஒரு கீழ்தரமானவளை கொன்னது, அவளுக்கு கொலையாக தெரிகிறதா? யோசனையாகவே அவர்களின் பின்னால் சென்றான் ஷரப்.

உண்மையில் சில்பாவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் குழம்பிப் போய் இருந்த ஹரிலாலுக்கு தர்மேந்திரன் அழைத்து விருந்தினர் மாளிகையில் ஒரு கொலையை பற்றி தகவல் வந்தது என்று சொல்லவும்

“என்னது அந்த சில்பா மனீஷ் பொண்ண கொன்னுட்டாளா?” என்று தான் ஹரிலால் கேட்டது.

“தெரியல சார் போய் தான் பார்க்கணும்” என்றவன் ஆன்ஷியை கண்டதும் அங்கே நடந்ததை ஓரளவு ஊகித்திருந்தான். ஷரப்பை கைது செய்ய போகும் ஆர்வத்தில் இருந்தவன் ஆன்ஷி சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் சென்று தான் போன் பண்ணது என்றறியாத அந்த போலீஸ் ஆன்ஷியின் பின்னழகை ரசித்தவாறே செல்ல

“நீ போட்டு இருக்கிற காக்கிசட்டையாள என் கிட்ட நீ தப்பிச்சிகிட்டு இருக்க” தர்மேந்திரனின் காதுக்குள் ஷரப் சொல்ல

அவனின் புறம் திரும்பி கேலியாக சிரித்தவன் “இன்னும் கொஞ்ச நேரத்துல லோகப்பல இருக்கப்போற நீ எனக்கு நாள் குறிக்கிறீயா” என்று  சொல்ல ஆன்ஷி அறையை அடைந்து திகைத்தவாறே நின்று விட்டாள்.

அங்கே அவ்வறை இருந்ததை போல் எந்த மாற்றமும் இல்லாது இருக்கவே அதிர்ச்சியடைந்தவள் ஷரப்பை பார்க்க

“என்னாச்சு பேபி ஏதாச்சும் கனவு கண்டியா?” என்று கேக்க கனவா? நனவா? என்று ஆன்ஷி யோசிக்க தலை கனமாக வலித்தது.

தர்மேந்திரனிடம் திரும்பியவன் “மன்னிச்சிக்கோங்க இன்ஸ்பெக்டர் என்மனைவி கொஞ்சம் நாளாவே டிஸ்டர்பா இருக்கா ஏதாச்சும் கனவு கண்டு உங்களையும் தொந்தரவு பண்ணிட்டா” என்று வாசல் பக்கம் கை காட்ட

“வந்ததுக்கு சோதனை பண்ணி பார்த்துட்டே போறேன்” என்று சில்பாவை அறையறையாக தேட ஆரம்பித்தான் தர்மேந்திரன்.

அவனை கெலிப்புன்னகையுடன் பார்த்தவன் “அவ எலும்பு வேணா எஞ்சி இருக்கும், அதை கூட சாப்பிட என் கிட்ட செல்லப் பிராணிகள் இருக்கு” என்று கண்சிமிட்ட

தர்மேந்திரனின் அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது. அதை  காட்டிக் கொள்ளாமல் சுற்றிப் பார்த்தவன் தடயம் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றமாக திரும்பினான் ஹரிலாலிடம்.

ஆன்ஷி குழம்பித் தவிக்கவே ஆன்ஷிக்கு தனிமையை வழங்கியவன் வ்ருஷாத்தை தேடித் சென்றான்.

தர்மேந்திரன் செல்வதை  உதடுவளைத்து நக்கலாக பலிப்புக்காட்டியவாறே வ்ருஷாத் இருக்க அவனருகில் வந்து தொப்பென்று ஷரப் அமரவே அவனை கேள்வியாக ஏறிட்டான் வ்ருஷாத்.

“போலீஸ்க்கு யாரு தகவல் சொன்னது”

“உங்க அண்ணி, அவ நல்லா பேசுறா” ஷரப்பின் குரலில் கவலை தோய்ந்து இருக்க

“அண்ணி ரொம்ப அமைதியானவங்க, அவங்க அம்மாவ இரத்த  வெள்ளத்துல பார்த்ததால் தான் இப்படி ஆச்சுன்னு சொன்னாங்க, இன்னைக்கி நடந்த சம்பவத்தால் அதிர்ச்சில பேச்சு வந்திருக்கும், அவங்க குணத்துக்கு போலீஸ் கிட்ட தான் போவாங்க, எங்களை மாதிரி வாள், துப்பாக்கின்னு தூக்கிக் கிட்டு போக மாட்டாங்க” வ்ருஷாத் அமைதியான குரலில் எடுத்துச் சொல்ல

“அவ என்ன விட்டு தூரமா போய் கிட்டு இருக்குறமாதிரியே இருக்கு. அன்னைக்கி ஹரிலால் அவளை தூக்கிட்டு போனப்போ  அந்த பாத் டப்புல அவள பாத்தப்போ என் உசுரே என் கிட்ட இல்ல, அப்போ உணரல அவ தான் எனக்கு எல்லாமேனு, அவளுக்கு ஆபத்து என்றாவே என் மனசு கெடந்து தவிக்குது, உடனே அவள பாக்கணும்னு துடிக்குது. அன்னைக்கி ஜீப் நின்னப்ப கூட மனசு அவள பாக்கணும்னு தவிச்சது, நான் தான் ஏதோ காதலால் இப்படி இருக்கேனு நெனச்சேன். அன்னைக்கி மட்டும் ஜீப் நிக்கலைனா  நான் தக்க சமயத்துல போய் இருக்க முடியாது.” கண்ணுக்குள் ஆன்ஷி பூஜாடியை தூக்கிப் பிடித்தது வந்து போக உடல் விறைத்தவன் “இன்னக்கி எவளோ ஒருத்தி என் பலத்த பாதுகாப்பையும் மீறி என் மாளிகைக்குள்ளேயே  புகுந்து அவ கழுத்திலயே கை வச்சி இருக்கா அத பார்த்து என் மூள அவள கொள்ள மட்டும் தான் சொல்லிச்சு. அத தான் நான் பண்ணேன்” என்று புலம்பியவன் வ்ருஷாத்தின் கையை பிடித்தவாறே “ஆன்ஷி என்ன வெறுத்துடுவாளா?” என்று கண்கள் கலங்க கேக்க வாயடைத்து போனான் வ்ருஷாத்.

காதல் எந்த மாதிரி இருக்கும் மனிதனையும் மாற்றி ஒரு பெண்ணின் அன்புக்காக ஏங்கவைக்கும். என்ற உண்மை ஷரப்பை பார்த்து அறிந்து கொண்ட வ்ருஷாத் பேச்சை மாற்றும் பொருட்டு

“வந்தது சில்பா. அவ ஹரிலால் இல்லனா தேஜ்வீர் சொல்லி தான் வந்திருக்கணும்”

தன்னை சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்த ஷரப் “ரெண்டும் கூட்டுக களவாணிங்க. ரெண்டு பேரும் பேசி பிளான் பண்ணி அனுப்பி இருக்கணும். கூடிய சீக்கிரத்துல ஹரிலால் முடிச்சிடுறேன். அப்பொறம் இருக்கு என் மாமாக்கு. காவலாளிகிட்ட விசாரிச்சியா? முன்ன மாதிரி வேலையாட்கள் போக வர வேறயா கேட் கூட இல்ல. அப்போ முன் வாசல் வழியா தான் வந்திருக்கணும்” ஷரப் யோசனையாக சொல்ல

ஷரப்பை சங்கடமாக பார்த்த வ்ருஷாத் “காவலாளி கிட்ட நீங்க வர சொன்னதாக சொல்லி உள்ள நுழஞ்சி இருக்கா”

“அறிவு இருக்கா அவனுக்கு” என்று ஷரப் எகிற

“அவனை திட்டி என்ன பிரயோஜனம் “என்ன தேடி எந்த பொண்ணு வந்தாலும் உள்ள விடுன்னு” நீங்க தான் சொன்னீங்க”  

ஷரப் தான் சொன்னதை நினைத்து நொந்து கொள்ள காவலாளியை அழைத்தவன்

“இனிமே யார் வந்தாலும் என் அனுமதி இல்லாமல் உள்ளே விடாதே” என்று அவனை அனுப்பி விட அவனும் நடுங்கியவாறே சென்றான்.

“என்ன பாய் உங்க வேகத்துக்கு சில்பாவை உள்ள விட்டதுக்கு அவனை கொன்னு இருக்கணும், இல்ல வேலைல இருந்தாவது தூக்கி இருக்கணும். ஒன்னுமே பண்ணல” என்று வ்ருஷாத் ஆச்சரியமாக கேக்க

“தப்பெல்லாம் நான் பண்ணிட்டு அவனை தண்டிச்சு என்ன செய்ய” என்றவன் அவள என்ன செஞ்ச என்று கேக்க

“மனிஷுக்கு கொடுத்த அதே டிரீட்மென்ட் தான்” என்று புன்னகைத்தவன் “பாவம் பிள்ளைங்களுக்கு சாப்பிட கறி கூட இல்ல உடம்பு பூரா முள்ளு மட்டும் தான்” என்று நக்கலாக சிரிக்க வ்ருஷாத்தின் தோளில் அடித்தான் ஷரப்.

cctv புட்டேஜ் எல்லாத்தையும் க்ளியர் பண்ணிட்டியா? அவ வந்ததுக்கான எந்த தடயமும் இருக்கக் கூடாது.

“அதெல்லாம் பக்காவா எப்பயோ பண்ணிட்டேன்”   வ்ருஷாத் பெருமையாக சொல்ல

தான் கண்டது கனவு என்றென்னி குழம்பிப் போய் ஷரப்பிடம் மன்னிப்பு கேக்க வந்த ஆன்ஷி இவர்களின் சம்பாஷணையை கேக்க மனீஷ் என்ற பெயரோ, என்ன டிரீட்மென்ட் என்பதோ அவளின் காதில் விழவே இல்லை. விழுந்ததெல்லாம் கறியே இல்லாத உடம்பு என்பது மாத்திரமே

“அட கொலை கார பாவிங்களா?” என்று வாய் விட்டே முணுமுணுத்தவள் சத்தம் செய்யாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

சில்பா இறந்த அறையை மேலும் சென்று பரிசோதித்தவளுக்கோ ஒரு தடயமும் கிடைக்க வில்லை. தனக்கும் இதே கதி ஆகலாம் என்றெண்ணியவள். தான் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் தனக்கு ஆபத்து என்று மனம் பதை பதைக்க திரும்ப தாத்தா, பாட்டியிடம் கூட செல்ல முடியாது. அத்தை வார்த்தையாலேயே வதைப்பாள் என்று அறிந்தவளாக உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவள் ஷரப்பின் இடத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள கூட பிடிக்காமல் அன்னை இறந்த இடத்திலேயே என் உயிர் போகட்டும் என்ற முடிவோடு அங்கிருந்து தப்பிச்ச செல்ல காத்திருந்தாள். உயிரை விடமாட்டேன் என்று அம்மாவின் மேல் சத்தியம் செய்ததை கூட அக்கணம்  மறந்து தான் போனாள் ஆன்ஷி.

ஹரிலாலிடம் தர்மேந்திரன் வரவும் ஆவலாக அவனிடத்தில் ஹரிலால் கேள்விகளை அடுக்க

“எந்த தடயமும் இல்ல. சில்பாவை அவன் மனைவி முன்னாலேயே கொன்னு இருக்கான். அந்த பொண்ணுதான் போன் பண்ணி இருக்கா. போனா அவன் என்னையே தூக்கிடுவேன்னு மிரட்டுறான்” தர்மேந்திரன் வெறுமையான குரலில் சொல்ல

“அந்த மாளிகையை நல்லா சுத்தி பாத்தியா?  எங்கயாச்சும் பொதச்சி இருப்பான்” கோவக்குரலில்  ஹரிலால் சொல்ல

‘புதுசா மண்ணை தோண்டின எந்த அடையாளமும்  இல்ல. தரவா செக் பண்ணிட்டேன். வேற ஏதோ பண்ணுறான் முள்ளு கூட கெடைக்காதுனு ஏதோ சொன்னான்” என்று ஷரப் சொன்னதை தர்மேந்திரன் யோசிக்க

ஹரிலாலினதும், அவனது அழிவும் ஷரப்பின் கையில் என்பதை அவன் சொன்னதை கவனத்தில்  எடுத்திருக்கணுமோ?

ஆன்ஷியின் அறையை சுத்தம் செய்ய ஒரு பதினாறு வயசு பொண்ணே வருவாள். அவளுக்கு பேச வராது சைகையாலேயே  ஆன்ஷியிடம் பேசுபவள் ஷரப்பை கண்டால் நடுநடுங்கி போவாள்.

இன்று வந்தவளிடம் அன்று  தன்னை ஷரப்பிடம் காப்பாற்றி  விட்ட வயது முதிர்ந்த பெண்மணியை பற்றி விசாரிக்க நடுங்கியவாறே அவர் இறந்து விட்டதாக சொல்ல

தன்னை காப்பாற்றி அனுப்பியதால் ஷரப் அவரை கொன்று விட்டான் என்று தவறாக புரிந்து கொண்டவள் தனது தீர்மானத்தில் மேலும் உறுதியானாள்.  

தக்க சமயத்துக்காக காத்திருந்தவள் ஷரப்பின் பாதுகாப்பு வலயத்திலிருந்து விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.  

இதையறியாத ஷரப் ஹரிலாலுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் இருந்தான்.

Advertisement