Advertisement

பாடல் – 9
     படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழி முழுக்க அக்கா தங்கை இருவரும் அன்று பார்த்த படத்தின் நாயகனை பற்றியே பேசிக்கொண்டு வர அவர்கள் பேசியதை கேட்ட விஷ்வாவுக்கோ இங்கு வயிற் எரிய ஆரம்பித்தது.
    
   இரவு பத்து மணி போல் வீட்டிற்க்கு வந்தவர்களை பத்மா சாப்பிட அழைக்க மூவரும் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.
 சாப்பிடும் பொழுது இருவருக்கும் வாங்கிய மொபைலை காவியா தன் பெற்றோரிடம் காட்ட அதை பார்த்த பத்மா “காவியாவுக்கு எதுக்கு தம்பி மொபைல், வீன் செலவு உங்களுக்கு” என்று விஷ்வா விடம் சொல்ல “இருக்கட்டும் அத்தை, அவளுக்கு இப்போ காலேஜ் ஃபைனல் செம் வேற புராஜக்ட் எல்லாம் இருக்கும் அதுக்கு எப்டியோ வாங்க போறது தான” என்று சொன்னவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார் பத்மா. 
    “ஆனா இதுக்கு நா உங்களுக்கு பணம் கொடுத்திருவேன் நீங்க மறுக்காம வாங்கிக்கனும்” என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த முருகேசன் சொல்ல “இருக்கட்டும் மாமா, நம்ம காவியாவுக்கு நா கொடுத்த ஒரு சின்ன கிஃப்ட் இது” என்று சொன்னான் விஷ்வா.
     “அதுக்கு இல்ல தம்பி” என்று அவர் எதோ சொல்ல வர “மாமா உங்களுக்கு ஒரு பையன் இருந்து அவன் காவியாவுக்கு வாங்கி கொடுத்திருந்தா இப்படித்தான் வேண்டாம்னு சொல்லி காசு கொடுத்திருப்பீங்களா நீங்க” என்று விஷ்வா கேட்க “இல்ல தம்பி” என்றார் அவர். “அப்போ நானும் உங்களுக்கு ஒரு பையன் போலதான், நீங்க அப்படி நினைக்காட்டியும் நா உங்களது என் அம்மா அப்பா மாதிரிதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன், அதனால இந்த மொபைல்க்கான பணம் நீங்க கொடுக்க வேண்டாம்” என்றவன் அத்தோடு பேச்சு முடிந்தது என்பதை போல எழுந்து கை கழுவ சென்றான்.
     அவன் தங்களை அவ்வாறு சொன்னதை கேட்டதும் பத்மா முருகேசன் இருவருக்கும் மனம் குளிர்ந்து விட்டது. என்னதான் காலம் மாறி இருந்தாலும் பெரும்பாலும்மானவர்கள் தங்கள் மாமனார் மாமியாரை இன்னும் மனதை விட்டு தள்ளியே வைத்திருக்க இவன் தங்களை அப்பா அம்மா போல என்று சொன்னதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. 
     உணவை முடித்து கொண்டு இருவரும் தங்கள் அறைக்கு வந்த பின்னர் தன்னுடைய பெட்டியை திறந்து அதில் இருந்து இரண்டு சிம் கார்டுகளை விஷ்வா எடுக்க அதை பார்த்த இனியா “அட இத எப்போ வாங்கி வச்சீங்க” என்று கேட்டாள். “இது போன வாரம் தான் வாங்கினேன்” என்றவன் இரு செல்லிலும் அதை பொருத்த அவன் செய்வதையே அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தாள் இனியா. 
        சிறிது நேரத்தில் இனியாவினதை அவள் கைகளில் கொடுத்தவன் “இந்தா கொஞ்சம் முக்கியமான ஆப்ஸ் எல்லாம் ஏத்தீட்டேன்,டேட்டா பேக் போட்டு இருக்கு
உனக்கு வேற எதாச்சும் வேணும்னா இன்ஸ்டால் பண்ணிக்கோ, அப்பறம் இதுல எதாச்சும் டவுட் இருந்தா தயங்காம என்ன கேளு” என்று சொல்லி படுத்து விட்டான்.
      பின் சிறிது நேரம் அதில் தனக்கு வேண்டிய செயலிகளை அவன் சொல்லி கொடுத்தது போல இன்ஸ்டால் பண்ணியவள், தனக்கு வேண்டிய எண்களை சேமிக்க ஆரம்பித்தாள். தன் வீட்டில் உள்ளவர்கள் எண்களை சேமித்தவள் விஷ்வாவின் எண்ணை அதில் அழுத்த “அஜித்” என்ற பெயருடன் ஏற்கனவே அவன் எண் சேமிக்க பட்டுள்ளதாய் காட்டியது. 
     அஜித் என்ற பெயரை பார்த்ததும் அவள் மனதில் பழைய நியபகங்கள் போட்டி போட ஆரம்பிக்க, தான் இன்னும் தன் பழைய காதல் பற்றி விஷ்வாவிடம் சொல்லாத குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள அன்றைய இரவு அவளுக்கு தூங்கா இராவாகி போனது.
*************
       விஷ்வாவை அழைத்த தீபக் “எல்லாரும் கிளம்பியாச்சா, நாங்க பக்கம் வந்துட்டோம்” என்று சொல்ல “நாங்க ரெடி மாமா இதோ வீடு பூட்டுனா போதும்” என்று பதிலழித்த விஷ்வா “மாமா இதோ பக்கம் வந்துட்டாங்க” என்று திரும்பி முருகேசனின் சொல்ல “சரிங்க மாப்பிள்ளை” என்றவர் பெண்களை வெளியே வர சொல்லி கதவை பூட்டவும் விஷ்வாவின் வீட்டினர் வந்த வேன் வரவும் சரியாக இருந்தது. 
      இன்று குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு எடுத்திருந்தனர். இருவர் பக்க கோவிலும் அருகருகே இருக்க அனைவரும் ஒன்றாக ஒரே நாளில் சென்று வரலாம் என்று சொல்லிவிட்டான் விஷ்வா. 
     வேனில்  தீபக் – முருகேசன், பத்மா – சுலோச்சனா, காவியா – சுசித்ரா என்று முன்னால் அமர்ந்திருக்க இவர்கள் இருவரும் ஒன்றாக பின்னால் அமர்ந்தனர். போகும் வழி முழுக்க இருவரும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே செல்ல விஷ்வாவின் சுவாரஸ்யமான பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை இனியாவுக்கு. 
     கிளம்பிய இரண்டு மணி நேரத்தில் விஷ்வாவின் குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் முதலில் வெளியே அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு உள்ளே  சென்றனர். 
      இவர்கள் ஏற்கனவே வருவதாய் சொல்லியிருக்க, பூஜைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படிருந்தது அங்கு. வெயில் வருவதற்குள் பொங்கல் வைத்து விட எண்ணி பெண்கள் விரைவாக அதற்குறிய வேலைகளை செய்ய ஆரம்பிக்க,ஆண்கள் மூவரும் அங்கு இருந்த திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
        இதற்கு முன் இவ்வாறு விறகு அடுப்பில் பொங்கல் வைத்து பழக்கம் இல்லாத இனியா கண் எரிச்சலில் சற்று தடுமாற “அந்த கரண்டிய இப்படி என் கைல கொடுத்துட்டு நீ போய் கண் கழுவிட்டு வா போ” என்றபடி அவள் உதவிக்கு வந்தார் சுலோச்சனா.
     தன் மகளின் மாமியார் எதேனும் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில் “அது வந்து அண்ணி இப்போ வர இந்த அடுப்புல சமச்சு இனியாவுக்கு பழக்கம் இல்ல அதான் கொஞ்சம் கஷ்டப்படுறா” என்று பத்மா சொல்ல, “அட இதுல என்ன இருக்கு அண்ணி, சுசித்ரா கூட அப்படித்தான் இருந்தா ஆனா இப்போ பழகிட்டால்ல, அதே மாதிரி இனியாவும் பழகிருவா விடுங்க” என்று சொல்லி வேலையை பார்க்க ஆரம்பித்தார் சுலோச்சனா. 
    காவியாவும் சுசித்ராவும் அபிஷேகம் தயார் செய்ய, மற்ற இருவரும் இனியா பொங்கல் வைக்க உதவிக்கொண்டு இருந்தனர்.
     விரைவாக பொங்கல் வைத்து, கடவுளுக்கு படைத்தவர்கள் பூஜை முடித்து வர மதியம் ஆகி இருந்தது. பின் அங்கேயே விறகு அடுப்பில் மதியம் உணவை இருவர் அம்மாக்களும் தயார் செய்து கொண்டிருக்க பெண்கள் மூவரும் ஆற்றங்கரை பக்கம் சென்றனர். 
     பாதி வழியில் சுசித்ராவின் மகள் தூக்கத்தில் அழ ஆரம்பிக்க அவளை உள்ளே தூங்க வைக்க போவதாக கூறி அவர் சென்றுவிட்டார் அவருடன் காவியாவும் சென்றுவிட, இனியா மட்டும் அங்கு தனித்து விட பட்டாள். சரி வந்ததுதான் வந்துவிட்டோம் சிறிது நேரம் ஆற்றின் அருகில் அமர்ந்து விட்டு போகலாம் என்று எண்ணியவறு நடக்க ஆரம்பித்தாள்.
      ஆற்றின்  அருகில் வந்ததும் அங்கு இருந்த படிகளில் விஷ்வா அமர்ந்திருப்பதை கண்ட இனியா “என்ன இங்க தனியா உக்காந்துட்டீங்க” என்று கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தாள். 
    அவளை பார்த்து சிறு புன்னகை புரிந்தவன் “இந்த ஆற்றங்கரை தான் என்னோட ஃபேவரைட் பிளேஸ் தெரியுமா, எப்போ கோவிலுக்கு வந்தாலும் கொஞ்ச நேரம் இங்க டைம் ஸ்பெண்ட் பண்ணாம போக மாட்டேன்” என்றான். “ஓ , நா இருக்கறது டிஸ்டர்பா இருந்த சொல்லிடுங்க” என்று இனியா சொல்ல “ஏய் அப்படி எல்லாம் இல்ல, நானே உன்ன இங்க கூப்படாலம்னு இருந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட” என்று சொன்னவன் “ஆமா உன்னோட மொபைல் எங்க” என்று கேட்டான். 
   “இதோ” என்றவள் தன் பர்ஸில் இருந்து அதை எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் “நம்ம இன்னும் இதுல ஒரு ஃபோட்டோ கூட எடுக்கலைல வா இப்போ எடுக்கலாம்” என்றபடி அவளோடு செல்ஃபி எடுக்க ஆரம்பித்தான். 
    எடுத்த பின் “இந்த போட்டோஸ் எல்லாம் எனக்கு ஷேரிட் பண்ணிடு” என்றபடி தன் மொபைலை எடுத்தவன் அவள் முகம் கண்டு “என்ன என்னையவே பார்த்திட்டு இருக்க” என்று கேட்க “இல்ல, அது எப்படி அனுப்பறது நு எனக்கு தெரியலை” என்று சிறு பிள்ளை போல சொன்னாள் இனியா.   
    அவள் சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க அதை தன் உதடுகளை கடித்து கட்டுப் படுத்தியவன் “இங்க வா சொல்லி தரேன்” என்றபடி அவள் மொபைல் கேட்டு கைகளை நீட்டினான். 
    அவள் கொடுத்ததும் அதை ஆன் செய்தவன் கண்களில் காவலன் செயலி தென்பட “நானே இத பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன், பரவாயில்லை அதுக்குள்ள நீயே இன்ஸ்டால் பண்ணிட்ட” என்றபடி அவளுக்கு எப்படி அந்த மொபைலில் உள்ளவற்றை உபயோகப் படுத்துவது என்று சொல்லி கொடுக்க ஆரம்பித்தான்.
    சிறிது நேரத்தில் அனைவரையும் பத்மா சாப்பிட அழைக்க, அங்கேயே சாப்பிட்டு விட்டு இனியாவின் குல தெய்வ கோவிலுக்கு சென்றனர் அனைவரும். 
    அடுத்த இருபது நிமிடத்தில் அங்கு சென்றுவிட, விரைவாக சாமி கும்பிட்டவர்கள் மாலை அங்கு இருந்து கிளம்பி விட்டனர்.
    புதிதாக திருமணம் ஆனவர்கள் மலை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் வழியில் இருந்த சிவன் மலைக்கு சென்று வரலாம் என்று சுலோச்சனா சொல்ல, அங்கும் சென்றவர்கள் வீடு திரும்ப இரவாகி இருந்தது. 
     அன்று முழுவதும் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டிருக்க, அவனிடம் எந்த தயக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்தது இருந்தாள் இனியா.
     அதிக தூரம் டிராவல் செய்ததிலும், வெயிலில் வேலை செய்த களைப்பிலும் திரும்பும் வழியில் இனியா தூங்கி விட, அவள் தூக்கத்தை கெடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு வந்தான் விஷ்வா. 
    சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் “எப்போ தான் என் காதல நீ புரிஞ்சிக்க போற ஸ்வீட்டி” என்று மெதுவாக அவளிடம் கேட்டபடி அவள் நெற்றியில் அவள் தூக்கம் கலையாமல் மென்மையாக முத்தமிட்டான் அவள் கணவன், அவளரியா காதல் கணவன்.

Advertisement