Advertisement

பாடல் – 8
      வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது. 
     கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த இனியா காவியாவிடம் திரும்பி “இங்க வர்றதுக்குதான் ரெண்டு பேரும் இவ்வளோ பில்ட் அப் கொடுத்தீங்களா” என்று கேட்டு முறைக்க “என்ன எதுக்கு மொறைக்கர, மாமா தான் உன்கிட்ட சொல்ல வேணாம் சொன்னது என்னவா இருந்தாலும் அங்க கேட்டுக்கோ” என்று சொல்ல அதற்குள் காரில் இருந்து இறங்கியிருந்த விஷ்வா குனிந்து “என்ன ரெண்டு பேருக்கும் வெளிய வர்ற ஐடியா இருக்கா இல்ல இப்டியே வீட்டுக்கு போக முடிவு பண்ணி இருக்கீங்களா” என்று கேட்க “அய்யோ மாமா அப்படி கீது கூட்டிட்டு போய்றதிங்க” என்ற படி காவியா இறங்க அவளை தொடர்ந்து இனியாவும் இறங்கிவிட்டாள். 
      மூவரும் கடைக்குள் சென்ற பின் இனியாவிடம் திரும்பி “உனக்கு என்ன மாடல் மொபைல் வேனும்” என்று விஷ்வா கேட்க “எனக்கு மொபைல் பத்தி அவ்வளவா தெரியாது, புது மாடல் எதாச்சும் நல்லதா நீங்களே பாருங்க” என்று இனியா சொல்ல “சரி” என்றவன் காவியாவிடம் திரும்ப, இவன் கேட்கும் முன் ” எனக்கு கேமரா சூப்பரா இருக்க மாதிரி ஒரு மொபைல் காட்டுங்க” என்று கடையில் இருப்பவரிடம் கேட்டு கொண்டு இருந்தாள் அவள். 
     பின் அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் மொபைல் மாடல் செலக்ட் பண்ணி இருக்க மேலும் பத்து நிமிடத்தில் அதற்கு பில் போட்டு கடையை விட்டு  வெளியேறி இருந்தனர். 
     வெளியே வந்ததும் அவன் கைகளில் இருந்த மொபைலை காவியா வாங்க செல்ல அதை அவளுக்கு எட்டாதவாறு மேலே தூக்கியவன் “கொடுங்க மாமா” என்றவளிடம் “பொறு பொறு இதுல சிம் போட்டு ஃபுல்லா செட் பண்ணதும் தரேன்” என்றவன் காரில் ஏறியபடி இனியாவிடம் “உனக்கும் இப்போவே இத யூஸ் பண்ணனுமா” என்று கேட்க “இல்ல வீட்டுக்கு போய் வாங்கிக்கரேன்” என்றவள் அவனோடு முன் இருக்கையில் அமர காவியா பின்னே அமர்ந்தாள். 
     காரை ஸ்டார்ட் செய்தவன் அவர்கள் வீட்டுக்கு ஏதிர்பக்கம் அதை செலுத்த “விஷ்வா தப்பான ரூட்ல போறிங்க பாருங்க” என்று சொல்லிய இனியாவிடம் “இல்லயே சரியதான் போறேன்” என்று சொல்ல “எங்க வீட்டுக்கு போற வழி இது இல்ல” என்றவளிடம் திரும்பியவன் “நம்ம இப்போ வீட்டுக்கு போகலையே” என்று சொல்ல”அப்போ வேற எங்க போறோம்” என்று இனியாவும் “மாமா நீங்க மொபைல் வாங்க போறத மட்டும்தான  சொன்னிங்க” என்று காவியாவும் ஒன்றாக கேட்க “இப்போ போக போற இடம் ரெண்டு பேருக்குமே சர்ப்ரைஸ்” என்றவன் காரில் பாடலை ஒலிக்க விட்டான். அதன் பின் அங்கு பாடல்களை தவிர வேறு சத்தம் இல்லை.
       பெண்கள் இருவரும் அவன் அப்படி எங்கே அழைத்து செல்வான் என்று எவ்வளவு யோசித்தாலும் அவர்களுக்கு அப்படி எந்த இடமும் தோன்றவில்லை. நேரம் வேறு மாலை ஐந்துக்கு மேல் ஆகி இருக்க அப்படி இந்நேரத்தில் எங்கு அழைத்து செல்வான் என்று யோசித்த படியே வந்தனர். 
        சிறிது நேரத்தில் விஷ்வா காரை கூட்டமாக இருந்த ஒரு மல்டி பிளெக்ஸ்  அருகில் நிறுத்தி இறங்க சொல்ல, “அக்கா இன்னைக்கு நம்ம டார்லிங் படம் ரிலீஸ்க்கு எவ்வளோ கூட்டம்  பாரு, நம்ம எப்போ இப்படி வந்து ஃபர்ஸ்ட் டே ஷோ பாக்கறது” என்று காவியா பெருமூச்சு விட “ஃபர்ஸ்ட் டே ஷோ தான பாதுட்டா போய்டுச்சு” என்று சொன்ன விஷ்வாவிடம் திரும்பிய இனியா “அதுக்கு வாய்ப்பு இல்லைங்க, அப்பா எப்போவும் படம் தியேட்டர்ல இருந்து எடுக்க போற சமயத்துல தான் கூட்டிட்டு வருவாரு” என்று சொல்ல “ஏன் அப்படி” என்றவனிடம் “அப்போதான் கூட்டமே இல்லாம இருக்குமாம்” என்று பதிலளித்தாள் இனியா. 
     “சரி கவல படாதீங்க ரெண்டு பேரும், இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஷோ நம்ம பாக்க போறோம்” என்று விஷ்வா சொல்ல”அது எப்படி என்ற பார்வை பார்த்த இனியா விடம் “வாங்க ரெண்டு பேரும்” என்று சொல்லி அவர்களை பத்திரமாக உள்ளே அழைத்து சென்றான். 
     “அச்சோ மாமா ஃபர்ஸ்ட் டே டிக்கெட் கிடைக்காது” என்று காவியா சொல்ல “ஆமா விஷ்வா கூட்டத்த பாருங்க இப்போ கண்டிப்பா டிக்கெட் இருக்காது” என்று இனியாவும் சொன்னாள். 
     “இப்போ போய் யாரு டிக்கெட் வாங்க போறது” என்று கேட்ட விஷ்வா தன் பர்ஸில் இருந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டிக்கெடை எடுத்து  காட்டினான். 
     அங்கு ஏற்கனவே திரையிடப் பட்டிருக்கும் எதோ ஒரு படத்துக்கு அவன் அழைத்து செல்வான் என்று இருவரும் எண்ணியிருக்க, இப்பொழுது அவன் சொன்னது இருவருக்கும் ஆச்சர்யமாகி போனது.  “இது எப்போ, சொல்லவே இல்ல” என்ற இனியாவிடம் “புக்கிங் ஓபன் ஆனதும் அடிச்சு புடிச்சு ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்” என்றான். 
     “ஆனாலும் எதுக்கு இவ்வளோ கஷ்டம்? கொஞ்ச நாள் அப்பறம் ஃப்ரீயா வந்திருக்கலாம் என்று சொன்ன இனியாவிடம் “வந்திருக்கலாம், ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் முதல் தடவ உன்ன வெளிய கூட்டிட்டு வரேன், அது உனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்னு ஒரு சின்ன ஆசை” என்று சொன்னவன் உள்ளே செல்ல, அவன் இரண்டு நாட்களும் தனக்காக, தன் ஆசைக்காக என ஒவ்வொன்றும் இவ்வாறு பார்த்து பார்த்து செய்ய, இனியாவுக்கு அவன் மேல்  உள்ள மதிப்பு கூடிக்கொண்டே போனது.
     “உனக்கு இது புடிக்கும்னு அவருக்கு எப்படி தெரியும்” என்று அவள் மனசாட்சி கேள்வி எழுப்ப “ஆமா அவருக்கு எப்படி இது தெரியும்” என்று யோசித்த படி அவனிடம் கேட்க நிமிர்ந்தவள் கண்களில் காவியா பட ‘ இந்த ஓட்ட வாய்தான் ஓலரி இருக்கும் ‘ என்று சரியாக தவறான முடிவு எடுத்தவளாய், அவனோடு உள்ளே சென்றாள்.

Advertisement